30. தெய்வயானை திருமணப்படலம் | 1860-1993 |
31. குசத்துவன் வரம்பெறுபடலம் | 1994-2015 |
32. குலசேகரன் குட்டநோய் தீர்ந்தபடலம் | 2016-2039 |
33. திரிலோகசோழன் செயிர்தீர்ந்தபடலம் | 2040-2072 |
34. உபதேசப் படலம் | 2073-2155 |
35. திருநீற்று மேட்டுப்படலம் | 2156-2196 |
36. விசேட பூசைப்படலம் | 2197-2220 |
உ
சிவமயம்
1860 | கமஞ்சூற் கொண்டல் வயிறுளைந்து கான்ற புதுநீ ரருவிகொளும் இமஞ்சூழ் விலங்கற் றடஞ்சார லிமையோர்க் கிடுக்கண் டவப்புரியும் நிமஞ்சூ ழொருவ னுயிர்குடிப்ப நினைந்து நரநா ராயணர்தாந் தமஞ்சூழ் வகன்ற வுளத்தினொடுந் தவஞ்செய் தமராச் சிரமத்து. |
1 |
1861 | தரங்கக் கடலின் வரைநிறுவித் தறுக ணரவ மிடைச்சுற்றி இரங்கக் கடைந்து சுதையெடுத்த வெறுழ்த்தோண் மாயன் மீளிமையும் அரங்கப் பொருதா யிரத்திருநான் கண்ட மரசாண் டவற்செகுத்தோன் கரங்கைப் பிடிப்ப வளர்கடவுள் யானை கருதித் தவம்புரிந்தாள். |
2 |
1862 | வெண்டூ சுடுத்துப் பட்டொருவி வெண்ணீ றணிந்து விரைசாந்தம் வண்டூ தலர்மென் மாலிகையு மாற்றி யொளிர்கண் மணிதழுவிக் கொண்டூ தியமின் றெனமணியின் கோவை யகற்றித் தவம்புரிதல் கண்டூங் கடுத்த வீணைமுனி கருத்துள் வணங்கி யிதுசொன்னான். |
3 |
1863 | அயிரா வதக்கோன் வளர்த்தெடுத்த யயிரா ணியினுயிருக் குயிராய் விளங்கு மணிவிளக்கே யுவண முயர்த்தோன் றிருமகளே செயிரா னவைதீர்த் தருள்பேரூர்த் தேத்துத் தவங்கள் புரிகிற்பின் வயிராங் கிசைப்ப மணம்விரைவின் வடிவே லவன்செய் திடுமென்றான். |
4 |
1864 | நாக மணர்ந்த கருங்கோட்டு நல்யாழ் முனிவன் மொழிகேளா மாக ரரையன் மகடெய்வ யானை மகிழ்ந்து விரைவினெழா யூக முகள மலர்ச்சோலை யுகுதேன் விரவிக் குளிர்காஞ்சி வேக நதியூ ராதிநகர் மேவிப் பணிந்து தவமுயன்றாள். |
5 |
1865 | உள்ள முருகன் றிருமேனி யொற்றித் திடக்கண் முகிழிப்பத் தெள்ளு மதிவாண் முகங்குவியத் திகழ்பொன் மாமை யுருச்சாம்பக் கள்ளம் பயிலைம் பொறிகரப்பக் காய மணியோ வியத்தசையா விள்ளற் கரிய பெருந்தவங்கள் விண்ணோர் யானை நிரப்புதலும். |
6 |
1866 | வேறு இடுகிடை மிடைந்தெழுசொ லோடிரும றுன்னப் படுகிழவ னாகியயில் பாணிவளர் செம்மல் நெடுவழி நடந்தவ னிகர்ப்பவெய ராடக் கடுகிடு முயிர்ப்பினொடு கன்னியெதிர் நின்றான். |
7 |
1867 | உயிர்ப்பவெழு தன்னுலவை யோதையுடல் காதின் அயிர்ப்பவினி தேறவன மன்னநடை நங்கை பயிற்சியுறும் யோகொடு படர்ந்தவுள மீட்டுக் கயற்கண்மல ரக்கிழவ னின்றபடி கண்டாள். |
08 |
1868 | கைதவ மளைந்தகரு மூப்புடைமை யானைச் செய்தவ மடந்தையிரு செங்கையெதிர் கூப்பி உய்தவ முஞற்றலுறு வேனையொரு நீதான் வெய்தென வடுத்தமை விளம்பென வுரைத்தாள். |
09 |
1869 | மருதவரை யேபெரிதும் வாழெமது வைப்பிங் கொருவனடி போற்றவுறு கின்றன மிடைக்கட் பொருவிறவ மாற்றுமொரு பூவைநினை நோக்கிப் பெருகுவிழை வாலுரிமை பேணியரு குற்றாம். |
10 |
1870 | யாதனை விழைந்ததஃ தோதுதல்செய் கென்றான் வேதனரி காணரிய வித்தகவி சாகன் மாதடிகள் சூரனுயிர் மாய்த்தவ னெனைத்தன் காதலி யெனக்கொள விழைந்ததுக ணென்றாள். |
11 |
1871 | வேறு என்னே நினதெண் னமிருந் தபடி அன்னோ னினைமன் றலயர்ந் திடுமே கொன்னே கவினைக் குலைவித் தனையே மின்னே யெனவிண் டனன்வீழ் கிழவன். |
12 |
1872 | சிவத்தான் முருகன் சிவணா தொழிக தவத்தாற் கவினல் லதுசா ருயிரும் அவத்தா னழிவெய் துகவஞ் சிலன்மேற் பவத்தாற் பயனெய் துமென்றா ளனையாள். |
13 |
1873 | நெஞ்சத் துறுதித் திறநே ரிழைபால் விஞ்சத் தவநோக் கியவேன் முருகன் வஞ்சக் கிழவுக் கிடமா மயின்மேல் துஞ்சப் பரிவாங் கெதிர்தோன் றினனே. |
14 |
1874 | உயிர்கா வலனே யுருமா றியெதிர் பயில்வா னெனில்யான் செய்தபாக் கியமென் றயில்வாள் விழியா ளகனோ கையுற மயிலூர் தியினா னைவணங் கினளே. |
15 |
1875 | விழியோ டுவிழித் துணைநோக் கியையக் கழிகா தலரா யினர்கா ளைமதுப் பொழிபூங் குழற்பூ வையுமென் றிவரென் றழியா வருளீ சனகஞ் செய்தரோ. |
16 |
1876 | வேறு எரிமணி யிமைக்கு மோலி யிந்திரன் றன்னைக் கூவித் தெரியிழை சுமக்குங் கோலத் தெய்வயா னைக்கு மங்கை உரிமைசெய் வேலி னாற்கு முறுமுறை மன்ற லீங்குப் புரிவதற் கியைவ வெல்லாம் புரிகென வருளிச் செய்தான். |
17 |
1877 | அடியே னுய்ந்தே னென்னா வடியிணை பணிந்து விண்ணங் கொடிதுழாம் புரிசைக் கோயிற் கோபுர வாய்தன் முன்போய் இடிவளர் கொடியோன் பேரூ ரெம்பிரா னருளீ தென்ன முடிவிலின் பருளு மன்றன் முடங்கலெத் திசையு முய்த்தான். |
18 |
1878 | வினைத்திற மினிது வல்ல விச்சுவ கன்மற் கூவிக் கனைத்துவண் டுளருந் தெய்வக் கடம்பணி தாரான் மன்றற் கனைத்துல கத்து மில்லா வழகின்மண் டபமொன் றீண்டை எனைத்துள வுறுப்பு முற்ற வியற்றுதி கடிதி னென்றான். |
19 |
1879 | கற்பக நிதிகள் சிந்தா மணிகாம தேனு வென்னும் நற்பொரு ளனைத்துங் கூவி நகருளா ரடுத்தார்க் கெல்லம் பொற்பம ரிழைக ளாதி புரிந்தன புரிந்த வாறே அற்பொடும் வழங்குகென்ன வியங்கொண்டா னார்வந் தோன்ற. |
20 |
1880 | வியவரி னியவர்க் கூவி வியத்தகு வதுவைச் செய்தி புயல்வளர் மாட மூதூர்ப் பொருந்தினா ரறிந்து சால நயவரு நகர்கோ டிப்ப நளியிமி லேற்றின் வாங்கும் வயவுரிப் போர்வை வள்வார் வண்முர செருக்கு கென்றான். |
21 |
1881 | கிளையழு திரங்கக் காரா கிருகத்துக் குரங்கி நையும் விளைபகை யவுண ராதி மேவலர் தம்மை யெல்லாம் உளைவற விடுத்துப் போக்கி யுறுதிறை கறையுஞ் சின்னாள் திளைமகி ழரச ரேனோர் தாங்களே தெவ்வ விட்டான். |
22 |
1882 | இன்னணம் பணிக ளேவி யெம்பிரான் கழல்கள் போற்றி மின்னவிர் குலிச வேலோன் விழைதக விருந்தா னாகத் துன்னிய வியவர் தம்மாற் சொன்னதன் னரச னேவன் மன்னிய வியவன் கேளா மகிழ்வொடு மிதனைச் செய்தான். |
23 |
1883 | பழையன கலனுந் தூசும் பாற்றிமற் றினிய துய்த்துத் தழைமணச் சாந்து பூசித் தகர்விரைச் சுண்ண மட்டி மழைமதக் களிறு பண்ணி வார்வெரிந் முரச மேற்றிக் குழவிவெண் டிங்க ளன்ன குணில்கரத் தெடுத்துக் கொண்டான். |
24 |
1884 | வாழிய பட்டி நாதர் மரகத வல்லி வாழி ஊழியு முலவாப் பேரூ ரொலிவளத் தோடும் வாழி யாழியன் மொழியா டெய்வ யானைதன் வதுவை நோக்கி ஏழிய னுலகி னுள்ளார் யாவரும் வாழி யென்றான். |
254 |
1885 | வேறு அறங்கள் யாவரும் பேணுக வறன்கடை யொழிக மறங்கு லாவிய செற்றங்கண் மனத்திடை வரைக திறங்கு லாவிய வவரவர் செய்தொழில் விடுக கறங்கு போன்மெனச் சுலாவுறுங் கவலைநெஞ் சிறுக. |
26 |
1886 | வறுமை யாளர்கள் வளநிதி வேண்டின மடுக்க உறுபொ னாளர்க ளுவப்பன வுடன்செயத் தொடுக்க முறுகு காதலி னினியவூன் முறையினுண் டடுக்க நறுமொ ருப்பவா னவர்கணல் லணிகண்மெய்ப் படுக்க. |
27 |
1887 | கந்த டர்த்தெழுங் கடகரிக் கணம்புற நகரின் உந்தி யாத்துறு காவலி னோம்புதல் புரிக எந்த வையத்து மில்லையென் றியாவரும் வியப்பச் சுந்த ரந்திரு நகரெலாந் துறுக்கவென் றறைந்தான். |
28 |
1888 | தாம ரைச்செழும் பூவினைத் தண்மதிக் குழவி காம முற்றிட வணைதலுங் கனன்றஃ தறைமேல் ஏம மல்குற வெறிந்தென வெறிகுணின் முரசி னாம னைத்தையும் புரிந்தக நகரணி துறுப்பார். |
29 |
1889 | வேறு சிகர மாளிகை சேணுயர் வீதிகண் மகர தோரணம் வார்கொடி பூகத நெகும லர்த்தொடை நீண்மணி மாலையுந் தகைசெ யுந்தடங் காவண மிட்டனர். |
30 |
1890 | வேதி தோறும் விரைப்பனி நீர்களுங் கோதை யுங்குளிர் பூரண கும்பமும் மாதர் பாலிகை யீட்டமும் வாசமுந் தீதிலாப்பொரி யுஞ்செறி வித்தனர். |
31 |
1891 | அரம்பை யாத்தணி செய்மனை வாய்தலில் நிரம்பு நித்திலக் கோவை நிரைத்தனர் சுரும்பு ணக்கடி மாலைக டூக்கினார் விரும்பு கண்ணடி மீமிசை வைத்தனர். |
32 |
1892 | கரைத்த செம்மணி நீர்கடிக் குங்குமம் விரைத்த நீரின் விராய்மட மங்கையர் சுரைத்த நாளத் துருத்தியிற் சிந்திமேல் நிரைத்து ளார்நெடு வீதிபொற் சுண்ணமே. |
33 |
1893 | மணியும் பொன்னு மலருந்தண் சாந்தமும் பிணிசெய் பட்டும் பெருகொளிச் சுண்ணமுந் தணிவின் மாடமுந் தையலர் போன்மென அணிய நின்றன வந்நக ரெங்கணும். |
34 |
1894 | பூவ ணத்தொடை யும்பொலந் தார்களுந் தூவ ணப்பொடி யுந்துகி லீட்டமுங் காவ ணத்திர ளும்பல காட்டலான் ஆவ ணத்தை யடுத்தபல் வீதியும். |
35 |
1895 | வேறு கன்னிமா நகர மெல்லாங் கவின்கொளக் கோடித் தங்குத் துன்னிய மாந்த ரின்பத் துறைதுறை முழுகா நிற்ப முன்னிய முடங்க லேற்று முதிர்சுவை மன்றல் காண்பான் என்னரு மகிழ்ச்சி துள்ள வெழுந்தனர் பேரூர் நோக்கி. |
36 |
1896 | மருங்குபல் கணங்கள்சூழ வயிரவன் வீரன் சாத்தன் ஒருங்கிய கால வங்கி யுருத்திர னாடகேசன் நெருங்குகூர் மாண்ட ரின்ப நிகழ்பதினொருவ ரென்னும் இருங்கதி யருள வல்லா ரிவர்மகிழ் துளும்பப் புக்கார். |
37 |
1897 | திருத்துழா யலங்கன் மார்பன் றிசைமுக னருக்கர் பல்வே றுருத்திரர் வசுக்கண் மற்றை மருத்துவ ரொன்பா னெண்ணைக் கருத்துற விரட்டி செய்த கணத்தவர் நதிக ளோங்கல் பொருத்துகா லங்கள் வேலை புங்கமா தவருந் தொக்கார். |
38 |
1898 | உரைத்திடப் பட்டோர் தங்க ளொண்டொடி மனைவி யாரும் இரைத்தெழு கடல்போ லீண்டி யெய்தினர் நகரிற் சிந்தும் அரைத்தசெஞ் சாந்துங் கோதை யலருமிழ் மதுவு மல்கித் தரைத்தலை யிழுக்கப் பாதந் தளரிடைக் கின்னல் செய்தார். |
39 |
1899 | அரிமதர் மழைக்க ணல்லா ராயமு மமரர் தாமும் விரிகட லுலகின் வாழு மேதகு மாந்த ரோடுந் தெரியிழை தருக்க ணல்கத் தேனுவின் னடிசி லுய்ப்ப உரியன நிதியுஞ் சிந்தா மணியுமிக் குதவப் பெற்றார். |
40 |
1900 | விழுத்தகு முண்டி யானும் விலகிவில் லுமிழுந் தெய்வக் குழுத்தகு கலனுந் தூசுங் குறைவற வணித லானும் பழுத்தமெய் யன்பிற் றுன்னும் பாரினர் தம்மை விண்ணின் வழுத்தப வதிகின் றாரை வரவுசெய் தறிய லாகா |
41 |
1901 | உம்பர்கண் மிடைத லானு மொளிர்ந்தபொன் னிறத்தி னானும் வம்பவிழ் தருக்க ளாதி வயின்வயி னிற்ற லானும் பம்பிரு ளிரவு மாறப் பன்மணி கதிர்த்த லானும் நம்பனார் பேரூர் நாக நகரொடு மலைத்த தன்றே. |
42 |
1902 | கண்டுகண் ணடியிற் பண்டைக் கலனெலா நீத்துத் தாரு மண்டொளி யிழைகள் வாங்கி வனப்புற வணிகின் றாரும் உண்டியி னுவக்கின் றாரு மொலிபுனற் றுளைகின் றாரும் வண்டலாட் டயர்கின் றாரு மங்கைய ராயி னாரே. |
43 |
1903 | வாம்பரி யுகைக்கின் றாரு மதகரி துரக்கின் றாரும் ஓம்பிய விமானம் பொற்றே ருழியுழி யூர்கின்றாரும் ஆம்புற நகரி னேகி யரிவையை யணிகின் றாருந் தாம்பல ராயி னார்க டடவுத்தோண் மருமப் பூணார். |
44 |
1904 | பூவையிற் கிளியின் வென்றும் பூங்கழற் பந்தின் வென்று மேவரு பிடியாட் டத்தின் மெல்லியர் தம்முள் வெல்ல ஓவறு தகர்கள் கோழி யொண்சிவ லாதி விட்டுத் தாவின்மைந் துடையோ ரெல்லாந் தம்முளே வெல்லா நின்றார். |
45 |
1905 | துறக்கநாட் டவர்கட் கெல்லாந் துறக்கமண் ணுலகா வேறு துறக்கமொன் றெய்திற் றென்னச் சுவைப்பயன் பலவு நல்கிச் சிறக்குமப் பேரூர் மாட்டுச் செறிந்தவர்க் கொழிவி னுள்ளம் பிறக்குமோ சுவைத்த வுள்ளம் பெயரினு மிறக்கு மோதான். |
46 |
1906 | நகரினை யடுத்தோர் சால நல்லபே ரின்பந் துய்ப்பப் புகரிலாத் தேவ தச்சன் புயன்மணி யூர்தி மன்னன் புகலரு டலைமேற் கொண்டு புவனங்க ளெனைத்தி னுள்ளும் நிகரில தாக நீண்ட மண்டப நிருமித் தானால். |
47 |
1907 | வேறு திண்ணென வடித்தலஞ் செம்பொ னோடவிட் டொண்ணிற வச்சிர முறுத்தி யும்பரின் நண்ணொளிச் செம்மணி நலக்க விட்டனன் மண்ணற றீமுறை வயங்கி னாலென. |
48 |
1908 | ஒளிக்குமேல் வளியென வுறுகு றட்டின்மேல் துளிக்குநீ னிறக்கதிர்த் தூண நாட்டிமேற் பளிக்கினிற் போதிகை பயிற்றி யிட்டனன் வளிக்குமேல் வெளியென மருட்கை கொள்ளவே.. |
49 |
1909 | தொத்தொளி கஞற்றிவரு சூரியரை வார்த்து வைத்தனைய வித்துரும வுத்திரம் வயக்கிப் பொத்துகுளிர் வெண்மதி புணர்த்ததென மேலான் நித்தில மழுத்திய நெடும்பலகை யிட்டான். |
50 |
1910 | வெய்யவ னொழுக்கிய விழுக்கிரண மென்ன வையவொளி யுத்திர மமைத்தபுடை யெல்லாஞ் செய்யமணி செந்துகிர் செழும்பொனிவை செய்த பெய்யுமொளி மாலைபிற வுந்துவள வார்த்தான். |
51 |
1911 | சீதள நறுங்கிரணந் திங்களுமிழ் கின்றாங் கோதமலி நித்தில வொலித்தொடையல் வேய்ந்த மாதரள வொண்பலகை வைகுவயின் முற்றுஞ் சோதிமலி யப்பெரிதுந் தூக்கியொளிர் வித்தான். |
52 |
1912 | வண்டுபட ராதமலர் வண்டொடலை யானு முண்டளி சுலாவுமல ரொண்டெரிய லானுங் கொண்டநவ மாமணியின் கோதைகளி னானும் எண்டவிர் வரைப்புமில் தாகவணி செய்தான். |
53 |
1913 | பளிக்கினுயர் பித்திகை பயிற்றியதன் மாடே வெளிக்கணிமை யார்கண்மிடை யுற்றநிரை யென்னத் துளிக்குமொளி யோவிய வொழுங்குக டொகுத்தான் களிப்பவெதிர் நோக்குநர்கள் கண்மலர்கள் வாங்க. |
54 |
1914 | வாய்ந்தபல தூண்கடொறும் வாருறைகள் சேர்த்தான் ஆய்ந்துநில னெங்குமவிர் கம்பலம் விரித்தான் வேய்ந்துமணி யும்பரின் விதானமு முறுத்தான் பாய்ந்தவெழி னித்திரள்கள் பாங்குற வமைத்தான். |
55 |
1915 | மாமணி விளக்குமலர் மாலையொடு சாந்துங் காமர்கல னுங்கவரி யாடிகுடை மற்றுந் தூமணி யியன்றசுடர்ப் பாவையினி தேந்தி ஏமுற விடந்தொறு மியங்கவிசை வித்தான். |
56 |
1916 | குண்டமொடு வேதிமுத லானகுறை தீர்த்திட் டொண்டவிசு மன்றலுறு வார்க்கிடை யுஞற்றிக் கண்டவிர் நுதற்கடவு ளார்முதலி னோர்க்கு மண்டுமரி யாதனம் வயின்றொறு முறுத்தான். |
57 |
1917 | கதலிவள ருங்கமுகு கன்னனெடு வானிற் பொதுளிய தருக்களிவை போதுகனி மற்றும் உதவவொளிர் தூண்டொறு முறுத்துநனி யாத்தங் கெதிரில்பல தோரண மிடந்தொறும் விசித்தான். |
58 |
1918 | மிகக்கவின் விளைத்தவியன் மண்டப மருங்கு புகப்படி பொலிந்தவயி டூரியம தாக்கி நகைகதிர்செய் வச்சிரநல் யாளியதன் மாடே முகக்கவிணை வித்தனன் முதிர்ந்தழ கெறிப்ப. |
59 |
1919 | வேறு கோமே தகத்தின் யாளிவரி கொளுத்திக் கொடுங்கை மரகதத்தின் ஆமா றியற்றி யதினெங்கு மவிர்பொன் னரிமா லிகைவாசப் பூமா லிகிபன் மணிமலை புகரில் கவரி யாடிகனி தூமா ணழகு பெறத்தூக்கித் துவண்டு நிலந்தோய்ந் தனநான்றே. |
60 |
1920 | மருங்கு பயின்ற வயின்றோறு மலர்ப்பூம் பந்த ரமைத்துள்ளால் இருங்குங் குமச்சே றிழுத்தநிலத் திலகு மணிநித் திலம்பரப்பி ஒருங்கு கமழு நறும்பனிநீ ருரைத்துத் தவழ விளந்தென்றல் நெருங்கு பலவிம் மிதப்பொருள்க ணிரப்பிக் கொடியு மிசையுயர்த்தான். |
61 |
1921 | வள்ள மருட்டும் வாய்க்கமல மலர்மென் குமுத நறுங்குவளை வெள்ளை நிறத்தோ திமத்திரள்கள் விரிபூஞ் சிறைச்சக் கரவாகப் புள்ளும் பிறவும் பயின்றுமணிப் புனன்மிக் குடைய தடம்பொய்கை நள்ளு மலர்ப்பூம் பந்தரய னணூக வமைத்தா னலங்கொழிப்ப. |
62 |
1922 | சுரும்பு மிழற்றத் தேன்றுளிப்பத் தோகை நடிப்பக் கிளிபூவை விரும்பிக் கிளவி யெதிர்பயிற்ற விழைந்து குயில்க ணனிகூவ அரும்பு மொளிமே டைகள்புளின மமைத்த வரையென் றிவைபயில இரும்பொ னுலகும் புறங்கொடுப்ப வெடுத்தான் மருங்காங் குய்யானம். |
63 |
1923 | இன்ன படிமங் கலவதுவைக் கியைய மணிமண் டபமாதி மன்ன வியற்றி மகிழ்கூர்ந்து வானோர் தச்ச னடிபணியக் கொன்னும் வயிரப் படைவேந்தன் குறுகி யுமைபா கரைப்பணிந்து நன்னர் வதுவைச் சிறப்பனைத்து நம்ப வியன்ற வெனக்கிளந்தாள். |
64 |
1924 | கருணை யரும்புந் திருவுளத்துக் கடவுள் பெருமான் முகமலரா அருகு வணங்கித் தொழுதேத்து மரவப்பள்ளி வானவனைப் பெருகு மகிழ்வின் முகநோக்கிப் பேணா வவுணர் குலஞ்சாய்த்த முருக னுருவ மணிசெய்தி முகுந்த வெனச்செவ் வாய்மலர்ந்தார். |
65 |
1925 | குமிழ்மென் மலரைப் புறவகற்றுங் கொடிநா சியினித் திலகமணிந்த அமிழ்த நிகர்த்த மொழிக்கமலை யடிக ளிறைஞ்ச வடுத்தாளை இமிழ்தண் கருணை யானோக்கி யிமையார் பழிச்சும் யானைதனைத் தமிழி னினிப்ப வணிகென்னச் சயில முயிர்த்தாள் வாய்மலர்ந்தாள். |
66 |
1926 | வேறு அருள்செயப் பணிசெய வரிய மாதவ மருவின முன்னர்மண் ணிலத்து மாமெனத் திருமறு மார்பனுங் கமலச் செல்வியும் உருகிய வன்புகொண் டுஞற்றப் புக்கனர். |
67 |
1927 | பெருங்கடற் பாயலான் பெட்ட பல்பொருள் தருங்கடன் பூண்டனன் சதம கத்தினான் ஒருங்கயி ராணியொண் கமலை வேட்டன அருங்கல னாதிக ளளிக்க நின்றனன். |
68 |
1928 | மங்கல மணிமுர சியம்ப வானமர் கங்கைவெண் களிற்றின்மேற் கடத்திற் போதரா அங்கலுழ் மேனியி னாட்ட வைத்தனர் புங்கவர் முருகனைப் போற்றி மாயவன். |
69 |
1929 | உவளக வரைப்பினொண் டவிசின் மேலிரீஇத் தவளவெள் வளையினந் தழங்கத் தண்கடற் பவளமொத் தவிர்நிறத் துருவிற் பல்கிய திவளொளி யணிதிக ழன்பிற் போக்கினான். |
70 |
1930 | அருக்கிய முதலிய வமைத்து வாநெய் மருக்கிளர் சிகழிகை மலிய வைத்துரை இருக்குரைத் தாட்டுவ வேனை யாவையும் ஒருக்கிய சிந்தைகொண் டூழி னாட்டினான். |
71 |
1931 | நுழையிழைக் கலிங்கநோன் கரத்தி னேந்துபு தழைமணக் குஞ்சியந் தலையி னார்புனல் விழைதகப் புலர்த்திமெய் யீர மொற்றினான் மழையுறழ் திருவுரு வனப்பின் மாயனே. |
72 |
1932 | மட்டுமிழ் நறும்புகை மடுத்துக் குஞ்சியின் அட்டிவண் புழுகலத் தார்கொண் டியாத்துமேற் கட்டுபு காஞ்சனக் கயிற்றிற் சென்னியின் இட்டனன் மணிமுடி யிமைப்ப வாட்கதிர். |
73 |
1933 | திங்கள்சென் னியின்வழுக் குற்றுத் தேசுற தங்கிய திதுபொடி தானன் றாலயற் செங்கனல் விழியிது திலக மன்றிவன் சங்கர னெனநுதற் கழகு சார்த்தினான் |
74 |
1934 | வழுக்கறும் யோகினர் மதிக்குந் திங்களின் ஒழுக்கொளி மண்டலத் தொளியி தாமென விழுக்குரு நீற்றொளி விளங்கு நெற்றியின் முழுக்கவி னோடையு முறையின் யாத்தனன். |
75 |
1935 | கண்ணுதல் பொடித்ததன் கான்மு ளைக்கொடி நண்ணலு மதனைவே ளென்னு நாமத்திவ் வண்ணலுக் காமென வமைத்த சீர்பொரத் திண்மக ரக்குழை செவியி லேற்றினான். |
76 |
1936 | செம்பொறி வாங்கிய திணிந்த தோளொடு வம்பவிழ் மருமமு மறைப்பி னல்லது கொம்பனா ருயிர்க்கொரு கொளுகொம் பின்றெனப் பம்பிய மணிக்கலன் பலவுஞ் சாத்தினான். |
77 |
1937 | மாதரா ருள்ளக மறுகும் வார்புயக் கோதையார் மத்துமேற் கொளுவ நின்றதோர் சீதவான் மதியெனத் தெளிந்த வச்சிரக் காதலா ரங்கதங் கதிர்ப்பப் பூட்டினான். |
78 |
1938 | பொழிகதிர்ச் செழும்பொனிற் பொதிந்த கண்மணி அழகிய முழங்கைமே லமையக் கட்டினான் ஒழுகிய புயமெனு மோங்கு மத்திடைத் தழுவிய வாசுகித் தாம்பு மானவே. |
79 |
1939 | செங்களத் தெதிர்த்துநின் றிறலிற் றானவர் மங்கின ரகழ்ந்தவென் வடிவு நல்கெனத் தங்கிய பரிதியைத் தாங்கி னாலென அங்கைமேற் செம்மணிக் கடக மாக்கினான். |
80 |
1940 | ஒருதலைச் செம்மணிக் கடக மொன்றமற் றொருதலை வயிரவங் கதநின் றோங்கலாற் பெருகெழிற் கரம்புரம் பேது செய்தவன் உருண்மணித் தேரினு ளச்சும் போன்றதே. |
81 |
1941 | வாழிய வருந்தவம் வயக்கிப் பல்பகல் ஆழியொன் றணிந்தத னங்கை யாற்பல ஆழிக ளெடுத்தெடுத் தமலன் வார்விரல் ஊழுறச் செறித்தன னுவண வூர்தியே. |
82 |
1942 | தந்தைபோற் றிக்குடை தழுவ முன்னினு மந்தின்மற் றஃதுறா தமைத்தல் செய்தெனச் செந்துகிற் பட்டின்மேற் சிக்க யாத்தனன் கொந்தொளி நாணுறீஇக் கொழும்பொ னாடையே. |
83 |
1943 | கயில்படு காஞ்சனக் கழலொன் றார்த்தபின் வெயில்விரி பன்மணி விளக்க மாண்டெழில் பயில்பரி புரமொடு பாத சாலமுஞ் செயிர்தபு சேவடி சேர்த்தித் தாழ்ந்தனன் |
84 |
1944 | அழகினிற் சிறந்திடு மநங்கன் றாதையாய் அழகினிற் சிறந்தவ னான செங்கண்மால் அழகினுக் காகர மான வேட்கணி அழகினை யளவையி னறைய லாங்கொலோ. |
85 |
1945 | திருமக ளென்பவ டெய்வ யானையை மருவள ருவளக வரைப்பிற் கொண்டுபோய்க் குருமணி யாதனத் திருத்திக் கோமள உருவொசி தரவுரைத் தாணெய் யோதியின் |
86 |
1946 | வேறு முளிந்தவொண் ணெல்லிச் சாந்து மொய்யொலி மஞ்சட் சாந்துந் தெளிந்தபஃ றுவருந் தெய்வ விரைகளும் பிறவுஞ் சேர்த்திக் குளிர்ந்தவான் கங்கை நன்னீர் கொண்டன டிமிர்ந்து சால ஒளிர்ந்திடப் பூங்கொம் பன்னா ளுருவினை மண்ணுச் செய்தாள். |
87 |
1947 | மெய்வள ரீர மாற்றி விளங்கிழைப் பட்டுச் சாத்திக் கைவளர் வினைஞ ரிட்ட கமழ்மலர்ப் பந்த ருள்ளால் ஐவளர் மணிப்பொற் பீடத் தணங்கினை யிருத்தி வாச நெய்வள ரோதி வாங்கிச் சீப்பினா னீவி விட்டாள். |
88 |
1948 | காசறை கமழ வூட்டிக் காரகி லாவி யேற்றி வீசொளிப் பட்டு நாணின் வீக்கியேற் றிமிலிற் கொண்டை வாசமென் மலருட் பெய்து வயக்கிமேற் காரைத் தென்னன் தேசவிர் தளையிட் டென்னத் தெரியல்கள் வளாவி னாளே. |
89 |
1949 | தடித்திடை விளங்கி யாங்குத் தயங்குபொன் னெஃகு தொட்டுக் கடித்திர ளாலி யென்னக் கதிர்மணித் தொங்கன் முச்சி தொடுத்திருண் மேகம் விண்டு துலங்குநீர்த் தாரை கான்றாங் கெடுத்தொளி கொழுந்தப் பாங்க ரிலம்பகஞ் சூட்டினாளே. |
90 |
1950 | கொழுந்தெழு பவளக் காடு கூர்கருங் கடலின் மாட்டுஞ் செழுந்திருக் குழவித் திங்க டிகழ்ந்தென மணிக்காழ் வீக்கி அழுந்திய வலகப் பாங்க ரவிர்மணித் தெய்வ வுத்தி தொழுந்தனிக் குழவித் திங்க ளிரண்டையுஞ் சுடர வைத்தாள். |
91 |
1951 | கருங்கட னாப்ப ணிட்ட கண்ணக னணையே யென்ன ஒருங்கிய வோதி நாப்ப ணொழுக்கிய கீற்றின் மேலால் தருங்கதிர்ச் சுட்டி யென்னுஞ் சருப்பம்வாய் திறந்து கான்ற பெருங்கவின் மணியே யென்னப் பிறக்கின டிலக நெற்றி. |
92 |
1952 | வேறு முலையது தாமரை முகிழன் றம்பல அலர்விழி யன்னவை யாத லான்மதி சிலையுமன் றிஃதொளி திவளு நெற்றியென் றலர்கதிர்ப் பட்டமாங் கமைய யாத்தனள். |
93 |
1953 | சேந்தரி பரந்து தேசு திகழ்ந்துசெஞ் செவியின் காறும் போந்தகன் றிருண்டு வெண்மை புணர்ந்துகொட் புற்று நீண்டு நாந்தகந் தடற்றுண் மூழ்க நாமவே லம்பைச் சீறி வாய்ந்தகண் மலர்க்கு மாதோ வஞ்சனம் வயக்கி னாளே. |
94 |
1954 | மகரவல் லேறு தூங்கும் வண்மையான் வள்ளை யேயென் றகிலமுந் தெளியக் காதி னவிர்குழை மகர மிட்டு நகுகதிர் முத்த நாசி நாற்றின ளிவற்றை நாடின் முகநிதிக் கமலங் கான்ற மொய்யொளிப் பொருள்கள் போன்ற. |
95 |
1955 | உளைவற வடைந்தோர்க் கெல்லா முவப்பினைச் செய்யா நிற்கும் வளைநிதி வெறுக்கை பாங்கர் மாண்டகப் பொழிந்தா லென்ன விளைவரை நானஞ் சாத்தி விளங்கிய கண்டஞ் சீர்ப்பத் திளைகதிர் மணிக்காழ் கட்டு வடத்தொடுஞ் செறியச் சூழ்ந்தாள். |
96 |
1956 | பாசிள வேயிற் றோன்றும் பருவரைக் குலங்க ளென்ன வீசொளி மணிக்கே யூரம் விளங்குசூ டகமும் வண்டு மூசுமென் மாலைத் தோளு முன்கையுங் கவினச் சேர்த்திக் காசவிர் வளையு மற்று மாழியுங் கதிர்ப்பக் கோத்தாள். |
97 |
1957 | பொற்பொடி சிதர்ந்தா லன்ன பொறிசுணங் கலர்ந்த கொங்கை விற்பொலி மணிச்செய் சேற்றின் வியத்தகு தொய்யி றீட்டிப் பற்பல மணியின் கோவை பன்மலர்த் தொடலை மற்று மற்பொலி வேழப் பாங்கர் வார்த்தபஃ றொடரி னிட்டாள். |
98 |
1958 | ஒல்கிய மருங்குற் கொம்ப ருறுதிகொண் டிருப்ப நாடி நல்கெழிற் சலாகை யொன்று நாட்டியொன் றுறயாத் தென்னப் புல்லிய மயிரின் வல்லி புடைவனப் புமிழக் காசு பல்கிய பருமக் கோவை பயிற்றின ளல்குன் மாட்டு. |
99 |
1959 | பாடக மணிந்து செம்பொற் கிண்கிணி பாத சாலஞ் சேடுயர் மணிச்செய் பொன்னூ புரம்புற வடியிற் சேர்த்தித் தோடவிழ் கமலம் வென்ற தூயவுள் ளடியிற் சீர்ப்பப் பீடுயர் பஞ்சி யூட்டிப் பெரிதுவந் திறைஞ்சி நின்றாள். |
100 |
1960 | வேறு இன்ன வாறெலாந் தெய்வயா னையையிலக் குமிதான் துன்னி வானணி ய்அணிந்துழித் தோகைமா மயிலோன் மன்னு மாநகர் வலம்வர வலித்தன னறிந்து பன்னு வானவ ராதியோர் படர்ந்துமுன் னின்றார். |
101 |
1961 | எட்டு மாதிரக் கயங்களு மெழிலியும் பனிப்பக் கட்டு வார்முர சாதிக ளியம்பின கதிர்கள் விட்டு வார்கொடி விசும்புடை யகடெலாந் தூர்த்த முட்டி லாநிழல் பரப்பின முழுமதிக் கவிகை. |
102 |
1962 | கவரி துள்ளின வசைந்தன கால்செய்வட் டங்கள் துவள மின்னிடை மாதரார் தொடங்கின ராடல் உவரி யின்னமிழ் தெனப்பரந் தனவுயர் பாடல் இவர்பெ ருஞ்சனம் விலக்கின ரேந்துவேத் திரத்தோர். |
103 |
1963 | ஒழுகு மும்மதத் தாரையி னுறுபிர மரங்கண் முழுகு வெண்கயம் பண்ணிமு னிறுவினர் பாகர் தொழுகு லத்தவர்க் கமுதமாய்ச் சுவைக்கும்வேல் வலத்தோன் குழுமு வையகங் குதுகல மடையமேல் கொண்டான். |
104 |
1964 | இவனை நேர்பவ ரிலையென மறுப்பது போலக் கவரி தூக்கிய முறச்செவி காலெழ மறியப் புவன மேலிது போலிலை யெனப்புரத் துடலம் அவவி மோத்தல்போன் மோந்துமோந் துலாவிய தத்தி |
105 |
1965 | பொரியும் பாகடைத் திரளும்பொற் சுண்ணமு மலருஞ் சொரியுந் தோயமுந் தூவிமுன் றொழுதனர் சில்லோர் எரியுந் தீபமாங் காங்குநீ ரொடுமெதிர் சுழற்றிக் கரியின் பாலுறக் கவிழ்த்துளங் களித்தனர் சில்லோர். |
106 |
1966 | கரும்பின் வார்கழை தடிந்தபல் கடிகையுங் கனியுஞ் சுரும்புண் கோதையுந் தும்பிமுன் னிறைத்தனர் சில்லோர் விரும்பு மோகையின் விழுக்கலன் கன்னிகை பிறவும் அரும்பு மார்வலர்க் களித்தன ராடவர் சில்லோர். |
107 |
1967 | வளிம றைப்பிடை மறைந்துசற் றேயுடல் வயங்கி வெளிதெ ரிந்துற நோக்கினர் மின்னனார் சில்லோர் வெளியின் வந்துதம் பாங்கியர் வியோகத்தின் மறைந்து களிற டுத்தலுங் கதுமெனத் தாழ்ந்தனர் சில்லோர் |
108 |
1968 | வணங்கு நுண்ணிடைப் பாரமோர்ந் தொழிப்பவர் மான இணங்கு மன்மிசை யெரிகதிர் மேகலை யிரங்கக் கணங்கொல் வண்டினங் கூட்டுணுங் கருங்குழ னெகிழ்ந்து மணங்கொண் மாலைகள் பொழிதர வணங்கினர் சில்லோர். |
109 |
1969 | பணிந்து நின்றவர் பணிந்திலேம் யாமென மீட்டுந் தணிந்த சிந்தையிற் றரைமிசைத் தாழ்ந்தனர் சில்லோர் அணிந்த வஞ்சலி முடியின ரதுமறந் தெங்கை துணிந்த வோவெனச் சுற்றினு நோக்கினார் சில்லோர். |
110 |
1970 | கொழுகொம் பில்லதோர் கொடியெனத் திருமுன்னர்த் தாழ்ந்து பழுதில் பன்மணி மேகலை காத்தனர் சில்லோர் முழுது மன்புள முகிழ்த்தெழ விழியெழின் முழுகத் தொழுது செங்கையிற் காத்தனர் தொடிவளை சில்லோர். |
111 |
1971 | இன்ன வாறுமூன் றுலகமு மின்புறப் பலவாய்த் துன்னு வீதிகள் சூழ்ந்துபோய்த் தும்பியி னிழிந்தங் கென்னை யாளுடை முருகவே ளிருங்கதி ரெறிக்குங் கன்னி மாமணி மண்டபங் காதலிற் புகுந்தான். |
112 |
1972 | ஆங்கு முன்னரே யரியணை வீற்றிருந் தருளுந் தேங்கு தண்புனற் சென்னியார் திருவருள் புரிய வீங்கி ருங்கதிர் மணிப்பொலந் தவிசின்மே லிருந்தான் பாங்கு ருத்திர ராதியோர் பான்மையின் வதிந்தார். |
113 |
1973 | அமரர் தம்பெரு மானருள் கொண்டயி ராணி விமல மல்கிய தெய்வயா னையைவெறி நறுந்தார் கமழு மண்டபத் தினிதுபோ தரக்கரு துதலும் இமிழு மன்புடைப் பரிசன மறிந்தெழுந் தனரால். |
114 |
1974 | வேறு கடகமுங் குழையும் தோடுங் கதிருமிழ் மணிப்பொற் பூணும் வடகமும் திகிலு மேனை யணிகளு மலர்ப்பூந் தாருங் கடல்வரு மமுதுந் தெய்வக் கனிகளும் வேறு வேறு படலிகை யமைத்து மூடிப் பற்பலா யிரர்கைக் கொண்டார். |
115 |
1975 | பேடிய ராண்மைக் கோலம் பெரிதுமெய்த் தாங்கிக் கொண்டு நீடிய வாள்கை யேந்தி நிரைந்துபற் பலர்கள் சூழ்ந்தார் கோடிய புருவங் காட்டிக் கொம்மெனச் சினந்து செங்கை ஆடிய பிரம்பி னோடு மாள்கடிக் கொண்டார் சில்லோர். |
116 |
1976 | மருவறு கவிகை பிச்சம் வார்கொடி கவரிக் காடு முறைமுறை யசையுங் கால்செய் வட்டமு மொய்ப்ப வீசும் அறுவையும் பார்ப்போர்க் கெல்லா மணங்குசெய் தருகு சூழ்ந்த. குறளொடு சிந்து முன்னே குறுகுறு நடந்து சென்ற. |
117 |
1977 | மங்கலம் பாடு வாரும் வளரிசை பாடு வாரும் அங்கெதி ராடு வாரு மலர்புனல் வீசு வாருஞ் சிங்குத லறியாக் கோலச் சிவிகைதோட் காவு வாருந் தங்கிய துறக்க வாழ்க்கைத் தையல ராயி னாரே. |
118 |
1978 | என்னிவ னோற்ற வாறென் றியாவரு மிறும்பூ தெய்தக் கன்னியர் குழாத்தி னூடு காமரு சிவிகை யூர்ந்து மன்னிய வதுவைக் கான மண்டப மருங்கு சார்ந்து மின்னுகு குலிச வைவேற் றாதைபான் மேவி நின்றாள். |
119 |
1979 | அருந்தவப் பேறு வாய்ந்த வமரர்கோன் றுணைவி யென்னத் திருந்திய சசிமா னன்பிற் றீம்பயம் வணங்கி வாக்க இருந்தருள் குமரன் பாத மெழில்பெற விளக்கி யந்நீர் மருந்தினும் பருகிச் சென்னி மருங்கினுந் துளித்துக் கொண்டான். |
120 |
1980 | முரன்றன சங்கம் பேரி முழங்கின முரச மார்த்த நரன்றன வங்கி யங்க ணரம்பொடு மகிழ்ச்சி வெள்ளம் வரன்றின திரண்டோ ருள்ள மடுத்தொரு மகளை நீரோ டரன்றனிக் குமரற் கீந்தா னருமறை முறைகள் கூறி. |
121 |
1981 | இந்திரன் வளர்த்த தெய்வ யானையை யேற்றுப் பின்னர்ச் சுந்தர முருகன் வானோர் தொழுதகு குரவன் வேதச் செந்தழல் வளரா நின்று திகழ்மது பருக்கஞ் சொன்றி முந்துற முறையி னிட்ட முகமலர்ந் தருளி னானால். |
122 |
1982 | கன்றொடு காமதேனுக் கலந்துடன் போத நோக்கி மென்றுணர்க் கரிய கூந்தன் மெல்லியல் வலக்கை பற்றி ஒன்றவே ழடியிட் டேகி யொளிர்மணி யம்மி யண்மி அன்றதன் முடியிர் சால வச்சுதந் தெளித்த பின்றை. |
123 |
1983 | சந்திரன் சடையில் வேய்ந்த தம்பிரான் றானு மந்நாள் இந்தநல் வினையை நாணா தியற்றினா னென்னி லன்னோன் மைந்தனு நாணு மாறிங் கென்னென மதித்து நக்கான் அந்தின்மற் றதனை நோக்கி யனைவரு முறுவல் பூத்தார். |
124 |
1984 | மகளிர்பால் வணக்க மோம்பி மைந்தர்க ளின்பந் துய்க்குந் தகுதியு மூடன் மாட்டுச் சாருதற் கங்கி சான்றா அகிலமுந் தெரிக்கு நீதி யாதரித் தணங்கு பாத நகுமுகத் திளையோன்பற்றி நகைமணி யம்மி யிட்டான். |
125 |
1985 | பங்கினண் மாட்டுச் சென்னிப் படர்புனன் மாதை வைத்த அங்கணன் வணக்க நிற்க வவனையும் வணக்குஞ் சேயோன் நங்கையின் வணக்க மன்ற நமக்கெலா மேற்ற மென்னா மங்கையர் பலரு நோக்கி மகிழ்தலை சிறந்து நின்றார். |
126 |
1986 | தந்தைத னுருவ மான தழல்வலம் வந்து நின்று கொந்தலர்க் குழலி நல்கக் குரூஉப்பொரி யேற்றங் கட்டிச் சுந்தர வணையின் வைகிச் சுடர்ந்தமங் கிலிய நன்னாண் கந்தரங் கவின யாத்தான் களித்தன வுலக மெல்லாம். |
127 |
1987 | வானவர் வளர்பூ மாரி சொரிந்தனர் மகவா னோடுந் தேனலர் கொன்றை யார்தந் திருவருள் வழங்கப் பெற்றங் கூனமி லளகைக் கோமா னொண்ணிதி மணிப்பூ ணாடை போனகம் பிறவு நல்க யாவரு மகிழ்ச்சி பூத்தார். |
128 |
1988 | பல்வகைச் சிறப்புந் தோன்றப் பம்பினோர் மகிழ்ச்சி தூங்க எல்வளர் நகர வீதி யேந்திலை வேற்கை நம்பி அல்வளர் கூந்தற் செவ்வா யணங்கொடு முலாப்போந் தண்மி வில்வளர் கோயி லுள்ளால் விலங்கொலித் தவிசி னுற்றான். |
129 |
1989 | மற்றைய நாளு மாற்றும் வதுவையின் சடங்கு சால முற்றிய பின்றை முக்கண் முதல்வனார் மகிழ்ச்சி கூர்ந்து பற்றிய வன்பி னீங்குப் படர்ந்துளீர் யாரும் வேட்ட தெற்றது தருதும் வச்ல்லே யெழில்வரங் கொள்க வென்றார். |
130 |
1990 | அவரவர் வேட்ட வேட்ட வரும்பெரும் வரங்கள் பெற்றுத் துவரித ழுமையா ளோடுந் துணைவனார் பாதம் போற்றித் தவலருங் களிப்புத் துள்ளச் சார்ந்தனர் விடைபெற் றேகி இவர்தரு தத்தம் வைப்பி ன்னிதுவாழ்ந் திருந்தா ரன்றே. |
131 |
1991 | குருதிகொப் பளிக்கும் பைவேற் குமரவேள் கொழுந்தண் டேறல் அருவிசெம் மலர்மென் கூந்த லணங்கொடு பேரூர் வைப்பின் இருமுது குரவர் தம்பா லிருந்தன னுலக மெல்லா மருமலர்ப் பாதம் போற்றி வைகலும் வாழ மாதோ. |
132 |
1992 | தேன்வழிந் தொழுகுங் கோதை தேவர்க ளரைய னீன்ற கான்வழிந் தொழுகுங் கூந்தற் கன்னியைச் சூட்டி யார்க்கும் வான்வழிந் தொழுகு மின்பம் வழங்கிய காதை கேட்டோர் ஊன்வழிந் தொழுகும் வேலா னுலகினி லின்பந் துய்ப்பார். |
133 |
1992 | குறைவறு தவத்திற் சான்ற கொள்கையீர் தேவர் தங்கள் சிறையினை விடுத்துக் காத்த செம்மலார் மன்றல் சொற்றாம் மறைவழி யொழுகுங் செங்கோல் வளர்குசத் துவச னென்பான் பெறுவரங் கேண்மி னென்னாப் பேசுவன் சூத மேலோன். |
134 |
1994 | உவவுமதிக் குடைநிழற்ற வுலகமொரு தாட்படுத்திக் குவவுநிதி முடிமன்னர் குரைகழற்றாள் பணிந்தேத்தக் கவவுமறை நெறியொழுகுங் கலைமதியின் வழிவந்தான் அவவுமனத் திரவலருக் கடர்பருவ மழையனையான். |
1 |
1995 | கோடாத கோலினான் குசத்துவ னெனும்பெயரான் வாடாத சீர்த்தியான் மல்குபெருஞ் செல்வத்தான் ஓடாத தானையா னொளிவளர்வை வேலினான் வீடாத பெரும்போக மிசைந்துலகம் புரக்குநாள். |
2 |
1996 | மக்கட்பே றில்லாமை மனைவியொடு மவ்வரையன் தொக்குப்பா ரிடையெல்லாஞ் சுவைத்தாலு மென்னையுடல் பக்குத்தூ தர்கள்வழியில் படருயிரைக் கதியேற்று மிக்குத்தாம் புரிகடன்மை விளைவின்றே லெனக்கவல்வான். |
3 |
1997 | உலகாட்சி யமைச்சர்பா லுறுத்தெழுந்து பலவரையும் மலரார்ந்த பலவனமும் வளர்சுரமும் பலகடந்து புலவோர்கள் பலகாலும் போற்றிசைத்துப் பெருவரங்கள் விலகாது பெரும்பேரூர் வியனெல்லை மருங்கடுத்தான். |
4 |
1998 | தூரத்தே யெதிர்தோன்றுஞ் சுடர்வெள்ளி வரைவணங்கி யாரத்தாழ் விழிவெள்ள மகன்மருமத் திடையொழுக வாரத்தா னெழுமன்பு மனங்கொண்டு முன்னடப்பச் சாரத்தா னடந்தெய்தித் தவழ்காஞ்சி நதிபணிந்தான். |
5 |
1999 | கரைசார மணியெறிந்து கனைத்தோடுங் காஞ்சிநதி விரைசாருங் குளிர்புனலின் விதியுளிதோய்ந் தெழுந்தன்பான் உரைசார்ந்த மறையவருக் கொண்பொருள்கண் மிகவார்த்தி திரைசார்ந்த மணிவீதி நேர்தொழுதா லயம்புக்கான். |
6 |
2000 | சுடர்மணிக்கோ புரமிறைஞ்சித் தூவெள்ளை விடைகிடந்த கொடிமருங்குப் பணிந்தெழுந்து குழைந்துருகி வலம்வந்து கடிகமழ்பன் னீர்நிழலிற் கதித்தபெருஞ் சுவையமிழ்தை முடிவுமுத லில்லாத முதிர்கனியைக் கண்ணுற்றான். |
7 |
2001 | ஆடினா னாராத வானந்தத் துள்ளழுந்திப் பாடினான் பலவேதம் படர்மனத்தி னெழும்பரிவு வீடினான் போலானான் விமலனா ரடித் தொண்டு கூடினான் பிரியாத குணங்கொண்டங் கரிதகன்றான் |
8 |
2002 | கார்கொண்ட கருங்கூந்தற் கடிகொண்ட திலகநுதல் வார்கொண்ட குவவுமுலை மரகதவல் லியையிறைஞ்சி ஆர்கொண்ட சடைதாழ வனவரத நடம்புரியுஞ் சீர்கொண்ட தம்பிரான் றிகழொளிமன் றமும்பணிந்தான். |
9 |
2003 | அற்றைநா ளுணவின்றி யடர்கங்குற் றுயினீத்து மற்றைநாள் வருவிடியல் வைகறைச்செய் கடனாற்றிக் கற்றைவார் சடைப்பெருமான் கழலிணையுள் ளகத்திருத்தி முற்றமா தவம்புரிந்தான் முழங்குபுகழ்க் குசத்துவசன். |
10 |
2004 | வேறு அற்றமி லமரர்க ளாண்டொ ராயிரம் இற்றிடு மெல்லையி லிலைகொள் சூற்படைக் கொற்றவன் குவிமுலைக் குமரி தன்னொடும் பெற்றமேல் கொண்டெதிர் பிறங்கத் தோன்றினான். |
11 |
2005 | எழுந்தன னிருந்தவத் திருந்த மன்னவன் விழுந்தன னடித்தல மீது சென்னிமேல் தொழுந்தடங் கரத்தொடுந் துதிக ளார்த்தினான் அழுந்தின னானந்த மென்னு மாழியுள். |
12 |
2006 | வழிபடு வேந்தனை நோக்கி வார்சடைப் பொழிகதிர் நிலவணி புனித வேதியர் கழிபெருந் தவம்புரி கடனிற் சீர்த்தனை பழிதபு வரமெது படர்ந்த தோதென்றார். |
13 |
2007 | இறைவரங் கருளலு மிறைஞ்சிக் காவலன் பொறைகொளும் புதல்வரைப் பூப்ப வேட்டனன் குறைவறு வரமிது கொடுக்க வென்றனன் அறைமறைத் தலைவர்கேட் டருளிச் செய்வரால். |
14 |
2008 | மருதமர் வரையிடை வதியும் வேற்படை முருகனை வழிபடின் முடிகொண் மன்னவ பெருவிறன் மைந்தனைப்பெறுவை யவ்வயின் ஒருவிய கவலையி னுவந்து செல்கவே. |
15 |
2009 | எந்தமைக் குறித்துநீ யிங்கு நோற்றலிற் சுந்தர மகளிர்க ளிருவர் தோற்றுவார் மைந்துடைப் பார்த்திவ வென்று மால்விடக் கந்தரக் கடவுளார் கர்ந்து போயினார். |
16 |
2010 | அருடலைக் கொண்டுசென் றரைய னோங்கிய மருதமர் சாரல்வண் மலையைச் சார்ந்தனன் குருபர னாகிய குமரற் கன்புசெய் திருநிலம் வியப்புற வரமங் கெய்தினான். |
17 |
2011 | புதல்வனைப் பெரும்பரி செய்தும் பூபதி இதமுறு பூசியும் விழாவு மேனவுஞ் சதமகன் மருகனார் தமக்கும் பட்டியின் வதிதரு மிறைவற்கு மலிவித் தானரோ. |
18 |
2012 | ஆதியம் புரிவள ரமல நாயகர் போதியென் றருளலும் போதிக் கானநன் நீதிசெய் மன்னவ னீங்கிச்சென்றுதன் சோதிசெய் மணிநகர் துன்னி வைகினான். |
19 |
2013 | ஒக்கலு முலகமு முவகை கூர்தரத் தொக்கதெவ் வரையர்க டுளங்கித் தேசற மக்களை யுயிர்த்தனன் மகிழ்ச்சி மீக்கொளத் தக்கபல் லறங்களுந் தழைய வாக்கினான். |
20 |
2014 | குழவிகண் மணியுருக் கோல நோக்கியும் மழலைகள் கேட்டுங்கை மலர ளாவிய விழுமிய வடிசில்கண் மிசைந்து மார்புறத் தழுவியு மோந்துதன் றளர்வு நீங்கினான். |
21 |
2015 | சுரந்தவன் புடைக்குசத் துவசன் சந்ததி வரம்பெற லிஃதொரு மன்னன் குட்டநோய் பிரிந்தமை கூறுதும் பேணிக் கேண்மினென் றுரம்பெறு சூதனங் குறுவர்க் கோதுமால். |
22 |
2016 | கருவி மாமழை மதிதொறுங் கவிந்துநீர் பொழிய அருவி தாழ்மலை நாடுகாத் தரசினி தளிக்குஞ் செருவில் வார்கொடிச் சேரர்தங் குலத்தில்வந் துதித்தான் பொருவில் சீர்க்குல சேகர னெனும்பெயர் பூண்டான். |
1 |
2017 | மறங்கி டந்தொளி ரொன்னலர் மணிமுடி வணக்கி அறங்கி டந்தொளிர் மனத்தினா னரசுசெய் திடுநாள் நிறங்கி டந்தொளி ராக்கையி னிறையெழி லழிக்குந் திறங்கி டந்தொளிர் குட்டநோய் சிவணிய தவற்கே. |
2 |
2018 | உருக்கு நோயினை நோக்கின னோங்கிய வரசின் இருக்கு நீரினுக் கியைவதன் றேயிஃ திதனை முருக்கு வாமென முன்னினன் மருத்துவர்க் கூவி நெருக்கு நோயினை நெருக்குவீ ரெனநிகழ்த் தினனால். |
3 |
2019 | தேறு நோய்ப்பகை யாளர்க டெரிந்தநூல் வழிவெவ் வேறு லோகங்க ணீற்றியும் வெய்துநெய் வடித்து நூறு தேம்பொடி யமைத்துநோன் குளிகைகள் சமைத்து நாறு தேங்களி யாக்கியு நாடொறுங் கொடுத்தார். |
4 |
2020 | கொடுப்ப தேகடன் மருந்துநோய் குமைக்குநர்க் கதுவாய் மடுப்ப தேகடன் மன்னனுக் குவன்றனக் கின்னல் படுப்ப தேகட னோய்க்கதன் பரிசினைப் பாரா விடுப்ப தேகடன் மருந்தினை யென்றனர் மேலோர். |
5 |
2021 | ஆய வேலையி லயற்புலத் தரையர்கள் விடுத்த நோயி னாண்மைதேர் மருத்துவர் நுனித்தறிந் தியற்றுந் தூய வான்மருந் தினத்தையுந் துகளுறப் புறங்கண் டேயு நோய்நனி வீறிய தியாவரு மினைய. |
6 |
2022 | என்னை கூறுமா றிருநில மருந்தென வெடுத்துச் சொன்ன யாவையுந் தொகுத்தநூன் முறையின்வாய் மடுத்தான் கொன்னும் வான்மருந் தானும்வெவ் வேறுநோய் குனிப்ப மன்னும் வாடினன் மருந்துவேண் டாவென விடுத்தான். |
7 |
2023 | கருகி மெய்யெலாங் கறைபொழி புண்பல வாகி உருகி வெண்ணிண முகநக மறவிரன் மடங்கி இருகை கான்முக மிருசெவி நாசியும் வீங்கி வெருவ நோக்குவார் வேற்றுரு வாயினன் வேந்தன். |
8 |
2024 | மருந்தி னாலிது மடங்குறா தாயினு மறைகள் திருந்த வோதிய வறங்களாற் றீருமென் றெண்ணிப் பொருந்து காதலி னறமெலாம் விதியுளி புரிந்தான். அருந்தி யாக்கையை யழிக்குநோய்க் கழிவினைக் காணான். |
9 |
2025 | வேறு அரத்தச் சடிலத் தெம்பெருமா னமருந் தலங்கள் பலபோற்றி இரத்தச் செழும்புண் ணுடற்கீட்டி யின்னல் பெருக்கும் பெருநோயைத் துரத்திக் களிப்பா மெனக்கருதித் தொக்க பொருள்கண் மிகத்தழுவி வரத்திற் சிறந்த தலந்தோறு மாறா வன்பிற் போய்ப்பணிந்தான். |
10 |
2026 | பிள்ளைக் கலைவெண் மதிமுடித்த பெருமான் சரணந் தலந்தோறும் உள்ளத் தெழுந்த பேரன்பி னுற்று வணங்கி வழிபடலுந் தள்ளற் கரிய பெரும்பிணிதான் றணியா துயரா தொருநிலைமை கொள்ளக் களித்தாண் டுகடோறுங் குழகன் றலங்கும் பிடலுற்றான் |
11 |
2027 | அவ்வா றொழுகி வருநாளோ ராண்டு தனது பதிதணந்து கைவா ரணத்தி னுரியார்தங் காமர் தலங்கள் பலவிறைஞ்சி ஒவ்வா வரக்க னுயிர்பருகி யொளிர்வா ணுதலைச் சிறைமீட்ட செவ்வாய் மையினான் வழிபட்ட சேது வணங்கித் திரும்பினான். |
12 |
2028 | செல்லு நெறியின் மகதியாழ்த் தெய்வ முனிவ னெதிர்ப்படலும் வல்லை வணங்கி யெனையாளும் வரதா வடியே னுடற்கிளைத்த அல்லற் பிணிவிட் டகலுமா றருளா யென்றா னம்முனிவன் ஒல்லையிரங்கி விறல்வேந்த னுவகை கிளைப்ப வுரைக்குமால். |
13 |
2029 | பண்டு புரிந்த தீவினையாற் படர்வ தாகும் பலநோயும் மண்டு மவற்றுண் மணிமனுநன் மருந்தாற் றீராப் பிணியேனும் அண்டர் பெருமா னமர்தலத்தி னகலு மனைய தலந்தம்முட் கண்ட வுடனே பயனளிக்குங் காமர் தலமொன் றுளதாமால். |
14 |
2030 | அனைய தலம்வண் டிசைமுரல வடர்மெல் லிதழின் முறுக்கவிழு நனைமென் பொகுட்டம் போருகத்தி னணுகோ திமத்தி னிளம்பிள்ளை கனைவெண் டரங்கந் தவழ்ந்தசைப்பக் களித்துத் துயில்கூர் தடம்பொய்கை முனைவ னருள்போற் குளிர்பெருக்கு மூதூர்க் காஞ்சிப் பேரூரே. |
15 |
2031 | வேறு காப்பி னாலுல கத்துக் கரிசெலாம் ஓப்பி நேமி யுருட்டுஞ்செங் கோலினாய் ஆப்பி யிற்புழு வர்க்கமு றாதுகாண் மாப்பெ ருந்தல மாமவ் வரைப்பிடை. |
16 |
2032 | அன்ன மாநகர் மேன்மை யனைத்தையும் என்னை கூறுத லேந்தயின் மன்னவ துன்னி நீயந்தச் சூழலு றாமுனங் கன்னி நோய்கழிந் தோடுதல் காண்டியால். |
17 |
2033 | கருத்தின் வேறு கருதலை யின்னினித் திருத்த னாதி புரத்தினைச் சேறியென் றருத்தி யோடு மறைந்து மறைந்தனன் நிருத்தன் சீர்த்தி நிகழ்த்திடும் வீணையான். |
18 |
2034 | அற்றை ஞான்றடர் நோய்கழிந் தானெனப் பெற்ற வோகை பிறங்கவை வேலினான் உற்ற நாட்டை யொழிந்துயர் கொங்குசேர்ந் தெற்று நீர்நதிக் காஞ்சியை யெய்தினான். |
19 |
2035 | வணங்கிக் காஞ்சி வருபுன லாடினான் உணங்கிக் கன்ம முலக்கும்பே ரூர்வயின் அணங்கி னோடம ரண்ணலைத் தாழ்ந்தனன் பிணங்கு நோய்பிரிந் தோடிய தென்பவே. 0 |
20 |
2036 | தேசு மிக்க திருவுரு வாயினான் ஈசன் மிக்கரு ளென்றரத் துஞ்செல நேச மிக்க நெறியில னம்மவென் றாசை மிக்க வகத்தொடு மாடினான். |
21 |
2037 | பட்டி நாயகற் கான பணிபல முட்டி லாத முறையி னியற்றினான் விட்டு நீங்கற் கருமை விரவலிற் சட்ட வவ்வயிற் றங்கி வதிந்தனன். |
22 |
2038 | பத்தி செய்து பணிசெயு நாளையில் தொத்து டற்பொறை நீங்கத்தொன் மாமலக் கொத்து நீங்கிக் குழகன் பதமெனு முத்தி யெய்தி முடிவிலின் பாயினான். |
23 |
2039 | வேறு பிரியாத பிணிகெழுவிப் பேரன்பிற் சேரலன்றான் முரியாத வீடெய்து முறைமையினை வகுத்துரைத்தாந் திரிலோக சோழனுறு செயிர்தீர்ந்த படிமொழிதும் உரிதாகக் கேண்மினென வுறுவரர்க்கோ துவன்சூதன் |
24 |
2040 | இருணெ டும்பிழம் பெடுத்துவாய்ப் பெயவருங் காலம் பருதி தப்பினும் பருவந்தப் பாதுநீர் வழங்கி முருகு விம்மலர்ப் பண்ணைகண் முறைமுறை விளைக்கும் பெருகு காவிரி நாட்டினைப் பேணுமோர் சோழன் |
1 |
2041 | மும்மை வையகத் திடரெலா முதலொடு முருக்கி அம்ம விண்ணகத் தரையனும் வரிசைக ளாற்றச் செம்மை செய்தலிற் றிரிலோக சோழனென் றொருபேர் விம்மு காதலின் யாவரும் விளம்புவ ரவற்கே. |
2 |
2042 | ஒளிறு வேலவன் முறைசெய வோங்குசோ ணாட்டின் அளகை யாளிபோ லனைவரும் வெறுக்கைய ராகி வளமை யீட்டுவெண் பூதிசா தனநனி மருவி வெளிறில் கேள்விய ராய்ப்பெரு வாழ்க்கைமே வினரால். |
3 |
2043 | சைவ ரேயலாற் பரமதத் தவர்தமைக் காணாத் தெய்வ மேகமழ் திருத்தகு காவிரி நாட்டின் மெய்வி ராவிய கல்வியர் தம்மொடு மேவி நெய்வி ராவிய வேலினான் முறைநிகழ்த் திடுநாள். |
4 |
2044 | செல்வ மிக்கநே வாளதே யத்திடை யிருந்து கல்வி கற்றகா பாலர்கள் சிலர்சென்று கலந்தார் வில்வ மிக்கணி விமலனார் தலம்பல விராவிச் சொல்வி ளைத்திடுஞ் சோழநாட் டெல்லையின் மாதோ. |
5 |
2045 | அனைய செவ்வியிற் சிவநிசி யடுத்ததந் நாளின் வினையி கந்தநல் வேதிய ரடியவர் பலருந் தனைநி கர்த்திடுந் திருவிடை மருதெனுந் தலத்தின் முனைவ னின்னருட் சேவடி வணங்கமுன் னினரால். |
6 |
44 | ||
2046 | ஆற்றன் மிக்கவச் சோழனு மன்புள மீர்ப்பக் கூற்றை வென்றருள் குழகனார் குரைகழற் பாதம் போற்ற வவ்வயிற் புக்கன னன்னது தெரிந்து மாற்ற மிக்ககா பாலரும் வல்விரைந் தடுத்தார். |
7 |
2047 | திருந்தி ணர்ச்செழுங் கொன்றையார் சேவடி வணங்கப் பொருந்து செவ்விபார்த் திருந்தனன் பூபதி யொருபால் இருந்த வெல்லையி லெய்துகா பாலவிப் பிரர்கள் வருந்த லின்றியே கண்டனர் வழங்கின ராசி. |
8 |
2048 | கொண்ட வேடமு மன்னவர் குரூஉமணி யுருவின் மண்டு காந்தியு மதித்தவர் மனமதித் திலனாய்க் கண்ட காவலன் விருப்பொடுங் கையிணை கூப்பி மிண்டு தீவினை யாரையா ரெனவின வினனால். |
9 |
2049 | கடாவு மன்னவன் கருத்தினைக் கதுமென நோக்கி விடாது நம்வழி மேவுவ னிவனென விழைந்து தடாத தீவினை போல்பவர் தம்முளே யொருவன் கெடாத மூப்புடை யானெதிர் கிளக்குவ னானான். |
10 |
2050 | நமது வாழ்க்கையி னிருக்கைநே வாளநற் றேயம் நுமது நாட்டுடை வளமையு நுமதிரும் புகழும் எமது வார்செவி யேறலி னினிதுகாண் விருப்பிற் சமர வேற்றடங் கையினாய் சார்ந்தன மீங்கு. |
11 |
2051 | பண்டு மாதவம் புரிந்தனை பார்த்திவ வதனால் விண்ட தீவினை யாளரே மேவவிவ் விடத்துக் கண்டு காதலை யாயினை கரையுமந் தணமொன் றுண்டு சூழ்ந்தவ ரொழிதர விருந்துகே ளென்றான். |
12 |
2052 | அரைய னோக்கமு மதற்குடன் பட்டமை நோக்கி விரைய வாங்குளா ரெழுந்துவே றிடத்தொதுங் கினறாற் புரையி லீரினிப் புகல்கெனப் பூபதி பணிந்தான். வரைசெய் துன்மதத் தலைவனும் வழங்குதல் வலித்தான் |
13 |
2053 | உலக மின்புறத் தக்ககா ரியநனி யோரின் இலகு மைவிழி யாரினா மிணைவிழைச் சன்றே கலவு மற்றது காரியத் தன்றுகொ லுயிர்கள் பலவு மல்குத லாயின பார்த்திவ பாராய். |
14 |
2054 | உலக மாக்குதற் கீசனென் றொருவனுண் டென்பர் புலனி லாதவ ரவர்திறம் போகவை யகத்துக் கலவு மீசனைக் கண்டவர் யார்கண்ணிற் காண நிலவு நீரதே மெய்நில வாதது பொய்யே. |
15 |
2055 | ஆத லாலகி லத்தினுக் கமரன்வே றில்லை ஓது நீண்மர மரத்துட னுரிஞிய பொழுதுஞ் சோதி வான்சிலை சுடரவன் கதிர்தொடும் பொழுதும் காது தீயெழுங் கலவியிற் றோன்றுவ துலகே. |
16 |
2056 | அனைய தாதலி னரும்பொரு ளிணைவிழைச் சன்றி வினையில் காவல வேறிலை யிணைவிழைச் சினுக்குப் புனையு மாட்சிமை தருவது புகல்சுரா பானம் இனைய பானமும் பொருளென வினிதுகைக் கோடி. |
17 |
2057 | தெய்வ நல்லவர் பெரியவ ரெனச்சிலர் பேசி உய்ய லாமென வுரைப்பர்க ளவையெலா மொழிக வைய மீக்கொளு மன்னவ வெனமதி மருளப் பொய்யை மெய்யெனப் புகன்றனன் புன்மதத் தலைவன். |
18 |
2058 | வேறு காபால மதத்தலைவன் கடனிதுவென் றெடுத்துரைத்த ஆபாச நெறிவிரும்பி யறிவழிந்து திறல்வேந்தன் மாபாச வலைவளைப்ப மறைநெறியின் முறைதிறம்பிச் சீபாவி யெனவறிஞர் சிந்தைசெய வொழுகினான். |
19 |
2059 | மதுநுகர்ந்து வருணநிலை வழுக்கிமட மாதரார் புதுநலனுண் டுயரொழுக்கம் பூண்டவரை நனியலைத்துக் கதுவலுறுங் காபால மதத்தவரே களிதூங்க இதமகன்ற கொடுங்கோன்மை யியற்றினன்வை யகத்தரசன். |
20 |
2060 | மன்னவனே முறைதிறம்பின் மன்னவனா ணையினடக்குந் துன்னியவை யகமுறைமை தொடங்கிநடந் திடுமேகொல் பொன்னிவளந் தருநாட்டுப் பொருந்தியமாந் தர்களெல்லாம் இன்னவிலக் கிவைவிதியென் றிரண்டின்றி யொழுகினார். |
21 |
2061 | முட்டாத சோணாடு முறைதிறம்புஞ் செயனோக்கி மட்டார்ந்த மலர்க்குரிசின் மனம்வருந்தித் தீவினையின் ஒட்டாத நாரதனை யுறவழைத்துக் கொடுங்கோன்மை தொட்டானைத் திரிலோக சோழனைநீ திருத்தென்றான். |
22 |
2062 | வீணைமுனி யடிவணங்கி விரைந்துபோய்ச் சபையடுத்துப் பேணுபர மதத்தழுந்தும் பெருமிதமன் னவன்வணங்கா மாணுமடத் தினைநோக்கி மணிக்கரகத் தறலள்ளிப் பூணுறுமஞ் செழுத்தோதிப் பொருக்கெனவா னனத்தெறிந்தான். |
23 |
2063 | அஞ்செழுத்து நவின்றெறிந்த வற்றன்முகத்திற் படிதலொடும் விஞ்சியதுன் மதமோகம் விளிந்ததுமன் னவனெழுந்து கஞ்சமலர்ப் பதம்பணிந்தான் கருணைவிழி நோக்கருளி எஞ்சலுறாத் தவமுனிவ னெடுத்தளித்தான் றிருநீறு. |
24 |
2064 | வாழ்ந்தனென் றங்கைகொடு வயங்குதிரு வெண்ணீறு வீழ்ந்தணிந்து விறல்வேந்தன் விழைந்திருப்ப முனிநோக்கிச் சூழ்ந்துமுன நீயளித்த சோணாடிப் பொழுதென்னாய்த் தாழ்ந்ததுபார் முறைதவிர்ந்த தன்மையா லெனநுவன்றான். |
25 |
2065 | வேறு பார்த்து மன்னவன் பதைபதைத் துள்ளக மழிந்து வேர்த்து மெய்யெலா முனிவனை மீட்டெதிர் வணங்கி ஆர்த்த தீவினை யாளனே னடுபிழை யொருவிச் சேர்த்தி நன்மையென் றிரந்தனன் றுதிபல செப்பி. |
26 |
2066 | திருந்து மன்னனை முனிவரன் றிருமுக நோக்கி வருந்தன் மேலைநற் சிதம்பர வரைப்பினை யடுத்துப் பொருந்த லார்புரம் பொடித்தவர் பூங்கழல் பணிதி மருந்து தீவினைக் கதுவலா லிலையென்று மறைந்தான். |
27 |
2067 | மகதி யாழினன் மன்னனைத் திருத்திய தறிந்து தகுதி யல்லன சார்த்துந்தா பதனமக் கென்னா உகும னத்தொடுந் துன்மதத் தினர்களோட் டந்தார் புகழ்செய் மன்னனு மடுத்தனன் புகரறு பேரூர். |
28 |
2068 | தத்து வார்திரைக் காஞ்சியிற் றண்புன லாடிப் பத்தி யோடுயர் கோயிலிற் படர்ந்தெதிர் பணிந்து வைத்த வேல்விழி மரகத வல்லியோ டமர்ந்த அத்த னார்தமைப் போற்றின னகன்றன பிழைகள். 9 |
29 |
2069 | சில்ல நாளவ ணிருந்துநற் பலபணி செய்திட் டல்லை நேர்களத் தமலனா ரருள்விடை பெற்றுச் நல்ல காவிரி நாட்டினை நணுகிமுன் போலச் சொல்லு நூல்வழி நடவினன் றுகளறு செங்கோல். |
30 |
2070 | ஆளூ மண்ணலார் தலங்களி னாற்றுதீ வினையுங் காள கண்டமா புரமெனக் கரையிடை மருதின் மாளு மந்நகர் வரைப்பிடை யாற்றுவல் வினைதான் நீள்வ தன்றியே யாங்கணு நிலையழிந் திடாதால். |
31 |
2071 | அன்ன தாகிய விடைமரு திடையிருந் தாற்றுந் துன்னு தீவினைத் தொடர்திரி லோகநற் சோழன் முன்னி நீங்கின னென்றிடின் மொழிந்தபே ரூரின் மன்னு மேன்மையை யாவரே வகுத்திட வல்லார். |
32 |
2072 | சோழன் வல்வினை தொலைத்தமை கூறிய சூதன் வாழி யண்ணலார் பார்ப்பதி தனக்குமுன் வகுத்த தாழி ருஞ்சடை பூதிகண் மணிதளிர் வில்வங் கேழி னல்லுப சாரமுங் கிளக்குவ னானான். |
33 |
2073 | வெள்ளியம் பலத்துமுன் விமலர் காட்டிய ஒள்ளிய திருநட முளத்து நாடொறு நள்ளுற நினைத்திடு நங்கை பார்ப்பதிக் கெள்ளலி லையமொன் றெழுந்த தென்பவே. |
14 |
2074 | அவ்விய முயிர்க்கற வாடல் கண்டிடுங் கொவ்வையங் கனிநிகர் கோல வாயிதழ் நவ்வியின் விழியுமை நங்கை நாதரைச் செவ்வியின் வினவுமா சிந்தை செய்தனள். |
2 |
2075 | பண்ணவர் தொழுதெழும் பட்டி நாயகர் உண்ணெகிழ் கருணையி னொருதி னந்தனில் எண்ணரு மைக்ழ்ச்சியி னிருந்த செவ்வியைத் தண்ணிய விமவரைத் தைய னோக்கினாள். |
3 |
2076 | எழுந்தனள் வணங்கின ளிறைவ யாவர்க்குந் தொழுந்தர மன்றியத் தொடர்புந் தீர்சுகத் தழுந்துநர்க் கருளுமா னந்த தாண்டவஞ் செழுந்திரு முனிவர்க்குந் தெரித்த தென்னென்றாள். |
4 |
2077 | குங்குமக் குவிமுலைக் குடங்கை வென்றகட் பங்கய மலர்முகப் பாவைக் கீர்ம்புனல் திங்களஞ் சடைமுடித் தெய்வக் கொன்றையின் அங்கண னுத்தர மருளிச் செய்யுமால். |
5 |
2078 | வேறு பத்தி பெருகக் கோமுனியும் பட்டி முனியும் படர்செந்தீ ஒத்த சடையும் வெண்ணீறு முயர்கண் மணியு மிவைதரித்துக் கொத்து வளர்கூ விளத்தளிர்கள் கொண்டிங் குபசா ரத்தெம்மைச் சுத்தமளிக்கு மிலிங்கத்துத் தொடுத்து நெடுநாட் பூசித்தார். |
6 |
2079 | மன்றி னடிக்கு மெமதுதிரு வடிவி னிடத்தும் பூசித்துத் துன்று சிறப்பின் விழாவெடுத்துத் தொழுது வணங்கி மலமைந்தும் வென்று விளங்கு முளத்தினராய் விழைந்தா ரதனால் வியப்பெய்த அன்று நடன மவர்காண வளித்தா மணங்கே யெனமொழிந்தான். |
7 |
2080 | பொறிவா ளரவப் பூணணிந்த புனிதர் புகன்ற மொழிகேளா மறிமா னோக்கி னுமைமாது மகிழ்ந்து தலைவா விருவோருஞ் செறிவார் சடையா திகடரித்துத் திகழ்கூ விளங்கொண் டுபசார நெறியாற் பூசித் தாரென்றீ ரவற்றின் றிறமு நிகழ்த்துமென. |
8 |
2081 | ஆடு மரவிற் புடைபரந்த வல்கு லுமையாட் குலகுய்ய நீடு சடிலத் துயர்வுமொளிர் நீற்றி னுயர்வுங் கண்மணியின் பீடும் வளர்கூ விளத்துயர்வும் பிறங்கு முபசா ரமுமுடியிற் கோடு மதிவெண் கலைவேய்ந்த குழகர் தெரிய வுரைப்பாரால். |
9 |
2082 | விம்மி யெழுந்து புடைபரந்து வெண்ணித் திலமா லிகைதரித்த கொம்மை முலையாய் நம்முடைய கோல மார்ந்த பலவுறுப்புத் தம்மு ளுயர்ந்த வுறுப்பாகுந் தயங்குந் தழலொத் தொளிர்சடில மும்மை யுலகும் வியப்பெய்த முடிமேல் விளங்குங் காட்சியான். |
10 |
2083 | அரையற் குரிய வடையாள மணிந்தோர் தம்மை யரையனென விரைய மதித்திட் டுபசாரம் விளைப்பா ரெவரு மதுபோலப் புரையி லெமது சடைதரித்த புனிதர் தம்மை யாமெனவே உரையின் மனத்திற் காயத்தி னும்பர் முதலோர் வழிபடுவார். |
11 |
2084 | வார்ந்த சடில மொரோவொன்று வயங்கு மிலிங்க மொரோ வொன்றா மார்ந்த சடிலம் யாரொருவ னணிந்தா னவற்கா யிரமுறைமுன் சார்ந்த பவத்தி னுள்ளாருந் தனக்கா யிரமா முறைபின்னர் நேர்ந்த பவத்தி னுள்ளாரு நீங்கி வினையெம் முலகடைவார். |
12 |
2085 | கதிருஞ் சடிலந் தரித்தானைக் கண்டு வணங்கான் றவமெல்லா முதிரும் பரிந்து வணங்கினா னுலப்பில் பாவி யாயிடுனும் முதிருந் தவத்தோ டுயர்செல்வ மொய்க்கு மவற்கே செழுங்கனகப் பிதிருங் கணியி னறுந்தாதும் பேதுற் றிரியுஞ் சுணங்கினாய். |
13 |
2086 | சுடருஞ் சடிலந் தோய்ந்தபுனற் றுளியொன் றொருவன் மேற்றெறிப்பின் அடரும் பெரும்பேய் பூதங்க ளலைக்குந் துட்ட தெய்வதத்தின் இடரும் பிணியும் பாதகமு மெனைத்து மிரியு மாதலினாற் படருஞ் சடிலத் தவன்பச்சைப் பாவாய் நம்மின் வேறல்லன். |
14 |
2087 | புரிபொற் சடில முடிதரித்த புனிதர் குலத்திற் பிறந்தோரும் பிரம னுறுகற் பகங்கள்சதம் பேணி நமது சிவலோகம் விரவி யினிது வாழ்வரெனின் வேணி யணிந்தார் தம்பெருமை அரவி னகன்ற கடிதடத்தா யளக்குந் தரமோ வமரருக்கும். |
15 |
2088 | வேறு இயம்புவை திகநீ றென்றா விலெளகிக பூதி யென்றாப் பயந்தரு நீறி ரண்டாம் பகர்ந்தவை திகவெண் பூதி உயர்ந்திடு மோம குண்டத் தொளிர்வதா மற்றைப் பூதி வயந்தரு புனித நல்லான் மயத்தினா னாவ தாகும். |
16 |
2089 | தகுபுரா தனியே யென்றுஞ் சத்தியோ சாதை யென்றும் இகலில்வை திகவெண் பூதி யிருதிற னாகு நேரே புகழ்தகு வேத னோம குண்டத்திற் பூப்பதொன்று பார்தரு மறையோ ரோம்பு மங்கியிற் படுவ தொன்றாம். |
17 |
2090 | இலெளகிக பூதி தானு மிருதிற னாகும் பாவம் உலைவுற வாற்றுந் தீக்கை யுற்றவர்க் குரிய தாக நிலைபெற நிறுவுஞ் சைவ நீறென்றுந் தீக்கை யின்றி அலைவுறு மாந்தர் தங்கட் கடுத்திடு மசைவ மென்றும். |
18 |
2091 | வேறு கற்பமனு கற்பமுப கற்பமென மூன்றாம் அற்பினொடு சைவரணி யுந்தவள நீறு பொற்பவவை மூன்றுதிற னும்புகறல் கேளாய் விற்புருவ வேற்கண்விது வாணுதன்ம டந்தாய். 9 |
19 |
2092 | கன்றுபய வாதகளி நாகுபுனிற் றுக்கோ கன்றிறுதி யுற்றகபி லைக்குலம ட்டான் கன்றுதுணை யீன்றகற வித்திரண்மு திர்ந்த கன்றுறு பசுக்கருவ யிற்றுவளர் பெற்றம். |
20 |
2093 | வார்ந்தசெவி கோடுநெடு வாலிவைக டம்மில் தீர்ந்தசு ரபித்தொகுதி தீதுவளர் பவ்வீ ஆர்ந்துவரு காலிபிணி யான்றகுடஞ் சுட்டென் றோர்ந்தவிவை நீங்கவெழி லோங்கிவளர் கற்றான். |
21 |
2094 | பங்குனியி னெல்லரிப னைக்கணுறு தாண்மேய்ந் தங்கவைவி டுத்தமய மட்டமியி ரேழில் தங்குபதி னைந்தின்வளர் சாதமனு வோதி மண்டனில்வி ழாமுன்மரை மெல்லிலையி னேற்று. |
22 |
2095 | வழும்பொருவி வாமமனு வோதிவளர் கவ்யம் பொழிந்ததில கோரமது போற்றுபு பிசைந்து செழும்புருடம் விண்டுதிரள் செய்துதிக ழோமத் தெழுந்தழன்ம டுத்தபினெ டுத்திடலீ சானம். |
23 |
2096 | வேறு புதிய வறுவை கொடுவடித்துப் புதிய கடத்திற் கொளவமைத்துக் கதிசெய் மனுக்கா யத்திரியைக் கழறிப் புனித நிலத்திருத்தி மதுவிண் டொழுகு மலர்சாத்தி மறுவி றுகிலால் வாய்ப்பெய்தல் விதியின் றழலி னிடாதுனக்கி விளைவித் திடலு முறையாமால் |
24 |
2097 | கனத்திற் கரிய பூங்குழலாய் கற்ப முரைத்தா மனுகற்பம் வனத்தி லுணங்கு மயமேட மதியிற் கொணர்ந்து பொடித்ததன்கண் இனத்திற் சிறந்த கோசலம்வார்த் தெடுத்து நவின்ற முறையானே அனற்றி விளைத்துக் கொளலாகு மறைது முபகற் பமுங்கேளாய். |
25 |
2098 | வளர்தீ யியல்பிற் கவர்ந்துண்ட வனத்துப் பொடியி லானைந்துந் தளரா தொழுக்கி மொழிந்தபடி தழல்வைத் தெடுத்துக் கொளலாகும் அளவாப் பிணியைத் தருநீல மாயு ணீக்குந் தாமிரஞ்சீர் பிளவா விசையைத் தபுஞ்செம்மை பீத மளிக்கு நல்குரவே. |
26 |
2099 | வெண்மை யளவில் புண்ணியத்தை விளைக்கு மதனா லதுதரிக்கும் வண்மை யுடைய ததுதன்னை மான்றோல் புலித்தோல் வத்திரத்தால் ஒண்மை விரல்பன் னிரண்டளவி னுயர மிருநான் களவகலந் திண்மை கொளும்வாய் வட்டமுறச் செயுமா லயத்துச் செறித்தணிவார். |
27 |
2100 | தரிக்கும் விரறர்ச் சனிகனிட்டை தணந்த மூன்று மாமவற்றால் வரிக்கு முறைகே ளனாமிகைமத் திமையால் வாமந் தொடுத்தீர்த்துத் தெரிக்கும் வலப்பாற் றொடுத்திடையே திகழங் குட்டத் தெதிரீர்த்தல் பரிக்கும் வலத்தோட் கெதிர்முறையிற் பரிந்து தரித்தன் மரபாமால். |
28 |
2101 | இடைமூ விரலி னொருங்குறநே ரிடலு முறையாஞ் சிரநுதன்மார் புடைசே ருந்திக் கீசான முயர்தற் புருட மகோரமனு நடைசேர் வாமம் புகன்றணிவர் நவில்சா தத்தின் முழந்தாடோள் படுசீர் முழங்கை முன்கைகளம் பரந்த வெரிந்வார் செவிக்கணிவர். |
29 |
2102 | அறவொன் றுடனென் றணுகனனி யகறல் வளைத லிடையறுதல் பிறவு மொழிய வணிநீற்றிற் பேணு மளவு நுதலுரந்தோட் குறுமங் குலமூ விரண்டாகு மொழிந்த வுறுப்புக் கொன்றேயாம் இறுமெல் லிடையாய் திரிசூலத் தெழிலார் பூதி யிடலுமாம். |
30 |
2103 | திகழுத் தூளஞ் செய்தன்றித் திரிபுண் டரஞ்சாத் தாரெவருந் தகுசந் திகல்செய் யாக்காலந் தன்னிற் புனனீத் தினிதணிவர் முகிழ்மென் முலையாய் சைவர்புரி முறைமை தெரித்தா மறைவழியிற் பகர்வை திகர்நீ றணிகின்ற பரிசு முரைப்பா மினிக்கேண்மோ. |
31 |
2104 | மறையோர் சிரம்வா ணுதன்மருமம் வாகு விரண்டு மவற்றொடுமண் இறையோர் செகில்வார் துடைநான்கு மிவற்றோ டேனை யோர்முழங்கை செறிசீர் முன்கை முழந்தாள்வெந் செவிகண் பதினொன் றினுநீறு குறையா தணிவர் செகிற்றுடையுங் கூட்டி மறையோ ரணிதலுமாம். |
32 |
2105 | தக்க வகர மிருக்குவிரா சதவொண் குணமான் மாவென்னத் தொக்க பொறியா திகள்கிரியா சத்தி துகடீர் மாதேவர் பக்க வழல்சேர் காருகபத் தியமென் றிவற்றின் மயமாகு மிக்க வெழிலார் புண்டரத்துள் விளங்கு முதற்புண் டரமாதோ. |
33 |
2106 | வழங்கு முகர மெசுர்வேதம் வளர்சாத் துவிக மகமென்ன முழங்கி யிடுமான் மாவிச்சா சத்தி முடிவின் மகேசர்மிகத் தழங்கி யெழுந்தக் கிணச்செந்தீ சாற்று மிவற்றின் மயமாகும் பழங்க ணறுத்து வான்கதியிற் படுக்கு மிரண்டாம் புண்டரமே. |
34 |
2107 | போற்று மகர முயர்சாமம் புகறா மதமாங் குணமலநோய் நீற்றும் பரமான் மாநன்மை நிகழ்த்து ஞான சத்திதகத் தேற்றுஞ் சிவனா கவநீயஞ் செப்பு மிவற்றின் மயமாகுங் கீற்று மதிவா ணுதற்பாவாய் கிளந்த மூன்றாம் புண்டரமே. |
35 |
2108 | மறையின் வழிச்செந் தீவேட்கு மறைஞர் முதலோர் மூவர்க்கும் அறைவை திகவெண் பொடியாகு மசைவ மெனமுன் மொழிந்தபடி பறையு மெழிலா லயத்துமடைப் பள்ளிப் பொடியு மடியர்மடத் துறையு மடைப்பள் ளிப்பொடியு முயர்கான் வெந்த பொடியுமாம். |
36 |
2109 | தீக்கை புரியாச் சூத்திரர்க்குச் சிறப்ப தாகு மடைப்பள்ளி ஆக்கும் பொடிகான் வெந்தபொடி யடுப்ப தாகுஞ் சாங்கரர்க்குத் தீக்குச் சுரர்க்குக் குரவர்க்குத் திருமுன் வழியிற் சுத்தியில்லாப் பார்க்கு ளிழிஞ ரெதிரிடத்தும் பாவாய் தரித்த லிழுக்காகும். |
37 |
2110 | ஒருகை யேற்ற பொடிவிதியி னுஞற்றா நீறு விலைப்பூதி அருள்செய் தீக்கை யிலர்போதந் தளித்த பூதி யிவையாகா தரையின் விழுத்த லங்காத்த றலைகம் பித்தல் கவிழ்தன்முதல் வரைசெய் பலவு மொழித்திடுவர் மாதே பூதி தரித்திடுங்கால். |
38 |
2111 | பரவு மறையோ ருத்தூளம் படிவ முழுது நாபியின்மேல் அரசர் வணிகர் பட்டம்போ லணிவர் சதுர்த்த ரெழுத்தாக விரல்க ளொருமூன் றுறவணிவர் விபூதி யணியா தறமாதி புரவு வலர்நல் வினையொன்றும் போற்றார் பனுவல் போற்றுவார். |
39 |
2112 | ஏத மகற்றுந் திருநீற்றி னியற்கை யறிந்து தரியாதார் வேத நவின்ற நெறிநின்றும் விலகும் பதித ராய்விடுவர் பூதி யணியார் முகம்புறங்கா டதனை நோக்கிற் புரைதீர்ந்தோர் தீது கழிய வொருநூறு திகழஞ் செழுத்தைக் கணித்திடுவர். |
40 |
2113 | நீறு தரியார் தவமாதி நிரம்பச் செயினு முவர்வித்திற் கூறு பயனின் றாம்பூதி கொண்டோர் வாளாங் கிருந்திடினும் வீறு தவமா திகணி ரம்ப விளைத்தோ ராவர் தென்புலத்தார்க் கேறு தினத்தி னீறிடுவார்க் கியற்றிற் பூசைப் பயனனந்தம். |
41 |
2114 | நீட லுறுந்தீ வினையனைத்து நீற்ரி விடலா னீறென்றும் வீடில் வெறுக்கை தருதலினால் விபூதி யென்றும் முயிர்தோறுங் கூடு மலமா சினைக்கழுவுங் குணத்தாற் சார மென்றுமட மோட வளர்சோ தியைத் தரலாற் பசித மென்று முரைப்பரால். |
42 |
2115 | அலகை பூதம் வேதாள மடர்மந் திரத்தா னலைப்புறுத்தும் பலதெய் வதங்க ளிடரச்சம் பழிபா வங்கண் மடமென்னுங் கலதி முழுது மெளிதகற்றிக் காப்புக் கொளலாற் காப்புமா நிலவைப் பிடத்தி னதன்பெருமை நிகழ்த்த லரிதா மடமாதே. |
43 |
2116 | வேறு முப்பு ரத்தவர் முருக்கலின் முரிந்திரிந் தமரர் செப்பு தற்கரி தாகிய தவஞ்செயச் சென்றங் கப்ப தத்திமை யாதுநா நோக்கின மாக மைப்பெ ருங்கணாய் முக்கணும் வார்புன றுளித்த. |
44 |
2117 | வலக்க ணீரிடைப் பன்னிரு மரமிடப் பாற்கட் சலத்தி னேழிதரு மரந்தழல் விழியினீர் தோய்ந்த நிலத்தி னையிரு மரமுமா யினநிகழ்த் தியவிக் குலத்துக் கியாவருங் கூறுபே ருருத்திர வக்கம். |
45 |
2118 | வெண்மை யுந்திகழ் பொன்மையும் வெண்மைபொன் மையுஞ்சேர் வண்மை யுங்கரு மையுமென வகுத்தநா னிறத்து முண்மை யக்கமா மணிகளவ் வுரைத்தன முறையே தண்மை யந்தணர் முதலிய நால்வர்க்குஞ் சாரும். 6 |
46 |
2119 | ஒருமு கஞ்சிவன் வடிவுவே தியர்கொலை யொழிக்கும் இருமு கஞ்சிவன் சக்தியென் றிருவர்தம் வடிவாம் பெருக ரும்பசுக் கொலையினைப் பெயர்க்குமும் முகஞ்சீர் மருவு மங்கியின் வடிவுமா தர்கள்கொலை மாற்றும். |
47 |
2120 | நான்மு கத்தது நான்முக னரர்கொலை தொலைக்குந் தேன்மு கத்தலர் பனிமலர்க் கூந்தலாய் திகழை வான்மு கத்தது காலவங் கிப்பெயர் வரதன் கான்மு கத்ததீங் குணவினாங் கரிசெலாங் கழிக்கும். |
48 |
2121 | மூன்றி ரட்டிய முகமறு முகனுரு வலக்கை ஏன்ற ணிந்திடின் மறைஞரை யிறுத்திட வெதிரே தோன்று ருத்தனைத் துமிக்குமேழ் முகஞ்சுடர் சேடன் ஆன்ற பல்பசுக் கொலைதப நியக்கள வகற்றும். |
49 |
2122 | எட்டு மாமுக மேரம்ப னுருக்குரு தாரந் தொட்ட பாதகந் தொகுபல தானங்க ளேற்று முட்டு பாதகம் பிறர்தமோ தனமுகந் துண்டு விட்ட பாதக மனைத்தையுங் கதுமென வீழ்த்தும். |
50 |
2123 | ஒன்ப தாகிய முகம்வயி ரவனுருக் கணாதி வன்ப தாகிய வாளராத் தீங்குகண் மாற்றித் துன்ப தாகிய தொடரறு வெறுக்கைக டுறுத்திட் டின்ப தாகிய முத்தியு மெண்மையி னளிக்கும். |
51 |
2124 | ஒருப தாகிய முகம்புவி யுண்டவ னுருவ மருவு நாளொடு கோள்பல மண்ணைபூ தங்கள் பிரம ராக்கத முதலிய பேதுறப் புரியும் விரவு தீங்கெலாம் வெயில்படு பனியென விளிக்கும். |
52 |
2125 | ஐந்த னோடிரு மூன்றனைத் தலைப்பெயா னனந்தான் பந்த நீங்குருத் திரர்பதி னொருவர்தம் படிவ முந்து மாயிர மேதமொண் பசுக்களோ ரிலக்க முந்து வானிதி யுடனளித் திடும்பயன் முகிழ்க்கும். |
53 |
2126 | ஆறி ரட்டிய திருமுக மாறிரு வெய்யோர் வீறு மெய்யுறு வாம்பரி மேதத்தின் பயனும் ஏறு மிக்கொளி மேருதா னத்தெழு பயனும் ஊறு மஞ்சனந் தீட்டிய வோடரிக்கண்ணாய். |
54 |
2127 | கந்தன் மெய்பதின் மூன்றுவாண் முகங்கலந் ததுதான் சிந்தை வேட்டவுஞ் செம்பொனும் வீரமுஞ் செறிக்குந் தந்தை தாய்மனை தனயரைத் துணைவரைக் கருவை அந்த மெய்துற வடர்த்தவெங் கொலைகளு மனுக்கும். |
55 |
2128 | ஏழி ரட்டிய முகமெம துருவுநின் னுருவுந் தாழி ருங்குழ லாய்சுரர் தாபதர் முதலோர் சூழ நல்வசி யந்தனித் துகளறத் துறுத்து வாழி நம்பெருஞ் சிவபுர வரைப்பிடை யுறுத்தும். |
56 |
2129 | அன்ன வேழிரு முகமரி தாமது கிடைத்தான் மன்ன வார்களத் தணிவது மந்திர முழுதும் நன்னர் வாய்மையிற் பலிக்குநா ளிலநெளி படையில் துன்னு மேவலர் புறந்தரும் விறன்மிகத் தோன்றும். |
57 |
2130 | சத்தி செய்யினு மந்திரங் கணிப்பினுந் தவங்கள் எந்த நல்வினை யியற்றினுங் கண்மணி யணிந்தோர்க் கந்த நல்வினைப் பயன்களொன் றனந்தமாய் விளையும் வந்தி டும்பய னில்லையம் மணிதரி யார்க்கே. 8 |
58 |
2131 | இழிஞ ராகமற் றவர்களேந் திழைநலா ராகக் கழிக ளூன்முதல் கழித்துணு மாந்தர்க ளாக மொழியும் வான்மணி முடிமிசை தரித்தன ராயின் அழியு நீள்வினை யந்தியி னமதுருப் பெறுவார். |
59 |
2132 | வேறு சிகையினொரு மணிமுடியி னாறாறு செழுங்களமெண் ணான்கு மர்பில் தகைபெறவைம் பதுகரத்தி னீரெட்டு மணிபந்தந் தனிலீ ராறு முகமுகமுஞ் செறியவிடை முடிந்துமே ருவுமமைத்து முறையிற் கொள்வார் புகலமனு வடநூற்றெட் டதிற்பாதி பாதமுமாம் பூங்கொம் பன்னாய். |
60 |
2133 | வடநடத்தி லனாமிகையின் மத்திமயிற் றர்ச்சனியின் மலிநோய் பாறும் படர்சினத்தெவ் வர்களிறப்பர் பரபோக வீடெய்தும் பசும்பொற் பாவாய் உடல்வெறுத்தார் மேன்மறிப்பர் கீழ்மறிப்பர் நெடும்போக முறுதல் வேட்டோர் கடவுண்மணி யொலியாமற் பிறர்விழிக்குப் படாமன்மனுக் கணிப்ப தாகும். |
61 |
2134 | மேருவினைத் தொடுத்துமனுக் கணித்திடுவர் வடமறிந்து விரன்மேன் மீட்டு மேருவுறுங் காலதனைக் கடவாது வடந்திருப்பல் விதியா நன்மை கூருமணி வடந்தவறி நிலம்வீழ்தன் முதலான குற்றங்கட்குச் சேருநம துருவினுக்குச் செயுங்கழுவா யதிற்பாதி செய்வர் தக்கோர். |
62 |
2135 | விரலிறைபுத் திரசீவஞ் சங்குமணி படிகமணி விளங்கு முத்து மரைமணிபொன் மணிகுசையின் வண்முடிகண் மணியென்ன வகுத்த வெல்லாம் பரவுமனுக் கணிப்பதற்கா முறையேயொன் றனுக்கொன்று பயன்மிக் காகுங் குரவமலி நறுங்குழலா யாதலினாற் கண்மணியே கொள்வர் சான்றோர். |
63 |
2136 | மனையினுறும் பயன்பசுக்கோட் டத்தொருப தாநதியின் மருங்கு நூறாந் தனைநிகரா லயத்துளொரா யிரம்வனத்தி லிலக்கம்வரை தன்னிற் கோடி நனையொழுகு மலர்த்தொடையாய் நமதுதிரு முன்னிடத்தி னவில வொண்ணா தனையமணி வடமெடுத்து முறையுளிமந் திரங்கணிப்போர்க் ககிலத் தம்மா. |
64 |
2137 | முத்திநெறிக் கையைந்து மணிமூவொன் பான்மணிசோ பனத்துக் கின்ப மெத்துநிதிக் கொருமுப்பான் மணியவிசா ரந்தனக்கு விளம்பு மூவைந் தித்திறத்தின் வெவ்வேறு வடமியற்று வாரறிந்தோ ரிலங்கு வேற்கட் பைத்தமணி யரவல்குற் பைந்தொடிக்கைத் தரளநகைப் பவள வாயாய். |
65 |
2138 | கண்மணியைக் கண்டவர்க்குப் பயனிலக்கந் தொட்டவர்க்குக் கருதிற் கோடி உண்மையின்மெய் யணிந்தவருக்குக் கொராயிரமாங் கோடியுறு செபத்த னந்தம் எண்மையினெய் துறும்பின்ன ரெமதுருவம் பெறுவர்பகைக் கென்றுந் தாழார் வண்மையுறு மதன்பெருமை யளப்பரிதாங் குழைகிழிக்கு மழைக்கண் மாதே. |
66 |
2139 | வேறு திரைதவழ் பாற்கட றேவர் யாவர்ம் நுரையெழக் கடைந்தநா ணுவன்ற வில்வமும் விரைகமழ் துளவமும் விளங்கத் தோன்றலின் உரைசெயு மவைநமக் குவப்புச் செய்வன. |
67 |
2140 | துளவினிற் சிறந்தது தூய கூவிளந் தளிரற முதிர்ந்தது சருக தாயினும் வளரிலை யிரண்டொன்று மரீஇய தாயினும் விளரியங் கிளவியாய் விலக்கு றாததே. |
68 |
2141 | வையகத் துயிர்க்கெலாம் வளமை நல்குறுஞ் செய்யவட் கவ்வதி காரஞ் சேர்த்தலின் நெய்யணி கருங்குழ னிமலை யன்னதிற் பொய்யறு பூமகள் பொருந்தி வாழுமே. |
69 |
2142 | நோயற வேண்டினு நோன்மை வேண்டினு மாயிரும் புவியடி வணங்க வேண்டினுந் தூயவிண் வேண்டினுந் துறுத்து மும்மலம் ஓயநன் முத்தியை யுதவும் வில்வமே. |
70 |
2143 | எட்டனைத் தலைப்பெயீ ரைம்ப தோதியும் ஒட்டிய வாயிரம் பெயர்க ளோதியும் பெட்டெம தடிமலர்ப் பெய்யு நற்பயன் மட்டவிழ் தொங்கலாய் வகுக்கொ ணாததே. |
71 |
2144 | வேறு எவ்வளவு நமைப்பூசை யியற்றிடினு மிருநிலத்தின் அவ்வளவு முபசார மாமதற்கோ ரளவில்லை கொவ்வைநறுங் கனியிதழாய் கூறியவவ் வுபசாரஞ் செவ்விபெற வடியார்கள் செயுமுறையிற் சிறிதுரைப்பாம். |
72 |
2145 | காலையுறுங் கடன்முடித்துக் கமழ்மலரா திகல்கொணர்ந்து சீலமுறப் புனறோய்ந்து திகழ்சந்தி யினிதியற்றிக் கோலமுறு மிடஞ்சுத்தி கொலச்செய்து பரிதியினுஞ் சாலவெமைப் பேரன்பு தழைதரப்பூ சனைசெய்து |
73 |
2146 | ஐவகைச்சுத் தியுமுறையா லமைத்திலிங்கத் தாசனமு மொய்வளர்மூர்த் தியுமூர்த்தி மானாமெம் மையுநினைந்து கைவளர்பூ வானிறைத்துக் கமழ்ந்தவருக் கியநல்கி உய்வகையிங் கிருவென்ன வுலநெகிழ வெமைவேண்டி. |
74 |
2147 | மஞ்சனசா லையினேக மணிவளர்பா துகையாக அஞ்சிறைவண் டினமூசா வலரிருகா லருச்சித்துத் துஞ்சுவிரைப் புகையொளியுஞ் சுழற்றிநறும் பாத்தியமுந் தஞ்சமறு மாசமன வருக்கியமுந் தகக்கொடுத்து. |
75 |
2148 | வேறு வரைத்துரை யெண்ணெய் நெல்லி மாமஞ்சள் பஞ்ச கவ்யம் விரைத்தபா றயிர்நெய் செந்தேன் வேழமைந் தமிழ்தம் வேறே உரைத்தவைந் தமிர்தம் வாழை யாதியொண் கனிநீர் தாழை அரைத்திடும் வில மார மருக்கிய மனைத்து மாட்டி. |
76 |
2149 | புலர்த்திமெய் யீர நாண்கோ வணம்பொழி கதிர்ப்பட் டார நலத்தக வுரிஞு தேய்வை நகைமணிக் கலன்கள் வார மலர்த்தொடை பலவுஞ் சாத்தி வளரறு சுவைநா லுண்டி முலைத்தலைப் பூணா யூட்டி முதிர்சுவை நறுநீர் நல்கி. |
77 |
2150 | பாத்திய மாதி யீந்து பகர்பஞ்ச வாச முய்த்துத் தூத்தகு வதன நீவச் சுடரிழைத் தூசு நீட்டி வாய்த்தொளிர் தீப பேத மனைத்தும்வட் டித்து நீறு சாத்திமுன் னாடி காட்டித் தண்குடை கவித்து மேலால். |
78 |
2151 | வார்தரு கவரிகொண்டு மருங்குற வலைத்து மெல்ல ஏர்தரு கால்செய் வட்டத் தினிதுற வீசி மேலாஞ் சீர்தரு மெழுத்தைந் தெண்ணிச் செறிபொரு ளுடலோ டாவி கார்தரு குழலாய் நந்தங் கையிடைக் கொடுத்துப் போற்றல். |
79 |
2152 | மொழிந்தவீ துபசா ரத்தின் முறையிது வன்றி யானெய் பொழிந்தொளிர் தீப மேற்றல் புகழுமைம் புகையு மார்த்தல் அழிந்திடு பணியு மற்று மவிர்தரப் புதுக்கல் பாவம் ஒழிந்திடும் விழாவெ டுத்த லாதியு முபசா ரந்தான். |
80 |
2153 | இத்தகு முபசா ரத்தை யியற்றினோர்க் கிடர்க ளில்லை உத்தம ரவர்கட் கெய்தாப் பொருள்களு முலகத் தில்லை சுத்தவொண் புவனத் தெய்திச் சுகப்பெருங் கடலிற் றாழ்ந்து முத்தியு மெளிதிற் சேர்வர் முகிழ்ந்தபூண் முலைப்பொற் பாவாய். |
81 |
2154 | ஈண்டுநா முரைத்த வெல்லா மெழில்வளர் தீக்கை யில்லார் வேண்டினு மவர்கட் கோதார் விழுத்தகு நெறியி னின்றார் காண்டியா லென்றார் சூலக் கையினர் கெளரி வல்லே நீண்டமெய் மகிழ்ச்சி துள்ள நிமலரை வணங்கி வாழ்ந்தாள் |
82 |
2155 | என்றருள் கொழிக்கும் பட்டி யிறைவனா ருமையாட் கன்று நன்றுற மொழிந்த வேணி யாதியி னன்மை கூறித் துன்றிய வேணி மோலித் துறவர்க்கு நீற்று மேட்டின் ஒன்றுறு நீற்றின் மேன்மை யுரைக்குவ னுயர்ந்த சூதன். |
83 |
2156 | செந்தமிழ் விளங்கிய தெய்வ நாட்டிடைச் சந்தன மால்வரைத் தங்கு மாதவன் சுந்தரக் கமண்டலஞ் சுரக்குந் தாமிர உந்தியின் மருங்கொரு நகர முண்டரோ. |
1 |
2157 | தேக்கிய மதுப்பொழில் செறிக சேந்திர மோக்கமென் றியாவரு மொழியு மந்நகர் காக்குநற் பாண்டியன் கருத லார்தமைத் தாக்கிய தான்மிக னென்னு நாமத்தான். |
2 |
2158 | கருமமுந் தானமுங் கரிசு தீர்சிவ தருமமும் புரிவதிற் றாண்மிக் கெய்தினான் பொருமுறு பாவத்திற் பொருள்கொ டாமையின் ஒருவிய கீர்த்தியி னுள்ளம் வைத்திலான். |
3 |
2159 | அத்தகு தான்மிகற் கமைந்த கற்பினாள் கொத்தொளி விரிதருங் கொடிமின் போறலால் வித்துரு லதையென விளம்பு நாமத்தாண் முத்தமிழ்க் கல்வியு முற்றக் கற்றுளாள். |
4 |
2160 | அழகினிற் கல்வியி னாரு மொப்பிலா மழலையங் கிளவியாண் மதுரச் செந்தமிழ் பழகிய மாதர்கள் பலர்தற் சூழ்தரக் கழகமுள் ளவர்கள்கை விதிர்ப்ப வைகுவாள். |
5 |
2161 | புறநகர்க் குழாத்தொடும் போந்து மென்மலர் நறவுகு பொழில்விளை யாட்டி னண்ணியும் வெறிகமழ் வருபுனல் விழைவுற் றாடியு முறுமகிழ் பண்ணையு முஞற்றிச் செல்லுவாள். |
6 |
2162 | இன்னண மிவள்பயின் றிருக்கு நாள்வயிற் கொன்னவில் கொங்கண தேயத் துள்ளவன் மன்னிய நான்மறை முழுதும் வல்லவன் முன்னுநல் வினைபுரிந் தொழுகொ ரந்தணன். |
7 |
2163 | வேறு திகழுமெவ் வளனும் படைத்துயர் மகாராட் டிரமெனுந் தேயநன் றாளுந் தகுபிர தாப மகுடனென் றரையன் றழைத்தெழு பெரும்புக ழுடையான் நகுகதிர் மணிப்பூந் திரைதவழ் கங்கை நதிக்கரை யிடைத்துலா பார மகனிலம் வியப்பத் தூங்குவான் சென்றா னதுதெரிந் தாவயி னடுத்தான். |
8 |
2164 | மறைநெறி மொழிகண் மழையெனச் சொரிந்து மாசறச் சோதனை கொடுத்தான் குறைவறு தவத்தா னிவனெனக் கருதிக் கோமகன் றூங்கிய துலாத்தின் நிறைதரு பொருள்க ளனைத்தையு மளிப்ப நிகழ்ந்தபே ருவகையி னேற்றுப் பறைதரு தனது பதிவயிற் புகுதப் படருவா னின்னது நினைந்தான். |
9 |
2165 | உயர்முதல் வருண முதித்ததும் வேத மொழுக்கொடு பயின்றுதெள் ளியதுஞ் செயிருறு வினையிற் றீர்ந்துநற் கதியிற் சேர்வதற் கேதுவாக் காது மயர்தரு பாவம் தளர்ந்தரு நரகின் மறிதரத் தானமிக் கேற்றிங் கயர்வதற் கேது வாக்கினேன் கற்ற வறிவும்வந் துதவிய தின்றே. 0 |
10 |
2166 | புரிந்ததீ வினையைப் போக்குதற் கான புரையறு வழிக்கொள லன்றி விரிந்திடுந் துயர முழப்பதிற் பயனென் மேவுமிப் பொருளெலா மறத்திற் சொரிந்துவார்ந் தொழுகுந் தாமிர பருணித் தூயநீ ரதனிடை வினைகள் இரிந்தற படிது மெனமதித் தூர்புக் கில்லவ லொடும்வெளிப் பட்டான். |
11 |
2167 | நெடுபடு கானும் வரைகளு முரம்பு நிரம்பிய பழுவமும் பவளக் கொடிவளர் புணரி மணிகொணர்ந் தெறியுங் குளிர்தகு கானலுங் கடந்து முடிகுலைத் தள்ளன் முலைத்தலைப் பொறிப்ப முறைமுறை கடைசியர் பதிக்குங் கடிமலர்க் கழனிக் கன்னிநா டெய்திக் கசேந்திர மோக்கஞ்சென் றடுத்தான். |
12 |
2168 | ஆங்கொரு மருங்கு தாமிர பருணி யணிமணித் துறையின்வா னளவும் ஓங்கிய வரசி னீழலி னசைந்திட் டுயங்கிய செல்லல்கண் முழுது நீங்குறு பொழுதே யிறுதிவந் தடுப்ப நீங்கின னுடலினை விடுத்துப் பாங்குறு மந்தப் போதியே யிடமாய்ப் பயின்றன னரக்கனாய் மாதோ. |
13 |
2169 | வேறு கணவ னின்னுயிர் விடுத்தலுங் கையற்று மனைவி உணர்வ ழிந்தழு திரங்கிப்பி னொண்பொரு ணம்மைத் தணவு றும்பிறர் வெளவுவ ரெனவது தன்னைப் பிணர ரைச்செழும் போதியின் பொந்தினுட் பெய்தாள். |
14 |
2170 | பொருண்ம றைத்தபூங் கொடியனாள் புல்லிய கொழுநன் உருவை வெந்தழன் மடுத்தன ளொருதின முழுது மருவி கண்கொள வழுதழு திரங்கிமா ழாந்திட் டிருநி லம்விழுந் திறந்தனள் வழிவரு நாளால். 5 |
15 |
2171 | கனகங் காத்துய ரரசினிற் கடுந்துய ருழந்து பனவ னாகிய வரக்கனின் றனன்படர் தவத்தீர் வினையி னீங்குற வூக்கினும் விழுத்தவ மில்லார்க் கனைய தாகுமோ வாகுறா தரும்பொரு ளிருந்தும். |
16 |
2172 | பெரிது மோங்கிய வத்தகு பிப்பில நிழலில் தெரிய வோதிய வித்துரு லதையெனுந் தெரிவை விரியும் வார்புனல் விழுநதி தோய்தர விழைவுற் றுரிய வாயமுந் தானுமுற் றவணடுத் திருந்தாள். |
17 |
2173 | இருக்கு மெல்லையின் மரஞ்சிலை யெனுமிவை தமையும் உருக்கு மின்னிசை யாழ்தழீஇ யுளர்ந்துபா டினளால் தருக்கின் வைகிய தன்மையுங் கவினுமா டகங்கள் திருக்கி யாழெழூஉந் திறத்தையு நோக்கின னரக்கன். |
18 |
2174 | மாது மற்றிவள் போல்பவர் வையகத் தில்லை கோதை மல்கிய குழலியைக் குறுகுது மென்னாப் போதி யின்குளிர் கொம்பினைப் பொருக்கென விடுத்துச் சோதி மல்குபெண் கொம்பினைத் துன்னின னரக்கன். |
19 |
2175 | பாடு மாடகத் திவவியாழ் பாணியின் வழுக்கி மாடு வீழ்தர வளரிளங் கொடிமறிந் தாங்கு நீடு வார்குழல் வித்துரு லதைவிய னிலமேற் பீடு சோர்தர விழுந்தனள் பெயர்ந்தன ளுணர்வு. |
20 |
2176 | மருண்டு நோக்கினள் பிதற்றினள் மருங்குளார் வினவத் தெருண்டு மாற்றமொன் ரியம்பிலள் திகழ்நிறங் கருகி வெருண்டு நோக்குவார் விதுப்புற வேறுபட் டனள்வார் சுருண்ட பூங்குழ லலையமெய் துளங்கினாள் பெரிதும். |
21 |
2177 | புடையு ளார்பொருக் கெனச்சிவி கையிற்கொடு போந்தார் அடைய லார்க்குரு மேறன தான்மிக வரையன் நடையின் மாமயில் வென்றவிந் நங்கைதான் பிணியை உடைய ளாவளோ வெனப்பெருந் துயருளத் துழந்தான். |
22 |
2178 | பிரம ராக்கதன் பிடித்தன னெனச்சிலர் பேச விரவி டாகினை மோகினி பூதவே தாளம் பரவு பேய்முத லானவற் றியல்பெலாம் பயின்ற கரவி லார்தமை யழைத்தனன் காவலன் கடுப்பின். |
23 |
2179 | வல்ல வாரெலா மந்திரத் தலைவர்கண் முயன்று மல்ல னீங்கில ளதுகண்டு தான்மிக னிந்த வில்லின் மாதுபோல் வேறுமோ ரில்லெமக் குறுங்கொல் செல்ல றீர்ந்தில தென்செய்கே னெனத்தெரு மந்தான். |
24 |
2180 | அடிய ரின்னலை யரக்குதற் கெளிவருங் கருணை குடிகொ ணாரதன் குறைவற நல்வினை வளர்க்கு முடிகொள் வேந்தனுக் கிரங்கிமுன் னடுத்தனன் வேந்தன் படியின் மாதவன் பதமலர் பணிந்தனன் பண்பால். |
25 |
2181 | அம்மை நல்வினை சாலவு மாற்றினை யன்றி இம்மை நல்வினை யெதிரற வீட்டினை யினையை மம்ம ரின்னலின் மறுகுவ தடாதென மணிவேற் செம்மல் வந்தன மெனமுனி செயிர்தபக் கூறும். |
26 |
2182 | மறைகள் பல்கலை முழுவதுந் தெள்ளிய மறைஞன் அறியு மந்திர முழுவதுங் கணித்துய ரறிஞன் நிறையு மொண்பொரு ணிகழ்த்திய தானத்தி னேற்றுப் பொறையி ருந்தனு நீத்தவன் புல்லிய வரக்கன். |
27 |
2183 | ஆத லாலவன் மந்திர மாதிகட் ககலான் பாதி மாதொடு மிரசத மன்றினிற் பரதஞ் சோதி நாயகன் சுரர்தொழக் குயிற்றுபே ரூரின் வேதன் யாகஞ்செய் விழுத்தகு குண்டமொன் றுளதால். |
28 |
2184 | அண்ண லார்திரு வருளினா னீறதில் வளரு நண்ணு நீற்றினைத் தரித்தவர் வினையெலா நசிக்கும் உண்மை யீதுநீ யொண்டொடி மனைவியைப் போதந் தெண்மை தீர்நதிக் காஞ்சியி னிரும்புன லழுத்தி. |
29 |
2185 | பிரம தீர்த்தமும் பெய்வளை யுருவினிற் பெய்து வரநி லாவுமந் நீற்றினை வடிவெலாந் திமிர்தி விரவு தீவினை யரக்கன்விட் டகலுமென் றுரைத்துச் சுரர்கள் போற்றுறு நாரதத் தொன்முனி மறைந்தான். |
30 |
2186 | உரைத்த மாதவ னொன்கழ லுவந்தெதிர் வணங்கி விரைத்த பூந்தொடை வேம்பினை யாக்கிய வேந்தன் அரைத்த சாந்தணி யரும்பிளங் கொங்கைமா தினைக்கொண் டிரைத்து ராவிய கடற்படை யொடுமினி தெழுந்தான். |
31 |
2187 | பழன மல்கிய கன்னிநா டெனும்பதி தணந்து மழலை வண்டின முல்லையின் மதுவுணுங் கானுங் குழவி வெண்மதி தவழ்தரு குன்றமுங் கடந்து விழவு மல்கிய வாதியம் புரத்தைமே வினனால். |
32 |
2188 | அந்த ணர்க்கரும் பொருள்பல வார்த்தினன் காஞ்சி உந்தி யம்புன லுறுமுறை யுவகையிற் படிந்தான் சுந்த ரந்தவிர்ந் திருந்ததன் றுணைவியைத் தோய்த்தான் தந்து குண்டிகைத் தீர்த்தமு நங்கைக்காட் டினனால். |
33 |
2189 | நீற்று மேட்டினை யடுத்தொளிர் நீற்றினை யள்ளிப் போற்று காஞ்சியம் புனல்கமண் டலப்புனல் பொழிந்திட் டாற்றன் மன்னவ னங்கையிற் குழைத்துமென் றேறல் ஊற்று பூங்குழ லாளுடன் முழுதும்பூ சினனால். |
34 |
2190 | நீறு பூசலு நேரிழை மாதுட னின்றும் பாறி யாங்கொரு பாறையிற் படீரென விழுந்து கீறி நீண்முடி கெழுமிய பிரமராக் கதன்றான் கூறு தீவினை யுடலினைக் கொம்மென விடுத்தான். |
35 |
2191 | விடுத்த வவ்வயின் விண்ணவ னாயினன் விமான மடுத்த தன்னதி னேறின னரசனை நோக்கித் தொடுத்த தீவினை யேனையுந் தூயனாக் கினையென் றெடுத்து நன்னய மியம்பின னெய்தினன் றுறக்கம். |
36 |
2192 | மம்மர் நீங்கிமுன் போலுணர் வெய்தினண் மாது செம்மன் மன்னவ னோக்கினன் சிந்தையிற் களித்தான் வம்மென் றன்னவ டனைக்கொடு மறுவலுங் காஞ்சி விம்மி ரும்புனல் படிவித்தான் விதியுளி மாதோ. |
37 |
2193 | பத்துக் கோடியொண் பொருளிலக் கம்பக நூற்றுப் பத்துக் காமரு பரிகர் நூறுபல் கலனும் பத்திக் கேயெளி வரும்பட்டி நாதர்க்குக் கொடுத்துப் பத்தர்க் காம்பொருள் பண்பொடு பலவும்வீ சினனால். |
38 |
21994 | வணங்கி நாதரை விடைகொண்டு வல்வினை தீர்ந்த அணங்கி னோடகன் கழனிசூழ் கன்னிநா டடுத்து நிணங்கொள் வேலவ னெடிதுவாழ்ந் திருந்தன னென்ப பிணங்கு றாதநூன் முறையுளி யறமெலாம் பெருக்கி |
39 |
2195 | பரவு நீற்றுமேட் டொளிர்பொடி பரித்தவர் தமக்குப் பிரம ராக்கத மேயன்று பெயர்வது மலடும் விரவு நோயும்வெவ் விடருந்தீ வினையுமே வுவன வரநி லாவுபல் பொருள்களும் வானமும் வீடும். |
40 |
2196 | துறந்த மாதவத் தீர்திரு மேட்டினிற் சுடருஞ் சிறந்த பூதியின் மேன்மையைச் செப்பின மிப்பால் அறந்த வாதவ ராற்றுறும் விசேடபூ சனையும் உறந்து கேண்மினென் றுரைத்திடுஞ் சூதமா தவனே. |
41 |
2197 | சித்திரைத் திங்களிற் சேர்ந்த சித்திரை ஒத்தபூ ரணையினூ ரரவத் தொங்கலின் அத்தனுக் கெண்ணெயா திகண்மிக் காட்டிநற் பத்தியி னணியெலாம் பரிந்த ணிந்தரோ. |
1 |
2198 | பல்வகை யன்னமும் பல்சிற் றுண்டியும் பல்வகைக் கனிகளும் பண்பி னூட்டுவோர்க் கல்வளர் வினையெலா மனுங்கு மேதக நல்வினைப் பயனெலா நணுகு மென்பவே. |
2 |
2199 | வேறு இடப மதியிற் பூரணை யியைந்த விசாகத் திருநாளிற் கடிமிக் குயிர்க்கு முப்பழமுங் கனிவி னாட்டி யாவின்பால் உடன்வெந் தெடுத்த நறுமாங்கா யூட்டி யிறைவன் பதந்தொழுவோர் அடல்வல் வினைகள் புறங்கொடுப்ப வமலனுலகத் தினிதமர்வார். |
3 |
2200 | நறுநீர் சுற்றி னுறத்தேக்கி நாற்கான் மணிப்பொன் மண்டபத்தின் உறுகா தலினாற் பெருவளங்க லுறுத்தி யிறைவன் றனையிருத்திப் பெறுநீர் மையினால் வசந்தவிழாப் பேசு மிடப மதியெடுத்தோர்க் கிறுநோய் பலவும் பேரின்ப மெய்தும் போக மிடையடுத்தே. |
4 |
2201 | மிதுன மதியிற் பூரணையின் விரவுங் கேட்டைத் திருநாளிற் புதிய மணிமண் டபம்வட்ட மாகப் பொலிவித் ததின்முக்கட் பதியை யிருவிப் பலபழமும் பாங்கி னாட்டி நிவேதிப்போர் கதிர்செய் மெளலிக் கடவுளர்கள் கழல்கை கூப்புங் கதியடைவார். |
5 |
2202 | உரைத்த வானித் திங்களினுத் திரத்தி னுமையாள் கணவனுக்கு விரைத்த தயில முதற்பலவு மிதப்ப வாட்டி யலங்கரித்து நிரைத்த பலநிவே தனமு நிவேதித் தினிது போற்றுவோர் திரைத்தண் கடல்வை யகம்போற்றுந் தேவ தேவ னெனத்திகழ்வார். |
6 |
2203 | ஆடி மதியிற் பூரத்தி லகில முயிர்த்த பார்ப்பதிதன் தோடு விரிதா மரைப்பதங்க டொழுது வணங்கிப் பூசிப்போர் பீடு விரியும் விழுச்செல்வம் பெருக வாழ்ந்து கடைநாளிற் சேடு விரியு மவளூலகிற் சென்று போகந் திளைப்பாரால். |
7 |
2204 | சிங்க மதியின் மூலத்திற் சிந்தை யினிது மகிழ்கூர மங்கை யிடப்பா லமைத்தபிரான் மலர்த்தாட் கமலம் பூசித்துப் பொங்கு சுவையி னறும்பிட்டுப் பொற்ப வூட்டுந் தவத்தினோர் நுங்க வினைகள் பெரும்போக நுகர்வ ருலகம் புறக்கணித்தே, |
8 |
2205 | கன்னி மதியின் வரையுயிர்த்த கன்னி மகிழப் பேரன்பான் மன்னு நவராத் திரிபூசை மரபி னியற்று முறைமையோர் நன்ன ருலகம் பணிகேட்ப நவைதீர் செல்வத் திடைமூழ்கி முன்னுங் கதியி னினிதுறீஇ முடிவி லின்ப நுகரவாரால். |
9 |
2206 | துலாவண் மதியிற் பூரணையிற் றூய வன்னங் கீற்றிளவெண் நிலாவை முடித்த பொலஞ்சடில நிமலற் காட்டும் பெருந்தவத்தோர் கலாவு மன்ன மொரோவொன்று தனக்குக் கற்ப மொரோவொன்று குலாவு சிவலோ கத்தெய்திக் கோதி லின்ப நுகர்வாரால். |
10 |
2207 | வருதேண் மதியிற் காத்திகைநாண் மல்கும் விழைவிற் பூசித்துக் கருதார் புரங்க ணகைத் தெரித்த கடவுண் மகிழ் விளக்கிடுவோர் குருவார்ந் தினிய நறுநாற்றங் கொழிக்குஞ் சோதி யுருவினராய் ஒருவா திமையோர் பணிகேட்ப வுயர்ந்த கதியி னுவப்புறுவார். |
11 |
2208 | சிலைமா மதியின் வைகறையிற் றினமும் பூசை யியற்றுவோர் தொலையா மலமுந் திமியவருட் டுறையிற் குளிப்ப ரம்மதியின் நிலையா திரையி னெய்யாட்டி நிகரில் கலவை யினிதணிவோர் அலையா தருளிற் கலந்தின்ப வாழி படிவ ரக்கணமே. |
12 |
2209 | மகர மதியிற் பரியூர்ந்து வரதன் வரக்கண் டிறைஞ்சுவோர் புகரில் பரியூர்ந் துயர்கதியிற் புக்குப் போக நுகர்கிற்பார் பகரு மனைய மதிப்பூசம் பரமர் பாதம் பூசிப்போர் துகண்முற் றிரிய மேலான துறக்க மாண்டு வீடடைவார். |
13 |
2210 | மாசி மகத்திற் சிவநிசியியின் மழுமா னேந்தி மலர்ப்பாதம் பூசை புரிவோர் தாம்வேட்ட போக முழுதுங் கைக்கொள்வார் தேசு திகழ்பங் குனிமதியுத் திரத்திற் சிறந்த திருவிழா ஆசை யுடன்சென் றேத்தினோ ரன்றே முத்தி பெறுகிற்பார் |
14 |
2211 | வருடப் பிறப்பே மதிப்பிறப்பே வளரு மயன மோரிரண்டே கருது முவாவே பதினான்கே கரிசில் பதின்மூன் றேயெட்டே பொருவில் சோம வாரமெனப் புகன்ற விவற்றிற் பூசிப்போர் திருகும் வினையின் றிருக்கறுத்துச் செயிர்தீர்ந் தருளி னினிதமர்வார். |
15 |
2212 | மொழிந்த தினங்க டமிற்பூசை முடியா ரேனு முடித்தபயன் பொழிந்து கருணை யுலாப்போதும் புனிதர் திருப்பங் குனிச்சாறு விழைந்து பணிவோர் வினைமுழுதும் விளிய வினிது பெற்றேகித் தழைந்த பெரும்போ கத்தழுந்தித் தலைவன் பாதந் தலைநிற்பார். |
16 |
2213 | வென்று விளங்குங் கோமுனிவன் முதலா னோர்கள் விழைந்தெடுத்த அன்று தொடங்கி யிதுகாறு மமலன் றிருப்பங் குனிச்சாறு நன்று புரிந்து தரிசித்து நவைதீர் முத்தி யடைந்தோர்கண் மன்ற வளவி னடங்கிடார் மணிவா ரிதிசூழ் வையகத்தில். |
17 |
2214 | பட்டிப் பெருமா னினிதூரும் பசும்பொற் கொடிஞ்சிக் கூவிரத்தேர் இட்டுத் தொடுத்த வடமமர ரெறுழ்த்தோ ளவுண ரிருபாலுந் தொட்டுப் புவியோ ருருவினராய்த் துவன்றி யீர்ப்ப ரெனினன்பான் ஒட்டித் திருப்ப்ங் குனிவிழா வுவப்போர் பெருமை யுரைப்பாரார். |
18 |
2215 | வேறு மரகத வல்லி பங்கன் மான்மியந் தெரிக்கு மிந்தப் புரவருள் புராணந் தன்னைப் பூசிப்போர் படிப்போர் கேட்போர் உரிமையிற் பொருள்க ளாய்வோ ருவப்புறத் தெரிப்போ ரெல்லாம் விரிபுகழ்ச் சிவலோகத்தின் மேவியா னந்தந் துய்ப்பார். |
19 |
2216 | வடித்தினி தெடுத்த பேரூர் வள்ளலார் புராணந் தன்னைப் படிப்பவர்க் கன்னஞ் செம்பொன் பரிகரி சிவிகை மற்றுங் கொடுப்பவர் வெறுக்கை யென்றுங் குறைவில ராகி வாழ்ந்திங் கடுத்துயர் சிவலோ கத்தி னரும்பெரும் போகந் துய்ப்பார். |
20 |
2217 | பிப்பில வனத்தெஞ் ஞான்றும் பெரருள் வழங்கி வைகும் ஒப்பறு பட்டி நாதர்க் குவப்பொடு சிறப்புச் செய்வோர்க் கெப்பெரும் பயன்க ளுண்டா மப்பெரும் பயன்க ளூண்டாஞ் செப்பிய புராணந் தன்னிற் சிறப்பினி தியற்று வோர்க்கே. |
21 |
2218 | எனமகிழ் சிறப்பச் சூத முனிவர னியம்பக் கேட்டு நனிதவ முழந்து வேட்கு நைமிச வனத்தோ ரெல்லாங் கனிவொடு மிறைஞ்சிப் போதிக் கடிவரைப் பமர்ந்த முக்கண் அனகன தருளை யுன்னி யானந்தந் திளைத்து வாழ்ந்தார். |
22 |
2219 | மன்னிய போதி வைப்பின் வதிந்தெனை யீர்த்து மூவாத் தன்னையென் னாவாற் பாடித் தமியனேன் றனையு மாண்ட முன்னவ னாதி நாதன் முக்கணெம் மானை யல்லாற் பின்னொரு தெய்வந் தன்னைப் பேசுமோ வெனது செந்நா. |
23 |
2220 | மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும் பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க கோமனு நீதி வாழ்க குவலயம் முழுதும் வாழ்க. |
24 |
விசேட பூசைப்படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 2220
பேரூர்ப்புராணம் மூலம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்
------------------