logo

|

Home >

devotees >

references-to-kulachchirai-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் குலச்சிறை நாயனார் பற்றிய குறிப்புகள்

 


திருஞானசம்பந்தர் தேவாரம்

வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்

கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்

ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட்

டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.                     3.120.2 

 

கணங்களாய் வரினுந் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்

குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்

மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை

அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.              3.120.4 

 

நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற

குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங்

கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.              3.120.6 

 

நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங்

கோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற

ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள் இருபதும் நெரிதர வூன்றி

ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.               3.120.8 

 

தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்

கண்டுநா டோ றும் இன்புறு கின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக்

குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கண் நெறியிடை வாரா

அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவா யாவதும் இதுவே.              3.120.10 

 

பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்

அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக்

கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்

டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.               3.120.11 

 

சுந்தரர் தேவாரம்

 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

        திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

        பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

        ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.4 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

அருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்

இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த

பெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு

குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே.                            11.26-நம்பி

 

ஆளுடையபிள்ளையார் திருத்தொகை

 

கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே

பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்

பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும்

கொற்றக் கதிர்வேல் குலச்சிறையுங் கொண்டாடும்

அற்றைப் பொழுதத் தமணரிடு வெந்தீயைப்                                      11.50-நம்பி

 

 பெரியபுராணம்

 

புன்ன யத்தரு கந்தர்பொய் நீக்கவும்

See Also: 1. Life history of kulachiRainAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

63 Nayanmar Drama - மங்கையர்க்கரசியார் - நின்றசீர் நெடுமாறர்

The Puranam of Kulacchirai Nayanar

The History of Kulachirai Nayanar

குலச்சிறை நாயனார் புராணம்

कुलचिरै नायनार दिव्य चरित्र