இறைவர் திருப்பெயர்: | விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பிருகந்நாயகி, பெரியநாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | இந்திர, பிரம்ம, சக்கர, சூரிய, இலக்குமி, சந்திர, பாம்பாறு, வருண, கல்யாண, சிவகங்கை ஆகிய பத்து தீர்த்தங்கள். |
வழிபட்டோர்: | வேதங்கள், திருமால், பிரமன், இந்திரன், சூரியசந்திரர், எமன், ஐராவதம், வசிட்டர், அகத்தியர், சௌந்தரபாண்டியன். |
இந்திரன் வழிபட்ட விநாயகர் "ஆகண்டல விநாயகர்" தனியே உள்ளார்.
மொட்டைக்கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிக உக்கரத்தில் இருப்பதன்பொருட்டு இக்கதவு எப்போதும் மூடப்பட்டுள்ளது.
காசியில் உயிர் நீப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால் தன்னிடம் வந்து வணங்குவோரது பாவங்களைத் தீர்த்து ,ஜீவன் முக்தியையே வழங்குவது திருப்புனவாயில் என்பதை, விருத்தபுரி மஹாத்மியம் கூறுகிறது. சிவமஹாபுராணத்தில் ஏகாதச ருத்ர வைபவ காண்டத்தில் விருத்தபுரி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது.
இத்தலத்திற்கு இந்திரபுரம்,சதானந்தபுரம், வஜ்ர துருமவனம், வனமுகம்,கைவல்யபுரம்,விருத்தகாசி, என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.
திருப்புனவாயிலைச் சுற்றிலும் உள்ள தலங்களுள் தென்கிழக்கில் தீர்த்தாண்டதானமும், வடமேற்கில் பறையத்தூரும், அதன் வடமேற்கில் கல்யாணபுரமும் ,மேற்கில் வெளி முக்தியும், வடக்கில் வசிஷ்டர் பூஜித்த தலமும் உள்ளன. இவற்றிலும் விருத்தபுரீச்வரரே அருள் செய்வதாகப் புராணம் சொல்கிறது.
விருத்தபுரியின் சுற்றுவட்டாரத்தில் எமதர்மனும் அவனது தூதர்களும் நுழையமாட்டார்கள் எனவும் இங்கு உயிர் விடும் அத்தனை பேருக்கும் சிவலோகம் சித்திக்கும் என்றும் தலபுராணத்தால் அறியலாம்.
பாண்டிய மன்னர்களின் காலத்திய கட்வெட்டுக்கள் ஐந்து இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கல் இறைவனை "திருப்புனவாசலுடைய நாயனார்" என்று குறிப்பிடுகின்றன.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - மின்னியல் செஞ்சடை. 2. சுந்தரர் - சித்தம் நீநினை என்னொடு.
விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள்.
தஞ்சை பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். உயரம் 9 அடி, சுற்றளவு 8 1/2 அடி, ஆவுடையார் சுற்றளவு 33 அடி, கோமுகி 3 1/2 அடி நீளம்.
இதனையொட்டி, 'மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற பழமொழி வழங்குகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தொடர்பு : 04371 - 239212