logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

பட்டீச்சரம் Patteeswaram

Om symbol

இறைவர் திருப்பெயர்: பட்டீச்சுரர், தேனுபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை, பல்வளை நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : ஞான தீர்த்தம். (கோடி தீர்த்தம்).

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், மார்க்கண்டேயர் .

Loading map...

Sthala Puranam

  • ஊர் - பழையாறை; கோயில் - பட்டீச்சரம்.

 

காமதேனுவின் புதல்வியருள், "பட்டி" பூசித்தது ஆதலின் பட்டீச்சரம் என்னும் பெயர் பெற்றது.

 

  • இங்கே அம்பிகை தவஞ்செய்ததால் 'தேவிவனம் ' என்றும் பெயர்.

 

ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதால், இங்குள்ள (ஐந்து நந்திகள் உள்ளன) நந்திகள் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.

 

இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இதனையொட்டி, இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது.

 

(மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடத் தொடங்கினார் என்றும் அது முற்றுப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.)

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    சம்பந்தர்   -   1. பாடன்மறை சூடன்மதி (3.73); பாடல்கள்     :     அப்பர்     -      நல்லூரே நன்றாக (6.25.10);                    சேக்கிழார்  -       பாரின் மிசை அன்பர் (12.28.396).

 

     தல மரம் : வன்னி

    

Specialities

  • இங்கு தலவிநாயகராக அனுக்ஞை விநாயகர், மதவாரணப்பிளையார் உள்ளார்.

 

  • ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளிய சிறப்புடைய தலம்.

 

  • இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன; அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.

 

  • விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான்.

 

  • இங்குள்ள துர்க்கை சோழர் காலப் பிரதிஷ்டை.

 

  • ஆனித் திங்கள் முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப்பந்தர் பெற்ற திருவிழா நடைபெறுகிறது.

 

இத்தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. இது தமிழில் உரைநடையில் பட்டீஸ்வரர் மான்மியம் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

முந்தைய தலம்<திருச்சத்திமுற்றம் (சத்திமுத்தம்)

 அடுத்த தலம்>பழையாறை வடதளி

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். (சத்திமுற்றமும் பட்டீச்சரமும் அருகருகேயுள்ள தலங்கள் - இடையில் வீதிதான் உள்ளது.) தொடர்புக்கு :- 0435 - 241 6976.
Loading map...

Related Content

இராப்பட்டீச்சரம் (Irappatteecharam)