இறைவர் திருப்பெயர்: | இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | காரணர் கங்கை, சங்கர தீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர்,சேக்கிழார், சூரியன், கரிக்குருவி(வலியன்),காரணமாமுனிவர் முதலியோர். |
வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.
சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஒல்லையாறி உள்ளமொன்றிக் (1.50), 2. பூவியல் புரிகுழல் வரிசிலை (1.123); அப்பர் - 1. நல்லான்காண் நான்மறைக (6.48); சுந்தரர் - 1. ஊனங் கைத்துயிர்ப் பாயுல (7.67); பாடல்கள் : அப்பர் - பூவிரியும் (6.20.7), சிறையார் (6.22.3), மறைக்காட்டார் (6.51.7), புலிவலம் (6.70.11), வானவனை (6.90.8); சேக்கிழார் - நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மல்லல் நீடிய வலிவலம் (12.28.515) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கு நின்றும் (12.29.43) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.
தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.
இவ்விறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் 'வலிவலமும்மணிக்கோவை' என்னும் நூலொன்று, "தமிழ்தாத்தா" திரு. உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் வெளிடப்பட்டுள்ளது.
இக்கோயிலில் சோழர் காலத்திய ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்; இரண்டுமே நல்ல பாதைகள். திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவு. தொடர்புக்கு :- 04366 - 205 636.