இறைவர் திருப்பெயர்: சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்.
இறைவியார் திருப்பெயர்: தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம். சூரிய புட்கரணி
வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், அப்பர் , நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அகத்தியர், கண்வர் முதலியோர்.
Sthala Puranam
கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம். இதன்பொருட்டே இக்கோயில் "திருத்தாளமுடையார் கோயில் " என்றழைக்கப்படுகிறது.
திருமுறை பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மடையில் வாளை பாய (1.23); சுந்தரர் - 1. புற்றில் வாளர வார்த்த (7.62); பாடல்கள் : சம்பந்தர் - அல்லல்வாழ்க்கை (2.97.6); அப்பர் - கொண்டதோர் (4.44.7), செழுநீர்ப் புனற்கெடில (6.7.5), நள்ளாறும் (6.71.10); நம்பியாண்டார் நம்பி - மன்னன் மருகல்விடம் (11.41.5) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை; சேக்கிழார் - இருக்கோலம் இடும் (12.5.114) தடுத்தாட்கொண்ட புராணம், காதல் உடன் அணைந்து (12.28.100.101 & 102)திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அம்கண் இனிது அமர்ந்து (12.29.153.154 & 155) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : கொன்றை
Specialities
ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம்.
பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள "பொற்றாளம்" கோயிலில் உள்ளது.
சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.
Contact Address