logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

நீலகண்டசிவன் பாடல்கள்

சிவ கீர்த்தனை

nIlakaNTa shivan compositions

On Lord shiva

These songs are available in romanized (transliterated) form also.

 

.எண்

பாடல்

இராகம்

தாளம்

01

அந்தரி சுந்தரி காமாக்ஷி

கரஹரப்ரியா

ஆதி

02

உன்னைத் தவிர

சுருட்டி

ஆதி

03

என்றைக்கு சிவகிருபை

முகாரி

மிச்ரசாபு

04

ஏனிந்தத் தாமதம்

நாட்டைகுறிஞ்சி

ஆதி

05

கருணை புரியிதுதருணம்

வராளி

மிச்ரசாபு

06

கருணை செய்வையே

சகானா

ரூபகம்

07

கஜானன கணேச்வரனே

பந்துவராளி

ரூபகம்

08

கருணாகர கருணாகர

மத்யமாவதி

ரூபகம்

09

கருணாகரி உனது

பைரவி

ரூபகம்

10

சரணஞ் சரணங்கோமதி

சாவேரி

மிச்ரசாபு

11

ஜகமெல்லாம் படைத்தருளும்

மங்களகைசிகி

ஆதி

12

சிதம்பரமே முக்திப்

பலஹம்ச

ஆதி

13

தரிசனமே முக்திதரும்

தோடி

ஆதி

14

தினமும் நினைமனமே

சௌராஷ்ட்ரம்

மிச்ரசாபு

15

தேறுவதெப்போ நெஞ்சே

கமாஸ்

ஆதி

16

நீலகண்டா நித்யானந்த

ஆரபி

ரூபகம்

17

மனமே உனக்கொரு

சாமா

ஆதி

18

விநாயகா துணை

நாட்டைகுறிஞ்சி

ஆதி

19

வேலாயுதனே ஷண்முகனே

காம்போதி

ஆதி

20

வந்தெனக்கருள் தந்து

காபி

ரூபகம்

21

சம்போ மகாதேவ

கானடா

ரூபகம்

22

சிவனை நினை

ஹமீர்கல்யாணி

ஆதி

23

சிவானந்தம் ப்ரஹ்மானந்த

ரீதிகௌளை

ஆதி

24

சிவனை நினைந்து

காம்போதி

ஆதி

25

சரவணபவ சிவானந்தா

கேதாரம்

மிச்ரசாபு

26

ஆகு மாகு மெவர்க்கு

லதாங்கி

ரூபகம்

27

ஆனந்த நட மாடுவார்

பூர்விகல்யாணி

ரூபகம்

28

ஆதிசிவனருளா ருக்குகிருக்குதோ

பேகடா

மிச்ரசாபு

29

உன்னிப்பாரடி தன்னை

அடாணா

திஸ்ரஆதி

30

உன்மேல் பாரம் வைத்து

சங்கராபரணம்

மிச்ரசாபு

31

எத்தனை தான் சொன்னாலும்

செஞ்சுருட்டி

ஆதி

32

என்ன வந்தாலும் நான்

காம்போதி

மிச்ரசாபு

33

என்ன விதம் பிழைப்போம்

சாளகபைரவி

ஆதி

34

ஏனிந்தப்படி ஆனாய் ஏழை

வசந்தா

ஆதி

35

ஓராறு முகனே அன்னை

ரீதிகௌளை

ஆதி

36

கண்டேன் கலி தீர்ந்தேன்

சரஸ்வதி

ஆதி

37

கண்ணாறக் கண்டேனே கதிர்வடி

முகாரி

மிச்ரசாபு

38

கருணை பெருங்கடலே

ராகமாலிகா

ரூபகம்

39

குருபரனே யெனக்கருள் தயாநிதியே

கமாஸ்

ஆதி

40

சித்த அருள் சிவ சக்தி

நாட்டை

மிச்ரசாபு

41

நவசித்தி பெற்றாலும் சிவபக்தி

கரஹரப்ரியா

மிச்ரசாபு

42

நீ தயவா யாதரிப்பா யம்மா

தோடி

ரூபகம்

43

பரம தயாகர சங்கர சந்திரசேகர

நாதநாமக்ரியை

ஏகம்

44

மூலாதார மூர்த்தி வந்தருள்

பௌளி

ரூபகம்

45

ராஜராஜேச்வரி கிரிராஜகுமாரி

மத்யமாவதி

ரூபகம்

46

ராஜனைத் தொழுவாய் நடராஜனைத்

தர்பார்

ரூபகம்

47

வா வா கலை மாதே

ராமப்ரியா

ஆதி

48

சம்போ மகாதேவ சரணம்

பூபாளம்

ரூபகம்

49

தீம் நாத்ரு தீம் திரன

ஹம்சானந்தி

ஆதி

 

 

 
 

  

1.    அந்தரி சுந்தரி காமாக்ஷி...

2.      
3.     இராகம் : கரஹரப்ரியா 
4.     தாளம் : ஆதி
5.                                                                                                                                                                                                                                         

பல்லவி

 

அந்தரி சுந்தரி காமாக்ஷி யெனக் 

கருள் புரி மாமதுரை மீனாக்ஷி 

 

அநுபல்லவி

 

சுந்த ரேசர் வாமாங்க மேவி யானந்த மோடுஞ் 

சுக முங்கைக் கொண்டு நாமுமக மகிழ்ந்து றவாடும் 

 

சரணம்

 

மும்மலைத் தடா தகை யெனப்புவி மீது தித்தாய் 

முழுதுலகமும் வென்று வீர முடி தரித்தாய்ச் 

செம்மையா யுல காண்டு ஜகம் புகழ்ந்திட வைத்தாய் 

திருநீல கண்டர் பாதி யுடற் கலங்கார முற்றாய். 

 

பாடல் தலைப்பு

 

 


  

6.    உன்னைத் தவிர...

7.      

8.      இராகம் : சுருட்டி 

9.     தாளம் : ஆதி 

10.    

11.   ஸரிமபநிஸ் - ஸ்நிதபமகபமரிஸ

12.    

பல்லவி

 

உன்னைத் தவிர வேறில்லை கதியெனக் 

குன்னைத் தவிர வேரில்லை 

 

அநுபல்லவி

 

அன்னை தந்தையும் நீயே அகில பந்துவும் நீயே 

அன்னை யுமையாள் நேயா அன்பர்க்கருள் சகாயா 

 

சரணம்

 

பகலு மிரவும் நீயே - பலதாந் தெய்வமும் நீயே 

சுகமும் துக்கமும் நீயே - சோம சூடா மணியே 

 

இகமும் பரமும் நீயே - எல்லாப் பொருளும் நீயே 

சகல கலையும் நீயே - சம் போதயா நிதியே 

 

கண்ட தெவையும் நீயே காணாதவையும் நீயே 

கண்டார் காக்ஷ¢யே நீலகண்ட கிருபா நிதியே 

 

பாடல் தலைப்பு

 

 


  

13. என்றைக்கு சிவகிருபை...

14.    

15.   இராகம் : முகாரி 

16.   தாளம் : மிச்ரசாபு 

17.    

பல்லவி

 

என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை 

என் மனச் சஞ்சலம் அறுமோ 

 

அநுபல்லவி

 

கன்றுக் குரலைக் கேட்டுக் கனியும் 

பசுப்போ நோக்கி 

ஒன்றுக்கும் அஞ்சாதென்றன் 

உள்ளத்து யரம் நீக்கி 

 

சரணம்

 

நான் கொண்ட துயரத் தைநான்வென்றே 

என்னக்காட்டி 

வீண் கண்ட இருளெல்லாம் வெளியாக்கி 

பொருள்நாட்டி 

யானின்றுள் இளைப்பாறி ஆனந்த பெருந் தீரந் 

தானின்ற நீலகண்டன் சரணார விந்தம் சேர. 

 

பாடல் தலைப்பு

 

 


  

18. ஏனிந்தத் தாமதம்...

19.    

20.   இராகம் : நாட்டைகுறிஞ்சி 

21.   தாளம் : ஆதி

22.    

பல்லவி

 

ஏனிந்தத் தாமதம் மீனாக்ஷிமனம் 

இரங்கி வந்து தந்தருள் திருக்காக்ஷி

 

அநுபல்லவி

 

நீ நினைந்தால் நடவாதது முண்டோ 

நித்திய கல்யாணி யென்பெற்றவளே கண்டாய் 

 

சரணம்

 

சோதனை யாமென்றாலும் நான்மனம் பொறுக்கேன் 

துரும்பெனத் தள்ளினாலு மினியுனை வெறுக்கேன் 

நீதனை யாலவாயில் நீலகண்டனை மேவி 

நிரந்தர வருள்புரிந் தெதுந்தரும் பரதேவி. 

 

பாடல் தலைப்பு

 

 


  

23. கருணை புரியிதுதருணம்...

24.    

25.   இராகம் : வராளி 

26.   தாளம் : மிச்ரசாபு

27.    

பல்லவி

 

கருணை புரியிதுதருணம் மீனாக்ஷி நானுன்னடிமை 

சரணம் உனக்கே சரணம் ஜகத்ஸாக்ஷி 

 

அநுபல்லவி

 

பெருமை யுறுமது ராபுரித் தனி 

யரச பெரும் சுந்தரேசர் மனோன்மணி 

அருணிறைந்த கடாக்ஷ வீக்ஷணி 

அம்பிகே யுன்னை நம்பி னேனினி 

 

சரணம்

 

நீல வேணி நிறைந்த பூஷணி 

லீலைதரு முக்கதர பாண்டிய ஜனனீ 

சீல மிகு பரதேவி சீகபாணி 

நீல கண்டர் மனோல் லாசினி. 

 

பாடல் தலைப்பு

 

 


  

28. கருணை செய்வையே...

29.    

30.   இராகம் : சகானா

31.   தாளம் : ரூபகம்

32.    

பல்லவி

 

கருணை செய்வையே அம்மா நின் 

 

அநுபல்லவி

 

அருமறை நான்கும் பெரும்புகழ் ஓங்கும் 

பொருளே மெய்தாங்கும் திருவருள் தேங்கும் 

 

மத்யமகாலம்

 

பரயே திருவடிபோற்றி யிருவினை நோயதுமாற்றி 

சரண்பெரும் தொண்டர்கள்தோற்றி யருளுமையே யெனையாற்றி 

 

சரணம்

 

ஆதி யந்தமில்லாத சிலையேஓதி முனிவர்புகழும் பறையே 

பூதி திகழந்தஅடியார் அனையே கோதிலா மணியே 

 

மத்யமகாலம்

 

பாதி மதிச் சடைகொண்ட சோதியெனும் நீலகண்டர்

மீதொரு பாதியிர் பெண்டாம் ஆதியே நீகதிகண்டாய். 

 

பாடல் தலைப்பு

 

 


  

33. கஜானன கணேச்வரனே...

34.    

35.   இராகம் : பந்துவராளி

36.   தாளம் : ரூபகம்

37.    

பல்லவி

 

கஜானன கணேச்வரனே 

கருணை செய்வாய் சரணம் நீயே 

 

அநுபல்லவி

 

விசால கர்ண வக்ரதுண்ட வேலவனுக்கு 

முன்னோன்றிய மூலமுதப் பொருளாகிய 

 

சரணம்

 

பால சந்திர வேணியன் பாலா வுமை லோலா 

பழவகை பயற வலுண்டருளுஞ் சீலாவனு கூலா 

நீலகண்டதாசன் கவிக்கு நேர்ந்து வந்தருள் போதா 

நித்திய நின்மல நிச்சல நிஷ்கள சத்திய சம்பத் ப்ரசாதா 

ஆலடி தங்கியதாதா அன்பர் பணிந்திடும் பாதா 

மாலயனும் தொழும் வேதா மங்கள மருளைங்கர நாதா. 

 

பாடல் தலைப்பு

 

 


  

38. கருணாகர கருணாகர...

39.    

40.   இராகம் : மத்யமாவதி 

41.   தாளம் : ரூபகம் 

42.    

43.   ஸரிமபநிஸ் - ஸநிபமரிஸ

44.    

பல்லவி

 

கருணாகர கருணாகர கருணாகர குகனே 

 

அநுபல்லவி

 

சரணா கதி சரணாகதி தருவாயறுமுகனே 

 

சரணம் மத்யமகாலம்

 

கருநீள்ச் சிறைப் பரிமேல் வருங்கரமா நிரண்டுடையா 

கைலாசலம் முதலாகிய சைலே நீதிர நிலையா 

திருநீல கந்தர சங்கரர்க் குரியா வுமை தனையா 

திருமால் மகள் மகவான் மகளிருவரி ணைபிரியா 

 

பாடல் தலைப்பு

 

 


  

45. கருணாகரி உனது...

46.    

47.   இராகம் : பைரவி 

48.   தாளம் : ரூபகம் 

49.    

50.   ஸகரிகமபதநிஸ் - ஸ்நிதபமகரிஸ

51.    

பல்லவி

 

கருணாகரி உனது அடைக்கலமாம் எனை ஆதரி 

காமாக்ஷி பரமேச்வரி 

 

அநுபல்லவி

 

திரு நீலகண்டர் மன மோகினி ஹரிசோதரி 

தேவி, வரதாயினீ, மகாராஜியாம் ஆனந்தேச்வரி 

 

சரணம்

 

எத்தனை பிழைசெய்தாலும் தாய்க்குப் பெற்றபிள்ளைமேல் வாதாமா 

எல்லாப் பிள்ளைக்குள் ஏழைப்பிள்ளையாம் என்னை சோதிக்கலாமா 

மெத்தவும் உனைப் போற்றினேன் பிழைஎத்தெயும் பொறுத்தாள்பெற்ற 

வேதமே அன்பர்போதமே உந்தன் பாதமேகதி, ஆதரவுற்ற. 

 

பாடல் தலைப்பு

 

 


  

52. சரணஞ் சரணங்...

53.    

54.   இராகம் : சாவேரி

55.   தாளம் : மிச்ரசாபு

56.    

பல்லவி

 

சரணஞ் சரணங் கோமதி சங்கரி நீயே 

சரணஞ் சரணங் கோமதி 

 

அநுபல்லவி

 

கருணை புரியிது தருணம் நீயலது 

கதி யறியேனிள மதிநுதல் சிவையே 

 

சரணம்

 

ஆதி மூலப் ரக்ருதியே அனாதிவேதத் 

தரும் பொருட் சிவ நிதியே 

நீதிசுகரூ பிணி நித்யானந்த பூரணி 

 

மத்யமகாலம்

 

நின் பெருமை பெருதன்பர் தொழுந்திரு 

நீல கண்டர் ஜாயே பாலனஞ் செய்வாயே. 

 

பாடல் தலைப்பு

 

 


  

57. ஜகமெல்லாம் படைத்தருளும்...

58.    

59.   இராகம் : மங்களகைசிகி

60.   தாளம் : ஆதி 

61.    

62.   ஸமகமபமதநிஸ - ஸ்நிதபமரிஸ

63.    

பல்லவி

 

ஜகமெல்லாம் படைத்தருளும் சிவமய சின்மயமான 

மக தேவ தேவருக்கு மங்களம் 

மக மேருவில் வளைத்த மாலயனுந்தேடவைத்த 

மகிமை பெற்றார் தமக்கு மங்களம் 

கதித்தேடித் தொழும்அடியார் கவலையெல்லாம் மாற்றிஅன்பாய் 

மதி சூடி வருவார்க்கு மங்களம் 

மங்களந்திரு நாமர்க்கு மங்களம் ஜய 

மங்க ளாம்பிகா நாதர்க்கு மங்களம் 

கங்கைச் சடை பூண்டவர்க்கு மங்களம்நீல 

கண்ட நம தாண்டவர்க்கு மங்களம். 

 

பாடல் தலைப்பு

 

 


  

64. சிதம்பரமே முக்திப்...

65.    

66.   இராகம் : பலஹம்ச 

67.   தாளம் : ஆதி 

68.    

69.   ஸரிமபதஸ் - ஸ்நிதமரிமகஸ

70.    

பல்லவி

 

சிதம் பரமே முக்திப் பதந்தருமே 

 

அநுபல்லவி

 

நிதம் சிவகாமி காண பதஞ்சலித்தாடுமான 

 

சரணம்

 

அரியயனுங் கொண்டாட இருமுனிவர் கூத்தாட 

பெருமறை நான்கும் விரிசடை ஆடஆடும் 

 

ஆதியந்த மில்லேக ஜோதி சபையில் யோக 

போதரூபன் வைபோக மாதிடமாக ஆடும் 

 

அருவுரு வாயகண்ட பெருமான் நடனங்கொண்ட 

பெருவால முதுமுண்ட திருநீல கண்டனாடும் 

 

பாடல் தலைப்பு

 

 


  

71. தரிசனமே முக்திதரும்...

72.    

73.   இராகம் : தோடி 

74.   தாளம் : ஆதி 

75.    

76.   ஸரிகமபதநிஸ - ஸநிதபமகரிஸ

77.    

பல்லவி

 

தரிசனமே முக்திதரும் நிஜமே திவ்ய 

 

அநுபல்லவி

 

அரிஅயன் தொழும்பாதன் அம்பலத்தருள் நாதன் 

தரிகிடதிமிதக தளாங்கு தோமென எரிகரமொடும் 

நட மிடும் சிவ சிதம்பர 

 

சரணம்

 

தத் தோம் தத்தோம் தகதரிகிட கிண நகு 

தகுணகு ஜந்தரி தடிங்கு குடிங்குகு 

தித்தோம் தித்தோம் திமிதரிகிட திகுதகு 

ஜகுண குணந்தரி ஜந்தரி டிகுடிகு 

தித்திமி திமிதக திம்திம் திமியென 

திமிகிட கிண நக ஜம் ஜம் மஜ் என - 

தத்தரி கிடதிமி தகுதகு தகுவென 

தளாங்கு திமிதக தரிகிட தோமென 

தழைந்த சிலம் பொலி கலகலகலவென 

எழுந்த எரிகனல் தகதகதகவென 

டமரு கோ தை டுடுடுடு வென மாவிடம் 

அமரும் நீலகண்டன் ஆடிடும் மகாநடம் 

 

பாடல் தலைப்பு

 

 


  

78. தினமும் நினைமனமே...

79.    

80.   இராகம் : சௌராஷ்ட்ரம் 

81.   தாளம் : மிச்ரசாபு 

82.    

83.   ஸரிகமபமதநிஸ் - ஸ்நிதநிதபமகரிஸ

84.    

பல்லவி

 

தினமும் நினைமனமே நீலகண்டனை 

தினமும் நினை மனமே 

 

அநுபல்லவி

 

தினமும் நினைமனமே யுனதுளத் திருள்போமே 

செய்த பாவமகலுமே பொய்யல்ல விது மெய்யாமே 

 

சரணம்

 

எங்கு நாம்போயினு மவர்அங்கெலாம் கூடவருவார் 

எந்தஆபத்து வந்தாலும் வந்ததனை நீக்கிடுவார் 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

மங்கள மென்று முதவி மனதினின் குடி கொள்ளுவார் 

மாயவிருளை யொழித்து ஞானவொளியைத் தருவார் 

 

பாடல் தலைப்பு

 

 


  

85. தேறுவதெப்போ நெஞ்சே...

86.    

87.   இராகம் : கமாஸ் 

88.   தாளம் : ஆதி

89.    

பல்லவி

 

தேறு வதெப்போ நெஞ்சே தெளிந்துகரை 

ஏறு வதெப்போ நெஞ்சே 

 

அநுபல்லவி

 

கூறும் வேதத்தின் உண்மை குறியாமலே அஞ்ஞான 

காரிருளில் கவிழ்ந்து கலங்கி மயங்கி நின்றால் 

 

சரணம்

 

மண்ணே பொருளே யெந்தன் மனைவி மைந்தரேசொந்த 

கண்ணே நீங்களே யல்லால் கதியில்லை யென்றிருந்தால் 

 

உடலே நிலையென் றெண்ணி உலகவாழ்விதை நம்பி 

மடமை பெருக நின்று வனமிருகம் போலலந்தால் 

 

அண்டம் அளந்த மாலும்அயனும் அளவா நீல 

கண்டம் கருணைதேடும் கருத்துணராராகில் ஜண்மம். 

 

பாடல் தலைப்பு

 

 


  

90. நீலகண்டா நித்யானந்த...

91.    

92.   இராகம் : ஆரபி 

93.   தாளம் : ரூபகம் 

94.    

95.   பல்லவி:

96.   நீல கண்டா நித்யானந்த நீயே கதியே

97.    

98.   அனுபல்லவி:

99.   பால சந்திர சேகரா பார்வதி நாயகா தயாகரா

100.  

101. சரணங்கள்:

102. 1.  கங்கா தர நாக பூஶண கிரி வாழ் தேவ தேவா

103.    சங்கர புர ஹர குருபர ஸதா சிவா மகாதேவா - நீலகண்ட

104.  

105. 2.  அன்பர்க் கிரங்குந் திருமன மான நின்மல சங்கரா

106.    துன்ப வினை தொலைக்கும் காருண்ணியதுரந்தர சிதம்பர - நீலகண்ட

107.  

108. 3.  ஸாம கான லோல சம்போ குண விசாலா

109.    கோமளப் பாதா வடியவர்க் கனு கூலா சீலா கால காலா - நீலகண்ட

110.  

111. பல்லவி:

112.  

113. || , , தர் ஸ் ,  ஸ நி  த , ப , ,                  | , , ம ப த பம க ரி , ரி ,                    ||

114. ||    நீ  ல    க ண் டா          |  நி   த்யா  ன ந் தா                          ||

115.  

116. || , , ஸ ரி ஸ நி த , ஸ , ரி ,                | ம , , க ரி , , ரி ம ப த ,                    ||

117. ||  நீ      யே      க   தி          | யே     ஏ    .  .  .  . .        ||

118.  

119. || , , தரி ஸ் ரி ஸ் நி த , ப , ,                | , , ம ப த ஸ் த ப ம க ரி , ||

120. ||     நீ  ல  க ண் டா         | நி    த்யா      ன ந் தா       ||

121.  

122. || , , ஸ ரி ஸ நி த , ஸ , ரி , | ரி ம பத ஸ் ஸ் த ப ம க ரி ம ||

123. || நீ     யே           க தி     | யே     ஏ  .......              ||

124.  

125.  

126. அனுபல்லவி:

127.  

128. || , , ப ம ப , த , ப , த , | ஸ் நி த , ர் , ஸ் , , , ஸ் நி ||

129. ||     பா ல  ச ந் த் ர       | சே    க ரா                ||

130.  

131. || த , ப ம ப , த , ப , த , | த , ஸ் , ர், ம், க் , ர் , ஸ் நி ||

132. ||      பா ல ச ந் த் ர        | சே    க ரா                ||

133.  

134. || த ரி , ஸ் ர் , ஸ் நி த , ப , | , , ப , ம க ரி , ரி ம ப த ||

135. || பா  ர்  வ  தி  நா  ய  கா  | த யா    க ரா - நீலகண்டா ||

136.  

137.  

138. சரணம்:

139.  

140. || , , த , த , , த , த , , | , , ப , த ஸ் த , , ப ப , ||

141. ||     ஸா  ம  கா  ன          |    லோ  ல வ ர த           ||

142.  

143. || , , ம ப த ப ம க ரி ரி ஸ , | , , ரி , ம , ப த , ம ப , | ப ம த , த , , த , ||

144. ||     ச ம் போ     கு ண வி         | சா       லா     | ஸா   ம (திரும்பவும்) ||

145.  

146. || , , ப , த  ர் ஸ் நி த , ப , | , , ம ப த ஸ் த ப த ப ம க | ரி ஸ ரி ம ப , த , ம , ப , ||

147. ||     லோ  ல   வ   ர   த  | ச  ம்  போ      கு  ண  |  வி   சா    லா     |

148.  

149. || , , ம , ப , த , ஸ் , ர் , | ம க ரி , ரி , ஸ் , ஸ் நி த , | ரி , ரி , , , ஸ் நி த , , , ||

150. ||     கோ  ம  ள  பா  தா | அ  டி  ய  வ  ர்  க்  க  னு |  கூ  லா    சீ  லா || 

151.  

152. || ப , ம க ரி , ரி ம ப த , , (நீ ல க ண் டா )

153. || கா  லா   கா  லா

154.  

155. பாடல் தலைப்பு

156.  

 


  

157.  மனமே உனக்கொரு...

158.  

159. இராகம் : சாமா 

160. தாளம் : ஆதி 

161.  

162. ஸரிமபதஸ் - ஸ்தபமகரிஸ

163.  

பல்லவி

 

மனமே உனக்கொரு மருந்து சொல்லக்கேள் 

மரண ஜனன வியாதி தீர்ந்திடும் 

 

அநுபல்லவி

 

சனக முனிவர்கள் தேடி அறிந்தது 

சகல காலமுந்தழைத்த தருவது 

 

சரணம்

 

(5) அடி சிவந்து வெண் மேனி கொண்டதுவே 

நீலகண்ட முண்டமுன்டடை யாளமனசு கண்ட பலமிதுவே 

அரிய ராய்ப் பல பேர்கள் முன்னிதை 

அருந்திப் பவவினை தணிந்த சுகம் இது 

 

(3) பாப தாபம் அனைத்தும் மாறிடுமே உள்ளம்குளிரப் 

பாதி மாமதி சூடி ஆடி டுமே 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

தீபம் போல அகத் திருளை நீக்கிடுஞ் 

சித்தி தரும் நலமுக்தி அளித்திடும். 

 

பாடல் தலைப்பு

 

 


  

164.  விநாயகா துணை...

165.  

166. இராகம் : நாட்டைகுறிஞ்சி 

167. தாளம் : ஆதி 

168.  

169. ஸமகமநிதநிபதநிஸ - ஸநிதமகமப்கரிஸ

170.  

பல்லவி

 

விநாயகா துணை செய்தருள் - சித்தி 

 

அநுபல்லவி

 

தனாதி பதிசுர ஜனா திபதி தொழு 

மனாதி பதி மகா கணா திபதி யான 

 

சரணம்

 

அண்டர் முனிவர் துதிகொண்ட பெருமை பெறு 

சண்ட ப்ரசண்ட நீண்ட கண்டாயுத மதநீ 

ருண்டனியாடி மொய்த்துக் கொண்ட மஸ்தக நீல 

கண்ட தாசன் கவிக்கு மண் டலம் புகழ்ந்திடும். 

 

பாடல் தலைப்பு

 

 


  

171.  வேலாயுதனே ஷண்முகனே...

172.  

173. இராகம் : காம்போதி 

174. தாளம் : ஆதி 

175.  

176. ஸரிகமபதஸ் - ஸ்நிதபமகரிஸ

177.  

பல்லவி

 

வேலா யுதனேஷண்முகனே வினை தீர்த்தாள் 

பவனே குகனே - வடி 

 

அநுபல்லவி

 

சூலாயுதனார் வரத்தா லெதிர்த்தா வெஞ் 

சூரனைக்கொன்று பெருவீரம் தரித்த - வடி 

 

சரணம்

 

காமனை யெரித்த வர்வாம முறைந்தசிவ 

காமி பெற்ற கருணைப் பாலகனே 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

கோமள வடிவுடனோ மென வேயுதித்த 

குருபரனென வந்த சரவணக் குமாரனே. 

 

பாடல் தலைப்பு

 

 


  

178.  வந்தெனக்கருள் தந்து...

179.  

180. இராகம் : காபி 

181. தாளம் : ரூபகம் 

182.  

183. ஸரிமபநிஸ் - ஸ்நிபமகரிஸ்

184.  

பல்லவி

 

வந்தெனக்கருள் தந்து முன்னன்றாள் வக்கிரதுண்டா 

 

அநுபல்லவி

 

அந்த நாள் தச கந்தரன் தன்னை 

பந்தென ஆடிய கரனே அந்தரர் பாடியபரனே 

 

சரணம்

 

விரிந்து நன்மணம் சிறந்து மதநீர்சொரிந்து மத்தகத்தோட 

விரைந்து வந்துமுன் திரண்டதை உண்டுபுரண்டு வண்டுகள்பாட 

கரங்களில் பாசாங்குசமும் விளங்கப் பரந்திடு கன்னமாட 

கரும்பவல் பொறிஅருந்தி அன்பர்க்குப் பெரும் கருணைக்கண்-போட 

வருஞ்சிவன் திருமைந்தா திருந்த நற்றமிழ் தந்தாளனை 

அருந்தவற் கருள்சொந்த சரண்சரண மொரு தந்தா. 

 

பாடல் தலைப்பு

 

 


  

185.  சம்போ மகாதேவ...

186.  

187. இராகம் : கானடா 

188. தாளம் : ரூபகம் 

189.  

190. ஸரிபகாமதநிஸ - ஸநிபகாமரிஸ

191.  

பல்லவி

 

சம்போ மகா தேவ 

சரணம் கருணா நிதே 

 

அநுபல்லவி

 

நின் பெருமை யார் அறிவார் 

நீல மணி கண்ட சிவ 

 

சரணம்

 

சதுர் மறையின் பெருமுதலே 

சகலா தாரப் பொருளே 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

அதி கருணை மாகடலே 

அடியவராம் எமக்கருளே. 

 

பாடல் தலைப்பு

 

 


  

192.  சிவனை நினை...

193.  

194. இராகம் : ஹமீர்கல்யாணி 

195. தாளம் : ஆதி 

196.  

197. ஸரிஸமாக மபதநிஸ் - ஸநிதாபம கமரிஸ

198.  

பல்லவி

 

சிவனை நினை மனமே 

சாம்பசதா சிவனை நினைமனமே 

 

அநுபல்லவி

 

பவவினை அகன்று போம்படி கிருபை தந்தாலும் 

பரனைப் பரம தயாகரனை உமா வரனை 

 

சரணம்

 

ஏகாந்த சித்த சுகபோ காதியனு போகம் 

எதுவுந்தந்தின் பமாக உதவி செய்திடும் யோக 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

ஸ்ரீ காந்தன் முதலாக சேவிக்கும் வைபோக 

ஸ்ரீ நீலகண்ட மகா தேவன் கிருபை உண்டாக. 

 

பாடல் தலைப்பு

 

 


  

199.  சிவானந்தம் ப்ரஹ்மானந்த...

200.  

201. இராகம் : ரீதிகௌளை 

202. தாளம் : ஆதி 

203.  

204. ஸகரிகமநிதமநிநிஸ - ஸ்நிதமகமபமகரிஸ

205.  

பல்லவி

 

சிவானந்தம் ப்ரஹ்மானந்த சின்மய பரானந்தம் 

 

அநுபல்லவி

 

பவாதி ரஹித பரம்நிரா தாரம் 

பரிபூர்ணா மிருத பாரா வாரம் 

 

சரணம்

 

சின் மாத்ர சேஷம் சிவயைக பார்சுவம் 

சித்த நிர்மல பக்த முக்தி ப்ரவேசம் 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

நிர் முக்த பாபம் நிச்சல தீபம் 

நீல கண்ட தாச த்யான ஸ்வரூபம். 

 

பாடல் தலைப்பு

 

 


  

206.  சிவனை நினைந்து...

207.  

208. இராகம் : காம்போதி 

209. தாளம் : ஆதி

210.  

பல்லவி

 

சிவனை நினைந்து துதிபாடிக் கொள்மனமே 

ஜீவன் மோக்ஷம் வருமே 

 

அநுபல்லவி

 

தப ஜப விரத மெல்லாம் உனக்கிது வாமே 

சகல சம்பத்தென் றெண்ணி யகமகிழ்ந்து பரம 

 

சரணம்

 

வஞ்ச கஞ்ச சூது வாது பாபம் அனைத்தும் மாறும் 

மதியுதயம் போல வேயுதயம் தெளிந்து தேனும் 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

நஞ்ச முதுண்ட நீலகண்டன் கருணை ஊறும் 

நன்மை உனக்கீ தென்றே உண்மையாய்த் தினந்தோறும் 

 

பாடல் தலைப்பு

 

 


  

211.  சரவணபவ சிவானந்தா...

212.  

213. இராகம் : கேதாரம் 

214. தாளம் : மிச்ரசாபு

215.  

பல்லவி

 

சரவண பவ சிவானந்தா நல்ல 

தருணமிது கருணை புரி குவாய் கந்தா 

 

அநுபல்லவி

 

திருவருளுல கெலாஞ் சிறந்த வேல்முருகா 

தேவசேனா திபா செங்கண் மால் மருகா 

 

சரணம்

 

வேதனைச் சிறையிட்ட விமல மெய்ப் போதா 

மெய்ப் பொருள் விரித்த வேதாசாமி நாதா 

மாதவர்க் கருள்மாரி பொழியும் பிரசாதா 

வானவர் முனிவர் வணங்கும் பொற்பாதா 

 

மத்யமகாலம்

 

மாதுமைக் கருமைக்கு மார மாயதுட்டரைமாய்க்கும் வீரா 

நீத மாதிருவோர் சிங்கார நீலகண்ட னடியேனுக்குப கார                    [சரவ]

 

பாடல் தலைப்பு

 

 


  

216.  ஆகு மாகு மெவர்க்கு...

217.  

218. இராகம் : லதாங்கி 

219. தாளம் : ரூபகம் 

220.  

221. ஸரிகமபதநிஸ் - ஸ்நிதபமகரிஸ

222.  

பல்லவி

 

ஆகு மாகு மெவர்க்கு மிது 

ஆக மாகுமே 

 

அநுபல்லவி

 

தாக முடனே யேகமன தாய் 

சதாசிவ பக்தி செய்தால் முக்தி 

 

சரணம்

 

கள்ள மொழிக்கவும் உள்ளம் தெளிக்கவும் 

காயத்தை மெய்யென்ற மாயந் தொலைக்கவும் 

தெள்ளு பூதிபூசி வெள்ளிமலை வாழும் 

தேவாதி தேவனைச் சேவித்திட நாளும்.

 

பாடல் தலைப்பு

 

 


  

223.  ஆனந்த நட மாடுவார்...

224.  

225. இராகம் : பூர்விகல்யாணி 

226. தாளம் : ரூபகம் 

227.  

228. ஸரிகமபதபஸ் - ஸ்நிதபமகரிஸ

229.  

பல்லவி

 

ஆனந்த நட மாடுவார் தில்லை - அம்பலந்தனில் 

அடிபணி பவர்க் கபஜயமில்லை 

 

அநுபல்லவி

 

தானந்த மில்லாத ரூபன் - தத்திமி தகதிமி தகஜெணு 

தளாங்கு தக ததிங்கிண தோம் தளாங்கு தக ததிங்கிணதோம் 

தகதிமி தக ததிங்கிண தோ மென்று 

 

 சரணம் 1

 

 

வஞ்சகம் இல்லாத அடியார் குவிக்க வானவர் முனிவர் ஆனவர் துதிக்க 

சஞ்சல விழி மாதுமையாள் மதிக்கத்-தக்கிட 

தரிகிட தோம்கிட தித்திமி திமி தக ததின்கிண தக தோம் தக தோம் தக தோம் தக திமி தக ததின்கிணதோமென்று-

 

 சரணம் 2

 

 

பாக்ய முயலகன் மீதொரு கால் தாக்கி பக்தர் தொழ மற்ற ஒற்றைக்காலும் தூக்கி ஆக்கி அளிப்போரை மேளகாரர் ஆக்கி

அம்பர னாத சிதம்பர சம்பு சதாசிவ சுன்தர அரை மணி சல சல சலவென அணி பணி கல கல கலவென

 

சரணம் 3

 

பாதிமதி ஜோதி பளீர் பளீரென பாத சிலம்புகள் கலீர்கலீரென 

ஆதிக்கரை யுண்ட நீல கண்டமின்ன 

கரபுர கரசிவ சங்கர அருள்புரி குருவரசுந்தர 

அண்டமும் பிண்டமும் ஆடிட எண்டிசையும் புகழ்பாடிட. 

 

பாடல் தலைப்பு

 

 


  

230.  ஆதிசிவனருளா ருக்குகிருக்குதோ...

231.  

232. இராகம் : பேகடா 

233. தாளம் : மிச்ரசாபு 

234.  

235. ஸகரிகம பதபஸ் - ஸ்நீதப மாகரிஸ

236.  

பல்லவி

 

ஆதிசிவனருளா ருக்குகிருக்குதோ அவரே பெரியவரே 

 

அநுபல்லவி

 

பாதிமதி நதி பூதியணிந் தன்பர் 

பங்கிற்றங்கி யெங்கும் பொங்கிப் பூரணமாய்ப் 

 

மத்யமகாலம்

 

பாதியில் மாதுபொருந்த வேதமோர் நான்கு மறைந்த 

பரவொளியாகி நிறைந்த தங்கருளுரு வாகியேவந்த. 

 

சரணம்

 

ஜாதி குலம் நீதி தாழ்ந்ததோர் சிறியோர் 

சங்கரர் குரியோர் ஆயிடின் பெரியோர் 

வேதம் புகழ் கொண்ட நாதன் நீலகண்டன் 

மெய்யருள் அகன்ற வையகம் ஆள்கின்ற 

 

மத்யமகாலம்

 

விண்ணவர் ஆகிலும் சிறியோர் பின்னொருவரும் நேர்சரியோ 

புண்ணியம் ஈதுணர் வோரே விண்ணும் மண்ணுந் தொழுவாரே. 

 

பாடல் தலைப்பு

 

 


  

237.  உன்னிப்பாரடி தன்னை...

238.  

239. இராகம் : அடாணா 

240. தாளம் : திஸ்ரஆதி 

241.  

242. ஸரிமபநிஸ் - ஸ்நிஸ்தாபமப காரிஸ

243.  

பல்லவி

 

உன்னிப்பாரடி தன்னை உணர்ந்து 

பாரடி உன்னை 

 

அநுபல்லவி

 

மன்னி இரண்டும் ஒன்றாய் மருவி 

இருப்போம் நன்றாய் 

 

சரணம்

 

 

நன்னிலம் கண்டு நம்மை நாம் 

உணர்ந்திடும் தன்மை 

இன்னிலம் ஆகும் செம்மை 

இதுவே வேதாந்த உண்மை.

 

பாடல் தலைப்பு

 

 


  

244.  உன்மேல் பாரம் வைத்து...

245.  

246. இராகம் : சங்கராபரணம் 

247. தாளம் : மிச்ரசாபு 

248.  

பல்லவி

 

உன்மேல் பாரம் வைத்து உனையே நம்பியிருக்கும் 

என்மேல் கருணை புரி ஈசா 

 

அநுபல்லவி

 

இம்மானிலம் புகழும் நன்மை மிகத்தி கழும் 

எம்மை யாளும் குழந்தைச்சின் மயநீல கண்டா 

 

சரணம்

 

தொலையா விசாரமதை தொலைக்க உனக்கு சக்தி 

இல்லையா கருணைவர வில்லையா இன்னமும் மனம் 

வல்லையா ஞாயமா மேருமலையைச் சிலைவளைத்த 

கலையா பார் வதி நேயா. 

 

பாடல் தலைப்பு

 

 


  

249.  எத்தனை தான் சொன்னாலும்...

250.  

251. இராகம் : செஞ்சுருட்டி 

252. தாளம் : ஆதி 

253. மத்யம சுருதி

254.  

பல்லவி

 

 

எத்தனை தான் சொன்னாலும் புத்தியில்லா மூடருக்கு 

ஈன குணம் போகாது ஞான தனம் வாராது 

 

அநுபல்லவி

 

முத்தமிழை யும்கொண்டாடி முன்னே நின்று பாடிப்பாடி 

 

சரணம்

 

தத்துவப் பொருளை நாட்டி சாந்தகுண மணியாட்டி 

பக்தி யென்ற பாலையூட்டிப் பகலிரவுஞ் சீராட்டி 

 

நாலுபடி களையுற்று நன்மையாக சோம்பலுற்று 

நீலகண்டன் பாதம் பற்றி நேர்வழியை கற்றுக் கற்று. 

 

பாடல் தலைப்பு

 

 


  

255.  என்ன வந்தாலும் நான்...

256.  

257. இராகம் : காம்போதி 

258. தாளம் : மிச்ரசாபு 

259.  

260. ஸரிகம பதஸ் - ஸ்நிதப மகரிஸ

261.  

பல்லவி

 

என்ன வந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை 

என்பரனே சிவனே 

 

அநுபல்லவி

 

மன்னர் பகைவரினும் மற்றார் பகைவரினும் 

பின்னும் நவக்கிரஹம் பிழைத்தென்னை உறுக்கினும் 

 

சரணம்

 

அத்தனை உனை உணராது அபவாதம் மொழிந்தாலும் 

அரனே நினைவேறாக்கி மறுதெய்வம் புகழ்ந்தாலும் 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

எத்தொழில் செய்தாலும் எது வந்து நேர்ந்தாலும் 

என் சொல்லினும் அகண்ட சின்மயநீலகண்ட. 

 

பாடல் தலைப்பு

 

 


  

262.  என்ன விதம் பிழைப்போம்...

263.  

264. இராகம் : சாளக பைரவி 

265. தாளம் : ஆதி 

266.  

267. ஸரிமபதஸ் - ஸ்நிதபமகரிஸ

268.  

பல்லவி

 

என்ன விதம் பிழைப்போம் எளியோர் யாம் 

எப்படித் தேறுவோம் சொல்லீரே. 

 

அநுபல்லவி

 

அன்னையும் தந்தையும் மலர்பெற்ற வரும் மதித் - 

தன் யோன்யம் சேராத அன்யாய காலமிதில். 

 

சரணம்

 

வேலிப் பயிரை காத்த நாள் போய்பின்பு 

வேலிப் பயிரை தின்னும் நாளாய் இப்போ 

வேலி பூமியைத் தின்னலாச்சே இனி 

மேல் எப்படி யாமோ காலம் பிசகிப்போச்சே. 

 

பாடல் தலைப்பு

 

 


  

269.  ஏனிந்தப்படி ஆனாய் ஏழை...

270.  

271. இராகம் : வசந்தா

272. தாளம் : ஆதி 

273.  

274. ஸமகமதநிஸ் - ஸ்நிதமகரிஸ

275.  

பல்லவி

 

ஏனிந்தப்படி ஆனாய் ஏழை நெஞ்சமே 

ஏதுக்கு சலிப்பானாய் 

 

அநுபல்லவி

 

ஆனந்த நிலைதேடி அமர்ந்த் நீவெளி சாடி 

வீண் வாதம் பேசிவாடி விவரம் இல்லார்போல் பாடி 

 

சரணம்

 

முன்னாள் புண்ணிய வசத்தால் முளைப்பதே சிவபக்தி 

தன்னால் அறிந்து தானே தழைக்கும் பேரின்ப முக்தி 

இந்நாள் அறியாமலே ஏன் வருந்துறாய் கத்தி 

அந்நாளாய் நீலகண்டற் கடிமை நீ பின்புத்தி. 

 

பாடல் தலைப்பு

 

 


  

276.  ஓராறு முகனே அன்னை...

277.  

278. இராகம் : ரீதிகௌளை 

279. தாளம் : ஆதி 

280.  

281. ஸகரிகமநிதமநிநிஸ் - ஸ்நிதமகமபமகரிஸ

282.  

பல்லவி

 

ஓராறு முகனே அன்னை உமையாள் திருமகனே 

 

அநுபல்லவி

 

ஈராறு கரனே எனக்குமுன் கருணை 

பாராய் உள்ளூர் மேவும் பாலசுப்ரமண்யா 

 

சரணம்

 

ஓங்காரப் பொருளே அருமறை 

ஒலிப்படர் வரும் முதலே 

நீங்கா தெனதுளம் ஏவி அருளும் திரு 

நீல கண்டம் அருமை பாலகனே பரனே. 

 

பாடல் தலைப்பு

 

 


  

283.  கண்டேன் கலி தீர்ந்தேன்...

284.  

285. இராகம் : சரஸ்வதி 

286. தாளம் : ஆதி 

287.  

288. ஸரிமபதஸ் - ஸ்நிதபமரிஸ

289.  

பல்லவி

 

கண்டேன் கலி தீர்ந்தேன் சிவ 

கருணை தந்தாளும் பரம் லிங்கத்தை 

 

அநுபல்லவி

 

 

பண்டே உள வாழ்வினை யிழந்து 

பலன் பெற இந்த மலை யேறி வந்தேன்

 

சரணம்

 

முன்னம் செய்த புண்ணியம் இந்த மூர்த்தி

உருவாய் கண்டேற்ற நான் காருண்யம் 

 

அன்னை தந்தை தெய்வம் மெனும் 

அரனே என குரு பரனே யென்றுநான். 

 

பாடல் தலைப்பு

 

 


  

290.  கண்ணாறக் கண்டேனே கதிர்வடி...

291.  

292. இராகம் : முகாரி

293. தாளம் : மிச்ரசாபு 

294.  

295. ஸரிமபநிதஸ் - ஸ்நிதபமகரிஸ

296.  

பல்லவி

 

கண்ணாறக் கண்டேனே கதிர்வடி வேலனை 

கண்ணாறக் கண்டேனே 

 

அநுபல்லவி

 

கண்ணாறக் கண்டேனிரு கண்ணாறு பெருகச்செங் 

கண்ணன் மருகனை முக்கண்ணன் றிருமகனை 

 

சரணம் - மத்யமகாலம்

 

ஜோதி மயமாகித் தோன்றி யெதிர்ந்திட 

சுந்தரரூ பஞ்சிறந்து முன்வந்திட 

காதிற் குழைகள் தழைந்திடமை மணி 

கண்டார்க்கடியேன் கரங்கள் குவிந்திட. 

 

பாடல் தலைப்பு

 

 


  

297.  கருணை பெருங்கடலே...

298.  

299. இராகம் : ராகமாலிகா 

300. தாளம் : ரூபகம் 

301.  

302. 1.                      கருணை பெருங்கடலே கயிலை மாமலை கற்பகமே 

303.     பரம சிவச்சுட ரேபரம் பொருளே பசுபதியே 

304.     அருமைத்திரவியமே அடியார் அருளா னந்தமே 

305.     பெருமைப் புலியூரெனும் பெருந் திருக்கோயில் உறை வோனே. 

306.  

307. 2. தார்மலர்க் கொன்றைதும்பை தண்ணிளம் பிறைபூண்ட சடை 

308.     சேர்முடி தாங்கிவரும் தேவ தேவ தயாநிதியே 

309.     சீர்மறை ஆகமங்கள் தேடிப்பாடிப் புகழ்ந்திடவும் 

310.     பேரானந்தம் பெற்ற வாபெருந் திருக்கோயிலுறை வோனே. 

311.  

312. 3.                      விழியொரு மூன்றிலங்க வெண்மதி முக மண்டலத்தே 

313.     குழை யிருபுறம் விளங்கக் கொவ்வை வாய்மலர்தேன்பொழிய 

314.     பழ மறையொலி முழங்கப் பணிவார் துணையாகிநின்றே 

315.     பிழை பொறுத்தா தரிக்கும் பெருந்திருக்கோயிலுறை வோனே. 

316.  

317. 4.                      கருணை மிகுந்த தென்காட்சி காட்டும் கறைக்கண்டமும் 

318.     கரமுறு மான்மழுவும் கனகா பரண தொளியு 

319.     மருள் வரதா பயமும்ஆகி வந்தடியார் தமது 

320.     பெருவினை தீர்த்தருளும் பெருந்திருக் கோயிலுறை வோனே. 

321.  

322. 5.                      வெண் படிகத்தா வடம்மெய் கிசைத்த நல்லகவடம் 

323.     அன்பாய்ப் புரிநூலும் மரவும் பூண்ட திருமார்பும் 

324.     செம்புலித் தோலுடையுந் திருத்தாளு முன் காண்கின்றோர் 

325.     வெண்பா லுகந்தருளும் பெருந்திருக் கோயிலுறை வோனே. 

326.  

327. 6.                      காணற் கரிய பாதங்கருணாகர செம்பொற் பாதஞ் 

328.     சேணுங் கடந்த பாதந்திரு தாண்டவ மாடும்பாதம் 

329.     வானவர் போற்றும் பாதம்மறலி மார்பு தைத்தபாதம் 

330.     பேணி பணிகுவனே பெருந்திருக் கோயிலுறை வோனே. 

331.  

332. 7. அன்பர்குகந்த கோயில் அந்தணர் கன்னமிடுங் கோயில் 

333.     செம்பொன் மணிக் கோயில் திவ்யமான திருக்கோயில் 

334.     துன்பம் துலைக்கும் கோயில் தொடர்ந்தெவரும் நம்பும்கோயில் 

335.     பின்பிணை யற்றகோயில் பெருந்திருக் கோயிலுறை வோனே. 

336.  

337. பாடல் தலைப்பு

338.  

 


  

339.  குருபரனே யெனக்கருள் தயாநிதியே...

340.  

341. இராகம் : கமாஸ் 

342. தாளம் : ஆதி 

343.  

344. ஸமகம நிதநிஸ் - ஸ்நிதப மகரிஸ

345.  

பல்லவி

 

குருபரனே யெனக்கருள் தயாநிதியே - கோதிலா குணநிதியே 

 

அநுபல்லவி

 

அருமறைப் பொருளருள் தரும் ஞானபூர்ண சந்திரா 

அறுபத்து நாற்கலையும் பெறுவித்த மகா மந்திர 

 

சரணம்

 

அஞ்ஞான மாகிய பொய்க் கானிற் றிரிந்திடு 

மந்தரைக்கை தூக்கி யானந்த வீடளித்திடும் 

 

பாழ்வினை சூழ்ந்த பொய் வாழ்வினில் மயங்கிடும் 

பாழுலகம் பொருந்து மேழையர்க் கிரங்கிடும் 

 

எளியர் தமக்கு ஞான வெளியை விளக்க வந்த 

யிதயங்கனிந்த போத மதிய பரமானந்த 

 

அண்டமனைத்தும் புகழ் கொண்ட கிருபாகர 

அண்டினோர்க் கருணீல கண்ட சராசர. 

 

பாடல் தலைப்பு

 

 


  

346.  சித்த அருள் சிவ சக்தி...

347.  

348. இராகம் : நாட்டை 

349. தாளம் : மிச்ரசாபு 

350.  

351. ஸகமபநிஸ் - ஸ்நிபமரிஸ

352.  

பல்லவி

 

சித்த அருள் சிவ சக்தி பாலகனே 

சின் மயானந்த மத்தமத மொழுகு (அ) 

கத்தி மா முகனே 

 

அநுபல்லவி

 

எத்தின மும்ஒரு சித்தம் உடையவர் 

பக்தி புரிய நினைத்த வரம் அருள் 

 

சரணம்

 

மாயா விளையிடர் நீக்கியருள் பவனே முக்குலுணிவி 

நாயகனே துணைசெய்நீ சரண சரணே மறைபுகழும் 

தூயன் உமையவன் நேயன் அருள்கைலை கோயில் 

தென் கோபுரவா யினிலுளமர் 

துதிபெருகும் கணபதியே அருள் திருத்தொண்டுபுரி 

நீல கண்டனடி யேர்க்கு. 

 

பாடல் தலைப்பு

 

 


  

353.  நவசித்தி பெற்றாலும் சிவபக்தி...

354.  

355. இராகம் : கரஹரப்ரியா 

356. தாளம் : மிச்ரசாபு 

357.  

பல்லவி

 

நவசித்தி பெற்றாலும் சிவபக்தி இல்லாத 

நரர்கள் வெறும் சாவி 

எவர் புத்தியும் தள்ளி சுயபுத்தியும் இல்லாது 

இருப்பவர்கள் பெரும் பாவி. 

 

சரணம்

 

நாதன் அருள் மறந்து போதம் இல்லா கூத்து நடிப்பவர் 

வெறும் சாவி 

சீதமதி அணியும் சிவனை நினையாமல் இருப்பவர் 

பெரும் பாவி 

 

பாபமும் புண்யமும் கெணி யாமல் 

பணத்திற்கே பரப்பவர் வெறும் சாவி 

கோபமும் லோபமும் கோண்டு நல்ல 

குணத்தை குலைப்பவர் பெரும் பாவி 

 

தாய் தந்தை மனம் நோக செய்கின்ற 

குரு துரோகத்த லைவர்கள் வெறும் சாவி 

நாய் போல எவரையும் சீறி சண்டையிடும் 

நலம் கெட்டார் பெரும் பாவி 

 

கேட்டும் கண்டும் அனுபவித்தும் உண்மை உணரா

கர்விகள் வெறும் சாவி 

வாட்டமில்லா கதி கொடுக்கும் நீல கண்டரின் 

அருள் இல்லார் பெரும் பாவி. 

 

பாடல் தலைப்பு

 

 


  

358.  நீ தயவா யாதரிப்பா யம்மா...

359.  

360. இராகம் : தோடி 

361. தாளம் : ரூபகம் 

362.  

பல்லவி

 

நீ தயவா யாதரிப்பா யம்மா வென்மேல் 

நீ தயவா யாதரிப்பா யம்மா 

 

அநுபல்லவி

 

நீ தயவா யாதரிப்பாய் மாதவசோதரி 

 

சரணம்

 

நாநிலம் புகழும் பரமானந்த நாயகி 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

ஸ்ரீ நீல கண்டர் மனைவி நீயே மகாமாயே. 

 

பாடல் தலைப்பு

 

 


  

363.  பரம தயாகர சங்கர சந்திரசேகர...

364.  

365. இராகம் : நாதநாமக்ரியை 

366. தாளம் : ஏகம் 

367.  

பல்லவி

 

பரம தயாகர சங்கர சந்திர சேகர புரஹர 

 

அநுபல்லவி

 

சுரமுனி வரனை  வருந் தொழுஞ்சுந்தர 

தூதானந்த சுந்தரி நாதா 

 

சரணம்

 

ஆனந்த நிர்த்த வினோ தாம்புஜத்தா 

ளனைத் தெந்த நாளுமெனைச் சொந்த மாயாளும் 

 

பத்த விலாசா வரதா கிலேசா 

பணிபவ ரார்த்தி ஹரணா கிருபா மூர்த்தி 

 

ஆதி மத்தி யாந்தரஹித வேதாந்த 

வறிவாய கண்டப் பொருணீ லகண்ட. 

 

பாடல் தலைப்பு

 

 


  

368.  மூலாதார மூர்த்தி வந்தருள்...

369.  

370. இராகம் : பௌளி 

371. தாளம் : ரூபகம் 

372.  

373. ஸரிகமபதஸ் - ஸ்நிதபகரிஸ

374.  

பல்லவி

 

மூலாதார மூர்த்தி வந்தருள் வாய் 

 

அநுபல்லவி

 

ஆலவாய் அழகன் மகிழ 

ஆலவாய் அழகன் மன மகிழ 

ஆனந்தப் பேருருவாய் உதித்த 

 

சரணம்

 

மாமயி லேறி மூவுலகும் வலம் வந்தும் 

மாகயி லைபதி கைக்கனி பெறாமல் 

மாமலை அடைந்த கந்தனுக் கிசைந்த 

மாதினை கடிமனம் புரிய அருள 

 

மத்யமகாலம்

 

மாகரி உருவெடுத்து - மங்கையை நடுங்க வைத்து 

மால்மருகனை அணையச் செய்து - மாயமாய் மறைந்ததிரு. 

 

பாடல் தலைப்பு

 

 


  

375.  ராஜராஜேச்வரி கிரிராஜகுமாரி...

376.  

377. இராகம் : மத்யமாவதி

378. தாளம் : ரூபகம் 

379.  

380. ஸரிமபநிஸ் - ஸ்நிபமரிஸ

381.  

பல்லவி

 

ராஜராஜேச்வரி கிரிராஜகுமாரி ஸ்ரீராஜ ராஜேச்வரி 

 

அநுபல்லவி

 

கேசவ சோதரி சுந்தரி கங்காதர மனோ ஹரி 

ஆச்ரித ஜன கருணாகரி அகில லோக ஜனனி சங்கரி 

 

சரணம்

 

நீல கண்டர் வாம மேவி நின்றிரங்கும கேச்வரி 

பாலகுக கணே சனைப் பெற்ற பார்வதி பரமேச்வரி கௌரி. 

 

பாடல் தலைப்பு

 

 


  

382.  ராஜனைத் தொழுவாய் நடராஜனைத்...

383.  

384. இராகம் : தர்பார்

385. தாளம் : ரூபகம் 

386.  

387. ஸரிமபதநிஸ் - ஸ்நிஸ்தபமரிமரிஸ

388.  

பல்லவி

 

ராஜனைத் தொழுவாய் நடராஜனைத் தொழுவாய் 

 

அநுபல்லவி

 

மாசில் மதிக் கொன்றைசூடி 

மாமறையாயிரம் பாடுமே மசபையினடமாடும் 

 

சரணம்

 

ஆளனை யாடுங்குஞ்சிதத் தாளனை 

காள முண்ட நீல கண்டனைக் 

 

அநுபல்லவி போல் பாடவும்

 

கர்த்தனைச் சிந்தை மகிழ்ந்திட 

நிர்த்தனை சுந்த ரமாநட                                                                                                                          [ராஜனை]

 

பாடல் தலைப்பு

 

 


  

389.  வா வா கலை மாதே...

390.  

391. இராகம் : ராமப்ரியா 

392. தாளம் : ஆதி 

393.  

394. ஸரிகமபதநிஸ் - ஸ்நிதபமகரிஸ

395.  

பல்லவி

 

வா வா கலை மாதே எனக்கருள் 

தா வா இப்போதே 

 

அநுபல்லவி

 

தேவர் முனிவர் முதல் யாவரும் புகழ்பர 

தேவி சகல கலாரூபி நன்மொழிதர 

 

சரணம்

 

ராக தாள சேர்வை யோடு நிற்பத 

ராசி வாரி ராசி மாலை யொப்பன 

வேகுதித்த ப்ராச மோடு சொற்பொருள் 

மேவிசை எதுகை மோனையும் 

பாகை யொத்தயோக முற்ற நவரச 

பாவி லக்கிய லக்கண பொருத்தமும் 

ஆக முத்துக் கோவையென்ன வரகவி 

யான தென்றன் நாவில் வந்து தோன்றிட.

 

பாடல் தலைப்பு

 

 


  

396.  சம்போ மகாதேவ சரணம்...

397.  

398. இராகம் : பூபாளம் 

399. தாளம் : ரூபகம் 

400.  

401. ஸரிகபதஸ் - ஸ்தபகரிஸ

402.  

பல்லவி

 

சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளஹஸ்தீச 

 

அநுபல்லவி

 

அம்போ ஜசம் பவனும் அன்பான மாயவனும் 

அடிமுடி காணா நெடு மலைவாணா அகிலபுவன பரிபாலா 

சகல வர குண விசாலா 

 

சரணம்

 

ஆதியே ஒருபேத மில்லாத போத நிர்குண ரூபா 

அடியவர் உள்ளம் குடிகொண்ட குரு வடிவான ஞானதீபா 

வேத புராண சாத்திரம் மெல்லாம் ஓதும் பெரும் ப்ரதாபா 

விண்ணவர் முனிவர் கிங்கரர் கந்தர்வர் 

 

மத்யமகாலம்

 

வேண்டி தொழும் தாமரை பாத ஆண்டவனே காளத்தி நாதா. 

 

பாடல் தலைப்பு

 

 


  

403.  தீம் நாத்ரு தீம் திரன...

404.  

405. இராகம் : ஹம்சானந்தி                     

406. தாளம் : ஆதி 

407.  

408. ஸரிகமதநிஸ் - ஸ்நிதமகரிஸ 

409.  

(தில்லானா - மீனாக்ஷி கல்யாணம்)

 

 

பல்லவி

 

தீம் நாத்ரு தீம் திரன தக 

தீம் தத் தீம்த தரதானி 

நாத்ரு தத்தீம் தோம் த்ரு 

தத்தீம் தத் தமிகிட 

தக ரதா னிதக 

தத்கிட கிடதக தகதிமி தகஜணு 

 

அநுபல்லவி

 

நாத்ருத தீம்தகிட ஜம்தத் திமிகிட 

தத்தீம் தீம்நாத்ரு கிடதீம் தத்திமிகிட தளாங்கு தக்கிட கிட 

கிடதீம் தளாங்கு தக்கிட கிடகிட தீம்தளாங்கு தக்கிட கிடகிட தீம் 

 

சரணம்

 

சந்த்ர சேகர சங்கர சிவ சம்போ 

மகா தேவ தாண்டவந் ருத்ய சுந்தர 

ரூபதர அகண்டா கார ஆனந்த மோன 

கரகர சிவ சம்போ சதாசிவ சம்போ சம்போ 

 
பாடல் தலைப்பு

 

Related Content

শিৱমহিম্নঃ স্তোত্রম - Shivamahimnah Stotram

শিৱ নামাৱলি অষ্টকম - Shiva Naamavali Ashtakam

Shivamide Stava

Shiva Maanasa Pooja

Shiva Mahimna Stotra