logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பதிகக் கோவை


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த

"திருப்பதிகக் கோவை"


	ஒன்றாதி யோரெழுபத் தொன்றீறாய் மூவர்தமிழ் 
        சென்றார் சிவதலங்கள் செப்புதற்கு - நின்று 
        கடக்குஞ் சரமுகனேர் காய்விழியா னீன்ற
        கடக்குஞ் சரமுகனே காப்பு.

"திருப்பதிகக் கோவை"


பன்னுசிவ தலமொருநூற் றைம்பதிற்று மூன்று 
    பதிக மொன்றா; நாற்பத்தொன்பதுபதிக மிரண்டா; 
முன்னுமிரு பதிற்றெட்டு நகர்பதிக மூன்றா; 
    மொருபதினோர் தலம்பதிக மொருநான்கென் றுணர்க; 
மன்னுமிரு நான்குதல மோரைந்தே பதிக; 
    மற்றுமைந்து தலங்களுக்கு வருபதிக மாறாம்; 
பின்னுமைந்து வளநகர்க்குப் பெறும் பதிகமேழாம்; 
    பேசுமொரு நான்குதலம் பெறும்பதிக மெட்டே.            1

பரவுமொரு நான்குதலம் பதினொன்றாம் பதிகம்; 
    பன்னுமிரு தலம்பதிகம் பன்னிரண்டாப் பகரு; 
முரைசெயிரு தலம்பதிகம் பதினெட்டா மிப்பா; 
    லொரு மூன்று தலங்களுக்கிங் குறுபதிக 
முரைக்கி, னிரவிவரு மறுநான்கு - முப்பத்திற்று 
    நான்கு - நீடெழு பத்தொன்று மென 
நிரனிரையா மாகக்கருதுசிவ தலமிருநூற் றெழுபதிற்று 
    நான்குகடைகாப்போ ரெழுநூற்று நாற்பதிற்றொன் பானே.         2

திருப்பழுவூர் சேய்ஞலூர் திருமுல்லை வாயி 
    றிருவைகா கொடிமாடச் செங்குன்றூர் வியலூர், 
கருக்குடிதெங் கூர்பனந்தாள் கலிக்காமூர் தலைச்சங் 
    காடுமயேந் திரப்பள்ளி கைச்சினங்கன் றாப்பூர், 
குரக்குக்கா பெரும்புலியூர் திருக்காட்டுப் பள்ளி 
    குடந்தைக் கீழ்க்கோட்டமொடு குடந்தைக்கா ரோண, 
மெருக்கத்தம் புலியூர்வெண் டுறைகண்ணார் கோயி 
    லிலம்பையங்கோட் டூர்சிக்க லிராமனதீச் சரமே,             3

பள்ளியின்முக் கூடறிரு விரும்பூளை யாவூர்ப் 
    பசுபதீச் சுரம்பாலைத் துறைபருதி நியமங், 
கள்ளில்குரங் கணின்முட்டந் திருமுருகன் பூண்டி 
    கஞ்சனூர் கச்சிநெறிக் காரைக்கா டோத்தூர், 
புள்ளமங்கை நாட்டியத்தான் குடிகலைய நல்லூர் 
    புக்கொளியூ ரவிநாசி பூவனூர் துறையூர், 
கொள்ளிக்கா டிடைச்சுரமச் சிறுபாக்கம் விளமர் 
    கொட்டையூர் கொடுங்குன்றங் கூடலையாற் றூரே.             4

நெல்வேலி திருவழுந்தூர் தருமபுரம் பயற்றூர் 
    நெடுங்களம்வக் கரையிருப்பை மாகாளம் வடுகூர், 
நெல்வெண்ணெய் வடகரைமாந் துறைதிருவிற் கோலநீ 
    டூர்சக்     கரப்பள்ளி யகத்தியான் பள்ளி, 
நெல்வாயில் பேணுபெருந் துறைநாவலூர் மயான 
    நெல்லிக்கா விற்குடிவீ ரட்டமதி முத்தம், 
வல்லமறை யணிநல்லூர் தலையாலங் காடு 
    வாட்போக்கி திருநாவ லூர்மயிலாப் பூரே,                5

திருவாரூர்ப் பரவையுண்மண் டளிசாத்த மங்கை 
    சிற்றேமந் தெளிச்சேரி திருவுசாத் தானங், 
கரவீரந் திருவாலம் பொழில்வெண்ணெய் நல்லூர் 
    கச்சியனே கதங்காவ தங்கோடிக் குழக, 
ரரசிலிதென்குடித் திட்டை வடமுல்லை வாயிலம்பர்ப் 
    பெருந் திருக்கோயில் வெண்பாக்கஞ் சுழியல், 
பெருமணமிந் திரநீல பருப்பதம்வேற் காடு 
    பேரெயில்பாற் றுறைமூக்கிச் சரமுண்டீச் சரமே,             6

பறியலூர் வீரட்டங் கானாட்டு முள்ளூர் 
    பாதாளீச் சரமெதிர்கொள் பாடிவலி தாயஞ், 
சிறுகுடிகச் சூராலக் கோயில்கொள்ளம் புதூர் 
    திருப்புறவார் பனங்காட்டூர் விளநகர்தண் டலைநீ, 
ணெறியரதைப் பெரும்பாழி யூறல்கரு வூரா 
    னிலையிடும்பா வனங்கடுவாய்க் கரைப்புத்தூர் கடம்பந், 
துறைதிருவே டகந்திருவஞ் சைக்களமா டானை 
    சோபுரங்கற் குடிவடகு ரங்காடு துறையே,                 7

திருமாணி குழிவேட்டக் குடிதிருவாப் பாடி 
    திருந்துதே வன்குடிமா கறல்சத்தி முற்றந், 
திருவாப்ப னூர்மீயச் சூரவ்வூர் தன்னிற் 
    றிகழ்ந்ததிரு விளங்கோயில் வெஞ்சமாக் கூடல், 
பெருநீலக் குடிமண்ணிப் படிக்கரைநன் னிலத்துப் 
    பெருங்கோயி றிருநணா திருப்பட்டீச் சரமே, 
திருவீங்கோய் மலைவன்பார்த் தான்பனங்காட் டூரே 
    திருப்புகலூர் வர்த்தமா னேச்சரம்பாம் புரமே.            8

கடைமுடியே யோணகாந் தன்றளிகோட் டூர்வை 
    கன்மாடக் கோயிலிடை யாறுபழை யாறை, 
வடதளிநற் றினைகரங் கோணமா மலைசீர் 
    வன்னியூர் கருவிலிய னேகதங்கா வதநல், 
லிடமேவு கடிக்குளநற் றிருக்களரென் றிவைகட் 
    கிரும்பதிக மொவ்வொன்றென் றிசைத்திடுக; விப்பாற், 
குடவாயில் புனவாயி றூங்கானை மாடங் 
    கோழம்ப மவளிவணல் லூர்கோலக் காவே,                9

குருகாவூர் திருவேள்விக் குடிவிசய மங்கை 
    குற்றாலங் குடமூக்குக் கோட்டாறு பனையூர், 
கருகாவூர் குரங்காடு துறையோமாம் புலியூர் 
    கண்டியூர் வேதிகுடி கானூர்கோ கரணந், 
திருவாரூ ரரனெறிபந் தணைநல்லூர் நல்லந் 
    திருகொண்டீச் சரந்தேவூர் திருச்சிராப் பள்ளி, 
பெருவேளூர் கீழ்வேளூ ரெறும்பியூர் கானப் 
    பேர்திருமங் கலக்குடியாக் கூர்கோவ லூரே,             10

திருப்பரங்குன் றந்திருப்பா திரிப்புலியூர் குறுக்கை     
    திருப்புத்தூர் மணஞ்சேரி பாச்சிலாச் சிராமங், 
கருப்பறிய லூர்கேதீச் சரந்திருக்கே தாரங் 
    கச்சிமேற்றளி மேலைத் திருக்காட்டுப் பள்ளி, 
யருத்தியுறு பட்டினத்துப் பல்லவனீச் சரம்பே 
    ரன்பிலா லந்துறைப ராய்த்துறைவேட் களமிங், 
குரைத்தசீ ரன்னியூ ரிவ்விரண்டாம் பதிகமுள்ள 
    தலங்; கடவூர்ம யானம்வாஞ் சியமே.                 11

துருத்திதிரு நனிபள்ளி திருமருக றிருப்பூந் 
    துருத்திபுறம் பயங்கடவூர் புள்ளிருக்கு வேளூ 
ரரத்துறைவாழ் கொளிபுத்தூர் வான்மியூர் பாசூ 
    ரம்பர்மா காள மயிலாடுதுறை வாய்மூர், 
திருக்கழுக்குன் றம்பாண்டிக் கொடுமுடிரா மேச்சரஞ் 
    செங்காட்டங் குடிவெண்ணி திருச்செம்பொன் பள்ளி, 
பருப்பதம்புன் கூரரிசிற் கரைப்புத்தூர் சேறை 
    பைஞ்ஞீலி கற்குடிமா மலைபதிக முன்றே;                 12

வலம்புரமா லங்காடு சிவபுரங்கா ளத்தி 
    வலிவ லஞ்சாய்க் காடுதிருக் கோடிகாநகரம், 
நலந்திகழும் பூவணங்கோ ளிலிநின்றி யூரு 
    நறையூர்ச்சித் தீச்சரமு நான்காம் பதிகம்; 
வலஞ்சுழிநல்லூர் பழன மாமாத்தூ ரண்ணா 
    மலைகடம்பூ ரின்னம்பர் நாரையூ ரைந்தா; 
நிலந்திகழ்நா கேச்சரமாற் பேறுமழ பாடி 
    நெய்த்தானம் வெண் காடுநீள்பதிக மாறே;                13

கயிலாய மானைக்கா நள்ளாறு நாகைக் 
    காரோணந் திருச்சோற்றுத் துறையேழு; புகலூர், 
வயலாருங் கழிபாலை யொற்றியூர் திருவா 
    வடுதுறையெட்டாந்; தில்லை மறைக்காடு மதுரை, 
யியலாரு முதுகுன்றம் பதினொன்று; கச்சி 
    யேகம்ப மிடைமருதீரா; றையா றதிகை, 
யயலீ ரொன்பான்; வீழி-யாரூர் சீகாழி 
    யறுநான்கு - முப்பானான் - கெழுபத்தொன் றாமே.            14
திருப்பதிகக் கோவை முற்றிற்று

See Also: 
1. thiruppathik kOvai 
2.  thiruppathik kOvai - PDF Format  
3.  thiruppathikak kOvai - PDF Format  
4. cEkkizhAr purAnam (Unicode) 
5. cEkkizhAr purAnam (Romanised Format) 

Related Content

Ganapati Upanishad

পশুপতি অষ্টকম্ - Pashupati Ashtakam

Umamaheshvara Stotram

Pashupathy Ashtakam

Vishveshvara Neeraajanam