logo

|

Home >

hindu-hub >

temples

திருப்புறம்பயம்

இறைவர் திருப்பெயர்: சாட்சி நாதேஸ்வரர், புன்னைவன நாதர்

இறைவியார் திருப்பெயர்: கரும்படுசொல்லம்மை, இட்சுவாணி

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், சப்த சாகர தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்

வழிபட்டோர்:அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்ரர், 1. சம்பந்தர் - மறம்பய மலைந்தவர்.

Sthala Puranam

gOpuramthirupurambayam temple

பிரளய காலத்தில், வெள்ளம் ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு, புறத்தே நின்றமையால், இப்பெயர் பெற்றது. இத்தல விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் எனப்படுகிறார்.

 

ஒரு வணிகப் பெண்ணிற்காக, இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், சாட்சி நாதர் எனப் பெற்றார். வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி (மதுரையிலுள்ளது.)

 

சனகர் முதலிய நால்வருக்கு இறைவன், இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்  -     1. மறம்பய மலைந்தவர் (2.30);                       அப்பர்  -     1. கொடிமாட நீடெருவு (6.13);                      சுந்தரர்  -     1. அங்கம் ஓதியோர் (7.35); பாடல்கள்      :     அப்பர்      -        புறம்ப யத்தெம் முத்தினைப் (4.15.4),                                              பூவனூர்தண் புறம்பயம் (5.65.8),                                            பூவிரியும் (6.20.7),                                            ஏந்து மழுவாளர் (6.25.5),                                            பொருளியல்நற் (6.33.7),                                            புன்கூரார் புறம்பயத்தார் (6.51.11),                                            பொழிலானைப் (6.60.10),                                            புலிவலம் (6.70.11),                                            பூச்சூழ்ந்த (6.75.8),                                            போரரவம் (6.84.10),                                            ஐந்தலைய (6.86.8);                 மாணிக்கவாசகர்   -      புறம்பயம் அதனில் (8.02.90 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்;                  பட்டினத்துப் பிள்ளையார்  -      நினைவார்க் கருளும் (11.30.61) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;                  சேக்கிழார்         -      விசய மங்கையின் (12.28.240 & 241) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                             ஏரின் மருவும் (12.29.95 & 96) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

தல மரம் : புன்னை

Specialities

 

இத்தல விநாயகர் (பிரளயங்காத்த விநாயகர்) சிப்பி, சங்குகளால் ஆக்கப்பெற்றவர். ஆண்டுதோறும், ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகிறது.

 

இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஒடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

 

இக்கோவில் மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

 

சோழர் கால கல்வெட்டுகள் 11 படி எடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணத்திற்கு வடமேற்கே 9-கி.மீ.தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 0435 - 2459519, 09444626632.

Related Content