logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-sathurakkalli-plant

Om symbol

temple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)

Om symbol

தலமர சிறப்புகள்


சதுரக்கள்ளி Euphorbia antiquorum, Linn.; Euphorbiaceae.

கொள்ளி வாயின கூரெயிற் றேனம் கிழிக்கவே 
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை 
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே 
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

.                                                                                                          - சுந்தரர்.

 

திருப்புனவாயில் , என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்கும் நான்கனுள் சதுரக்கள்ளியும் ஒன்றாகும். திருக்கள்ளில் தலத்திலும் உள்ளது. வேலிக்காக வளர்க்கப்படும் செடியினம். முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படுகிறது. இதன் சாறு பால் வடிவானது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. இதன் தண்டு, பால், வேர் முதலியன மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இஃது நச்சு மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

திருமுறைகளில் கள்ளி பற்றிய குறிப்பு :-

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை       
 படர்தொடரி கள்ளி கவினிச்         
சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த          
 சிவன்மேய சோலை நகர்தான்          
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை        
 குதிகொள்ள வள்ளை துவள            
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும்     
 நனிபள்ளி போலும் நமர்காள்.   1  

ஓமையன கள்ளியன வாகையன
 கூகைமுர லோசை
ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது
 காடுநட மாடித்
தூய்மையுடை அக்கொடர வம்விரவி
 மிக்கொளி துளங்க
ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ
 தவளிவண லூரே.   2  

கொள்ளித் தீயெரி
 வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை
 யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித்
 தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தாற்றொழு
 வாரும்பர் வாணரே.   7  

கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறைமுடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.   4  

கொள்ளி வாயின கூரெயிற்
 றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக்
 கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங்
 கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக்
 கும்புன வாயிலே.   8  

மறவல் நீமனம் என்னொடு
 சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம்
 மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட்
 டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ்
 சூழ்புன வாயிலே.   6  

எட்டி இலவம் ஈகை 
 சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த 
 கள்ளி சோர்ந்த குடர்கெளவப்
பட்ட பிணங்கள் பரந்த 
 காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி 
 பாடக் குழகன் ஆடுமே.   1  

கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக் 
 கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி வெடுவெடென்ன 
 நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச் 
 சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள் 
 அப்பன் இடந்திரு ஆலங்காடே.   2  

முள்ளி தீந்து முளரி 
 கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில் 
 பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன் 
 றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி இடமும் அதுவே 
 ஆகப் பரமன் ஆடுமே.   5  

கள்ளியங் கவட்டிடைப் 
 பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே உறவலை 
 காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் 
 திருக்கழு மலத்துப்
பையர வசைத்த 
 தெய்வ நாயகன்
தன்அருள் பெற்ற 
 பொன்னணிக் குன்றம் ....(10)

கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி 
 தீச்சில வேய்உலறி
விள்ளும் வெடிபடும் பாலையென் 
 பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுள்திரு 
 ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப் 
 போவ துரைப்பரிதே.   68  

வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப 
 மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையொ டாண்டலை பாடஆந்தை 
 கோடதன் மேற்குதித் தோடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல் 
 ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் 
 அப்பன் இடந்திரு ஆலங்காடே.   3  
 

 

< PREV <
சண்பகம்
Table of Content> NEXT >
சந்தனம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)