Saved items
Profile Settings
My Shaivite Hubs
Logout
Change Language
English
हिंदी
தமிழ்
You can view all the updates you receive here
“Veda Patasalai” was added 30 mins ago
12h ago
Dolor set lorem ipsum 30 mins ago
2 days ago
Home >
Scripture >
உ சிவமயம் திருச்சிற்றம்பலம்
உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த
"திருப்பதிக் கோவை"
கோயிறிரு வேட்களநெல் வாயில்கழிப் பாலை குலவுபெரு மணமயேந் திரப்பள்ளி முல்லை வாயில்கலிக் காமூர்சாய்க் காடுதிருப் பல்ல வனீச்சரம்வெண் காடுவளர் திருக்காட்டுப் பள்ளி தாயிலான் குருகாவூர் காழிகோ லக்கா தருக்கிளர்புள் ளிருக்குவே ளூர்கண்ணார் கோயின் ஞாயிலியற் கடைமுடியே நின்றியூர் புன்கூர் நாடியநீ டூரன்னி யூர்வேள்விக் குடியே. 1 கருதெதிர்கொள் பாடிமணஞ் சேரிதிருக் குறுக்கை கருப்பறிய லூர்கதியே காட்டுகுரக் குக்கா மருவும்வாழ் கொளிபுத்தூர் மண்ணிப்படிக் கரையே வளருமோ மாம்புலியூர் கானாட்டு முள்ளூர் திருநாரை யூர்கடம்பூர் பந்தணைநல் லூர்பொன் றிகழ்கஞ்ச னூர்கோடி காமங்கலக் குடியே திருப்பனந்தா ளாப்பாடி சேய்ஞலூர் திருந்து தேவன்குடி திருவியலூர் திருக்கொட்டை யூரே. 2 இன்னம்பர் திருப்புறம் பயம்விசய மங்கை யியல்வைகா வூர்நல்வட குரங்காடு துறையே பின்னமறு பழனமை யாறுநெய்த் தானம் பெரும்புலியூர் மழபாடி திருப்பழுவூர் கானூ ரன்னவன்பி லாலந்துறை மாந்துறைபாற் றுறையே யானைக்கா பைஞ்ஞீலி பாச்சிலாச் சிராம மன்னுமீங் கோய்மலையி னோடறுபான் மூன்றே வடகரையிற்பதி; தென்பால் வாட்போக்கி யாமே. 3 கடம்பந்துறை திருப்பராய்த்துறை கற்குடிமூக் கீச்சரங் கருதுதிருச் சிராப்பள்ளி திருவெறும்பி யூரே நெடுங்களமே லைக்காட்டுப் பள்ளியாலம் பொழில்சீர் நிகழ்திருப்பூந் துருத்திகண்டி யூர்சோற்றுத் துறைமா லடும்வேதி குடிதென் குடித்திட்டை புள்ளமங்கை யணியார்சக் கரப்பள்ளி யருங்கருகா வூரே படர்பாலைத் துறைநல்லூர் திருவாவூ ரதனிற் பசுபதீச் சரஞ்சத்தி முற்றம்பட்டீச் சரமே. 4 ஆறைவட தளிதிருவ லஞ்சுழியே குடமூக் கதனிற்கீழ்க் கோட்டங்கா ரோணநா கேச்சரங் கூறுமிடை மருதுகுரங்காடுதுறை நீலக் குடிவைகன் மாடக் கோயி னல்லங்கோ ழம்பஞ் சாறமரா வடுதுறைதண் டுருத்திதிரு வழுந்தூர் சகம்புகழ்மா யூரம்விள நகர்பறிய லூரே வீறுசெம்பொன் பள்ளிநனி பள்ளிவலம் புரமே வியன்றலைச்சங் காடாக்கூர் விளங்குகட ரூரே. 5 திருக்கடவூர் மயானமொடு திருவேட்டக் குடியே தெளிச்சேரி தருமபுர நள்ளாறு கோட்டா றுரைக்குமம்பர்ப் பெருந்திருக் கோயின்மா காள முயர்மீயச் சூரிளங்கோ யிற்றிலதைப் பதிபூ மருக்கமழ்பாம் புரநற்சிறு குடிவீழி மிழலை வன்னியூர் கருவிலிமன் பேணுபெருந் துறையென் கருத்துடைக்கு நறையூர்ச்சித் தீச்சரத்தோ டரிசிற் கரைப்புத்தூர் சிவபுரமுங் கலையநல்லூர் காணே. 6 கருக்குடிவாஞ் சியந்திருநன் னிலத்துப்பெருங் கோயில் கவின்கொண்டீர்ச் சரம்பனையூர் விற்குடிதென் புகலூ ரிருக்கும்வர்த்த மானேச்சர மிராமனதீச் சரமே யியல்பயற்றூர் செங்காட்டங் குடிமருக லிருளே முருக்குதிருச் சாத்த மங்கை நாகைக்காரோண முன்றிருக்கச்சிக் கற்றிருக்கீழ் வேளூர்த்தே வூரே யரிக்கரி யான் பள்ளியின்முக்கூட ரிருவாரூ ரானெறிமூ லட்டானம் பரவையுண்மண் டளியே. 7 மேலாகும் விளமர்கர வீரம்பெரு வேளூர் மிளிர்தலையா லங்காடு குடவாயில் சேறை நாலூர்ம யானங்கடு வாய்க்கரைப் புத்தூர் நவிலுமிரும் பூளைதிரு வரதைப்பெரும் பாழி மாலூரு மவளிவனல் லூர்பரிதி நியமம் வாழ்வெண்ணி பூவனூர் பாதாளீச் சரநீர்ச் சேலூருந் திருக்களர்சிற் றேமமுசாத் தானந் திருவிடும்பா வனத்தோடு சேர்ந்தகடிக் குளமே. 8 தண்டலைநீ ணெறிகோட்டூர் வெண்டுறையோ டழகே தருகொள்ளம் பூதூர்பே ரெயில்கொள்ளிக் காடு கண்டருதெங் கூர்நெல்லிக்கா நாட்டியத்தான் குடியே காறாயில் கன்றாப்பூர் வலிவலங்கைச் சினத்தோ டண்டர்பிரான் கோளிலிதென் றிருவாய்மூர் மறைக்கா டகத்தியான் பள்ளிகோடிக் குழகருந்தென் கரையி லெண்டருநூற் றிருபத்தே ழிப்பா லீழத்தி லிசைகோண மாமலைகே தீச்சரமென் றிரண்டே. 9 ஆலவா யாப்பனூர் பரங்குன்றே டகத்தோ டருங்கொடுங்குன் றந்திருப்புத் தூர்புனவா யிலினோ டேலுமிரா மேச்சர மாடானைகா னப்பே ரெழிற்றிருப்பூ வணஞ்சுழிய லின்புறுகுற் றாலம் பாலலோ சனன்றிருநெல் வேலியொடு பாண்டி பதினான்கு மலைநாட்டி லஞ்சைக்கள மொன்றே சீலமிகு மவிநாசி திருமுருகன் பூண்டி திருநணா கொடிமாடச் செங்குன்றூர் தானே. 10 வெஞ்சமாக் கூடல்கொடு முடிகருவூர் கொங்கின் மேவுமே ழரத்துறைவண் டூங்கானை மாட மெஞ்சலில்கூ டலையாற்றூ ரெருக்கத்தம் புலியூ ரிணையகலுந் தினைநகர்சோ புரமதிகை புகழே விஞ்சுதிரு நாவலூர் முதுகுன்றந் திருநெல் வெண்ணெய்திருக் கோவலூ ரறையணிநல் லூரே மஞ்சுதிக ழிடையாறுவெண்ணெய் நல்லூர் துறையூர் வடுகூர்வீ டேயருளுந் திருமாணி குழியே. 11 தண்ணார்தண் டலைப்பாதி ரிப்புலியூர் முண்டீச் சரம்புறவார் பனங்காட்டூர் திருவாமாத் தூரே யெண்ணாரண் ணாமலையு நடுநாட்டி லிருபத் திரண்டாகு; மிப்பாலே கம்பமேற் றளிவிண் கண்ணோங்கு மதிலோண காந்தன்றளி யனேக தங்காவ தங்கச்சி நெறிக்காரைக் காடே யுண்ணாடு குரங்கணின்முட் டந்திருமா கறலோத் தூர்வன்பார்த்தான் பனங்காட்டூர் வல்லமாற் பேறே. 12 ஊறலிலம் பையங்கோட்டூர் விற்கோலமா லங்கா டுயர்பாசூர் வெண்பாக்கங் கள்ளில்கா ளத்தி மாறிறிரு வொற்றியூர் வலிதாயம் பாலி வடமுல்லை வாயில்வேற் காடுதிரு மயிலை யீறிறிரு வான்மியூர்கச் சூராலக் கோயி லிடைச்சுரங் கழுக்குன்ற மச்சிறுபாக் கம்மே மாறிறிரு வக்கரையே யரசிலிதொல் லிரும்பை மாகாளந் தொண்டைநன்னாட் டெண்ணின்முப்பா னிரண்டே. 13 கோகரணந் துளுவதே யத்திலொன்றே; யிப்பாற் குலவுபருப் பதநீலபருப் பதமம் பிகைதன் பாகருறை யனேகதங்கா வதந்திருக்கே தாரம் பகர்நொடித்தான் மலைவடக்கிற் பதியைந்தே; யிவற்றோ டாகவிரு நூற்றெழுபா னான்கென்பர் மூவ ரருட்பதிக மிருக்குமூ; ரதிகமாம் வைப்புத்; தாகமுட னினைப்போர்க்குந் துதிப்போர்க்கும் வினைகள் சாராவாம்; பிறப்பகலுஞ்; சத்தியமுத் தியுமே. 14
திருப்பதிக் கோவை முற்றிற்று _ _ _
Back to thamizh shaivite literature Page Back to Shaiva Sidhdhantha Home Page