logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-1

சுருதி ஸூக்தி மாலா (PDF file)


|| ஓம் நம: சிவாய ||

சுருதி ஸூக்தி மாலா

அல்லது

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்

 

சிவலிங்க பூபதியின்
ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை - 600 004.

சுருதி ஸூக்தி மாலை

(வ்யாக்யானம்-தத்துவப் பிரகாசிகை)


 

கல்ப்பாந்தே சமித த்ரிவிக்ரம     மகா கங்காள பத்த ஸ்புரத் சேஷஸ்யூத ந்ருஸிம்ஹ பாணி     நகரப் ப்ரோதாதி கோலாமிஷ: | விச்வைகார்ணவ ஸம்விஹார முதிதெள     யோ மத்ஸ்ய கூர்மா வுபெள கர்ஷந் தீவரதாம் கதோஅஸ்யது     ஸதாம் மோஹம் மஹாபைரவ: ||

இந்த ச்லோகம் ஆதித்ய புராணத்தில் இருக்கிறது. சிவலிங்க பூபதியவர்கள் ‘தத்துவ ப்ரகாசிகை’ என்று தமது வ்யாக்யானத்திற்கு இதை மங்கள ச்லோகமாகக் அமைத்துக்கொண்டார் போலும், அவர் வ்யாக்யானத்தைத் தழுவிய இந்தத் தமிழ் வ்யாக்யானத்திற்கும், இதையே மங்கள ச்லோகமாகக் கொள்வோம்.

                                                              தி.வி.அ. சிரெளதி                                                                      (பதிப்பாசிரியர்)

குறிப்பு

வ்யாக்யானத்தில் வரும் அனேக ஸம்ஸ்க்ருத பதங்களுக்கு விளக்கமாகத் தமிழில் அரும்பதவுரை அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

|| ஓம் நமோ தக்ஷிணாமூர்த்தியே ||

சுருதி ஸூக்தி மாலா

அல்லது

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்

பெயர் விளக்கம்

சுருதி – வேதங்களின், ஸூக்தி – நல்ல அழகிய, அதாவது உண்மைப் பொருளை விளக்கும் வாக்கியங்களாகிய மலர்களின், மாலா-மாலை. இஃது பரமேச்வரனுக்கு ஸ்துதி ரூபமாய் ஸம்ர்ப்பிக்கப்படும் வாடாமலர் மாலை. ஸாதாரண மலர்களில் மாலை கொஞ்சம் நேரம் அல்லது ஒரு நாளானபின் வாடிவிடும். இந்த ஸ்துதி மாலையின் மலர்கள் ஒரு நாளும் வாடா.

ஸ்ரீ ஹரதத்தாசார்யார் தமது கிரந்தத்திற்குக் கொடுத்த சிறப்புப் பெயர் சுருதி ஸூக்தி மாலை, (ச்லோகம் 151) ஆயினும் 2-வது ச்லோகத்தில்

தாத்பர்ய ஸங்கரஹ மஹம் விததே மஹேசை!

என்று சொல்வதால், “தாத்பர்ய ஸங்க்ரஹம்” என்ற மற்றும் ஒரு பெயரும் நிலவி வருகிறது, சுருதி என்ற பதம் பொதுவாக நான்கு வேதங்களையும் குறிக்குமாதாலால், இந்த க்ரந்தம் மேலும் சற்று விளக்கமாக, “சதுர்வேத” தாத்பர்ய ஸங்க்ரஹம் என்றும் பெரியோர்களால் போற்றப்பட்டு வருகிறது.

வேதங்களின் உண்மைப் பொருளை அறியாதவர்களுக்கும் தங்கள் தங்கள் மதம், கொள்கை, அபிமானங்களுக்கேற்ப, வேறு வேறு கருத்துக்களை சொல்பவர்களுக்கும், ப்ரபல சுருதி ப்ரமாணங்களாலும், மீமாம்ஸா ந்யாயங்களாலும் முழுமுதற் கடவுள் பரமேச்வரனே என்ற உண்மை தத்துவத்தை ஸ்தாபிக்கும் சிவபரதல், சைவ ஸ்தாபத க்ரந்தம்.

                                                              தி.வி.அ. சிரெளதி

சுருதி ஸூக்தி மாலை

சுலோகம் 1 முதல் 50 முடிய

சுலோகம் 1

யஸ்மை நமோ பவதி யஸ்ய குணா: ஸமக்ரா: நாராயணோபநிஷதா யதுபாஸனோக்தா | யோ ந: ப்ரசோதயதி புத்தி மதிக்ரதெள ய: தம் த்வாமனன்யகதிரீச்வர! ஸம்ச்ரயாமி ||

பதவுரை

யஸ்மை – எவருக்கு, நம:: - நமஸ்காரங்கள், பவதி – செல்கின்றனவோ; யஸ்ய – எவருக்கு, ஸமக்ரா – பரிபூர்ணமான, குணா: (ஆறு) குணங்கள் பவந்தி – இருக்கின்றனவோ, நாராயணோபநிஷதா – தைத்ரீயா ரண்யகம் பத்தாவது நாராயணோபநிஷத்தால், யதுபாஸனா – எவருடைய உபாஸனை, உக்தா – சொல்லப்பட்டதாக, பவதி – இருக்கிறதோ, ய: - எவர், ந: - நம்முடைய, புத்திம் – அந்தக் கரணத்தை,ப்ரசோதயதி – (அந்தர்யாமியாகவிருந்து) தூண்டிவிடுகிறாரோ, ய : - எவர், க்ரதென – யாகங்களுக்கு, அதி – தலைவரோ, (பல ப்ரதாவோ),தம் – அப்பேர்ப்பட்ட, த்வாம் – உம்மை, ஈச்வர – ஹே பரமேச்வரனே! அனன்யகதி – வேறு கதியில்லாத நான், (மற்ற தேவதைகளை ஆச்ரயிக்காமல்) ஸம்ச்ரயாமி – நன்கு சரணமடைகிறேன். பிரபக்தி ரூபமாகச் சரணமடைகிறேன்.

கருத்துரை

நமஸ்காரங்கள் எவரை அடைகின்றனவோ, எவர் நமச்சேஷியோ, எவர் பகவத் பத வாச்யரோ, பூர்ணமான ஆறு குணங்களும் நிரம்பப் பெற்றவரோ, (32 உபாஸனைகளுக்குள் சிறந்ததான) எவருடைய உபாஸனை நாராயணோபநிஷத் கூறுகிறதோ, எவர் காயத்ரீ மந்த்ர ப்ரதி பாத்யராக, எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து, புத்தியைச் செலுத்திச் செயல்களில் ஈடுபடுத்துகிறாரோ, எவர் ஸர்வ யாகங்களுக்கும் சேஷியாகச் கர்மடர்களால் அவலம்பிக்கப் படுகிறாரோ, இவ்விதம் விசேஷமான ஐந்து சிறப்பு லக்ஷணங்கள் பொருந்திய, கடவுளாகிய உம்மை ஹே, பரமேச்வரா! வேறு கதியில்லாத நான், மற்ற தெய்வங்களை உபாசிக்காமல் உம்மையே முழுமுதற் கடவுளாகவும், பரமென்றும், ஏகாந்தமாக உபாஸிக்கிறேன்.

என்று இந்த க்ரந்தத்தின் விஷயத்தைச் சொல்வது மூலம் ஸ்ரீ ஹரதத்தாசார்யவர்யர் முதல் சுலோகத்தில் மங்களத்தையும் ஈச்வர வணக்கத்தையும் சொல்லுகிறார்.

விசேஷவுரை

இந்த முதல் ச்லோகத்தால் பரமேச்வரனுக்கு சொல்லப்பட்ட சிறப்பு லக்ஷணங்கள் ஐந்து: (1) நமச்சேஷித்வம்; (2) நிரதிசய ஐச்வர்யாதி மத்வம்; (3) நாராயணோபநிஷத் உதீரிதோபாஸ்யத்வம்; (4) காயத்ரீ மந்த்ர ப்ரதி பாத்யத்வம்; (5) க்ரது சேஷித்வம் என்பன. இவ்வைந்தும் அதிவ்யாப்தி, அவ்யாப்தி, அஸம்பவம் என்ற முப்பிழையின்மையால், பரமேச்வரன் லக்ஷணங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வைந்தும் வேத வாக்கியங்களைக் கொண்டு நிலைநாட்டப் படுவதால், பிரமாணமும் விளக்கப்பட்டதாகும்.

லக்ஷண ப்ரமாணாப்யாம் வஸ்து ஸித்தி:

என்ற நியாயப்படி க்ரந்த ஆரம்பத்தில் வஸ்து நிர்தேசம் குறிக்கப்பட்டது. பரமேச்வரன் தான் வஸ்து; பரதெய்வம் பரமார்த்த தத்வம். சதுர்வேத தாத்பர்ய விஷயீ பூதப்பொருள் பரமேச்வரன் தான் என்பது குறிப்பிடப்பட்டது.

முழு முதற் கடவுளை வணங்குவதாகிய முதல் ச்லோகத்தால் க்ரந்தம் நிர்விக்னமாக முடிவடையும் பொருட்டு, க்ரந்த ஆரம்பத்தில் மங்களம் செய்யப்பட வேண்டும் என்ற ஸம்ப்ரதாயத்தை சிஷ்யர்களுக்கு அறிவித்துவிட்டு, இரண்டாவது ச்லோகத்தால், “பிரதிக்ஞை” என்ற பாகத்தைச் செய்ய ஆரம்பிக்கிறார், செய்யப்போகும் கார்யத்தை, சொல்லப் போகும் விஷயத்தைக் குறித்தால் தான், ஜிஞ்ஞாஸுக்களான ச்ரோதாக்கள், வாசகர்கள், கவனமாகக் கேட்க முன் வருவார்கள்.

சுலோகம் 2

வேதேஷு வா ததனுயாயிஷு வா விசார்ய தந்த்ரேஷு வாக்யமகிலம் ப்ரதிபாதகம் தே | தாத்பர்ய ஸங்க்ரஹ மஹம் விததே மஹேச ! மஹ்யம் ப்ரஸீத த நய மாம் ருஜுனாபதா த்வம் ||

பதவுரை

வேதேஷு வா – வேதங்களிலும், ததனுயாயிஷு வா தந்த்ரேஷு – வேதங்களைப் பின் பற்றி வந்திருக்கும் புராண, சிவதர்ம, முதலிய ஆகம ஸித்தாந்தங்களிலும், தே – நமச்சேஷித்வம் முதலிய ஐந்து லக்ஷணங்களால் குறிப்பிடப்பட்ட, உங்களுடைய, ப்ரதிபாதகம் – உபக்ரமம், உபஸம்ஹாரம் முதலிய ஆறுவித தாத்பர்ய லிங்கங்களைக் கொண்டு ஒரே நோக்கமாகத் தெரிவிக்கிற, அகிலம் வாக்யம் – எல்லா வாக்ய ப்ரமாணங்களையும், விசார்ய – நன்கு விசாரித்து, (விசிந்த்ய – நன்கு யோஜித்து), அஹம் – நான், தாத்பர்ய ஸங்க்ர்ஹம் – வேதபுராண வாக்ய தாத்பர்ய சுருக்கமாகிய இந்த க்ரந்தத்தை, (சுருதி ஸூக்தி மாலைய), விததே – செய்கிறேன். மஹேச – பரமேச்வரனே! மஹ்யம் – என் விஷயத்தில், ப்ரஸீத – (பிரஸன்னமாகி) அருள் புரிய வேண்டும். த்வம் – நீர், மாம் – என்னை, ருஜுனா – கோணல் இல்லாத, நேர்மையான, பதா – மார்க்கத்தினால், நய – போகும்படி செய்யவேண்டும்.

அந்தர்யாமியாக இருந்து, அனைத்தையும் தூண்டுகிற தாங்கள், நல்ல வேதவாக்கியங்கள், உண்மையான தாத்பர்யங்களை விளக்கும், நேர்மையான வழியில் என்னைப் போகும்படி தூண்டவேண்டும். வாயு ஸம்ஹிதையிலும், ச்வேதாச்வதர உபநிஷத்திலும், பரமேச்வரனே புத்தி ப்ரேரகன் என்ற விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது.

விரிவுரை

முழுமுதற் கடவுளால் இயற்றப்பட்டதால் வேதங்கள் ப்ரமாணங்களாகும் என்பதும். காளிதாஸன் க்ரந்தம் போல வேதமும் ஒரு மகாபுருஷன் செய்தது தான் என்பது அனுமானத்தால் சித்திக்கும் என்பது. தார்க்கிகர்கள் கொள்கை. புருஷஸூக்த மந்த்ரமும் (யக்ஞேச்வரனான) – பரமேச்வரனிடமிருந்து மூன்று வேதங்களும் உண்டானதாகக் கூறுகிறது.

ஜைமினி மகரிஷியும், அவரைப் பின் பற்றும் மீமாம்ஸகர்களும். வேதங்கள் அபெளருஷேயமானதால், புருஷ தோஷம் கொஞ்சமும் சங்கிக்க இடமற்றது; ஆதலால் ப்ரமாணங்கள் என்கிறார்கள்.

மூச்சு விடுவதுபோல் சிரமமில்லாமல் (அனாயஸமாகக்) கடவுளிடமிருந்து வேதங்கள் வெளிவந்தன. ஆதலால் ஈச்வரன் என்ற புருஷஸம்பந்தம் இருந்தாலும் மற்ற கிரந்தங்களைப்போல், மானிட, க்ருதி யில்லாததால் தோஷமற்றவை, ப்ரமாணங்களாகும் என்பது வ்யாஸர், அவரைப் பின்பற்றியவர்களுடைய கொள்கையாகும்.

க்ரந்தகாரர் ஸ்ரீ ஹரதத்தாசார்யார் இந்த மூன்று கொள்கைகளையும் அங்கீகரித்து விளக்கம் செய்திருக்கிறார்.

வேத: ஸ்வயம் பவது வா தவ வா ப்ரணீதி:

                                     (சு – 108)

ப்ரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களால் அறியப்படாத தர்மத்தையும் பிரம்மத்தையும் தெரிவிப்பதால், வேதம் என்ற பெயர் அந்வர்த்தமாகிறது. (காரணப் பெயராகத் பொருந்தியிருக்கிறது) புராணம், ஆகமம் முதலியவை வேதார்த்தத்தை விளக்க வந்தமையால், அவைகளில் சொல்லப்பட்ட ஸித்தாந்தங்களும் ஏற்கத்தக்கவை என்பது ஜைமினி முனிவரால் ஸ்ம்ருத்யாருத்யாதிகரணத்தில் விசாரித்து ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இங்கு ‘வா’ என்ற பதம் ‘உம்’ என்ற பொருளையும், ‘தந்த்ரம்’ என்ற பதம் ‘ஸித்தாந்தம்’ என்ற பொருளையும் தருவது குறிப்பிடத்தக்கது.

  உபக்ரமோப ஸம்ஹாரெள, அப்யாஸோ பூர்வதா பலம் | அர்த்தவாதோப பத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே ||

என்ற ஆறு தாத்பர்ய க்ராஹக லிங்கங்களைக்கொண்டு நோக்க மறிய வேண்டும். அம்முறை வ்யாஸமுனிவராலும், ஸத்வித்யா, பூம வித்யா ப்ரகரணங்களில், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்களாலும் விளக்கப்பட்டிருக்கிறது.

சுலோகம் 3

மந்த்ரார்த்தவாத விதிபிர் பஹுதா விபக்தோ யச் சப்தராசிரனபேக்ஷதயா ப்ரமாணம் | ஸோயம் விமத்ஸர விம்ருஷ்ட பதார்த்ததத்வோ வேத: ப்ரகாசயதி கேவல மீச்வரம் த்வாம் ||

ஐந்து லக்ஷணங்களில் நமச்சேஷித்வம் என்ற முதல் லக்ஷணத்தை விவரிக்கவேண்டி, முதலில் “ஈச்வரன்” என்ற பதம் மகாதேவன், (பரமேச்வரன்) ஒருவனைத்தான் குறிக்கும் என்பதை வேத ப்ரமாணங்களால் ஸ்தாபிக்க ஆரம்பிக்கிறார்.

பதவுரை

மந்த்ரார்த்தவாத விதிபி: - மந்திரங்கள், அர்த்த வாதங்கள், விதி வாக்யங்கள் என்று மூன்று விதமாகவும், பஹுதா – இன்னும் பலவிதமாகவும், விபக்த: - பிரிக்கப்பட்டிருப்பதும், அனபேக்ஷதயா – (சொன்னவரின் மகிமையை) வேறு ப்ரமாணத்தை அபேக்ஷிக்காமல் ஸ்வதந்தரமாகவே, ப்ரமாணம் – ப்ரமாணதுமான, ய : - யாதொரு, சப்த ராசி: - சப்தக் கூட்டமாகிய வேதம் இருக்கிறதோ, ஸ: - அப்பேர்ப்பட்ட அயம் – இந்த ப்ரத்யக்ஷமான, வேத: - வேதமானது, விமத்ஸர விம்ருஷ்ட பதார்த்த தத்வ: - அஸுயை, பொறாமை இல்லாதவர்களால் பதார்த்த உண்மை விசாரிக்கப்படுமாகில், த்வாம் கேவலம் – உம்மைமட்டும் தான், ஈசவ்ரம் – ஈச்வரபதத்திற்கு உண்மை அர்த்தமாக, ப்ரகாசயதி – வெளிப்படுத்தி, ப்ரகாசிக்கச் செய்கிறது.

விரிவுரை

வேதத்தில் மந்த்ரங்கள் ச்ரவணத்துக்கு உபயோகிக்கப்படுகின்றன. அர்த்தவாதங்கள் ஒரு விஷயத்தைப் பகழவோ, நிந்திக்கவோ உபயோகப்படுகின்றன. விதிகள் (நிஷேதங்கள்) உலகில் அறியப்படாத, செய்ய வேண்டிய தர்மங்களையும், விலக்கவேண்டிய அதர்மங்களையும் தெரிவிக்கின்றன என்பது மீமாம்ஸக ஸித்தாந்தம். ஸ்ம்ரிதிகள் வேதார்த்தத்தை விளக்குவதால் பரதந்த்ர ப்ரமாணம், வேதமொன்றுதான் பிறரை மூலமாக அபேக்ஷிக்காமல் ஸ்வதந்த்ர ப்ரமாணம் என்பதும் மீமாம்ஸகர் முடிவு செய்த ஸித்தாந்தம். ஒவ்வொரு பதத்தின் உண்மைப் பொருளை அஸூயை பக்ஷபாதமின்றி விசாரித்து நிர்ணயிக்க வேண்டும்.

ஈசானஸ் ஸர்வ வித்யானாம், ஈச்வரஸ்ஸர்வ பூதானாம் – தமீச்வராணாம் பரமம் மகேச்வரம் முதலியவை, ஈச்வர பத அர்த்தத்தை விளக்கும் மந்த்ரங்கள்.

யத ஈஷ்டே ஈச்வர: முதலியவைகள், தாது, ப்ரத்யங்களைப் பிரித்துக் காட்டி, ஈச்வரபதத்தை விளக்கும் அர்த்தவாதங்கள்.

காரணம் து த்யேய: ; ஸர்வைச்வர்ய ஸம்பன்ன:

ஸர்வேச்வர: ச சம்பு: - முதலியவை, ஈச்வர பதார்த்தத்தை விளக்கி அவரை த்யானம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் விதிகள் இம்மாதிரி பலவிடங்களில் மந்திரார்த்தவாத விதிகள். அதர்வசிரஸ், ச்வேதாச்வதரோப நிஷத், மாண்டூக்யம், முதலியவைகளில் பலவாறு சொல்லப்பட்டிருப்பவை இங்கு ப்ரமாணமாகும்.

சுலோகம் 4

சப்தோய மீச்வர இதி ச்ருதிகோசஸ்ஸந் ஆநீலகண்ட மவதம்ஸித சந்த்ரலேகம் | த்வாமேவ போதயதி நாத! நிஜார்த்த போஷாத் அன்யம் புன: ப்ரகரணாதி நிபீடனேன ||

பதத்தின் உண்மையான அர்த்தத்தை யோக வ்யுத் பத்தியால் அறியவேண்டும். அவ்விதமே ரூடமான பதங்களுமுண்டு ஈச்வரன் என்ற பதம் யோகமுறையிலும் ரூடமுறையிலும் பரமேச்வரனைத்தான் குறிக்கிறதென்று 4-வது, 5-வது சுலோகங்களால் விளக்கம் செய்கிறார்.

பதவுரை

அயம் – இந்த, ஈச்வர: ஈதி – ஈச்வரனென்ற சப்த: - சப்தமானது, வார்த்தையானது, ச்ருதி கோசரஸ்ஸந் – காதால் கேட்கப்படும்போது, லக்ஷணா வ்ருத்தியைக் கைக்கொள்ளாமல், அபிதா என்ற சக்திமாத்ரத்தால் விஷயீகரிக்கப்படும்போது ஆநீலகண்டம்* - நஞ்சுண்டபொழுது அடையாளமாகக் கொஞ்சம் தான் கருத்த கழுத்தை உடையவரும், அவதம்ஸித சந்த்ரலேகம் – ஆபரணமாகத் தலையிலணியப்பட்ட சந்திர கலையை உடையவருமரன, நாத – தலைவரே! த்வாமேவ – உம்மையே, நிஜார்த்தபோஷாத் – நிகரற்ற ஐச்வர்யம் என்ற தன் சொந்த அர்த்தம் நிரம்பியிருப்பதால், போதயதி – அறிவிக்கிறது, அன்யம் புன: மற்ற தேவதைகளையோ, ப்ரகரணாதிநிபீடனேன – ப்ரகரணம் ஒளசித்யம், லிங்கம் முதலிய 14 ஸங்கோச ப்ரமாணங்கள், பதாந்தர ஸம்பிவ்யா ஹாரம். “வா” பதச் சேர்க்கை முதலிய காரணங்களால் (முக்யார்த்தத்தை விடவேண்டிய வருவதால்) போதயதி – அறிவிக்கிறது.
 


* விஷம் உடல் முழுதும் பரவும் தன்மையுள்ளதாயினும் கடவுளை ஒன்றும் செய்ய முடியாது. ஈச்வரன் ஸ்வேச்சையால் விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி கழுத்தின் நிறத்தையும் சிறிது நீலமாக்கி காட்டுகிறார்; தான் செய்த பரமானுக்ரஹத்திற்கு ஒர் ப்ரத்யஷ ப்ரமாணமாக அமைத்துக் கொள்கிறார், ஈச்வரனுக்கு நீலகண்டன் என்று காரணப் பெயரும் அமைகிறது. (தி.வி.அ)


விசேஷ வுரை

வ்யாகரணத்தில் ஈச்வரசப்தம் ஸ்தேசபாஸபிஸகஸோவரச் என்ற ஸூத்ரத்தால் ‘வரச்’ ப்ரத்யயாத்தமாவும் ‘வநிப்’ ப்ரத்யயம் வைத்து “வனோரச” என்ற ஸூத்ரத்தால் ‘ர’ என்ற எழுத்து வருவதாலும் “அச்னோதேராசுகர்மணி வரட் ச” என்ற உணாதி ஸூத்ரத்தால் ‘வரட்’ ப்ரத்யயாந்தமுமாக மூன்று விதமாக வ்யுத்பத்தி காண்பிக்கப் பட்டிருக்கிறது, “ஆசு கர்ம வர தாம்னாதி க்ரியா யஸ்ய சீக்ர தாதா ஆசுதோஷ: என்று விளக்கப் பட்டிருக்கிறது. “ஈச்வர: - க்ஷிப்தம் என்பது ப்ருஹாதரண்யக சாங்கர பாஷ்யம். எல்லாரையும் விட ஐச்வர்யமுள்ள ஸ்வதந்த்ரன் தான், பிறர் அபேக்ஷையில்லாதலால், சீக்கிரத் கார்யங்களைச் செய்ய முடியும். துஷ்டநிக்ரஹமோ சிஷ்டபரி பாலனமோ அனாயாஸமாக சீக்கிரம் செய்பவர் ஈச்வர பதத்தின் யோகத்தால் அர்த்தம் கிடைக்கிறது. ஹாலஹல விஷத்தை உடன் சாப்பிட்டுக் கஷ்டங்களை நீக்கியவரும், சந்திரனைத் தலையில் தரித்து அம்ருத கிரணங்களை ஸகல ஜகத்துக்கும் ஊட்டி சுகம் தருபவரும் பரமேச்வரனாதலால் ஈச்வரபதம், ப்ரகரணம் முதலிய ஸங்கோசக ப்ரமாணம் இல்லாத காலத்தும், யோகவ்யுத்பத்தியால் அவரைத்தான் குறிக்கும் என்பது தாத்பர்யம் – ப்ரம்மா, விஷ்ணு முதலிய கடவுளுக்கு நிக்ரஹானுக்ரஹ சக்தியளித்தவர் சிவபெருமான் தான்.

“ஹரிம் ஹரந்தம் அனுயந்திதேவா: விச்வஸ் யேசானம் வ்ருஷபம் மதீனாம்”

என்ற வேதவாக்யங்களிலும், வேதத்தைத் தழுவிய பிரஹஜ்ஜாபால ஸ்ரீஉதி:, பிரம்மாண்டபுராணம், வாயவீய ஸம்ஹிதை, மகாபாரதம் வனபர்வம், த்ரோணபர்வம் முதலிய பல இடங்களிலும், பரமேச்வரனுடைய ஈச்வரத்வம்; மற்ற எல்லாரையும் அடக்கியாளும் சக்தி நன்கு விளங்கும்.

சுலோகம் 5

சப்தஸ் தவாயமபிதான மனன்ய சப்தோ நைகண்டுகா: சிவபதாதி வதேன மாஹு: | வஸ்து ஸ்வாபாவக்ருதமேவ து பூஜ்யபாவம் ப்ரூதே மஹேச்வர மஹான் பரம: ச சப்த: ||

யோக வ்யுத்பத்தியைக் கவனிப்பது இருக்கட்டும். ஈச்வரன் என்பது உமக்குப் பெயராக அமைந்து விட்டது. ஆதலால் ரூடம் என்றே சொல்லவேண்டும். அல்லது யோகரூடமாகப் பங்கஜம் என்ற பதம்போல இருக்கட்டும் என்று விளக்குகிறார் இந்த 5-வது ச்லோகத்தால்.

பதவுரை

அயம் சப்த: - இந்த ஈச்வரன் என்ற சப்தமானது, தவாபிதானம் – சிவசப்தம் போல உமக்கு அஸாதாரணப்பெயராகும் அனன்ய சப்த: - பிறரைக் குறிக்காத சப்தமுமாகும். நைகண்டுகா: - நிகண்டு கிரந்தத்தை யுணர்ந்தவர்கள், ஏனம் – இந்த ஈச்வர பதத்தை, சிவ பதாதிவத் – சிவன் பதம் முதலியவை போல, ஆஹு: - சொல்லுகிறார்கள். மஹேச்வரா! மஹான் சப்த: - மகான் என்ற அடைமொழியும் பரம: ச சப்த: - பரம என்ற அடைமொழியும், இரண்டும் ஈச்வரபதத்தின் விசேஷணங்கள், வஸ்து ஸ்வபாவக்ருதம் – ஈச்வர சப்தார்த்தமான வஸ்துவின் ஸ்வபாவத்தால் கிடைத்த, பூஜ்ய பாவ மேவ – பூஜிக்கத் தகுந்த தன்மையையே, ப்ரூதே – சொல்லுகின்றன.

பிறர் ஈச்வரனாகலாம், சிவபெருமான் பரமேச்வரன், மகேசரன் என்பதால், பரம, மகத் சப்தங்கள் அடைமொழியாக வந்து. பிறரை விலக்கவில்லை. ஆனால், அயோக வ்யவச் சேதகமாக நின்று. ஈசரத்வம் சிவபெருமானுக்குப் பூரணமாக உள்ளத்தைத் தெரிவிக்கிறது. ஆதலால் ஈச்வர சப்தம் அடைமொழியில்லாத காலத்தும்கூட சிவபெருமானைத்தான் குறிக்கும் என்பது பொருள்.

ஒரு குழந்தை தந்தையைப் பார்த்துப் பெருமாள் கோயிலுக்குப் போகிறாயா, ஈசரன் கோயிலுக்குப் போகிறாயா, என்று கேட்பது, ஆபால கோபாலம் பிரஸித்தமனதல்லவா? இது வாயவீய ஸம்ஹிதையில் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. காளிதாஸ் மகாகவியும், விக்ரமோர்வசீயம் நாந்திச்லோகத்தில்

  யஸ்மின் ஈச்வர இத்யனன்ய விஷய:      சப்தோயதார்த்தாக்ஷா: என்றும் ரகுவம்ச காவ்யத்தில்       மகேச்வர: த்ர்யம்பக ஏவ, ந அபர:  என்றும் கூறியிருக்கிறார்.

சுலோகம் 6

யஸ்யோபஸர்ஜன மஸென பரமோ மகான் வா சப்தஸ் ததர்த்த மபிதாது மலம் ப்ரக்ருஷ்டம் | சப்தேன பூஜ்ய வசனேன ஸமஸ்யமான: பூஜாம் ப்ரவீதி யதி சப்தவித: ப்ரமாணம் ||

பரம :,மஹான், இவ்விரண்டு பதங்கள் சிறந்தவர் என்ற அர்த்தத்தை யல்லவா குறிக்கின்றன. பூஜ்ய பாவத்தின் அயோக வ்யவச்சேதகம் என்பது பொருந்தாதே என்ற சங்கையை இந்த சுலோகத்தில் நீக்குகிறார்.

ஸமாஸத்தில் விசேஷ்யம் பூஜ்யவாசக மானதால், அத்துடன் கூடிய அடைமொழியும் பூஜ்யார்த்தத்தைக் கூறுவது இயல்பு தான் என்ற ஸமாதனம் கூறப்படுகிறது.

பதவுரை

அஸெள – இந்த, பரம : சப்த : - பரம சப்தமோ, மஹான் வா சப்த : - மகான் சப்தமோ, யஸ்ய – எந்த சப்தத்திற்கு, உபஸர்ஜனம் – விசேஷணமாகக் கொடுக்கப்படுகிறதோ, ததர்த்தம் – அந்த விசேஷ்யத்தின் அர்த்தத்தை, ப்ரகிருஷ்டம் – சிறந்ததாக, அபிதாதுமலம் – அறிவிக்கச் சக்தியுள்ளது, பூஜ்யவசனேன சப்தேன – பூஜிக்கப்படுகிறவர், என்று பொருள் தரும் சப்தமாகிய ஈச்வர பதத்துடன்,ஸமஸ்யமான : யதி – ஸமாஸம் செய்யப்பட்டிருப்பதாலும், சப்தவித : பிரமாணம்யதி – பதங்களின் உண்மை அர்த்தங்களை நிர்ணயம் செய்வதில் நிபுணர்களான வையாகரணர்களும், மகத், பரம சப்தங்கள் மிகவும், சிரேஷ்டம், உத்தமம். பூஜ்யத் தன்மைகளைக் குறிப்பதாக விளக்கம் செய்திருப்பதாலும், பூஜாம் ப்ரவீதி – பூஜித்தல் என்ற கார்யத்தின் சிறப்பைத்தான் சொல்லும்.

‘யதி’ என்னும் பதம் ‘ஆனால்’ என்ற பதம் போல, ஸந்தேகத்தை இங்கு குறிப்பதல்ல. நிச்சயத்தை குறிப்பது, விசேஷம் காண்க.

ஸந்மகத் பரமோத்தமோத்க்ருஷ்டா : பூஜ்யமானை :

என்பது, வ்யாகரண ஸுத்ரம். (பாணினீயம் 2-1-61)

சுலோகம் 7

நாநீச்வரம் பவிதுமர்ஹதி விச்வமேதத் பஹ்வீச்வரம் ச நிதரா மயதா ப்ரமாணம் | தல்லோக வேத விதிதேச்வர ! வர்ஜனேன கோயம் ப்ரம : கதிசிதீச்வரமன்ய மாஹு: ||      யஜமானனை வேலைக்காரன் நமஸ்கரிப்பது வழக்கம். அது தான் ஈச்வர ப்ருத்யந்நியாய மெனப்படும்.

ஈச்வரபதம் வேதபுராணங்களில் பரமேச்வரனையே குறிப்பதாக யோக ரூட பதமென்பது முன்சொல்லியபடி தீர்மானிக்கப்பட்டிருப்பதால், ப்ருத்ய ஸ்தானீயர்களானவர்களால் செய்யப்படும் நமஸ்காரம் பரமசிவனைத்தான் சேரும் என்பது ‘ஈச்வர’ சப்தார்த்ததைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டது. அதனால் உலகுக்கு ஈச்வரன் கிடையாது என்ற நிரீச்வரவாதமும், பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற ‘பஹ்வீச்வர’ வாதமும், சிவபெருமானைத்தவிர வேறு கடவுள் உண்டு என்ற ‘அ ன்யேச்வர’ வாதமும், இம்மூன்றும் ஸரியல்லவென்பதை இந்த 7வது ச்லோகத்தால் கூறுகிறார்.

பதவுரை

ஏதத் – இந்த, விச்வம் – ப்ரபஞ்சம் (உலகம்) அனீச்வரம் முழு முதற்கடவுள் இல்லாமல், பவிதும் – உண்டாவதற்கோ, இருப்பதற்கோ,நார்ஹதி – தகுந்ததில்லை, பஹ்வீச்வரம்-ச - பல கடவுள்களை உடைத்தாயிருப்பதும், நிதராம் ந – முற்றிலும் தகுந்ததில்லை. அயதா ப்ரமாணம் தத் – பெரிய மாளிகை, கோபுரங்களில் பலபேர் கர்த்தாவாகக் காணப்படுவதால் ஒப்புக் கொள்ளலாம். ப்ரமாணமில்லாததால், உலகுக்குப் பல கர்த்தாக்களை அங்கீகரிக்க முடியாது. லோக வேத விதிதேச்வர வர்ஜனேன – புராணங்களிலும், வேதங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஈச்வரனான நீலகண்டன், சந்திரசேகரனைத் தள்ளிவிட்டு, கதி சித் – சிலர், அன்யம் – மற்று பிரம்மாவை, விஷ்ணுவை அனீச்வரனை ஈச்வரனல்லாதவர்களை, ஈச்வரம் – ஜகத்கர்த்தாவாக, ஆஹு: - சொல்லுகிறார்கள், அவர்கள் மூடர்கள். கோயம் ப்ரம: - ஏன் இந்த மயக்கம்? வேத புராணங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் போதுகூட, ஏன் இந்த மயக்கம் அவர்களுக்கு?

விசேஷ வுரை

கன்று வளர்ச்சிக்காகப் பால் சுரப்பது போல, அசேதனமாகிய உஅலகம். ஜீவாதியர் சுகத்திற்காக சேதனன் இல்லாமல் உண்டாகவோ, சேஷ்டிக்கவோ முடியாது. பால் சேதனனாகிய பசுவின் உதவியால் சுரக்கிறது. அயஸ் காந்தமும் இரும்பை சேதனனால் சமீபத்தில் வைக்கப்பட்ட பிறகுதான் இழுக்கிறது. ஆதலால், அசேதன உலகுக்கு சேதனன் ஈச்வரன் இருந்தே ஆகவேண்டும். அவன் ஒருவன் ஸர்வ சக்தனாக ஒப்புக் கொள்ளப்படுவது லாகவ ந்யாயத்தால். ச்ருதியும்,

       தத் விஜிஞாஸஸ்வம்       தஸ்மாத் ஸப்தார்ச்சிஷ; ஸமிதஸ் ஸப்தஜிஹ்வ:       த்யாவா ப்ருதிவீ ஜனயந் தேவ ஏக:

என்ற விடங்களில், ஏகவசனத்தாலும், ஏகபதத்தாலும் ஓர் காரணம் என்கிறது. ச்வேதாச்வதரம், சிவரகஸ்யாகமம், வாயவீய ஸம்ஹிதை, லிங்கபுராணம்,காளிகா கண்டம், பத்ம புராணம், மகாபாரதம் சாந்திபர்வம் ஆனுசாஸனிகபர்வம், ஸ்காந்தம் முதலிய கிரந்தங்களில் ப்ரம்மாவை வலது பக்கத்திலிருந்தும், விஷ்ணுவை இடது பக்கத்திலிருந்தும், நான்கு வேதங்களையும் நான்கு முகங்களிலிருந்தும் படைத்துப் பரமேச்வரன் உலகத்தை நடத்துவதாகவும், யுக முடிவில் அழிப்பதாகவும் கூறப்பட்டிருப்பதால் கார்யகோடியில் சேர்ந்த பிரம்மா, விஷ்ணு தேவதைகள் உலகின் காரணமாகவோ, ஈச்வரனாகவோ இருக்கமுடியாதது பற்றி, அன்யேச்வர வாதமும், ப்ரமையால் ஏற்பட்டதுதான், என்பது தாத்பர்யம்.

ஹிரண்ய கர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே

என்ற ப்ரமாணங்கள் விச்வாமித்ரர் உலகில் சிலவற்றைப் படைத்தது போல், பிரம்மா விஷ்ணுக்களும் சிலவற்றைப் படைத்தவர் ஆவார்கள். அப்படைத்தலும் பரமேச்வரன் அருளால்தான் என்பது தாத்பர்யம். ஆனதால், மற்ற ப்ரமாணங்களோடு விரோதமாகதவை.

சுலோகம் 8

விச்வம் நிரீச்வரமிதம் ஜகதாஹ ஸாங்க்யோ யோக: ச ஸேச்வரமுபா வனுவாதினோன்யே | நத்வேவ ஸம்பவதி சேச்வரதாம் ப்ருவாண: பத்மாஸனாதிபி ரனீச்வர சப்த வாச்யை: ||

வேத புராணங்களைக் கவனிக்கும் எவனும் அந்யேச்வர வாதியாக இருக்க முடியாது. அப்படியிருந்தால் தன் வார்த்தையில் முன்பின் முரண்பாடாகப் பேசுபவனாவான் என்ற கருத்துடன் 8-வது சுலோகம் சொல்லப்படுகிறது.

பதவுரை

ஸாங்க்ய: - ஸாங்க்ய சாஸ்திரம் இயற்றிய கபில முனிவர், இதம் ஜகத் – இந்த உலகம்,நிரீச்வரம் கடவுள் இல்லாமல் உண்டாகி நடப்பதாக, ஆஹ - - சொல்லுகிறார் (கருதுகிறார்) யோக: ச – யோக சாஸ்திரம் படைத்த ஹிரண்ய கர்ப்பன் (பதஞ்சலி முனிவர்) விச்வம் – உலொஅகை, ஸேச்வரமாஹ – கடவுளால் படைக்கப்பட்டு நடப்பதாகக் கருதுகிறார். அன்யே – மற்றவர்கள் அனைவரும், உபெள – அவ்விரு முனிவர்களை, அனுவாதின: - பின்பற்றிச் சொல்பவர்கள். அனீச்வர சப்தவாச்யை: - ஈச்வர சப்தத்தால் சொல்லப்பட முடியாதவர்களான, பத்மாஸனாதிபி :- பிரம்மா முதலியவர்களால் ஸேச்வரதாம் – உலகில் ஈச்வரனுள்ள தன்மையை, ப்ருவாண: - சொல்லுகிற அன்யேச்வர வாதியானவன், நத்வேவ ஸம்பவதி – ஒருவனும் இருக்க முடியாது. சுருதி புராணங்களில், பிரம்மா விஷ்ணு முதலியவர்களுக்கு ஈச்வரத்வம் இல்லையென்பது தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் போது. அன்யேச்வரவாதீ எங்ஙனம் ஸம்பவிக்கக்கூடும். அப்படி ஸம்பவித்தால் அவன் வார்த்தை அனீச்வரனால், ‘ஸேசரம் ஜகத்’ என்று முன்பின் வ்யாஹதமான தாகுமல்லவா? த்ரிபுரதாஹத்திலும், ஆதித்ய புராணத்திலும், பசுபதி ஒருவந்தான் ஸர்வேச்வரன் என்பது விளக்கிக் கூறப்பட்டிருப்பதால், “மே மாதாவந்த்யா” என் தாயார் மலடி என்ற வாக்கியம் போல அந்யேச்வர வாதியின் வாக்கியம் ப்ரமாணமாகாது. (அபத்த வாக்கியம்).

       நாராயணேன ஸப்ராம்மகம் ஜகத்,       ப்ரம்மணா ஸநாராயணகம் ஜகத்

என்ற வாக்கியங்கள் போலவும், வ்யாஹதமான, அன்யேச்வர வாதியின் வாக்கியம் தள்ளத்தகுந்தது.

சுலோகம் 9

ஐச்வர்ய மக்ர்ய மனுபாதி நிபந்தனம் தே யத்பூதநாத! நமஸாமபி பாத்ரமேகம் | தத்ப்ராயச : ச்ருதிஷு துர்லபமேவ வாக்யம் முக்த்வா நமோ பவதி யத்ர பவத் ப்ரஸங்க: ||

ஈச்வரன் என்ற பதத்துக்கு இவ்விதம் பரமசிவன்தான் பொருள் என்று தெளிவு படுத்திய பிறகு அதனால் பரமேச்வரன் நம: சேஷி யென்ற லக்ஷணம் முதலாவது கூறப்படுவது நியாயமே என்ற விஷயம் 9 முதல் 21 முடிய, 13 ச்சோலகங்களால் நன்கு விளக்கப்படுகிறது.

பதவுரை

பூதநாத – ஸகல ப்ராணிகளுக்கும் தலைவரே! தே – உம்முடைய, அக்ர்யம் – சிறந்த, ஐச்வர்யம் ஈசத்தன்மையானது, அனுபாதி நிபந்தனம்– வேறு காரணங்களால் ஏற்பட்டதல்ல, ஸ்வபாவமாக அமைந்தது. அன்ய தேவதைகளன்றோ, உம்மை ஆராதித்து அவரவர்கள் அதிகாரத்திலமர்ந்து, வரப்ரஸாதத்தால், சிலவற்றிற்கு ஈச்வரர்களாக விளங்குகிறார்கள், ஆதலால் அவர்களின் ஐச்வர்யம் ஸங்குசிதம்; வரப்ரஸாதலப்த மாதலால் ஸ்வபாவிகமல்ல. உம்முடைய ஐச்வர்யம் ஸங்குசிதமல்ல, சிறந்தது; வரப்ரஸாத லப்தமல்ல; ஸ்வபாவிகம். உமக்குமேல் ஆராதிக்கக் கூடிய தெய்வம் இருப்பதாக வரம் கொடுக்க வல்லமையுள்ளதாக வேதபுராணங்கள் கூறவில்லையே. ப்ரம்மகைவர்தம், பராசரபுராணம், சிவரஹஸ்யம், ஆனுசாஸனிகபர்வம், த்ரோணபர்வம், பாத்ம புராணம், வாமன புராணம், ஸனத்குமாரஸம்ஹிதா, கூர்மபுராணம் ஆதித்யபுராணம், ஹரிவம்சம் முதலிய கிரந்தங்களில் ப்ரம்ம விஷ்ணுவாதி தேவதைகள் சிவலிங்கத்தைப் பூஜை செய்ததும், இஷ்டஸித்திகளைப் பெற்றதும், நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன ஆதலால், அவர்களின் ஈசத்வம் உபாதையால், தபோபலத்தால், சிவபூஜா பலத்தால் கிடைத்தது, ஸ்வாபாவிகமல்ல. உமக்கு ஆராத்ய (நீர் ஆராதிக்கும்படியான) தெய்வம் ஒன்றும் கிடையாதென்பதும், மேற்படி புராணங்களிலும் வேதங்களிலும் கூறப்பட்டிருப்பதால், உமது ஐச்வர்யம் ஸ்வாபாவிகமானது; சிறந்தது; ஸங்குசிதமானதல்ல.

யத் – எந்தக் காரணத்தால் இவ்விதமான, ஸ்வாபாவிக சிறந்த, ஐச்வர்யம் உம்மிடத்திருக்கிறதோ, தத் – அந்தக் காரணத்தால், நமஸாமபி – நமஸ்காரங்களுக்கும், த்வம் – நீர், ஏகம் – நிகரற்ற, ஒரே விதமான, பாத்ரம் – விஷயமாக இருக்கிறீர், பவத் ப்ரஸங்கம் முக்த்வா – உம்முடைய ஸம்பந்தம் இல்லாமல், யத்ர வாக்யே – எந்த வாக்கியத்தில், நமோ பவதி – நமஸ்காரம் சொல்லப்படுமோ, தத் – வாக்யம் – அப்படிபட்ட வாக்கியம், சுருதிஷு – வேதபுராணங்களில், ப்ராய: - பெரும்பாலும், துர்லபமேவ – காண்பது அரிதுதான்.

நமோ பிரம்ஹணே, நமோ ஸ்தவக்னயே நம: ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய:; நமோ வாசே, நமோ வாசஸ் பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி

என்ற சில விடங்களில், தேவாந்தரங்களுக்கு நம: பதம் கூறப்பட்டிருப்பது, அந்த தேவர்கள் உம்முடைய விபூதியாவார்கள் என்பது பற்றியே என்பது தாத்பர்யம். இங்கு ப்ராய: (பெரும்பாலும்) என்ற பதத்தால் கூறப்பட்டது காண்க.

சுலோகம் 10

தேவ! த்வதேக விஷயாணி நமாம்ஸி பும்ஸாம் யஸ்மை நம: சுருதி பலா தவதாரயாம: | தேவாந்தரேஷு, விஹிதான்யபி தான்யமூனி ஸ்ரோதாம்ஸி ஸாகர இவ த்வயி ஸம்பதந்தி ||

இரண்டு ப்ரதானமான ச்ருதி வாக்ய ப்ரமாணங்களைக் கொண்டு நம: சேஷித்வ லக்ஷணத்தை ப்ரதிக்ஞை செய்கிறார்.

பதவுரை

தேவ – விளையாட்டாக உலகைப் படைத்து ஸ்வயம் ப்ரகாசமாக விளங்கும் கடவுளே! யஸ்மை நம: சுருதி பலாத் –

       யஸ்மை நம: தஸ்மை த்வா ஜுஷ்டம் நியு நஜ்மி என்ற சூலகவ ப்ரகரணத்தில் சொல்லப்படும் வேத மந்த்ரம்.       யஸ்மை நம: தத் சிர:

என்ற தைத்தீரியாரன்யக சிசுமார ஸ்வரூப வர்ணன ப்ரகரணத்திலிருக்கும் மந்த்ரம்: இவ்விரண்டின் பலத்தால், பும்ஸாம் – மனிதர்களுடைய, நமாம்ஸி – நமஸ்காரங்கள், த்வதேக விஷயாணி – உம்மையே குறிப்பவை, மற்றவர்களைச் சேராதவைகள் என்று,அவதாரயாம: - நிச்சயிருக்கிறோம். தேவாந்தரேஷு – மற்ற தெய்வங்களுக்கு, பரமசிவன் மகிமை அறியப்படாததால், விகிதான்யபி – செய்யப்பட்ட போதிலும், தாநி – அமூநி – அந்த இந்த நமஸ்காரங்கள் ஸ்ரோதாம்ஸி – நதிகள், ஸாகரே இவ – ஸமுத்திரத்தில் போய்ச் சேர்வது போல, த்வயி – உம்மிடத்திலேயே, ஸம்பதந்தி – வந்து சேர்கின்றன.

விரிவுரை

வாயவீய ஸம் ஹிதை, மார்க்கண்டேய புரானம், மாண்டூக்யோப நிஷத் கிரந்தங்களில், கடவுள் விளையாட்டாக, அனாயாஸமாக, உலகத்தைப் படைக்கிறார். அதனால் க்ருத, க்ருத்யனான, பரிபூர்ணவஸ்துவான அவருக்கு யாதொரு லாபமும் கிடையாது.

லோகவத்து லீலா கைவல்யம்.

என்ற ந்யாயம்தான் படைத்தலுக்குப் பயன் என்ற அர்த்தம். தேவபதத்துக்கு, நன்கு விளக்கம் கூறப்பட்டிருத்தல் இங்கு கவனிக்கத் தகுந்தது. த்ரோண பர்வம், காளிகா கண்டம், லிங்க புராணம், காசிகா கண்டம் முதலிய க்ரந்தங்களில், துருவனுக்கு, மகாவிஷ்ணு த்ருவபதத்தை, ஈச்வர ப்ரஸாதத்தால் அடைந்ததை, பக்தனுக்குக் கொடுத்ததாக விரிக்கப்பட்டுள்ளது ஆதலால், மற்ற தேவதைகளின் நமஸ்காரங்கள், அவர்களுக்கு அந்தர்யாமியும், ஆராத்ய தேவரும், வரப்ரதான தேவருமாகிய உம்மைத்தான் வந்தடையும் என்பது திண்ணம்.

சுலோகம் 11

யஸ்மை நம: ச்ருதிரனூத்ய நமஸ்வினம் த்வாம் ஏகா நியோஜன முவாச பசோ: கபர்தின் | அன்யா ச திவ்ய சிசுமார சிரோ பவந்தம் சக்யந்த தித்த முபயேன நமோ விதாதும் || யஸ்மைநம: என்று ஆரம்பிக்கும் இரண்டு சுருதிகளுக்கு அர்த்தம் கூறும் சுலோகம்.

பதவுரை

கபர்தின் – கபர்தமென்ற ஜடா பாரமணிந்த கடவுளே! ஏகா – ஒரு, யஸ்மை நம; ச்ருதி – யஸ்மை நமஸ்தஸ்மை த்வாஜுஷ்டந்நியுநஜ்மி – என்ற வேதமானது, நமஸ்வினம் த்வாம் – நம: சேஷியான உம்மை, அனூத்ய – உத்தேசித்து, பசோ: நியோஜனம் – பசுவைக் கட்டுவதை,உவாச – சொல்லுகிறது. அன்யா – மற்றதான “யஸ்மை நம’ தத் சிர:” என்ற வேத மந்த்ரம், பவந்தம் – உம்மை, திவ்ய சிசுமாரசிர: - ஆகாயத்தில் ப்ரகாசிக்கும் சிசுமாரத்தின் சிரஸ்ஸாக, ஆஹ - - ரூபகாலங்கார விதமாகக் கூறுகிறது. தத் – ஆகையால், இத்தம் – இந்த வ்யாக்யான முறைப்படி, உபயேன – இரண்டு வேத ப்ரமாணங்களால், நம: நமஸ்காரத்தை, விதாதும் – உமக்கு சேஷமானதென்று தாத்பர்யம் கூற, சக்யம் – இயலும்.

சுலோகம் 12

ச்ருத்யோர் த்வயோரபி நமஸ்வின முச்யமானம் த்வாமேவ தந்த மனுஸந்ததத: ப்ரதேசம் | சம்ஸந்தி மந்தமதயோபி கிமாபதந்தம் மத்யந்தினே ஹி ஸவிதார மபன்ஹு வீரன் ||

கீழே குறிப்பிடப்பட்ட இரண்டு வாக்கியங்களிலும் நம: சேஷீ ஒருவர் குறிப்பிடப்படுவது உண்மை. அவர் பரமசிவன் தான் என்பது எங்ஙனம் அறியப்பட முடியும் என்ற கேள்விக்கு, முன் பின் ஸந்தர்ப்பங்களைக் கவனித்தால் பரமேச்வரன் தான் அவ்வேத வாக்கியங்களால் நம: சேஷீயாகக் கூறப்படுவது தெளிவாகும் என்ற விஷயத்தை விளக்குகிறார்.

பதவுரை

தம் தம் ப்ரதேசம் – முன் கூறப்பட்ட வேதவாக்கியங்களின் அந்தந்த முன்பின் வாக்கிய ஸந்தர்ப்பத்தை, அனுஸந்ததத: - நன்கு பர்யாலோசித்துப் பார்க்கும் வித்வான்கள், த்வயோரபி ச்ருத்யோ: - அந்த இரண்டு சுருதி வாக்யங்களுக்கும், த்வாமேவ - உம்மையே,நமஸ்வின முச்யமானம் – நம: சேஷியாகக் கூறப்படுவதாகச், சம்ஸந்தி – சொல்லுகிறார்கள். மந்த மதய: அபி – மூடபுத்தியுள்ளவர்களும்,ஆபதந்தம் – மேலே கிளம்பி கொண்டிருக்கிற, (ஆதபந்தம் – நன்கு வெய்யில் அடித்துக் கொண்டிருக்கிற), மத்யந்தினே – உச்சிவேளையிலுள்ள, ஸவிதாரம் – ஸூர்யனை, கிம் ஹி அபன்ஹு வீரன் – இல்லை யென்று மறுத்துச் சொல்வார்களா என்ன? மிகவும் தெளிவாகத் தெரிவதை ஒருவரும் மறைக்கமுடியாது என்பது தாத்பர்யம்.

சுலோகம் 13

கர்மைவ சூலதா! சூலகவந் த்வதீயம் மந்த்ரா பவந்த மகிலா: ப்ரதிபாதயந்தி | த்வாமந்தரேண நமஸா க்ருதலக்ஷணாய கஸ்மை பசும் நியுநஜா நி நியோஜய த்வம் ||

பதவுரை

சூலதா – சூலத்தைக் கையில் தரித்த சூலபாணியே! சூலகவம் – போதாயனர், ஆச்வலாயனர், முதலிய மகர்ஷிகளால் ப்ரதி வருஷம் வஸந்த ருதுவிலோ, சரத் ருதுவிலோ, மார்கழி மாதம் பூர்ணிமா திதியிலோ, நித்தியகர்மாவாக, அவசியம் செய்யப்பட வேண்டிய விதிக்கப்பட்டிருக்கும் பாக யக்ஞங்கள் ஏழில் ஒன்றாகிய ‘சூலகவம்’ என்று பெயருள்ள, கர்மா – கர்மாவானது, த்வதீயமேவ – உம்மையே தேவதையாகக் கொண்டது. சூலம் என்ற பதம், சூலம் தரித்த சூலியைக் குறிக்கும் – அவரைப் பசுவால் (கோ) பூஜிப்பது பற்றி, இந்தக் கர்மா சூலகவம் என்ற பெயர் பெற்றது காண்க. அகிலா: மந்த்ரா: - அந்தக்கர்மாவில் உபயோகிக்கம்படும் எல்லா மந்த்ரங்களும் பவந்தம் (ஏவ )ப்ரதி பாதயந்தி – தங்களையே தேவதையாகக் குறிக்கின்றன.

ஈசானாய த்வா ஜுஷ்டமுபாகரோமி என்பது, பசுவை தர்ப்பையால் தொட்டு ஸங்கல்ல்பிக்கும் காலத்தில் சொல்லப்படும் மந்த்ரம். ஈசானாய த்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி என்பது, பசுவை ப்ரோக்ஷிக்கும்போது சொல்ல வேண்டிய மந்த்ரம்.

ஏதமேவ தேவம் மத்யே கோஷ்டஸ்ய யஜேத என்ற விதி வாக்கியத்தில் தேவசப்தந்தால் பரமசிவனைச் சொல்லி, அந்த தேவதைக்குச் செய்யவேண்டிய சூலகவ யக்ஞம் என்று தெளிவாகத் தெரிவிக்கிறது.

தேவ: பூஜ்ய: பினாகீ – என்பது நிகண்டு. தேவஸ்யாய தனே ப்ரதிதிசம் ப்ரத்யோதயதி என்று போதாயன ஸூத்ரத்தில் பரமசிவன் தேவ சப்தத்தால் குறிக்கப்பட்டிருப்பதும்.

‘தேவமேவானுப்ரவிசதி’

என்று அதர்வசிரஸ்ஸிலும், தேவ சப்தப்ரயோகம் பரமசிவனைக் குறிக்கக் காணப்படுவதும் இங்கு காணவேண்டும். ஈச்வர சப்தம், போல, தேவ சப்தமும் பரமசிவனுக்கு யோகரூடமான சப்தம். மகாதேவ: பரமேச்வர: என்ற நாமாக்களால் அடைமொழியாகிய மகத் பரம சப்தங்கள் பூஜ்யத் தன்மையான அயோக வ்யவச் சேதகமே யல்லாது அன்யயோகவ்யவச் சேதகமல்ல என்று முன்னம் விளக்கப்பட்டதும், நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். ஆதலால் அனுவாதகமன மகத் பரமசப்தமில்லா விட்டாலும் ஈச்வர, தேவ பதங்கள் சிவபெருமானைத் தவிர மற்ற தேவதைகளைக் குறிக்காது. ஆதலால் அவை பங்கஜ பதம்போல யோக ரூடங்களாகும். இவ்விஷயம் சப்தா தேவ ப்ரமித : என்ற அதிகரணத்தில் வேதாந்த சாஸ்திரத்தில் வ்யாஸமுனிவரால் தீர்மானிக்கப் பட்டிருப்பதும், “ஈசானோ பூத பவ்யஸ்ய என்ற கடோபநிஷத் வாக்யார்த்த விசார முறையும் இங்கு கவனிக்கதக்கவையாகும்.

பவாய தேவாய ஸ்வாஹா நமஸ்தே ருத்ர மன்யவ

யஸ்மை நம: தஸ்மை த்வா ஜுஷ்டம் நியுநஜ்மி இதி ஹராய க்ருசாய சர்வாய சிவாய பவாய மகாதேவாய உக்ராய பசுபதயே ருத்ராய சங்கராய ஈசானாய ஸ்வாஹா.

இம்மாதிரி ஸகல மந்த்ரங்களும் சூலகவ கர்மாவிற்கு உங்களையே தேவதையாகக் குறிக்கின்றன. தத்திதத்தால், நான்காவது வேற்றுமையால், மந்த்ரார்த்த பர்யாலோசனையால், மூன்று உபாயங்களாலல்லவா கர்மாவின் தேவதை அறியப்படுகிறது. உம்முடைய தேவதா பாவத்தில் மூன்று ப்ரமாணங்களுமிருப்பதால் நீர் தான் சூலகவ கர்ம தேவதை யென்பது சந்தேகமற்ற விஷயம்.

த்வாமந்தரேண – உம்மைத்தள்ளிவிட்டு, நமஸாக்ருதலக்ஷணாய – நமஸ்காரத்தால் லக்ஷணம் சொல்லப்பட்ட, கஸ்மை – எந்த தேவதையின் பொருட்டு, பசும் நியு நஜானி – பசுவை யூபத்தில் கட்டமுடியும்? த்வம் – நீரே, நியோஜய – என்னை நியாயமான வழியில் தூண்டி விடும்.

       ஈச்வரனாகிய உம்மாலும், வேத தாத்பர்யத்துக்கு மாறாக செய்யச் சொல்ல முடியாது என்று தாத்பர்யம்.

சுலோகம் 14

அங்காந்தரேஷு விபுதாந்தர ஸம்ஸ்துதேஷு யச் சிம்சுமார சிரஸ: பரிசிஷ்யஸே த்வம் | தஸ்மை நமோ பவிது மீச்வர! ஸாம்ப்ரதந்தே தேவாந்தராய ந கதஞ்சி தனீச்வராய ||

இவ்விதம் இரண்டாவதான “யஸ்மைநம: தத்சிர:” என்ற மந்த்ரமும், முன்பின் ஸந்தர்ப்பத்தை யோஜித்தாலும், பாரிசேஷ ந்யாயத்தைக் கொண்டும், அதாவது சொல்ல வேண்டியவர்கள், மற்றவையால் சொல்லப்பட்டு விட்டபடியால் வேறு ஒருவரும் பாக்கியில்லாததால் பாக்கியுள்ள அவர்தான் இக்குறிப்புக்கு இலக்காவார் என்ற ந்யாயத்தாலும்) ஈச்வரனையே ஐயமறத் தெரிவிக்கிறது என்று விளக்கம் செய்கிறார்.

பதவுரை

அங்காந்தரேஷு – தலையைத் தவிர மற்ற அவயவங்கள், (1) மூர்தா – தர்ம தேவதை, (2) மேல்தாடை – பிரம்மா, (3) கீழ் தாடை – யக்ஞேச்வரன், (4) ஹ்ருதயம் – விஷ்ணு, (5) ஆண்குறி – ஸம்வதஸரதேவதை, (6) முன் கால்கள் – அசுவினி தேவதைகள், (7) நடுவு – அத்திரிமுனிவர், (8) பின் கால்கள் – மித்ரா வருண தேவதைகள் (9) வாலின் முதல் பாகம் – அக்னி தேவதை, (10) வாலின் இரண்டாவது பாகம் – இந்திரதேவதை, (11) மூன்றாவது பாகம் - ப்ரஜாபதி தேவதை, (12) நான்காவது பாகம் – ஸம்ஸார பயம் நீக்கும் அபயபத வாச்ய பிரம்மா என்று இவ்வாறாக, விபுதாந்தர ஸம்ஸ்து தேஷு – சிம்சுமாரமாக வர்ணிக்கப் படும் கச்யபருடைய அவயவங்கள், மூர்த்தா முதலியவைகள் தர்ம தேவதை முதலிய மற்ற தேவதைகளாக அமைத்துப் புகழப்பட்டிருக்கும் போது, சிசுமார சிரஸ : - சிசுமாரன் தலையின் துதிக்காக, ய: - யாதொரு, த்வம்: - நீர், பரிசிஷ்யஸே – மிச்சப் படுகிறீரோ ஈச்வரா! – ஹே பரமேச்வரா, ஈச்வர சப்தத்தால், யோக ரூட பதத்தால் அனிதா ஸாதாரணமாக சொல்லப்படும் கடவுளே, நமஸ்காரங்களுக்கு அஸாதரண உத்தேச்யமான பரம்பொருளே தஸ்மை – அப்பேர்ப்பட்ட, தே – உமக்குத்தான், நமோ பவிதும் – நமஸ்காரம் உரித்தானது என்பது ஸாம்ப்ரதம் – யுக்தமாகும். அனீச்வரனான மற்ற தேவதைக்கு நமஸ்காரம் உரித்தாவது, யுகதமாகுமா? அனீச்வரன் இயற்கையாகவே நமஸ்காரத்திற்கு தகுந்தவனல்லன். ஸரியான ஈச்வரன் இருக்கும்போது அவன் எவ்வித நமஸ்கார அர்ஹனவான். ஈச்வரத்வம் தான் நமஸ்கார ஸ்வாமித்வத்துக்குக் காரணம் என்பது ஸம்போதனத்தால் தெளிவு படுத்தப் படுகிறது.

அனீச்வராய தேவாந்தராய – ஈச்வரனல்லாத மற்ற தேவதைகளுக்கு, கதம்சித் – எவ்விதத்திலும் நமோ பவிதும், நமஸ்காரம் செல்லுவதற்கு, ந ஸாம்ப்ரதம் – தகுந்ததல்ல.

தெளிவான ஆயிரம் ந்யாயங்களால், ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் மூடர்கள் புத்தியில், மகேச்வரபத வாச்யன், நம: சேஷி என்பது ஏறுகிறதில்லை. துஷ்காலமுள்ளவன் கையில் வைக்கப்பட்ட நல்ல ரத்னமும் ஓடிவிடுமல்லவா? ப்ராப்தமில்லையானால், கைக்குக் கிடைத்ததும் நழுவி விடுமன்றோ? பாக்யமிருந்தால் தான் சிவன் நம: சேஷி என்ற உண்மைப் பொருள் விளங்கும். அல்லாது மயங்கி மடியவேண்டியது தான் பாத்ம புராணத்தில் ஈச்வரனுக்கு விஷ்ணு நமஸ்கரித்ததாகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

“தேவ தேவனான ஈசனே உமக்கு நமஸ்காரம். சாச்வதப் பொருளே! மாறாப் பொருளே! உமக்கு நமஸ்காரம் தங்களை நான் அறியமுடியவில்லை. உம்மை நீர்தாம் அறியமுடியம், நமஸ்காரம், நமஸ்காரம் உம்மைச் சரணமடைந்தேன். எனக்கு உம்மையறியும் கண்ணைக் கொடும். என்னால் நமஸ்காரம் தான் செய்யமுடியும் உம்மையறிய முடியவில்லை.” என்பது பாத்ம புராணம்.

நம: சேஷித்வம் என்பது வேத புராணங்களால், யஸ்மை நம: என்ற இந்த மந்த்ரத்தாலும் தெளிவு.

சுலோகம் 15

யா வஜ்ரிணீ பவதி சங்கர! சங்கினீ யா முத்ரா ச யா கமலினீ பரதோபதிஷ்டா | தாபிர் பவந்த்யபிநயா விபுதாந்தராணாம் மொளிஸ்ப்ருசா கரபுடாஞ்சலி முத்ரயா தே ||

நாடக மேடையில் நடிக்கும் ஜனங்கள் கூட நமஸ்கார முறையால், உம்மை ஸமிக்ஞை காட்டுகிறபடியால் நமஸ்கார முத்திரைக்கு நீர்தாம் அஸாதாரணமான அர்த்தம் என்று பரதநாட்டிய சாஸ்திரம் தெரிவிப்பதால், நம: சேஷித்வம் உமக்குத் தான் பொருந்தும் என்று விளக்கப்படுகிறது.

பதவுரை

சங்கர – சுகத்தைத்தரும் கடவுளே! பரதோபதிஷ்டா – பரத முனிவரால், அபிநய சாஸ்திரத்தில் உபதேசிக்கப்பட்ட வஜ்ரிணீதி யா முத்ரா – வஜ்ரிணீ யென்ற யாதொரு முத்திரை, சங்கினீ யா கமலினீதி ச – ச்ங்கினீ, கமலினீ யென்ற முத்ரைகளும், பவந்தி – இருக்கின்றவவோ தாபி: - அவைகளால், விபுதாந்தராணாம் – மற்ற இந்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற தேவதைகளின், அபிநயா பவந்தி, - அபிநயங்கள் அமைந்திருக்கின்றன. அந்தந்த முத்ரைகளால், அந்தந்த ஆயுதம் கொண்ட தேவதைகள் அஸாதரணமான அந்த அந்த அபிநயங்களால் தெரிவிக்கப் படுகிறார்கள். தே அபிநய: - உமக்கு அஸாதாரண அபிநயமானது மொளிஸ்ப்ருசா – தலைமேல் வைக்கப்பட்ட, கரபுடாஞ்சலி முத்ரயா – கூப்பிய இருகைகளாகிய அஞ்சலி முத்ரையால், பவதி – ஏற்படுகிறது.

       பரத  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதாவது:-

வஜ்ரிணீ முத்ரையால் (வஜ்ராயுதம்) இந்திரனையும் பத்மினி முத்ரையால் (பத்மம் தாமரை) பிரம்மாவையும், சங்கினீ முத்ரையால் (சங்கு) விஷ்ணுவையும், தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பிய அஞ்சலி முத்ரையால் (நமஸ்கார முத்ரையால்) ருத்ரனையும் அபிநயத்தால் தெரிவிக்க வேண்டும். (இங்கே ருத்ரன் என்றால் ஈச்வரன் என்றே அர்த்தம்) மற்றவர்களுக்கு ஆயுதம் அடையாளத்தால் அபிநயம் காட்டுவது போல, ஈச்வரனுக்கு த்ரிசூலம் ஆயுதமுத்ரையால் அபிநயம் விதிக்கப்படலாம். ஆயினும், பரதமுனிவர் அவ்வாறு ஆயுத முத்ரை விதிக்காமல், தலைக்குமேல் கை கூப்பிய நமஸ்கார முத்ரையால் அபிநயம் விதித்ததாலும். நம: சேஷித்வம் அவருக்குத்தான் பொருந்தும் என்பது அறிவிக்கப்பட்டது.

சுலோகம் 16

தத்தம் நம: கிமுபிசுச்ரும தேவதாப்ய: த்வாமந்தரேண நமஸா மவஸான பூமிம் | தாஸ்தத் க்ரஹீதுமனலன்ன ஹி க: சிதீஷ்டே சோரோபநீதமிவ தாரயிதும் கிரீடம் ||

இவ்விதம் நமஸ்காரங்கள் சிவபெருமானைச் சேர்ந்ததானது பற்றி, மூட ஜனங்களால் கொடுக்கப்பட்ட போதிலும் மற்ற தேவதைகள் நமஸ்காரங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுந்தவர்களல்ல. நான் சொந்தக்காரனல்ல என்று, கொடுத்த நமஸ்காரங்களைப் பெற்றுக் கொள்ளாமல், சொந்தக் காரனாகிய உமக்குத்தான் கொடுத்துவிட வேண்டியவர்கள். மாறுதலாகத் தவறிவந்த ஒரு பொருளை, நான் வைத்துக் கொள்ளாமல் ஒழங்கானவன், பொருளின் சொந்தக்காரனிடம் பொருளைச் சேர்த்து விடுவானல்லவா?

பதவுரை

தேவதாப்ய: - தேவாந்தரங்களுக்கு, தத்தம் – கொடுக்கப்படுகிற, நம: - நமஸ்காரத்தை, கிமபி – சில மந்த்ரங்களில் (நமோ ப்ரம்மணே, நமோஸ்த்வக்னயே) ஏன்றவைகளை சிலவற்றை, சுஸ்ரீஉம – கேள்விப்படுகிறோம். நமஸாமவஸான பூமிம் – நமஸ்காரங்களுக்குத் தாத்பர்ய விஷயமான, த்வாமந்தரேண உம்மைத்தவிர, தர: - மற்ற அந்த தேவதைகள் தத் – அந்த நமஸ்காரத்தை, க்ரஹீதும் – பெற்றுக் கொள்வதற்கு, அநலம் – சக்தியற்றவர்கள். ஹி – ஏனென்றால், கச்சிதபி – உம்மைத் தவிர வேறு ஒருவரும் அந்த நமஸ்காரத்தை. சோரோபநீதம் – திருடனால் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட, கிரீடமிவ – அரசன் தரிக்கத்தகுந்த தலையாபரணமாகிய கிரீடத்தைப்போல, தாரயிதும் – தாங்களே வைத்துக் கொண்டு தரித்துக்கொள்ள, நஈஷ்டே – சக்தியற்றவர்கள்.

ருக்வேதத்தில் உள்ள ரிக் ஒன்று கவனிக்கத் தகுந்தது.

ஸ்தோமம் வோ அத்ய ருத்ராய சிக்வஸே க்ஷயத் வீராய நமஸா திதிஷ்டன | ஏபி: சிவ ஸ்வவாம் ஏவ யாவபி. திவ: ஸிஷக்தி ஸ்வயசா: நிகாமபி:

இதன் பொருள்: - ஓ தேவர்களே! உங்களைக்குறித்து நாங்கள் கொடுக்கும் நமஸ்காரங்களையும், ஸ்துதிகளையும் ருத்ர பெருமானுக்குக் கொடுத்து விடுங்கள். அவைகளுக்கு அவர் தான் உரித்தானவர். அவர் ஸர்வசக்தன். வீரபத்திரன் முதலிய மகா மகிமை வாய்ந்த விபூதியுள்ளவர், எங்கும் புகழ் பெற்றவர் ஈச்வரன் என்று அஸாதரணமாக அழைக்கப்படுகிறவர். அவரவர்கள் வேண்டும் பயன்களை தேவர்களுக்கும், உங்களைப் போன்றவர்களுக்கும் கொடுக்க வல்லவர். ஆதலால் மற்ற தேவதைகள் தமக்குப் பிறரால் கொடுக்கப்பட்ட ஸ்துதிகளையும் நமஸ்காரங்களையும் ஈச்வரனுக்கு கொடுத்துவிட வேண்டும். அவர் தாம் நமஸ்காரங்களுக்கு சொந்தக்காரர். (நமஸ்காரம் சிவன் சொத்து) இல்லையேல் திருடன் கொடுத்த கிரீடத்தைத் தரிப்பதால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு கஷ்டம் அடைவது போல் தீங்கு நேரிடும் என்பது நன்கு உணர்த்தப்படுகிறது. நமஸ்காரம் செய்யத் தகுந்தவர்தாம் துதிக்கத்தகுந்தவர். காளிதாஸ மகாகவியும் – பிறரை துதிக்காதவரும், அனைவராலும் துதிக்கப்படுகிறவரும், பிறரை நமஸ்கரிக்காதவர், ஆனால் அனைவராலும் நமஸ்காரம் செய்யப்படுபவர் என்று பரமேச்வரனை வர்ணித்திருக்கிறார்.

இந்த அபிப்ராயத்துடன் தான், தைத்ரீய ஆரண்யகத்தில், சிசுமார துதியின் கடைசியில் பூதாதி பதியாக துதிக்கப்பட்ட கச்யபருக்கு “ஸர்வம் தே நம:” என்று கடைசியில் நமஸ்காரம் செய்யப் படுகிறது.

       ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் |       ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி ||

என்று ப்ரதிதினம் நாம் செய்யும் ஸந்த்யா வந்தன முடிவு சுலோகத்தில் மற்ற தேவதைகளின் நமஸ்காரங்கள், நதிகள் மழைஜலம் சமுத்ரத்தை அடைவதுபோல் விஷ்ணுவை அடைவதாகப் ப்ரசித்தமாகத் தெரிகிறது. ஆயினும் கீழ் சொல்லப்பட்ட மந்த்ரம் ஸோமம வ: ருக்வேதத்தில் உள்ளதால், இந்த சுலோகம் ஸ்ம்ருதி என்ற புராணவசன மாதலாலும் சுருதிக்கு முரண்பாடாக விருப்பதாலும் விரோதாதி கரண ந்யாயப்படி வேதம் சொல்லும் அர்த்தம் தான் கொள்ளப் பட வேண்டும். அதற்கு விரோதமான, இந்த ஸ்ம்ருதி (புராண) வசனம் தள்ளப்பட வேண்டியது. மேலும் கேசவம் ப்ரதிகச்சதி என்பதற்கு யாது பொருள் என்று விசாரிக்க வேண்டும். கேசவம் என்ற பதம் யெளகிகம். ‘கே’ பிரம்மா; ‘அ ‘ விஷ்ணு; ‘ஈச’ ருத்ரன் ஸம்ஹார கர்த்தா. இம்மூவரையும் தமக்கு உட்படுத்தி வைத்துக் கொண்டிருப்பவர் கேசவன். வ என்பது மத்வர்த்தீயமாகும். மும்மூர்த்திகளுக்குமீசனை நமஸ்காரங்கள் அடைகின்றன என்பது ப்ருக்ருத சுலோகத்திற்கு ஸமானார்த்தமானதால் விரோதமே கிடையாது.

சுலோகம் 17

தஸ்மை நமோ பவது யத்ர நிஷீதஸீதி ஸர்வம் நமஸ்ய மனயா து திசா மஹேச | அப்யோஷதீ: ப்ரதி நமோ வயமாமநாமோ தேஹீவ தேஹ மதிதிஷ்டஸி யேன ஸர்வம் ||

பரமசிவனைத் தவிர மற்றவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் வேத புராணங்களிலுள்ள நமஸ்காரங்களை ஸமஞ்சஸமாக நயனம் செய்வதற்காகச் சொல்லப்படுகிறது.

பதவுரை

யத்ர நிஷீதஸி – எங்கு அபிவ்யக்தமாக இருக்கிறீரோ, தஸ்மை – அந்த அதிஷ்டானத்துக்கும், நமோ பவது – நமஸ்காரம் இருக்கட்டும், இதி – என்ற, அனயா திசா – இந்த ந்யாயமாக, இந்த விதமாக, மஹேச! – பரமேச்வரனே! ஸர்வம் எல்லா வஸ்துவும், நமஸ்யம் – நமஸ்கரிக்கத்தகுந்தது. யேன – எந்தக் காரணத்தால், தேஹம் – உடம்பில், தேஹீவ – ஜீவன் இருப்பதுபோல, ஸர்வம் – எல்லா வஸ்துவிலேயும், அதிதிஷ்டஸி – நீர் அந்தர்யாமியாக வீற்றிருக்கிறீரோ, தேன – அந்தக் காரணத்தால், ஓஷதீரபி ப்ரதி – அசேதனமான செடி கொடிகளுக்கும் வயம் – நாங்கள், நம: - நமஸ்காரத்தை, ஆமநாம: - அடிக்கடி சொல்லுகிறோம்.

ஓம் நமோ ப்ரம்மணே என்ற மந்திரத்தை, அத்யயனத்தின் முடிவில் மூன்று தடவை சொல்வதல்லவா அத்யயன ஸம்ப்ரதாயம். அதைத்தான் ஆமநாம: என்ற க்ரியாபதம், ம்நா தாதுவால் அறிவிக்கிறது. பிரஹதாரண்யக அந்தர்யாமி ப்ராம்மணம் ச்வேதாச்வதரோபநிஷத், அதர்வசிரஸ், வாயவீய ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் ஈச்வரன் அத்தர்யாமியாக இருப்பது ப்ரமாணஸித்தம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது. ஆதலால்தான் மந்தாதிகாரிகளுக்கு ப்ரதீகோபாஸ்தி விதிக்கப்பட்டிருக்கிறது. மஞ்சளில்கூட பிள்ளையார் பூஜை செய்யப்படுகிறது. ஆனால் உத்தேச்யம் பரமசிவனுக்குத்தான். உலகில் யஜமானன் தரித்த புஷ்பமாலையை ஆதரவுடன் வைத்துக்கொள்வது யஜமானன் திருப்தியை அளிப்பதும் இந்திரன் சிவநிர்மால்யத்தை அலக்ஷ்யம் செய்து யானை தலையில் வைத்துக் கசக்கியதால் துர்வாஸரால் சபிக்கப்பட்டதும், அதிஷ்டான பூஜையால், அந்தர்யாமி திருப்தியடைவதை அன்வயல் திரேக ந்யாயத்தால் தெளிவாகக் காண்பிக்கிறதல்லவா? ஆதலால் உம்முடைய அதிஷ்டானமானதால் உலகில் எல்லாம் நமஸ்கரிக்கத் தகுந்ததே.

சுலோகம் 18

ஸர்வம் த்வயா ஜகத் அதிஷ்டிதமேவ மத்வா ச்வான: ச்ருதெள நமஸிதா: பதய:  ச தேஷாம் | லோகே புனஸ்தவ மஹேச்வர! பக்தியோகாத் ஆரோபிதா அபி வயம் பஹுமான பாத்ரம் ||

இந்த ந்யாயத்தை அனுஸரித்து தான் சத ரூத்ரீய மந்த்ரங்களில் அத்யந்த நிக்ருஷ்ட நாய் முதலிய ஜந்துக்களுக்கும் நமஸ்காரம் கூறப்பட்டிருக்கிறது.

பதவுரை

ஸர்வம் ஜகத் – எல்லா உலகமும், த்வயா – உம்மால் அதிஷ்டிதம் – ப்ரவேசிக்கப்பட்டிருப்பது, மத்வைவ – நினைத்துத்தான் (உண்மை தெரிந்து) ச்வான; - நாய்களும், தேஷாம் பதய: ச – அவைகளின் தலைவர்களும், நமஸிதா: - நமஸ்கரிக்கப்படுகிறார்கள். ருத்ரபாஷ்யத்திலும், வாயவீய ஸம்ஹிதையிலும் இக்கருத்து நன்கு விளக்கப்பட்டிருப்பது காண்க. மஹேச்வரா! வயமபி – நாங்களும், தவ - உங்களுடைய பக்தியோகாத் – பக்தி செய்த ஸம்பந்தத்தால், லோகே – உலகில், பகுமானபாத்ரம் – கெளரவத்திற்கு, மரியாதை பெறுவதற்கு விஷயமான நிலையை ஆரோபிதா: புன: - அடையப் பெற்றிருக்கிறோம் அன்றோ.

சிவதத்வ நிரூபணம், ஆதித்திய புராணம் வாயவீய ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில், ஈச்வர பக்தர்களையும் பூஜித்துப் போற்றவேண்டும்; பக்த அபசாரம், அபராதம், கடவுள் அபராதத்தைக் காட்டிலும் அதிகம் என்று விளக்கப் பட்டிருக்கிறது காண்க.

சுலோகம் 19

த்வேதா நமோ விம்ருசத: ப்ரதிபாதி லோகே வேதேஷுவா விஷமலோசன நான்யரூபம் | யத்தந்நமஸ்த்வயி ததீச்வரதா ப்ரயுக்தம் த்வத்ஸந்நிகர்ஷ விஹிதம் யதனீச்வரேஷு ||

பதவுரை

விஷமலோசன – முக்கண்ணனே, விம்ருசத: யோஜிக்கும் மனிதனுக்கு, லோகே – புராணங்களிலும், வேதேஷுவா – வேதங்களிலும், நம: - நமஸ்காரம். த்வேதா – இரண்டு விதமாக, ப்ரதிபாதி – குறிக்கப்பட்டிருப்பது விளங்குகிறது. அன்யரூபம் – மூன்றாவது ப்ரகாரமுள்ள நமஸ்காரம், ந – காணப்படவில்லை, யத் த்வயி நம: தத் – உம்மிடத்தில் செய்யப்படும் யாதொரு நமஸ்காரம் உண்டோ அது, ஈச்வரதா ப்ரயுக்தம் – நீர் ஸர்வேச்வரன் என்ற உண்மையால் ஏற்பட்டது. அனீச்வரேஷு யத் நம: தத் – ஈச்வரனல்லாத மற்றவர்களிடத்தில் காணப்படும் யாதொரு நமஸ்காரம் உண்டோ அது, த்வத் ஸந்நிகர்ஷ விகிதம் – நீர் அந்தர்யாமியாகவிருப்பது பற்றியும், உமது பக்தியால் ஏற்பட்ட மஹிமை பற்றியும் வந்தது, என்ற இரண்டுவிதம்தான் நமஸ்காரம். மூன்றாவது விதம் கிடையாது.

சுலோகம் 20

த்வத் ஸந்நிகர்ஷ க்ருத ஏவ நம: ப்ரயோக: ப்ராயோ வஸீயஸி யவீயஸி த்ருச்யமான: | ச்ரைஷ்ட ப்ரயுக்த இதி கல்ப்பயிதும் ந சக்யம் அச்ரேயஸாமபி நமாம்ஸி நிதர்சி தாநி ||

என்ற வேத வாக்யத்தால், நமஸ்காரம் முதலிய உபசாரங்களுக்கு ச்ரேஷ்டதா காரணமென்றல்லவா தெரிகிறது என்ற சங்கை நீக்கப்படுகிறது.

பதவுரை

த்வத் ஸந்நிகர்ஷ க்ருத ஏவ நம: ப்ரயோக: - உம்முடைய ஸம்பந்தத்தால் ஏற்பட்ட நமஸ்கார ப்ரயோகம், ப்ராய: - அனேகமாக, வஸீயஸி – சிறந்த ப்ராம்மணர்களிடத்திலும், யவீயஸி – தாழ்ந்த நாய்களிடத்திலும், த்ருச்யமானஸ்ஸந் – காணப்படுகிற போது, ச்ரைஷ்டப்ரயுக்த இதி – சிறப்பால் ஏற்பட்டதென்று, கல்ப்பயிதும் – முடிவு செய்வது, நயுக்தம் – தகுதியாகாது யத: - ஏனென்றால், அச்ரேயஸாமபி – தாழ்ந்த நாய்களுக்கும், நமாம்ஸி – நமஸ்காரங்கள், நிதர்சிதாநி – சதருத்ரீய மந்த்ரங்களில் காண்பிக்கப்பட்டன.

ஆதலால் உங்களுடைய ஸம்பந்தம் தான் நமஸ்கரிக்கப்படுவதற்குத் தகுந்த, அவ்யபசரிதமான காரணமாகும். சிறந்ததாக இருப்பது. தாழ்ந்த நமஸ்கரிக்கப்படும் இடங்களில்லாததால், வ்யபசரிதம் என்பது பற்றி நமஸ்கரிக்கப்படுவதற்குக் காரணமாகக் கொள்ள முடியாது என்று தாத்பர்யம். “நமஸ்க்ருத்யஹி” என்ற வேதம், உமது ஸம்பந்தத்தால் கிடைத்த சிறப்பை அநுவதிக்கிறது.

சுலோகம் 21

ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நாம நமஸ் த்வதீயம் ச்ரேஷ்டோஸி ய: க்ரதுபுஜாம் பதிரக்ரியானாம் | ச்ரேஷ்ட ச்ருதோஸி பகவந்நவிசேஷதஸ்த்வம் மந்த்ரேஷு க்ருச்ச்ர படிதேஷு ச ஸாம கானாம் ||

“தூஷ்யது துர்ஜன :” என்பது ஒர் ந்யாயம், துஷ்டன் ஸந்தோடஷப்படட்டும் என்று அவன் சொல்லும் கக்ஷியை அங்கீகரித்தே நமது கொள்கைக்குப் பாதகமில்லை என்று ஸாதிப்பது சாஸ்திரக்காரர்கள் வழக்கம். அந்த ந்யாயப்படி மேற்கொண்ட நமஸ்க்ருத்ய ஹி வஸீயாம்ஸம் என்ற வேதப்படி, சிறந்த நிலை தான் நமஸ்கரிக்கப்படுவதற்குக் காரணம் என்று அங்கீகரித்தாலும் நம் கக்ஷிக்கு பாதகமில்லை என்று சொல்லப்படுகிறது.

பதவுரை

ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நம: - சிறந்த மேன்மையால் ஏற்படும் நமஸ்காரமும், த்வதீயம் நாம – உம்மைச் சேர்ந்தது தான். அக்ரியானாம்பதி: - பசுபதியாகிய, ய: - த்வம் – யாதொரு நீர், க்ரது புஜாம் – தேவர்களுக்குள், ச்ரேஷ்டோஸி – சிறந்தவராக இருக்கிறீரோ, பகவன் – பகவானே! ஸாமகானாம் – சாமவேதிகளினுடைய, கிருச்ச்ரபடி தேஷு – க்ருச்ச்ர க்ரந்தத்தில் சொல்லப்படுகிற மந்த்ரேஷு – மந்த்ரங்களில், அவிசேஷத: - பொதுவாக (அபேக்ஷிகமன்னியில்) த்வம் – நீர், ச்ரேஷ்ட:- சிறந்தவர் என்று, ச்ருதோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர். “நமோ ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய என்பது ஸாமவேதிகளின் க்ருச்ச்ர க்ரந்தத்தில் படிக்கப்பட்டிருக்கும் மந்த்ரமாகும். நக்ஷத்ரேஷ்டியில் திருவாதிரை நக்ஷத்திர ப்ரகரணத்தில் சொல்லப்படும் ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமான ஏதி ச்ரேஷ்டோ தேவானாம் பதிரக்னியானாம் என்ற மந்த்ரம். பசுபதி ஸர்வ தேவர்களுக்குள் சிறந்தவர் என்பதை விளக்குவது இங்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.

சுலோகம் 22

தேவாந்தரைஸ் ஸஹ நமஸ்துதி ஹூதய ஸ்தே தோஷாய நால மலமேவ விபர்யயாய | புத்ரார்த்தின: சருவிதெள ஸஹ சந்த்ர மெளளே ஸோமேன ஹூத மனுசுஸ்ரீஉம ருத்ரமக்னிம் ||

இவ்விதம் 9 முதல் 21 முடிய 13 ச்லோகங்களால் வேத, புராண வசனங்களைக் கொண்டும், சுருதி, ஸ்ம்ருதி லோக (புராணம்) ந்யாய ரீத்யா, நம: சேஷித்வம் என்ற லக்ஷணம் அதிவ்யாபதி, அவ்யாப்தி, அஸம்பவ ரூப தோஷ த்ரயமில்லாமல் பரமசிவனைக் குறிக்கும் என்பதை விளக்கி விட்டு,

இப்போது உத்தேச க்ரமமாக வந்த இரண்டாவது லக்ஷணமாகிய பகவத் பத வாச்யத்வம் என்பதை 29 முதல் 34½ வரை 6½ ச்லோகங்களால் உபபாதனம் பண்ணும் நோக்கத்துடன்

நடுவில் 22 முதல் 28 முடிய 7 ச்லோகங்களால் சிவபெருமான் வேதங்களில் பிறதேவதையுடன் சேர்க்கப்பட்டு துதிக்கப்படுவதோ நமஸ்கரிக்கப்படுவதோ, கூப்பிடப்படுவதோ கிடையாது, தனியாகத்தான் துதி, நமஸ்காரம், ஆஹ்வானம் செய்யப்படுகிறார். ஏனெனில் ஸமாஸமாப்யாம் விஷமே பூஜாத: என்ற கெளதமாதி வசனப்படி, சிறந்தவரைத் தாழ்ந்தவர்களோடு ஒன்று கூட்டி மரியாதை செய்வது தகாது என்ற முறையுள்ளதல்லவா என்ற விஷயத்தை ப்ரதிபாதிப்பதால், சிவபெருமான் நம: சேஷித்வ லக்ஷணத்தையும் சிறப்பையும், ஸ்தாணா நிக்ந ந்யாயப்படி த்ருடப்படுத்துவதற்கு, இந்த ச்லோகம் ஆரம்பம்.

பதவுரை

தேவாந்தரை: ஸஹ - மற்ற தேவதைகளோடு கூட, நம : ஸ்துதி ஹூதய : - நமஸ்காரம், ஸ்துதி, ஆஹ்வானங்கள், தே – உம்முடைய, தோஷாய – சந்தோஷம் பொருட்டு, நாலம் – சக்தியுள்ளவை அல்ல. விபர்யயாயைவ அலம் – கோபத்தின் பொருட்டேயாகும். சந்திரமெளளே – சந்திரனை சிரசில் தரித்திருப்பவரே! புத்ரார்த்தின: - ஸந்ததியை விரும்புகிறவனுக்கு, சருவிதெள – விதிக்கப்பட்ட சருவை த்ரவ்யமாகக் கொண்டயாகத்தில், ஸோமேன ஸஹ – ஸோமதேவதையோடு கூட, ஹூதம் – கூப்பிடப்படுகிற, ருத்ரம – ருத்ரனை, அக்னிம் – அக்னி தேவதையாக, அனுசுச்ரும – நாங்கள் வேதங்கள் வாயிலாக அறிகிறோம். ஆதலால் ஸோமாரெளத்ர சருவில், தாங்கள் ஸோமனோடு சேர்ந்து பூஜிக்கப்படவில்லை. ஸோமனும் அக்னியும் சேர்ந்து பூஜிக்கப்படுகிறார்கள்.

விரிவுரை

மாத்வா ருத்ர சுக்ருதாமா நமோபி: - ருத்ரதேவதையே! உம்மைப் பிறருடன் சேர்த்து நமஸ்கரிப்பதால் கோபிக்கச் செய்ய மாட்டோம். வ்ருஷப – வேண்டியதை வர்ஷிக்கும் ஸ்வதந்த்ர தெய்வமே! துஷ்டுதீ – மற்றதேவதைகளுக்கு சமமாகச் செய்யும் ஸ்துதியாலும், மா சுக்ருதாம – கோபமூட்ட மாட்டோம்; மா சுக்ருதாம ஸஹூதீ – வேறு தெய்வங்களோடு சேர்த்துக் கூப்பிடுவதாலும், (யாஜ்யா புரோனுவாக்யா – மந்த்ரங்களால் சேர்த்து யக்ஞத்துக்கழைப்பதாலும்) கோபிக்கச் செய்யமாட்டோம். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் நிருக்தத்தில் சொல்லப்பட்டிருப்பதாவது.

கிம் ச துல்ய நமஸ்காரை: தேவாந்தரகாமிபி: |       துஷ்டுத்யா ஸத்ருச ஸ்துத்யா ஸமானாஹ்வான       கர்மணா ந வயம் சுக்ருதாம த்வாம் ஸர்வதேவ நமஸ்க்ருதம் ||

சிவபெருமானையும் விஷ்ணுவையும் கூடச்சேர்த்து ஸமமாக பாவிப்பவன் சண்டாள துவ்யனாகிறான். அவன் ஸங்கர ஜாதியைச் சேர்ந்தவனென்பது அனுமானம் செய்யப்படலாம். சூர்யனுக்கும் மினுமினுப் பூச்சிக்கும் போல, சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் வித்தியாசமுளது என்றெல்லாம், தத்வம், சிவதத்வ நிரூபணம், ஆதித்ய புராணம், பராசர புராணம், ஸ்காந்தம் ஹூத ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் விவரிக்கப்பட்டிருப்பதை காண்க. ஸ்ரீமத் பாகவத்தின் 3, 4, 8-வது ஸ்கந்தத்தில் விஷமுண்டு உலகனைத்தையும் காத்த சிவபெருமானுக்கு நிகரான தெய்வம் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை, வைஷ்ணவர்களும் (முக்யமாக வைஷ்ணவப் பற்றுதல் உள்ள ஸ்மார்த்த ப்ராம்மணர்களும் தி.வி.அ) நன்கு கவனித்து தத்துவறிய வேண்டிய விஷயமாகும்.

       ஸோமா ரெளத்ரம் சரும் நிர்வபேத் ப்ரஜாகாம: என்பது சந்தானத்துக்காக விதிக்கப்பட்ட யக்ஞத்தைத் தெரிவிக்கும் வேதவாக்யமாகும்.

சுலோகம் 23

அக்னிம் ப்ரக்ருத்யகலு ருத்ரபதம் ப்ரயுங்க்தே தத் ப்ராமஹணம் பவதி யத்ர தயோஸ் ஸஹூதி: | ஆஹ்வானமத்ர பவத: ப்ருதகேவ த்ருஷ்டம் யத் ப்ராதரக்னிமிதி ஸூக்த வித: படந்தி ||

ஸோமா ரெளத்ர சரு விதியில் ஸோமனோடு சேர்த்துக் குறிக்கப்படும் ருத்ரன் தாங்கள் அல்ல அக்னிதான் என்பது அடுத்த இரண்டு அர்த்தவாத வாக்கியங்களால் தெளிவாகிறது.

       “ஸந்திக்தேஷு வாக்யசேஷாத்” என்றல்லவா, ஜைமினியின் மீமாம்ஸ வாக்ய ந்யாயம்?

அக்தா சர்க்கரா உபதம் தாதி என்ற விதியில் பொதுவாக நனைத்த கல்லை மேடைகட்ட உபயோகிக்க விதியிருந்தாலும், நெய்யில் நனைக்கப்பட்ட கல்லை மேடைகட்ட உபயோகிக்க வேண்டுமென்று விசேஷமான பொருள். தேஜோவை க்ருதம் என்ற துதி, பர அர்த்தவாதத்தினால் கொள்ளப்படுவது வழக்கமல்லவா என்ற நோக்கத்துடன், அந்த சந்தேகத்தைத் தெளிய வைக்கும் அர்த்தவாதங்களை எடுத்துக் கூறுகிறார்.

பதவுரை

யத்ர தயோ: ஸஹூதி: - எந்த ஸோமாரெளத்ர சருவில் ஸோமனுக்கும் ருத்ரனுக்கும் சேர்ந்து ஆஹ்வானம் காணப்படுகிறதோ, தத் – அந்த, ப்ராம்மணம் பவதி – அர்த்தத்தை நிர்ணயித்துக் கொடுக்கக் கூடிய அர்த்த வாக்யம் இருக்கிறது, இங்கு ப்ராம்மணபதம் விதி வாக்யத்தைக் குறிக்காது. அர்த்தவாத வாக்கியத்தைக் குறிக்கும். சேஷே ப்ராம்மண சப்த: என்று ஜைமினி விதிவாக்யத்திற்குப் போல, அர்ந்தவாத வாக்கியத்திற்கும் பிராம்மண பதம் வாசகம் என்பதை நிலை நாட்டியிருக்கிறார். அக்னிம் ப்ரக்ருத்யகலு – அக்னியைச் சொல்லியல்லவா, ருத்ரபதம் – ருத்ரன் என்ற பதத்தை. ப்ரயுங்க்தே – ப்ரயோகம் செய்கிறார். அத்ர – தங்களைக் கூப்பிடுமிடத்தில், பவத : - ஆஹ் வானம், - தங்களைக் கூப்பிடுவது, ப்ருதகேவ – தனியாகத்தான், த்ருஷ்டம் – காணப்படுகிறது, ஹூக்தவித: - ஹூக்தங்களை கண்டு பிடித்தவர்கள், யத் – எந்த ஹூக்தத்தை, ப்ராதரக்னி மிதி – ப்ராதரக்னிம் ப்ராதரிந்திரம் ஹவாமஹே என்பது முதலாக, படந்தி – படிக்கிறார்களோ, அங்கு உம்மைத் தனியாக அல்லவா கூப்பிடுவது தெளிவாகக் காணப்படுகிறது.

சுலோகம் 24

அக்ன்யாதிபிஸ்தவ மஹேச்வர! ஹூதிசங்கா மாபூத் இதி ப்ரக்ருதமப் யனுஷங்க யோக்யம் | மந்த்ர: க்ரியா பத மபாஸ்ய பதாந்தரேண த்வாமா ஹ்வயந் நுதபதேன பினத்தி ரீ திம் ||

பதவுரை

       மந்த்ர – ப்ராரதரக்னிம், ப்ராதரிந்திரம் ஹவாமஹே

என்ற மந்த்ரம், அக்ன்யாதிபி: அக்னி முதலிய தேவதைகளோடு, தவ – உம்மை, ஹூதிசங்கா கூப்பிடப்படும் ஸந்தேஹம். மாபூத் இதி – (ஜனங்களுக்கு) ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன், ப்ரக்குதம் – முன்பு சொல்லப்பட்ட, அனுஷங்க யோக்யம் – பின் வாக்கியத்தில், ஸம்பந்தப் படுத்தத் தகுத்ததாயிருந்த போதிலும் க்ரியாபதம் – ஹவாமஹே என்ற வினைச்சொல்லை, அபாஸ்ய – விட்டுவிட்டு, உமது வாக்கியத்தில் அனுஷங்க ந்யாயப்படி, மற்றதேவதை வாக்யத்தில் போல சேர்த்து ஸம்பந்தப்படுத்தாமல் விட்டு, பதாந்தரேண – உத ருத்ரம் ஹவேம் என்றபடி, ஹவேம என்று மற்றொரு தனி வினைச் சொல்லால், த்வாம – உம்மை, ஆஹ்வயந் – கூப்பிடுகிறதாய் இருந்து கொண்டு, உத - பதேன – உத என்ற பதத்தினால், அபி – என்ற சப்தத்திற்கு ஸமானமான அர்த்தத்தைக் கொடுக்கும் சக்திவாய்ந்ததினால், ரீதிம் – உமக்கு தேவதாந்தர ஸாத் ருச்யத்தை, மஹேச்வரா! பினத்தி – அடியோடு விலக்குகிறது. ருத்ரம் உத – ருத்ரனைக்கூட, ஹவேம் – தனியாகக் கூப்பிடுவதற்கு அவகாசம் அடைகிறோம் என்பது தாத்பர்யம்.

உத பதத்தால் பிரித்து, மற்றவர்களுக்கு அனுஷங்க ந்யாயப்படி, ஸம்பந்தப் படுத்தப்பட்ட க்ரியா பதத்தைக் தங்களுக்குச் சேர்க்காமல், தனியாக வினைச்சொல் கூறி உம்மைக் கூப்பிட்டது, எங்கும் எப்பொழுதும் உம்மைத் தனியாகவே கூப்பிட வேண்டும், மற்ற தாழ்ந்த சிறு தேவதையுடன் சேர்த்துக் கூப்பிட்டு ஸ்துதி நமஸ்காரம் செய்வது தவறு; உமக்கு ப்ரதீயாகாது என்ற தத்வத்தை நன்கு விளக்குகிறது.

சுலோகம் 25

ந்யாஸீ க்ருதம் வஸு பலா தமரை ரவாப்தும் அன்வாகதோ ருதிதவானிதி ருத்ரமக்னிம் | ருத்ராம்ஸ்த்வதுத்பவதயா மருதோ கணான்வா ருத்ராவணேன ச பவந்த மவைமி ருத்ரம் ||       அக்னியை ருத்ர சப்தத்தால் சொல்வதற்கு காரணம் விளக்குகிறார்.

பதவுரை

அமரை: - தேவர்களால், ந்யாஸீ க்ருதம் – நியாஸமாக ஒப்படைக்கப்பட்ட, வஸு – ஸொத்தை, பலாத் – பலாத்காரமாக, அவாப்தும் – அடைவதற்கு, அன்வாகத: - பின் தொடர்ந்து வரப்பட்டவன், ருதித வான் – அழுதான் அல்லது அழச்செய்தான், இதி – என்ற காரணத்தால், அக்னிம் – அக்னி தேவதையை, ருத்ரம் – ருத்ர சப்தத்தால் சொல்லப்படுவதாக, அவைமி – அறிகிறேன். மருத: - ஸப்த மருத்துக்களையும், கணான்வா – உமது சபையோர்களான பார்ஷதர்களையும், த்வதுத்பவதயா – உம்மிடமிருந்து உண்டான காரணத்தால், “கார்ய காரணமோ ரபேத ந்யாயேன” குடத்தை மண் என்பதுபோல, ருத்ரான் – ருத்ர சப்தவாச்யர்களாகவும், பவந்தம் – உம்மை, ருத் த்ராவணேன – துக்கத்தையும் பாபத்தையும் நசிக்கச் செய்வதால், ருதி என்ற வேதஸ்வரூபமான சப்தத்தைக் கலப்பத்தின் முதலில் பிரம்மாவிற்கு ததாதி கொடுப்பதாலும், ருத்ரம் –ருத்ர சப்தவாச்யனாக, அவைமி – அறிகிறேன்.

சுலோகம் 26

யக்ஞேபி ருத்ரபதமாருண கேதுகோக்தம் தத் சப்த மீச்வர ! ததீயமபி ஸ்மரந்தி | யத்தத் ப்ரதேசகத ருத்ர பதாவகாசே யக்ஞஸ்ய சப்த மனுசுச்ரும ஸாமகேப்ய: ||

யக்ஞே அபி – யாகம் என்ற அர்த்தத்திலும், ருத்ர பதம் – ருத்ரம் என்ற பதமானது, ஆருண கேது கோக்தம் – ஆருண கேதுகம் என்ற சயனத்திலும், சூர்ய நமஸ்காரத்திலும் உபயோகிக்கப்படும் மந்த்ரங்கள் அடங்கிய தைத்ரீய ஆரண்யகம் முதல் ப்ரச்னத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈச்வர – பரமேச்வரனே! ததீயமபி – அவனுடைய பொருளையும், தத்சப்தம் – அவன் பெயரால் சொல்லப்படுவதாக, ஸ்மரந்தி – பெரியவர்கள் கருதுகிறார்கள். ஸ்வஸ்வாமி பாவ ஸம்பந்தந்தால், ராஜாவைச் சேர்ந்தவர், ராஜாவென்று சொல்லப்படுவது ஸஹஜமே. அது போல ருத்ரனை ஸ்வாமியாகக் கொண்ட யக்ஞம் ருத்ர சப்தத்தால் சொல்லப்படுகிறது. ஸாமவேத ச்ருதி பர்யாலோசனாயாம் யக்ஞம் ருத்ர சப்தவாச்யமாக விருப்பது, ருத்ரஸ்வாமிகம் என்பதால் என்ற அர்த்தம் தெளிவாகிறது. யத் – எத்தக் காரணத்தால், தத்ப்ரதேசகத ருத்ரபதாவகாசே – அந்த ஆருண கேதுகம் என்ற பெயருள்ள யஜுர்வேத ஆரண்ய பாகத்திலுள்ள ருத்ரத்தின் ஸ்தானத்தில், ஸாமகேப்ய: - ஸாமவேதம் கரை கண்டவர்களிடமிருந்து, யக்ஞஸ்ய சப்தம் – யக்ஞஸ்ய என்ற சப்தத்தை, அனுசுச்ரும – கேட்கின்றோம்.

ஒரே அர்த்தத்தைத் தெரிவிக்கும் சுருதிகளில், பதபேதமாக ஓரிடத்தில் யக்ஞ சப்தமும், மற்றோரிடத்தில் ருத்ரபதமும் கூறப்படுவதால், கதிஸாமன்ய ந்யாயத்தால் இரண்டு பதங்களும் ஒரே பொருளை குறிக்கின்றன என்பது ஏற்படுமாதலால், யக்ஞத்தை ருத்ர சப்தம் யஜுர் வேதத்தில் குறிப்பிடுவது திண்ணம்.

<சுலோகம் 27

ஸந்தாப்ய ரோதயிதரி ப்ரஸபம் ஜனானாம் ஆஹுர் ஜ்வரேபி விஷமேக்ஷண ! ருத்ர சப்தம் | ரெளத்ரஞ்ச தத்ப்ரக்ருதிகம் ப்ரதிரூபகம் வா சப்தாந்தரம் பவதி வாயஸ சப்த கல்ப்பம் ||      ருத்ர பதம் ஆறாவது அர்த்தமாக, கடும் ஜ்வரத்தையும் குறிக்கும்.

பதவுரை

விஷமேக்ஷண – முக்கண்ணனே! ப்ரஸபம் – பலாத்காரமாக, ஸந்தாப்ய – தபிக்கச் செய்து, ஜனானாம் – ஜனங்களை, ரோதயிதரி – அழச்செய்கிற, ஜ்வரேஅபி – ஜ்வரம் என்ற அர்த்தத்திலும், ருத்ர சப்தம் – ருத்ரம் என்ற பதத்தை ஆஹு: - ப்ரயோகம் செய்கிறார்கள், ரெளத்ரம் ச – ரெளத்ரம் என்ற பதம் தத்ப்ரக்ருதிகம் – இந்த ஜ்வரத்தைக் குறிக்கும் ருத்ர சப்தத்தின் மேல், தஸ்யேதம் என்ற பாணி ஸூத்ரப்படி, அண் ப்ரத்யயம் வந்ததால் ஏற்பட்ட சப்தமாகக் கொள்ள வேண்டும். ப்ரதி ரூபகம் சப்தாந்தரம் வா பவதி அல்லது ரெளத்ரசப்தம் தத்தித ப்ரத்யயம் வராமலே, தத்தித ப்ரத்யயாந்தம் போலத் தோன்றும் வேறொரு புதிய சப்தமாகவும் ஆகலாம், வாயாஸா சப்தகல்ப்பம் – வாயஸ, ராக்ஷஸ முதலிய சப்தங்கள் வயஸ், ரக்ஷஸ் பதத்தின் மேல், அண் ப்ரத்யயம் வைத்து வந்த, தத்திதாந்த சப்தங்களாகவும் கருதப்படுகின்றன. அல்லது அண் என்ற தத்திதம் வராமல், பூராவும் தத்திதாந்தம் போலத் தோன்றும் வேறு பதங்களாகவும் கருதப்படுகின்றன. அவை போல்தான் ரெளத்ரமென்ற சப்தமும், கடுமையான ஜ்வரத்தை ருத்ரசப்தம் சொல்வதால், அதிலிருந்து வந்த கடுமையைத் தெரிவிக்கிறது என்பது யுக்தம். CENTER>

சுலோகம் 28

ஸந்த்யேவ தத்திதபத ப்ரதிரூபகாணி பூரிணி பாகவத ஸாத்வத ஸந்நிபாநி | ஸ்யாத் தாத்ருகேவ பகவானிதி சப்தரூபம் ஷாட்குண்யஹேதுகமபி த்வதுபைதி நாந்யம் ||

பதவுரை

தத்திதபத ப்ரதிரூபகாணி – தத்திதாந்தம் போலத் தோன்றும் அகண்ட பதங்கள், பாகவத ஸாத்வதஸந்நிபாநி – பாகவதஸாத்வத, மைத்ர முதலிய, பூரிணி – பலபதங்கள், ஸந்த்யேவ – இருக்கின்றன. பகவானிடி சப்த ரூபம் – பகவான் என்கிற சப்த ரூபமும், தாத்ருகேவ ஸ்யாத் – அப்படியே தத்திதாந்த ப்ரதிரூபகம் அகண்ட பதம் என்றே இருக்க வேண்டும். பவான் என்பதுபோல பகவான் என்பது பூஜ்ய பதம் ஆனதால், ரூட பதமாகக் கொள்ளவேண்டும் தனவான் என்பதில் போல மது பூ ப்ரத்யயம் வரவேண்டிய ஆவச்யகமில்லை. உம்மிடமே ஈச்வர சப்தம் ரூடமென்று நிரூபிக்கப் பட்டதால், பூஜ்யதையும் ஈச்வரனாகிய உமக்காகையால், பகவான் சப்தம் முக்கியமாக உமக்குத் தான் பொருந்தும்.அப்படி தனவான் என்பது போல, பக: அஸ்யாஸ்தீதி பகவான் என்று வ்யுத்பத்தி செய்து, தத்திதாந்தமாகக் கொண்டு, ஆறுகுணங்கள் உடையவரைக் குறிக்கும் யெளகிக சப்தமாகக் கொண்டாலும், ஷாட்குண்யஹேதுகமபி, அந்த பகவான் என்ற சப்தரூபம், த்வத் – உம்மைத் தவிர, அன்யம் – மற்றவரை, ந உபைதி – அடையத்தக்கதில்லை குறிக்கத்தல்ல.

(1) தேவாஸுரர்கள் யுத்தம் நேர்ந்ததும் தேவர்கள் தம் ஸொந்த த்ரவ்யங்களை அக்னியிடம் கொடுத்து, ந்யாஸமாகச் செய்து விட்டுச் சென்றதாகவும், பிறகு ஜயம் பெற்றுவத்து கேட்க, அக்னி கொடுக்கமனமில்லாமல் ஓட, பின்பற்றப்பட்டு அழுததாகவும் தேவர்களை அழச் செய்ததாகவும், வரலாறு யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் அக்னி சில இடங்களில் ருத்ர பதத்தால் குறிக்கப் படுகிறார்.

(2) ருத்ரனிடமிருந்து உண்டானதால், மருத்துக்கள், பார்ஷதர்கள் தந்தைபெயரால் கூறப்படுகிறார்கள்.

(ஆத்மாவை புத்ர நாமாஸி என்ற ந்யாயப்படி)

(3) துக்கத்தையும் பாபத்தையும் அழிப்பதால்,

(4) ப்ரம்மாவிற்கு வேதத்தை உபதேசிப்பதால், நாதத்தால் ஸகல உலகத்தை ஸந்தோஷப்படுத்துவதால் நாதஸ்வரூபி என்பதால் ஓங்காரத்தால், வேதசப்தத்தால், ஜபிப்பவர்களுக்கு இஷ்டத்தைக் கொடுப்பதால், கஷ்டப்படும் ஜனங்களைப் பார்த்து, தந்தைபோல தயையால் தான் கஷ்டப் படுவது போல் அழுவதால், ப்ரளய காலத்தில் ஸம்ஹார மூர்த்தியைப் பார்த்து உஅலக்ம் அழுவதால் மகாதேவோ மர்த்யான் ஆவிவேச என்றபடி கத்திக் கொண்டு, ஜனங்கள் உட்ப்ரவேசித்து ஆயுளை முடிப்பவர் என்றதால் மோகாத்மக மாயையை நீக்குவதால் பக்தர்களின் ஸம்ஸார துக்கத்தை விலக்குவதால் என்ற 9 விதமான வ்யுத் பத்தியும் ஒருங்கே பொருந்துவதால் ருத்ரசப்தத்திற்குப் பரமேச்வரன் முக்கிய பொருளாவார்.

(5) ருத்ராஸ்ய ஸ சிர: ப்ரதிததாதி என்று யக்ஞத்தில் ருத்ர சப்தப்ரயோகம்.

(6) ருத்ர ஏனம் பூத்வா ஹந்யாத் என்று வாஸ்தோஷ்பதி ஹோமம் செய்யாதவனுக்குக் கடுமையான ஜ்வரம் ஸம்பவிக்கும் என்ற இடத்தில் ருத்ரசப்தம் ஜ்வரவாசகம். ரெளத்ர சப்தம் கடுமை என்ற அர்த்தத்தைக் குறிப்பது இதிலிருந்து தான் தத்திதாத்த சப்தமான தென்று, ஆறு அர்த்தங்கள் ருத்ர சப்தத்துக் கூறப்பட்டன.

சுலோகம் 29

ஐச்வர்ய மக்ர்ய மனுபாதி மதீ ச லக்ஷ்மீ: ஞானம் ச வீர்ய யசஸீ ச விராகதா ச | ஏதே குணா: ஷடபி தே பகஸம்க்ஞ யோக்தா: ஸந்தீத்யனேன பகவந் ! பகவா நஸி த்வம் ||

இவ்விதம் முதல் சுலோகத்தில் குறிக்கப்பட்ட ஐந்து லக்ஷணங்களில், நம : சேஷித்வம் என்ற முதல் லக்ஷணத்தை அதிவ்யாப்தி இல்லாததாக நிரூபணம் செய்து, அஸாதாரணமாக நிலை நாட்டிய பிறகு, இரண்டாவது லக்ஷணமான பகவத் பதவாச்யத்வம் என்றதை, அஸாதாரணமாக சிவபெருமானுக்கே உரித்து என்று இது முதல் 6½ சுலோகங்களால் விளக்குகிறார். (29 - 34½).

பதவுரை

அக்ர்யம் – சிறந்த, ஐச்வர்யம் – ஈசத்தன்மையும் அநுபாதி மதீ – காரணத்தால் ஏற்படாத, ஸ்வபாவகமாள, லக்ஷ்மீ: ச ஸம்பத்தும், ஞானம் ச – அறிவும், வீர்ய யசஸீ ச – பலமும் புகழும், விராகதா ச – வைராக்யமும், இந்த உலகிலுள்ள பயன்களில் ஆசையற்றிருத்தல், ஏதே – இந்த ஷடபிகுணா: - ஆறு குணங்களும், பக ஸம்க்ஞா – பக என்ற பதத்தால் உக்தா: சொல்லப்படுகின்றன தே – அவைகள், ஸந்தி – உம்மிடத்தில் இருக்கின்றன இத்யனேன – என்ற காரணத்தால், பகவந் – பெரியவரே, த்வம் – நீர், பகவானஸி – பகவத் சப்த வாச்யராக இருக்கிறீர்.

சுலோகம் 30

ஐச்வர்ய மீசவரபத ச்ருதி ருக்ர சப்தோ வீர்யம் யச : சிவபதம் ச தவாபிதத்தே | ஸர்வக்ஞ காம ரிபு சப்த ஸமர்த்திதெள ச ஸார்வக்ஞ ராக விரஹெள பவத: புராரே ||       மேற்கூறிய ஈசத்வம் முதலிய ஆறு குணங்கள் சிவபிரானிடத்து உள்ளதற்கு ப்ரமாணம் சொல்லப்படுகிறது.

பதவுரை

ஈச்வரபத ச்ருதி : ஈச்வரன் என்ற பதமாகிய சுருதியானது, (இங்கு சுருதியென்றால் வேதமென்பது பொருள் அல்ல, பூர்வமீமாம்ஸையில் விநியோஜக ப்ரமாணங்கள் ஆறில் முதலாவதாகக் கூறப்பட்ட ஜைமினி பரிபாஷைப்படி, நிரபேக்ஷோ.. சப்த : ச்ருதி : - எந்த சப்தத்தால் கேட்டவுடனே பிறர் ஸந்தர்ப்பாதிகள் உதவியில்லாமல் அர்த்தம் அறியப்படுகிறதோ, அது சுருதி என்பது கருத்து) ஈச்வரன் கோயில் என்றால் ஸந்தர்ப்பம் தேவையில்லாமல் சிவபெருமான் ஆலயம் தான் அர்த்தமாகுமல்லவா).

தவ ஐச்வர்யம் – உம்மிடமிருக்கும் ஈசத்வத்தை அபிதத்தே – சொல்லுகிறது. உக்ரசப்த : - உக்ர என்ற சப்தம் (லிங்கவிதமாக), வீர்யம் – பலத்தையும் சிவபதம். யச : ச – புகழையும், அபிதத்தே – சொல்லுகிறது. புராரே – த்ரிபுரஸம்ஹாரக் கடவுளே, (ஸ்தூல ஸூக்ஷ்ம, காரண சரீரங்களை எரித்து, ஞானத்தால் முக்தியளிப்பவரே !) ஸார்வக்ஞராக விரஹெள – ஸகல அறிவும், ஆசையற்றலும், ஸர்வக்ஞ சப்த – ஸர்வக்ஞ சப்தத்தாலும், காமரிபு சப்த – காமரிபு – (காமனை எரித்தவர்) என்ற சப்தத்தாலும், ஸமர்த்திதெள பவத : - நிலைநாட்டப்பட்டவைகளாக இருக்கின்றன.

உக்ர என்ற பதம் குரூரன் என்ற பொருளைத் தராது பலமுள்ளவன், பிறரால் அவமதிக்கப்படாதவன் என்ற பொருளைத்தான் குறிக்கும்.

       உக்ரோஸ்யுக்ரோஹம் ஸ ஜாதேஷுபூயாஸம்

என்ற பிரார்த்தனை காணப்படுகிறது. அங்கு நீங்கள் பிறரால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்கிறீர். நானும் அவ்வண்ணமே, பந்துக்களால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பது தான் பொருத்தமானது.

       “உக்ரேப்ய: கச்சித் ஓஜீயாந்”

என்ற மற்ற ச்ருதியும், ஓ ஜீயாந் – பலமுள்ளவர்களுக்குள் மிகுந்த பலமுள்ளவர் என்ற பொருளைத்தான் கொடுக்கிறது.

       அதவா, அசேஷ கல்யாண குணைக கன ஈச்வர : |       சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வார்த்த வேதிபி : ||

என்ற புராண வசனப்படி, ஸமஸ்த கல்யாணகுண கூட்டத்தைச் சொல்லும் பதம் சிவபதம் என்பது திண்ணம். அக்கூட்டத்தில் புகழும் அடங்கியபடியால், சிவபதம் புகழைச் சொல்வதாக மூலத்தில் கூறப்படுகிறது.

இந்த்ரியம் முதலிய உதவி அபேக்ஷையில்லாமல் எல்லா விஷயத்தையும் அறியும் சக்தியுடைமை ஸர்வக்ஞ்யத்வம் எனப்படும். நமக்குக் கண் அபேக்ஷை இல்லாமல், ரூபஞானம் வருவதில்லை. ஸாதன அபேக்ஷையில்லாமல், ஸகல ஞானமும் இருக்க வேண்டும் அது தான் ஸார்வஞ்யம் என்பது வாயவீயஸம்ஹிதையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஈச்வரனை நிலைநாட்ட எழுதப்பட்ட ந்யாய குஸுமாஞ்சலி என்ற கிரந்தத்தில் ஸ்ரீமான் உதயனாசார்யார் அவர்களும் ஈச்வரனுடைய ஸார்வஞ்யத்தை இவ்விதமே வர்ணித்துள்ளார்.

       ஸாக்ஷாத் காரிணி, நித்ய யோகினி

பாத்வார அனபேக்ஷ்ய ஸ்திதெள பூதார்த்தானுபவே என்று ஆரம்பித்து, தன்மே ப்ரமாணம் சிவ : என்று, சிவனே ஸர்வக்ஞர் என்று அபிப்பிராயத்துடன் முடித்திருக்கிறார். CENTER>

சுலோகம் 31

அர்த்த : ச்ரியா சிவ ந கோபி விரஜ்யதஸ்தே ச்ரேஷ்டஸ்தயா த்வமஸி தாசதயீபிருக்த : | லப்தும் ச்ரியம் ஜனிம சாரு விசித்ரரூபம் அப்யர்ச்சிதம் தவ மருத்பி ருதாஹரந்தி ||

ஆறுகுணங்களில் ஸ்ரீ என்ற குணமுள்ளவராக சிவபெருமான் கூறப்படவில்லையே. வாஸுதேவனல்லவா ஸ்ரீபதி எனப்படுகிறார் என்ற சங்கை ஏற்பட, ஆத்மானந்த த்ருப்தனாகிய சிவபெருமானுக்கு விஷயங்களில் வெறுப்பு இருந்த போதிலும், ஸ்ரீமான் என்ற பதம் சுருதிகளில் காணப்படாவிடினும், ச்ரியா ச்ரேஷ்ட : என்ற அடைமொழி சிவபெருமானுக்குக் காணப்படுவதாலும், மற்றெல்லாரும் ஸ்ரீயை அடைய விரும்பி சிவபெருமானைப் பூஜித்து, அஷ்டைச்வர்யங்களை அடைந்தார்களென்று காணப்படுவதாலும், சிவபெருமான் ஸ்ரீமான் என்பதில் ஸந்தேகமில்லை, என்று இந்த ச்லோகத்தில் விளக்குகிறார்.

பதவுரை

சிவ – சிவபெருமானே ! விரஜ்யத : - உலக விஷயங்களில் முற்றிலும் பற்றுதல் இல்லாத, தே – உமக்கு ச்ரியா – லக்ஷ்மியால், ந கோப்யர்த்த : - ஒரு பயனுமில்லை. தாசதயீபி : - ருக் வேதத்திலிள்ள ருக் மந்த்ரங்களால் தயா ச்ரேஷ்ட : - அந்த லக்ஷ்மியால் நிரம்பியவராக, சிறந்த லக்ஷ்மீவானாக, த்வம் நீர், உக்தோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர்.

       ச்ரேஷ்டோ ஜாதஸ்ய ருத்ர : ச்ரியாஸி       தபஸ்தமஸ் தபஸாம் வஜ்ரபாஹோ

என்பதல்லவா ருக்வேத மந்த்ரம். இந்திர உருவமெடுத்து ஆவிர் பவித்த தாங்கள், தபஸாம் – ஸ்தோத்ரம் செய்யப்படுகிறவர்களுள், தபஸ்தம : - அதிகமாக ஸ்துதிக்கப்படுபவர், ச்ரியா ச்ரேஷ்டோஸி – ஸம்பத்துள்ளவர்களுக்குள்ளும் சிறந்தவராக இருக்கிறீர். அநித்யமான உலக ஸுகத்தைத் துறந்து, ஸஞ்சல லக்ஷ்மியை வேண்டாதிருப்பதல்லவா நித்யமான ஸ்ரீ ஆகும். இது பற்றியே.

ஸா ஹி ஸ்ரீ ரம்ருதா ஸதாம் என்று, வேதங்கள் தான் அழியா ஸம்பத்தென்பது பொருந்தும். வேதத்ரய ப்ரதிபாத்யனான ஈசானன் தான் அழியாத ஸம்பத்துள்ளவன் என்பது தாத்பர்யம். ச்ரியம் லப்தும் : ஸம்பத்தை யடைவதற்கு, விசித்ர ரூபம் – விசித்ர உருவமுள்ள, சாரு – அழகான, மங்களகரமான, தவ - உம்முடைய, ஜனிம – மகாலிங்கரூபமாக ஆவிர்ப்பவித்த அருணாசலேச்வர, மத்யார்ச்சுனேச்வர உருவத்தை, மருத்பி : - தேவகணங்களால், அப்யர்ச்சிதம் – நன்கு பூஜிக்கப்பட்டதாக, உதரஹரந்தி – சொல்லுகிறார்கள்.

மகாலிங்க மூர்த்தியை ஆராதித்ததால் ஸகல தேவர்களும் தங்கள் பதவிகளையும், ஸம்பத்தையும் அடைந்தார்கள் என்பது பிரஸித்தம். அதிகம் சொல்வானேன். வாஸுதேவன் ருக்மிணி முதலிய மகிஷிகளை மணந்ததும், ஸாம்பன், சம்பு, ப்ரத்யும்னன் முதலிய புத்ரர்களை யடைந்ததும், உபமன்யு மக்ர்ஷியின் பிரஸாதத்தால் கிடைத்த உபதேசத்தின் படி, சிவபெருமானைப் பூஜித்து உபாஸித்ததால் தான் என்ற விஷயம் அனுசாஸன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

ருக்வேதம் : - தவ ச்ரியே மருதோ மர்ஜயந்த : ருத்ர யத்தே ஜனிம சாரு சித்ரம் பதம் யத் விஷ்ணோருப மந்நிதாயிதேன பாஸி குஹ்யந் நாமகோனாம்.

ருத்ர – ஹே பரமேச்வரா ! மருத : - தேவர்கள், யத் – யாதொரு பிரஸித்தமான, தே – உம்முடைய, சாரு சித்ரம் – மங்களகரமான, ஆச்சர்யமுண்டு பண்ணும், ஜனிம – மகாலிங்க ப்ராதுர்பாவத்தை, மர்ஜயந்த : - 12 சுபத்ரவ்யங்களால், சதருத்ரீய மந்த்ர ஜபத்துடன் அபிஷேகம் செய்தார்கள். (எதற்காக) ச்ரியே – லக்ஷ்மியை அடைவதற்காக எந்த ப்ராதுர் பாவத்தைப் பூஜித்தார்கள்?

விஷ்ணோ :- பரமம் பதம் லிங்கம் – என்பது ஸனத்குமரரஸம்ஹிதையில் விஷ்ணுவரல் சொல்லப்பட்ட வசனம். விஷ்ணோ : பரமம பதம் என்ற சொற்றொடர் மகாலிங்க மூர்த்தியைக் குறிப்பதாக, விஷ்ணுமூர்த்தியால் கூறப்பட்டது எனில். தன்னையே குறிக்க வில்லை யென்பது விளங்குமல்லவா? மேலும் ருத்ர என்ற விளி வேற்றுமை, விஷ்ணுவை பூஜித்தார்கள் என்ற அர்த்தத்துடன் பொருந்தாது.

       தத் பதம் லிங்கமாக்யாதம் சிவோ யேனைவ த்ருச்யதே       தல்லிங்கஸ்யாபி மாகாத்ம்யம் யுவாம் த்ரஷ்டும் ந ஹி க்ஷமெள,       ஸூரயோ யத் ப்ரபச்யந்தி தத் விஷ்ணோ : பரமம் பதம்.       தத்விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய :       திவீவ சக்ஷுராததம்.       தத்விப்தஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸ : ஸமிந்ததே       விஷ்ணோர் யத் பரமம் பதம் ||

முதலிய சுருதிகளும், உப ப்ரும் ஹண, புராண வசனங்களும், விஷ்ணோ : பரமம் பதம் என்ற சொற்றொடர், வ்யாபகமான, சிறந்த, பிரமம் விஷ்ணுக்களும் காண்பதற்கரிய, மகாலிங்க, ஜ்யோதிர்மய மூர்த்தியைக் குறிப்பிடுவதாக நன்கு விளக்குகின்றன.

சுலோகம் 32

ஸத்யம் க்ஷமா த்ருதி ரதிஷ்டிதிராத்மபோத: ஸ்ருஷ்டிர் விராக தபஸீ மதிரீச்வரத்வம் | நத்வத் வியந்தி ந கதாசிதபைதி தர்ம: கிந்தந் நயத் பவதி தே குண ஸம்மதேஷு ||

வாசஸ்பதி மிச்ரர் என்ற வேதாந்த நிபுணர் வேதத்தையும் வேதப் பொருளான சிவபெருமானையும், சிலேடையாக அடைமொழி கொடுத்து வணங்குகிறார்.

       ஷட்பி ரங்கை ருபேதாய விவிதை ரவ்யயைரபி |       சாச்வதாய நமஸ்குர்மோ வேதாய ச பவாய ச ||

வேதத்தின் உண்மை விளங்க சிக்ஷா, வ்யாகரணம் சந்த :, நிருக்தம, ஜ்யோதிஷம், கல்ப்ப: என்ற ஆறு அங்கங்கள் தேவை. ஈச்வரனுடைய ஆறு குணங்கள் (அங்கங்கள்) ஆவன.

       ஸர்வக்ஞதா த்ருப்தி ரனாதி போத:       ஸ்வதந்த்ரதா நித்ய மலுப்தசக்தி:       அனந்தசக்தி: ச விபோர் விதிஞா:       ஷடாஹுரங்கானி மஹேச்வரஸ்ய || அவ்விதமே அழியாத, அவ்யயமான மற்றும் பத்து குணங்கள் கூறப்படுகின்றன.       ஞானம் வைராக்ய் மைச்வர்யம் தபஸ் ஸத்யம் க்ஷமா த்ருதி:       ஸ்ரஷ்ட்ருத்வ மாதம் ஸம்போதோ ஹ்யதிஷ்டா த்ருத்வமேவ ச ||       அவ்யயானி தசைதானி நித்யம் திஷ்டந்தி சங்கரே |

ஆதலால் ஸகல குணங்களுக்கும், (சமுத்ரம்போல சிறந்த பதார்த்தங்களுக்கு) அழியா இருப்பிடமான, ரத்னாகரன் சிவபெருமான் தான்.

பதவுரை

ஸத்யம் – தர்மத்தையும், ஸத் வித்யையையும் தெரிவிக்கும், பிரம்ம ப்ரதிபாதகமான வேதவாக்யம். (சிவ பெருமான் மூச்சு போல் வெளிவந்தமையால், அவருக்குச் சொந்தமாக, அவருடைய அழியா குணமாக சொல்லப்படுகிறது). க்ஷமா – பக்தர்களின் அபராதத்தைப் பொறுத்தல். ஆசுதோஷி என்ற பெயர். சிவபெருமானுக்கே உரித்து; வணங்குவதால் உடன் ஸந்தோஷமடைகிறவ்ர்; உடன்வரம் அளிப்பவர். இவ்விதம் தான் பாணினி வ்யாகரணத்தில் உணாதிஸூத்ரம் ஈச்வரசப்த்த்துக்கு அர்த்தம் கூறுகிறது.

       அச்னோதே ராசுகர்மணி வரட் ச

சீக்ரம் ஸந்தோஷத்தால் பயன் கொடுக்கும், எங்கும் நிரம்பிய ஆசுதோசஷர் என்பது ஈச்வர பதத்தின் உண்மைப் பொருளென்று, உணாதி ஸூத்ரத்தின் முதலிய வீரச்செயல்கள்; அதிஷ்டிதி: - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக ஸர்வ ஆதாரமாக இருத்தல்; ஆதமபோத: - அகண்ட சைதன்ய ரூபமாக ப்ரகாசித்தல்; ஸ்ருஷ்டி:- உலகங்கனனைத்தையும் படைத்தல்; (பிரம்மாதிபதி; பிரம்மணோதிபதி ; என்பது ச்ருதி; உலகங்களைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்த சிவபெருமானைச் சேர்ந்தது ஸ்ருஷ்டி என்பது உண்மையே) விராக தபஸீ – வைராக்யம்; உலகத்தைப் படைப்பதில் தடையற்ற ஸத்யஸங்கல்ப்பம்; மதி :- கார்யங்களை ஆலோசித்தல் : ஈச்வரத்வம் – தலைவனாக இருந்து காத்தல், இவைகள் பத்தும், தவத் – உம்மிடமிருந்து, ந வியந்தி – எப்பொழுதும் பிரிந்து போகிறதில்லை. ஆகையால் இவை பத்தும் அவ்ய்யங்கள் எனப்படுகின்றன. வேற்றுமை மாற்றத்தால் மாறாத சப்தத்திற்கு அவ்யயம் என்ற பெயர் பாணினியால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, இந்த பத்து குணங்களும் ஒருபொழுதும் பிரியாமல் மாறாமல் இருப்பதால் அவ்யயங்கள் எனப்படுவது யுக்தமே, தர்ம : - அணிமாதி அஷ்டைச்வர்யங்களும். கதாசிதபி – ஒருபொழுதும், தவத் – உம்மிடத்திருந்து, நாபைதி – விலகுகிறதில்ளை. குணஸம்மதேஷு – குணமென்று கூறப்படுவதுள் தேயத் ந பவதி – உம்மிடம் இல்லாத அந்தக் குணம். கிம் – என்ன இருக்கிறது? ஈச்வரன் அனந்த, ஸகல கல்யாணகுண பரிபூர்ணன் என்பது தாத்பர்யம்.

       நாஸ்தி யத்யதகல்யாணம் தத்ததஸ்ய கதாசன |       கல்யாணம் ஸகலஞ்சாஸ்தி பரமாத்மா சிவோ யத || என்ற புராணவசனங்கள் சிவ பத அர்த்தத்தை நன்கு விளக்குவது இங்கு காணப்பட வேண்டும்.       ஒளதார்ய, வீர்ய, காம்பீர்ய மாதுர்ய மகராலய: என்ற சிவபெருமான் அடைமொழியும் இவ்விஷயத்தை விளக்கிக் கூறுகிறது.

சுலோகம் 33

நைவேச்வராந் ந யசஸா மஹதோ ந வீராந் ந ஸ்ரீமத : க்ஷிதிபதீனபி ஸார்வபெளமாந் | அந்யாத்ருசானாபி மஹேச்வர ! வீதராகாந் ப்ரஞாவதோ பகவத : ப்ரவதந்தி வ்ருத்தா : ||

ஆறு குணங்கள் அடைந்தவர் பகவான் எனப்படுவர்; பத்து அழியாக் குணங்கள் நிரம்பியவர் பகவான் எனப்படுவர், என்ற மத த்வயப்படி, சிவபெருமாந்தான் பகவத் சப்த வாச்யர் என்று நிரூபிக்கப்பட்டது. சில பெரியார்கள் ஞானம் வைராக்யம் இந்த இரண்டு குணங்கள் நிரம்பியிருந்தாலும், அவரே பகவான் என்று சொல்வார்கள்.

பதவுரை

வ்ருத்தா :- பெரியோர்கள், ஈச்வராந் நைவ – பணம் இருப்பதற்காக அல்ல, யசஸா மஹத : நைவ – புகழ் மிகுந்தவர் என்பதற்கல்ல, வீராந் ந – வீரர்களையும் அல்ல; ஸ்ரீமத் : க்ஷிதி பதீத் ஸார்வ பெளமானபி ந – பூமியின் தலைவர்களான ஸம்பத்தைப் படைத்தவர்களையுமல்ல, அந்யா த்ருசானபி – இந்த குணங்கள் இல்லாவிடினும் வீதராகாந் ப்ரஞாவத : - ஆசையற்ற, சிறந்த அறிவு வாய்ந்தவர்களையே பகவத : ப்ரவதந்தி – பகவத் சப்த வாச்யர்களாகக் கூறுகிறார்கள். ஆதலால், ஞானமூர்த்தியான, சிறந்த வைராக்யம் படைத்த உம்மை, பகவான் என்பது பெரியோர்களின் உணமையான் கருத்து.

சுலோகம் 34

ஆதர்வணா மதனசாஸன ! நிப்ருவாணா: நாமா நி நாம பகவானிதி தே நிராஹு :| அத்யாச்ரமோ பநிஷதாஹ பகேசவ்ரம் த்வாம் நைகண்டுகா : ச பகவந்த முசந்தி பூஜ்யம் ||       பகவான் என்ற பதம் ஈச்வரனைக் குறிப்பது என்று சுருதியும் சொல்லுகிறது.

பதவுரை

மதனசாஸன – (பிறப்புக்காரணமான) மன்மதனை அடக்கியவரே ! ஆதர்வணா :- அதர்வவேதம் பயின்றவர்கள், தே – உம்முடைய, நாமாநி – பெயர்களை நிப்ருவாணா :- வ்யுத்பத்தியால் விளக்குகிறவர்களாய், பகவான் இதி நாம – பகவான் என்ற பெயரை. நிராஹு : - வ்யுத்பத்தியால் உம்மைச் சேர்ந்ததாக வெளிப்படுத்துகிறார்கள். அத கஸ்மாத் உச்யதே மஹாதேவ :- ஸர்வான் பாவான் பரிதயஜ்ய, ஆத்மஞானயோக, ஐச்வர்யே மஹதி மஹீயதே தஸ்மாத் உச்யதே மகாதேவ : என்பது அதர்வ வேதம் மகாதேவ சப்தத்தின் அர்த்தத்தைக் கூறுகிறது. அப்படியே அத கஸ்மாத் உச்யதே பகவான்– ய: ஸர்வான் பாவான் நிரீக்ஷதி, ஆத்மஞானம் நிரீக்ஷயதி, யோகம் கமயதி தஸ்மாத் உச்யதே பகவான் என்று பகவத் சப்தத்தின் அர்த்தத்தையும் தெளிவாகக் கூறுகிறது. ஆதலால், பங்கஜ சப்தம்போல, பகவான் சப்தம் யோக ரூடியாகக் கருதப்பட்டு, சிவபெருமானைத்தான் குறிக்கும். இங்கு சப்தாதேவ ப்ரமித : என்ற வ்யாஸ ஸூத்ரத்தின் கருத்து ஸாதகமாகக் கொள்ளப்பட வேண்டும். சுக்ரா சார்யாரும் சுக்ரபகவான் என்று கெளணமாகச் சொல்லப்படுகிறார். அவ்விதம் வந்த பெயர் தான் பாகவதம் என்பது, கிருஷ்ண சரித்திரம் விளக்கும் வாஸுதேவ புராணத்துக்கு ஏற்பட்ட பேயர். மஹேச்வர! சிவபெருமானே! த்வாம்-உம்மை அத்யாச்ரமோபநிஷத்-பஸ்மோத் தூளனம் செய்து கொள்பவர்களுக்கு, உபதேசிக்கப்படுகிற அத்யாச்ரமோப நிஷத்தும்,

தர்மாவஹம் பாபநுதம் பகேசம் என்று, பகேசம்-பகவான் என்று கூறுகிறது, நைகண்டுகா: ச – நிகண்டு என்ற வ்யுத் பத்தி க்ரந்தத்தை யறிந்தவர்களும்,

பூஜ்யம் பகவந்தம் உசந்தி, பூஜிக்கத் தகுந்தவர்களையே பகவான் என்று சொல்லுகிறார்கள். பூஜிக்கத்தகுந்தவர் தாங்கள் ஆதலால், பகவத் சப்தம் உங்களைத்தான் குறிக்கும்.

தத்ர பவான் பகவானிதி சப்தோ வ்ருத்தை: ப்ரயுஜ்யதே பூஜ்ய : என்பது நிகண்டு வசனம் நமஸ்தே அஸ்து பகவத: அதீஹி பகவோ ப்ரும்ஹேதி என்ற சுருதிகளிலும், பூஜ்யனை பகவத் சப்தம் கூறுகிறது. சுருதி நிகண்டுகளில், பூஜிக்கப்படுகிறவர்கள் அனைவர்களையும் பகவத் சப்தம் குறிப்பிடுவதாக இருந்தாலும், வாக்கு, மனது, உடல், முககரணங்களால் துதித்துப் பூஜிக்கத்தகுந்தவராக சுருதி. தமுஷ்டுஹி என்பது உம்மையே கூறுவதால், நீர்தான் பகவான் முக்கியமானவர். மற்றாவ்ர்களை உம்மைப்போல் பூஜிக்கப் படவேண்டியது பற்றி ஸிம்ஹோ மாணவக: என்பது போல பகவத் சப்தம் குறிக்கிறது என்பது தாத்பர்யம். ஆதலால், ஆறு குணங்களோ, ஞான வைராக்கியமோ, பூஜ்யதையோ, இம்மூன்றில் எது, ப்ரவ்ருத்தி நிமித்தமாகக் கொண்டாலும், பகவான் தாங்கள் தாம். மற்றவர்கள் உம் ஸம்பந்தத்தால் பொருளாவார்கள். ஆதலால் பகவத் சப்த வாச்யத்வம் அதிவ்யாப்தி இல்லாத இரண்டாவது லக்ஷணமாவது திண்ணம்.

       அதாபி யத் பாத நகாவஸ்ருஷ்டம்              ஜகத் விரிஞ்ச்சோ பஹ்ருதார்ஹணாம்ப : |       ஸேசம் புனாத்யன்யதமோ முகுந்தாத்              கோநாம லோகே பகவத்பதார்த்த : ||

என்ற வசனம் முகுந்தனைத்தவிர, பகவத்சப்த வாச்யத்வம் வேறு ஒருவனுக்குக் கிடையாது என்று கூறுகிறது. ஆதலால் முகுந்தனிடத்தில் அதிவ்யாப்தம், சிவபெருமானிடம் அவ்யாப்தம் இரண்டாவது லக்ஷணம் என்ற கேள்வி எழும்புகிறது கீழே சொல்லப்பட்ட அதர்வண வேதம் அத்யாசரமோபநிஷத் என்ற மந்த்ரோப நிஷத் ஆகிய சுருதிகள் சிவபெருமானை பகவானாகக் கூறும்போது, அதற்கு விருத்தமான இந்த வசனம் விரோதாதிகரண ந்யாயப்படி தள்ளப்பட வேண்டியதுதான். ஒளதும் பரீ என்னும் கட்டையப் பூராவும் வஸ்த்ரத்தால் மறைக்க வேண்டும் என்ற ஸ்ம்ருதிகூட ஒளதும்பரிக் கட்டையைத் தொட்டுக் கொண்டு ஸாமகானம் செய்யவேண்டும் என்று சொல்லும் சுருதிக்கு விரோதமானதால் தள்ளப்பட வேண்டியதாக ஜைமினி முனிவர் சொல்லிய மீமாம்ஸ ந்யாயம் இருக்கிறது.

மேலும் இந்தவாக்யமே த்வேசஷத்தால் எழுதப்பட்டதென்பது தெளிவு. ஸேசம் ஜகத் புனாதி என்றதால், வாஸுதேவன் பாததீர்த்தம் சிவபெருமானையும் புனிதமாக்கினதாகச் சொல்வது ஸரியான முறையல்ல அபத்தம். மகாலிங்கம், ஜ்யோதிர்லிங்கம், ப்ராதுற்பவித்ததும், ப்ரம்மா, விஷ்ணு இருவர்களும் அன்னம் வராகம் ரூபம் கொண்டு மேலும் கீழும் பலகாலம் தேடிச் சென்றும் காணமுடியாத வரலாறும், ஈச்வரனுக்கு ஆயிரம் நாம அர்ச்சனை செய்த வாஸுதேவன், ஒர் தாமரை குறைந்ததால், தன் கண்ணை பக்தியுடன் அர்ச்சித்து, ஈச்வரனிடம் சக்ராயுதம் பெற்றதும், ப்ரம்மா ஸாரதியாகவும், விஷ்ணு பாணமாகவும் வர, ஸாதனங்களை எதிர்பாராமல் ஸங்கல்ப்ப மாத்திரத்தில் நடந்த த்ரிபுர ஸம்ஹார வரலாறும், தேவர்கள் அமிர்தம் வேண்டி ஸமுத்ரத்தைக் கடைந்தபோது உண்டான கால கூட விஷ தாபத்தால் ஓடிவாடிய பிரம்ம விஷ்ணுக்களையும் மற்றும் ஸகலதேவர்களையும், சிவபெருமான் விஷத்தை தாம் ஏற்றுக் காப்பாற்றிய சரித்திரத்தாலும், பிரம்ம விஷ்ணுக்களையும் தன்வசப்படுத்தின காமனை, எரித்த வரலாற்றாலும், தேவியின் ஸ்வயம் வரத்தில், குழந்தை யுருவமெடுத்து வந்த சிவபெருமான், விஷ்ணு முதலிய தேவர்களை ஸ்தம்பிக்கச் செய்த வரலாற்றாலும் மத்ஸ்ய, கூர்ம வராஹ, த்ரிவிக்ரம, ந்ருஸிம்ஹம் விஷ்வக்ஸேனர் முதலியவர்களை அடக்கிய வரலாறுகளாலும், ப்ரம்மாவின் ஐந்தாவது தலையைப் பொய் சொன்னதற்காகக் கிள்ளி சதுர் முகனாகிய சரிதத்தாலும், சுருதி ஸ்ம்ருதி புராண இதிகாஸங்கள் அனைத்தும் சிவபெருமானை மகாதேவனாக அங்கீகரிக்கும்போது, அவரை சுத்தப்படுத்தியது முகுந்தன் பாத தீர்த்தம் என்று ஒரு வசனம் எழுதி வைத்தது எங்ஙனம் ப்ரமாணமாகும்?

த்யஜேத்ஏகம் குலஸ்யார்த்தே, க்ராமஸ் யார்த்தே குலம் த்யஜேத் | க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹியாத்மார்த்தே ப்ருதி வீம் த்யஜேத் என்றல்லவா உலக ந்யாயமும், பகாஸுரானால் உபத்ரவும் நீங்க, தினந்தோறும் ஒரு சிறு பிள்ளையை ஏகசக்ரபுரத்தில் தியாகம் செய்து வந்த பாரத வரலாற்றுப்படி, பல சுருதி விரோத மானத்தால், கீழே சொன்ன முகுந்தன் பாததீர்த்த சுலோகமும், த்வேஷத்தால் எழுதப்பட்டது தள்ளத் தகுந்தது.

கங்கா தேவி மலையரசன் பெண்ணாக ஹிமய மலையிலிருந்து விழும் ஸமயம், கர்வாப ஹரணத்துக்காக ஈச்வரனால் ஜடையில் தாங்கப்பட்டாள். விஷ்ணுபாத தீர்த்தமாக வாமனாவதார காலத்தில் இருந்தது வேறு ஜன்மாவில் என்றல்லவா ஜன்ம பேதம் சொல்லப்படுகிறது.

       த்வம் தேவேஷு ப்ராம்மணோஸி. அஹம் மனுயேஷு.       விஷ்ணோராதி பத்யம் க்ஷத்ரம் ஸ்ம்ருதம்.

என்ற ப்ரமாணப்படி, சிவபெருமான் ப்ராம்மணத்வம், ப்ராம்மணாதிபத்யம் படைத்தவர். முகுந்தன் க்ஷத்திரியன், க்ஷத்ரியாதி பத்யம் படைத்தவன் என்ற சித்தாந்தமும் ஸர்வஸம்மதமாக இருக்க, பிராம்மணர் சிவன், க்ஷத்ரியன் விஷ்ணு பாத தீர்த்தத்தால் புனிதனானான் என்று, விவேகமுள்ள எந்த மனிதனும் சொல்லமாட்டான், ஒப்புக் கொள்ளமாட்டான்.

       ப்ரம்ஹாசாஸெள அதிபதி : ச ப்ரம்ஹாதிபதி :

என்ற கர்மதாரய ஸமஸத்தை, நிபாதஸ்தபத் யதிகரண ந்யாயப்படி ஆச்ரயித்து, சிவபெருமான் ப்ராம்மணர், ப்ராம்மணர்களுக்கு அதிபதி என்பதை ஈசான மந்த்ரம் நன்கு வெளியிடுகிறது.

       ஈசான ஸர்வவித்யானாம்  …… ப்ரம்மணோதிபதி:

சுலோகம் 35

பூஜா தமுஷ்டுஹிவதா விஹிதா மஹேச மந்த்ரேண வாங்மனஸ காய நிபந்தனாதே | ஸர்வாபி ரப்யுபநிஷத்பி ருபாஸனோக்தா நாராயணோப நிஷதம் பரிபாவயாம : ||

பகவத்பத வாச்யம்போல, பூஜாசேஷித்வம் என்பதும் சிவபெருமானுக்கு லக்ஷணம் அதிவ்யாப்தி இல்லாததாகச் சொல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

பதவுரை

மஹேச – சிவபெருமானே ! தமுஷ்டுஹிவதா மந்த்ரேண – தமுஷ்டுஹி என்ற பதத்துடன் ஆரம்பிக்கும் சதருத்ரீயமந்த்ரத்தினால், தே – உம்முடைய, வாங்மனஸ் காய நிபந்தனா பூஜா – வாயால் துதிப்பதும் மனதால் த்யானிப்பதும் உடம்பால் நமஸ்கரிப்பதுமாகிய பூஜையானது விஹிதா –விதிக்கப்பட்டிருக்கிறது, ஸர்வாபி ருபநிஷத்பி:- எல்லா உஅபநிஷத்துக்களால், உபாஸனேக்தா – உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறது. அபி – ஆனாலும், நாராயணோப நிஷதம் – நாராயணோப நிஷத் என்ற மஹோப நிஷத்தை, பரிபாவயாம :- யுக்திகளைக் கொண்டு தத்வார்த்தம் என்ன வெளியாகிறது என்பதாக விமர்சனம் செய்வோம். மஹோப் நிஷத்தில் சிவன் உபாஸிக்கப்படுவதாகவும் முகுந்தன் உபாஸகனாகவும் தாத்பர்யம் வெளிப்படுத்தப்பட்டால், மற்ற உபநிஷத்துக்களிலும் சிவபெருமான்தான் உபாஸ்யர் என்ற கருத்து தெளிவாகி விடும். என்ற நோக்கத்துடன், 36 முதல் 55 முடிய, 20 செய்யுள்களால், மஹோப்நிஷத் உபாஸ்யத்வம் என்ற மூன்றாவது லக்ஷணத்தை அதிவ்யாப்தி, அவ்யாப்தி தோஷம் இல்லாமல் ஸமன்வயப் படுத்துகிறார்.

ய: எவர் த்ரிஷு அக்னிமனீகம், ஸோமம், சல்யம் விஷ்ணும் தேஜனம் – என்ற சுருதிப்படி கட்டை, தார், கூறு என்ற மூன்று பாகங்களாக அமைந்த, விஷ்ணு, ஸோமன், அக்னி, தேவர்களாகிய பாணத்தை உடையவரும், அல்லது கர்ணபர்வசரிதப்படி விஷ்ணுவை பாணமாக கொண்டவரும், ஸுதன்வாலிங்க புராணப்படி மேருவை வில்லாகக் கொண்டவரும், கர்ணபர்வப்படி ஸம்வத்ஸர தேவதையை வில்லாகக்கொண்டவரும், அல்லது சாந்திபர்வப்படி பிரணவம் என்ற ஓங்காரத்தை வில்லாகக் கொண்டவரும், (ஓங்காரம் வில்லாகவும், காயத்ரீ நாணாகவும், பஞ்சாக்ஷரங்களை பாணமாகவும் வைத்து த்ரிபுரஸம்ஹாரம் செய்ததாக சாந்தி பர்வா சொல்லிகிறது,) ப்ரணவ வ்யாக்ருதி ஸஹிதி காயத்ரீ ஜபத்தாலும், பஞ்சாக்ஷர ஜபத்தாலும், ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண மென்ற முப்புரம் நீங்கி முக்தியடையலாம் என்ற தாத்பர்யத்தை விளக்குகிறது.

ய: விச்வச்யபேஷஜஸ்ய க்ஷயதி ஸம்ஸார நிவ்ருத்தி மருந்தாகிய ஞானத்துக்கு எவர் இருப்பிடமோ, எவர் ஞானப்ரதாதாவோ, தமு – அந்த சிவபெருமானையே, ஏ மனதே ஸதுஹி – துதிப்பாயாக, மஹே – உத்ஸவ காலத்தில், ஸோமனஸாய – நல்ல மனம் பெறவேண்டி, தமுயக்ஷ்வ அவரையே குறித்து மனதால் த்யானம் செய். அஸுரம் – உயிரைக் கொடுக்கும் ஆபத்பாந்தவனாகிய, ருத்ரம் தேவம் – ருத்ரக் கடவுளை, நமோபி :- நமஸ்காரங்களால் துவஸ்வ – பணிவிடை செய்வாயாக. என்று ருக் வேதமந்த்ரம் முக்கரணங்களால் பூஜிக்க வேண்டியது சிவன் ஒருவனையே என்ற விதியை, உபரிதாரண ந்யாயப்படி கற்பிக்க வேண்டுமென்பதத் தெளிவாகக் கூறுகிறது. மேற்படி ந்யாயம் மீமாம் ஸகர்களுக்குப் பிரஸித்தம். வாயவீய ஸம்ஹிதையில் ஸாம்பூஜா த்ரிதா ப்ரோக்தா மனோவாக்காய ஸாதனை : || என்று சொல்லப்படுவதும் காண்க.

சுலோகம் 36

வாக்யம் யதாஹ தஹராந்த ருபாஸனம் தே யத்வா ஸமர்ப்பயதி ரூப விசேஷமஸ்மை | அந்தர்கதைரபி ததெள பயிகாபி தேயை : பாவ்யம் வசோபிரிதி வாக்யவிதாம் ப்ரவாத : ||

அங்காங்கு எல்லா உபநிடதங்களிலும் உபாஸனை செய்யப்பட வேண்டுமென்று முதலில் விதிகாணப்படுகிறது. பிறகு உபாஸிக்கப்படவேண்டிய, செயப்படு பொருளின் பெயர், உருவம், குணவிசேசஹ்ங்கள் கூறப்படுகின்றன. பிறகு உபாஸனையின் பயன் கூறப்படுகிறது. இவ்விதம் ப்ருஹதராண்யகம், பஹ்வ்ருசாரண்யகம். ஸாமவேத ஸம்பந்தமான தலவகார உபநிஷத், அதர்வவேத ஸம்பந்தமான முண்டகோபநிஷத், அதர்வசிரஸ், அதர்வசிகை, கைவல்யம், ச்வேதாச்வதரம், தைத்ரீ யோபநிஷத், ரிக்வேத ஸம்பந்தமான ஐத்ரேயகம், முதலிய பல இடங்களில், உபநிஷத்துக்களில், உபாஸனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் நாராயணோப் நிஷத்துக்கு மஹோப நிஷத் என்ற ப்ரஸித்தி இருப்பதால், அதைப் பரிசீலனை செய்து, உண்மையான அர்த்தம் கூறப்பட்டால், மற்ற உபநிஷத்துக்களின் அர்த்தமும் அப்படித்தான் என்பது கைமுதிக ந்யாயப்படி ஸித்திக்குமாதலால், நாராயணோப் நிஷத்தைப் பரிசீலனை செய்ய ஆரம்பிக்கிறார்.

யாஞ்ஞிக்யுபநிஷத் ப்ரோக்த உபாஸ்யத்வம் பரமசிவனுடைய அஸாதாரணமான அதிவ்யாப்டி தோஷமற்ற மூன்றாவது லக்ஷணம் என்றதை ஸ்தாபிக்க ஆரம்பிக்கிறார். தைத்ரீய உபநிஷத் நாலாவது ப்ரச்னத்தில், அதாவது தைத்ரீயாரண்யகம் பத்தாவது ப்ரச்னத்தில், பரமேச்வரன் உபாஸனை ஸம்பந்தமாக மூன்று அநுவாகங்கள் கூறப்படுகின்றன. அணோரணீயாந் – என்பது 12-வது அநுவாகம் ஸ்ஹஸ்ர சீர்ஷம் தேவம் என்பது 13 வது அநுவாகம் பிறகு சில அநுவாகங்களுக்குப் பிறகு இதன் முடிவு ருதம் ஸத்யம் என்ற 23 வது அநுவாகத்தில் காணப்படுகிறது. சப்த ப்ராணா : என்ற மந்த்ரங்களால், ஸ்கலஜகத்துக்கு பரிணாம்யுபாதான காரணமான, அதிஷ்டாதாவான, மகேச்வரனை விளக்கி, அவர் அனுக்ரஹத்தால் பச்யதி வீத சோக: என்று ஸகல துக்கங்கள் நீங்கும்படி ஸாக்ஷாத்காரம் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது, இவ்விதமே ச்வேதாச்வர மந்த்ரமும் கூறுகிறது. தேனேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் என்ற மந்த்ரம் வரையில் உபாஸ்ய மகேச்வரப்ரபாவம் கூறப்பட்டிருக்கிறது. ந கர்மணா என்ற மந்த்ரத்தால் த்யாகத்தின் ஆவச்யகம் கூறப்பட்டது., வேதாந்த விக்ஞான என்ற மந்த்ரத்தால், வேதப்பொருளை நன்கு அறிந்து ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வகமான யோகத்தால் பிரம்மலோகமடைந்து, பரார்த்த த்வய காலத்துக்குப் பிறகு, அம்ருதவாச்யரான மகேச்வரனை யடைந்து முக்தி யடைகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஜாபாலம் முதலிய உபநிஷத்துக்களால், அம்ருதம் என்ற பதம் பரமசிவனைக் குறிக்குமென்பது தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

தஹ்ரம் விபரபம் என்ற மந்த்ரத்தால், ததுபாஸிதவ்யம் என்று, தவ்ய ப்ரத்யய முள்ள விதி ப்ரத்யயத்தால ஸ்வாத்யாயோ த்யேதவ்ய :

என்ற ப்ரஸித்த விதிபோல உபாஸனாவிதி கூறப்பட்டுள்ளது. பிறகு அந்த உபாஸ்ய வஸ்துவின் பெயர், ஓங்கார ப்ரதிபாத்யமான, ஓங்கார ப்ரதீகமான மஹேச்வரனென்று கூறப்படுகிறது நாதத்தைல் ஸகல ப்ரபஞ்சத்தையும் லயிக்கும்படி வைத்துக் கொண்டிருப்பதால், ப்ரணவம் ப்ரக்ருதி லீன: என்று சொல்லப்படுகிறது. பிறகு மஹேச்வரன் ரூபம் என்னவென்பதை, 23-வது அநுவாகம் ருதம் ஸத்யம் என்பது, கிருஷ்ண பிங்களம் ஊர்த்தவ ரேதம், விருபாக்ஷம் என்று அஸாதாரணமான பரமேச்வரன் ரூபங்களைக் கூறுவதால் விளக்குகிறது.

இவ்விதம் உபாஸனா விதிவாக்கியம், அ தன் பயன், உபாஸ்ய வஸ்துவின் நாம ரூபங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன இந்த மகேச்வரன் உபாஸனா ஸந்தர்ப்பத்தின் நடுவில் கூறப்படும் நாராயண பரமான, ஸகஸ்ர சீர்ஷம் என்ற 13-வது அநுவாகத்துக்கு எப்படி ஸம்பந்தம் ஏற்படுத்துவது என்பதை வாக்ய நியாயங்களைக் கொண்டு மீமாம்ஸ சாஸ்திர முறையில் நிச்சயிக்க வேண்டும். மீமாம்ஸா சாஸ்திரத்தில் உபக்ரமாதி கரணத்திலும் அச்வப்ரதிக்ரஹேஷ்டி அதிகரணத்திலும் முதலில் ஆரம்பிக்கப்பட்டதைத் தழுவி பின்னால் சொல்லப்படுவது விரோதமாகவிருந்தால் மாற்றி அர்த்தங் கொள்ள வேண்டுமென்பது ந்யாயமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளது இங்கு முதலிலேயும், முடிவிலேயும், 12, 23 அநுவாகங்களில் மஹேச்வர உபாஸனை சொல்லியிருப்பதால், நடுவில் உள்ள நாராயணபரமான 13 அநுவாகம் மஹேச்வர உபாஸனா பரமாக இருக்க முடியாது. இதுதான் ஸந்தம்சம் ந்யாயம் என்றும், இல்லாவிடில் வாக்யபேதம் வரும். உத்கர்ஷம் வரும் என்றும், பலவாறாக மீமாம்ஸையில் தூஷிக்கப்பட்டு, ஏக வாக்யதை வேண்டும் என்று, கைமுதிக ந்யாயத்தைக் காட்டி ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. ஆதலால் நாராயண பரமான நடு 13-வது அநுவாகம் தனியல்ல. மஹேச்வர உபாஸனா விதியில் அங்கமாகச் சேர்க்கப்படவேண்டியது என்பது ந்யாய ப்ராப்தம். உபாஸனை, உபாஸ்ய நாம ரூபம், இரண்டும் சொல்லப்பட்டு விட்ட படியால் பாக்கியுள்ள உபாஸகன், (அதாவது யார் உபாஸிக்கிறான் என்பது) 13-வது அநுவாகத்தால் சொல்லப்படுகிறது. அதாவது நாராயணன் தன் ஹ்ருதய புண்டரீகத்தில், பரமேச்வரனை உபாசித்தார். ஆதலால், வேதாந்தத்தால் பரம்பொருள் அறிந்தவர்கள் த்யாகிகளாக, முக்திக்காக பரமேச்வரனை உபாஸிக்க வேண்டுமென்பது தாத்பர்யம்.

மேலும் 13-வது அநுவாகத்தில் நாராயணனை ப்ரதிபாதிப்பதில், அவரை உபாசிக்க வேண்டும் என்று விதி காணப்படவில்லை. நாராயணன் மகினையைச் சொல்லுவதால் உபாஸனா விதியைக் கல்ப்பித்தது ஆகாது. உபாஸிதவ்யம் என்ற 12-வது அநுவாகத்தில் உள்ள பரமசிவன் உபாஸனா விதிப்பதத்தை அனுஷங்கம் செய்து, நாராயண உபாஸனை விதிப்பதாக அங்கீகரிப்பது ந்யாய விருத்தம். ஒர் விதிவாக்யத்தில் உபாஸ்ய ஸ்வரூபம் சொல்லப்பட்டிருந்தால், மற்றொரு வாக்கியத்திலுள்ள உபாஸ்யரூபம் அந்த விதியோடு அந்வயிக்காது என்பது ஜைமினி ந்யாயம். வைச்வ தேவயாகத்தில் ஆமிக்ஷா என்ற ஹவிஸ் சொல்லப்பட்டுவிட்டபடியால், மறு வாக்கியத்திலுள்ள வாஜினம் என்ற ஹவிஸ் அந்தக் கார்யத்தில் அன்வயிக்கமுடியாமல், வேறு கார்யத்தை ஏற்படுத்திவிடுகிறது. கர்மபேதம் என்றல்லவா மீமாம்ஸகர் கொள்கை? ஆதலால் உபாஸனா பேதம் சொல்ல வேண்டும். அதுவும், உபக்ரம உபஸம்ஹாரத்துக்கு மாறுபாடாக நடுவில் இருப்பதால் முடியாது. முதல் முடிவுகளில் சொல்லப்பட்ட பரமேச்வரன் உபாஸனைக்கு அனுகுணமாக இருந்தால் தான் பொருத்தமுடியும். ஸ்வதந்த்ர நாராயணோ பாஸனையாக இருக்க முடியாது. பொருந்தாது. நாராயணனை உபாஸகராகச் செய்து பொருத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆதலால், மஹேச்வரன் உபாஸ்யர், முக்தி பயன். நாராயணன் உபாஸகர். அவர்போல, மற்ற இக்காலத்து த்யாகிகளும் உபாஸித்து முக்திபெறலாம் அம்ருத பதவாச்யரான மஹேச்வரனை யடைந்து, பவ பாசத்திலிருந்து விடுபடலாம் என்பது தான் மூன்று அநுவாகங்களின் ஏக வாக்யதையைக் கொண்டு ந்யாயப்படி ஸித்தமான அர்த்தம் என்பதை விளக்குகிறார்.

பதவுரை

யத் – யாதொரு, வாக்யம் – (தஹாம் விபாபம் – ததுபாஸி தவ்யம்) உபக்ரமத்திலுள்ள உபாஸனா விதிவாக்யம் தஹராந்த: ஹ்ருதயம் என்ற புண்டரீகத்தின் தாமரையின் நடுவில் உபாஸனம் – உபாஸனாகார்யத்தை, ஆஹ – செய்யவேண்டுமென்று சொல்லுகிறதோ, யத்வா – எந்த உபஸம் ஹாரத்தில் உள்ள ருதம் ஸத்யம் ----நமோ நம : என்ற 23 வது அநுவாக வாக்யம். அஸ்மை – இந்த உபாஸனை சொல்வதற்காக அபேக்ஷிதமான, தே – உம்முடைய. ரூபவிசேஷம் – க்ருஷ்ணபிங்களம் ஊர்த்த்வ ரேதம், விரூபாக்ஷம் என்ற அஸாதர்ரணமான லக்ஷணங்களை, ஸமர்ப்பயதி – தெரியப்படுத்துகிறதோ ஆரம்பம், முடிவு. இந்த இரண்டு மந்த்ரங்களுக்கு நடுவில் உள்ள, வசோபிரபி – ஸஹஸ்ரசீர்ஷம் என்ற 13 வது அனுவாகமாகிய மந்த்ரங்களாலும், ததெளபயிகா பிதேயை :- அந்த உபாஸனா விதிக்கு அனுகுணமான, சேஷ பூத அர்த்தத்தை உடையவைகளாகத்தான் பாவ்யம் – இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏகவாக்யதை ஏற்படாமல், வாக்யபேத தோஷம் ஏற்பட்டுவிடுமென்று, இதி – இவ்விதமாக, வாக்யவிதாம் – வாக்ய ந்யாயத்தை அறிந்த மீமாம்ஸகர்களின், ப்ரவாத :- தீர்மானம், உத்கோஷம்.

சுலோகம் 37

நாராயணஸ்ய யதுபாஸ்யதயாபி தானம் யத்வா பலந்ததிஹ நோபலபே கதஞ்சித் | உத்பத்திசிஷ்ட பவதன்வய மன்யகாமி சக்யம் மஹேச்வர ! ந கர்த்து முபாஸனம் தே ||

நடு அநுவாகத்தில் நாராயணனையே ஸ்பஷ்டமாகக் குறிப்பதால் எவ்விதம் பரமசிவன் உபாஸனையுடன் சேர்க்க முடியும், தனியாக நாராயண உபாஸனை விதியைக் கற்பிப்பதோ, முன் உபாஸிதவ்யம் என்ற விதியை அநுஷங்கம் செய்து, நாராயண உபாஸனையும் அங்கீகரிப்பதோ, உசிதமானது என்ற சங்கைக்கு பதில் சொல்லப்படுகிறது.

பதவுரை

இஹ - இந்த நடுவாகிய 13-வது அநுவாகத்தில் நாராயணஸ்ய – நாராயணனுடைய, உபாஸ்யதயா பிதானம் – உபாஸிக்கும்படி சொல்லும் விதியும், யத்வா பலம் – அதன் பயனும் (முன் 12-வது அநுவாகத்தில் மஹேச்வர உபாஸனைக்குக் காணப்படுவதுபோல) தத் – அவ்விரண்டும், கதஞ்சித் – சிரமப்பட்டாலும், எந்த விதமாகவும் நோபலபே – காணமுடியவில்லை மகேச்வர – பரமேச்வரனே ! தே – உம்முடைய, உபாஸனம் – உபாஸனாவிதி – பல விதிகளை, உத்பத்திசிஷ்ட பவதன்வயம் – விதியின் உத்பத்தி வாக்யத்திலேயே அன்வயிக்கும்படி உமது கர்மபாவத்தை 12-வது அநுவாகத்திலேயே சொல்லப்பட்டு ஆகாங்க்ஷை முடிந்து விட்டதால், அந்யகாமி – வேறு உத்பந்ந சிஷ்டமான கர்மாவைப் பொருந்துவதாக, கர்த்தும் ந சக்யம் – செம்யமுடியாதல்லவா? இது தான் குணந்யாயம், வாஜினி ந்யாயமென்று சொல்லப்படுவது காண்க.

யத்வேதாதெள – என்ற 12-வது அநுவாக மந்த்ரத்தால், மஹேச்வர : ப்ரக்ருதி லீனஸ்ய பர : என்று பரமேச்வரனை உபாஸ்ய ரூபமாக உத்பத்தி காலத்திலேயே சொல்லப்பட்டுவிட்டபடியால், 13-வது அடுத்த அநுவாக ப்ரதிபாத்யனான நாராயணனை அந்த விதியில் உபாஸ்யனாக அபேக்ஷ இல்லாததால் பொருத்தமுடியாதல்லவா? அப்படியானால் 13-வது அநுவாகத்தில் மகேச்வரன் உபாஸனா விதிபரமான இரண்டு அநுவாகங்களின் மத்தியில் நாராயணன் மகிமையைத் தெரிவிப்பது வீணாகிவிடாதா – என்ற சங்கைக்குப் பரிகாரம் 38-வது சுலோகத்தில் சொல்லப்படுகிறது.

சுலோகம் 38

நாஸா வுபாஸன முபாஸ்யகதைவதூரே தஸ்மா துபாஸகதயா பரிசேஷஸித்தி : | அந்தர் வ்யவஸ்தித கிரா பரமாத்மனஸ்தே சப்தாத்ருதேபி விஹிதம் ததுபாஸகத்வம் ||

பதவுரை

அஸெள – இந்த 13-வது அநுவாகத்தில் ப்ரதிபாதிக்கப்படும் நாராயணன் முன் பின்னுள்ள உபாஸனம் – உபாஸனாக்ரியையாக ; ந – இருக்கமுடியாது. சேதனனான புருஷன் அசேதன க்ரியை ரூபமாக எப்படியிருக்க முடியும்? உபாஸ்யஜதாதூர எவ – உபாசிக்கப்படும் கர்மாவாக அந்வயிப்பதோ அங்கீகரிக்கவே முடியாது. தஸ்மாத் – ஆதலால், க்ரியையும் இல்லை கர்மாவும் இல்லையென்றதால், உபாஸகதயா பரிசேஷ ஸித்தி: மீதி, உபாஸனா கர்த்தாவாகத்தான் நாராயணன் சொல்லப்பட்டவராக ஆகிறார். பரமாத்மனஸ்தே – பரம் பொருளாகிய நீர், அந்தர்வ்யவஸ்திக கிரா – நாராயனுடைய ஹ்ருதய புண்டரீக ஜோதியின் நுனியில் வீற்றிருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பதால், அந்த வாக்கியத்தின் லிங்கத்தைக் கொண்டு, சப்தாத்ருதே அபி – உபாஸகர் என்ற பதமில்லாவிடினும், ததுபாஸகத்வம் – அந்தப் பரம்சிவனைத் தன் ஹ்ருதய புண்டரீக ஜோதியில் உபாசித்துக் கொண்டிருப்பவர் நாராயணர் என்பது, விஹிதம் – ந்யாயத்தால் லிங்க மூலம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ஸ்ருவம் என்ற பாத்ரத்தால், எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாக்யத்தில். சக்தியை, லிங்கத்தை யனுஸரித்து, த்ரவத்ரவ்யமான நெய், பால், எடுப்பதில் ஸ்ருவம்; முட்டை, மற்ற கடின த்ரவ்யத்தில் கையால் எடுப்பது, மாம்ஸ்த்தை வழுக்குமாதலால் கத்தியால் எடுப்பது என்று பதமில்லாவிடினும், சக்தி என்ற லிங்கத்தால் நிர்ணயித்திருக்கிறார். கர்மகாண்டத்தில் மீமாம்ஸகர்கள் அனுஸ்ரீஉதியே நேராகச் சொன்னதாகக் கொள்ள வேண்டும் என்பது ந்யாயவித் ஸித்தாந்த மல்லவா? நாராயணன் ஹ்ருதய புண்டரீக ஜோதிநுனியில் பரமசிவன் இருப்பதாகச் சொல்வது. அவர் உபாஸகர் என்பது ஒப்புக் கொள்ளப் படாவிடில் பொருந்தாது அல்லவா? இது தான் அர்த்தாபத்தி என்ற ப்ரமாணமகக் கருதப்படும். ஆதலால், உபாஸகபதம் வாசகமாக இல்லாவிடினும், வாக்ய சேஷந்யாயப்படி லிங்கத்தால், மஹேச்வர உபாஸனா விதியில் மிக மகிமை வாய்ந்த நாராயணன் உபாஸகன் என்பது சொல்லாமல் ஸித்திக்கும். இதுவே பரிசேஷ ஸித்த ந்யாயம் என்றும் சொல்லப்படும். எங்குமுள்ள ஸர்வ வ்யாபியான ஸர்வாந்தர்யாமி பரமசிவன், நாராயாணன் ஹ்ருதய ஜோதியில் இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருப்பது அவர் உபாஸிக்கிறவராக இருந்தால் தான் பொருத்தமாக அந்வயிக்கும்.நாராயணன் தன் இஷ்டம் நிறைவேற ஸாம்பாதி புத்ர லாபார்த்தமாக பரமசிவனை உபாசிக்கிறவர் என்ற விஷயம் மகா பாரதத்தில் சாந்திபர்வாவில் நரநாராயண ஸம்வாதத்தில், நரனுக்கு நாராயணன் தானே தன் வாயால் சொன்னதாக, நன்கு ஐயமறக் கூறப்பட்டிருப்பது ஸித்தாந்தத்திற்கு நல்ல உபப்ரஹ்மணமான அத்தாக்ஷியாகும் ருத்ரம் ஸம் பூஜயாம்யஹம் என்று தன் வாயால் சொல்வது காண்க.

புத்ரார்த்தம் ஆராதிதவான் ஆத்மா ஆத்மானம் ஆத்மன: என்பதும் காண்க.

சுலோகம் 39

யஸ்ய ஸ்திதோஸி ஹ்ருதயே பரமஸ்த்வ மாத்மா யுக்தந்ந தஸ்ய பரமாத்ம தயாபிதானம் | ஸ்வேன ஸ்வயம் மனஸி வன்ஹிசிகாந்தராளே திஷ்டந் நுபாஸ்ய இதி ஹாஸ்ய பதம் ந கஸ்ய ||

ஆத்மா நாராயண : பர : என்ற சுருதி நாராயணனைப் பரமாத்மாவாகக் கூறுகிறது. அவரை யல்லவா தஸ்யா சிகாயாமத்யே பரமாத்மா வ்யவஸ்தித : என்ற சிகாவாக்யத்திலும் ஹ்ருதயஜோதி நுனியில் இருப்பதாகச் சொல்ல வேண்டும், அப்பொழுது நாராயணன் உபாஸ்ய தெய்வமாக அல்லவா ஆவார். உபாஸகனாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்ற சங்கைக்கு ஸமாதானம் கூறப்படுகிறது.

பதவுரை

பரம: ஆத்மா த்வம் – பரமாத்மாவாகிய தாங்கள், யஸ்ய ஹ்ருதயே ஸ்திதோஸி – எந்த நாராயணன் ஹ்ருதயத்தில் இருக்கிறீரோ, தஸ்ய – அந்த நாராயணனை, பரமாத்மதயா அபிதானம் – ஆத்மா நாராயண : பர : என்ற பாகத்தால் பரமாத்மாவாகச் சொல்வது ந யுக்தம் – பொருத்தமாகாது, மனஸி – ஹ்ருதய புண்டரீகத்தில், வன்ஹி சிகாந்தராளே – ஜோதி நுனியின் நடுவில் ஸ்வயம் திஷ்டந் – தானே பரமாத்மாவாக இருந்து கொண்டு, ஸ்வேன உபாஸ்ய : - தன்னால் உபாஸிக்கப்படுகிறார், இதி – என்று அர்த்தம் கொள்வது பதமாக இருக்காது.

ஒருவனுக்கு கர்த்த்ரு பாவமும் கர்மபாவமும் ஏற்பது பொருந்தாதல்லவா? நல்ல சிக்ஷை பெற்ற நாட்டியப் பெண்ணும், தன் தோளில் தானே ஏற முடியுமா? பரமாத்மா என்ற பதம் பரமசிவனைத்தான் குறிக்கும். மற்ற தெய்வத்துக்குப் பொருந்தாது என்று ஸித்தாந்தம், மகாபாரதம் சாந்தி பர்வம் ஸபாபர்வங்களில் வ்யாஸ முனிவரால் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது, மற்ற புராணங்களிலும், தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

       உத்தம புருஷஸ்து அன்ய: பரமாத்மா       இதி – உதாஹ்ருத:

என்ற கீதா வாக்யம் மூவுலகத்தையும் அந்தர்யாமியாக வ்யாபித்துத் தாங்கும் ஈச்வரனை அநுவதித்து, பரமாத்மா என்ற ஸம்ஞையை விதிக்கிறது. வாயவீய ஸம்ஹிதையிலும் மந்த்ர சாஸ்திரங்களிலும் இது ப்ரஸித்தமானது காண்க.

       ஈச்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுமதிஷ்டதி |

என்று ஹ்ருதயத்தில் பரமேச்வரன் அந்தர்யாமியாக வீற்றிருப்பதைச் சொல்லி, தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேண பாரத || என்று அச்சிவபெருமானையே சரணமடையும்படி கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். தன்னைச் சரணமடையும்படி சொல்லவில்லை. மாயினம் து மகேச்வரம்’ என்றபடி மாயையைக் கொண்டு உலகைப் படைத்து ஆள்பவர் பரமேச்வரன் என்பது ஸித்தாந்தம். தமேவ என்று ஏவ பதமும் அவரையே சரணமடையும் படி அழுத்தமாகக் கூறுகிறது. ஒரு பதிவ்ரதா ஸ்த்ரீ பரபுருஷனால் அபகரிக்கப்பட்டாலும், தன் புருஷனையே குறிக்கோளாகக் கொள்வதுபோல, ஈச்வரன் என்ற ச்ருதி வாணி, ப்ரகரணத்தால் நாராயணன் ஸமீபம் கொண்டு போகப்பட்டாலும் பரபுருஷனாகிய அவரைக் குறிக்காது என்பது திண்ணம். மகாகவி காளிதாஸரும்.

அணிமாதி குணோபேத மஸ்ப்ருஷ்ட புருஷாந்தரம், யஸ்மின் ஈச்வர இத்யனன்ய விஷயச் ச்ப்தோ யதார்த்தா க்ஷர: என்று ஸித்தாந்தம் செய்திருப்பது இங்கு காணப்பட வேண்டும்.

சுலோகம் 40

நாராயணஸ்ய ஹ்ருதயம் ஸுஷிரம் மகாக்னி : அக்னே : சிகா ச பரமாத்ம பதம் யதுக்தம் | ஸர்வோப்யுபாஸன விதே : அயம் அர்த்தவாத : ச்ரத்தா விசிஷ்ட புருஷா சாணாத் விதேயே ||       வேதாந்த விக்ஞான ஸுநிச்சிதார்த்தா: | என்ற மந்த்ரத்தால் உபாஸகர்கள், யதாத்மாவாகிய சுத்தமனதுள்ளவர்கள் என்று கூறப்பட்டிருப்பதால்

யதாத்மானோ முக்திகாமா: மஹேச்வரம் உபாஸீரந் – என்ற விதி பூர்தி (அடங்கிய மனமுள்ளவர்கள் முக்திக்காகம் பரமசிவனை உபாசிக்க வேண்டும்) ஏற்பட்டுவிட்ட படியால் பரிசேஷந்யாயத்தால், நாராயணன் உபாஸகன் என்ற கக்ஷி அர்த்த மற்றதாகும் அல்லவா, என்ற சங்கை நீக்கப்படுகிறது.

பதவுரை

நாராயணஸ்ய – நாராயணனுடைய, ஸுஷிரம் – த்வாரமுள்ள, ஹ்ருதயம் – ஹ்ருதய புண்டரீகமும், மகாக்னி :- அதன் மத்தியில் பெரிய ஒளியும், அக்னே : சிகா ச – அந்த ஒளியின் நுனியும், பரமாத்ம பதம் – பரமாத்மாவாகிய பரமேசவ்ரன் வஸிக்கும், உபாசிக்கப்பட வேண்டிய இடமாக, யதுக்தம் – யாதொன்று சொல்லப்பட்டிருக்கிறதோ, ஸர்வோஅபி – அது எல்லாம், விதேயே – செய்யப்பட வேண்டிய கார்யத்தில் (ப்ரவ்ருத்தி ஏற்படுவதற்காக) ச்ரத்தா விசிஷ்ட புருஷா சரணாத் – சிறந்த புருஷனான நாராயணனும் மிகுந்த ச்ரத்தையுடன் இந்த உபாசனையைச் செய்திருக்கிறார் என்று யதார்த்தத்தைச் சொன்னதால், உபாஸனவிதே : அயம் அர்த்தவாத :- உபாசனை விதிக்கு இது அர்த்தவாதமாக பூதார்த்தவாதமாகச் கருதப்படுகிறது. பெரியோர்கள் செய்து பயனடைந்த கார்யமிது. ஆதலால் முக்திவேண்டுபவர் பரமசிவனையே, ஹ்ருதய கமல ஜோதியில் உபாசியுங்கள் என்பது ருசியை உண்டு பண்ணுவதற்காகச் சொல்லப்படுகிறது. கர்ம காண்டத்தில் இம்மாதிரி ஒரு கர்மாவை விதித்துவிட்டு, அதில் சிரத்தை வருவதற்கு தேவேந்திரன் செய்த கார்யமிது என்றெல்லாம் சொல்லப்பட்டிருப்பது ஸஹஜம்.

சுலோகம் 41

நாராயண ப்ரகரணே ஹ்ருதயம் யதுக்தம் தஸ்யைவ தத்பவிது மர்ஹதி நாபரேஷாம் | த்ருஷ்டம் யதிப்ரகரணே யதிபிர் க்ருஹீதம் பூர்வானுவாக விஹிதம் யதுபாஸனம் தே ||

பதவுரை

ஹே, பரமேச்வரா! தே – உம்முடைய, பூர்வானுவாக விஹிதம் – 12-வது அனுவாகத்தில், பொதுவாக விதிக்கப்பட்ட, யதுபாஸனம் தத் – யாதொரு உபாஸனமுண்டோ அது, யதி ப்ரகரணே த்ருஷ்டம் – மனதை அடக்கியவர்களின் ஸந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டதால், யதிபிர் க்ருஹீதம் – ஸந்யாஸிகளான யதாத்மாக்கள் செய்யும் உபாஸனை என்று தர்சபூர்ணமாஸ ப்ரகரணத்தில் சொல்லப்பட்ட ப்ரயாஜம் என்ற அங்கம், ப்ரகரண ப்ரமாணத்தால் அதோடு மாத்ரம் ஸம்பந்தப் படுவது போல, யத்யுபாஸனா கர்மாவாக விசேஷிக்கப்பட்டது. அது போல், நாராயண ப்ரகரணே யதுக்தம். ஹ்ருதயம் – நாராயண ப்ரதிபாதகமான 13-வது அநுவாகத்தில் சொல்லப்பட்ட ஹ்ருதய புண்டரீகமும், தஸ்யைவ தத் பவிதும் அர்ஹதி – அந்த நாராயனுடைய ஹ்ருதயத்தைத் தான் விசேஷித்துச் சொன்னதாக ப்ரகரண ப்ரமாணத்தால் கொள்ள வேண்டும் அபரேஷாம் ந பவிதும் அர்ஹதி – மற்றவர்களின் ஹ்ருதய கமலத்தை சொன்னதாக, ஆகத் தகுந்ததில்லை. ஆதலால் தன் ஹ்ருத்யத்திலுள்ள, பரமாத்மாவான பரமேச்வரனை முக்திகாமனையால், புத்ரகாமனையால் நாராயணன் உபாஸிக்கிறார் என்பது ப்ரகரண ந்யாயப்படிக்கும் தீர்மானிக்கப்படுகிறது.

சுலோகம் 42

ப்ரம்மோச்யதே பரமஸெள பரமம் ச தத்வம் ஜ்யோதி : பரம் ச பரமேச்வர பத்மனாப : | த்வத் பாவனைக ரஸிகஸ் த்வதனன்ய பாவாத் மந்த்ரீ யதா கருடபாவனையா கருத்மாந் ||

நாராயணன் உபாசகன் என்று சொன்னால் நாராயண பரம் பிரம்ம என்று பரப்ரம்மமாக நாராயணன் கூறப்படுவது எங்ஙனம் பொருந்தும் என்ற சங்கைக்குப் பரிகாரம் சொல்லப்படுகிறது.

பதவுரை

பரமேச்வர – ஹே பரமேச்வரனே, பத்மநாப :- தொப்புள் தாமரையிலிருந்து பிரம்ம தேவனை வெளியிட்ட நாராயணன், த்வத்பாவனைக ரஸிக:- உன் உபாஸனா காலத்தில் தன்மயமாக பேதபுத்தியில்லாமல் உபாசிப்பதில் ஊக்கம் கொண்டிருந்தவராதலால், த்வதனன்ய பாவாத் – த்யானம் செய்பவன், த்யானிக்கப் படுபவன் என்ற வேற்றுமையற்று தங்களோடு கலந்து போன தன்மையால் மந்த்ரீ – மந்த்ர ஜபம் செய்யும் விஷ வைத்தியன் கருடபாவனையா – தன்னை கருடனாக வேற்றுமையில்லாமல் த்யானிப்பதால், கருத்மான் யதா – எப்படி கருடனாக இருந்து விஷத்தை நீக்குகிறானோ, கருடனாகவும் கெளணமாகச் சொல்லப் படுகிறானோ, ததா – அப்படியே, பரப்ரம்ம – பரப்பிரம்மம் என்னும், பரம் தத்வம் பாதிக்கப்படாத உண்மை – ப்ரம் ஜ்யோதி:- ஒளிக்கெல்லாம் ஒளி, என்றும் பலவாறாக, அஸெள இந்த நாராயணன், உச்யதே – சொல்லப் படிகிறார். எல்லாப் புராணங்களிலும், மகாபாரதத்திலும், ஹரி வம்சத்திலும், நாராயணர் பரமசிவ உபாசகர் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருப்பதால் இந்த நாராயணோபநிஷத் நாராயணனை உபாஸகனாகச் சொல்லுகிறதென்பது, ந்யாயப்படியும் உபப்ரம்மணப்படியும் பொருத்தமே. ஸெளர ஸம்ஹிதையில் ஸாக்ஷாத் வேதாந்த வாக்யானாம் நிஷ்டா ருத்ர : பசோ : பதி: என்று யுக்திகளால் நாட்டப் பட்டிருக்கிறது.

‘அணோரணீயாந்’ என்ற முதலநுவாகத்தில் தஹரோபாஸனாவிதியும், தன் பலனிம், உபாசிக்கப்பட்ட வேண்டிய தெய்வத்தின் மஹேச்வரன் என்ற நாமமும் சொல்லப்பட்டு, ருதம் ஸத்யம் என்ற 3-வது அனுவாகத்தில் கிருஷ்ண பிங்களம், ஊர்த்தவரேதம் விருபாக்ஷம் என்ற அஸாதாரண உருவங்கள் சொல்லப்பட்டு, தஹரவித்யா முடிவு ஏற்பட்டிருப்பதால், நடு அநுவாகமான நாராயண அநுவாகம் ஸஹஸ்ரசீர்ஷம் தேவம் முதலாக ஆரம்பிக்கப்படுவது ஸந்தம்சம் ந்யாயம், பாரி சேஷ்யந்யாய முதலிய ந்யாயாங்களைக் கொண்டு நாராயணன் தஹரவித்யோபாஸகன் என்பதைக் குறிப்பிடுவதாகவும், அவர் உபாஸ்யரல்ல என்றும், தனியாக அவர் உபாஸனா விதியை அச்ருதமானதைக் கல்ப்பிக்க ந்யாயம் இல்லை என்பதும் இதுவரைக் கூறப்பட்டது. நாராயணர் மஹேச்வர உபாஸகர் என்பது இதிஹாஸ புராணங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருப்பதால் மத்யமாநுவாகம் உபாஸகன் என்பது சொல்லப்படுகிறது. ஆரண்யபர்வம், த்ரோணபர்வம், கர்ணபர்வம், ஸெளஷுப்திகபர்வம் சாந்தி பர்வம் இந்த இடங்களில் ஷ விஷயம் விளக்கப்பட்டிருப்பது காணக. பெரியோர்கள் செய்து பயனடைந்த இந்த தஹரோபாஸனையை, மஹேச்வரோபாஸனையை முக்திக்காகவும் புக்திக்காகவும் அனைவரும் செய்ய வேண்டுமென்பது மூன்று அநுவாகங்களின் ஏகவாக்யதா லப்த தாத்பர்யமாகும்.

இங்கு ஒர் சங்கை நாரயணாத்மா என்பதற்கு நாராயணனுடைய அந்தர்யாமி பரமேச்வரன் உபாஸ்யன் தன் ஹ்ருதயபுண்டரீகத்தில் ஹரி ரீச்வர: என்ற விஷ்ணு புராண வசனம் மாந்த்ரீகன் தத்பாவனையால் கருடனாவதால், கருடன் என்று சொல்லப்படுவது போல ஈச்வரோபாஸனையால் ஈச்வரனாதலால் அபேதமாகச் சொல்லப்படுவது கூடகமான ஸுசகம்; நாராயணன் உபாஸகன் என்ற ஸித்தாந்தத்துக்கு என்பதும் பொருந்தாது, ஏனெனில் நாராயண பரப்ரம்ம” என்று பரப்ரம்மமாக நாராயணன் விளக்கப் பட்டிருக்குறார் ஆதலால் பத்ம கோசப்ரதீகாசம் என்று வர்ணிக்கப்படும் ஹ்ருதயம் புண்டரீகம் நாராயண உபாஸகனுடைய ஹ்ருதய கமலமல்ல, மற்ற உபாஸகருடைய ஹிருதய கமலம்; தஸ்யமத்யே வன்ஹிசிகா என்பதால், அணுவாகிய ஜீவன் சொல்லப் படுகிறான். தஸ்யா :சிகாய என்பதால் ஜீவாத்மாவால் அந்தர்யாமியான நாராயணன், முன் பரப்ரம்மாகச் சொல்லப்பட்டவர் உபாஸ்யமகாச் சொல்லப்படுகிறார். ஸ் ப்ரம்மா, ஸ சிவ: என்ற மந்தரத்தால் ப்ரம்மா, சிவன், இந்திரன் முதலிய ஆதிகாரிக புருஷர்கள் உபாஸ்ய விபூதிகளாகக் கூறப்படுகிறார்கள், அந்த விபூதியில் நாராயணபத மில்லாததால், சிவபதம் இருப்பதால், நாராயணன் தான் உபாஸ்யன், சிவன் உபாஸ்யனாக முடியாது – என்ற சங்கைக்குப் பதில்:-

பத்ம கோச ப்ரதீகாசம் என்று குறிக்கப்படும் ஹ்ருதய கமலம் நாராயண்னுடையதுதான், மற்றவர்களின் ஹ்ருதய கமலம் பூர்வாநுவாகத்திலேயே, தஹ்ரம் விபாபம் என்ற வாக்யத்தால் உபாஸனா விதியின் பக்கத்தில் குறிக்கப்பட்டு விட்டது. மறுபடியும் சொல்லப்படுவது, உபாஸகன் நாராயணன் தன் ஹ்ருதய கமலத்தில் பரமேச்வரனை உபாசித்தான் என்பதை விளக்குவதற்காகவே பரமாத்மா வ்யவஸ்தித: என்பது பரமேச்வரனைத்தான் குறிக்கிறது. த்யாதா – நாராயணன், த்யேயன் அவர் ஹ்ருதயகமலத்தில் பரமாத்மா மஹேசன் ஸப்ரம்ம ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: என்று விபூதி வாக்யபாடம். அதில் ஹரி பதத்தால் விஷ்ணுவும், சிவபதத்தால் ருத்ரனும், முத்தொழில் ஆதிகாரிக புருஷர்கள் ப்ரம்ம, விஷ்ணு ருத்ரர்கள், த்ரிலோகாதிபதி இந்திரனைப்போலக் கூறப்பட்டு பரமேச்வரனுடைய விபூதியாகச் சொல்லப் படுகிறார்கள். ஸ ஹரி: என்ற பாடம் சில சாகையில் இல்லை. ஆயினும் ஸோக்ஷர: பரம : என்ற பாகத்தால் நாராயணன் பரமேசவ்ரன் விபூதியாகக் கூறப்படுகிறார்.

விச்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும் என்ற முனிவாக்யம் நாராயணனைப் பல பதங்களால் கூறி மகிமையைத் தெரியப்படுத்துவது போல பரமம் அக்ஷரம் என்று கூறியிருப்பதால் இங்கு விபூதி வாக்யத்தில் அந்த நாராயணனைக் குறிப்பிடுவதுதான் ப்ரத்யபிஞ்ஞா ப்ரமாணத்துக்கு உகந்ததாகும். பிரம்மாண்ட புராணத்தில் இந்த விபூதி வாக்கியம் அர்த்தத்தால் அநுவதிக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஆதாரமாகும்.

ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸேந்த்ர : ஸோச்யுத : பரமஸ் ஸ்வராட் – அச்ச்யுத பதம கூறப்பட்டிருக்கிறது ஸ்வராட் – தன் சொந்தமான ஸவரூபத்தில் விளங்கும் ஈச்வரன் என்பதால், இவர்கள் ஈச்வரன் விபூதிகள் என்பது விளக்கம்.

ருதம் ஸத்யம் என்ற மூன்றாவது அநுவாகம் ஸ்வராட் பத விவரணமாக ஏற்பட்டிருப்பது ஈச்வரனைக் குறிக்கும், கைவல்யோபநிஷத்திலும் ‘உமாஸஹாயம் பரமேச்வரம் ப்ரபும்’ முதலிய மந்த்ரங்களால் உபாஸ்யன் பரமேச்வரன் என்பது ஸம்வாதமாகும் இங்கு.

லிங்க பூயஸ்த்வாத் தத்ஹி பலீயஸ் ததபி என்ற உத்தரமீமாம்ஸா சாஸ்திரத்தின் 3.3-44 வ்யாஸ ஸூத்ர ஸ்ரீ சாங்கர பாஷ்யமும், ஸ்ரீ ராமானுஜ பாஷ்யமும் விமர்சகர்களால் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் சங்கரர் அடுத்த பூர்வ விகல்ப்ப: என்ற ஸூத்ரத்தின் முதல் ஸூத்ரமாக ஒரே அதிகரணமாக பாஷ்யம் செய்திருக்க, பின் வந்த ராமானுஜர் 3.3-44 வது ஸூத்ரத்தைத் தனி அதிகரணமாக வ்யாக்யானம் செய்துள்ளார். அதில் இந்த ஸஹஸ்ர சீர்ஷம் என்ற நாராயண அநுவாகத்தை விஷயவாக்யமாக எடுத்துக் கொண்டு விசாரித்து நாராயணன் தஹர வித்யாவில் மட்டும் உபாஸ்யனல்ல; மற்ற பிரம்ம, பரமாத்மாதி, பரவித்யா எல்லாவற்றிலும் நாராயணன் தான் உபாஸ்யர்; மற்று மஹேச்வரன் உபாஸ்யன் அல்ல என்று வ்யாஸர் அபிப்ராயப்படுகிறார் என்றும் ஸந்தம்சந்யாயத்தை ஒப்புக்கொள்ளாமல் இந்த நாராயண அநுவாகம் இந்த ப்ரகரணத்திலிருந்து லிங்கத்தை அனுஸரித்து அப்புறப்படுத்தி அர்த்தம் செய்யப்பட வேண்டும் என்றும் எழுதிகிறார். சங்கரர் அப்படி வ்யாக்யானம் செய்யாமலிருக்க ராமானுஜ பாஷ்யம் வேறாக வந்திருப்பதிலிருந்து அவருக்குப் பூர்வ காலத்திய சிதிகண்டபாஷ்யப்படி ஏற்பட்ட அபிப்ராயத்தை தூஷிக்க, இப்படி வ்யாக்யானம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஊகிக்க வேண்டியிருக்கிறது.

இங்கு நமது ஹரதத்தருடைய சிதி கண்டபாஷ்யானுஸாரி விசாரத்தையும் பிறகு ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர், ஸ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், வித்யாவ்ருத்தி முதலிய 5 க்ரந்தங்கள் எழுதிய மாங்குடி மணிய சிவனார், ஐவர்களின் விசார முறையையும், ஸ்ரீ ராமானுஜபாஷ்யானுஸாரி விசாரத்துடன் ஒத்துப் பார்த்து விமர்சகர்கள் நன்கு யோகிக்க வேண்டும். விரிவாகும் என்று விமர்சன ப்ரகாரம் இங்கு எழுதப்படவில்லை. CENTER>

சுலோகம் 43

கீதாஸு யோகஜ விபூதி விபாவநாய நாராயண : சிவபதம் ப்ரதிவாசமூசே | யோகந் நிசாமய மகேச்வர கோசரம் மே திவ்யம் ததாமி தவ சக்ஷுரிதி ப்ரஸன்ன : ||

நாராயணனுடைய மகிமையைத் தெரிவிக்கும் கீதைகளிலிருந்தும் நாராயணன் பரமேச்வரனுடைய உபாஸகன் என்பது,-தெளிவு என்று விளக்கம் செய்கிறார்.

பதவுரை

திவ்யம் சக்ஷு: ஞானக்கண்ணை, தவ – உனக்கு, ததாமி – கொடுக்கிறேன், மஹேச்வர கோசரம் – மஹேச்வரனை உபாஸித்ததால் கிடைத்த, தத்விஷயமான, மே – என்னுடைய யோகம – உபாஸனா பலமான விச்வரூபத்தை, நிசாமய – பார், இதி – என்று, ப்ரஸன்ன : - ஸந்தோஷமடைந்த, நாராயண:- நாராயண அவதாரமாகிய வாஸுதேவன், பகவத் கீதாசார்யனான கிருஷ்ணன், கீதாஸு – கீதையில், யோகஜ விபூதி விபாவனாய – ஈச்வர உபாஸனையால் உண்டான விச்வரூபத்தை ப்ரதிவாசம் – பதில் வார்த்தையால் ஊசே – கூறினார்.

பச்யமே யோக மைச்வரம் – ஈச்வர உபாஸனா ப்ராப்தமாகிய யோக பலத்தை, விச்வரூப பாவத்தைப்பார், இது உன் கர்மக் கண்ணால் பார்க்கமுடியாது, அதற்காக ஞானக்கண்ணைத் தருகிறேன். மே யோகம் என்பதால், விஷ்ணுவிற்கு கர்த்த்ருத்வ போக்த்ருத்வமும், ஐச்வரம் என்ற சைஷிக தத்தித ப்ரத்யயத்தால் அப்பயன் ஈச்வர உபாஸனா ப்ராப்த மென்பதும் நன்கு சொல்லப்பட்டிருப்பதால், நாராயணன் உபாஸகன் மஹேச்வரன் உபாஸ்யன் என்ற ந்யாய ஸித்த அர்த்தம் நிலை நாட்டப்படுகிறது.

ஏவ முக்த்வா ததோ ராஜன் மஹாயோகேச்வரோ ஹரி:| தர்சயாமாஸ பார்த்தாய பரமம் யோகமைச்வரம் || என்ற பல இடங்களைக் குறிப்பதற்காக இங்கு கீதாஸு என்று பன்மை உபயோகப்பட்டிருப்பது காண்க.

சுலோகம் 44

த்வா மந்தரேண ந கதஞ்சி துப்ரஸனீயம் அன்யம் ப்ரவீதி ஸசிவஸ்துதி ரந்தகாரே | யத் ப்ரம்மசப்த ஸமபிவ்யவஹார யோகாத் ஸம்ஹார காரிணி ஹரே, சிவசப்த மாஹு: || விபூதி வாக்யத்திலுள்ள ஸ சிவ: என்ற பாகத்தால் சிவன் உபாஸ்யனாக இருக்க முடியாது என்ற சங்கை நீக்கப்படுகிறது.

பதவுரை

அந்தகாரே – யமனை அழித்த கடவுளே! ஸசிவஸ்துதி: - ஸ சிவ: என்ற அர்த்தவாத பாகம், த்வாமந்தரேண – உம்மைத்தவிர, அன்ய முபாஸனீயம் – வேறு ஒருவரை உபாஸ்யாரக, கதஞ்சித் – எவ்விதத்திலும், ந ப்ரவீதி – கூறவில்லை, யத் – எந்தக் காரணத்தால், ப்ரம்ம சப்த ஸம்பிவ்யவஹார யோகாத் – ஆதிகாரிக இந்திரனைக் குறிப்பிட்டிருப்பதால், ப்ரம்ம சப்தமும் ஜகத்தின் படைப்பவனான ப்ரஜாபதி என்ற ஆதிகாரிக புருஷனைக் குறிக்குமாதலால், அவர்களுடன் கூறப்பட்டிருக்கும் சிவபதமும் ஸம்ஹாரத் தொழில் புரியும் ஆதிகாரிக புருஷனாகிய காலாக்னி ருத்ரனைத்தான் குறிக்குமாதலால், ஸம்ஹார காரிணி ஸம்ஹாரத் தொழிலைப் (முத்தொழிலில் மூன்றாவது தொழிலைப்) புரிய நியமிக்கப்பட்ட ஆதிகாரிக புருஷனாகிய காலாக்னி ருத்ரனிடத்தில், அவனைக் குறிக்கும் ஹரனிடத்தில், சிவ சப்தமாஹு: - சிவபதம் விபூதி வாக்யத்தில் குறிக்க வேண்டி உபயோகப் படுத்தப்பட்டிருப்பதாக சொல்லுகிறார்கள்.

சுலோகம் 45

விச்வாதிக: த்வமஸி விச்வமயம் முரரரி: யக்ஞேச்வர: த்வமஸி யக்ஞமமும் க்ருணந்தி | ஆத்யா ஜகத் ப்ரக்ருதிரேஷ பவாந் நிமித்தம் ஆத:  கதந்நு பகவன் ! யுவயோ ரபேத : ? ||

சிவபதம் காலாக்னி ருத்ரவாசகம் என்பது கைவல்யோபநிஷத்தில் தெளிவு. பல புராணங்களில் ஹரி, ஹர, அபேதம் சொல்லப்பட்டிருப்பதால். அதையனுஸரித்தும் பதிம் விச்வஸ் யாத்மானேச்வரம் சாச்வதம் சிவம் அச்யுதம் என்ற மந்திரத்தின் நடுவில் உபாஸ்ய வஸ்துவை பராமர்சிக்கும் போது, சிவம் அச்யுதம் என்ற பதங்களால், தெளிவாக, ஹரியும் ஹரனும் உபாஸ்ய வஸ்து ஒன்றுதான் என்று அபேதம் சொல்லப்பட்டிருப்பதால் ஹரன் உபாஸ்யன், ஹரி உபாஸகன் என்று நாராயணோப நிஷத் தாத்பர்யார்த்தம் சொல்வது யுக்தமாகாது என்ற சங்கைக்கு, விருத்தமான தர்மங்கள் கொண்ட ஹரி, ஹரர்களுக்கு, அபேதம் சொல்வது இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் அபேதம் சொல்வதுபோல் பிழை என்று எடுத்துக் காட்டுகிறார்.

பதவுரை

த்வம் – நீர், விச்வாதிக : அஸி – உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் மேலானவராக இருக்கிறீர். விச்வாதிகோ ருத்ரோ மகர்ஷி என்பது சுருதி, அயம் முரரரி : விச்வம் – முரன் என்ற அஸுரனைக் கொன்ற இந்த விஷ்ணுவோ, விச்வமாக, உலகமாக இருக்கிறார். ‘விச்வம் நாராயணம் தேவம்’ என்ற சுருதி நாராயணனை உலகமாகப் பறைசாற்றுகிறது. த்வம் யக்ஞேச் வரோஸி – நீர் யாகங்களுக்குத் தலைவராக இருக்கிறீர்.

காதபதிம், மேதபதிம் ருத்ரம் ஜலாஷ பேஷஜம் ஆவோராஜானம் அத்வரஸ்ய ருத்ரம் என்ற சுருதிகள் காண்க. அமும் – இந்த நாராயணனை யக்ஞம் யக்ஞரூபமாகத் துதிக்கிறார்கள்.

(யக்ஞோ வை விஷ்ணு என்பது சுருதி) ஏஷ:- - இந்த நாராயணன் ஆத்யா ஜகத் ப்ரக்ருதி:- ஜகத்தைப் படைத்து நிலையாக விருக்கச் செய்யும் முதலாவது (ஈச்வரனுடைய) சக்தியாவார் – வாஸுதேவ:ப்ராக்ருதி: (ப்ரக்ருதி) என்ற சுருதியும், கூர்மபுராணம், விஷ்ணு புராண வசனங்களும் இதற்கு ப்ரமணமாகும், மகேச்வரனைப் புருஷனாகவும், நாராயணனை ப்ரக்ருதியென்ற ஸ்த்ரீயாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஐயப்பன் உத்பத்திவரலாறும் இதைத் தெளிவாக்கும். பவாந் – தாங்கள் நிமித்தம் – நிமித்தகாரணமாக, (குயவன் மண்ணுக்குப்போல்) இருக்கிறீர், பகவன் – ஹே பகவானே, ஆத: - இந்த மூன்று விருத்த தர்மங்களுடன் கூடியிருப்பதால், யுவயோ: - உங்கள் இருவர்களுக்கும் கதந்நு – எந்த விதமாக, அபேத : - அபேதம் (வேறானவர்கள் இல்லை – ஒருவரே என்பது) அங்கீகரிக்க முடியும்? சைத்ய, ஒளஷணயமுள்ள ஜலமும், நெருப்பும் ஒன்றெனச் சொல்லலாமா? புராணங்களில் சில வசனங்களால் ஹரி, ஹர அபேதம் எழுதிவைக்கப்பட்டிருப்பது, உண்மைக்கு விரோதம் ஸூத ஸம்ஹிதையில் பரமேச்வரன், விஷ்ணு பிரம்மாவைக்காட்டிலும் பெரியவர்; ஸமமாகக் கொள்ளக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவ்விதம் முரண்பாடு காணப்படும் போதும், ப்ரம்மவிஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே ஸம்ப்ரஸூயந்தே ந காரணம் – என்ற சுருதியை அனுஸரித்தும், ஆதித்ய புராணம், மகாபாரதம் முதலிய க்ரந்தங்களை யனுஸரித்தும் சொல்லும் வாக்கியங்களுக்கு ஈச்வரமூர்த்தி விசேஷங்களான ஹரிமூர்த்திகளும் அந்த அந்த பலனைக் கருதி உபாஸக்கப் படலாம் என்ற கூர்ம புராண வசனப்படி விரோதமற்றவைகளாகக் கருதப்படலாம், மகாதேவோ அல்ப்ப: என்று சொல்வது மே மாதா வந்த்யா என்ற வாக்யம் போல் முன் பின் முரண்பாடான அர்த்தம் கூறும் வாக்யம். மகாதேவன் = தேவர்களுக்கெல்லாம் பெரியவன் தேவர்களுக்கெல்லாம் பூஜிக்கப்படுகிறவன் எப்படி சிறியவனாக இருக்க முடியும்? விஷ்ணு புருஷோத்தமன் என்று கூறப்பட்ட போதிலும், பிறவியுள்ளவர்களுள் சிறந்தவன் என்பதுதான் கிடைக்கும். மேலும் மகாதேவ : என்பது வாசகசப்தமாதலால் சுருதி எனப்படும், புருஷோத்தமன் என்பது அஸாதாரணமான வாசகப்தமல்ல, ஆதலால் லிங்க மெனப்படும். சுருதி லிங்காதிகரண ந்யாயப்படி, சுருதியான மகாதேவ : என்ற பதம் பல முள்ளதால், சிவன் சிறந்தவனாவான் விஷ்ணு உபாஸகனாகவும் பரமசிவனை உபாஸித்து வரம சக்தி பெற்றதாலும் மற்ற ஜீவராசிகளுக்குள் சிறந்தவராவார், ஆனால் பரமசிவனுக்குத் தாழ்ந்தவரே, ஸமமாகமாட்டார். என்பது தான் சுருதி ஸ்ம்ருதி புராண இதிகாஸங்களின் முக்கிய தாத்பர்யம்.

சிவ புராணங்கள் தாமஸ புராணங்கள் என்ற வாசகம் பொருந்தாது, சுத்த ஸ்படிக ஸங்காச மூர்த்தியான ஸத்வகுண ப்ரதானரூப முள்ள, ஞான ப்ராதானமான பரமசிவனை ப்ரதி பாதிப்பதால் விஷயத்தால் தாமஸமல்ல, கர்த்தர வ்யாஸர் தாமஸர் என்றால், விஷ்ணுபுராணாதிகளும் தாமஸமாகிவிடும் வைஷ்ணவ புராணங்களில் விஷ்ணு பெரியவர் என்றும், சிவ புராணங்களிலும் சிவன் பெரியவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இம்முரண்பாட்டை பராசார புராணம் நன்கு விளக்கி உண்மையை எடுத்துக் காட்டுகிறது. விஷ்ணு புராணங்களின் தாத்பர்யம், பரமேச்வரனைக் காட்டிலும் பெரியவனே கிடையாது, அஷ்டாதச புராணானாம் நிஷ்டா காஷ்டா மஹேச்வர: என்பது ஸித்தாந்தம். த்ரிமூர்த்திகள் பரமேச்வரனிடமிருந்து உண்டானர்கள், அவர் விபூதிகள் என்பது திண்ணமாக நிலை நாட்டப்பட்டிருப்பதால், பரமேச்வரன் தான் பெரியவர்.

அவர் விபூதிகளான மூவர்களிலும், ருத்ரன் மற்ற இருவரைவிடப் பெரியவன் என்பது பாத்ம புராணத்திலுள்ள பிதா புத்ர ஸம் வாதத்தாலும், விஷபக்ஷணம், ததீசி மகரிஷியின் மகிமை, உபமந்யு சரித்திரம், தேவதாருவன ரிஷிகள் சாபக் கதை, ப்ருகு சாபாக்யானம் முதலியவைகளால் நிர் விவாதமாக ஒப்புக்கொள்ளப்படவேண்டிய விஷயமாகும்.

சம்ப்வாயுஷி இயத்தா ந காலகாலோ யத: சிவ: என்ற வாக்யத்தால் ஸதாசிவன் தான் காலத்துக்கு உட்படாத பெரியவர்.

சுலோகம் 46

விச்வாத்மன : ஸ்துதிஷு விச்வபதித்வவாத : ஸங்கச்சதே ஸ்துதிதயைவ ரதாங்கபாணே : | விச்வஸ்ய பத்யுரத விச்வ தயாபிதானம் நாலம் குணாய குணக்ருஹ்ய நிகர்ஷஹேது : ||

நாராயணன் விச்வாத்மகன் என்றால், பதிம் விச்வஸ்யாத் மேச்வரம் என்ற நாராயண அநுவாக மந்த்ரத்தில் விச்வபதி நாராயணன் என்று கூறப்படுவது எங்ஙனம் பொருந்தும் என்ற சங்கை தீர்க்கப்படுகிறது.

பதவுரை

விச்வாத்மன: உலகத்தை ஸ்வரூபமாகக் கொண்ட, ரதாங்கபாணே: - சக்ரபாணியான நாராயணனுடைய, ஸ்துதிஷு – ஸ்தோத்ரங்களில், விச்வ பதித்வவாத : உலகத்துத் தலைவன் என்ற சொல், ஸ்துதிதயைவ ஸங்கச்சதே – ஸ்தோத்ரமாகவே பொருந்தும். விச்வஸ்யபத்யு:- உலகத் தலைவனுடைய, அத – பூராவும், விச்வதயாபிதானம் – உலகமாக இருப்பதாகச் சொல்வது, குணக்ருஷ்ய நிகர்ஷ ஹேது: - குணங்களைக் குறைக்கும் காரணமாக இருப்பதால், குணாயநாலம் – ஸ்தோத்ரமாக முடியாது. உயர்ந்த குணங்களைச் சொன்னால் ஸ்தோத்ரமாகும். தாழ்ந்த குணங்களைச் சொல்வது நிந்தையாகும். ஸ்துதிக்காக விச்வபதியாகச் சொல்லப்படுகிறான். உண்மையாக விச்வபதியாகக் கொண்டால், விச்வனாகச் சொல்வது நிந்தையாகுமாதலால் பொருந்தாது. ஆகவே உண்மையில் விச்வனை ஸ்துதிக்காக சுருதி விச்வபதி என்று சொல்லுகிறது.

சுலோகம் 47

விச்வம் மஹேச்வர ! பவாந் அதிதிஷ்டதீதி விச்வாத்மதாம் உபசரந்தி யதாகமாஸ்தே | தத்பண்டிதா : விதிதவேத ரகஸ்ய சீலா : ஜானந்தி மந்த மதயஸ்து ததேவ ஸத்யம் ||       சுருதிகளில் ஸர்வோவை ருத்ர: என்று ருத்ரனும் விச்வாத் மகனாகச் சொல்லப் படுகிறானே என்ற சங்கை நீக்கப்படுகிறது.

பதவுரை

மகேச்வரா! விச்வம் – உலகத்தை, பவான் – தங்கள் அதிதிஷ்டதீதி – தாங்குதலாக இருந்து கொண்டு தரிக்கிறீர் – என்ற காரணத்தால், ஆகமா: - ஸ்ர்வோவை ருத்ர : என்ற வாக்கியங்கள், தே – உமக்கு, விச்வாத்மதாம் – உவக ஸ்வரூபமாக இருக்கும் தன்மையை உபசாந்தி – கெளணமாகச் சொல்லுகின்றன, இதியத் – என்பது யாதொன்று உண்டோ, தத் – அதை, விதித வேத ரகஸ்யசீலா :- அறியப்பட்ட உபநிஷத் வாக்கியங்களைத் திருப்பித் திருப்பி உபக்ரமாதி ஆறுவிதமான தாத்பர்ய லிங்கங்களால் பரிசீலனை செய்யும் ஸ்வபாவமுள்ளவர்களான பண்டிதா: - வித்வான்கள், ஜானந்தி – அறிகிறார்கள், மந்தமதயஸ்து – உழைப்பில்லாத மூடர்களோ, ததேவ – அந்த விச்வாத்மதயை ஸத்யம் – லக்ஷணாவ்ருத்தி யில்லாமல் உண்மையானதென்று, ஜானந்தி – அறிவார்கள்.

புராணங்களில் பரமேச்வரனுடைய ஸத்யோஜ் ஜாதாதி பஞ்ச மூர்த்திகளும் பவாதி அஷ்டமூர்த்திகளும், அதிஷ்டாதாவாக இருப்பது பற்றியும், ப்ரவேச ச்ருதிகளை யனுசரித்தும், விச்வாதிஷ்டாதாவாகிய பரமசிவன் விச்வாத்மகனாக சொல்லப்படுகிறார், என்பது நன்கு விளக்கப்பட்டிருப்பதை இந்த சுலோகத்தில் கூறுகிறார். ஆதலால் ருத்ரனுடைய விச்வாத் மகத்வம் கெளணம் அதிஷ்டாத்ருத்வம் முக்கியம் நாராயணனுடைய விச்வாத்மகத்வம் முக்கியம். விச்வபதித்வம் ஸ்துதி ரூபம் என்று வைலக்ஷண்யம் இரண்டு ச்லோகங்களால் விளக்கப்பட்டது.

சுலோகம் 48

துப்யம் நமோ விதததீச்வர ! தந்தமர்த்தம் ஆதிஷ்டதே ஸகல கர்மஸு விச்வதர்சீ | ஸர்வானுவாதமிதம் உக்த ஸமர்த்தனாய காத்யாயனோ முனிருதாஹர திஸ்ம க்ருஹ்யே ||

பதவுரை

ஈச்வர – பரமேச்வரனே! ஸர்வதர்சீ – எல்லாம் அறிந்த, காத்யாயன: முனி: - காத்யாயன மகரிஷி, க்ருஹ்யே – க்ருஹ்ய ஸூத்ரத்தில், தந்தமர்தத மாதிஷ்ட தே – அந்தந்த மார்ககம், மரம் மலை, முதலியவைகளுக்கு அதிஷ்டாதாவாகிய, துப்யம் – உமக்கு, ஸகல கர்மஸு – லெளகீக, வைதீக ஸகல கர்மாக்களில், நமோ விததத் – நமஸ்காரத்தைச் செய்யும்படி மந்த்ரங்களை விதிப்பவராகக் கொண்டு, உக்த ஸமர்த்தனாய – சொல்லப்பட்ட விஷயத்துக்கு மந்த்ரங்களுக்கு ஆதாரமாக, அனுகுணமாக, இதம் – இந்த, ஸர்வானுவாதம் – ஸர்வோவை ருத்ர : ருத்ரோ ஹ்யேவை தத் ஸர்வம், என்ற இந்த இரண்டு மந்த்ரங்களை, உதாஹரதிஸ்ம – எடுத்துக் காட்டியிருக்கிறார்.

       நமோ ருத்ராய பதிஷதே, வனஸ்பதிஷதே, கிரிஷதே, ஸ்வஸ்தி மா ஸம்பாரய ---என்று

நமஸ்கார மந்த்ரத்தை விதித்து, ஸர்வாத்மக மந்த்ரத்தை ஆதாரமாகக் காண்பித்தால் ஸர்வாத் மகமந்த்ரத்துக்கு ஸர்வாதி ஷ்டாதா என்றுதான் அர்த்தம் என்பது தெளிவாகிறது. உண்மை ஸர்வஸ்ரூபியானால், நமேருத்ராய பதே, வனஸ்பதயே, கிரயே, ஸ்வஸ்தி மாஸம்பாரய என்ற மந்த்ரத்தைக் காத்யாயனர் விதித்திருக்க வேண்டும், யோ ருத்ரெள, அகனெளயோ அப்ஸு, ய ஒஷதீஷு, யோருத்ரோ விச்வா, புவனா விவேச தஸ்மை ருத்ராய நமோ அஸ்து – என்ற மந்த்ரம் பரமேசவ்ரனை ஸர்வாதிஷ்டாதாவாகக் கூறுவதால் ஸர்வாத் மகத்வம் பரமசிவனுக்கு கெளணம் என்பது திண்ணம்.

சுலோகம் 49

ஸ்தானம் யதாந்தர முபாஸ்தி ருபாஸகோ வா யா ஸா பராபரதயா விவிதா விபூதி : | யத்வா புன : விஷமநேத்ர முபாஸி தவ்யம் நாராயணோப நிஷதாஹ ததத்ர ஸர்வம் ||       கீழே விவரிக்கப்பட்ட நாராயணோபநிஷத்தின் அர்த்தத்தை ஒன்று சேர்த்து முடிவு சொல்லப்படுகிறது.

பதவுரை

யத் – யாதொரு, ஆந்தரம் – ஹ்ருதயம் என்று சொல்லப் படுகின்ற, ஸ்தானம் – உபாஸனையின் இடம் உண்டோ, யா ச உபாஸ்தி : - யாதொரு உபாஸனையென்ற செய்கையுமுண்டோ, யஸ்யோபாஸக:- யாதொரு உபாஸிப்பவன் வேண்டுமோ, பராபரதயா – உயர்ந்ததும் தாழ்ந்ததுமாக, விவிதா – பலவாறான, யா ஸா விபூதி :- யாதொரு அந்த பிரஸித்தமான விபூதி என்ற மகிமையுண்டோ, விஷம் நேத்ராக்யம் – முக்கண்ணன், மூவர்களின் தந்தை மூன்று சக்திகளுடன் கூடியவர், மூன்று மாத்திரைகள் உள்ள ஓங்கார ப்ரதிபாத்யன் என்ற, யத் உபாஸிதவ்யம் – யாதொரு உபாஸிக்கப்பட்ட வேண்டிய வஸ்துவோ, தத்ஸர்வம் – அவை எல்லாவற்றையும், நாராயணோபநிஷத் – இந்த நாராயணோப நிஷத்தானது, அத்ர – இந்த வாக்கியங்களில், தஹ்ரம் விபாபம் என்ற மந்த்ரத்தில் இடத்தையும் தஸ்மிந்யதந்தஸ் ததுபாஸிதவ்யம், என்ற மந்த்ரத்தில் உபாஸனாக்ரியா விதியையும், ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் – என்ற 2-வது அநுவாகத்தில் உபாஸகனான நாராயணனையும், ஸப்ரம்மா ஸ சிவ: ஸ – ஹரி: ஸேந்த்ர: என்ற மந்த்ரத்தில் உபாஸ்ய ஈச்வர விபூதியான ப்ரம்மா, விஷ்ணு, காலாக்னிருத்ரன், இந்திரன் முதலிய ஆதிகாரிக புருஷர்களையும்; யத்வாபுனரத்ர – யத் வேதாதெள என்ற மந்த்ரத்தில் ஓங்காரப்ரதி பாத்ய, மகேச்வரனான உபாஸ்யவஸ்துவையும் ஆஹ – சொல்லுகிறது, ஆதலால் இந்த தஹர வித்யா மூன்று அநுவாகங்களால் சொல்லப்படுவது, அபேக்ஷிதமான ஸகல அமசங்களையும் கூறுவதால், பரிபூர்ணமானது. உண்மை இவ்வாறாக, நாராயண அநுவாகம், இங்கு தஹர வித்யாப்ரகரணத்தில் பொருந்தாதென்று லிங்கத்தால் பிரகரணத்தை பாதித்து உத்கர்ஷிக்கப் படுகிறதென்றும், அந்த அந்த பரவித்யாக்களில் சொல்லப்பட்டிருக்கும் சம்பு, பரமாத்மா, பரப்ரம்மா, பரதத்வம், அக்ஷரம் பரமபதம், சிவம், பரம்ஜோதி: என்ற பதங்களை இங்கு அநுவதித்து அவையாவும் நாராயணன் தான் என்று நாராயண அநுவாகம் சொல்வதால் இந்த அநுவாகம் பூராவும் லிங்க பூயஸ்தத்வத்தால் ப்ரகரணத்தில் தஹர வித்தையில் அந்வயிக்காமல் உத்கர்ஷிக்கப்பட்டு, ஸகல பரவித்யா உபாஸ்யன் நாராயணன் ஒருவன் தான் மற்ற ஹிரண்ய கர்ப்பன், மஹேசன் அல்ல என்பது நிர்ணயிக்கப்படுகிறது-என்று 3.3-44 வது வ்யாஸ ஸூத்ரத்துக்கு ஸ்ரீராமானுஜர் பாஷ்யம் பொருத்தமில்லை யென்பதை விமர்சகர்கள் அறிய வேண்டும். அந்தர் பஹி : ச என்ற மந்த்ரத்தில் நாராயணன் உத்தேச்யமாகத்தான் கொள்ள வேண்டும். அப்படியே பிறமந்த்ரங்களிலும் நாராயணன் பரமாத்மா, நாராயணன் பரம்பிரம்மா, நாராயணன் பரம் ஜோதி என்று சொல்வதுதான் பொருத்தம். அப்போது ப்ரகரண பாதத்துக்கு லிங்கமேது? பாரிசேஷந்யாய ஸித்த உபாஸகன் துதியல்லவா? தஹரவித்யா ஸம்பந்தமில்லாவிடில் இங்கு படித்தது வீணாகும். மற்ற எல்லா வித்யாஸம் பந்தம் கிடைத்த நாராயணன், தஹர வித்யா உபாஸ்யன் என்பது ஸித்தமாகாதா? எப்படி பாட ஸார்தக்யம் சொல்ல முடியும்.

ஆதலால் தான் அத்வைத பாஷ்யகாரர்கள், அவர்கள் முன்னோர்கள் அனைவரும். லிங்க பூயஸ்வாத்தத் ஹி பலீயஸ் ததபி

என்ற ஸூத்ரதைத் தனி அதிகரணமாக பாஷ்யம் செய்யாமல் பூர்வவிகல்ப்ப என்ற பின் ஏழுஸூத்ரங்களுடன் சேர்த்து, எட்டு ஸூத்ரங்கள் எல்லாம் மனஸ்சித, வாக்சித: என்ற சதபத ப்ராம்மண வாக்யத்திலுள்ள உபாசனையைப் பற்றிய விசாரமாகக் கருதி, அங்கு லிங்கத்தைக் காட்டிலும் ப்ரபலமான சுருதி முதலியன இருப்பதால், சுருதி லிங்க வாக்யங்கள் மூன்றும் பரகரணத்தைப் பாதிப்பதாகவும், ஸ்வதந்தர உபாஸனையென்றும் சயன ப்ரகரணந்தில் படிக்கப்பட்டிருப்பது, சயனத்திலுள்ள பாஹ்ய ஸகல பதார்த்தங்களையும் ஞாபகப் படுத்தி, ஸ்வதந்த்ரமாக உபாஸித்துவிடக் கூடியதைச் சொல்வதற்கென்றும் சொல்லியிருக்கிறார்கள். ஏழு ஸூத்ரங்களுக்கு மற்றவர்களைப் போல வ்யாக்யானம் செய்த ஸ்ரீ பாஷ்யக்காரர் இந்த ஒர் ஸூத்ரத்தை நாராயணோபநிஷத் பரமாகப் பார்த்தது எதற்கோ? விமர்சகர்கள் கவனிக்க! எப்படியாவது நாராயண அநுவாகம் தஹரோபாஸனையில் உபாஸகர் ஆதலால் இது அனைவராலும் முக்திக்காகச் செய்யத் தகுந்தது என்பதை வலியுறுத்தவே நடுவில் படிக்கப்படுகிறது, உத்கர்ஷமோ உபாஸனா விதிகல்ப்பனையோ, பல கல்பனையோ அனாவச்யம் என்பது ந்யாயசித்தம் என்பதை ஸ்ரீ ஹரதத்தர் வற்புறுத்திச் சொல்லுகிறார். இதற்கு ஆதாரமாக வ்யாக்யாதாவாகிய சிவ லிங்க பூபதி வாயவீயஸம் ஹிதையை விரிவாக விளக்குகிறார். ஆதலால் வேதங்களில், புராணங்களில், சாஸ்த்ரங்களில், ஸம்ருதிகளில் எங்கு, எங்கு பரப்ரம்ம சப்தம் காணப்படுகிறதோ, அங்கு அங்கு முக்கண்ணனான பரமேச்வரன் தான் பரப்ரம்ம சப்தத்தின் பொருள் என்பது ஜய துந்துபிகளால் ஸகல உலகங்களிலும் உத்கோஷிக்கப்படட்டும் என்று முடிவுகாட்டியிருக்கிறார்.

நாராயண உபநிஷத் முதலிய எல்லா உபநிஷத்துக்களிலும் சொல்லப்படும் உபாஸனைகளால் உபாஸிக்கப்படுபவர் பரமேச்வரன் என்ற மூன்றாவது லக்ஷணம் அதிவ்யாப்தி, அல்யாப்தி, அஸம்பவம் என்ற முத்தோஷமற்ற லக்ஷணமாக ஸ்தாபிக்கப்பட்டது.

சுலோகம் 50

யக்ஞாத்மனா ஸ்வயமஸாவ்ருஷிணோபதிஷ்டா நாராயணேன பவத : ப்ரதிபாதயித்ரீ | ஸூக்தம் யதா புருஷ தைவத மந்தகாரே நாராயணார்ஷ மிதி தத்வ்யபதிஷ்ட மாஹு : ||

நாராயணோபநிஷத் என்ற மஹோபநிஷத் ஈச்வர உபாஸனையைச் சொல்வது என்றால் நாராயண உபநிஷத் என்ற பெயர் பொருந்துமா என்ற கேள்விக்கு விடை விளக்குகிறார்.

பதவுரை

அந்தகாரே – யமனை யடக்கினவரே! யதா – எவ்விதம் புருஷதைவதம் ஸூக்தம் – ஸஹஸ்ர சீர்ஷா என்று ஆரம்பிக்கும் புருஷனை தேவதையாகக் கொண்ட ஸூக்தமானது (16 ரிக்குகள் கொண்டது) நாராயணார்ஷமிதி – நாராயண ரிஷியால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற காரணத்தால் (சைஷிக அணப்ரத்யயம் வந்திருக்கிறது என்று சுருதி) தத்வ்யபதிஷ்டம் – அந்த நாராயண பதத்தினால் குறிப்பிடப்படுகிறதோ, ததா – அவ்விதமே பவத: ப்ரதிபாதயத்ரீ – உம்மைத் தெரிவிக்கிற, அஸெள – இந்த உபநிஷத், ஸ்வயம் யக்ஞாத் மனா – உண்மையாக யக்ஞஸ்வ ரூபமான, நாராயணேன ரிஷிணா உபதிஷ்டா – நாராயண ரிஷியால் கண்டு பிடிக்கப்பட்டு உபதேசிக்கப் பட்டிருக்கிறது. ஆதலால் இதையும் நாராயணோபநிஷத் என்று சொல்லுகிறார் தேவதை வேறாகிலும் கண்டுபிடித்த ரிஷியின் பெயரால் புருஷஸூக்த மந்த்ரங்கள் நாராயண அநுவாகம் என்று சொல்லப்படுவதுபோல, மகேச்வரன் உபாஸ்யனாக இருக்கிற நாராயணோபநிஷத், மஹேச்வரோபநிஷத் என்று சொல்லப்படாமல் கண்டு பிடித்த ரிஷி பெயரால் சொல்லப் படுவது பொருத்தமே. புருஷ ஸூக்த்த்தில் ப்ரதிபாத்யமான தெய்வம் பரமேச்வரன் தான் புருஷ பதத்தால் சொல்லப்படுகிறான் என்ற விஷயம் லிங்க புராணத்தைக் கவனித்தால் நன்கு விளங்கும்.


 

  1. சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 51 முதல் 100 முடிய
  2. சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 101 முதல் 151 முடிய

 

Related Content

அரிகரதாரதம்மியம் - தமிழ்ப் பாடல் உருவில்

அருணாசல அக்ஷரமணமாலை (ரமணர்)

அருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)

அருணாசல நவமணிமாலை (ரமணர்)

அருணைச் சிலேடை அந்தாதி  வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)