இறைவர் திருப்பெயர்: கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பதும தீர்த்தம், சுந்தர தீர்த்தம்,கௌதகாபந்தன தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam
சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் "கௌதுகாபந்தன க்ஷேத்திரம் " என்றும் பெயர்.
அரசகுமாரன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித்திருந்த பெண்ணை, மணம் நிறைவேறு முன் அவள் பெற்றோர் இறக்கவே, அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் இறைவனை நோக்கித் தவஞ் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒருபூதத்தின்மூலம் கொண்டுவந்து, அவனுக்குத் திருமணவேள்வி செய்தருளியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஓங்கிமேல் உழிதரும் (3.90), 2. வரைத்தலைப் பசும் (2.98); சுந்தரர் - 1. மின்னுமா மேகங்கள் (7.74), 2. மூப்பதும் இல்லை (7.18); பாடல்கள் : சேக்கிழார் - அப்பதி போற்றி (12.28.290) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், மேவு புனல் பொன்னி (12.21.190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், எத்திசையும் தொழுது ஏத்த (12.29.121) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலச் சிறப்பு.
கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறார்.
Contact Address