இறைவர் திருப்பெயர்: சத்தியகிரீஸ்வரர், சத்யகிரிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சகிதேவியம்மை.
தல மரம்:
தீர்த்தம் : மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி - குளம்).
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்,சிபி, அரிச்சந்திரன் ஆகியோர்.
Sthala Puranam
மக்கள் வழக்கில் 'சேங்கலூர் ' என்று வழங்குகிறது.
இத்தலச் சிறப்பைக் கந்தபுராணம், வழிநடைப்படலத்தில் பேசுகிறது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு, சர்வசங்காரப் படைக்கலத்தை - உருத்திர பாசுபதத்தைப் பெற்றார். சேய் - முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நூலடைந்த கொள்கையாலே (1.48); பாடல்கள் : அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70); நம்பியாண்டார் நம்பி - குலமே றியசேய்ஞ லூரில் (11.33.23) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - பூந்தண் பொன்னி (12.20.1 & 58) சண்டேசுர நாயனார் புராணம், அத் திருப்பதி பணிந்து (12.28.242, 243 & 248) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம்.
கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், கோயில் 'கட்டுமலை' மேல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன.
சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
Contact Address