இது 'பெருமாநல்லூர்' என்று வழங்கியது; இப்பெயரும் இன்று மாறி, வழக்கில் "தேவமலை" என்று வழங்குகிறது. (இங்குள்ள மலையின் பெயரே தேவமலையாகும்.)
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- குன்றைக் குடைந்து கோயில் எடுத்துள்ளனர்.
- ஊரயமான மலைப் பகுதியில் கோயில் தனிமையாகவுள்ளது.
- இது பெருமிழலைக் குறும்ப நாயனாரின் அவதார தலம். நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தேவர்மலையில் கொண்டாடப்படுகின்றது. அவதாரத் தலம் : மிழலைநாட்டு மிழலை (அல்லது மிழலைநத்தம் எனும் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலம்) - ஆய்வுக்குரியது.
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம் : தேவமலை என வழங்கும் மிழலைநாட்டு மிழலை (பெருமிழலை).
குருபூசை நாள் : ஆடி - சித்திரை.
தேவமலையின் அடிவாரத்தில் ஓர் குகை கோயில் உள்ளது; இங்கு குறும்ப நாயனார் உருவம் சிற்பமாக (குடைந்து) செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் சமாதியுமுள்ளது, இது குறும்ப நாயனாரின் சமாதி எனக் கூறப்படுகிறது.
- பெரிய குடவரைப் பிள்ளையார் உள்ளார்.
- சில படிகள் கீழிறங்கிப் பார்த்தால் சில முனிவர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன.
- மண்டபத்தில் அம்பாள் திருமேனி தனியேயுள்ளது; தேவ தீர்த்த முள்ளது.
("தேவமலை"க்கு அருகில் உள்ளது பேறையூர். இங்குள்ள நாகநாத சுவாமி கோயில் மிகப் பிரசித்தி பெற்றப் பிரார்த்தனைத் தலமாகும். எண்ணற்ற நாகப் பிரதிஷ்டைகள் உள்ளன. இஃது ராகு தோஷ நிவர்த்தி தலம். இங்குச் செல்வோர் இப்பேறையூர்ச் சிவாலயத்தை அவசியம் தரிசித்து வரலாம்.)
குறிப்பு :- 'மிழலை நாட்டு மிழலை' என்னும் இத்தலம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலமென்று கூறுவாரும் உள்ளார்.
பெருமிழலைக் குறும்ப நாயனார் வரலாறு (மூலம்)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
புதுக்கோட்டை - காரைக்குடிச் சாலையில், நடன சமுத்திரம் ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடந்து - வலமாகப் பிரியும் பொன்னமராவதிச் சாலையில் வந்து - பேறையூர் சாலையில் பிரிந்து பேறையூரை அடைந்து - நற்சாந்துப்பட்டி போகும் சாலையில் 2 கி.மீ. சென்று - குமரமலைக்குப் போகும் சாலையில் 1 கி.மீ. சென்றால் - "தேவமலை"க்குப் போகும் வண்டிப்பாதை வரும், அதிலிருந்து 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். (கடினமான பயணம், ஆங்காங்கே விசாரித்துச் செல்வது நலம்.)