இறைவர் திருப்பெயர்: சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்திரநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : சங்குதீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு), காவிரி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார்திருமால்
Sthala Puranam
திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசந்யம் எனும் சங்குப் பெற்றத் தலம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நலச்சங்க வெண்குழையும் (2.55); பாடல்கள் : அப்பர் - சிந்தும் புனற்கெடில (6.007.10), இடைமரு தீங்கோ (6.070.3), மலையார்தம் மகளொடு (6.071.6); சேக்கிழார் - அம்பிகை அளித்த ஞானம் (12.28.117) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : புரசு
Specialities
காவிரித் தென்கரையின் 45-வது பதி
இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, பெருமை வாய்ந்தது.
கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. பெருங்கோயில்
எனவும் வழங்கப்படும். மேலே செல்லும் படிகள் யானை ஏறிச் செல்லமுடியாதபடி
அமைந்திருக்கும். இறைவர் மாடத்தின் மீது எழுந்தருளியிருப்பர்.
இத்தலத்துத் திருக்கோயில் பிரணவாகாரமாகிய வலம்புரிச் சங்கத்தின் வடிவமாக
அமைக்கப்பட்டிருக்கின்றது. 'வலமாகச் சுழித்து வரும் சுற்றுக்களும் நடுவில் கருப்ப வீடும்
அதன் நடுவில் மேலே இறைவர் விளங்குவதும்முறை. நெறியாவது சங்கத்தினில் எப்போதும்
முழங்கும் நாதத்தின் பொருளாய் இறைவர் விளங்குவது'.
சோழர் காலக் கல்வெட்டுகள் பத்து உள்ளன.
Contact Address