இறைவர் திருப்பெயர்: சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறையார்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : சந்திர புட்கரணி, சந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்:வாகீசமுனிவர், பிரமன், 1. சம்பந்தர் - கணைநீடெரி மாலர, 2. அப்பர் - வானஞ் சேர்ம, 3. சேக்கிழார் முதலியோர்.
Sthala Puranam
ஊர்ப் பெயர் - அன்பில்; கோயிலின் பெயர் - ஆலந்துறை.
இங்குள்ள விநாயகர் "செவிசாய்த்த விநாயகர்" என்றழைக்கப்படுகிறார். கொள்ளிடத் தென்கரையில் நின்று பாடிய சம்பந்தரின் பாடல்களைச் செவிசாய்த்து கேட்டமையின், இவ்விநாயகர் இப்பெயர் பெற்றார்.
இத்தலத்தில் பராந்தகசோழன் குறியேற்றிய நூற்றெட்டு அக்னிஹோத்திரிகளின், ஜைமினி சாமவேத பாராணயத்தை(சம்பந்தர் பாடலைக் கேட்கும்) முன்னரே கேட்டருளிய இத்தல விநாயகர், 'சாமகானம் கேட்ட விநாயகர் ' என்றும் வழங்கப்படுகிறார்.
தல மரம் : ஆலமரம்
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள்:
பதிகங்கள் : சம்பந்தர் - 1. கணைநீடெரி மாலர (1.33);
அப்பர் - 1. வானஞ் சேர்மதி (5.80);
பாடல்கள் : சேக்கிழார் - அதன் மருங்கு கடந்து (12.28.308) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
துவாரபாலகர்களின் பக்கத்தில் பிரமன் வழிபடுகின்ற சிற்பம் உள்ளது.
இக்கோயில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு முன்பு மாடக் கோயிலாக இருந்ததாம்.
முன்மண்டபத் தூணில் பாம்பின் வால் ஒருபுறமும் தலை மறுபுறமுமாக கல்லுள் நுழைந்து வந்திருப்பது போல உள்ள சிற்பமும், மற்றொரு தூணில் இருபாம்புகள் ஒன்றொடொன்று பலமுறை பின்னிக் கொண்டிருக்க மத்தியில் சிவலிங்கம் உள்ளதாக உள்ள சிற்பமும், முருகப் பெருமான் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பமும் கண்களுக்கு பெருவிருந்தாக உள்ளது.
Contact Address