இறைவர் திருப்பெயர்: | கேதாரேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கேதாரகௌரி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | மந்தாகினி. |
வழிபட்டோர்: | உமையம்மை, சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், சேக்கிழார், முதலியோர் |
பிருங்கி முனிவர் வண்டு உருவம் தாங்கி,ஈசனை மட்டும் வலம் வந்து போற்றிய நெறிகண்டு, கேதார விரதம் அனுட்டித்து, உமையம்மை இடப்பகம் பெற்ற திருத்தலம்.
சுந்தரரும், சம்பந்தரும் இத் தலத்தைக் காளத்தியிலிருந்து தரிசித்தனர்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. தொண்டரஞ்சு களிறும் (2.114); சுந்தரர் - 1. வாழ்வாவது மாயம்மிது (7.78); பாடல்கள் : அப்பர் - திரையார் புனற்கெடில (6.7.4), பூதியணி பொன்னிறத்தர் (6.51.2), ஆண்டானை அடியேனை (6.54.1), உஞ்சேனை மாகாளம் (6.70.8), கந்தமா தனங்கயிலை (6.71.9); சேக்கிழார் - அங்கண் வடதிசை (12.28.1026) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், வட மாதிரத்துப் (12.29.198) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், மன்னு திருக் கேதாரம் (12.30,3) திருமூல நாயனார் புராணம்.
இமய மலையின் பனி சூழ்ந்த சிகரங்களுக்கு மத்தியில் எழிலோடு காட்சியளிக்கின்றது.
இத்தலம் கடல் மட்டத்திலிருந்து 14000 அடி உயரமுள்ளது.
ஆறு மாதங்கள் தேவர்களாலும், ஆறு மாதங்கள் மனிதர்களாலும் வழிபடப்படுகிறது.
இன்றும் கேதார விரதம் ஐப்பசி மாத அமாவாசை நாளில் அனுட்டிக்கப்படுகிறது.
கேதார்நாத் யாத்திரை இன்றும் புனிதமாகக் கருதப்படுகிறது.
அமைவிடம் இமயமலைச் சாரலில் உள்ள தலம். டில்லியிலிருந்தும், ஹரித்வாரிலிருந்தும் பஸ் வசதி இருக்கிறது. கௌரிகுண்டதிலிருந்து, 13கீ.மீ.தூரம் மலைப்பாதை. ஆதலால் நடந்தோ, குதிரை மூலமாகவோ செல்ல வேண்டும்