ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது ஆசிரியர் பெருமக்களுள் சேதிராயர் ஒருவர். அவரது பாடல்கள் திருவிசைப்பாவில் ஒன்பதாவது தொகுப்பாக அமைகின்றன. இவர் சேதிநாட்டை ஆண்டார். (இது இப்போது தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. சேதி நாடு மலையமான் நாடு எனவும் வழங்கப்பெறும். இந்த நாட்டிற்கு திருக்கோவலூர், கிளியூர் தலைநகரங்களாக இருந்தது.) சேதிராயர் கிளியூரில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.
சமயக்குரவரான சுந்தர மூர்த்தி நாயனாரைத் தனது சொந்த மகனாக வளர்த்த அரசர் நரசிங்க முனையரையரின் சேதி அரசர்கள் பரம்பரையில் வந்தவர். அவரது முதாதையர்களிடமிருந்து சிவபெருமான் மீதான பக்தி பரம்பரை பரம்பரையாக வந்தது. சேதிராயர் சிவபெருமான் மீதான தனது அன்பினை மேன்மேலும் பெருக்கினார். இந்த முழுப் பிரபஞ்சத்தையும் வசிப்பிடமாகக் கொண்ட இறைவனின் பல தலங்களை அவர் வழிபட்டார்.
அவரைப் பற்றிய மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை. திருவிசைப்பாவில் தில்லை இறைவன் மீது இவரால் இயற்றப்பட்ட பதிகம் ஒன்று உள்ளது.
See Also:
1. திருவிசைப்பா
2. நரசிங்க முனையரையர்
3. சுந்தரமூர்த்தி நாயனார்