இறைவர் திருப்பெயர்: அகிலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: வண்டார் குழலி, புவனேஸ்வரி.
தல மரம்:
தீர்த்தம் : கமலாலயம்
வழிபட்டோர்:அப்பர்,நமிநந்தியடிகள், திருமூலர், சேக்கிழார்
Sthala Puranam
இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேய தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. எத்தீ புகினும் (4.17), 2. பொருங்கைமதக் (6.33); பாடல்கள் : அப்பர் - தீர்த்தப் புனற்கெடில (6.7.2); திருமூலர் - முடிவும் பிறப்பையும் (10.1.20) பாயிரம், அரநெறி யப்பனை (10.18.14) ஐந்தாம் தந்திரம்; சேக்கிழார் - நான் மறைநூல் (12.21.227) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், செம் பொற்புற்றின் (12.27.7,14 & 17) நமிநந்தி அடிகள் நாயனார் புராணம், அங்கு அணைந்து (12.28.513) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
இப்பெருமானின் - அசலேசுவரரின் நிழல் கிழக்குத் திசையிலன்றி மற்றத் திசையில் விழுவதில்லை என்ற செய்தி தனி மகிமை வாய்ந்தது.
ஆனந்தேஸ்வரம் என்பது மங்கண முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட பெருமான் உள்ள இடம்.
இதையடுத்துள்ள கோயில் விசுவகர்மேசம் - கருங்கற் கோயில்; அழகான கொடுங்கைகள், சிற்பக் கலைகள் நிறைந்தது.
வன்மீகநாதர் சந்நிதியில் வலமாக வரும்போது 'ஐங்கலக்காசு விநாயகர் ' (ஐந்து கலம் பொற்காசு கொண்டு ஆக்கப்பட்டவர் என்பது செவி வழிச் செய்தி) உள்ளார்.
தியாகேசர் சந்நிதியில் வலப்பால் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். முகம் மட்டுமே தெரியும்; மார்கழி ஆதிரையில் தியாகராசாவின் இடப்பாதத்தையும், பங்குனி உத்தரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும் - அவை மிகவும் இரகசியமானவை.
வடக்குப் பிரகாரத்தில் உள்ள ரணவிமோசனேசுவரர் சந்நிதியில் சென்று தொழுதால் ஆறாத புண்கள் ஆறும்; கடன்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன. 1. எமசண்டர் - எமனே சண்டராக அமர்ந்திருக்கிறான்; 2. ஆதி சண்டர் - (சண்டேஸ்வரர்).
பஞ்சமுக வாத்யம் சிறப்பானது - ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று ஸ்வஸ்தி வடிவிலும், ஒன்று தாமரைப்பூப் போலவும், ஒன்று எவ்வித அடையாளமும் இல்லாமலும், நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும்; மான் தோலால கட்டப்பட்டது. இஃது ஒவ்வொரு முகத்திலும் தனித் தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும்; ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் - மிகப் பெரியது.
எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
சுந்தரர், திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.
க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் என்பன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.
அஜபாரஹஸ்யம், தியாகராய லீலை, தியாகராஜபுர மான்மியம் முதலாக 16 நூல்கள் இத்தலத்தைப் பற்றி சமஸ்கிருதத்தில் உள்ளன.
செம்பியன்மாதேவி, ஆரூர் அரநெறிக் கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது, ஆண்டொன்றுக்கு ஐம்பத்தாறு திருவிழாக்கள் நடைபெற்றனவாம்.
Contact Address