logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பன்னிரு திருமுறைகளை அருளிய 27 அருளாளர்கள் - தனிப்பாடல்

திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
  திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
  தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
  வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
  மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
  ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
  ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
  நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
  தெய்விகத் தன்மையோரே.

மேலும் காண்க:

திருமுறை ஆசிரியர்கள் 27வரின் வரலாறு

Related Content

திருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்

தனிப்பாடல்களில் பெருமான் புகழ்