113. | அம்பலத்தரசே | (5064 5155) | மின்பதிப்பு |
114 | சம்போ சங்கர | (5156 5177) | மின்பதிப்பு |
115 | சிவபோகம் | (5178 5217) | மின்பதிப்பு |
116 | அம்பலத்தமுதே | (5218 5225) | மின்பதிப்பு |
117 | திருநட மணியே | (5226 5240) | மின்பதிப்பு |
118 | ஞான சபாபதியே | (5241 5250) | மின்பதிப்பு |
119. | விரைசேர் சடையாய் | (5251 5254) | மின்பதிப்பு |
120 | ஜோதி ஜோதி | (5255 5257) | மின்பதிப்பு |
121 | கண்புருவப் பூட்டு | (5258 5268) | மின்பதிப்பு |
122 | ஊதூது சங்கே | (5269 5284) | மின்பதிப்பு |
123 | சின்னம் பிடி | (5285 5294) | மின்பதிப்பு |
124 | முரசறைதல் | (5295) | மின்பதிப்பு |
125 | தனித்திரு அலங்கல் | (5296 5456) | மின்பதிப்பு |
126 | சிற்சத்தி துதி | (5457 5466) | மின்பதிப்பு |
127 | இன்பத் திறன் | (5467 5476) | மின்பதிப்பு |
128 | உற்ற துரைத்தல் | (5477 5486) | மின்பதிப்பு |
129 | சுத்த சிவநிலை | ( 5487 5533) | மின்பதிப்பு |
130 | உலகப் பேறு | (5534 5543) | மின்பதிப்பு |
131. | அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் | (5544 5555) | மின்பதிப்பு |
132. | உலகர்க்கு உய்வகை கூறல் | (5556 5565) | மின்பதிப்பு |
133 | புனிதகுலம் பெறுமாறு புகலல் | (5566 5575) | மின்பதிப்பு |
134 | மரணமிலாப் பெருவாழ்வு | (5576 5603) | மின்பதிப்பு |
135 | சமாதி வற்புறுத்தல் | (5604 5613) | மின்பதிப்பு |
136 | சன்மார்க்க உலகின் ஒருமைநிலை | (5614 5624) | மின்பதிப்பு |
137 | திருவடிப் பெருமை | (5625 5669) | மின்பதிப்பு |
138. | தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் | (5670 5679) | மின்பதிப்பு |
139. | நற்றாய் செவிலிக்குக் கூறல் | (5680 5689) | மின்பதிப்பு |
140 | தோழிக்குரிமை கிளத்தல் | (5690 5703) | மின்பதிப்பு |
141 | தலைவி கூறல் | (5704 5713) | மின்பதிப்பு |
142 | அனுபவ மாலை | (5714 5813) | மின்பதிப்பு |
143 | சத்திய வார்த்தை | (5814) | மின்பதிப்பு |
144 | சத்திய அறிவிப்பு | (5815 5818) | மின்பதிப்பு |
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
திருச்சிற்றம்பலம்
ஆறாம் அருட்பா - நான்காம் பகுதி - பாடல்கள் (5064 -5818)
நாமாவளி
சிந்து
5064. | சிவசிவ கஜமுக கணநா தா சிவகண வந்தித குணநீ தா. | 1 |
5065 | சிவசிவ சிவசிவ தத்துவ போதா சிவகுரு பரசிவ சண்முக நாதா.(374) | 2 |
(374)ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாக நாமாவளி தொடங்குகிறது. ஆ. பா.பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும் முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது. இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப் பெறுவதாயும், கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே" என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விரு நாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக் கொள்ளலாம். | ||
5066 | அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே. | 1 |
5067 | பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே. | 2 |
5068 | மலைதரு மகளே மடமயி லே மதிமுக அமுதே இளங்குயி லே. | 3 |
5069 | ஆனந்தக் கொடியே இளம்பிடி யே அற்புதத் தேனே மலைமா னே. | 4 |
5070 | சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா. | 5 |
5071 | படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா. | 6 |
5072 | அரிபிர மாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா. | 7 |
5073 | அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா. | 8 |
5074 | அம்பர விம்ப சிதம்பர நாதா அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா. | 9 |
5075 | தந்திர மந்திர யந்திர பாதா சங்கர சங்கர சங்கர நாதா. | 10 |
5076 | கனக சிதம்பர கங்கர புரஹர அனக பரம்பர சங்கர ஹரஹர. | 11 |
5077 | சகல கலாண்ட சராசர காரண சகுண சிவாண்ட பராபர பூரண. | 12 |
5078 | இக்கரை கடந்திடில் அக்கரை யே இருப்பது சிதம்பர சர்க்கரை யே. | 13 |
5079 | என்னுயிர் உடம்பொடு சித்தம தே இனிப்பது நடராஜ புத்தமு தே. | 14 |
5080 | ஐயர் திருச்சபை ஆடக மே ஆடுதல் ஆனந்த நாடக மே. | 15 |
5081 | உத்தர ஞான சிதம்பர மே சித்திஎ லாந்தரும் அம்பரமே. | 16 |
5082 | அம்பல வாசிவ மாதே வா வம்பல வாவிங்கு வாவா வா. | 17 |
5083 | நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே நல்லஎ லாம்செய வல்லவ னே. | 18 |
5084 | ஆனந்த நாடகம் கண்டோ மே - பர மானந்த போனகம் கொண்டோ மே. | 19 |
5085 | சகள உபகள நிட்கள நாதா உகள சததள மங்கள பாதா. | 20 |
5086 | சந்தத மும்சிவ சங்கர பஜனம் சங்கிதம் என்பது சற்சன வசனம். | 21 |
5087 | சங்கர சிவசிவ மாதே வா எங்களை ஆட்கொள வாவா வா. | 22 |
5088 | அரகர சிவசிவ மாதே வா அருளமு தம்தர வாவா வா. | 23 |
5089 | நடனசி காமணி நவமணி யே திடனக மாமணி சிவமணி யே. | 24 |
5090 | நடமிடும் அம்பல நன்மணி யே புடமிடு செம்பல பொன்மணி யே. | 25 |
5091 | உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே. | 26 |
5092 | நடராஜ வள்ளலை நாடுத லே நம்தொழி லாம்விளை யாடுத லே. | 27 |
5093 | அருட்பொது நடமிடு தாண்டவ னே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே. | 28 |
5094 | நடராஜ மாணிக்கம் ஒன்றது வே நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே. | 29 |
5095 | நடராஜ பலமது நம்பல மே நடமாடு வதுதிரு அம்பல மே. | 30 |
5096 | நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு. | 31 |
5097 | சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு. | 32 |
5098 | அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு. | 33 |
5099 | அம்பல வாணனை நாடின னே அவனடி யாரொடும் கூடின னே. | 34 |
5100 | தம்பத மாம்புகழ் பாடின னே தந்தன என்றுகூத் தாடின னே. | 35 |
5101 | நான்சொன்ன பாடலும் கேட்டா ரே ஞான சிதம்பர நாட்டா ரே. | 36 |
5102 | இனித்துயர் படமாட்டேன் விட்டே னே என்குரு மேல்ஆணை இட்டே னே. | 37 |
5103 | இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே என்னப்பன் மேல்ஆணை இட்டே னே. | 38 |
5104 | சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம். | 39 |
5105 | நாதாந்த நாட்டுக்கு நாயக ரே நடராஜ ரேசபா நாயக ரே. | 40 |
5106 | நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே நடராஜ எனில்வரும் நித்திய மே. | 41 |
5107 | நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே நல்வரம் ஈயும் தயாநிதி யே. | 42 |
5108 | நடராஜர் தம்நடம் நன்னட மே நடம்புரி கின்றதும் என்னிட மே. | 43 |
5109 | சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே. | 44 |
5110 | சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே. | 45 |
5111 | இறவா வரம்தரு நற்சபை யே எனமறை புகழ்வது சிற்சபை யே. | 46 |
5112 | என்இரு கண்ணுள் இருந்தவ னே இறவா தருளும் மருந்தவ னே. | 47 |
5113 | சிற்சபை அப்பனை உற்றே னே சித்திஎ லாம்செயப் பெற்றே னே. | 48 |
5114 | அம்பல வாணர்தம் அடியவ ரே அருளர சாள்மணி முடியவ ரே. | 49 |
5115 | அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே ஆனந்தத் தெள்ளமு துண்டே னே. | 50 |
5116 | இருட்பெரு மாயையை விண்டே னே எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே. | 51 |
5117 | கருணா நிதியே குணநிதி யே கதிமா நிதியே கலாநிதி யே. | 52 |
5118 | தருணா பதியே சிவபதி யே தனிமா பதியே சபாபதி யே. | 53 |
5119 | கருணா நிதியே சபாபதி யே கதிமா நிதியே பசுபதி யே. | 54 |
5120 | சபாபதி பாதம் தபோப்ர சாதம் தயாநிதி போதம் சதோதய வேதம். | 55 |
5121 | கருணாம் பரவர கரசிவ பவபவ அருணாம் பரதர ஹரஹர சிவசிவ. | 56 |
5122 | கனகா கரபுர ஹரசிர கரதர கருணா கரபர சுரவர ஹரஹர. | 57 |
5123 | கனக சபாபதி பசுபதி நவபதி அனக உமாபதி அதிபதி சிவபதி. | 58 |
5124 | வேதாந்த பராம்பர ஜயஜய(375) நாதாந்த நடாம்பர ஜயஜய. | 59 |
(375). சவுதய - ஆ. பா. பதிப்பு. | ||
5125 | ஏகாந்த சர்வேச சமோதம யோகாந்த நடேச நமோநம. | 60 |
5126 | ஆதாம்பர ஆடக அதிசய பாதாம்புஜ நாடக ஜயஜய. | 61 |
5127 | போதாந்த புரேச சிவாகம நாதாந்த நடேச நமோநம. | 62 |
5128 | ஜால கோலகன காம்பர சாயக கால காலவன காம்பர நாயக. | 63 |
5129 | நாத பாலசு லோசன வர்த்தன ஜாத ஜாலவி மோசன நிர்த்தன. | 64 |
5130 | சதபரி சதவுப சதமத விதபவ சிதபரி கதபத சிவசிவ சிவசிவ. | 65 |
5131 | அரகர வரசுப கரகர பவபவ சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ. | 66 |
5132 | உபல சிரதல சுபகண வங்கண சுபல கரதல கணபண கங்கண. | 67 |
5133 | அபயவ ரதகர தலபுரி காரண உபயப ரதபத பரபரி பூரண. | 68 |
5134 | அகரஉ கரசுப கரவர சினகர தகரவ கரநவ புரசிர தினகர. | 69 |
5135 | வகரசி கரதின கரசசி கரபுர மகரஅ கரவர புரஹர ஹரஹர. | 70 |
5136 | பரமமந் திரசக ளாகன கரணா படனதந் திரநிக மாகம சரணா. | 71 |
5137 | அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா அகண்டவே தசிர கரதர பலிதா. | 72 |
5138 | பரிபூரண ஞானசி தம்பர பதிகாரண நாதப ரம்பர. | 73 |
5139 | சிவஞானப தாடக நாடக சிவபோதப ரோகள கூடக. | 74 |
5140 | சகல லோகபர காரக வாரக சபள யோகசர பூரக தாரக. | 75 |
5141 | சத்வ போதக தாரண தன்மய சத்ய வேதக பூரண சின்மய. | 76 |
5142 | வரகே சாந்த மகோதய காரிய பரபா சாந்த சுகோதய சூரிய. | 77 |
5143 | பளித தீபக சோபித பாதா லளித ரூபக ஸ்தாபித நாதா. | 78 |
5144 | அனிர்த(376) கோபகரு ணாம்பக நா தா அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா. | 79 |
(376). அனுர்த - ச. மு. க. பதிப்பு. | ||
5145 | அம்போ ருகபத அரகர கங்கர சம்போ சிவசிவ சிவசிவ சங்கர. | 80 |
5146 | சிதம்பிர காசா பரம்பிர கா சா சிதம்ப ரேசா சுயம்பிர கா சா. | 81 |
5147 | அருட்பிர காசம் பரப்பிர காசம் அகப்பிர காசம் சிவப்பிர காசம். | 82 |
5148 | நடப்பிர காசம் தவப்பிர காசம் நவப்பிர காசம் சிவப்பிர காசம். | 83 |
5149 | நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே. | 84 |
5150 | ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே. | 85 |
5151 | ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே. | 86 |
5152 | புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா. | 87 |
5153 | நடுநாடி நடுநாடி நடமாடு பதியே நடராஜ நடராஜ நடராஜ நிதியே. | 88 |
5154 | நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே நடராஜ நடராஜ நடராஜ குருவே. | 89 |
5155 | நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே நடராஜ நடராஜ நடராஜ பலமே. | 80 |
திருச்சிற்றம்பலம்
Back
சிந்து
5156. | தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு. | 1 |
5157 | சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு. | 2 |
5158 | நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி. | 3 |
5159 | நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி. | 4 |
5160. | உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி. | 5 |
5161 | ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி. | 6 |
5162 | ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி. | 7 |
5163 | அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி. | 8 |
5164 | அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி. | 9 |
5165 | பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே. | 10 |
5166 | அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே. | 11 |
5167 | அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா. | 12 |
5168 | எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. | 13 |
5169 | நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. | 14 |
5170 | பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது அரஅர அரஅர அரஅர அரஅர. | 15 |
5171 | நவநிலை தருவது நவவடி வுறுவது நவவெளி நடுவது நவநவ நவமது சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ. | 16 |
5172 | சந்திர தரசிர சுந்தர சுரவர தந்திர நவபத மந்திர புரநட சங்கர சிவசிவ சங்கர சிவசிவ. | 17 |
5173 | வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர. | 18 |
5174 | பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர. | 19 |
5175 | பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர. | 20 |
5176 | கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும் கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ் சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம். | 21 |
5177 | எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம் இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம் சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம். | 22 |
திருச்சிற்றம்பலம்
Back
சிந்து
5178. | போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம். | 1 |
5179 | நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம் பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம். | 2 |
5180 | சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே. | 3 |
5181 | அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே. | 4 |
5182 | ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே. | 5 |
5183 | நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா. | 6 |
5184 | பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே. | 7 |
5185 | ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே தூயவாய காயதேய தோயமேய ஜோதியே. | 8 |
5186 | ஆதவாத வேதகீத வாதவாத வாதியே சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே. | 9 |
5187 | அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே. | 10 |
5188 | அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே. | 11 |
5189 | அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே. | 12 |
5190 | தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே. | 13 |
5191 | கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே. | 14 |
5192 | என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே. | 15 |
5193 | எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே. | 16 |
5194 | சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே ஓர்உகார தேரதீர வாரவார தூரனே. | 17 |
5195 | வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே. | 18 |
5196 | பாசநாச பாபநாச பாததேச ஈசனே வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே. | 19 |
5197 | உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே. | 20 |
5198 | அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே. | 21 |
5199 | அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே அபரசபர அமனசமன அமலநிமல சரணமே. | 22 |
5200 | தகரககன நடனகடன சகளவகள சரணமே சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே. | 23 |
5201 | அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே. | 24 |
5202 | தனககனக சபையஅபய சரதவரத சரணமே சதுரசதர சகசசரித தருணசரண சரணமே. | 25 |
5203 | உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே. | 26 |
5204 | இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே. | 27 |
5205 | அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே. | 28 |
5206 | ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே. | 29 |
5207 | அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே. | 30 |
5208 | எறிவில்உலகில்(377) உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே. | 31 |
(377). இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு. | ||
5209 | நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே. | 32 |
5210 | வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே. | 33 |
5211 | நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே. | 34 |
5212 | மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா. | 35 |
5213 | களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே. | 36 |
5214 | தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே. | 37 |
5215 | எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே. | 38 |
5216 | சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா. | 39 |
5217 | வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா. | 40 |
திருச்சிற்றம்பலம்
Back
கலிவிருத்தம்
5218. | நீடிய வேதம் தேடிய பாதம் நேடிய கீதம் பாடிய பாதம் ஆடிய போதம் கூடிய பாதம் ஆடிய பாதம் ஆடிய பாதம். | 1 |
5219 | சாக்கிய வேதம் தேக்கிய பாதம் தாக்கிய ஏதம் போக்கிய பாதம் சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் தூக்கிய பாதம் தூக்கிய பாதம். | 2 |
5220 | ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம். | 3 |
5221 | சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் தஞ்சித மாகும் சஞ்சித பாதம் கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் குஞ்சித பாதம் குஞ்சித பாதம். | 4 |
5222 | எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் எண்ணிய வாறே நண்ணிய பேறே புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் புண்ணிய வானே புண்ணிய வானே. | 5 |
5223 | தொத்திய சீரே பொத்திய பேரே துத்திய பாவே பத்திய நாவே சத்தியம் நானே நித்தியன் ஆனேன் சத்திய வானே சத்திய வானே. | 6 |
5224 | எம்புலப் பகையே எம்புலத் துறவே எம்குலத் தவமே எம்குலச் சிவமே அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே அம்பலத் தரசே அம்பலத் தரசே. | 7 |
5225 | இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே எண்குணச் சுடரே இந்தகத் தொளியே அன்புடைக் குருவே அம்புயற் கிறையே அம்பலத் தமுதே அம்பலத் தமுதே. | 1 |
திருச்சிற்றம்பலம்
Back
தாழிசை
5226. | பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே நடராஜ மணியே நடராஜ மணியே. | 1 |
5227 | புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே நடராஜ நிதியே நடராஜ நிதியே. | 2 |
5228 | சிவஞான நிலையே சிவயோக நிறைவே சிவபோக உருவே சிவமான உணர்வே நடராஜ பதியே நடராஜ பதியே. | 3 |
5229 | தவயோக பலமே சிவஞான நிலமே தலையேறும் அணியே விலையேறு மணியே நடராஜ பரமே நடராஜ பரமே. | 4 |
5230 | துதிவேத உறவே சுகபோத நறவே துனிதீரும் இடமே தனிஞான நடமே நடராஜ குருவே நடராஜ குருவே. | 5 |
5231 | வயமான வரமே வியமான பரமே மனமோன நிலையே கனஞான மலையே நடராஜ துரையே நடராஜ துரையே. | 6 |
5232 | பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே மறைமுடி மணியே மறைமுடி மணியே. | 7 |
5233 | அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே மறைமுடி மணியே மறைமுடி மணியே. | 8 |
5234 | தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே தடம்வளர் புனலே புனல்வளர் நலனே திருநட மணியே திருநட மணியே. | 9 |
5235 | உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே திருநட மணியே திருநட மணியே. | 10 |
5236 | கலைநிறை மதியே மதிநிறை அமுதே கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே திருநட மணியே திருநட மணியே. | 11 |
5237 | மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே திருநட மணியே திருநட மணியே. | 12 |
5238 | இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே இசைகிளர் துதியே துதிகிளர் இறையே திருநட மணியே திருநட மணியே. | 13 |
5239 | புரையறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே திருநட மணியே திருநட மணியே. | 14 |
5240 | நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே நிறையருள் நிதியே நிதிதரு பதியே திருநட மணியே திருநட மணியே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
தாழிசை
5241. | வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 1 |
5242 | ஏக சதாசிவமே யோக சுகாகரமே ஏம பராநலமே காம விமோசனமே நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 2 |
5243 | தூய சதாகதியே நேய சதாசிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 3 |
5244 | ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே நாரண னாதரமே காரண மேபரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 4 |
5245 | ஆகம போதகமே யாதர வேதகமே ஆமய மோசனமே ஆரமு தாகரமே நாக நடோ தயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 5 |
5246 | ஆடக நீடொளியே நேடக நாடளியே ஆதி புராதனனே வேதி பராபரனே நாடக நாயகனே நானவ னானவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 6 |
5247 | ஆரிய னேசிவனே ஆரண னேபவனே ஆலய னேஅரனே ஆதர னேசுரனே நாரிய னேவரனே நாடிய னேபரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 7 |
5248 | ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே நாத விபூதியனே நாம வனாதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 8 |
5249 | தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மாநிதியே நாவல ரோர்பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 9 |
5250 | ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
சிந்து
5251. | விரைசேர் சடையாய் விடையாய் உடையாய் விகிர்தா விபவா விமலா அமலா வெஞ்சேர்(378) பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே. | 1 |
(378). வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு. | ||
5252 | அரைசே குருவே அமுதே சிவமே அணியே மணியே அருளே பொருளே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. | 2 |
5253 | உருவே உயிரே உணர்வே உறவே உரையே பொருளே ஒளியே வெளியே ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர(379) நம்பர னே. | 3 |
(379). உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு. | ||
5254 | அருவே திருவே அறிவே செறிவே அதுவே இதுவே அடியே முடியே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. | 4 |
திருச்சிற்றம்பலம்
Back
சிந்து
5255. | ஜோதி ஜோதி ஜோதி சுயஞ் ஜோதி ஜோதி ஜோதி பரஞ் ஜோதி ஜோதி ஜோதி யருட் ஜோதி ஜோதி ஜோதி சிவம். | 1 |
5256 | வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி. | 2 |
5257 | ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. | 3 |
திருச்சிற்றம்பலம்
Back
தாழிசை
5258. | கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு. | 1 |
5259 | சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு. | 2 |
5260 | ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு. | 3 |
5261 | ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம் ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம் தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம். | 4 |
5262 | மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி. | 5 |
5263 | துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு. | 6 |
5264 | சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது. | 7 |
5265 | சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு. | 8 |
(380). இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு. | ||
5266 | வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு. | 9 |
5267 | அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம் அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம் வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம். | 10 |
5268 | நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு. | 11 |
தாழிசை
5269. | கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே கனக சபையான்என்று ஊதூது சங்கே பூசைப லித்ததென்று ஊதூது சங்கே. | 1 |
5270 | தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே ஏம சபையான்என்று ஊதூது சங்கே. | 2 |
5271 | பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே. | 3 |
5272 | அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே அம்பல வாணன்என்று ஊதூது சங்கே இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே. | 4 |
5273 | என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே. | 5 |
5274 | சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே. | 6 |
5275 | நாத முடியான்என்று ஊதூது சங்கே ஞானசபையான்என்று ஊதூது சங்கே பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே. | 7 |
5276 | தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே. | 8 |
5277 | என்னறி வானான்என்று ஊதூது சங்கே எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே. | 9 |
5278 | இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே. | 10 |
5279 | கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே. | 11 |
5280 | எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே. | 12 |
5281 | கருணா நிதியர்என்று ஊதூது சங்கே கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே. | 13 |
5282 | தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே. | 14 |
5283 | ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே. | 15 |
5284 | பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே. | 16 |
திருச்சிற்றம்பலம்
Back
தாழிசை
5285. | அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி. | 1 |
5286 | சிற்சபையைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி. | 2 |
5287 | ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி. | 3 |
5288 | கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி அருளமுதம் உண்டோ ம்என்று சின்னம் பிடி. | 4 |
5289 | அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி. | 5 |
5290 | தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி. | 6 |
5291 | வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி. | 7 |
5292 | மீதான நிலைஏறிச் சின்னம் பிடி வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி. | 8 |
5293 | பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி. | 9 |
5294 | சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி இதுவே தருணம்என்று சின்னம் பிடி. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
தாழிசை
5295. | அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு. | 1 |
திருச்சிற்றம்பலம்
Back
ஆன்மநேய ஒருமைப்பாடு (382)
(382). இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
5296. | எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப கரிக்கின்றார் யாவர் அந்தச் செயல்எனவே தெரிந்தேன் இங்கே தமக்கேவல் களிப்பால் செய்ய வாய்மிகவும் ஊர்வ தாலோ. | 1 |
5297 | எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி உள்ளே யாவர்அவர் உளந்தான் சுத்த இடம்எனநான் தெரிந்தேன் அந்த சிந்தைமிக விழைந்த தாலோ. | 2 |
5298 | கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்உயிர்போல் கண்டு ஞானத் பெருநீதி செலுத்தா நின்ற திருவாயால் புகன்ற வார்த்தை வார்த்தைகள்என் றறைவ ராலோ. | 1 |
சாலையப்பனை வேண்டல் கொச்சகக் கலிப்பா | ||
5299 | மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன் தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும் முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே. | 1 |
கட்டளைக் கலித்துறை | ||
5300 | ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய் சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே. | 5 |
5301 | அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும் ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத் துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே. | 6 |
5302 | வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர் சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச் சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே. | 7 |
5303 | மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன் உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே. | 8 |
5304 | எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே. | 9 |
5305 | ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம் திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக் கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே. | 1 |
மாயை நீக்கம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5306 | அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப் பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே. | 11 |
5307 | மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன் கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே. | 12 |
5308 | தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச் சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே. | 13 |
சிதம்பரேசன் அருள் கலி விருத்தம் | ||
5309 | சிற்றறி வுடையநான் செய்த தீமைகள் முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும் மற்றவும் வழங்குக வரதனே என்றேன். | 14 |
5310 | என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல் இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம் நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா வென்றியும் அளித்தனம் என்று மேவினான். | 15 |
5311 | மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என் ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர் பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த் தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே. | 16 |
போற்றிச் சந்த விருத்தம் சந்த விருத்தம் | ||
5312 | போற்றி நின்அருள் போற்றி நின்பொது போற்றி நின்புகழ் போற்றி நின்உரு போற்றி நின்இயல் போற்றி நின்நிலை போற்றி நின்நெறி போற்றி நின்சுகம் போற்றி நின்உளம் போற்றி நின்மொழி போற்றி நின்செயல் போற்றி நின்குணம் போற்றி நின்முடி போற்றி நின்நடு போற்றி நின்அடி போற்றி போற்றியே. | 17 |
5313 | போற்றி நின்இடம் போற்றி நின்வலம் போற்றி நின்நடம் போற்றி நின்நலம் போற்றி நின்திறம் போற்றி நின்தரம் போற்றி நின்வரம் போற்றி நின்கதி போற்றி நின்கலை போற்றி நின்பொருள் போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி போற்றி நின்தயை போற்றி நின்கொடை போற்றி நின்பதம் போற்றி போற்றியே. | 18 |
5314 | போற்று கின்றஎன் புன்மை யாவையும் பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன் கறிவு தந்தபே ரறிவ போற்றிவான் காணக் காட்டிய கருத்த போற்றிவன் கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே. | 19 |
பாடமும் படிப்பும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5315 | அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன் அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன் ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன் நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப் படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே. | 20 |
5316 | கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன் கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன் செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன் அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே. | 21 |
5317 | காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன் ஐயர் திருவடிக் கானந்த மாகப் படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே. | 22 |
பாட்டும் திருத்தமும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5318 | தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக் கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய். | 23 |
5319 | ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன் ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய். | 24 |
அம்பலத்தரசே அபயம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5320 | பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப் புறத்தினும் அகத்தினும் புணர்ந்த செல்வமே நான்பெற்ற சிறப்பே வாழ்வித்த என்பெரு வாழ்வே அம்மையே அப்பனே அபயம். | 25 |
5321 | பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள் புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த தேடியும் காண்கிலாச் சிவமே வள்ளலே தெள்ளிய அமுதே அம்மையே அப்பனே அபயம். | 26 |
5322 | பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம் புகன்றபோ தாந்த நாதாந்தம் தத்தினும் தித்திக்கும் தேனே மாபெருங் கருணையா ரமுதே அம்மையே அப்பனே அபயம். | 27 |
அருட்பெருஞ்சோதி அபயம் நேரிசை வெண்பா | ||
5323 | அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ் சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற் சோதி அபயம் துணை. | 28 |
5324 | துணைவா அபயம் துயர்அகல என்பால் அணைவா அபயம் அபயம் - பணைவாய் வடலா அபயம் வரதா அபயம் நடநாய காஅபயம் நான். | 29 |
5325 | நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம் தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு மெய்யா அபயம் விமலா அபயமென்றன் ஐயா அபயமப யம். | 30 |
5326 | அபயம் பதியே அபயம் பரமே அபயம் சிவமே அபயம் - உபய பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல் விதத்தில் கருணை விளை. | 31 |
5327 | கருணா நிதியே அபயம் கனிந்த அருணா டகனே அபயம் - மருணாடும் உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப் பொள்ளற் பிழைகள் பொறுத்து. | 32 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5328 | இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர் இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர் வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே. | 33 |
(383). பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு. | ||
5329 | உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர் ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர் கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர் குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே. | 34 |
(384). குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5330 | உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர் ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் தம்பலம் பரவுதற் கிசையீரே. | 35 |
5331 | மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடிஊண் வழங்கில் இங்கே கவற்றைஎலாம் ஓகோ பேயின் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் கொடுத்திழப்பர் என்னே என்னே. | 36 |
5332 | கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக் களிக்கா நின்ற கணச்சுகமே சொல்லக் கேண்மின் சாவதற்கு முன்னே நீவீர் எமையும்இவ்வா றிடுகஎன்றே. | 37 |
5333 | மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர் கிடந்தழுது விளைவிற் கேற்பக் மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ மணித்தேவைத் துதியார் அன்றே. | 38 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5334 | சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச் சிறியவர் சிந்தைமாத் திரமோ புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக் கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த இனிப்பிலே புகுகின்ற திலையே. | 39 |
கலிநிலைத்துறை | ||
5335 | பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர் ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர் ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே. | 40 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5336 | நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான்செயத் தக்கதே தென்பாள் தெய்வமே தெய்வமே என்பாள் விருப்பிலர் என்மிசை என்பாள் வருந்துவாள் நான்பெற்ற மகளே. | 41 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5337 | நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார் வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான் எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே. | 42 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | 33 | |
5338. | அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அரசேநின் அடிமேல் ஆணை திடமுடியா திதுகால் தொட்டுப் நீதானே புரத்தல் வேண்டும் மாஇருக்க ஒண்ணா தண்ணா. | 43 |
5339. | முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் இலைஅதனால் எல்லாம் வல்லோய் அருட்சோதி அளித்துக் காத்தல் டுண்டோ நீ உரைப்பாய் அப்பா. | 44 |
5340.. | உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ அருட்சோதி ஈதல் வேண்டும் பெருங்கருணை அரசே என்னை இந்நாள்என் மொழிந்தி டாதே. | 45 |
5341. | தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை பதியேகால் நீட்டிப் பின்னே தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும் வுளமறிந்த சரிதம் தானே. | 46 |
5342. | இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப் எங்குளர்காண் பதியே என்னை பிள்ளைஎன மதித்தி டாயே. | 47 |
5343. | சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய் றிடஅழியாத் தேகன் ஆகப் புரிகஎனைப் பெற்ற தேவே. | 48 |
கலிநிலைத்துறை | ||
5344 | அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல் எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன் செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ. | 49 |
5345 | ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின் சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம் காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ. | 50 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5346 | உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே. | 51 |
5347 | கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப் பொருளை நினைக்கும் போதெல்லாம் சாலா தென்றால் சாமிநினக் எல்லாம் கொடுக்க வல்லாயே. | 52 |
5348 | கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும் வல்லவனே இலங்குஞ் சோதி என்னிருகண் மணியே நின்னை ஆணைஉன்மேல் ஆணை ஐயா. | 53 |
5349 | திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய் திருவருள் இயல்வடி வொடுமன்றில் இறைவநின் குரைகழற் பதம்போற்றி. | 54 |
5350 | குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே செப்பும் முகமன் யாதுளது தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே ஈக தருணம் இதுவாமே. | 55 |
5351 | அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய் எண்ணம் முடிப்பாய் இப்போதே. | 56 |
5352 | மந்திரம் அறியேன் மற்றை மணிமருந் தறியேன் வேறு தகவுகொண் டடைவேன் எந்தாய் இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச் தனிநடம் புரியும் தேவே. | 57 |
5353. | கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில் சார்ந்த பதமே தற்பதமே பொதுவில் நடிக்கும் பரம்பரமே சித்தி நிலைகள் தெரித்தருளே. | 58 |
5354. | கலக்கம் அற்றுநான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள்எந்நாள் புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண் தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே புரியும்என் அப்பனே அடியேற்கே. | 59 |
கட்டளைக் கலிப்பா | ||
5355 | பண்டு நின்திருப் பாதம லரையே பாடி யாடிய பத்திமை யோரைப்போல் துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல் குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன் குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே. | 60 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5356 | கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக் கருணைமா மழைபொழி முகிலே விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள் இன்றுநீ ஏழையேன் மனத்துப் புகுந்தென துளங்கலந் தருளே. | 61 |
5357 | அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும் அன்றுவந் தாண்டனை அதனால் சொல்லினேன் சொல்லிய நானே எனைஉல கவமதித் திடில்என் எய்துக விரைந்தென திடத்தே. | 62 |
கட்டளைக் கலித்துறை | ||
5358 | வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத் தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல் ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன் நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே. | 63 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5359 | செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும் தேவரும் முனிவரும் பிறரும் எந்தைநின் திருவருள் திறத்தை என்தரத் தியலுவ தேயோ உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே. | 64 |
5360 | உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே சிவபதத் தலைவநின் இயலைப் புகன்றிடும் தரஞ்சிறி துளனோ குருஎனக் கூறல்என் குறிப்பே. | 65 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5361 | அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும் அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண் ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன் மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர் திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே. | 66 |
5362 | கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும் கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே. | 67 |
5363 | என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும் நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன் சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும் பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே. | 68 |
5364 | இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன் இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும் படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே. | 69 |
5365 | தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான் உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே. | 70 |
5366 | வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி தந்தை நீதரல் சத்தியம் என்றே குவலை யத்திடைக் கவலையைத் தரியேன் செய்க வாழ்கநின் திருவருட் புகழே. . | 71 |
5367 | வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில் மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன் எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே. . | 72 |
குறட்டாழிசை. | ||
5368 | அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம் மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம். . | 73 |
நேரிசை வெண்பா. | ||
5369 | இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன் அன்னியனே அல்லேன் அறிந்து. . | 74 |
கலித்துறை. | ||
5370 | ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான் சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே. . | 75 |
கட்டளைக் கலித்துறை. | ||
5371 | போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென் தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான் மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின் கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. . | 76 |
5372 | அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல் அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள் அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே. . | 77 |
5373 | மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில் யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன் போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே. . | 78 |
தரவு கொச்சகக் கலிப்பா. | ||
5374 | ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம் சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும் ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை. . | 79 |
5375 | அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும் ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும் இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே. . | 80 |
5376 | கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின் றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம் அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே. | 81 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5377. | மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் திருத்தாளை வழுத்தல் இன்று ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ கென்கின்றாய் விரைந்த நெஞ்சே களவென்பார் போன்றாய் அன்றே. | 82 |
5378. | ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை பற்பலவாய் உன்னேல் இன்னே இன்புகலப் படிகண் டாயே. | 83 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5379 | ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால் நாதனைக் கண்டவன் நடிக்கும் மருந்துகண் டுற்றது வடிவாய் நெஞ்சமே அஞ்சலை நீயே. | 84 |
5380 | கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட கருணையங் கண்ணது ஞான நின்றது நிறைபெருஞ் சோதி வயங்குவ தின்பமே மயமாய்த் தனித்தெனக் கினித்ததோர் கனியே. | 85 |
5381 | மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது வள்ளல்என் றெனக்குளே தெரிந்த ஐயனே அன்பனே அரசே எட்டுணை எனினும்வே றிடத்தில் திருவுளம் தெரிந்தது தானே. | 86 |
5382 | உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறுபசி உழந்துவெந் துயரால் மற்றிதை நினைத்திடுந் தோறும் எரிகின்ற தென்செய்வேன் அந்தோ குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய். | 87 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5383. | ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும் புகலிலேன் பொதுவே நின்று விண்ணப்பம் காண்க நீயே. | 88 |
5384. | உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே. | 89 |
கட்டளைக் கலித்துறை | ||
5385 | சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக் காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே. | 90 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5386 | வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம் கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால் பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே. | 91 |
5387 | கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே. | 92 |
நிலைமண்டில ஆசிரியப்பா | ||
5388 | சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும் திருநடம் புரியும் திருநட ராஜ எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம் மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே. | 93 |
5389 | நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன் யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன் என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே. 94 | 94 |
நேரிசை வெண்பா | ||
5390 | உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான் வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம் இத்தருணம் சத்தியமே என்று. | 95 |
5391 | உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்குத் தனித்து. | 96 |
5392 | தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன் மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம் இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி தன்னையுந்தந் துட்கலந்தான் றான். | 97 |
5393 | சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக் கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான் இனியான் மயங்கேன் இருந்து. | 98 |
5394 | உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான் என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும் வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக் குண்மைஇன்பம் செய்தும் உவந்து. | 99 |
கட்டளைக் கலித்துறை | ||
5395 | நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே. | 100 |
5396 | அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய் துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே வெப்பூறு நீக்கிய வெண்ணீறு பூத்தபொன் மேனியனே உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே. | 101 |
5397 | நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர் வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன் ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன் கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே. | 102 |
5398 | பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண் டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர் தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான் நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே. | 103 |
5399 | அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம் அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால் அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர் அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே. | 104 |
கலிவிருத்தம் | ||
5400 | அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே. | 105 |
5401 | ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும் சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம் மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே. | 106 |
5402 | பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால் நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே. | 107 |
கொச்சகக் கலிப்பா | ||
5403 | வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில் தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும் தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ. | 108 |
5404 | ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத் தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ. | 109 |
5405 | என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய் நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்(385) மேவுபசும் பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய். | 110 |
(385). வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க. | ||
5406 | என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான் நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால் பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என் தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே. | 111 |
5407 | ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத் தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள் வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும் பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே. | 112 |
5408 | நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே. | 113 |
5409 | எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான் எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம் எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே. | 114 |
5410 | நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான் தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான் வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான் கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே. | 115 |
கட்டளைக் கலித்துறை | ||
5411 | எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான் வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன் கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே. | 116 |
5412 | முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால் இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன் என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே. | 117 |
5413 | கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம் விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே. | 118 |
5414 | கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார் விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே. | 119 |
5415 | தாழைப் பழம்பிழி(386) பாலொடு சர்க்கரைச் சாறளிந்த வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே. | 120 |
(386). தாழைப்பழம் - தேங்காய். | ||
5416 | தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே. | 121 |
5417 | செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான் ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன் இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே. | 122 |
கலிநிலைத்துறை | ||
5418 | கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன் பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே. | 123 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5419 | முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன் முன்னர்நீ தோன்றினை அந்தோ அப்பனே அய்யனே அரசே என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய் கெய்துதற் குரியமெய்த் தவமே. | 124 |
5420 | வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து மலத்திலே கிடந்துழைத் திட்ட நன்றுறச் சூட்டினை அந்தோ சோதியே நின்பெருந் தயவைத் தயவும்உன் தனிப்பெருந் தயவே. | 125 |
5421 | பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த பெருமநின் தன்னைஎன் றனக்கே தந்தையே என்றுரைப் பேனோ தெய்வமே என்றுரைப் பேனோ யாதுமொன் றறிந்திலேன் அந்தோ. | 126 |
5422 | சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய தீமன மாயையைக் கணத்தே மெய்யநின் கருணைஎன் புகல்வேன் உற்றசா றட்டசர்க் கரையும் ஞானமன் றோங்கும்என் நட்பே. | 127 |
5423 | புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த பொய்ம்மன மாயையைக் கணத்தே மெய்யநின் கருணைஎன் புகல்வேன் வள்ளலே மறைகள்ஆ கமங்கள் தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே. | 128 |
5424 | அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே என்னையோ என்னையோ என்றாள் திருவுரு அடைந்தனன் ஞான வாய்த்தன வாய்ப்பின்என் றாளே. | 129 |
5425 | இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே என்உயிர்க் கமுதமே என்தன் அருள்நடம் புரியும்என் அரசே மடிந்தன விடிந்ததால் இரவும் சூழலில் துலங்குகின் றேனே. | 130 |
5426 | உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் ஒருதிருப் பொதுஎன அறிந்தேன் சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன் மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப் பாடுகின் றேன்பொதுப் பாட்டே. | 131 |
5427 | படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயனதாம் உணர்ச்சியும் அடியேன் பெருமையும் சிறப்பும்நான் உண்ணும் வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே நண்ணிய பொருளும்என் றறிந்தேன். | 132 |
5428 | கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக் கடவுளே என்இரு கண்ணே நிருத்தஞ்செய் கருணைமா நிதியே பொருந்திய புதுமைஎன் புகல்வேன் திருவருட் பெருந்திறல் பெரிதே. | 133 |
5429 | தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண் தனிமுதல் பேரருட் சோதிப் பராபர நிராமய நிமல உளத்ததி சயித்திட எனக்கே மாகடற் கெல்லைகண் டிலனே. | 134 |
5430 | யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ ஒளிஉருக் காட்டிய தலைவா என்றசொல் ஒலிஅடங் குதன்முன் அருட்பெருஞ் சோதிஎன் அரசே. | 135 |
5431 | பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப் பரம்பரம் தருகின்ற தென்றோர் தமியனேன் உண்டனன் அதன்தன் என்னுயிர் இனித்ததென் கரணம் தனித்தனி இனித்தன தழைத்தே. | 136 |
5432 | விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம் விளைந்தது விளைந்தது மனனே பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில் ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே ஓங்கலாம் ஓங்கலாம் இனியே. | 137 |
5433 | வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியைக் கண்டனம் மனமே ஆடலாம் அடிக்கடி வியந்தே ஓங்கலாம் உதவலாம் உறலாம் காணலாம் களிக்கலாம் இனியே. | 138 |
5434. | சனிதொ லைந்தது தடைத விர்ந்தது தயைமி குந்தது சலமொடே சுபமி குந்தது சுகமொடே களிமி குந்தது கனிவொடே புகழ்உ யர்ந்தது புவியிலே. | 139 |
5435, | உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே பதமும் உற்றது பற்றியே புலையும் அற்றது புன்மைசேர் திரையும் அற்றுவி ழுந்ததே. | 140 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5436 | அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே. | 141 |
5437 | அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும் அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே. | 142 |
5438 | அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன் வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே. | 143 |
5439 | கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன் கனக அம்பலம் கனிந்தசெங் கனியே தூய சோதியே சுகப்பெரு வாழ்வே வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே. | 144 |
5440 | ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம் உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே. | 145 |
5441 | சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம் துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால் தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய் உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே. | 146 |
5442 | தந்தை தன்மையே தனையன்தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான் வல்ல நாயகன் நல்லசீர் உடையான் அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின். | 147 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5443 | என்உடலும் என்உயிரும் என்பொருளும் நின்னஎன இசைந்தஞ் ஞான்றே றொன்றும்இலை உடையாய் இங்கே போதாமல் புணர்ந்து கொண்டே கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ. | 148 |
5444 | என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி சயந்தன்னை எம்ம னோர்காள் புரிகின்ற புனிதன் என்னுள் விளங்குகின்றான் மெய்ம்மை யான தருள்கின்றான் சகத்தின் மீதே. | 149 |
5445 | ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் நடுவிருந்து குலாவு கின்றேன் அன்பினொடும் பாடிப் பாடி எண்ணமெலாம் நிரம்பி னேனே. | 150 |
5446 | ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை அருள்ஒளி தருகின்றாம் குறிக்கொள்வர் நினக்கேஎம் வாழ்கநீ மகனேஎன் இணைமலர்ப் பதம்போற்றி. | 151 |
கட்டளைக் கலிப்பா | ||
5447 | நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள் மதியி லேனையும் மன்னருட் சத்தியாம் தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே திகழக் கட்டினை என்னைநின் செய்கையே. | 152 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5448 | தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத் தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான் இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான் நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே. | 153 |
5449 | கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன் அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன் இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே. | 154 |
5450 | காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே. | 155 |
5451 | எல்லா உலகமும் என்வசம் ஆயின எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின எல்லா வித்தையும் என்வித்தை ஆயின எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே. | 156 |
5452 | சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர் புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த் தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே. | 157 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
5453 | ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே நித்தியன் ஆயினேன் உலகீர் சத்தியச் சுத்தசன் மார்க்க விளம்பினேன் வம்மினோ விரைந்தே. | 158 |
5454 | வாது பேசிய மனிதர் காள்ஒரு வார்த்தை கேண்மீன்கள் வந்துநும் பொதுவி லேநடம் போற்றுவீர் திருவு ளங்கொளும் காண்மினோ சுற்றம் என்பது பற்றியே. | 159 |
5455 | தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனைவிட் இரிந்தன ஒழிந்தன முழுதும் அழிவுறா உடம்பும்மெய் இன்ப உண்மைஇவ் வாசகம் உணர்மின். | 160 |
கலிப்பா | ||
5456 | பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன் இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே அச்சம்எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே. | 161 |
திருச்சிற்றம்பலம்
Back
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5457. | சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப் பாகக் கொடியே(387) எனைஈன்ற ஆளுங் கொடியே சன்மார்க்க நிமலக் கொடியே அருளுகவே. | 1 |
(387). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு. | ||
5458. | பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே தாங்கி ஓங்குந் தனிக்கொடியே காமக் கொடியே அருளுகவே. | 2 |
5459. | நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப் பாகக் கொடியே(388) பரநாத ஞானக் கொடியே என்னுறவாம் கொடியே அடியேற் கருளுகவே. | 3 |
(388). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு. | ||
5460. | மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும் சார்ந்து விளங்கும் தவக்கொடியே கருவும் கடந்து வயங்குகின்ற கொடியே அடியேற் கருளுகவே. | 4 |
5461. | நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே திகழத் தயவால் தெரிவித்த கொடியே அடியேற் கருளுகவே. | 5 |
5462. | மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற மலிய மலர்ந்த வான்கொடியே காட்டுங் கொடியே கலங்காத கொடியே அடியேற் கருளுகவே. | 6 |
5463. | புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு நாட்டில் விடுத்த நற்கொடியே வயங்க விளங்கு மணிமன்றில் கொடியே அடியேற் கருளுகவே. | 7 |
5464. | வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை வள்ளற் கொடியே மனக்கொடியைச் தெய்வக் கொடியே சிவஞானம் கொடியே அடியேற் கருளுகவே. | 8 |
5465. | கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே அளித்தென் தனைமெய் அருட்கரத்தால் இந்தா மகனே என்றெனக்கே கொடியே அடியேற் கருளுகவே. | 9 |
5466. | ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த பரம ஞானப் பதிக்கொடியே செலுத்தும் சுத்த சன்மார்க்கக் கொடியே அடியேற் கருளுகவே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5467. | உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன் இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன் விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின் அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே. | 1 |
5468 | மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே. | 2 |
5469 | அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே. | 3 |
5470 | நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில் இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன் குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே. | 4 |
5471 | நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய் பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே. | 5 |
(389). மொழித்திறனும் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. | ||
5472 | பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால் சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென் அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே. | 6 |
5473 | விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே. | 7 |
5474 | ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய் ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய் மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய் அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே. | 8 |
5475 | வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும் போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே. | 9 |
5476 | என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர் எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய் நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன் சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5477. | துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் தலைவா ஞான சபாபதியே இளைக்க மாட்டேன் எனக்கருளே. | 1 |
5478 | அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன் வசத்தே நின்று வயங்கியதால் இளைக்க மாட்டேன் எனக்கருளே. | 2 |
5479 | அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே எனைவிட் டகன்றே ஒழிந்தனவால் சிவமே எல்லாம் செய்யவல்ல போக்க மாட்டேன் கண்டாயே. | 3 |
5480 | கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக் குறிகள் பலவுங் கூடுகின்ற சோதிக் கருணைப் பெருமனே உண்பேன் துன்பை ஒழித்தேனே. | 4 |
5481 | ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் ஓடத் துறந்தேன் உறுகண்எலாம் களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே விளையா டுதற்கு விரைந்தேனே. | 5 |
5482 | விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன் கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே மணிமன் றரசைக் கண்டுகொண்டேன் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே. | 6 |
5483 | தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென் துயிரில் கலந்த ஒருபொருளை வாழ்வை மணிமன் றுடையானை நாட்டார் வாழ்த்த நானிலத்தே. | 7 |
5484 | நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன் | 8 |
5485 | அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சங்கத் தடைவித் திடஅவரும் திடுதற் கென்றே எனைஇந்த உற்றேன் அருளைப் பெற்றேனே. | 9 |
5486 | பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை உற்றே கலந்தேன் ஒன்றானேம் யாரே புரிந்தார் இன்னமுதம் வாழ்க வாழ்க துனிஅற்றே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
நேரிசை வெண்பா
5487. | கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என் எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற் கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து. | 1 |
5488 | எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் எல்லாம் செயவல்லான் எம்பெருமான் - எல்லாமாய் நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் ஒன்றாகி நின்றான் உவந்து. | 2 |
5489 | எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன் தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான் வள்ளல்நட ராயன் மகிழ்ந்து. | 3 |
5490 | சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும் நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம் சந்தோட மாய்இருமின் சார்ந்து. | 4 |
5491 | அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன் அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர் செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து. | 5 |
5492 | அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார் சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான் உடையான் உளத்தே உவந்து. | 6 |
5493 | தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் தானே எனக்குத் தருகின்றான் - தானேநான் ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை மேகத்திற் குண்டோ விளம்பு. | 7 |
5494 | பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக் கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும் தலையும் அறியும் தரமும் கொடுத்தான் நிலையும் கொடுத்தான் நிறைந்து. | 8 |
5495 | வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும் ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம் தேன்நான் உண் டோ ங்கியது தேர்ந்து. | 9 |
5496 | வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள் அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் துன்பமெலாம் போன தொலைந்து. | 10 |
5497 | அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும் சாமா றிலைஎனக்குத் தான். | 11 |
5498 | நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன் தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில் புகுந்தான் கருணை புரிந்து. | 12 |
5499 | ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச் சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி பத்திஎலாம் பெற்ற பலன். | 13 |
5500 | தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத் தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க வந்தான்என் அப்பன் மகிழ்ந்து. | 14 |
5501 | வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம் ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப் பாடுகநீ என்றான் பரன். | 15 |
5502 | தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான் ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர் செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன் எய்தற் கரியசுகம் ஏய்ந்து. | 16 |
5503 | சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர் ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும் தானவிளை யாட்டியற்றத் தான். | 17 |
5504 | நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன் நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம் ஊன்நாடி நில்லா உழி. | 18 |
5505 | ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில் கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத் துண்டேன் அமுதம் உவந்து. | 19 |
5506 | துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம் நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார் மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து. | 20 |
5507 | பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத் தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் கொல்லா நெறிஅருளைக் கொண்டு. | 21 |
5508 | சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று. | 22 |
5509 | சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான் வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும் நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய தாயே அனையான் தனித்து. | 23 |
5510 | கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம் சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன் ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான் மாகா தலனா மகிழ்ந்து. | 24 |
5511 | நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில் ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு. | 25 |
5512 | சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான். | 26 |
5513 | நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்அருளால் நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன் இழியாமல் ஆடுகின்றேன் இங்கு. | 27 |
5514 | எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும் சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே என்மார்க்கம் காண்பேன் இனி. | 28 |
5515 | சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள் சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே உற்றிங் கறிந்தேன் உவந்து. | 29 |
5516 | வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை. | 30 |
5517 | சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும் வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத் தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை நிலைஅடைதல் வேண்டும் நிலத்து. | 31 |
5518 | பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில் மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள் சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல் இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு. | 32 |
5519 | வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும் தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான் இங்குநடஞ் செய்வான் இனி. | 33 |
5520 | சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன் சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான் ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து. | 34 |
5521 | இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும் நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல் சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள் நித்தியம்பெற் றுய்யலாம் நீர். | 35 |
5522 | என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான் தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன் வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து. | 36 |
5523 | செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங் கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம் அருட்பெருஞ் சோதி அதனால் முடியும் தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே. | 37 |
5524 | இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில் எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில் சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம் உற்றவரை உற்றவர்கள் உற்று. | 38 |
5525 | யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த கம்பலத்தால் ஆகும் களித்து. | 39 |
5526 | என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க் குருவம் பலத்தேஎன் றுன். | 40 |
5527 | ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங் கென்மார்க்க மும்ஒன்றா மே. | 41 |
5528 | மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர் நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள். | 42 |
5529 | இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள் அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய் அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம். | 43 |
5530 | ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில் சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம் நீரத்தைச் சேர்வீர் நிஜம். | 44 |
5531 | வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை நாணே உடைய நமரங்காள் - ஊணாகத் தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட உள்ளியநாள் ஈதறிமின் உற்று. | 45 |
5532 | போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர் நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள் அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென் றிப்புவியில் இத்தருணம் இங்கு. | 46 |
5533 | ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள் அனையான் வருகின்றான் ஆய்ந்து. | 47 |
திருச்சிற்றம்பலம்
Back
கலிவிருத்தம்
5534. | இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர் அன்பால் அடியவர் ஆடினர் பாடினர் என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே. | 1 |
5535 | பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத் தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே. | 2 |
5536 | மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர் வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர் நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே. | 3 |
5537 | முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே. | 4 |
5538 | இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார் திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம் நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே. | 5 |
5539 | அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக் கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில் எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே. | 6 |
5540 | குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே. | 7 |
5541 | பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர் முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர் சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே. | 8 |
5542 | ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன் ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள் வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே. | 9 |
5543 | இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத் தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
கலிநிலைத் துறை
5544. | அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும் பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர் மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம் தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே. | 1 |
5545 | வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர் வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர். | 2 |
5546 | ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும் சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர் நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும் வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி. | 3 |
5547 | நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும் பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின் வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே. | 4 |
5548 | துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும் பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும் அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின் உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர். | 5 |
5549 | ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர் மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும் யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன். | 6 |
5550 | வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும் ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும் ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும் ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே. | 7 |
5551 | சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும் அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத் தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும் அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.(390) | 8 |
(390). அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. | ||
5552 | ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல் வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம் தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர். | 9 |
5553 | கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக் கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே. | 10 |
5554 | கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை நிதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம் பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல் விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே. | 11 |
5555 | அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப் பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர் மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால் தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின். | 12 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5556. | கட்டோ டே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 1 |
5557 | ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர் | 2 |
5558 | ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர் மறவாமை நினையாமை வகைசிறி தறியீர் கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 3 |
5559 | சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர் தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர் வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 4 |
5560 | அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர் பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர் பின்படு தீமையின் முன்படு கின்றீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 5 |
5561 | வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 6 |
5562 | வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 7 |
5563 | துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 8 |
5564 | பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால் சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர் கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 9 |
5565 | பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே பகராத வன்மொழி பகருகின் றீரே நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5566. | சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே. | 1 |
5567 | காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக் கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர் குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம் எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே. | 2 |
(391). பாடுபட்டுப் - ச. மு. க. பதிப்பு. | ||
5568 | ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின் தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே. | 3 |
5569 | பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர் புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர் களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர் அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர் மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே. | 4 |
5570 | எய்வகைசார்392 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள் எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர் அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர் உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே. | 5 |
(392). எவ்வகைசார் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு. | ||
5571 | உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர் உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர் வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர் எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே. | 6 |
5572 | நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர் வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் புத்தமுதம் உண்டோ ங்கும் புனிதகுலம் பெறவே உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே. | 7 |
5573 | கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.393 | 8 |
(393). முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் 'கனமுடையேம்' என்பது ஒன்பதாம் பாடலாகவும் 'வையகத்தீர்' என்பது எட்டாம் பாடலாகவும் உள்ளன. | ||
5574 | வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர் வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே. | 9 |
5575 | கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும் கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர் மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே சித்திபுரம் எனஓங்கும் உத்தரசிற் சபையில் தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5576. | நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. | 1 |
5577 | புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான் புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர் உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. | 2 |
5578 | பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே. | 3 |
5579 | கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. | 4 |
5580 | இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம் எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம் அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப் பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே. | 5 |
5581 | தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர் ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே. | 6 |
5582 | நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே. | 7 |
5583 | விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர் கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே. | 8 |
5584 | களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே. | 9 |
5585 | ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே. | 10 |
5586 | அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே. | 11 |
5587 | திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே. | 12 |
5588 | உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர் உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர் என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே. | 13 |
5589 | தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே. | 14 |
5590 | சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே. | 15 |
5591 | நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே. | 16 |
5592 | முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே. | 17 |
5593 | சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர் சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே. | 18 |
(394). அகமறியீர் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. | ||
5594 | நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே. | 19 |
5595 | குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே. | 20 |
5596 | சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத் திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம் உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே. | 21 |
5597 | செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே. | 22 |
5598 | பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் புகலுவதென் நாடொறுநும் புந்தியிற்கண் டதுவே மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே. | 23 |
5599 | மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர் பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே. | 24 |
5600 | இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர் மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே. | 25 |
5601 | உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே. | 26 |
5602 | சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத் தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப் பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே. | 27 |
5603 | சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே. | 28 |
திருச்சிற்றம்பலம்
Back
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5604. | ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற தருணம்இதே அறிமின் என்றே கின்றார்இம் மனிதர்அந்தோ உளங்கலந்த தலைவா இங்கே இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே. | 1 |
5605 | இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற தருணம்இதே என்று வாய்மை வார்த்தைகள்என் றறைகின் றாரால் எல்லாஞ்செய் வல்லோய் உன்றன் மனிதர்மதித் திறமை என்னே. | 2 |
5606 | சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப் படுவாரைத் துணிந்து கொல்லக் துண்மையினில் கொண்டு நீவீர் போலும்அன்றி நினைத்த வாங்கே பதிப்புகழைப் பேசு வீரே. | 3 |
5607 | தொண்டாளப் பணந்தேடுந் துறையாள உலகாளச் சூழ்ந்த காமப் நும்முயிரைப் பிடிக்க நாளைச் ஞானசபைத் தலைவன் உம்மைக் இவ்வுலகில் குலாவு வீரே. | 4 |
5608 | பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் திடுகின்றீர் பேய ரேநீர் மதித்தீரோ இரவில் தூங்கி நும்மனத்தை வயிரம் ஆன ஏன்பிறந்து திரிகின் றீரே. | 5 |
5609 | அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை பொங்கக்கோ ரணிகொண் டந்தோ இனிச்சாகும் பிணங்க ளேநீர் என்னபயன் கண்டீர் சுட்டே எருவுக்கும் இயலா தன்றே. | 6 |
5610 | குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட் டால்அதுதான் கொலையாம் என்றே சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் சம்மதிக்கும் பேய ரேநீர் கஞ்சுவரே இழுதை யீரே. | 7 |
5611 | கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேயுலகீர் கலைசோர்ந் தாரைப் சுடுகின்றீர் புதைக்க நேரீர் துடியாதென் சொல்லீர் நும்மைத் கதியிலைமேல் சூழ்வீர் அன்றே. | 8 |
5612 | பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப ராதம்எனப் பகர்கின் றேன்நீர் பற்பலரும் சித்த சாமி தடுத்தனஈ துணர்ந்து நல்லோர் கண்கெட்ட மாட்டி னீரே. | 9 |
5613 | புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கருங்கடலில் போக விட்டீர் சுடுகின்ற கொடுமை நோக்கிக் கலக்கம்எலாம் கடவுள்நீக்கித் புரிகுவதித் தருணம் தானே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
நேரிசை வெண்பா
5614. | சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள் சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத் துள்ளல் ஒழிக தொலைந்து. | 1 |
5615 | ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம் நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம் இடம்புரிக வாழ்க இசைந்து. | 2 |
5616 | சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால் நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர் போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக நாற்றிசையும் வாழ்க நயந்து. | 3 |
5617 | அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம் ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக நீதிக் கொடிவிளங்க நீண்டு. | 4 |
5618 | கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத் தெல்லோரும் வாழ்க இசைந்து. | 5 |
5619 | புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில் செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம் ஒத்தாராய் வாழ்க உவந்து. | 6 |
5620 | செத்தார் எழுக சிவமே பொருள்என்றே இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத் துன்மார்க்கம் போக தொலைந்து. | 7 |
5621 | செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச் சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும் என்மார்க்கம் நின்மார்க்க மே. | 8 |
5622 | நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும் நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து. | 9 |
5623 | ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல் சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம் கவ்வைஅற்ற அம்பலத்தான் கால். | 10 |
5624 | நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின் பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யார்உளர்நீ சற்றே அறை. | 11 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5625. | திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார் தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம் பேசுவதார் மறைகள்எலாம் கூசுகின்ற என்றால் சொல்அளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி. | 1 |
5626 | அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய் ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன் சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார் மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி. | 2 |
5627 | செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும் என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார் சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி. | 3 |
5628 | தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோ ரோ முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர் அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி. | 4 |
5629 | பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார் பணம்பரித்த395 வரையர்என்னை மணம்புரிந்த கணவர் விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல் நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி. | 5 |
(395). பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு. | ||
5630 | வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல் இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான் புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி. | 6 |
5631 | திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம் திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும் அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல் பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி. | 7 |
5632 | நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல் படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும் புகலவச மாமோநீ புகலாய்என் தோழி. | 8 |
5633 | பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின் பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித் திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர் வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி. | 9 |
5634 | ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும் இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத் தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி. | 10 |
5635 | கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம் கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும் நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி. | 11 |
5636 | சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும் திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும் படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால் நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி. | 12 |
5637 | சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல் துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம் இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில் நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர் செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி. | 13 |
5638 | காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார் காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால் விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார் துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி வடிவுரைக்க வல்லவர்ஆர் வழுத்தாய்என் தோழி. | 14 |
5639 | நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம் நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம் இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம் உண்மைசொல வல்லவர்ஆர் உரையாய்என் தோழி. | 15 |
5640 | தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத் தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால் அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி. | 16 |
5641 | தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும் சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால் ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி. | 17 |
5642 | ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும் அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி. | 18 |
5643 | படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம் பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம் பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி. | 19 |
5644 | சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில் திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி. | 20 |
5645 | நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர் நாரணர்கள் மற்றவரின்396 நாடின்மிகப் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர் மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின் ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி. | 21 |
(396). மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு. | ||
5646 | மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில் வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான் விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம் அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி. | 22 |
5647 | மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க் கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில் நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம் அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி. | 23 |
5648 | மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய் மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய் வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி(397) நடுவே பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல் நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி. | 24 |
(397). இந்தவெளி - பி. இரா. பதிப்பு. | ||
5649 | வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம் விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும் சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி. | 25 |
5650 | பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி. | 26 |
5651 | பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய் வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும் மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி. | 27 |
5652 | பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம் புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக் றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச் திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி. | 28 |
5653 | ஏற்றமுறும் ஐங்கருவுக் கியல்பகுதிக் கரணம் எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான் அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச் சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி. | 29 |
5654 | விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில் விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம் மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித் சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி. | 30 |
5655 | காணுகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும் கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின் மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி. | 31 |
5656 | மண்முதலாம் தத்துவத்தின் தன்மைபல கோடி வயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம் பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம் எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி. | 32 |
(398). திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு. திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு | ||
5657 | விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக் கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும் பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம் நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி. | 33 |
5658 | வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல் மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள் நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில் பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில் காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி. | 34 |
5659 | ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத் தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித் திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி(399) வெளியில் பகுத்துரைக்க வல்லவர்ஆர் பகராய்என் தோழி. | 35 |
(399). திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும் பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு. | ||
5660 | விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப் பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த் செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல் எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி. | 36 |
5661 | தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத் துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள் அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம் இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில் உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி. | 37 |
5662 | உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி. | 38 |
5663 | சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம் சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம் மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி. | 39 |
5664 | பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில் வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள் திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி. | 40 |
5665 | பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள் இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன் துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி. | 41 |
5666 | வளம்பெறுவிண் அணுக்குள்ஒரு மதிஇரவி அழலாய் வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும் தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய் ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில் அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி. | 42 |
5667 | பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய் ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும் தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி. | 43 |
5668 | சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச் சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி. | 44 |
5669 | பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம் பூஇருபத் தைம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும் நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில் வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின் பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி. | 45 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5670. | அன்னப்பார்ப் பால்(400)அழ காம்நிலை யூடே அம்பலம் செய்துநின் றாடும் அழகர் சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 1 |
(400). அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு. | ||
5671 | அதுபா வகமுகத் தானந்த நாட்டில் அம்பலம் செய்துநின் றாடும் அழகர் மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 2 |
5672 | அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர் உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால் என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 3 |
5673 | அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த அய்யர் அமுதர்என் அன்பர் அழகர் நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள் என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 4 |
5674 | தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்தம ணாளர் உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன் அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல் என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 5 |
5675 | மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது பூரண நோக்கம் பொருந்தினை நீதான் என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 6 |
5676 | வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம்பல மாற்றும்என் அம்பல வாணர் தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது ஏகசி வோகத்தை எய்தினை நீதான் என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 7 |
5677 | பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர் பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார் மன்றகம் பாடி மகிழ்கின்ற போது எம்முடம் புன்னை(401) இணைந்திங் கெமக்கே என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 8 |
(401). எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு., | ||
5678 | மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர் சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 9 |
5679 | ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும் அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர் சின்மய மாய்நான் திளைக்கின்ற போது வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5680. | உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என் உள்ளகத் தமர்ந்தனன் என்றாள் அதிசயம் அதிசயம் என்றாள் தொட்டனன் பிடித்தனன் என்றாள் பொங்கினாள் நான்பெற்ற பொன்னே. | 1 |
5681 | தனிப்பெரும் பதியே என்பதி ஆகத் தவம்எது புரிந்ததோ என்றாள் அதிசயம் அதிசயம் என்றாள் எனக்கிணை யார்கொலோ என்றாள் ததும்பினாள் நான்பெற்ற தனியே. | 2 |
5682 | புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய் புண்ணியம் புகல்அரி தென்றாள் தயவைநான் மறப்பனோ என்றாள் என்னையோ என்னையோ என்றாள் ஆயினாள் நான்பெற்ற அணங்கே. | 3 |
5683 | சத்திய ஞான சபாபதி எனக்கே தனிப்பதி ஆயினான் என்றாள் நிலைதனில் நிறைந்தனன் என்றாள் பேறெலாம் என்வசத் தென்றாள் என்றனள் எனதுமெல் லியலே. | 4 |
5684 | திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன் சிந்தையில் கலந்தனன் என்றாள் பேசுதல் அரிதரி தென்றாள் யாண்டுளர் யாண்டுளர் என்றாள் வயங்கினாள் நான்பெற்ற மகளே. | 5 |
5685 | வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான் மாலையோ காலையோ என்றாள் ஏவல்செய் கின்றன என்றாள் சித்தியும் பெற்றனன் என்றாள் சோர்விலாள் நான்பெற்ற சுதையே. | 6 |
5686 | கனகமா மன்றில் நடம்புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் அன்பிலே கலந்தனன் என்றாள் செயல்செயத் தந்தனன் என்றாள் தவத்தினால் பெற்றநம் தனியே. | 7 |
5687 | கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக் கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள் கடிமணம் புரிந்தனன் என்றாள் ஒளிஎனக் களித்தனன் என்றாள் என்தவத் தியன்றமெல் லியலே. | 8 |
5688 | வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு மாலைவந் தணிந்தனன் என்றாள் உடம்பெனக் களித்தனன் என்றாள் அளிக்கஎன் றருளினான் என்றாள் என்றனள் எனதுமெல் லியலே. | 9 |
5689 | ஏலுநன் மணிமா மன்றருட் சோதி என்னுளத் தமர்ந்தனன் என்றாள் பற்றினன் கலந்தனன் என்றாள் சத்தியை அளித்தனன் என்றாள் மிகுகளிப் புற்றனள் வியந்தே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5690. | நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே. | 1 |
5691 | நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர் மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும் பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே. | 2 |
5692 | நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும் வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும் பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே. | 3 |
5693 | கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக் கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும் நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும் நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே. | 4 |
5694 | மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும் ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே. | 5 |
5695 | அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள் உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும் மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால் இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே. | 6 |
5696 | சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன் தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர் இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே. | 7 |
5697 | ஒளிஒன்றே அண்டபகிர் அண்டம்எலாம் விளங்கி ஓங்குகின்ற தன்றிஅண்ட பகிர்அண்டங் களிலும் விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே. | 8 |
5698 | ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம் என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில் சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத் செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும் உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி. | 9 |
5699 | பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே. | 10 |
5700 | பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான் பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய் திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம் திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே. | 11 |
5701 | இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என் றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே. | 12 |
5702 | வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும் துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண் விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும் அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே. | 13 |
5703 | கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ. | 14 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5704. | தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும் தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார் என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச் சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 1 |
5705 | நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார் நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர் முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 2 |
5706 | முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர் மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில் துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய் சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 3 |
5707 | உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக் கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய் நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத் சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 4 |
5708 | என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார் உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத் தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில் சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 5 |
5709 | என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார் எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம் மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல் சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 6 |
5710 | கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக் கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர் அறிவாரோ அவர்உரைகொண் டையம்உறேல் இங்கே இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய் சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 7 |
5711 | ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார் பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய் நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 8 |
5712 | ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால் புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 9 |
5713 | உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5714. | அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல் அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன் என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண் நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே. | 1 |
5715 | கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும் கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும் இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார் மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே. | 2 |
5716 | எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும் வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே. | 3 |
5717 | இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன் விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே. | 4 |
5718 | வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும் எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய் ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார் பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே. | 5 |
5719 | அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன் ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம் இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர் களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே. | 6 |
5720 | பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார் எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே. | 7 |
5721 | கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம் கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும் இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன் வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம் துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி. | 8 |
5722 | மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன் தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே. | 9 |
5723 | கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான் இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே. | 10 |
5724 | மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும் மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன் என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ. | 11 |
5725 | கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான் என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர் உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய் அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே. | 12 |
5726 | காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப் பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா. | 13 |
5727 | கண்ணாறு(402) படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால் கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில் தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே. | 14 |
(402). இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர் படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில் அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா. | ||
5728 | கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம் இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண் பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே. | 15 |
5729 | மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும் சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே. | 16 |
5730 | தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான் மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால் கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே. | 17 |
5731 | தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும் தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே. | 18 |
5732 | மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய் மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன் சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே. | 19 |
5733 | அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம் ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம் விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே. | 20 |
5734 | பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழி(403) பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே. | 21 |
(403) இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா. | ||
5735 | மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன் மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ. | 22 |
5736 | கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான் நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ. | 23 |
5737 | அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும் என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய் மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே. | 24 |
5738 | என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார் என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார் புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே. | 25 |
5739 | தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய் தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய் திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம் அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே வீறுமவர்(404) திருமேனி நானும்என அறியே. | 26 |
( 404). ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க. | ||
5740 | எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில் இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார் நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால் என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே. | 27 |
5741 | வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன் கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர் தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே. | 28 |
5742 | என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே. | 29 |
5743 | ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார் என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன் செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே. | 30 |
5744 | ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார் அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர் வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென் கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே. | 31 |
5745 | தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர் புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான் முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே. | 32 |
5746 | இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும் இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார் நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே. | 33 |
5747 | திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார் சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம் பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன் சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி. | 34 |
5748 | அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய் ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான் திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார் மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி. | 35 |
5749 | செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார் சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி. | 36 |
5750 | தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோ ரோ முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார் கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே. | 37 |
5751 | திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத் திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய் அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப் பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே. | 38 |
(405). பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம். | ||
5752 | வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்தே தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல் இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான் புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ. | 39 |
5753 | கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான் படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும் அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே. | 40 |
5754 | என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய் பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே. | 41 |
5755 | பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும் பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம் உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே. | 42 |
5756 | நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும் விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும் மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே. | 43 |
5757 | புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர் பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய் பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே | 44 |
5758 | கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே. | 45 |
5759 | குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள் அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும் மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே. | 46 |
5760 | கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய் பகிர்அண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம் ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள் கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே. | 47 |
5761 | இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார் எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார் அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார் என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே. | 48 |
5762 | துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார் சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார் பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார் என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே. | 49 |
5763 | ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான் என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார் கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ. | 50 |
5764 | அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான் ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான் வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே. | 51 |
5765 | தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள் ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக் கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ. | 52 |
5766 | துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென் சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர் பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே. | 53 |
5767 | ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான் கண்டபரி சென்புகல்வேன் அண்டபகிர் அண்டம் தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான் வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே. | 54 |
5768 | நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய் நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய் எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள் திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ. | 55 |
5769 | பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர் விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது களித்திடுக இனியுனைநாம் கைவிடோ ம் என்றும் மாலையிட்டோ ம் என்றெனக்கு மாலையணிந் தாரே. | 56 |
5770 | பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் தெய்வமலர் அடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி. | 57 |
5771 | தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச் சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர் இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன் சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி. | 58 |
5772 | ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய் அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன் விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி. | 59 |
5773 | காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார் கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார் குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார் அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார் தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே. | 60 |
5774 | காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும் கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன் அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத் திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி. | 61 |
5775 | மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள் வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி. | 62 |
5776 | உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித் தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே. | 63 |
5777 | பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள் பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர் எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன் திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப் பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே. | 64 |
5778 | என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன் இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித் தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே. | 65 |
5779 | தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே. | 66 |
5780 | ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம் ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய் விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம் சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. | 67 |
5781 | மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார் வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால் இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. | 68 |
5782 | வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும் தாழ்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில் புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. | 69 |
5783 | காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக் கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. | 70 |
5784 | விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை ஒளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம் தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. | 71 |
5785 | மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச் சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே. | 72 |
5786 | இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார் கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார் உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி. | 73 |
5787 | என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல் எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார் தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய் பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே. | 74 |
5788 | நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம் வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த் திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே. | 75 |
5789 | இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள் எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக் கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய் சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே. | 76 |
5790 | பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய் பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய் ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான் தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே. | 77 |
5791 | அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம் எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய் செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே. | 78 |
5792 | அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான் ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும் படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே. | 79 |
5793 | நாடுகின்ற பலகோடி அண்டபகிர் அண்ட நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில் கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி. | 80 |
5794 | தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும் துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே. | 81 |
5795 | நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய் மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும் ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி. | 82 |
5796 | வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும் வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம் என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே. | 83 |
5797 | என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம் நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன் பொய்புகுந்தால் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே. | 84 |
5798 | உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின் உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும் சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே. | 85 |
5799 | மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய் தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே. | 86 |
5800 | எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார் ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன் சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே. | 87 |
5801 | பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய் யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன் பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன் சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே. | 88 |
5802 | சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி. | 89 |
5803 | எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்406 மீட்டும் இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே. | 90 |
406. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. | ||
5804 | காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில் கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன் குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன் நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி. | 91 |
5805 | சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம் சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே. | 92 |
5806 | சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும் தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும் பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி. | 93 |
5807 | நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார் மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம் சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்407 உரைப் பதுவே. | 94 |
(407). புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு. | ||
5808 | துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன் குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன் கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர் வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி. | 95 |
5809 | தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில் தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன் கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச் சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன் இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி. | 96 |
5810 | அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர் அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம் எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம் மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன் திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே. | 97 |
5811 | புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம் செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே. | 98 |
5812 | தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த தனித்தலைவர் நான்செய்பெருந் தவத்தாலே கிடைத்தார் மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார் அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ. | 99 |
5813 | அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார் திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார் பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம் அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே. | 100 |
திருச்சிற்றம்பலம்
Back
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5814. | சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில் தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான் எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே. | 1 |
(408) அடிகள் அருளிய தலைப்பு. |
திருச்சிற்றம்பலம்
Back
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5815. | ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர் ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் சுகஅமுதன் என்னுடைய துரைஅமர்ந்திங் கிருக்க மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. | 1 |
5816 | தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.(409) | 2 |
(409) இத்திருப்பாட்டின் இறுதியில் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகள் எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார். | ||
5817 | சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே. | 3 |
5818 | என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.(410) | 4 |
(410) இத்திருப்பாட்டின் இறுதியில் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துளேன்" என அடிகள் எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார். |
திருச்சிற்றம்பலம்
ஆறாம் அருட்பா முற்றிற்று
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா முற்றும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே
திருச்சிற்றம்பலம்