இறைவர் திருப்பெயர்: | ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பிருகந்நாயகி, பெரியநாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சூரிய தீர்த்தம், வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே) |
வழிபட்டோர்: | வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர். |
இத்தலம் தற்போது பொன்னூர் என்று வழங்குகிறது.
இத்தலத்தில் வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மன்னி யூரிறை (1.96); அப்பர் - 1. பாற லைத்த படுவெண் (5.8); பாடல்கள் : சேக்கிழார் - திருக்குறுக்கைப் பதி (12.28.289) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : எலுமிச்சை
இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம், பானுக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள்.
பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி உள்ளார்.
சம்ஸ்கிருதத்தில் 'லிகுசாரண்ய மகாத்மியம் ' என்ற பெயரில் தலபுராணம் உள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மாவட்டம் : நாகப்பட்டினம் மயிலாடுதுறையிலிருந்தும், நீடூரிலிருந்தும் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. மயிலாடுதுறையிலிருந்து இத்தலம் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 04364-250758; 250755.