0. கடவுள் வாழ்த்து, அவையடக்கம் | 1-20 |
1. திருநாட்டுப்படலம் | 21-95 |
2. திருநகரப்படலம் | 96-191 |
3. நைமிசப்படலம் | 192-209 |
4. புராண வரலாற்றுப்படலம் | 210-261 |
5. பதிகப்படலம் | 262-272 |
6. நாரதன் வழிபடு படலம் | 273-339 |
7. காலவன் வழிபடுபடலம் | 340-418 |
8. காமதேனு வழிபடுபடலம் | 419-503 |
9. குழகன் குளப்புச் சுவடுற்றபடலம் | 504-627 |
உ
சிவமயம்
காப்பு (1)
1 | கங்கையும் பனிவெண் டிங்களும் விரைத்த கடுக்கையந் தொங்கலு மரவும் தங்குபொற் சடையு முக்கணுந் தாதை தாணுவென் றுணர்த்தமென் மலர்க்கை அங்குச பாச மணிந்துவெற் புயிர்த்த வாரணங் கன்னையென் றுணர்த்தி வெங்கலி முழுதுந் துமித்தருள் பட்டிவிநாயகன் சேவடி பணிவாம். | 1 |
கடவுள் வாழ்த்து (2-14)
2 | பட்டீச்சர் கடல்சூழ்ந்த வுலகுண்ட கனிவாய னிருந்தொழிலுங் கமழ்ந்த தெய்வ மடல்சூழ்ந்த மலர்க்குரிசின் முதற்றொழிலு மவரொடு மடிக்கு ஞான்றவ் அடல்சூழ்ந்த வரன்வழியே மீட்டும்வரப் பணித்தருளி யாவிக் கெல்லாம் மிடல்சூழ்ந்த விருடணிக்கு மாதிநகர்ப் பட்டீசர் விரைத்தாள் போற்றி. | 1 |
3 | அரசம்பலவாணர் திருமார்பன் முதலான தேவருக்கெல் லாமறையோன் சிவனே யாமென் றொருவாய்மை மறைகரைந்த துண்மையெனத் தெளிந்துலக முய்ய முத்தீ மருவாருங் குழலுமைபத் தினிவளர்ப்ப விடக்கரத்து வயங்க வேந்திப் பெருவாழ்வு தரவரசம் பலத்தாடும் பேரொளியைப் பேணி வாழ்வாம் | 2 |
4 | மரகதவல்லியம்மை கங்கைநதி சடைக்கரந்த கணவனா ருருக்கலந்த தனக்கே யல்லால் துங்கமணிக் கோடிரண்டா யிரம்படைத்த கரியெவர்க்குந் தூண்டன் முற்றாது அங்கணெடும் புவனத்தென் றமைந்தனள்போற் பாசமொடங் குசங்கை மங்கலமிக் கருள்பேரூர் மரகதவல் லியினிருதாள் வனசம் போற்றி. | 3 |
5 | விநாயகக்கடவுள் வேறு கற்றை வெண்கதிர் மேருவி னொழுக்கிய காட்சியின் மணிமார்பின் உற்ற முப்புரி நுல்கர டத்தினின் றுகுமதத் துருவேறாய்ப் பொற்ற தாதைபோற் றேவர்தஞ் சிகைகொலோ பூண்டன ரிவரென்னும் பெற்றி நித்தலும் விளைக்குமங் கரன்கழற் பிரசமா மலர்போற்றி. | 4 |
6 | முருகக்கடவுள் காமர் மல்கிய வுருவிஃ தன்றெனக் கருத்தின்முன் னுறத்தோற்றும் காம னல்லுடல் பொடித்தகண் ணிடத்துமை கணவனார் நிகரில்லாக் காமர் மல்கிய வுருவெனத் தோற்றிய காளையை யடியார்தங் காம முற்றமிக் கருளுமங் குலிநகர்க் கந்தனைப் பணிவாமால். | 5 |
7 | திருநந்திதேவர் உலகம் யாவையு மொருநொடிப் பொழுதினுண் டுமிழுஞ்சக் கரமாதி மலர்கை யேந்திய நாரணன் முதலிய வானவர் குழாமெல்லாம் அலகி லார்வமு மச்சமுந் தழீஇநிரை யாகநின் றனர்போற்ற இலகு வேத்திரச் சிறியகோற் பணிபுரி யேந்தல்பூங் கழல்போற்றி | 6 |
8 | சண்டீச நாயனார் வேறு விண்ணவ ரேனுஞ் சிவபிரான் பத்தி மேவில ராயினல் வினையும் திண்ணிய பாவ மெனப்படு மென்று சிறுவிதி தெரிப்பவன் பினரேல் மண்ணவ ரேனும் வெய்யபா தகமு மறுவினல் வினையெனப் படுமென் றண்ணலம் புவியிற் றெரித்தசண் டீசரடிமலர் முடிமிசைப் புனைவாம். | 7 |
9 | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வேறு தவந்த என்பினைப் பெண்ணெனப் படைத்துஞ்சார் மழவன் உவந்த பெண்ணுயி ரளித்துமொட் டாதெதிர் புத்தன் நிவந்த சென்னியை யுருட்டி முத்தொழி னிறுவிப் பவந்த டுத்துயிர்க் கருளுஞ்சொற் பனவனைப் பணிவாம். | 8 |
10 | திருநாவுக்கரசு நாயனார் விஞ்சை கற்பன வேறிலை விடையவன் பதங்கள் அஞ்சு மேயென வறியவெவ் வுலகுங்கற் புணையா நெஞ்சு துட்கெனு நெடும்புனல் வேலையும் பிறவி வஞ்ச வேலையு நீந்திய மன்னனைப் பணிவாம். | 9 |
11 | சுந்தரமூர்த்தி நாயனார் ஆடு பாம்பணிந் தம்பலத் தாடிய வழகற் பாடு பாப்பல பகர்ந்துமற் றிம்மையின் பயனும் கூடு மேலையிற் பயனுங்கோ தனைத்தையு மொருவும் வீடும் வாங்கும்வா ணிகத்துறு விரகனை வியப்பாம். | 10 |
12 | மாணிக்கவாசகசுவாமிகள் உள்ள மாகிய புலத்தினைப் பத்தியா லுழுது தெள்ளு ஞானவித் துறுத்துநற் சிரத்தைநீர் பாய்த்திக் கள்ள வான்பொறிக் களைகள்கட் டானந்தம் விளைத்துக் கொள்ளை கூறுமா ணிக்கவா சகன்கழல் குறிப்பாம். | 11 |
13 | மற்றைய நாயன்மார் அறத்தி னீடிய வகத்திடைச் சிவானந்தம் விளைய உறத்த டாதுமுன் பாய்த்திய வொழுக்கநீர் முழுதும் புறத்தி னேகுறக் கவிழ்த்ததே போன்மெனப் புனல்கண் நிறத்தின் வாக்குமெய் யன்பின ரெவரையு நினைப்பாம். | 12 |
14 | குருமரபு வேறு அங்கணர்தங் கயிலைவரை நந்திநவின் றருளும் அருணூலை மொழிபெயர்த்த வாசிரியன் மரபில் தங்குதுறை சையினமச்சி வாயர்மறை ஞானர் தயங்கியவம் பலவாண ருருத்திரகோ டியர்மா மங்கலவே லப்பரிரு குமாரசா மிகண்மா சிலாமணியா ரிராமலிங்கர் வயங்கிருவே லப்பர் இங்கணுயர் திருச்சிற்றம் பலவரிருள் துமித்திட் டெனையாளம் பலவாண ரிவர்களையேத் தெடுப்பாம் | 13 |
கடவுள் வாழ்த்து முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் 14
------------
அவையடக்கம் (15-20)
15 | வேறு சூழிமால் யானை சுமந்த நானிலத்துச் சூழ்ந்தவேழ் கடலையு மொருங்கு நாழியா லளப்பப் புகுந்ததே போலா நான்முகன் மாலளந் தறியா ஊழியான் கருணை ஊற்றெழ நடன முஞற்றுறும் பிப்பிலா ரணியப் பாழிமான் மியங்கண் முழுவதுஞ் சிறியேன் பகருவான் புகுந்தது மாதோ. | 1 |
16 | சித்திரம் பிறங்கச் செம்பொனிற் குன்றி செறிப்பினுஞ் செய்கையே விழைவார் ஒத்ததின் றிதற்கென் றுவப்பராற் கூடத் தொளிர்மணி யழுத்தினு மணியின் உத்தமம் விழைவோ ரதனையே மதிப்ப ருரைத்தவென் கிளவியாற் சிலர்தாம் கைத்தன ரேனும் பயனுறு மனத்தோர் கைக்கொள்வர் மான்மியச் சிறப்பால். | 2 |
17 | பண்டுகே வலத்திற் கிடந்தவா ருயிர்க்குப் பரிவினாற் றனதுப காரம் கண்டரு ளிறைபோற் றாங்களே பிறர்தங் கவிதையிற் கரிசுதீர்த் தாள்கை கொண்டவை யிருந்தோர் தம்மையா மிரப்பிற் கோதற விளங்கிய வவர்தம் மண்டிய புகழுக் கியைவதன் றெனவா ளாதிருந் தனமவர் மாட்டு. | 3 |
18 | அருவருப் புடைய துடலமென் றறிந்தும் அரும்பய னுறுநரு முறாரும் ஒருவருந் திறத்தி னுரிமைமற் றதன்பா லுறுத்துவர் மதுரமென் கிளவி மருவரி திதுவென் றறிந்துமென் பாடன் மாட்டுவை யகத்துளா ரெவரும் பொருவருந் திறத்தி னுரிமைபூ ணுவராற் பொறியிலே னிடத்துறு மகிழ்வால் | 4 |
19 | கடல்கடைந் தெடுத்தச் வமிழ்தமுஞ் சமழ்ப்பக் கதித்ததீஞ் சுவையெழாற் பாடல் நடவின ரிருவர் சேக்கைபெற் றிருந்த நாயகன் செவியிடைத் துடிமான் விடநிகர் குரைப்பு மேறலிற் றெளிந்தோர் விதியுளி யுஞற்றுசெந் தமிழ்கள் படருமச் செவியிற் சிறியனேன் றொடையும் படருமா லுலகெலாம் பரவ. | 5 |
20 | வேறு கொன்றை மாலையுங் கூவிள மத்தமும் பிறையும் துன்று வார்சடைப் பட்டிநா யகர்சுரர் போற்ற மன்றி னாடல்செய் குடவயிற் சிதம்பரம் வயங்கு கின்ற மேதகு கொங்குநாட் டணிகிளப் பாமால். | 6 |
அவையடக்கம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் 20
-----------
1. திருநாட்டுப்படலம் (21-95)
21 | திங்களும் உரோணியுந் திகழ்ந்ததிற மென்ன மங்கல வினைத்தொழிலு மங்கையரும் வேத அங்கியும் வளர்க்குமறை யந்தணருங் காவும் கொங்குமலி கின்றதொரு கொங்குவள நாடு. | 1 |
22 | கோதைபயில் விற்கொடி குலாவிய புயத்தன் கோதையர் விழிக்கணை குளிக்குமரு மத்தன் கோதைகம ழுங்கவிகைக் கொங்கனென விள்ளுங் கோதைநனி யாண்டதொரு கொங்குவள நாடு. | 2 |
23 | பருதியொடு வெண்மதி பரிக்கவொளி நல்கும் உருகெழு கனற்புதல்வ னாண்டவொரு சீரால் இருசுட ருயிர்த்தவர்க ளாண்டவிரு நாட்டின் குருவென விலங்கியது கொங்குவள நாடு. | 3 |
24 | மலாடும்வளர் பாண்டியும் வழங்குபுன னாடு நிலாவுதிறை யாகநிதி நிச்சமும் வழங்கி விலாழிமத குஞ்சரமும் வெய்யபொருண் மற்றுங் குலாவுசிறப் பெய்தியது கொங்குவள நாடு. | 4 |
25 | இலவிதழி பாகனி லிழிந்தமலர்க் கைதை கலவியது காரமிழ்து கான்றதொழி யாத புலவுடைய தென்றுகடல் போக்கிநில மூன்றிற் குலவிவள மெத்தியது கொங்குவள நாடு. | 5 |
26 | குறிஞ்சி வேறு கடலு வர்ப்பென நீக்கிய காமரிந் நாட்டின் தடவு வண்மையை நோக்கியே சாகர முகந்த படலை மென்முகில் பயிலுவர் முழுவது மகற்றிப் புடவி யெங்கணும் பொழிந்துகண் படுப்பன வரைகள். | 6 |
27 | கருவி நீண்முகிற் கஞ்சுகம் போர்த்ததன் மேலால் குருதி மாமணிக் கொழுநிற வானவிற் பைம்பூண் மருமம் வீழ்தரப் பூண்டுபன் மணிகொழித் திழியும் அருவி யாரமு மணிந்ததா லருவரை யடுக்கம். | 7 |
28 | குழவி வாண்மதி தவழ்வது கோடெனத் தோன்ற முழவ மாமழை முழக்கெழ முகத்துமின் னோடை தழுவ மாலைவெள் ளருவியஞ் சலசல மதநீர் ஒழுக வோங்கல்க ளரசுவா வெனச்சிறந் தனவால் | 8 |
29 | கழைநி வந்ததண் சாரலிற் களகள முழங்கும் மழையை வேற்றுவா வரவென மதமலை யெதிர்ந்து புழைநெ டுங்கர நீட்டவாய் முழையெனப் புகுந்த தழைம ழைக்குல நிமிர்வது தளைவிடு நாள்போல. | 9 |
30 | தண்ட மெண்ணில காட்டுவ தாழ்வரைக் குலமும் தொண்ட கப்பறை முழக்குநர் துவன்றுசீ றூரும் கொண்ட சேவகங் காட்டுவ குலவரை முழையும் மண்டு போர்பல வடுத்துழி மறவர்தம் புயமும். | 10 |
31 | சுடர்ம ணிக்குலந் துவன்றிய தடநெடுங் கோட்டுக் கடகங் காட்டுவ கொடிச்சியர் கரங்களுங் காவும் சுடர்ம ணிக்குலந் துவன்றிய தடநெடுங் கோட்டுக் கடகங் காட்டுவ களித்தெழு களிறுங்கல் வரையும். | 11 |
32 | வேட்ட தற்பமே யாயினு மேவுமா முயல்வோர் வீட்டு வார்விழை யாதன மேன்மைய வேனுஞ் சேட்டு மாமணி பொடிபடச் செந்தழல் விரைக்கா னூட்டி னார்தினை வித்தினா ருயர்மலை வாழ்நர். | 12 |
33 | செய்ய கோலினர் திசைதொறுஞ் செலுத்துசக் கரத்தார் வெய்ய தண்டமு முடையவர் வெல்பெருங் கதையார் ஐய நாளறி கணியின ரசலமந் திரஞ்சூழ் மெய்யர் யாவரும் வெற்பமர் வாழ்க்கையா டவரே. | 13 |
34 | முருந்து மூரலார் மொழியையு மியலையும் வேட்டு வருந்து கிள்ளையு மஞ்ஞையும் வார்புனத் திதண்மேல் இருந்து ளாரென வின்புறு மின்முகங் காணா விருந்தி னாரென வெதும்புறும் விலகுகைக் கவணால் | 14 |
35 | கிழங்கு செந்தினை யைவனந் தோரைகேழ் மதுவூன் பழங்க னற்பசி கெடுப்பன படிவன வருவி முழங்கு தண்சுனை கண்படுப் பனமுதிர் மான்றோல் தழங்கி ரும்புகழ்ப் பொருப்பினர் வாழ்க்கைதாழ் விலதே. | 15 |
36 | பிணிமு கத்தன புனங்களே பெரிதிரங் குவன துணிபு னற்சுனைத் துடுமென விழுமரு விகளே திணிப டும்வயி ரத்தன சிலம்புசூழ்தடமே அணிப டுங்கொடுங் கோலின வழிமதக் களிறே. | 16 |
37 | பெரும்ப யத்தன பிரசம்வார் பொதும்பரே யல்ல சுரும்பு ழக்கமென் றோடவிழ் மலர்த்தடஞ் சுனையும் கருங்க யத்தன கமழ்ந்தவச் சுனைகளே யல்ல மருங்கு துன்றிய மழைதவழ் மணிவரைக் குலமும். | 17 |
38 | முல்லை வேறு அருவியம் புனங்களை யளிக்கு மேனலும் இருவியு மாக்ககுந ரிருக்கை மால்வரை மருவிய வுடையென மருங்கு வாங்கிய திருவியல் கானகஞ் செல்வ மிக்கதே. | 18 |
39 | புல்லமாய்ப் புரமடு மிறையைத் தாங்கினோன் புல்லமார் நிரைகளைப்புரக்க முன்னுவோன் புல்லமா யிருந்ததிப் புடவி யென்றுபல் புல்லமார் நிரையெலாம் புணர்ந்த செவ்வித்தே. | 19 |
40 | மந்திர வலியினான் வலைத்துக் கட்டிய வெந்திற லுழுவையின் வெடிகொ ளோதையும் சுந்தர மகளிர்கள் துவன்றி மத்தெறி பைந்தயி ரோதையும் பகுக்கொ ணாதரோ. | 20 |
41 | தொறுவியர் கற்பினான் மிகுந்த தோற்றத்தை நிருவிய தென்பவே நிலத்தின் மங்கையர் மறுவில்கற் புடையராய் வார்கு ழற்பெயும் நறுவிரை முல்லையி னகைத்த கானமே. | 21 |
42 | ஏற்றினா லிரலையா லிதழி யாத்தியும் தோற்றலான் மாலொரு பாலிற் றுன்னலால் ஆற்றநற் பான்முத லைந்து மாடலால் நீற்றினன் திருவுரு நிகர்க்குங் கானகம் | 22 |
43 | பெருகிய பாற்கடற் பள்ளி பெற்றவன் பருகிய வமுதினான் பானெய் பற்றுமிக் குருகிய காதலிற் கரந்துண் டானெனின் வெருகுமங் குயர்ந்தன விருப்ப வுண்டியால் | 23 |
44 | வேய்மணிக் குழலினும் வெய்ய மாலையில் தாய்மணிக் குரையினுந் தழைக்குங் கன்றுதேர் வாய்மணிக் குரையினும் வழங்கு தூதினும் ஆய்மணி யனையவ ரகந்த ழைப்பரே. | 24 |
45 | சயமுறு தன்னில வரகுஞ் சாமையும் வயல்வளர் செந்நெலும் வணங்க மிக்குறு பயனொடு தலைநிமிர் பரிசு பெற்றன வியலுறு மிறுங்குகம் பாதி யெங்கணும். | 25 |
46 | காணமுந் திலமுநற் கடலைச் செல்வமும் தூணுற ழரையின துவரைக் கானமும் மாணுறு மவரையும் பயறு மற்றவும் பேணிந ரையுறப் பெருக்கஞ் சான்றவே. | 26 |
47 | விடுத்தவல் லேற்றினை விரகிற் பற்றினோர்க் கடுத்தன எளிதினல் லணங்க னார்வடந் தொடுத்தகுஞ் சரங்களுந் துளங்கு சிங்கமும் கடுத்தவழ் கூற்றமுங் கைக்க டங்கியே. | 27 |
48 | கோலொடுங் கயிற்றொடுங் குழலொ டும்பசுக் காலொடும் பழகுவ பொதுவர் கைத்தலம் பாலொடுந் தயிரொடும் நெய்யொடும் பைம்பொற் சாலொடும் பழகுவ தைய லார்கரம் | 28 |
49 | மருதம் அந்தினுந் தெய்வ தமருந் தவத்தினால் உந்தியி னொருமல ருயிர்த்த தாமென நந்துயிர் முத்தினா னகக்கும் பங்கயச் சுந்தரப் பணைவனத் தரூகு சூழ்ந்தவே. | 29 |
50 | வேறு ஒன்றுக ணரனுக் கீந்திட் டுவணத்தோன் கமலக் கண்ணன் என்றுல கிசைப்பப் பெற்றான் இத்தகு பதுமஞ் சாலத் துன்றுநம் மிறைவ னோடு சோர்வற்க என்று ஏகம் நன்றுறை சிதறித் துஞ்சும் நனைமலர்க் காவு தோறும். | 30 |
51 | குழையொடு தோடு நாலக் கொடியிடை துடங்கக் கொங்கை விழைதகக் காட்டிப் புள்ளின் வியத்தகு குரல்க டோற்றி மழைமுகிற் கூந்தல் சோர மருங்குகண் மலர்கள் சேர்த்தித் தழைமதுத் தெவிட்டிக் காமத் தையலர் புரையுஞ் சோலை. | 31 |
52 | சிலம்புகா லணிந்து பாணி செறிந்தகற் கடகந் தோற்றி வலம்புரி யுந்தி தாழ்ந்து மணிநிழற் காஞ்சி சூழ்ந்து நலம்புரி யலர்க டோன்ற நாயகன் விழையத் துள்ளிப் புலம்புகுத் தன்பின் மாதர் போன்றன வேரி யெல்லாம். | 32 |
53 | சுரும்பொடு ஞிமிருந் தேனுந் தும்பியும் பாண ராக அரும்பவிழ் கமல மெல்லாம் அரியலார் வள்ள மாக விரும்பிய விலைமூ தாட்டி யாயின விலக லின்றி இரும்புனற் றடங்க டோறு மிடையிடை விராய வன்னம். | 33 |
54 | முள்ளரைக் கமல மேய மூரியம் புனிற்றுக் காரான் உள்ளூறத் தவழ்ந்து கோட்டி னொழிந்துநீர் குறைந்த பொய்கை துள்ளுமீன் செருத்தன் முட்ட துனைந்தவை பெயர்ந்து கொட்டுந் தெள்ளீய நறும்பால் பாய்ந்து குறைவறத் தேக்கு மன்றே. | 34 |
55 | வள்ளையுங் குவளைப் போதும் மயங்கிமேய் செங்கட் காரான் நள்ளுறச் சொரிந்த தீம்பால் நசையின்வாய் மடுத்துங் கஞ்சப் பள்ளியிற் பயின்று மாதர் படர்தொறு நடைகள் கற்றும் ஒள்ளிய தெய்வ நாட்டை மறந்தன ஓதி மங்கள் | 35 |
56 | பாவிரி புலவர் சாவாப் புலவரும் பழிச்சுந் தெய்வக் காவிரி பவானி யாம்ப ராவதி கங்கை யென்னப் பூவிரி காஞ்சி மாற்றும் பொங்கிவெண் டிரைகள் வீசித் தாவிரி பழன மோம்பத் தலைதலை பரந்த மாதோ | 36 |
57 | வரைவிழி யருவி யென்ன மணிகொழி கலுழி யென்ன விரைதரு நதிக ளென்ன வியத்தகு நீத்த மொன்றே பரைதனக் குரிய கேள்வன் படைத்தளித் தழிப்போர் பானின் றுரைதரு மூவ ரென்னப் படுவதொத் துரைவே றெய்தும். | 37 |
58 | மலைபடு வயிரஞ் செம்பொன் மருப்புநித் திலஞ்சந் தாதி அலையினிற் கவர்ந்து கொல்லை யாயர்தம் புறங்கண் டன்னோர் விலையிழு தமுதந் துய்த்து மேற்செலப் பழன மள்ளர் குலைதொறும் பறைக ளார்ப்பக் கொமென வெதிர்சென் றாரால். | 38 |
59 | மணித்தலைப் பாப்புக் கூட்டம் வைகிய நாக நாடிங் கணித்தென வுடைப்பிற் றாழ்ந்த வவலெலா மலையின் பக்கந் துணித்தவன் காவல் பூண்ட சோதிசூழ் நாக நாடுந் தணித்தன மென்னத் தூர்த்துத் தடாயவன் குலைகள் செய்தார் | 39 |
60 | விலைமட மாதர் நெஞ்சின் வீற்றுவீற் றுடைப்பிற் சென்ற அலைநெடும் புனல்கண் முற்றும் அகத்துற மறுத்த லோடுங் குலைகளு ளடங்கி நல்ல குலம்வரு தெய்வக் கற்பின் தலைவளர் மாதர் நெஞ்சி னொழுகின தடங்கால் தோறும். | 40 |
61 | கதுப்பிளந் தோகை நல்லார் கண்ணெனக் கயல்கள் பாய மதுப்புனற் கமலம் பூத்த வளநெடு வயல்க ளெல்லாம் புதுப்புனல் பாய வோகை பொங்கிய கருங்கை மள்ளர் வெதுப்புறும் அரிய லார்ந்து வினைத்திறத் தூக்க மிக்கார். | 41 |
62 | வேறு சீர்த்த வித்தொழி லாளர்க்குத் தென்றிசைப் பார்த்தி வன்விரை யாக்கலி பாறுமென் றோர்த்து ளங்கொள வன்னவ னூர்தியைக் கார்த்த டங்கையி னாருழக் கட்டினார். | 42 |
63 | கமலக் கண்ணன்முன் றோன்றிய காளைகை யமருக் கேற்றவ லப்படை நம்மிரு சமரக் கால்வழிச் சாருவ தாமெனத் திமிரப் பூணிகள் செல்வ தருக்கியே. | 43 |
64 | வெள்ளை கைப்படை வீற்றுற நந்தகோன் பிள்ளை நீருட் பிறந்ததோற் றத்தினுள் துள்ளு மொன்று துனைந்திரிந் தோடுமொன் றள்ள லுட்படிந் தாங்கலைப் புண்ணுமே. | 44 |
65 | ஏத மென்றறி யாதய லாரிடங் காத லிற்கவர்ந் தார்முகங் காட்டிய சீத வம்புயத் தேனொடுந் தாழ்வன நீதி மன்முனவ் வானனம் நின்றென. | 45 |
66 | நாய கன்கை நகம்படு மூற்றினால் சாயன் மெல்லிய லார்கட ழைப்பபோல் தேய லப்படை சென்றுறு மூற்றினால் பாய பண்ணை பயப்பட நின்றவே. | 46 |
67 | மெய்யி னூறு வெளிப்பட நாணிய மையன் மாதர் மறைத்தவெண் டூசெனத் தைய சால்கள் தமைமறைத் திட்டதாற் கையி னாற்றுநர் பாய்த்திய காமர்நீர். | 47 |
68 | நாவ லங்கனி நேர்நறுஞ் சாற்றினை மாவ லங்கொளு மள்ளர் மரம்படுத் தாவ லங்கொட்ட ஆற்றுக்கா லாட்டியர் மேவ லங்கிய வெண்முளை வித்தினார். | 48 |
69 | சேறு செய்குந ரோர்புறஞ் சேற்ரிடை வீறு வெண்முளை வித்துந ரோர்புறம் நாறு வாங்கி நடுகுந ரோர்புறம் வேறு வேறு வினைத்திற மிக்கதே. | 49 |
70 | ஏரி னுஞ்சிறப் பென்றெருப் பெய்தபின் சீரி தென்று களையடச் செப்பினார் நீரி னுசிறப் பாநெடுங் காவலென் றாரி னுஞ்சிறப் பெய்தவ ளிப்பவர். | 50 |
71 | வேறு கருங்களமர் களையென்னச் செங்கயற்கட் கடைசியர்கள் மருங்குனெடுங் கொடிநுடங்க வளர்தானை மீச்செல்ல நெருங்கியகை வளையொலிப்ப நிரிறம தவயவத்துக் கொருங்கிகலும் பகைமுடிப்ப வொளிர்நறும்பூம் பணையடுத்தார். | 51 |
72 | செய்யவாய்க் கருங்கயற்கண் வெண்முறுவற் பைந்தொடிக்கைப் பையரா வகல்குற் காரன்னம் படர்தலொடும் உய்யலாந் திசையாதென் றுய்யான மருங்கடுத்த வெய்யபூம் பணைக்கமலம் விரவியவெள் ளோதிமங்கள். | 52 |
73 | மழைகாட்டும் விழிகாட்டும் மலர்க்குவளை மகரவாய்க் குழைகாட்டுஞ் செவிகாட்டுங் கொடிவள்ளை துவர்ச்செவ்வாய் கழைகாட்டு முகங்கரங்கால் கமழுந்தி முலைகாட்டிப் பிழைகாட்டு நனியென்னாப் பெரிதுமடர்த் தார்கமலம். | 53 |
74 | கனிச்சந்த வாய்நிகர்த்த கயிரவத்தின் றவம்பாரார் அனிச்சந்த மடிநிகர்த்த வருந்தவத்தின் றிறம்பாரார் இனிச்சந்த மிலையென்ன விறுத்திறுத்துத் திடர்செய்தார் பனிச்சந்த வனமுலையார் பகைத்தவம்பார்த் தொழிப்பவரார். | 54 |
75 | பஞ்சாயு மிளமுருந்து பனிநகையி னுயிர்ப்பதென எஞ்சாது பறித்தெடுத்தா ரேனையவும் பறித்தெறிந்தார் அஞ்சாமை யிறையேவ வடர்ப்பவர்க்குப் பகைநொதுமல் துஞ்சாத வுறவிவற்றிற் சூழ்வதுசற் றுளதாமோ. | 55 |
76 | தளையவிழ்பூங் குழனிகர்த்த சைவலங்க ளொறுக்கின்ற விளையவர்தங் கானிகர்த்த வெமைவிடுத்தற் கிதுவாமென் றளையழுந்து ஞெண்டுவரா லாமையகன் வயற்கிளைத்த களைகளைய வுலாவுதொறுங் கான்மலர்மேல் விழுந்தெழுமால். | 56 |
77 | பட்டமிருந் தடம்பொய்கை பரந்தசெறு விவற்றெழுந்த கொட்டியுநன் கிருந்தனவாற் குலத்தேவர் மணிமுடியில் அட்டுமது மலரும்வய லவிந்தனவே யறிகிற்பிற் சட்டவிடத் தாற்றழைத்துத் தபுவர்தணிந் துயர்ந்தோரும். | 57 |
78 | செழுக்கமல மதுமாந்தித் தெரிந்திதழ்மென் குழற்செருகி விழுக்குவளை செவியேற்றி விரைத்தாது முலைக்கொட்டி ஒழுக்குநறைக் கயிரவத்தின் ஒளிர்தண்டைச் சரணுறுத்துக் குழுக்கொடுழத் தியர்மீண்டார் கொலைக்களத்தேல் சிறப்பினர்போல். | 58 |
79 | வேறு குமிழ்தந் தொளிர்நா சியினார் குலனொன் றியவா டவருக் கமிழ்துந் தனியா வியுமா யணிசெய் குவதற் புதமோ இமிழ்தண் புனலீர்ம் பணையி னெழுபுன் பயிர்கைத் தொழிலால் உமிழ்தந் தனவோங் கிவளர்ந் துலகின் புறலாங் கருவே. | 59 |
80 | கரும்போ விஃதென் மர்கழைக் கரும்பித் துணையா வதுகொல் அரும்பார் கதலித் துடவை யாமென் றுமறுத் தவர்தாஞ் சுரும்பார் கதலிக் குலமித் துணையா வதுமுண் டுகொலோ பெரும்பூ கமெனக் கொளவும் பெரிதும் விளைவா யினவால். | 60 |
81 | இருநா ழிநெலீந் தவரு மெண்ணான் கறமேற் றதனால் ஒருவா துசெயுத் தமியு மொருநா ளுருமா றிமலர் மருவார் பிறவா நெறியின் வயலிற் றொழில்செய் தனரேல் பெருவாய் மையசெந் நெலெலாம் பெரிதீண் டுதலோர்புகழோ. | 61 |
82 | வேறு கண்ணுற நின்ற வாசான் கடவுளே யென்று முன்வே றெண்ணின ரறிவு முற்ற விறைஞ்சிய வுண்மை காட்டும் விண்ணினைப் பொருள தென்று வெண்மையி னிவந்த சாலி மண்ணினைப் பொருள தென்று பசுமையின் வணங்கி யம்மா | 62 |
83 | இறுதிவந் தடுத்த தோர்ந்தாங் கீண்டிய மணியும் பொன்னும் நறுவிரைச் செழுநீ ரோடு நலத்தகு மடையிற் போக்கி முறுகிய வன்பு பொங்க முதல்வன தடியிற் றாழ்ந்த மறுவற விளைந்து சால வயங்கிய தெய்வச் சாலி | 63 |
84 | முந்துற நிவந்த சென்னி மூப்புறச் சற்றே கோடிப் பிந்துற முழுதுங் கூனிப் பெருநிலக் கிடக்கை மாந்தர்க் கந்தியி னடுக்கு மாறுங் காட்டின நிவந்த சாலி சந்தியின் வணங்கிக் கூனித் தரையிடைப் படுத்து மாதோ. | 64 |
85 | விளைவினை நோக்குந் தோறும் விதுவினை மகவான் மெச்சுந் தளைதொறும் பதடி யொவ்வொன் றிருந்தன தவத்தி னுள்ளந் திளைதரு நல்லோர் மாட்டுஞ் சிதடர்சென் றுதிப்ப ரென்ன வளைகட லிடத்துச் சான்றாய் வயங்கிய தோற்றம் போலாம். | 65 |
86 | பறவையும் விலங்கும் பல்வே றுறவியும் பசியிற் றிர அறவினை நாளும் ஆற்றும் அகன்பணை விளைவு நோக்கி நறவுணு மகிழ்ச்சி துள்ள நலத்தகு நாளான் மள்ளர் மறவினைக் குயங்கை யேந்தி வளாவினர் வினையின் மூண்டார். | 66 |
87 | என்னணம் வளர்த்த யாமே யிறுத்துமென் றெண்ணல் வேண்டா நன்னெறிப் படுத்து கென்னா நாடொறும் வணங்கி நின்ற தன்னிகர் விளைவு கொய்து தலைத்தலை யிட்டுக் கட்டி வன்னிலைக் களத்தி னுய்த்து வானுறப் போர்கள் செய்தார். | 67 |
88 | அலம்படு கழனி தோறு மரிந்திடுந் திரளிற் றப்பி நிலம்படக் கிடந்த சூடு நித்தலும் பொறுக்கிச் சேர்த்தங் கிலம்படு மாந்த ரெல்லாஞ் செல்வரா யிருப்ப ரென்னில் நலம்பட விளைப்போர் செல்வ நவிற்றலாந் தகைமைத் தேயோ. | 68 |
89 | போரென்றுஞ் சூடி தென்றும் பொருவில்பல் லறமு மற்றும் பாரென்றுந் தழைய வாக்கும் பண்பினை யுடைய சாலிக் கூரென்று மொழிவ தாமோ வவ்வுரை யொழித்து மென்னாக் காரென்று கடுப்ப மள்ளர் கடாவிட லாயி னாரே. | 69 |
90 | முன்னுற நடந்து முந்துந் தொழிலினை முடித்த பூணி பின்னுற நடந்து பிந்துந் தொழிலையா முடித்தா மென்று முன்னுறத் தோற்றஞ் சான்ற முதலினைப் பூணிக் காக்கிப் பின்னுறத் தோற்று நெல்லைத் தமக்கெனப் பிரித்தார் மள்ளர். | 70 |
91 | பொங்கரித் திரளை யெல்லாம் பொள்ளென வாரிக் காற்றில் தங்கிய பதடி யோடத் தலைத்தலை தூற்றிக் கூப்பிப் பங்கமில் லரசற் குள்ள பகுதிதீர்த் தனைத்துங் கொண்டு துங்கவண் கூட்டுட் பெய்து தொல்லறம் வழாமை யுய்ப்பார். | 71 |
92 | தழைக்குநெல் விளைவு வாய்த்த தளையினெண் மடங்கு சான்ற கழைக்கருப் பினமும் பூகக் கானமுங் கதலிக் காடும் மழைக்குலந் தவழுந் தெங்கு மதுநுகர் தேனி றால்கள் இழைக்குநந் தனமு மஞ்ச ளிஞ்சியு மூர்க டோறும். | 72 |
93 | தண்ணடை யினங்க ளானுந் தழைத்திடும் பாடி யானும் புண்ணுடைப் படைக்கை வேடர் பொருந்திய சீறூ ரானும் மண்ணடை யுலகின் மிக்க வளம்பல தழுவி நாளும் விண்ணிடை யுலக நாண மிளிர்ந்தது கொங்கு நாடு. | 73 |
94 | வேறு மதியந் தவழுஞ் சையவரை வரைப்பிற் பிறந்த காவிரிநன் நதியந் தனக்கு நேர்கிழக்கி னடத்த லொழிந்து தெனாதுதிசைக் கதிகொண் டெழுந்த துயர்கொங்கு காணும் விழைவா லெனிலிந்தப் பதிகொண் டமர்ந்த நாட்டின்வளம் பகர்த லெளிதோ பண்ணவர்க்கும். | 74 |
95 | கருங்கட் கமலை மணிமார்பன் கதிய வுலகும் அயனுலகும் ஒருங்கு வரையின் சிறகரிந்தோ னுலகும் ஏனைச் சுரருலகும் மருங்கு வளைந்த நகர்வெல்ல வயங்கிச் சிவலோ கத்தின்வளம் நெருங்கும் பேரூர் வளஞ்சிறிது நிகழ்த்தி நிகழ்ந்த பிறப்பறுப்பாம். | 75 |
திருநாட்டுப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 95
-----------
96 | உரைத்தநாற் பயனுட் பெரும்பய னாய தொள்ளிய வீடஃ துறலால் தரைத்தலைப் பேரூ ரென்மர்கள் சிலரெத் தலத்தினுஞ் சாற்றுநாற் பயனும் நிரைத்தலிற் பேரூ ரென்மர்கள் பலரே நீடிய வாதிமா நகரை இரைத்தெழு கடல்போல் வளத்தினும் பேரூ ரென்மர்கள் பற்பலா யிரரே. | 1 |
97 | முள்ளரைக் கமலத் தயனுநா ரணனு முதிரொளி மோலிவா சவனும் ஒள்ளிய சுரரு மந்தரத் துறக்க மொழிந்துபன் னாளிடை விடுத்துண்டு எள்ளுறு மியக்க மிரண்டையு மடக்கி யிருந்தவ முயலுவ தெல்லாந் தெள்ளிய பேரூர் வளத்தினைக் காணுஞ் செய்தியைக் குரித்தல திலையே. | 2 |
98 | புடைநகர் செல்வம்வேட் டவர்பால் அளித்திடற் குரியதெய்வத மென்னுமா தர்களும் கல்விவேட் டவர்பா லளித்திடற் குரிய கலையணங் கென்னுமா தர்களும் வில்வளாய்க் கவினும் பதிவயிற் பல்லோர் விரசின ரென்றவர் தவிசாய் எல்விரா யொளிரு மலர்பல வணிந்த இலஞ்சியும் பொய்கையுந் தெரிக்கும். | 3 |
99 | வேறு கஞ்ச மீனி னங்க லாவு காமர் பொய்கை யோடைகள் எஞ்சு றாத ணிந்து தேவர் நாடி ருப்ப தாயினும் அஞ்சி லோதி யார்ந டைக்க வாவு நெஞ்சி றுத்தலால் அஞ்சம் யாவு மாங்கு வாழ்தல் அன்றி யந்த ரத்துறா. | 4 |
100 | ஆவி பொய்கை பண்ணை தோற லர்ந்த முண்ட கங்களுந் தூவி யன்ன முங்க டுப்ப தொக்கு வேத ரெண்ணிலார் ஓவி லின்ப மாந டத்தொ ருத்த னைதொ ழப்புகத் தாவி லாத னங்க ளூர்தி தாம்பு றத்தி ருந்தன. | 5 |
101 | காம னைக்க றுத்த கால கால னாடு மாநகர் தாமு மெய்த லாலு றுந்த ருக்கெ னக்கி ளர்ந்தன மாம யிற்கு லஞ்சு வாக தங்கள் பூவை வண்டுதேன் நேமி யம்புண் மற்று நீண்ட சோலை தோறி சைப்பன. | 6 |
102 | வன்னி கூவி ளங்க டுக்கை வாகை பாட லங்கடிக் கன்னி கார மாத்தி சண்ப கங்கு ராம ராவிளாப் புன்னை நாகம் வெட்சி நொச்சி பூங்கு ருந்து சந்தனம் இன்ன வான நந்த னவ்வ னங்க ளீட்ட மெங்குமே. | 7 |
103 | சாதி மௌளவன் முல்லை மாத விக்கு லங்கள் பந்தர்செய் பாத வப்பொ தும்ப ருட்ப டர்ந்து சேவ கங்கொளும் போத கங்கள் வெள்ளி பங்கள் போந்த வென்ற யிர்ப்புற போத கங்கு டைந்து தும்பி தாது குப்ப போர்க்குமே. | 8 |
104 | வேறு கிம்புரிக் கோட்டின கேழ்த்த செங்கண பைம்பொனின் ஓடைய பான கத்தின உம்பரும் விழையவே ழுயர்ந்த போதகம் பம்பிய கூடங்கள் பலவும் பாங்கெலாம். | 9 |
105 | விடுகணை பின்செல விசையிற் செல்வன படுகளத் தொன்னலர் பனிப்பப் பாய்வன கொடுமயிர்ச் சுவலின குரத்தெ ழுத்தின வடுவறு பரியின்மந் திரங்க ளெண்ணில. | 10 |
106 | ஆரடு குறட்டின வயம்பெய் சூட்டின போரடு திறத்தன புரவி பூண்பன தாரடு கொடியின சமைந்த வுள்ளின தேரடுத் துயர்ந்தன சேக்கை எண்ணில. 11 | 11 |
107 | வாளொடு பரிசைகை வயங்கு மீளிகள் தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள் நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள் தாளொடு போர்பயில் சாலை யெண்ணில. | 12 |
108 | கனைகுரல் வேழமுங் கவனக் கிள்ளையும் புனைமணி யிரதமும் பொருவி றானையும் இனையநாற் படையுறுப் பெனைத்து மாக்குறும் வினைஞர்தஞ் சேரிவெவ் வேறு வாய்ந்தன | 13 |
109 | வேறு கந்தடு கடக்கரி கடாவியமர் கற்குஞ் சந்தணி புயத்தவர் தழங்குமிசை யானுஞ் சுந்தர மணிப்படைக டோற்றுமொளி யானுங் கந்தர முகைத்துடலு மிந்திரர் கடுத்தார். | 14 |
110 | தரங்கநிரை யன்றிஃது தாவிவரு கின்ற துரங்கநிரை யென்னநனி தூண்டுபரி வீரர் குரங்குளை மணிப்புரவி கொண்டம ருடற்றும் அரங்கமலி கின்றவள கைக்கிறைவ ரொத்தார். | 15 |
111 | சடசட வொலிப்பவுருள் சக்கர மழுந்திப் புடவிகுழி யக்கடவு போர்ச்சகட மள்ளர் சுடரிரத மூர்ந்துபல சூரியர்க டம்முள் அடலமர் குறித்தவரை யையென நிகர்த்தார் | 16 |
112 | ஓச்சுநெடு வாளெறியி னுய்ந்தெதி ரெறிந்தும் மீச்சென்மணி வேல்புடை விலக்கியெதி ருய்த்தும் மேச்செறி வறுத்தெதிர் தொடுத்துமிகல் வெய்யோர் பூச்செருகி விஞ்சையர் புகழ்ந்திட மலைப்பார். | 17 |
113 | அடையல ருளஞ்சுழல வாறுபடை யுஞ்சூழ் புடைநகர் வளஞ்சிறிது பொற்புற மொழிந்தாம் உடையவர்க ளும்பரென வுற்றுநல னாரும் இடைநகர் வளஞ்சிறி தெடுத்தினி யுரைப்பாம். | 18 |
114 | இடைநகர் வேறு அளிதுன்றிய வுய்யானமு ம்வற்றூடலர் பம்பிக் குளிர்தங்கிய தடமுங்குளிர் பொய்கைக்கரு கெல்லாம் புளினங்களுஞ் செய்குன்றமும் புத்தேளிரு மேவும் ஒளிபில்கிய மணிமேடையு முலப்பில்லன வுளவால் | 19 |
115 | பஞ்சாடிய வடிகட்கிடை பனிமென்றளிர் தாங்கி எஞ்சாதெழு முலைகட்கிடை யிணரும்படு தாரு வஞ்சாதருள் பெறநின்றன வலர்பூந்தட மாடு மஞ்சார்குழ லியர்நல்கிய மணிவானிழை சுமந்தே. | 20 |
116 | இழையாலல திளையார்க்கழ கில்லென்றிறு மாந்த குழையாடிய கொம்பேந்திய கொங்கைக்குல மடவார் இழையாவணி யிழைதாங்கியு மிளிருற்றவர் நேராப் பிழையாலுள நாணித்தலை பெரிதுங்குரங் கினவே. | 21 |
117 | கணைவென்றகண் மடவார்புனல் கலவித்துளை தோறுந் துணைமெல்லடி படியும்புனல் தோய்ந்தாமென நடையின் பிணையன்னமு முலைதோய்புனல் பெற்றாமென முலையின் இணையுன்னிய நேமிக்குரு கினமுங் களிகூறும். | 22 |
118 | இயலாலின மெனவோகுழ லிருள்கூர்கன மெனவோ வியலாநடை பயிறற்கருள் விளையும்வகை குறித்தோ செயன்மாண்டொளிர் மணிமேடையுஞ் செய்குன்றமும் விரசுங் கயனீள்விழி யவர்காணிய களிமா மயிலாலும். . | 23 |
119 | வெயில்பம்பிய பூணார்விளை யாடும்பொழி லிதனுட் பயில்கின்றனம் அவரின்புறு பண்பேசெயன் முறையென் றுயிரன்னதொர் பெடையோடளி யொண்கிள்ளைகள் பூவை குயிலின்னன வமிழ்தத்திசை குயிலுஞ்செவி குளிர. | 24 |
120 | சுணங்குக்கிணை யாகச்சுட ரழனின்றொளிர் பொன்னை நுணங்கப்பொடி செயவோச்சுநுண் ணிடையார்கர முசல மிணங்கத்தலை மற்றொன்றினௌ முலைநேரிள நீரை உணங்கச்சித றுபுமாதரை யுவகைக்கட னிறுவும். | 25 |
121 | வேறு சந்த ணிந்த பூண்முலை தம்மை நேர்வ தாமென முந்து றுத்தொ றுப்பபோன் முகத்து முத்த ரும்புறக் கந்த மாலை சோரவார் கதுப்பு யங்க மாதரார் பந்த டிப்ப நோக்குவார் பதிந்த நெஞ்ச மீட்கலார். | 26 |
122 | பங்க யப்ப ரப்பிடைப் பமரம் வீழ்வ போன்றுலாஞ் செங்கை யம்ம னைப்பினர்ச் செல்லு மாத ரார்விழி அங்க வற்றி னூடுலா மாட வர்க ணோர்முறை கொங்கை தோன்ற வங்கணே குளித்து நிற்கு மோர்முறை. | 27 |
123 | செழும ணிக்கு தம்பைகள் செவியி னூச லாடுற முழும டற்க முகிடை மூட்டி விட்ட வூசலைத் தழுவி யாடு மாதரார் தம்மை யண்மி நோக்குறின் வழுவி லார்கள் சிந்தையு மாலி னூச லாடுமே. | 28 |
124 | கண்ணி னீரு றைத்துகக் கலாய்த்தி ரங்கு மந்நலார் வண்ண வாடை கொண்கனார் வலிந்து வாங்க மாமணிச் சுண்ணம் விட்டெ றிந்துநீள் சுடர விப்ப வப்பொடி நண்ணொ ளிக ஞற்றலு நாணி யோதி தாழ்த்துவார். | 29 |
125 | கழற்று றாத காதலர் கலன்றொ றுந்த மதுரு நிழற்ற நோக்கி மாற்றவர் நிரந்த ரித்து ளாரென வழற்று ளத்தி னார்களை யவர்க லன்றொ றுந்தம துழற்று ருச்சு வட்டினை யுணர்த்தி நக்க ணைப்பரால். | 30 |
126 | மாழை நோக்க ணங்கனார் மகிழ்நர் தம்மொ டாடிய தாழை வாளு டையினான் றனாது நூற்சு வைத்திறம் பூழை வைத்து வாண்முகம் பொற்ப நோக்கிக் கூட்டினுட் கூழை நாக்கி ளிசொலக் கொம்பிற் பூவை கற்குமே. | 31 |
127 | சாந்த மான்ம தங்களுந் தபனி யப்பொ டிகளுங் காந்து பன்ம ணிகளுங் கமழ்ந்த தொங்க லீட்டமும் பூந்து ணர்த்தி ரள்களும் பொற்ப மல்கு காட்சியான் மாந்தர் வைகு மண்கொலென்று வானு ளார யிர்ப்பரே. | 32 |
128 | இலங்கெ ழிற்று றக்கமு மிடைந கரெ னப்படத் துலங்கெ ழிலி டைநகர்த் தோற்ற மீத றைந்தன மலங்க னீர்க்கி டங்கு சூழ்ந்த ரற்ற நொச்சி யோங்கிய நலங்கி ளர்ந்த வுண்ணகர் நன்மை தன்னங் கூறுவாம். | 33 |
129 | உண்ணகர் வேறு அவுணர் பேய்க்கண மவமர ணத்தவ ராரிரு ளிவையென்றுஞ் சிவண வோர்புறத் திளிவரு நேமியஞ் சிலம்படுத் ததுநீங்கிப் புவனம் போற்றுற நின்றதே போன்மதில் புறக்கட லிருண்ஞாலம் துவர நீத்தத னுடங்கடுத் திருந்ததே சூழ்ந்ததண் கிடங்கம்மா. | 34 |
130 | அடங்க லாருயிர் குடிப்பன தானையு மாடலம் பரிமாவுங் கடங்க ளூற்றிய குஞ்சரத் திரள்களுங் கவின்றதேர் களுமல்ல கிடங்கி னூடுலா மிடங்கருந் தாமரைக் கேழ்த்தமுள் ளரைத்தாளு மடங்கு றாதமர் பற்பல புரிந்தடு மதிற்பொறிகளு மாதோ. | 35 |
131 | பெருவ னப்பினாற் றுழனியாற் சுவையினாற் பெருகிய மணத்தாலெவ் வுருவு மின்புறு மூற்றினான் மலர்க்கரங் கோடரித் தடங்கண்ணார் பொருவ வைவகைப் பொறிகட்கு நுகர்ச்சியாய்ப் பூவைய ருளமேபோன் மருவு வஞ்சமுங் கொடுமையு மாழமும் வரம்புறக் காட்டாதால். | 36 |
132 | போதி யம்பலத் திருநட மாலொடு போந்துகண் டிணர்த்தில்லைச் சோதி யம்பலத் தாடலு மிருந்தவா தொழுதுகண் ணுறக்காண்பா னோதி யம்புவி தாங்கினோ னுடல்வளைத் துயர்த்திய சிரமேபோன் றாதி யம்புரி மதின்மிசைக் கோபுர மைதுவீற் றிருந்தன்றே. | 37 |
133 | ஓங்குமா டத்தி னுயர்வற வுயர்ந்தகோ புரத்தின்மே னிலமெல்லாம் தூங்கு வீங்கிருட் பிழம்புவாய் மடுத்துணுஞ் சுடர்மணி விளக்கங்கள் ஆங்க வான்மிசை யுயர்த்திய சேடனா ரரித்தடந் தலைச்சூட்டின் நீங்கு றாதொளி கஞற்றிய மாணிக்க நிரையென விறைகொள்ளும். | 38 |
134 | ஒளிநி லாவிய மதிள்மிசை யுயர்த்திய வொண்டுகிற் கொடியெல்லாம் வளியி னாட்டயர் வனநெடுந் துறக்கமார் வளத்தினை யெதிர்நோக்கித் தெளிநி லாவிய விந்நகர் வளத்தினைச் சிறிதுமொவ் வாதென்றே குளிரு நீர்ப்புவி தெளிதர முடித்தலை குலைத்துநிற் பனபோன்ற. | 39 |
135 | நாக வைப்பினைத் தலைப்படும் அகழியும் நாமவிஞ் சியுஞ்சொற்றாம் தேக மற்றவன் கணைகளி னலிபவர் திருவெலா முறவாங்கி யேக மற்றவெண் ணிரண்டுறுப் பினுளமு திருக்கையோர்ந் தினிதூட்டிப் போக வைப்பெனப் புணர்பவர் சேரியின் பொற்பினி யுரைப்பாமால். | 40 |
136 | பரத்தையர்வீதி வேறு அடுத்தெதிர் நோக்கினா ரறவ ராயினும் கடுத்தலைக் கொண்டெனக் காம மீக்கொள வெடுத்தபித் திகைதொறு மிலேகித் திட்டனர் வடுத்தபு கலைச்சுவை வயங்கச் சித்திரம். | 41 |
137 | தெள்ளிய கலைஞருஞ் சிறப்பென் றுட்கொள வுள்ளுரு கமளியி னுஞற்று மொண்பொருள் கிள்ளையும் பூவையுங் கிளந்து வாதுசெய் பள்ளியு மைம்பொறி பறிக்கு மென்பவே. | 42 |
138 | சுண்ணமும் நறுமணத் தொங்க லீட்டமுங் கண்ணிய துகில்களுங் கலனும் வார்மது நண்ணிய தண்டுநற் கலவைச் செப்புங்கொண் டண்ணலம் வேதிகை யாவி மாய்க்குமே. | 43 |
139 | முழாவொலி குழலொலி முறைசெ யாடலும் எழாலிசை குரலிசை யெழுப்பு பாடலுந் தழான்மனை யிரதியுந் தானுங் காமவேள் விழாவயர் களமென விளங்கும் வைகலும். | 44 |
140 | ஆவிவந் தஃதென தாவி வந்ததென் றோவிய மனையவ ரொல்கிக் கொண்டுபுக் கேவியல் விழிகளா லிளக்கி நெஞ்சகம் பூவிய லணைமிசைப் போக மூட்டுவார். | 45 |
141 | போதுக ளாடிய பொம்ம லோதியர் சூதுக ளாடியுஞ் சுவைத்த காம நூல் வாதுக ளாடியு மருவி யாடியும் மாதுக ளாடவர் வாகை தீர்ப்பரால். | 46 |
142 | மனைவியை வெறுத்து மைந்தர் வளநில மனைத்து நல்கி நினைவொடு வாக்குக் காய நித்தலுந் தம்பா லாக்கத் தனைநிக ரில்லா வின்பந் தருதலாற் கணிகை மாதர் வினைநிகர் புதல்வர்த் தாழ்த்தி வீடருள் குரவர் போன்றார். | 47 |
143 | உறுப்பினுட் குறைவு மின்றி யுரிமையொன் றேற்ற மாகத் துறுத்தநெஞ் சுடைய வில்லிற் றுணைமுலை மாதர் தம்மை வெறுத்தெறுழ் மைந்த ரெல்லாம் விழைதகு பால ரென்றால் கறுத்தகட் கணிகை மாதர் காரிகை யுரைக்கற் பாற்றோ. | 48 |
144 | காமவேள் கலையி னானுங் காரிகைத் திறத்தி னானும் தூமமார் குழலி னார்க்குத் தோற்றுவிண் ணொளித்தா ரெல்லாம் நாமளா மனத்த ராகி நானிலத் தின்று காறும் வாமமார் மலர்மென் பாதம் வைத்தில ருருவுந் தோற்றார். 49 | 49 |
145 | ஒருவர்வா யடுத்த தம்ப லொளொர் பவள வாயின் மருவிவா னமுதாய் மற்று மடுத்தவர் வாயிற் புக்குப் பெருமகிழ் வுறுத்த லாலே பிறங்கிய வரைவின் மாதர் பொருவின்மந் திரத்தி னாக்கும் புனிதவெந் தழலே யொத்தார். | 50 |
146 | செவ்வணிச் சேடி மாரும் வெள்ளணிச் சேடி மாரும் கௌளவையம் பறைகளார்ப்பக் கடைத்தலை முற்ற வைகும் வெவ்விழி மாத ரின்பம் விலைசெயுஞ் சேரி யீதால் எவ்வமில் பொருள்கள் விற்கு மெழில்கொளா வணங்கி ளப்பாம். 51 | 51 |
147 | கடைவீதி வேறு பாட்டளி கெண்டிச் சுலவும் பன்மலர்த் தொங்கல்க ணாற்றிச் சேட்டொளி வச்சிரச் சட்டந் திண்பவ ளத்திரள் காலில் பூட்டியு யர்த்தி நிறுவிப் பூகமும் வாழையும் யாத்துத் தோட்டலர் சிந்தி மெழுகித் தூமம் பயின்ற கடைகள். | 52 |
148 | நித்திலக் கோவைமா ணிக்க நெடுந்தொடை நீலத் தொடையல் வித்துரு மத்தின் பிணையல் வில்லுமிழ் கோமே தகத்தின் கொத்தும ரகத மாலை கோப்பமை புட்ப ராகங்கள் வைத்தவ யிரமு மற்றும் வானவி னாணமுன் யாத்தார். | 53 |
149 | இருவினை யாலிருண் மூழ்கும் எண்ணி லுயிரும் பெருமான் கருணையின் நல்கும் உடலிற் கதித்துவெவ் வேறுகன் மங்கண் மருவிவ ளர்ப்பன போல வணிகர்கள் பொற்குவை கொண்டு பொருள்கள் வெவேறு தமக்குப் பொருந்துவ வீட்டுவர் நாளும். | 54 |
150 | வரையிற் பொருள்பெரி தென்கோ வனத்திற் பொருள்பெரி தென்கோ குரைபுனற் பூம்பணை மாட்டுக் கொண்ட பொருள்பெரி தென்கோ திரைதவழ் வேலைத் துறையிற் றெவ்வும் பொருள்பெரி தென்கோ நிரைநிரை யாக வளங்க ணிறுத்த நியமத்தின் மாதோ. | 55 |
151 | தழைத்த கருமக் கியையத் தனுகர ணாதிய ளிக்கும் குழைத்த கடுக்கைச் சடிலக் குழகன் றிருவருண் மான இழைத்த குருமணி மாடத் தீண்டிய வெவ்வெப் பொருளும் மழைத்தடந் தோளின் வணிகர் வருவிலைக் கேற்ப அளப்பார். | 56 |
152 | முன்னொன் றறைந்துபின் னொன்றா மொழியு மதங்கள்போ லாது பின்னர்க் கிளப்பது முன்னர்ப் பேசுபொ ருட்குமா றின்றி மன்னுறு சைவசித் தாந்த வாய்மை நிகர்ப்பப்பின் வேறு சொன்னிகழ்த் தாமை விலையைத் துணிந்தறுப் பார்துலைக் கோலார். | 57 |
153 | செந்தமிழ் நாட்டுறை வோருஞ் சேர்ந்த கொடுந்தமிழ் நாட்டின் வந்திடு பன்னிரு வோரு மற்றைய தேயத்துப் பாடை தந்திடு மீரொன் பதின்மர் தாமுந் தலைமயக் குற்றாங் கெந்தவு லகிது வென்ன யாரையு மையத் துறுத்தும். | 58 |
154 | வாரணம் விற்குந ரோர்பால் வாம்பரி விற்குந ரோர்பால் தேரணி விற்குந ரோர்பால் செறிபடை விற்குந ரோர்பால் தாரணி விற்குந ரோர்பால் சந்தனம் விற்குந ரோர்பால் தோரண மல்கு நியமச் சுந்தரம் யார்சொல வல்லார். | 59 |
155 | பிண்டியு நோலைத் திரளும் பிட்டு மவலும் சுவைகண் மண்டு களிநெய் மிதந்த வருக்கமும் பாகும் விராவிக் கொண்ட வறையல் பலவுங் கொண்முத லான புழுக்குங் கண்டிடு முன்மண நாசி கலாய்ப்புன னாவிடை யூறும். | 60 |
156 | வருக்கைச் சுளைமாங் கனிகள் வாழைப் பழமிவை முற்றும் முருக்கொ ளிரோட்டத் தமுதின் மொய்ச்சுவை தோற்றவல் லாவென் றொருக்கு விலைசெயு மாத ரொண்பொரு ளோடுரு நோக்கிச் செருக்கிய மைந்த ருயிருந் தெவ்வுவர் பின்விடல் வல்லார். | 61 |
157 | பொன்னணி வெள்ளி யணிகள் போற்றவு லோகக் கலன்கள் என்னவு மில்லையென் னாமே யீந்திடு மாவணஞ் சொற்றாம் மன்னிய செல்வப் பெருக்கால் வானவர் வைகுபொன் னாடு வெந்நிட வென்று விளங்கும் வீதியின் வண்ணம் விரிப்பாம். | 62 |
158 | மற்றைய வீதிகள் வேறு பனவர் மன்னவர் வணிகர்சூத் திரரிவர் பயின்றிடு மணிவீதி அனகன் மந்திரத் தணிமதிற் புறத்தன வவற்றய லனநான்கென் றினிது சொற்றசா திகடம்மு ளுயர்ந்தவுங் கலந்தீன்ற புனித மில்லவர் தத்தம தொழுக்கொடு பொருந்திவாழ் மறுகன்றே. | 63 |
159 | தென்ற லூடுவந் தசைதரு பந்தருஞ் செறிந்தபந் தரினுள்ளால் துன்று மாமணி வேதிகை யொழுக்கமுஞ் சுடர்ந்தவே திகையெங்கும் ஒன்று பூரண கும்பமும் வயின்வயி னுயர்த்திய கொடிக்காடும் நின்ற வார்கொடி யருகெலாந் தோரண நிரைகளுந் தெருத்தோறும். | 64 |
160 | வழுவை வாம்பரி மணிநெடுந் தேர்சனம் வழங்கலி னெடுவீதி புழுதி யாடுவ வொருமுறை யொருமுறை பொருகரி பரிதேர்பொன் முழுது மாடவ ரளித்தளித் தொழுக்கிய முதுக்குறைந் தோர்செங்கை யொழுகு தீம்புன லத்துக ளவிப்பன வொருதினம் போனாளும். | 65 |
161 | வேறு. நச்சுறழ் விழியிற் றீட்டின ருகுத்த நலத்தகு மஞ்சனக் குழம்பும் வெச்செனப் புலந்து சிதறிய கலனும் விராவிய வீதியி னவைதாம் எச்சிலென் றறிந்தோ பிறர்மனை யவர்பா லிணங்கிய வவற்றையுந் தொடுதற் கச்சம துற்றோ வறிந்தில மெவரு மடிக்கழல் தொடுத்தலால் வழங்கார். | 66 |
162 | செதுமகப் பயத்த லொருமகப் பயத்த றிலகவா ணுதலியர்ப் பயத்தல் எதுவுமின் றாக விருத்தலென் றறிந்தோ ரியம்புநான் மலடுமங் கின்றிப் புதுவதி னியற்ற வணிகல னணிந்து பூவையர் குதுகலந் தழுவ வதுவைக ளயரு மதுரமங் கலமே வைகலும் வளமனை தோறும். | 67 |
163 | வருந்திய வேனில் வருபுனற் கெதிரு மள்ளரின் மனமகிந் தடுத்த விருந்தெதிர் கொண்டு மலர்முகத் தினிமை விராவிய குளிர்மொழி கொடுத்துத் திருந்தறு சுவையி னால்வகை யுண்டி தேக்கெறி தரநனி யூட்டிப் பொருந்திய திருவிற் கியைவன பிறவும் புகன்றளிக் குநரவ ணெவரும் | 68 |
164 | உரம்பெறு பிரம சரிவனத் துறைவோ ருலகனைத் தையுமற நீத்தோர் பரம்பரன் றெனாது புலத்தவர் விருந்து பசையுடை யொக்கன்மன் றுறந்தோர் அரம்புசெ யிலம்பாட் டினரிறந் தாரென் றையிரு வரையுநன் றோம்பி வரம்பெறு தமைப்பி னோம்புந ரல்லா தவர்மனை யறத்தவ ணிலரே. | 69 |
165 | பஃறிறத் தானு மழிதரு பொருளைப் பன்முறை யிரந்துகை யேற்றுச் சிஃறிறத் தானு மழிதரா வுடலுந் திப்பிய கதிகளுஞ் செறிக்கும் நஃறினத் தினரா லிவரிவர் போல நமக்குரி யாரெவ ரென்னா விஃறிவள் பூணா ரிரப்பவர்க் கெனைத்தும் வீசலே விருதென வுடையார். | 70 |
166 | தங்குல தெய்வ மல்லது தேவ சாதியொன் றையும்பணிந் தறியார் சிங்குத லறியா வன்பினாற் கணவன் சேவடி தொழுதெழு திறத்தார் இங்குறை பவரென் றிறைஞ்சுதல் போல விரவியு மதியுந்தாழ்ந் திறப்பக் கொங்குறை குழலார் பயிலுமே னிலையுங் கூடகோ புரமும்விண் ணிவந்த. | 71 |
167 | குங்குமப் பனிநீர் சிவிறியின் வாங்கிக் குலவுத்தோ ளாடவர் குலமும் மங்கையர் குலமும் பனித்தெதி ராட வயங்குமப் புனன்மணி வரன்றித் துங்கமே னிலையின் மேடைநின் றிழிவ சுரர்தொழு மேருமால் வரைநின் றிங்குலி கத்தின் விராய்மணி சிதறி யிழிதரு மருவிபோன் றனவே. | 72 |
168 | வேறு பளிக்கு மேனிலத் திற்பயின் மாதரார் வெளிக்கண் நின்றவர் போன்று விளங்கலால் களிக்கும் வானர மங்கையர் காண்கெனத் தெளிக்க லுற்றன ராற்சில ரைச்சிலர். | 74 |
169 | தலைவர் தோள்புணர் தையலர் வாண்முக மலரி னொள்ளொளி வௌளவுதற் கன்றுகொல் கலைம திக்கதிர் காலத ரூடுபோய் உலவி யல்லதப் பாலொழி வில்லதே. | 74 |
170 | கற்பி னார்மழை பெய்வது காண்பவென் றற்பி னாலவர் பாலண்மு சாதகம் பொற்ப வோதிப் புயல்கண்டு போக்கொரீஇப் பற்பல் காலமும் பாடுவ மாடெலாம். | 75 |
171 | துணைச்ச கோரஞ் சுதைகொளத் தன்னிடை அணைத்தெஞ் சாம லவிர்மதிக் கோர்பெயர் இணைக்க ணானன மென்றனர் விண்ணிற்போய்ப் பணைத்த திங்களைப் பாற்றுதற் காய்ந்துளார். | 76 |
172 | செண்ண வஞ்சிலம் போசையுந் தீஞ்சொலால் வண்ண மேகலை வாய்விடு மோசையும் பண்ணை வண்டின் படர்குர லோசையும் அண்ணன் மாடம் அறாவிர வத்துமே. | 77 |
173 | பிழிம கிழ்ந்திடு பெய்வளைத் தோளியர் கழிசி றப்புறக் கவற்றலிற் காமவேள் ஒழிவு செய்தில னொண்கணை யேவிய பழியி ராப்பக லுஞ்செய நிற்குமே. | 78 |
174 | புகரி லாவற மும்பொரு ளாகமும் பகலெ லாம்பல வாற்றினு மீட்டுவார் மகர வார்குழை மைந்தரி ராவெலாம் பகருங் காமப் பயன்பெரி தீட்டுவார். | 79 |
175 | ஆது லர்க்கும் அறுசம யத்தர்க்கும் ஓது வார்க்கும் உணவு பெருக்கிய ஏதி லாவன்ன சாலையு மேனைய தீதில் சாலையுஞ் செப்பவொண் ணாதரோ. | 80 |
176 | பாவ லர்பலர் சூழ்தரப் பண்பொடு நாவ லர்க ணயந்துநன் னூறெரிந்து ஓவி லின்ப வுததி படிதருந் தாவி லாக்கழ கந்தலை தோறுமே. | 81 |
177 | ஊழ்விச் சாவன வோட மறையுளி சூழ்விச் சைகலை வேதியர் துன்னுபு வாழ்விச் சாதரர் வாழ்த்துமுத் தீவளர் வேழ்விச் சாலை விளங்கு மிடந்தொறும். | 82 |
178 | சரியை யோரிரண் டுந்தவி ராதவர் கிரியை யோரிரண் டுங்கெழு முற்றவர் உரிய யோக மிரண்டுமு ஞற்றுநர் மரிய தூய மடங்கள னந்தமே. | 83 |
179 | மூன்று பாழுமு றையினி கழ்ந்தறத் தோன்று மேலைசு கப்பெரும் பாழிடை ஏன்ற வாழ்வினி தென்ன விருப்பவர் ஆன்ற மாமட மும்பல வாங்கரோ. | 84 |
180 | விண்ணு ளாரும் விளம்பவல் லேமெனும் வண்ண வீதி வளஞ்சொலின் முற்றுமோ எண்ணில் வீதியுஞ் சூழ்ந்திமை யோர்தொழும் அண்ணல் கோயி லணிசில கூறுவாம். | 85 |
181 | திருக்கோயில் வேறு வேத நாடருந் தனிப்பொருள் விளங்குமிந் நகர்மேல் ஏத மாம்வகை யேகன்மின் என்றிமை யாரைக் காத லாற்புடை விலக்குவ போன்றுகற் கதிர்க்கும் மாதர் வாண்மதில் வானுறப் பலநிவந் தனவால் | 86 |
182 | மின்னு மாமதி விளங்கிய விமலர்தூ வியின்பாற் பொன்னி னாலிர சதத்தினாற் புரையறு மணியான் மன்னு மாடங்கள் தயங்குவ வயங்குமே ருவின்பால் துன்னு நாலிரு குலகிரி துலங்குவ போன்ற. | 87 |
183 | ஏக நாயகற் கினிதுறத் திருவமு தமைக்கும் மேக மேற்றவழ் மடைப்பள்ளி வீங்குகுய்ப் புகையும் யாக சாலையிற் புகையுமீண் டலினிரு நிலத்தோர் மாகர் போலிமை யாதவ ராகலர் மாதோ. | 88 |
184 | அரச சீயத்தின் குரலெழுந் திசையணு காமை விரசு வேழங்கள் நீளிடை விலகியாங் கிறைவர்ப் பரசு வார்வினை சேயிடை முழுவதும் பாற முரச மார்ப்பன மூவிரு காலமு முகிலின். | 89 |
185 | விண்ணின் நின்றொளி ருடுவெலாம் வினைச்சமம் பிறந்து மண்ணி மும்மலச் சேற்றினை மலரடித் துணைக்கீழ் நண்ண வெம்பிரான் றிருமுன்னர் நண்ணிய தென்ன எண்ணில் பன்மணி விளக்கிடை யறாதிமைப் பனவே. | 90 |
186 | தரும மாற்றுநர்க் கல்லது சந்நிதிச் சார்விங் கருமை யாமென வனைவரு மறிந்தன ருய்யத் தரும மேயுரு வாகிய தனிவிடை யுயர்த்த உருவ வார்கொடி திருமுன்னர் விசும்பறுத் தோங்கும். | 91 |
187 | உருவம் யாதெடுப் பினுமந்த வுருவினை யிருவர் துருவ யாவது மறிகலான் றொழும்பிடைப் படுத்தல் பொருள தாமெனப் புவியுளோர் தெளிந்துயச் சித்த தருவி டாதிறை முடிமிசை மலர்பல சாத்தும். | 92 |
188 | பவளத் தூண்மிசைப் பசுமணி யுத்திரத் தொளிகள் திவளப் பாய்த்திய வச்சிரப் பலகையிற் செறித்துத் துவளத் தூக்கிய நவமணி மாலைகள் துலங்குந் தவளத் தேசினற் றபனியக் கோயிலொப் பிலதே. | 93 |
189 | தெனாது திக்கின னரசறத் தேவர்க டேவன் தனாது விண்ணகந் தழைதரத் தரைமகிழ் சிறப்ப மனாதி மூன்றினு மாதிசை வர்கள்வழி படமற் றனாதி சைவர்வீற் றிருந்தன ரருட்கொடை வழங்கி. | 94 |
190 | இனிது தேவர்கள் யாரையு முறுப்பிடை யடக்கிப் புனிதம் யாவையுந் தருபொரு ளைந்தையும் பூக்கும் முனிவி லானினங் கிடந்தருள் முழுப்பயிர் தழைக்கும் மனிதர் தேவர்சூழ் பட்டியின் பெருமையார் வகுப்பார். | 95 |
191 | விமல நாயகன் விண்ணவர் நாயகன் விடைத்த சமலர் காணருந் தத்துவ நாயகன் நடஞ்செய் தமரு நாயக னருளினா லாங்கவன் பேரூர்க் குமரி மான்மியங் கூறுவல் வினைப்பகை குமைப்பேன். | 96 |
திருநகரப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 191
=================
192 | கடலமிழ் தெடுத்து மாந்துங் கடவுளர் குழாங்கள் நாளும் உடனுறைந் தவியின் பாக முண்பது போலும் வையத் திடர்தபத் தவங்க ளாற்றி யிருடிய ரின்னல் வாழ்க்கை நடலைவே ரகழா நிற்கு நைமிசக் கான மன்றே. | 1 |
193 | முறுகிய வன்பு பொங்க முறைமுறை வளர்க்கும் வேள்வி நறுமணப் புகைகள் பொங்கி நாகர்வா ழுலகிற் கற்பத் துறுசிறைச் சுரும்ப ரோப்பி யுலாவுதல் அறியா ரெல்லாம் மறுவறு கற்ப கத்து மலரின்வண் டுறாதென் பாரால் | 2 |
194 | பிழைதபு தேவர்க் கெல்லாம் பெரும்பசி தவிர்த்த லானும் மழைவளஞ் சுரந்து மண்ணின் மன்னிய வுயிர்கட் கெல்லாம் தழைபசி தவிர்த்த லானுஞ் சகமொரு மூன்றுங் காக்கும் விழைதரு செவிலித் தாயின் மிளிர்வ தாலனைய கானம். | 3 |
195 | செருத்தலா னார்த்த யூபத் திரளினை நோக்கி யந்தோ வருத்துவ திவற்றை விண்ணோர் வன்பசி தவிர்த்தற் கன்றே உருத்தகு மனைய தேவர்க் கூட்டுதும் யாமு மென்னாக் கருத்துற வடிசி லூட்டக் கற்றது காமதேனு. | 4 |
196 | பறவைகள் யாத்த யூபம் பசுத்தகர் யாத்த யூபம் உறமணிக் கமடம் யாத்த யூபமும் உம்ப ரூரும் பறவையும் விலங்கு நீர்வாழ் சாதியும் பார்த்துப் பார்த்திவ் வறவினை கிடைத்த தின்றே நமக்கென வகத்துட் கொள்ளும். | 5 |
197 | பராய்ப்பணி முனிவ ரானும் பண்ணவர் பயிற லானும் இராப்பக லிறப்பத் தேவர் கலன்கதி ரெறித்த லானும் விராய்புகை தவழ வண்டு விலக்கிய தருக்க ளானும் உராய்ப்பொழி பசுந்தேன் கற்பத் துலகொடு பொருமக் காடு. | 6 |
198 | திரைதவழ் மணிப்பூம் பொய்கைத் தீர்த்தங்க ளணிந்து பொன்னம் வரைசிலை யாக வாங்கி மதிலொரு மூன்றும் வென்ற அரையனுக் கிருக்கை யாகி யருந்தவர் கருத்து முற்ற விரையநல் கிடுமக் கானப் பெருமையார் விளம்ப வல்லார். | 7 |
199 | உவாவள ரனைய கானத் துறுகலி யுகத்தை யஞ்சித் துவாபர யுகவந் தத்திற் றொக்கனர் தவங்க ளாற்றும் அவாவறு வசிட்டர் வச்ச ரகத்தியர் வாம தேவர் தவாதநல் லொழுக்கஞ் சான்ற சவுனக ராதி யானோர். | 8 |
200 | பரவிய ஆண்டு நூற்றுப் பத்துற முடிவு செய்யும் பிரமசத் திரயா கத்தைப்பேணிநர் வளர்க்க லுற்றார் கரவறு மனைய யாகங் காணிய வாங்காங் குள்ள வரமுறு முனிவர் தாமும் வந்தனர் தொக்கா ரன்றே. | 9 |
201 | வேதங்க ளனைத்துந் தேர்ந்த வியாதமா முனிவன் பாங்கர்க் கோதறு புராண மெல்லாங் குறைவற வுணர்ந்து முக்கண் நாதனை யுளத்தி னாட்டி நாவினைந் தெழுத்துந் தீட்டும் சூதமா முனியு மந்தத் தூத்தவக் கானம் புக்கான். | 10 |
202 | வேறு புக்க சூதனை யிருந்தமா தவத்தோர் பொங்கு காதலி னெதிர்கொடு வணங்கித் தக்க வாதனத் திருத்தினர் பூசை சால வாற்றினர் பழிச்சினர் மொழிவார் மிக்க மாதவம் புரிந்தன மடிகேள் விளைத்த மாதவப் பயனதாய் வந்து கைக்க ணாமல கக்கனி போலக் காட்சி தந்தனை கருணையா லெமக்கு. | 11 |
203 | கருவி மாமழை யெழுந்துநீர் பொழியக் கலதி வேனிலி னுருப்பமங் குளதோ பருதி நாயக னெழுந்தொளி கஞற்றப் பாயி ருட்படா மறாமையு முளதோ பொருவில் வானமிழ் தெய்திடச் சாதல் போவ தல்லது புணர்வது முளதோ மருவி நீதருங் காட்சியாற் கேள்வி வறுமை நீங்குறா திருப்பது முளதோ | 12 |
204 | உரைத்த வொன்பதிற் றிருபுராணத்துள் உலப்பில் சீர்ப்பிர மாண்டத்திற் சிறப்ப விரித்தி டுங்கெள மாரசங் கிதையில் விளக்க மாண்டநற் குமாரகண் டத்தில் நிரைத்தி டுஞ்சிவ தலங்களின் மேலா நிகழ்த்து மாதிமா புரத்தின் மான்மியத்தைத் தெரித்தல் செய்தனை முந்தொரு ஞான்று செம்ம லேதெரிந் திட்டன மேனும். | 13 |
205 | காதன் மங்கையர்ப் புணர்தொறும் புணர்ந்த காமு கர்க்குளம் அமைதரா விழைவங் காத றிண்ணமற் றதுவெனப் பேரூ ரமல நாயகன் காதைகேள் வியினெம் பேதை நெஞ்சக மமைந்தில வதனாற் பெரும வின்னுநீ பேசுதல் வேண்டும் ஏத மற்றடி யேங்கதி யடைய வெனவி ரந்தடி தொழுதனர் மீட்டும். | 14 |
206 | முனிவர் தம்முளப் பரிவினை நோக்கி முகம லர்ந்தருள் சூதமா முனிவன் இனிது கூறுவன் கயிலைவீற் றிருந்த வெம்பி ரான்சயி லாதியைத் தெளித்தான் புனித நந்திவேற் குமரனுக் குரைப்பப் புலவு வேலவ னாரதற் களித்தான் துனிவி லன்னதை வியாதமா முனிவன் சுரந்த பேரரு ளாலெனக் களித்தான். | 15 |
207 | தெள்ள வின்னமு தாகிய மேலைச் சிதம்ப ரேசர்த மான்மிய மிதனைக் கள்ள வைம்பொறி கடந்தவர்க் கன்றிக் கரிசு ளார்க்குறு பொருண்முதல் கருதி விள்ளின் விண்டவ ரோடுகேட் டவரும் வெய்ய தீக்குழி யிரவியின் வழக்கம் உள்ள காலமு மழுந்திமிக் கின்ன லுழப்பர் தீயருக் குரைப்பது தகாதால். | 16 |
208 | நீவி ரொள்ளறி வெனுமதம் வீறி நீடு முன்வினை நிகளங்கள் பரிய ஓவில் வன்மல வெளின்முதல் முருக்கி யுடற்று மாயையுங் கருமமு மென்னும் தாவில் பாகொடு தோட்டிகை விலக்கித் தயங்கு பேரருட் காட்டினை யடுத்தீர் மூவி லிக்கதைக் கவளம்வாய் மடுத்தன் முறைமையா மெனச்சொலத் தொடங் கினனால். | 17 |
209 | ஆய காலையி லருந்தவ முனிவ ரடிக ணந்திபா லரித்தலைச் சுடர்வேல் மேய பாணியன் பெற்றது மதனி வீணை மாமுனிக் களித்ததும் விளங்க ஏயு மாறுமுன் னருளுக வென்ன விலங்கி ருந்துயர் வாழ்க்கைவல் வினைக்குச் சேய னாகிய வியாதனைத் தொழுது தெரிக்க லுற்றனன் சூதமா முனிவன். | 18 |
நைமிசப் படலம் முற்றிற்று
ஆகத்திருவிருத்தம் - 209
-----
210 | திங்கட் கொழுந்து தவழ்முடியிற் சினவா ளரவுந் திரைகொழிக்கும் கங்கைப் புனலு மணிந்துமத கரியு மரியுங் கதப்புலியும் அங்கத் துறுத்த வடையாளத் தவிருந் தவள நிறம்வாய்ந்து துங்கச் சிவனை யவனுருவாய்ச் சுமக்கும் பெருமைத் துயர்கயிலை | 1 |
211 | பொற்கோட் டிமய மகட்பயந்து புனல்வார்த் தமலற் களித்ததுவு அற்கா தழியப் புரமூன்று மவிர்பொற் குவட்டு மேருவரை சொற்கார் முகமா யிருந்ததுவுஞ் சுரர்மா முனிவர் தொழுதேத்தி நற்கா மியங்கள் பெறக்கயிலை நவிர மிடமா னமைகண்டே. | 2 |
212 | திரையுந் தரங்கக் கடலேழுந் தேங்கி யுயருங் கடைநாளின் விரைய வண்ட முகட்டளவும் வீறி வளருங் கயிலாய வரையை யுளத்தின் மதித்திறைஞ்சும் வரத்தா லன்றே வாமனனார் புரையி னெடிய வுருவாகிப் புவன மளந்து தருக்கியதே. | 3 |
213 | பறப்பைக் கொடியோ ரிருவோரும் பகைப்பக் கடைநாள் வெள்ளத்தின் இறப்பக் கனலம் பிழம்பாகி யெழுந்து வளர்தன் முதல்வன்போல் சிறப்பக் கடைநாள் வருந்தோறுந் தெண்ணீர்ப் பரப்பின் மிசைத்தோற்றும் நறப்பைந் தருசூழ் கைலைவரை நலக்கும் பெருமை நவில்வாரார். | 4 |
214 | குயிலைப் பழித்த தீங்கிளவிக் குமரி யிடத்தின் வீற்றிருப்ப வெயிலைப் பொடித்த நகைப்படையாற் கென்று மிடமா யிருப்பதிந்தக் கயிலைப் பொருப்பென் றவனேயாங் கந்தற் கென்றுங் கிழமையுறச் சயிலத் திரள்க ளிடமாகத் தலைமை படைத்த தனையவரை. | 5 |
215 | அலையும் புனலு மலருமுறு மவரோ மெலியர் பகைதுமிக்குஞ் சிலையுஞ் சிலையாச் சிலைவிடங்கொ டேவன் வலிய னெனக்கருதா துலையும் புவன மென்னேயென் றுன்னி நகைத்த நகையெனலாம் நிலையுங் கயிலை வரைகிளைத்து நிமிருங் கிரணத் தொளியினையே. | 6 |
216 | தூய முனிவன் விழிக்கிளைத்தாஞ் சுவைப்பாற் கடலி னிடைமுளைத்தாம் மேய விறைவன் முடிக்கங்கை வெள்ளத் துடனாய்ப் பயில்கின்றாம் ஆய வெமக்கு நிகராரென் றகஞ்செய் மதியி னொளிமழுங்கப் பாய கிரண மிருள்சீப்பப் பகலு மிரவு மவணிலையே. | 7 |
217 | காம னுடலம் பொடிபடுத்த கனற்க ணிறைவன் றிருவருளின் ஏம முடைய ராய்ப்பழகி யிருப்பா ரன்றி யேனையோர் தாம வொளிகால் கயிலைவரைச் சார லடுப்பி னவர்விழிக்கு நாம விருளே பகல்கூகை நல்ல விழியி னிருளேபோல். | 8 |
218 | அயிரா வணமுந் தவளமே யடல்வெள் ளேறுந் தவளமே பயில்பா ரிடமு மடியாரும் பரிக்குஞ் சாந்துந் தவளமெ செயிர்தீர்த் தாங்குப் பயனருளுந் தீர்த்த மனைத்துந் தவளமே வெயிலார் மணியின் கயிலாயம் வெள்ளென் றிருந்த பரிசானே. | 9 |
219 | வேறு மும்மதக் களிற்றின முழங்கு மால்வரை செம்மணி தாழ்வரைத் தேத்தெ லாமொளி விம்முற நாப்பணே விளங்கு காட்சிமற் றம்மவெண் பாற்கலன் கனலிட் டன்னதே. | 10 |
220 | தழற்றலை யிரசதச் சானி றைத்தபால் அழற்றலின் வழிந்தென வருவி தூங்குவ சுழற்றிய கனறபத் தோன்றி ருந்தைபோல் நிழற்றொளி மணிநிரை நிரைத்தங் கோடுவ. | 11 |
221 | மரம்பல தேனவண் மழையிற் சிந்துவ வரம்பிறந் தெழுந்தபான் மடங்கத் தண்புனல் நிரம்பமே லுறைத்தென நீடக் காலெழீஇ அரம்பைக ளாற்றுவ போன்றங் காடுவ. | 12 |
222 | இரவிக ளனந்தமங் கிருந்து நோற்றென அரதனக் குவால்பல அவிரு மோர்புறம் கிரணவொண் மதிக்குலங் கெழுமி நோற்றெனத் தரளவெண் மணிக்குவா றயங்கு மோர்புறம். | 13 |
223 | கணங்கொடு கணங்கசி வுளத்தி னாட்டயர் துணங்கையும் பாடலுந் துவன்று மோர்புறம் வணங்கிடை வானர மகளி ராடலும் இணங்கிசை முழவமு மியலு மோர்புறம். | 14 |
224 | தேவர்கள் சென்றுசென்றிறைக்குங் கற்பகப் பூவயல் கிடப்பதிற் புகாவண் டன்பர்கள் தூவிய மலர்தொறுந் துன்னு மேற்பவர் ஈவில ரொழியவீ குநரைச் சேர்ந்தென. | 15 |
225 | வேறு அரந்தை தீர்த்திடு மத்தகு கயிலையின் மலநோய் கரந்த தேசுடைக் கணங்கண நாதரே முதலா நிரந்து ளார்க்கெலா நீடுறு தலைமையு மிறைவன் பரந்த கோயிலின் வாய்தல்கா வலும்பரித் துள்ளான். | 16 |
226 | மறைக ளாகம புராணங்கள் கலைகள்மற் றெவையும் நிறைய வெம்பிரா னருள்செய நிரப்பிய வுளத்தன் முறைசெய் நூலெலா மருள்புரி முதற்குரு வானோன் அறையு நந்தியென் றுயர்பெய ரடுத்தவ னனையான். | 17 |
227 | பண்டு நான்கொடைந் திரட்டியபுராணங்கள் பயில்கால் அண்டர் நாதனை யடிதொழு தடிகளே கருணை கொண்டு நீயமர் பதிபல குவலயத் துளவான் மண்டு மேன்மையின் மன்னிய தவற்றுள்யா தென்றான். | 18 |
228 | நந்தி வாய்மொழி கேட்டலும் நங்கையோர் பாகன் எந்த நாளுமெம் மிருக்கையா யிலஞ்செ யரங்காய் மந்த ணத்ததா யெவற்றினு மேலதாய் வயங்குஞ் சுந்த ரத்ததா லாதிமா புரியெனத் தொகுத்தான். | 19 |
229 | அற்றை நாண்முத லாதிமா புரியினை யனையான் எற்றை நாளினு மிதயத்துத் தியானித்து வருவான் ஒற்றை நாளுளத் துன்னியூற் றெழவிழி புளகம் பெற்ற வாக்கையோ டவசமா யிருந்தனன் பெரிதும். | 20 |
230 | சிவம்பெ ருக்கிய வுளத்தினன் தேகத்தின் குறிகண் டவம்பெ ருக்கிய வவுணரை யறுக்கும்வை வேலோன் தவம்பெ ருக்கிய விளையரோ டாடலைத் தணந்து நவம்பெ ருக்கிய செய்கைநா டுதுமென அடுத்தான். | 21 |
231 | அடுத்த தோர்ந்தெழு நந்தியை யிருத்தின னகத்துண் மடுத்த தியாதெனக் குரையென வாய்மலர்ந் தனன்வெங் கடுத்து ழாவிய கண்டர்முன் கரைந்தவா நந்தி விடுத்துக் கூறலும் வியந்தன னாதிமா நகரை. | 22 |
232 | உண்மை ஞானம்வந் தவர்க்கலா லுறாதவான் வீட்டை எண்மை யாவுறற் பாலதிம் மான்மிய மிதனைத் திண்மை நோயற விளக்குது மெனுமகிழ் சிறப்ப வண்மை நாடிய வுளத்தொடும் வைகுநா ளொருநாள் | 23 |
233 | வெள்ளி மால்வரை மணிமுடி கவித்தென விளங்குந் தெள்ளு பேரொளிச் சிகரவண் கோயிலி னொருபால் நள்ளு மாயிரங் கிரணமு நாற்றும்வெய் யவனேர் கொள்ளு மாயிரந் தூணொளி கொழிக்குமண் டபத்தில் | 24 |
234 | சண்ட பானுவு மதியமும் விடிற்சக முழுதும் உண்டு தேக்குமென் றுருவுவேற் றுமைசெய்து தன்பால் கொண்ட தாமெனக் கொழுஞ்சுடர்ப் பவளக்காற் கவிகை மண்டு வாருடல் வெள்ளென வயங்கிமே னிழற்ற. | 25 |
235 | கவள மால்களி றுரித்தவெங் கடவுடன் பகைக்குத் திவளு நீகுடை யாவதென் னேயெனச் சினந்து துவள வான்மதிக் கிரணங்க டுணித்தலைத் தாங்குத் தவள மாமணிச் சாமரை சாரத ரீட்ட | 26 |
236 | விழையத் தக்கமென் மலரினை விடுத்தவே ளுடலம் குழையத் தக்கதேற் குறுவ தன்றென வஞ்சும் தழையத் தக்கநல் வளியினைச் சார்ந்துநீ யுருவின் இழையத் தக்கதென் றெழுப்புசாந் தாற்றிக ளசைய | 27 |
237 | உரகர் போற்றுவா னடுத்தவி ருருவிடை யணிந்த வரவ நோக்கிய மகிழ்ச்சியா னாடுவா ரோடும் விரவி வேற்றுமை தெரிப்பரி தாகவின் மணிசூழ் பரவை யாலவட் டம்பல வும்பணி மாற. | 28 |
238 | கலந்து போற்றுந ருளத்தெழு மானந்தக் கடனின் றலர்ந்து வெண்டிரை யெழுந்தெழுந் தடங்குவ போல மலர்ந்த வாண்முகத் தடியவர் வயின்வயின் வீசும் பொலந்தொ டிக்கையின் வெள்ளைகண் முறைமுறை பொங்க | 29 |
239 | குழலுந் தோற்பொலி முழவமுங் குரலிசைப் பாட்டும் மழலை வாய்மொழி மங்கைய ராடலு மயங்க நிழலு மேனியின் வனப்பட நெடியவன் முதலோர் உழலு நெஞ்சினர் பெண்ணஆ யொதுங்கினர் வணங்க | 30 |
240 | பாம்ப ணர்ந்தன கோட்டியாழ் பலர்கரந் தழுவி ஏம்ப லோடுமென் னரம்புளர்ந் தெழுமிசை தேங்கச் சாம்ப வானவர் மேலடர் தழல்விடம் பருகி ஓம்ப லாதியா விருதெடுத் துலப்பிலர் பரச. | 31 |
241 | சமயப் பைம்பயிர் சாவிபோ கத்தனை யடைந்தோர்க் கமையப் பொங்கிய வலர்முகக் கருணைவெள் ளத்துச் சுமையப் பாவுழை யெனப்படுந் துணைவிழிக் கயல்பாய் இமயப் பாவையெவ் வுலகுமீன் றவனிட மிருப்ப. | 32 |
242 | கோத்தி ரங்குலந் தழுவினுங் கோதுமுற் றிரியச் சாத்தி ரம்பல வுணரினுந் தம்பிரான் பணியில் பாத்தி ரம்பிழை யாதெனப் பார்கொள நந்தி வேத்தி ரங்கொடு பணிபுரிந் தடர்சனம் விலக்க. | 33 |
243 | இரவி மண்டல மிந்துவின் மண்டல மெரியின் பரவை மண்டல மடுத்தன பவளவா னிலத்து விரவு சிங்கத்தின் பிடர்த்தலை மிளிர்தரப் படுத்த அரவின் செம்மணி யாதனத் தமலன் வீற் றிருந்தான். | 34 |
244 | தேவர் தானவர் சித்தர்விச் சாதரர் கருடர் மூவர் முப்பத்து மூவரும் யாவரும் வணங்கி ஓவி லாததம் முளக்குறை யுரைத்தது நிரப்பி ஏவ மீண்டுபோய்த் தத்தம திருக்கையெய் தினரால். | 35 |
245 | அன்ன செவ்வியின் மாடக மகதியா ழமைத்துக் கின்ன ரம்புடை விழத்தருக் கேழின ரீனக் கன்ன கங்கரைந் திளகக்காந் தருவர்கை விதிர்ப்பப் பன்ன லம்பட விசையெழூஉம் பாணிமா முனிவன். | 36 |
246 | இறைவன் வீற்றிருந் தருளிய சேவையு மெவரு நிறைய வேட்டன வரம்பெறு நியதியு மற்றும் கறையி னீங்குமிக் கயிலையி னல்லதை யில்லை அறையி னீதுறழ் தலமுள தோவென அயிர்த்தான் | 37 |
247 | ஐய நீங்குவா னமலனை வணங்கியெம் மடிகேள் வைய மீதிலிம் மால்வரை நிகர்தல முளதோ உய்ய வீங்கரு ளென்றன னுமையொரு பாகன் செய்ய வேண்டுமுகம் பார்த்துநீ தெருட்டெனப் பணித்தான். | 38 |
248 | வியங்கொள் தம்பிரான் அருடலைக் கொண்டுவே லவனும் தயங்கு தன்மணிக் கோயிலிச் சார்ந்து பேருரின் வயங்குமான்மியம் விளக்குவன் இவணெனும் மகிழ்வாற் புயங்கள் வீங்கமெல் லணைமிசைப் பொலிவொடும் இருந்தான். | 39 |
249 | வேறு சாரதப் படைகள் சூழத் தலைவனுக் கொருசொ லோதிச் சூரத மாக நின்ற தோன்றலே தெருட்டி வீட்டின் சீரதர் காட்டு கென்னாச் சேவடி வணங்கி நின்ற நாரத முனியை நோக்கி நகைமுகத் தருள லுற்றான். | 40 |
250 | உத்தர கயிலை யென்றுந் தக்கிண கயிலை யென்றும் மத்தியிற் கயிலை யென்று வழங்கிடுங் கயிலை மூன்றாம் உத்தர கயிலை சுத்தோ தகக்கடற் பால தாகு மத்தியிற் கயிலை யீது மாடக வீணை வல்லோய். | 41 |
251 | தெக்கிண கயிலை கன்மஞ் செயத்தகு பரத கண்டத் தெக்கட வுளரும் போற்ற எழில்வளர் கொங்கு நாட்டில் தக்கமேற் றிசையின் எல்லை முடிவினிற் றயங்கா நிற்கும் ஒக்குமிக் கயிலை மூன்றும் ஆயினும் உரைப்பக் கேட்டி. | 42 |
252 | அருந்தவப் பேறு வாய்ந்த அமரர்கண் முனிவ ரன்றித் திருந்தவெவ் வுயிரு மின்பந் தெவ்வுதற் கெளிய வல்ல விருந்திடு வடபாற் குன்று மிடைப்படு குன்றும் என்னாப் பொருந்திய கருணை வெள்ளப் பூரணன் உளத்துட் கொண்டு | 43 |
253 | வழுவறு மோலித் தேவர் மானுடர் விலங்கு புள்ளுத் தழுவிநீர் உறைவ வூர்வ தருவென மறைகள் சாற்றும் எழுவகைத் தோற்றத் துள்ள வெவ்வகை யுயிரும் உய்யக் கொழுமணி யிமைக்கும் வெள்ளிக் குன்றமாய்த் தென்பால் நின்றான். | 44 |
254 | களத்துநஞ் சடக்கும் எந்தை கயிலையங் கிரியாய் நின்றோன் உளத்திடை யன்பு பொங்க வுருமடி யார்கள் பூசை விளைத்தலும் வேண்டி மேலால் விரிகதி ரெறிக்குந் தேசு திளைக்குமைம் முகமும் ஐந்து சிவலிங்க மாகக் கொண்டான். | 45 |
255 | இவ்வரைத் தேத்தெவ் வாற்றின் இருக்குமவ் வாறே தென்பால் அவ்வரைத் தேத்தும் வேறே யவயவ வுருவந் தாங்கித் தெவ்வரை முருக்கும் எந்தை சினகரம் ஒருபாற் கொண்டு முவ்வரை வயிற்றா ளோடு முழுதுல கேத்த வைகும். | 46 |
256 | அறைகழல் அமல மூர்த்தி அதோமுகம் என்னப் பட்ட மறைதரு முகமும் அந்த மால்வரை வேராய்க் கீழ்போய்க் குறைவில்பல் வளத்திற் சான்ற குணாதுசார் இலக்க ணங்கள் நிறைசிவ லிங்க மாக நிலமிசை முளைத்த தன்றே. | 47 |
257 | நாதனே யாகி நின்ற நளிர்வரைச் சிலம்பிற் கென்றும் பூதகா ரணமா யைந்து பொறிகட்கும் அறிவு தோற்றும் நீதியார் கருவி போன்று நிற்றலால் இலிங்கம் ஐந்தும் ஓதுவார் பூத மைந்தின் உறுபெய ரோடுஞ் சேர்த்து. | 48 |
258 | மன்னிய புலன்கண் மாட்டு மனமன்றிப் பொறிக ளைந்துந் துன்னுத லின்மை யாலத் துலங்கிய பொறிகட் காதி என்னுமம் மனமே போன்றங் கிருநிலத் தெழுந்து நின்ற அன்னதோர் இலிங்க மாதி லிங்கமென் றாய தன்றே. | 49 |
259 | பாரிடை முளைத்து நின்ற பலசிவ லிங்கங் கட்குச் சீரிய முதன்மை யானுஞ் செப்புவ ரனைய நாமம் ஆருமவ் வாதி லிங்கம் அமர்ந்தருள் கொழிக்கு மாற்றால் ஓருமந் நகரை யாதி புரியென வுரையா நின்றார். | 50 |
260 | ஆதலிற் கயிலை மூன்றும் அடுத்திடு நாமத் தானும் ஓதரு வளத்தி னானும் ஒக்குமற் றுலகம் போற்றும் மேதகு பெருமையானும் விளைத்திடும் பயத்தி னானும் காதர மிரிக்குந் தென்சார்க் கயிலையே மிக்க தாகும். | 51 |
261 | என்றுவேற் றடக்கை நம்பி யிறைஞ்சுநா ரதன்க ருத்தில் நின்றவை யத்தைப் போக்கி நீடுமந் நகரின் மற்றுந் துன்றிய பெருமை யோடு தூத்தகு கதைக ளெல்லாம் நன்றமிழ் துகுத்தா லென்ன நவின்றனன் மோன முற்றான். | 52 |
புராண வரலாற்றுப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 261
.-------
262 | வரந்திகழ் தவத்துக் காசிப னுயிர்த்த மாதவன் காலவ னென்பான் பரந்திகழ் வீடு வேட்டனன் அடுத்துப் பத்தியிற் பூசித்த வாறும் உரந்திகழ் மலரோன் படைப்பற நோக்கி யுவணமேக் குயர்த்தவ னேவச் சுரந்திழி செருத்தற் றேனுமா தவத்தாற் றொடர்ந்துபூ சனைசெய்த வாறும். | 1 |
263 | கடவுளான் கன்றின் கவையடிச் சுவடுங் கதிர்மணிக் கோட்டினல் லூறுஞ் சுடர்மணி யுருவி னெம்பிரா னணிந்து சுரபிக்குப் படைப்பரு ளியதும் நெடியவன் றெனாது கயிலையொன் றமைத்து நிமலனைப் பூசித்த வாறும் கடிமலர்க் கடவுள் வடகயி லாயங் கண்டுபூ சனைசெய்தவாறும். | 2 |
264 | காலவ னெடியன் கமலனென் றிவர்க்குக் கண்ணுத னடம்புரிந் ததுவும் ஆலமொத் தடர்க்குஞ் சூரனைப் பயந்த வமரர்க ணிர்ப்பயத் தினராய்ச் சாலவை கியது மவர்தமக் கிரங்கிச் சண்முகன் சூரனைத் தடிந்து ஞாலமுற் றிறைஞ்ச மீண்டுயர் மருத நளிர்வரை வீற்றிருந் ததுவும். | 3 |
265 | சுமதியென் றொருவ னந்தண னெடுநாட் டூர்த்தனாய்த் திரிந்துபா தகஞ்செய் தமர்பதி தணந்து சுலாவுவா னெல்லை யடுத்திறந் தும்பரெய் தியதும் நிமலனை மறவா முசுகுந்தன் விசும்பி னிசாசரர் குலனறுத் தமர்நாட் குமரியங் கொருத்தி நகைத்தலுங் குறுகி நன்முகங் கொண்டுபோற் றியதும் | 4 |
266 | கழைசுளி யயிரா வதப்பெரும் பாகன் கடுந்தவப் பிருகுபுத் திரியால் தழைதரு மரக்க வுருவினை யாங்குத் தணந்துபத் திமைபுரிந் ததுவும் குழைமுக மடவா ரெழுவரோ டடுத்துக் கொலைப்பெரும் பாதகந் துமிய மழையுறழ் தடக்கை மணிமுடிக் கரிகால் வளவனன் கெய்திய வாறும். | 5 |
267 | ஏழைபாற் றூது விடுத்தவ னணுக வெம்பிரான் றிருவிளை யாட்டான் மாழைநோக் குமையுந் தானும்வேற் றுருவாய் வயற்றொழி னடவிய வாறும் ஊழைவா ரலைநீ யெனப்புடை நிறுவு முயர்கவி வன்றொண்ட னுரையாற் பீழைதீர் தில்லை யந்தணர் போந்து பிஞ்ஞக னடங்கண்ட வாறும். | 6 |
268 | வீங்குநீர்க் காஞ்சி நதியொடு மங்கண் விலங்கிய தீர்த்தத்தின் சிறப்பும் ஓங்குமால் வரையின் விம்மிதம் பலவு முயர்பரம் பிரமமா லென்று தூங்குகை நிமிர்த்த வியாதன்பொய்த் துரிசு துடைத்ததுந் துணையின்மா தவங்கள் தாங்கிய விசுவா மித்திரன் பணிந்து தணிவில்பல் வரம்பெற்ற வாறும். | 7 |
269 | காதியா ணவத்தை யுயிரெலா முத்தி கலத்தலிற் றென்திசைக் கடவுள் கோதிலா வரசு குறைந்தமை நிரப்பக் குழகனைப் பூசித்த வாறும் போதினான் றெளியப் பூரணன் றலத்தின் பொருவின்மான் மியமரு ளியதுந் தீதினா னொருவ னங்கிர னென்பான் தேகநீத் தும்பரெய் தியதும். | 8 |
270 | இமவரை மாது தவம்புரிந் ததுவு மெம்பிரான் வரைந்துகொண் டதன்மேல் குமரனுக் கிறைவன் வரைவினாற் றேவ சேனையைக் கூட்டிய வாறுஞ் சமரவன் றடக்கை யான்குசத் துவசன் றவம்புரிந் தெச்சமெய் தியதும் அமர்தரு குலசே கரனெனுஞ் சேரன் குட்டநோ யனுக்கிய வாறும். | 9 |
271 | வருந்திரி லோக சோழன்றுன் மதஞ்சேர் மாசறப் போற்றிய வாறும் கருங்குழ லுமையாட் கெம்பிரான் வார்ந்த காமரு வேணிவெண் பூதி திருந்துகண் மணிகூ விளமுப சாரந் தெரிதரத் தெருட்டிய வாறும் பெருந்திரு வளிக்கும் பிரமகுண் டத்துப் பெருகிய பூதிமான் மியமும். | 10 |
272 | மின்னவிர் சடிலத் திளம்பிறை யணிந்த வேதியன் விரைமலர்க் கமலப் பொன்னடித் தலத்துப் புரிதரும் விசேட பூசனைக் குரியகா லமுஞ்சீர் மன்னிய குமர நாயக னருள மகதியாழ் முனிவரன் கேட்டுத் துன்னிய மகிழ்வி னாண்டரு ளிறைவன் றுணையடி தொழுதுவாழ்ந் தனனால் | 11 |
பதிகப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 272
-------
273 | வாரணி பூண்முலை வள்ளி மணாளன் போரணி வேலன் புகன்று தெளிந்த காரணி தென்கயி லாயம் வணங்க நாரணி நாரதன் நச்சியெ ழுந்தான் 1 | 1 |
274 | நொள்ளை படாதன வில்வமு நொச்சியும் வள்ளையின் வார்செவிக் கங்கையும் தாங்கி தள்ளையன் னான்றலம் நேர்ந்தன தாழ்ந்துளத் தொள்ளையி லான்றுனைந் தான்வழிக் கொண்டு. | 2 |
275 | தெங்கொடு பூகஞ் செறிந்து வளங்கள் தங்கிய கொங்கு தலைப்பட லுற்றான் மங்கல சின்மய மால்வரை கண்டான் அங்கண் வணங்கின னன்பி னடுத்தான். | 3 |
276 | வாக்கிய கட்புனன் மார்ப நனைப்பத் தேக்கிய வன்பு திளைத்தெழு சிந்தை ஊக்கிய வன்மைகொண் டொள்ளிய பண்களின் பாக்கிய மன்னான் பறம்பிவர் கின்றான். | 4 |
277 | வேறு மூவர்கள் வணங்குமுத லென்றுவழி பட்டாங் கேவரும் வியப்பவிணர் மாமர மிறைக்கும் பூவமரர் தூவுபொலம் பூவொடு மயங்கி மேவரும் வண்டினம் விலக்குவன கண்டான் | 5 |
278 | வித்தக விலங்கலடி காணவிழை வுற்றுப் பத்தியொடு நாரணர் பரித்தவுரு வென்னக் கொத்தினொடு பன்றியொளிர் குன்றடி யகழ்ந்து மெத்துகிழங் காருவன வீணைமுனி கண்டான். | 6 |
279 | காலனுயிர் சாயவடை பாலனுயிர் காழ்ப்பச் சாலவருள் செய்தவொரு சாமிவடி வேயாம் மேலவரை சேர்ந்தவெமை யார்தளைவ ரென்றே கோலவிப மெண்ணில குறும்புசெயல் கண்டான். | 7 |
280 | எங்களைநி கர்ப்பவுயி ரோடிறைவன் மெய்யில் தங்குவன வல்லவுரி தந்தவின மென்னா அங்கெழு களிப்பினனை யார்ப்பவென மாடே சிங்கமொடு தோல்புலி சிலைத்தெழுவ கண்டான். | 8 |
281 | கையலது போதலறி யாதுகலை கால்விட்டு உய்யவறி யாதுமுய லென்றுறு தருக்கால் வெய்யவுளி யங்கடமை வீழ்கவய மற்றும் மெய்முழுது மேவிவிளை யாடுவன கண்டான். | 9 |
282 | விலங்கலுரு வத்தும்வில காமைவிட நாக அலங்கறழு விக்கவினி யாங்குவளர் சந்தின் குலங்கதுவு சூழல்குடி கொண்டுசுடி கைக்கண் இலங்குமணி நாகமினி தாடுவன கண்டான். | 10 |
283 | மேவிமு னணிந்தவியன் றோலணிக ளென்ன ஆவியிகல் வேங்கையிபம் ஆடரி யிவற்றின் தாவிலுரி யுந்தலைவெண் மாலிகைக ளென்ன ஓவிலரு விக்குடிஞை யூர்வனவுங் கண்டான். | 11 |
284 | நால்புழை நெடுங்கையிப நன்றமர் உடற்றக் கால்பொர வுடைந்தகழை நித்தில மணித்தூள் பால்புரை விபூதிபல வச்சிர மணிக்கல் சால்பின்வள ரென்பணி தகைத்தொளிர்வ கண்டான். | 12 |
285 | செஞ்செவி தமக்குரிய சேரியென வாழு மஞ்சர்க ளெழுப்புமணி யாழிசை கடுப்பக் கொஞ்சுகிளி மஞ்ஞைவிளை தோரைகள் கொரிக்கும் வஞ்சநிமிர் சாரல்வளர் தேன்முரல்வ கண்டான் | 13 |
286 | செங்கையி னமைந்தொளி திகழ்ந்ததழ லொப்பத் துங்கவொளி கான்றுவளர் சோதிமர முங்கைத் தங்குதுடி யின்னொலி தழங்குதல் கடுப்ப அங்கணமர் வேடரெழு மாகுளியுங் கண்டான். | 14 |
287 | ஏட்டைதரு வன்பிறவி யென்னுமலை யேறும் வாட்டமும் வயங்குவரை யேறவரு மெய்ப்பின் நீட்டமு மொருங்கற நிரம்பு குளிர் வன்கால் சேட்டருள் நிகர்ப்பவரு திட்டையெதிர் கண்டான். | 15 |
288 | வேதனை பிறப்பற விழைந்தருளின் நின்றோர் காதலக னுள்ளொளியி னோடுகல வாமை வாதனை மலம்விலங்கி யாங்குமலி மஞ்சு மூதறிவி னான்சிகர மூடுவது கண்டான் | 16 |
289 | ஆதி மல நீங்கவிடை யாவியருட் பின்னாய்ச் சோதியிடை மூழ்கும்வகை சூழ்திரு வெழுத்தான் மோதியிடை நின்றமல முற்றிரிவ தென்னக் காதிவரு காற்றினது நீங்குவது கண்டான். | 17 |
290 | வேறு இன்ன வாகிய வளம்பல கண்டுகண் டிவருநா ரதன்வாய்மை மன்னும் யோகின ருள்ளமா தாரமூ விரண்டையு மரீஇயப்பால் துன்னு மாயிரந் தொகுமிதழ்த் தாமரைச் சுடரினை யடுத்தாங்குக் கொன்னு மால்வரை யாறையுங் கடந்துபோய்க் குடுமிமால் வரைசார்ந்தான். | 18 |
291 | கருத்த டங்கியோ கத்தினாற் சோதியைக் காண்பவர்க் கவணெந்தை நிருத்த வண்சிலம் பொலியெழு வித்தென நெடுகிவிண் கிழித்தோங்கு திருத்தன் வைகிய சிலம்பினை யடுத்தலுந் தேவதுந் துபியோடும் அருத்தி மெய்யடி யார்சிவ முழக்கமு மடர்ந்தெழ மகிழ்கூர்ந்தான் | 19 |
292 | அங்கி பாங்கரி னமைத்தலாற் றொடுவதற் கவனியு ளோரஞ்சும் பொங்கு சீதளத் தாவயி னொழுகிய புதுமண நதிதீர்த்தம் முங்கி நீறுடன் முழுவது மணிந்துசெய் முறைமைமுற் றுறவாற்றி எங்க ணாயகன் றிருமலை யிவர்ந்தனன் இவர்ந்தயாழ் மணித்தோளான். | 20 |
293 | இமய மீன்றவ ளோதியு மைங்கர னிறும்புசூழ் தடங்குன்றுஞ் சிமய மோங்கிய நான்முகன் விலங்கலுஞ் செங்கண்மால் வளர்வெற்பும் அமைவி ராவிய வேலவன் பறம்புந்த னடிவரை யெனத்தாழ உமையொ டாரண மறிகலா னிருப்பநீண் டொளிர்வரை முடிசேர்ந்தான். | 21 |
294 | சேர்ந்து சுற்றெலாம் நோக்குவான் அடித்தலை செறிந்தவெற் புகளெல்லாஞ் சார்ந்த பீடமா யவற்றின்மீப் போகிய தனிவரை நலன்முற்றும் ஆர்ந்த தோர்சிவ லிங்கமாய்த் தோற்றலும் அஞ்சியிம் முடிமீதும் ஏர்ந்து போற்றவெவ் வேறுரு வெடுத்தன னெனத்தெளிந் தெதிர்போந்தான். | 22 |
295 | காந்த நேர்படும் ஊசியிற் சிவலிங்கக் கடவுடன் றிருமுன்னர்ப் போந்த நாரதன் புந்திபோ யருண்மலை புகவிழிப் புனல்கார்போல் ஏந்து மார்பக நனைப்பமெய்ப் புளகங்க ளெழமொழி தடுமாறச் சேந்த வார்கழல் தாழ்ந்தனன் அன்பெனுந் திரைக்கட லிடைத்தாழ்ந்தான். | 23 |
296 | நெடிது போதுதண் டெனக்கிடந் தானந்த நிரப்புநெஞ் சகத்தோடும் படியின் மீதெழுந் துச்சியி லிருகையும் பதித்துவெள் ளியங்குன்றின் முடியின் வீற்றிருந் தருளிய பராபர முக்கண சயபோற்றி அடிய னேற்கருள் புரிந்ததற் புதமென வறைந்துபூச னைசெய்தான். | 24 |
297 | அமரர் விஞ்சையர் சித்தர்சா ரணருந் தவத்தின ரிவர்நாளுந் தமது வைப்பென வழிபடு மிரசத சயிலவுச் சியின்வேற்கைக் குமர னைங்கர னுமையொடு மைந்துருக் கொண்டுவீற் றிருக்கின்ற விமலன் முந்துற வீணையி னெழான்முறை வீக்கியேத் தினன்மாதோ. | 25 |
298 | வேறு கள்ளிவர் கோதை கரங்கொண்டு பூசித்து வெள்ளி வரையை விழைந்தா ரிதுபிறப்பின் உள்ளிய போக முழந்துமுள மாய்ந்து தெள்ளுபே ரின்பந் திளைக்கின்றார் மன்னோ | 26 |
299 | செம்பொரு ளார்ந்த செழுந்தீந் தமிழ்கொண்டு நம்பன் கயிலை நயந்தேத்து நாவினோர் இம்பர் நலியும் இடும்பையுடற் கிடந்தும் உம்ப ரறியா வுருக்கிடந்தார் மன்னோ. | 27 |
300 | காரோத வண்ணன் கசிந்தேத்துங் கண்ணுதறன் பாரோதும் வெள்ளிப் பறம்புளத்திற் றீட்டினோர் நீரோடு கண்ணின் நிலைதிரிந்தா ராயிடினும் சீரோடு வைகுந் திருவுடையார் மன்னோ. | 28 |
301 | வேறு போற்று நாரதன் மீட்டும் பூரணர் பாதம் வணங்கிக் கூற்றம் வென்றவை வேற்கட் கோமள வல்லி யன்னாளை ஊற்றி ருங்கடத் தானை யும்பர்கள் வெஞ்சிறை மீட்ட வேற்ற டக்கையி னானை வீழ்ந்து பழிச்சி யெழுந்தான் | 29 |
302 | கட்டு பொற்சடை யொல்கக் காதணி குண்டல மாட ஒட்டு வற்கலை தட்ப வுள்ள மெழுந்துமுன் செல்லச் சட்ட வெற்பி னிழிந்து சாரலின் மேற்றிசைச் சூழல் அட்டு நல்லொளிச் செம்பொன் ஆலயங் கண்டங் கடுத்தான். | 30 |
303 | வேறு ஒழுகொளித் தரள நாற்கோட் டுவாப்பல மருங்கு சூழ விழுகு மும்மத வெள்ளத்தி னிராயிரங் கோட்டு வேழம் முழுகொளிப் புவனப் பொற்றேர் மூட்டிய கலினப் பாய்மா மழுகுபொற் படியின் நீண்ட வாய்தலின் முன்னர் நிற்ப. | 31 |
304 | கழுக்கடை பிண்டி பாலங் கப்பண முரல ஞாங்கர் மழுக்கதை தண்டு நேமி வச்சிரங் சுரிகை சூலம் எழுக்குயஞ் சிலைவாள் பாச மின்னபல் படையி னோடும் அழுக்கடை யாத பூதர் ஆலய மருங்கு மொய்ப்ப. | 32 |
305 | பணைதுடி படகந் தக்கை பணவந் திண்டிமந் தடாரி கிணைகுளிர் பதலை மொந்தை சல்லரி பம்பை கேழ்மண் கணைவளை கோடு பீலி காகளந் தாரை முற்றுந் துணையறு கணங்க ளோர்பால் சுவையமிழ் தெனச்சே விப்ப. | 33 |
306 | விராவுநை வளமுன் னெட்டும் விளக்கஞ்செய் குறிஞ்சி யாழும் அராகமுன் னான வைந்தும் ஆக்குறும் பாலை யாழும் பராவிவிண் ணவரும் போற்றும் படுமலைப் பாலை முன்னாம் தராதலம் வியக்கு மெட்டுஞ் சார்ந்திடு மருத யாழும். | 34 |
307 | நேர்திற முதலா நான்கு நிகழ்த்திய முல்லை யாழுந் தேர்தரு நெய்தற் கான திறனியாழ் விளரி யெல்லாம் ஆர்தரு புலவ ரோர்பா லமைத்திசை யெழுப்ப வோர்பால் வார்தரு குழலின் பேத மனைத்தும்வல் லவர்வா சிப்ப. | 35 |
308 | வேறு காந்தாரம் புறநீர்மை கௌளசிகங்குச் சரிநளுத்தை கவிடி நாட்டை வாய்ந்தோதுஞ் சாதாரி கௌளவாணங் கொல்லிக் கௌளவாணங் காஞ்சி ஆய்ந்தார்கொள் சாயரிபஞ் சுரம்பழம்பஞ் சுரங்குறண்டி யமிழ்தாய்க் காதிற் போந்தேறு மலகரிநற் பயிரவியென் றிவைவல்லார் புகழ்ந்து பாட. | 36 |
309 | கொடுகொட்டி பாண்டரங்கங் காபால மெனுமிறைவன் கூத்து மூன்றுங் குடைகொட்டி யெனுங்குமர னாடலிரண் டுங்கனங்கொண் டொருபா லாடக் குடமல்லு மரக்காலல் லியமென்னுந் தமக்குரிய கூத்து நான்கும் குடம்வெல்லும் வளைக்கரத்தோ ரநேகரவ ணொருபாங்கர்க் கொண்டு போற்ற | 37 |
310 | உருத்திகழைங் கணைக்கிழவ ரநேகர்தமக் குரியபே டுவந்து காட்டப் பருத்தபுயத் தயிராணி கடயமிட மலர்மாது பரவை யாடச் சுரித்தகுழற் குமரிமரக் காறழுவ வெழுமாதர் துடிகொண் டாட வரித்தமுலை யரம்பையர்கள் கரணமுதற் பலகூத்து மருவி யாட. | 38 |
311 | உறுவசிமே னகையரம்பை திலோத்தமையென் பவர்பலர்தா மொழுங்கி னின்று நறுமலர்க்கை வழிவிழியும் விழிவழியுள் ளமுநடப்ப நடன மாடத் தெறுவினையைத் தெறுமுனிவர் குணலைபயின் றாரணங்க டிகழ வோத மறுவிகந்த தும்புருநா ரதர்பலர்வீ ணையினிருபால் வதிந்து போற்ற. | 39 |
312 | இந்திரரெண் ணிலர்பிரம ரெண்ணிலார் பதினொருமூ வருமெண் ணில்லார் சந்திரரெண் ணிலரேனை வானவரெண் ணிலர்நிசா சரரெண் ணில்லார் கந்தருவர் விஞ்சையர்கள் கருடர்சாத் தியர்சித்தர் கரும தேவர் அந்தரரென் பவர்பிறரு மநேகரகத் தினும்புறத்து மடர்ந்து போற்ற. | 40 |
313 | ஆடிகுடை சாந்தாற்றி யால்வட்டங் கவரிகொடி யனைத்து மொய்ப்பக் கோடிமணித் தூணிறுவிக் குயிற்றியபொன் மண்டபத்திற் குமர வேளும் நீடியமும் மதக்களிறு மருகிருப்ப வுமையிடப்பா னிலவத் தேசு கூடியபொற் றவிசினிடை வீற்றிருந்தான் மன்றுணடங் குயிற்றும் பெம்மான். | 41 |
314 | அத்தகைய கோயிலினை யடுத்தநா ரதமுனிவ னன்பு பொங்கப் பைத்தமணி வாயிலிடைச் சடைசழங்க வுடைசழங்கப் பன்னு வீணை கைத்தலத்தின் மேக்குயர்த்திச் சனநெருக்கி னூடேகிக் கடந்து வாய்தல் சுத்தமருள் கோமாத ருடனிமிலே றிருந்தநெடுஞ் சூழல் புக்கான். | 42 |
315 | வேறு ஆங்க ணெட்டினு மைந்தினும் பாங்கி னாரப் பணிந்தனன் ஓங்கு கையினை உச்சியில் தாங்கி முன்னுறச் சார்ந்தனன். | 43 |
316 | அந்தில் வந்தடர் மாசனம் பந்தி கொள்ளப் பணித்துலா நந்தி கண்டிவ ணாரதா முந்து கென்னலு முந்தினான். | 44 |
317 | அன்றி னார்புர மாரழற் கொன்ற வூட்டிய உத்தமன் என்று வந்தனை யோவென இன்று வந்தன னென்றனன். | 45 |
318 | ஆல மார்ந்த மிடற்றினான் கோல நோக்கிக் குளிர்ந்தனன் சால வன்பு தழைத்தெழச் சீல மார்துதி செப்புவான் | 461 |
319 | வேறு தண்ணார் மதியுந் தழல்வா ளரவும் சடிலத் தணியுந் தலைவா சரணம் பண்ணா ரிசையும் பகைமான் குரலும் படர்செஞ் செவிநா யகனே சரணம் பெண்ணா முமையும் நீயா ணுருவும் பிணையுந் திருமே னியனே சரணம் விண்ணா டருமண் ணவரும் பணியும் வெள்ளிக் கிரிவே தியனே சரணம். | 47 |
320 | அண்டங் களனைத் துநொடிக் குமுன மடலைப் பொடியாக் குநுதற் சுடராற் பண்டின் பமளிக் குமலர்க் கணைவேள் படவென் றருண்மீ ளீமையாய் சரணந் தொண்டொன் றுமலா லறியா தவர்தஞ் சுரிகுஞ் சிமுடிக் கணியாஞ் சரணம் மிண்டுந் தருமன் படிவத் துதவும் வெள்ளிக் கிரிவே தியனே சரணம். | 48 |
321 | தண்டா துலகோர்க் குவரம் பலவுந் தழையச் சொரியங் கையின்மும் மலமும் அண்டா தடைவா ருடலும் பொருளு மணுவுந் தரவேற் றருள்வாய் சரணம் கண்டா னலனென் றெவரும் பரவுங் கடியார் மலர்துன் றுபதத் திடைமண் விண்டான் பதுமக் கண்ணீந் தருளும் வெளிக் கிரிவே தியனே சரணம். | 49 |
322 | மத்தக் கரியீ ருரிபோர்த் தருளும் வயவா வியவார்க் கருளாய் சரணம் பத்திக் கமிழ்தா கியினித் தருளும் பரமா புரமாய்த் தவனே சரணம் எத்திக் குமிறைஞ் சநடம் புரியு மிறைவா மறைவாய் மொழியாய் சரணம் வித்தைக் கோருவைப் பெனவே திகழும் வெள்ளிக் கிரிவே தியனே சரணம். | 50 |
323 | அழலங் கையினாய் சரணஞ் சரணம் அரரிதங் கையினாய் சரணஞ் சரணம் பழியென் பணியாய் சரணஞ் சரணம் பரவென் பணியாய் சரணஞ் சரணம் குழவெண் மதியாய் சரணஞ் சரணம் குணவோர் மதியாய் சரணஞ் சரணம் விழிமும் மையினாய் சரணஞ் சரணம் வெள்ளிக் கிரியாய் சரணஞ் சரணம். | 51 |
324 | செய்யா வுருவாய் சரணஞ் சரணம் செய்யாய் கரியாய் சரணஞ் சரணம் நெய்யா வுடையாய் சரணஞ் சரணம் நெய்யார் படையாய் சரணஞ் சரணம் பொய்யார்க் குரியாய் சரணஞ் சரணம் பொய்யார்க் கரியாய் சரணஞ் சரணம் வெய்யாய் தணியாய் சரணஞ் சரணம் வெள்ளிக் கிரியாய் சரணஞ் சரணம். | 52 |
325 | வேறு.. எனநா ரதனேத் துதலும் பகவன் பனவா விழைவோ துபணித் துமென அனகா வுனதா ளுறுமன் படியேன் மனமா ரவழங் குதிமா லறவே. | 53 |
326 | காரார் தருதென் கயிலா யமிதின் வாரார் முலையோ டுமகிழ்ந் தருளின் சீரார் தருசே வையெந்நா ளுமெனக் காரா வமுதே யருளென் றனனே. | 54 |
327 | அவ்வா றிறைவன் வரமாங் கருளச் செவ்வாய் மையினான் கொடுசே வடிதாழ்ந் தொவ்வா மலமோ பியபோ திவனத் துவ்வா வமுதந் தொழமீண் டனனே. 55 | 55 |
328 | வேறு கற்பக வேலி நீழற் கடவுளா னிரைகள் வைகப் பொற்பிரு நிதிகள் கோடி பொலிந்தநீ ரோடை சூழ விற்பொலி மணிச்செய் வைப்பின் வெள்ளிமேல் வேய்ந்திட் டுள்ளால் அற்புதக் கவிகைப் பூங்க லழுத்துமம் பலமுங் கண்டான். | 56 |
329 | வெள்ளியம் பலமுன் தாழ்ந்து வியத்தகு நடமும் போற்றிச் சுள்ளியின் வேலி சூழ்ந்த சுடர்மலை முகங்க ளான தெள்ளொளி யிலிங்க மேலாற் செறிமணி மோலி யேயாம் நள்ளொளிச் சிகரக் கோயி னளிவரை வலமாச் சென்றான். | 57 |
330 | கதிர்மணிக் குலமும் பொன்னுங் கையரிக் கொண்டு போதும் அதிர்புனல் வழக்க றாத வற்புதக் காஞ்சி மாடே முதிர்வளம் பலவும் நோக்கி முன்னிநீள் போதிக் கானத் தெதிரறு துறைநீ ராடி யெம்பிரான் கோயில் சார்ந்தான். | 58 |
331 | கொழுந்தெழுங் கிரணக் கல்லிற் குயிற்றுகோ புரமுன் தாழ்ந்து தொழுந்தலைக் கரத்தி னோடுந் துணைவிழி யுறைப்பப் போந்து விழுந்தனன் ஏற்றின் முன்னர் விழுந்தன மலங்கள் மூன்றும் எழுந்தனன் இன்ப வெள்ளம் எழுந்தாங் குடங்கு மாதோ. | 59 |
332 | அயனரி யரனு மாகி அளித்தளித் தழித்து மற்றவ் வயனரி யரனுக் கெட்டா ஆனந்தப் பொருளே யங்கண் அயனரி யரனும் போற்ற முளைத்தரு ளாதி லிங்கம் அயன்றரு குமர னான்ற தவத்தினால் கண்டு கொண்டான். | 60 |
333 | வறுமையுற் றவர்கள் சிந்தா மணியெதிர் கண்டா லென்ன முறுகிய வன்பு பொங்க முதல்வனா ரருகு போந்து மறுகிய பிறவி வேலை வறக்குமொள் ளமிழ்தைக்கண்ணான் மொறுமொறுத் தமரர் நிற்ப முகந்துகொண் டருந்தி னானே. | 61 |
334 | தேக்கிய வுளத்தா னந்தச் செழுங்கட லூற்றே யென்ன வாக்கிய விழியி னீரு மயிர்தொறு மரும்பும் வேரும் ஆக்கையை மண்ணுச் செய்ய வருட்புனற் குளித்தான் போன்று நீக்கிய மலத்தா னாங்கு நெடிதுநின் றரிதி னீங்கி. | 62 |
335 | இருள்குடி கொண்ட கூந்த லெழில்குடி கொண்ட பொற்றோள் அருள்குடி கொண்ட வாட்க ணணிகுடி கொண்ட கொங்கை பொருள்குடி கொண்ட செஞ்சொற் புகழ்குடி கொண்ட தாளு மருள்குடி விலகி வைகு மரகத மயிலைத் தாழ்ந்தான். | 63 |
336 | ஒன்றெனப் பலவே யென்ன வுருவென வருவே யென்ன அன்றென வாமீ தென்ன வணுவென மகத்தே யென்ன நின்றவன் பரமா னந்த நிருத்தஞ்செய் போதி மன்றுள் வென்றவைம் பொறியான் சென்று விம்மிதத் திறைஞ்சிப் போந்தான் . | 64 |
337 | தவழ்புனற் காஞ்சி யாற்றுத் தடங்கரை மருங்கு முக்கட் பவனருட் குறியொன் றன்பாற் பதிட்டைசெய் தாங்குப் பாங்கர் நவமுறத் தீர்த்த மொன்று நலத்தக வாக்கி யந்தச் சிவமலி நீரி னாட்டிச் செய்தனன் பூசை முற்றும். | 65 |
338 | அன்னதன் சிவலிங் கத்தி னருச்சனை முறையிற் செய்து மன்னிய வாதி லிங்க வரதனைப் பணிந்தும் வெள்ளி நன்னகத் திறைவன் கோல நயத்தகக் கண்டும் வையத் தென்னுமன் பிலாத தூய னின்னண மிருக்கின் றானால். | 66 |
339 | வேறு இந்த மாநிலம் வழுத்துமெய்த் தவத்தீ ரிலங்கு வேற்படை வலக்கரத் தணிந்தோன் நந்தி கூறிடக் கேட்டது மதனை நார தற்கவன் றெருட்டிய வாறும் அந்திற் கேட்டநா ரதனதன் வழியே யடுத்து வந்தனை புரிந்தது மெல்லாம் வந்த வாறினிக் காலவன் வாய்மை மரீஇய தோர்மினென் றறைதருஞ் சூதன். | 67 |
நாரதன் வழிபடு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 339
---------
340 | வரியளி மதுவுண்டு மதுரமெல் லிசைபாடும் விரிமல ரயனீன்ற மேதகு காசிபனுக் குரிமையின் மகன்வேத மோதிய செந்நாவன் கரிசறு தவமாற்றுங் காலவ னெனும்பேரான். | 1 |
341 | நல்வினை யோவாமே நயந்துசெய் திடுநாளில் அல்வளர் மலபாக மடுத்தருள் பதிவுற்றுத் தொல்வினை யவைமாறத் தொகுதரு கருமந்தாம் பல்வகை களுமொப்பாம் பரிசுற விவைநினைவான். | 2 |
342 | செய்திடு கருமத்தாற் சேர்பய னுலகத்து மைதிக ழிருள்சீக்கும் வானவ னுலகாதி பைதிகழ் மணிநாகப் பள்ளிய னுலகந்த மைதம ருலகத்தி னார்வமொ டெய்துவதாம். | 3 |
343 | மேவுமவ் வுலகத்து மேதினி வரைப்பேபோல் ஓவிலைம் பொறிகட்கு முறுபுல னுகர்வித்தே போவன காலங்கள் புதுமையி னொருவாய்மை ஆவதன் றண்டங்க ளனைத்துமவ் வியல்பினவே. | 4 |
344 | வேறு காரண மூன்றி னன்றிக் காரிய நிகழ்வ தின்றாங் காரண மண்டங் கட்குக் கருதுறின் மாயை சத்தி காரண மில்லா யீசன் முதற்றுணை நிமித்தங் காண்பர் காரண மாயை நல்குங் காரிய தத்து வங்கள். | 5 |
345 | தத்துவக் குழுவின் செய்கை யல்லது சகல மில்லை தத்துவஞ் சடமே யற்றேற் றத்துவச் செயற்கும் வேறே தத்துவ மான சித்தின் சத்தியொன் றடுத்தல் வேண்டும் தத்துவ நம்மை யென்றுந் தகைப்பது மில்லை யாமே. | 6 |
346 | அத்தகு சித்து நானோ வன்றிவே றுண்டோ மற்றுந் தத்துவ வுடலே நானாத் தருக்கினே னிந்நாள் காறும் பொத்துதத் துவத்தை நாடிற் பொருந்துநான் வேறு மானேன் சித்தினை நாட வென்னிற் சித்தும்வே றுண்டுபோலும். | 7 |
347 | அனைத்துமாய் மாயை நம்மை யடுத்தது கருமத் தாகும் நினைத்திடு கருமத் தானு நிகழ்வதா ணவத்தி னாகும் வினைத்திருக் கெய்த நிற்றல் வெய்யவா ணவவி ருட்டும் எனைத்துயி ரினையும் வாட்டு மபக்குவ விரவி னாகும். | 8 |
348 | இத்தகு தொடர்க ளெய்தா தெவற்ரினு மேலாய் நின்ற அத்தகு கடவு ளன்றி யறிவெழு பருவ மாதி மிக்குற விளைத்து வீடு விளைப்பவ ரிலையத் தேவும் தக்கவா வழிபா டாற்றிச் சார்தரார்க் கருளா தம்மா. | 9 |
349 | அருவுரு விரண்டு மின்றி யடர்குணங் குறிக ளின்றித் தெருளுநின் மலமா யொன்றாய்ச் சித்துமாய்ச் சத்துமாகிப் பொருவில்பூ ரணமா யின்பாய்ப் போக்கொடு வரவு மில்லா ஒருவனை வழிபா டாற்ற லொருவர்க்கு முடியா தேனும் | 10 |
350 | மந்திர முலகிற் றீட்டும் வரிவடி வெழுத்தி னின்று வெந்திறற் பூத மாதி விலக்குமா போல வெட்டா எந்தையும் வடிவி னின்றே யிருண்மல மகற்றி வீடு தந்திடு மருளா லெங்கோன் றங்கிய வடிவு தம்முள் | 11 |
351 | வேறு வண்டு முரல முறுக்கவிழு மலர்மே லவனைப் பணிகிற்பின் அண்ட மடங்க வுயிரெல்லா மாக்கு மாற்ற றருகிற்கும் விண்ட மலரி னறுந்துளப விண்டு மலர்த்தாள் வழிபாட்டின் மண்டு முயிரைத் திதிப்படுத்து வளர்க்கு மாற்ற லுளதாமால். | 12 |
352 | புவன முழுது மொருநொடியிற் பொடிக்கு மரனை வணங்கினால் புவன முழுது மொருநொடியிற் பொடிக்கு மாற்ற லினிதருளும் மவுன முடைய ராயுமா மகேச ரடியைப் பூசிப்பின் கவன மறுத்து விவாகத்திற் கருத்தை யுதவிப் புரப்பாரால். | 13 |
353 | அமரர் விழையுங் கலியாண வழகர் பாதம் பூசிப்பின் கமலன் முதலோர் தலைதுளக்கக் கலியா ணத்தை முடித்தருள்வர் உமைத னுருவுந் தமதுருவு மொற்றித் திருந்தார் தமைப்போற்றில் சிமய முலையார் போகத்திற் சிறப்ப மோகங் கொடுப்பரால் | 14 |
354 | தொல்லை யுலகம் போற்றெடுக்குஞ் சோமாக் கந்தர் தமைத்தாழின் நல்ல மகவுஞ் சந்தானத் தொடர்பு மினிது நல்குவார் மல்லற் றிகிரிப் படைமால்கை வழங்கி னாரை யருச்சிப்பின் அல்ல லிரியப் பெரும்போக மகிலம் வியப்ப வளிப்பாரால் | 15 |
355 | வம்பார் தெய்வ வடவாலின் வதிந்தார் கமலத் தாளிறைஞ்சில் தம்பால் விருப்புந் துயரிலங்குஞ் சகத்தில் வெறுப்புந் தழைப்பிப்பார் பம்பா தரவிற் கடிஞைகொளும் பயிக்க வேடத் தரைப்பரசில் கொம்பே ரிடையார் கரநெரிப்பக் கொள்ளும் போகம் வெறுப்பிப்பார் | 16 |
356 | கையி லெடுத்த சூலத்துக் கங்கா ளரைப்பத் திமைபுரியின் வைய முழுதும் பணிகேட்ப வயிராக் கியத்தை யளித்திடுவர் எய்யு மதவே ளுருப்பொடித்த விறைவர் மலர்த்தா ளருச்சிப்பின் பொய்யி லறிவுள் ளகத்தரும்பப் புணர்பக் குவத்தை வருவிப்பார். | 17 |
357 | எருமை யூர்தி யுயிர்குடித்த வெறுழ்த்தாட் புலவர் கழல்பழிச்சில் பருவ முடையார்க் கிடர்பலவும் பாற்றி யபயங் கொடுத்தளிப்பர் பொருவில் வலத்துச் சலந்தரனைப் புரட்டுங் கடவுள் பதமேத்தின் வெருவில் யோக முழப்பவர்தம் வெகுளித் தழலை வீட்டுமால். 18 | 18 |
358 | பேணு மதில்க ளொருமூன்றும் பிழைப்பப் பொடித்தார் சரண்பரசில் கோணை யுயிரை வயமாக்குங் குணமூன் றனையும் பேதிப்பார் பூணு மதத்து நரமடங்கல் புரட்டுஞ் சரபத் தடிவழுத்தின் மாணும் வினைமா யையின்வலிகள் வழுவக் கடைக்கண் புரியுமால் 19 | 19 |
359 | நெருப்புக் குளிரும் விடமுண்ட நீல கண்டர் சரண்டுதிப்பின் இருப்புக் கிடனின் றெனமலநோ யிரியல் போகக் கடைக்கணிப்பர் ஒருக்கி மனத்தை மூன்றுதா ளொருவர்க் கடிமை யுறச்செய்யின் கருக்கை சரியை கிரியையோ கத்தி னுழக்குங் கடன்பணிப்பார். 20 | 20 |
360 | இருவ ரிருபாற் கிளைத்தெழுந்த வேக பாதர் தமைநாடில் பொருவின் ஞான நிட்டையிவை புந்தி விழைய வருள்புரிவர் தெருளு மறைகண் ஞாளியாய்ச் சிவணும் வடுகர்க் கன்புசெயின் மருவுஞ் சங்க மனைத்தினையும் வழுக்கி முழுக்க வாழ்வரால். 21 | 21 |
361 | தரும விடையேற் றினிதுகந்த தம்பி ரானை விழைந்தடையில் பருவ முடையார்க் கனுக்கிரகம் பரிந்து புரிந்து புரந்தருளும் செருகு மிதழிச் செஞ்சடைச்சந் திரசே கரர்தாண் மனமுறுத்தின் பெருகுஞ் சனன மரணத்திற் பெரிது மச்சந் தோற்றுவரால். | 22 |
362 | நின்று சபையி லானந்த நிருத்தம் புரிவார்க் காளாயின் வென்ற பொறியார்க் கானந்த வெள்ளம் பெருக விளைப்பரால் துன்று சடையிற் றிரைக்கங்கை சுருக்கி னார்தங் கழலடையின் மன்ற வுயிர்க்கு நிரந்தரமா னந்த நிகழ வழங்குவரால் | 23 |
363 | வேறு மொழிந்த நாலிரு மூவர்க்கு மூலமாய் ஒழிந்தி டாவரு வோடுரு வாய்மயல் அழிந்த வாணொடு பெண்ணுரு வாகியும் எழுந்த தாகு மிலிங்கநன் மூர்த்தியே. | 24 |
364 | மாடு வேண்டினு மண்முழு தாளுறும் பாடு வேண்டினும் பண்ணவர் விண்ணமாள் பீடு வேண்டினும் பேதுசெய் தியாவையும் வீடு வேண்டினும் வெய்து முடிக்குமே. | 25 |
365 | ஆத லாலிலிங் கத்தி னமர்ந்தருள் வேத நாதனை மேதகு வைப்பிடை ஏத நீங்க விறைஞ்சுது மென்றுளக் காதல் கைமிகக் காலவன் முன்னினான். | 26 |
366 | அண்டர் நாதனை யாங்கத் தலந்தொறும் கொண்ட காதலிற் கும்பிட்டுப் போதுவான் வண்டு பாட மதுப்பொழி பூம்பொழில் விண்டு ழாவுறுங் கொங்கினை மேவினான். | 27 |
367 | ஆங்கு வைகு மமலன் பலதளி தாங்கு காதலிற் றாழ்ந்தெழுந் தேகியே ஓங்கு மாதி புரத்தினை யுற்றனன் வீங்கு காஞ்சி நதிக்கரை மேயினான். | 28 |
368 | நலக்குங் காஞ்சி நதிக்கரை நண்ணலும் வலக்க ணும்வலத் தோளுந் துடித்தன அலக்க ணந்திக்கு மற்புத வைப்பிஃ திலக்கம் பூசித்தற் கென்று மகிழ்ந்தனன். | 29 |
369 | மின்னொ ழுக்கி மிளிர்தர வைத்தெனப் பொன்னொ ழுக்கிப் புகுநதிக் காஞ்சிநீர் தன்னொ ழுக்கிற் றகப்புகுந் தாடினான் மன்னொ ழுக்க மரபுளி முற்றினான். | 30 |
370 | வேறு அச்சு வத்திரட் கானகத் தூடுபோ யமரர்தம் மடவார்கள் கச்சு வத்திரங் கலனொடும் வாழ்தரக் கருணைசெய் பெருமானை விச்சு வத்திருப் பெயருடை விமலனை மெய்யடி யார்போற்றி நச்சு வத்திர மைந்துடை நாதனை நனியிடத் தெதிர் கண்டான். | 31 |
371 | கண்ட கன்மல ருறுசிறப் பெய்திய காட்சியிற் புனற்றாரை கொண்ட தண்ணன்முன் றாழ்ந்திடா துயர்தரு கொள்கையிற் கரம்வேணி மண்டு சென்னிமேற் குவிந்தது கருணைமுன் மடிதரா தெழுந்தென்ன மொண்டு கொண்டவே ரொடுமயிர் பொடித்தது முழுத்தவ னடிவீழ்ந்தான் | 32 |
372 | புரண்டு மண்மிசை யெழுந்தனன் றொழுதனன் புரிசடை நறுந்தூளி வரண்டி வன்னிலத் துழிதரத் தட்டமிட் டாடினான் வலம்வந்தான் திரண்ட மாமறை பன்முறை பழிச்சினன் சென்றொரு மருங்கெய்தி அரண்ட காதென வுலகுகை தொடுமுண வறமனுக் கணுத்திட்டான். | 33 |
373 | அற்றை நாளிர வுறங்கிலன் மற்றைநா ளலரிகீழ்த் திசைவேலை உற்ற காலையி லெழுந்துகா லையிற்செயு முறுகடன் முறையாற்றி வற்ற லோடுகை யேந்தினார் கோயிலின் வடகிழக் கினிற் காஞ்சிப் பொற்ற நீர்நதிக் கரையினோர் சிவலிங்கம் புதிதுறத் தாபித்தான். | 34 |
374 | திருத்த மொன்றவ ணகழ்ந்தன னத்தடத் திருத்தமந் திரமோதிக் கருத்தன் சென்னியி லாட்டியா ராதனைக் கடனெலா முடித்திட்டான் வருத்தி யாக்கையைக் கனிபுனல் வளியுண்டு வரிசையி னவைநீக்கி நிருத்த னைந்தெழுத் தயுதத்தை யாயிர நித்தலுங் கணித்தானால் | 35 |
375 | ஆதி லிங்கரை யருள்பெறக் காலவ னடுத்துவந் தனையாற்றிச் சோதி மல்கினா னெனப்பெயர் திசைதொறுஞ் சுலாவலி னாங்காங்கு நீதி மல்குற வதிதரு மாதவர் நித்தலுங் மடுத்தேத்திக் கோதி லத்தவன் குணங்கள் கொண்டா டுவர் குறுகுவர் தமதெல்லை. | 36 |
376 | இசைப ரந்தெழ வின்னண மயுதமாண் டிவனருந் தவமாற்ற மிசைப ரந்தெழு தேவரும் பூதரும் விரவியெங் கணுஞ்சூழ நசைப ரந்தெழு சீர்த்திவெள் விடையின்மே னால்வகை யிசையெல்லாந் திசைப ரந்தெழத் தேவர்க ணாயகன் சினகரத் தெதிர்நின்றான். | 37 |
377 | பஞ்ச துந்துபி முழக்கமுஞ் சிவகணம் பரந்தர கரவென்ன விஞ்சு றுஞ்சிவ முழக்கமுஞ் செவித்துளை விரவமெய்ச் சிவயோகின் நெஞ்ச முய்த்தவ னொய்யென விழித்தன னின்மலன் றனைக்கண்டான் அஞ்சு முன்னமோ டெழுந்தனன் பணிந்தன னவசமாய்க் கிடக்கின்றான் | 38 |
378 | வலக்க ணின்றநான் முகன்முக நோக்கினன் மழமத விடையூர்தி கலக்க ணின்றன மெனவுள மகிழ்ந்தவ னடந்துதன் மருகனை நிலக்க ணின்றெடுத் தொருகரந் தாங்கின னெடியவன் முகம்பார்த்தான் அலக்க ணின்றிகந் தனமென மகிழ்ந்துசென் றவனொரு கரமீந்தான். | 39 |
379 | அருளிப் பாடிவண் வருகென விருவரு மறைந்துடன் புகுகாலை இருளிப் பாடில தெனுங்குழ லுமைமுக மிறைவனோக் கினனன்னாள் தெருளிப் பாடுற லறிந்துகொ லினியிவன் றிகழுநம் மோடொன்றாய் மருளிப் பாடற வதிபவ னல்லனோ வெனவரு நகைகொண்டான். | 40 |
380 | தாதை தாதைமூ தாதைதன் றாதையுந் தடங்கரந் தரப்போந்த மேதை மீட்டுமங் கிறைஞ்சின னெழுந்தனன் வியந்தனன் வலம்வந்தான் பேதை பாகனை இமையவர்க் கிடர்புரி பேமதி லடுமேருக் கோதை வார்சிலைக் கரத்தனை யுள்ளகங் குழைதரத் துதிசெய்வான். | 41 |
381 | வேறு தேவர்கள் தேவ போற்றி செங்கண்மால் விடையாய் போற்றி மூவர்கள் முதல்வ போற்றி முக்கணெம் பெருமான் போற்றி மேவலர் புரமூன் றட்ட மேருவன் சிலையாய் போற்றி பூவல ரிதழி மாலைப் புரிசடைப் புராண போற்றி | 42 |
382 | மண்ணிடை யைந்தாய் நின்று மண்ணுமாய் வதிந்தாய் போற்றி தண்ணிய புனலி னான்காய்ப் புனலுமாய்த் தவழ்ந்தாய் போற்றி ஒண்ணிற வழலின் மூன்றா யழலுமா யொளிர்ந்தாய் போற்றி திண்ணிய வளியி ரண்டாய் வளியுமாய் நவின்றாய் போற்றி | 43 |
383 | வானிடை யேக மாகி வானுமாய் விரிந்தாய் போற்றி பானுவுள் ளீடாய் நின்று பானுவு மானாய் போற்றி தூநகை மதியுள் ளீடாய் மதியுமாய்ச் சூழ்ந்தாய் போற்றி நானெனு முயிர்க்குள் ளீடா யுயிருமாய் நவின்றாய் போற்றி | 44 |
384 | ஐம்புல வேடர் தாக்க வலைப்புண்டே னோல மோலம் வெம்புடற் சிறையிற் பட்டு மெலிகின்றே னோல மோலம் பம்பிரு வினையின் வல்லி பரிந்திட வறியே னோலம் இம்பரித் தொடரி னின்று மெடுத்தரு ளிறைவா வோலம் 45 | 45 |
385 | பொறிவழி நடந்து கொட்கும் பொறியினைத் துடைப்பா யோலம் நெறியெனக் குழியில்வீழ்த்து நிசியிரு ளறுப்பா யோலம் அறிவென வறிவாய் நிற்கு மறிவக லறிவே யோலம் செறிபொழிற் போதி நீழற் றிகழ்ந்தபே ரொளியே யோலம். | 46 |
386 | இருந்துதி முனிவன் கூற விமயவெற் புயிர்த்தா ளஞ்ச வருந்துதிக் கையின் வேழ மலைத்தருண் முனைவன் கேளாத் திருந்துதி கவலைச் சேற்றிற் சிக்கயாப் புண்ட நெஞ்சம் பொருந்துதி யுவகை வேட்ட பொருளினி நுவறி யென்றான். | 47 |
387 | இத்தலத் திழிஞ ரேனு மிருந்தருந் தவங்க ளாற்றின் அத்தமற் றவரு முத்தி யடைவது வேண்டு நின்பாற் பத்திமை யடியேற் கென்றும் பணித்திட வேண்டும் வேட்ட முத்தியீ தென்று தேற மொழிந்தஃ தீதல் வேண்டும். | 48 |
388 | என்றனன் முனிவர் கோமா னிமயவில் வாங்கி நொச்சி வென்றவன் கருணை பொங்க வேட்டநல் வரங்க ளீந்து துன்றிய குழுவை நோக்கத் தொழுதவை யகலப் போக நின்றவன் முடிகை வைத்து நிலையினை யுணர்த்தப் புக்கான். | 49 |
389 | வேறு அகர மோடுறு மகரத்தின் வலிகெட வடுக்கும் பகர மேவலும் பதிதன்ம முதலிய முறையால் நிகழு மாவயி னீடருண் மலமற வுயிர்தான் திகழு நானென வதனையே சிவமென்பர் தெளியார். | 50 |
390 | ஏக மேயெனு மிருக்கெனி னிருக்கினுட் பொருள்கேள் ஏக மேபதி பலவல வெனுமது காண்டி ஏக மேயெனச் சுட்டுவா னொருவனிங் குளனவ் வேகன் போலல னிருண்மலத் தோடுள னிவனே | 51 |
391 | மன்ற வேதமத் துவிதமென் றுரைத்திடு மரபால் ஒன்ற லாற்பொரு ளிலையெனி னுணர்த்துதுந் தெளிதி என்றும் வேறன்மை யுணர்த்துமிக் கிளவியே யிதனால் நின்ற வாருயிர் பலவுந்தா னாய்நிற்கு நிமலன். | 52 |
392 | சொன்ன தத்துவ மசியெனுஞ் சுருதியின் மொழியும் மன்னு காரணப் பதியுநா னெனவரும் பசுவும் என்ன வேபொரு ளிருமைகண் டியைந்துவே றின்மை தன்னை நாட்டிய தல்லது தனியென்ற தின்றே. | 53 |
393 | ஈண்டு நாமுரைத் திட்டதே பொருள்பொரு ளேகம் வேண்டி னாருரைத் திட்டது வெற்றபொய் யாதல் காண்டி ஞாதிரு ஞானஞே யமுங்கரைந் தன்றால் நீண்ட வேதமற் றொன்றென நிகழ்த்துமோ வதுதான். | 54 |
394 | சத்தி யாலுயிர்க் கிருளறத் தனுகர ணாதி உய்த்து டங்குநின் றசைப்பதை யுணர்கிலார் பதியே மெத்து மாயையிற் பிணிப்புண்டு வீற்றுவீற் றாகி முத்தி யெய்துமென் பார்மொழி விரோதநீ தெரிதி. | 55 |
395 | பொக்க மிக்கறப் புனலொடு புனல்கலந் தாங்குத் தொக்கு நின்றிடு மறிவுட னறிவெனச் சொல்லின் ஒக்கு நற்பதி யுயிரென லாமொத்த தென்னில் தக்க சான்றுபா சத்துற லாதலிற் றவறே. | 56 |
396 | ஆட்சி நற்கர ணங்கெட வாகுமுற் றுன்பங் காட்சி யென்னக்கா ணாதமை முத்தியேன் மரண மாட்சி நித்திரை மரத்துயி ராதியு முத்தி மூட்சி பெற்றன வாமத னான்மொழி பிழையே. | 57 |
397 | குளிகை தாக்கலுஞ் செம்புறு கோதுமுற் றழிய ஒளிபெற் றாங்குறு மலமுயிர்க் கருளினா லொழியத் தெளிவு சேர்வது முத்தியேற் செறிமலங் களிம்பின் விளிவு றாதுநித் தியமத னாலிது வீணே. | 58 |
398 | அருளெ டுத்தலு மெய்வகை யுணர்வுமைந் தொழிலும் பெரிதெ டுத்திடு முயிரெனல் பிழைமறை பேசா திருள டுத்தசிற் றறிவினுக் கைந்தொழி லெடாதாற் பொருள டுத்ததண் புணரிநீர் முழுவது நாழி. | 59 |
399 | மாட்டத் தங்கிய காட்டத்தி னங்கியின் மலத்தை ஓட்டித் தங்கலுஞ் சிவமுயி ரேகமா மென்னிற் காட்டத் தின்மையங் கியினுறுங் கரையிரு பொருளும் நீட்டித் தோர்ந்துபா ரேகமாய் நிற்குமோ நில்லா. | 60 |
400 | வேனில் வெப்பிடை யுழன்றவர் மென்றரு நிழல்பெற் றான வெப்பினைத் துடைத்தல்போ லரனடி நிழற்பெற் றீன வல்வினை யிரித்துமென் பதும்பிழை மரம்போன் ஞான வித்தக னவைநலந் தெரிதரா தவனோ. | 61 |
401 | உலக மாய்ச்சிவம் பரினமித் துயிருமாய் வினையுண் டிலகு பேரொளி யதீதத்திற் றருமென்ப ரிதுபொய் உலகு காரண மாயையுண் ணான்வினை யமலன் இலகு றாதொளி குருடனுக் கிருட்டறை யிடத்தே. | 62 |
402 | வினையொப் பெய்துழிக் கருவியு மலத்தையும் வீட்டி முனைவ னல்கிய ஞானமு ஞானத்தின் முதலுந் தனையு நோக்குறா தேகமாய்ச் சார்பய னுவப்பும் புனைவ தின்றியே நிற்பது பொருளென்பர் சில்லோர் | 63 |
403 | அருவ வல்வினை தொலைந்திலா தழியினுங் கருவி மருவி நிற்பினும் வாய்மையெய் தாதவை யொன்றாய்ப் பொருது மென்றிடி னபேதமாம் புணர்பய னுவப்பும் ஒருவு மென்றிடி னென்பய னுரைத்தமுத் தியினால். | 64 |
404 | இன்ன பல்வகை யவரவ ரியம்புமா றெல்லாம் நன்ன ரல்லன காட்டின நற்றவ வினிக்கேள் முன்னும் வன்மலம் பசுபதி மூன்றுநித் தியமாய் மன்னு மெங்கணு மாயினு மலமுயிர்ப் பதிவே. | 65 |
405 | வேறு சிற்றறிவாய்ச் சுதந்திரமின் மையுமா யன்றே செறிந்தவுயிர் கேவலத்தி னிருள்விழிபோற் கிடப்பப் பற்றுபரு வத்திறைவன் பரிந்துடல விளக்குப் பணிப்பவது வாய்வினையிற் படர்ந்துபுரி காலை யுற்றமருந் துறுபித்துக் கறிவறியா மையினு மூட்டுதா யெனச்சிவபுண் ணியமுடனின் றுறுவித் தற்றமிலா தியிற்பந்த மனாதியிற்பந் தமுமா யடர்ந்தமல மூன்றினையுங் கீழாக்கி யறுத்து. | 66 |
406 | தத்துவத்தி னுருக்காட்சி சுத்தியுற லோடுந் தனைநோக்கி யுயிர்சிவமாத் தருக்கவிறை முன்னாய் இத்தனைநாள் காறுமிடர்ப் பிறப்பிறப்பிற் படுநீ யிருஞ்சிவமன் றுனைக்காண வெடுத்தருளு முதறான் சுத்தவரு ளெனக்காட்டக் கண்டருளாற் றொழில்க டோற்றுவலென் றெழவிரும்பி னெரிபோல அருளே அத்தகைமை புரிவதுனக் கிலியெனத்த னுண்மை யறிந்தருளே முதலென்ன வருளாயே விடுமால். | 67 |
407 | அருளிதுமற் றனாதிமுத்தன் சத்தியவன் சத்தி மான்கிரண மலரியைப்போ லறிகஎன வறிந்து பொருவில்சிவத் தினையருளுங் கழியவிழி கதிரைப் புணர்ந்ததென வொன்றாகா திரண்டாயும் படாமல் பெருகுபர மானந்த வெள்ளமொன்றே திளைக்கும் பெற்றியிது முத்திநிலை பெற்றவுடல் பகலின் மருவும்விளக் கெனமாயு மதற்கமைந்த வூழும் வதிந்திறைவன் றனதாக வேற்றிடுவன் காணே. | 68 |
408 | சஞ்சிதமுன் பேயழிந்த தேறும்வினை யுளதேல் தயங்கருளி னிரியுமல மழியாது சத்தி செஞ்சுடர்முன் னிருள்போலத் தேயுமுட லுலகில் திரிதருகால் வாதனையிற் றிறம்புவது முளதாம் அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்கினது விலகு மாண்டருளுந் தனிமுதலை மூன்றிடத்தும் வழிபட் டெஞ்சலிலாச் சீவன்முத்தி பரமுத்தி யிரண்டு மீண்டேபெற் றிடுவரிறை ஞானமுணர்ந் தோரே. | 69 |
409 | வேறு என்று காலவ முனிக்கிறைவன் முத்தி யருள நன்று முத்திபெறு நற்றவன் மகிழ்ந்து தலைவா ஒன்று வாதனையு மாக்கையொழி கிற்பி னிலையா நின்ற விவ்வுடலு நீக்குகென வண்ண லருளும். | 70 |
410 | வெள்ளி யம்பல நமக்குளது வெள்ளி வரையில் கள்ள வைம்பொறி கடந்துவரு கால வவதி னுள்ளு மன்பர்வினை யோயவழி யாது தினமும் கொள்ளு மின்பநட னங்குயிலு கின்ற னமரோ. | 71 |
411 | போதி யம்பல மிதாமித னினும்பு ரையெலாம் காதி யைந்தொழி னடித்துமது காண லரிதாம் ஓதி யாய்ந்தவரு மாதலி னொரோவொ ருதினம் பாதி மாதொடு பயின்றுபுரி தும்ப லர்தொழ. | 72 |
412 | இன்ன தானவர சம்பல மிறைஞ்சி யிருநீ நன்னர் மாலயர் தமக்குநட மாடு துமிவண் அன்ன வேலைநட னந்தொழுதி யாக்கை யொழியும் என்ன வோதினன் மறைந்தன னிலிங்க முதல்வன். | 73 |
413 | மும்மை வையகமு மேத்துமுதல் வன்ம றைதர விம்மி னான்விழியி னீருக விழுந்த லறினான் அம்ம வோவிறைவ னீங்கவுயிர் வாழ்க்கை யமரும் எம்ம னோர்க்குமெளி வந்ததெவ னென்று கசிவான் | 74 |
414 | வண்டு காளிறைவன் மாலைபுகு மின்ம துமிக வுண்டு தேக்கெறிய லாகுநும துண்டி யொழிவில் அண்ட வாணரறி யாயொரு மடந்தை யயர்வு கண்டி டாமைகட னன்றெனுமி னென்று கரைவான். | 75 |
415 | இதழி வண்டெரிய னோற்றதிளி வந்த தலையென் பதளு நோற்றன வராவினமு நோற்ற னகுறை மதியு நோற்றது வயங்குருவி னின்ற விழியால் பதியை நோக்குறவு நோற்றில னெனப் பரிவனால். | 76 |
416 | ஒன்ற வுள்ளகம் வரிக்குமொரு வன்படி யெலாம் சென்று நோக்குதிசை தோறுமுரு வந்திகழ் தரக் கன்றி னீங்குபசு விற்கடி தடுத்து நிலமேன் மன்ற வீழ்ந்தெழும் வணங்குமிது மாய மெனுமால் | 77 |
417 | அன்பெ லாமொரு பிழம்பென வடுத்த முனிவன் இன்ப வெள்ளமினி தூறவதி வுற்றி றைவனார் வன்பெ ரும்பழைய மாமல மிரித்த வடிவின் முன்பு போலவழி பாடுகண் முடித்து வருமால் | 78 |
418 | பள்ள மானபிற விப்பரவை நீத்த முனிவன் தொள்ள மாகவருள் பெற்றமை தொகுத்துரை செய்தாம் கள்ள வைம்பொறியி லீர்கடவு ளான்வ ழிபடல் விள்ளு வாமென விலம்புமொரு சூத முனிவன். | 79 |
காலவன் வழிபடுபடலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 418
---------
419 | மைக்கி ளர்ந்த மணிமிடற் றண்ணலார் முக்கு ணத்தினு மூவரைத் தோற்றினார் அக்க டவுளர்க் காக்கம ளிப்பழிப் பொக்க நல்க வுஞற்றுந ராயினார். | 1 |
420 | அன்ன மூவரு ளம்புய மேலவன் மென்னு சாயம்பு மாமனுப் பட்டத்தில் தன்னை நேருஞ் சகரனென் பானுல கின்ன றீர விருந்தர சாளுநாள். | 2 |
421 | படைக்க யோகிற் பயின்றிருந் தானவண் விடைக்கு நித்திரை மேயது மேவலும் படைப்பு நின்றது பார்த்தனர் வச்சிரப் படைக்கை யானொடு பண்ணவர் யாவரும் | 3 |
422 | அம்ம வோபக மேயய னித்திரை விம்ம நின்ற விளைவிஃ தோர்ந்திடில் செம்மை யன்றெனச் சிந்தை மருண்டனர் இம்மெ னத்திருப் பாற்கட லெய்தினார். | 4 |
423 | இந்தி ரன்முத லோரிறுத் தாரென வந்தில் வாயில்காப் பாள ரறைதலும் மைந்த னித்திரை கேட்க மலர்விழித் தந்தை நித்திரை யைந்தணந் தானரோ | 5 |
424 | குரவப் பள்ளிக் குழலியோர் பாலுற உரவப் பள்ளி யுகுமழை போலமர் அரவப் பள்ளியி னான்றன தாரருள் விரவப் பள்ளியுள் மேவிவ ணங்கினார். | 6 |
425 | அணங்கு வேல்வலத் தந்தர வாழ்க்கையீர் உணங்கும் வாண்முகத் துற்றதிங் கென்னெனப் பணங்கொள் பாயலி னான்வின வப்பணிந் திணங்கு மன்பி னிமையவர் கூறுவார். | 7 |
426 | யாது காரண மோவறி கின்றிலோம் பேதை யேம்பல காற்பிறப் பெய்துபு சாத லெய்துழி யல்லது சார்தராக் கோது நித்திரை கொண்டன னின்மகன். | 8 |
427 | படைப்பு நிற்பப் பணித்திடு மாயுளின் தொடக்க முற்றிடுந் தொல்லுயி ரெல்லையீ றொடுக்க முற்று மொடுங்கி னளிக்குநின் நடைக்குத் தாழ்வு நணுகுவ தாகுமே. | 9 |
428 | அன்ன வாறணு காமை யுலகெலா மன்ன வாக்கம் வழங்குதல் வேண்டுமால் கன்னி யந்துள வக்கடி மார்பினாய் என்ன மீட்டு மிறைஞ்சின ரும்பரார். | 10 |
429 | வேறு இலகொளிக் .கவுத்துவ மிமைக்கு மார்பினான் அலமரு மமரர்த மார்வ நோக்கினான் உலகுறு படைப்பொரு தேனு வாக்குமா நலமுறச் செய்துநீர் நடமி னென்றனன். | 11 |
430 | விடைகொடுத் தருளலும் வியந்து துள்ளினார் கடவுள ருடனுறை காம தேனுவங் கடிமலர் முடிமிசை யணிந்த ராவின்மேல் தடவிழி வளர்பவன் றனக்கி தோதுமால். | 12 |
431 | யானைமே லிடுமெழிற் பரும மில்லுறை பூனைமே லிடுவது புகன்ற தொக்குமால் கானுலா மலர்வரு கடவுள் செய்தொழில் தேனுவா லாமெனச் செப்பு கின்றதே. | 13 |
432 | அல்லதூஉ மடிகளுக் கசதி யாடுதற் கொல்லுவ தாமொரு பேதை யேனிடைச் சொல்லுலா நின்மகன் றோற்றத் தோன்றியான் புல்லுறு பௌளத்திரி யான பொற்பினால் | 14 |
433 | என்றுவான் சுரபியங் கியம்பக் கேட்டருள் மன்றலந் துளவினான் மகிழ்ந்து நோக்குபு நன்றுநன் றசதியா டிலந விற்றிய தின்றுநீ யறிதிபட் டாங்கென் றேற்பவே. | 15 |
434 | அத்தொழி லக்குதற் குரியை யல்லையேல் உத்தமி யும்பர்முன் னுரியை யென்றுனை வைத்தியா முரைத்துமோ வசிக்கற் பாலைநீ எத்திறம் வருமெனில் இயம்பக் கேடியால் | 16 |
435 | அன்பினுக் கெளியவ னமல நாயகன் வன்பினுக் கரியவன் மழவெள் ளேற்றினான் தன்பதப் பணியினால் சகம ளித்திடல் என்பணி யயன்பணி யெடுத்த லாகுமே. | 17 |
436 | ஆங்கவன் பூசையா லணைவு றாப்பொருள் ஓங்கிய வுலகினி லொன்று மில்லையால் பாங்குற அவனடி பணிந்து போற்றுநின் வீங்கிய சிருட்டிநீ விரைவின் மேவுதி. | 18 |
437 | வழிபடற் குரியநல் வரைப்பொ ருத்தலின் அழிமதக் கலுழியும் மலர்ந்த பூம்பொழில் பொழிமதக் கலுழியும் பொறிவண் டோம்புறும் கழிசிறப் பிமவரை கடிதங் கேகென்றான். | 19 |
438 | மாயவ னருடலை வைத்துத் தாழ்ந்தெழூஉம் பாயசீர்த் தேனுவின் படர்ச்சி நோக்கினார் மேயவோ கையினுளம் விளங்கி விண்ணவர் போயினா ரவரவர் புகலி டங்களின். | 20 |
439 | வேறு வழிக்கொளுங் காம தேனு மணியொடு கனகஞ் சிந்திச் செழிக்கும்வெள் ளருவி யார்க்குஞ் சிமயஞ்சே ரிமய வெற்பின் விழிக்கொளிர் சுடர்போ னிற்கும் விமலனை யுளத்தி லுன்னி அழிக்குமைம் பொறிக ளோட வடுத்துமே லிவர்ந்த தன்றே. | 21 |
440 | ஆங்கொரு சூழல் வைகி யரும்புனல் திருத்த மாடி வீங்கிய வன்பு பொங்க வித்தகன் சரணம் பற்றி நீங்கருந் தவங்க டேவ வருடமா யிரநி கழ்த்தத் தேங்கிய கருணை வள்ளல் திருவுளக் கருணை கூர்ந்து | 22 |
441 | மகதியாழ் முனிவ னீண்டு வருகென மதித்தா னன்னான் பகவனா ரருள்கொண் டுய்ப்பப் படர்ந்தன னிமய வெற்பில் தகவினாற் றவத்தி னின்ற தடமருப்பாவை நோக்கிப் புகரிலா முனிவ னாங்குப் போந்தெதிர் நின்றா னன்றே. | 23 |
442 | கண்டது காம தேனுக் கரையிலா மகிழ்ச்சி பொங்கக் கொண்டல்கண் டெழுந்த மஞ்ஞைக் குலமென வெழுந்து தாழ்ந்து கண்டிரண் முத்தஞ் சிந்தக் கசிந்துள முருகி நின்றங் கண்டரும் வணங்கும் வீணை யருந்தவற் குரைக்கு மாதோ. | 24 |
443 | வேறு அருந்த வர்க்கு ளருந்தவ னாய வருந்தவா திருந்து தாமரை மேய திசைமுக னானவன் இருந்த யோகி னிடையே யிருந்துயின் மேவலின் வருந்தி வானவர் மாயனை யண்மவம் மாயவன் | 25 |
444 | படைக்க நீபனி மால்வரை மேவிப் பரமனார் அடிக்க ணன்பு வழாமை யருந்தவ மாற்றென விடுக்க விவ்வரை மேவி யிருந்தவ மேயினேன் எடுக்குந் தேவ வருடமோ ராயி மேகின. | 26 |
445 | இன்னு நாத னிருங்கரு ணைக்கிலக் காயிலேன் என்ன வோகுறை யான்செய் தவத்தி னறிந்திலேன் மன்னு பட்டிமை வல்லவ னாதலின் மாயவன் சொன்ன தும்விளை யாடல்கொ லென்று துணிந்திலேன் | 27 |
446 | கயிர வத்துரை கண்ண னுரைத்தன னாயிலும் பயில ருந்தவர்க் கவ்வுழிப் பார்ப்பதி நாயகன் செயிர றுத்துச்சிந் தித்தன யாவையுஞ் சேர்த்திடும் புயனி கர்த்த கருணையு மென்னிடைப் பொய்க்குமோ. | 28 |
447 | இன்ப மீதலிற் சங்கர னென்பரவ் வீசனார் துன்ப மென்பாற் றுடைத்தில னாலெனச் சொல்லெழீஇ அன்பி னாற்றொழு மாவினை நோக்கி யருந்தவன் நின்பெ ருந்துயர் நீவுதி யென்று நிகழ்த்துமால். | 29 |
448 | தழுவி நீசெய் தவத்திற் குறையில தாயினும் வழுவி லாக்குருக் காலமுந் தேயமும் வாலிதேல் பழுதி லாத கருமம் விரைவிற் பயப்படும் ஒழுக லாறிஃ தென்றலு மோதுஞ் சுரபியே. | 30 |
449 | நின்னின் மிக்க குருவெனக் கில்லைநின் றாண்மலர் தன்னை யான்றொழு கால மிதற்குச் சமமிலை இன்ன வெற்பி னிடமிக்க துண்டெனி லவ்விடை மன்னி யான்செயும் வாய்மை யருளெனத் தாழ்ந்ததே. | 31 |
450 | தாழ்ந்த தேனுத் தழைப்பத் தவத்துயர் நாரதன் வாழ்ந்த கண்ணருள் வைத்துத்தன் னெஞ்சிடை வள்ளியை வீழ்ந்த கந்தனை யாதிபு ரேசனை மிக்குறீஇச் சூழ்ந்து போற்றிச் சுதையென வோதத் தொடங்கினான் | 32 |
451 | வேறு சுரபி யைந்தெழுத் தேயெனத் தொல்லைமா நிலத்தில் பரவு மந்தண மாய்ப்பயில் கின்றது பணிந்து விரவு தேவரு மேன்மைநா டரிதுமே வினர்க்குப் புரவு பூண்பதா லாதிமா புரியெனும் வைப்பு. | 33 |
452 | சரத வந்நக ரெவ்வுழி யெனத்தள ரலைநீ பரத கண்டத்திற் பசுந்தமிழ் நாட்டினிற் சைய வரைத னக்குத்தென் றிசையினில் வளம்பயில் கொங்கென் றுரைத னோடுய ரொருபெரு நாடுள ததனில் | 34 |
453 | மதுவ னத்தின்மேற் றிசைப்பொறி வண்டுபண் பாடும் புதும லர்த்திரள் சுழித்தெழும் பொங்குகா வேரி நதித னக்குத்தென் றிசையினாம் பராவதி வடபால் பதிவு கொண்டெழும் பவானியின் கீழ்த்திசை யுளதால் | 35 |
454 | செப்பு மந்நக ரெல்லைக டிசைதொறு நாடின் ஒப்பு மூன்றியோ சனையுள வும்பரார் சூழவ் வைப்பின் மேற்றிசை முடிவினி லிரசத வரையாய் முப்பு ரங்களை யெரித்தருண் முதல்வனே யிருந்தான். | 36 |
455 | அமல நாயகற் கேற்புற வவ்வரை வலப்பால் விமல நாயகி விளங்குமே மாசல மானாள் கமல னாரணன் கண்ணுதல் வலமிடம் வரலான் நிமலன் பாலவர் தாமுநின் றார்நெடுங் கிரியாய் | 37 |
456 | ஆர ணன்றனக் கருஞ்சிறை யிட்டவேற் கரத்தோன் பூர ணன்றனக் கேற்புறத் தானுமோர் பொருப்பாய் நார ணன்வரைக் கீழ்த்திசை நண்ணியவ் வரையில் பார ணைந்தெழத் தனதிய லுருவொடும் பயின்றான். | 38 |
457 | குழைகி ழித்தெழு கொடுங்கணை விழியவ ளரவின் இழைய ணிந்தவ னயன்புவி யிடந்தவ னிவருந் தழையுந் தத்தம தோங்கலிற் சகமெலா மிறைஞ்சி விழைய வேறுமாய்த் தமதிய லுருவின்வீற் றிருந்தார். | 39 |
458 | அந்த ரத்துளா ரனைவரு முனிவருஞ் சூரன் வெந்தி றற்குளம் வெரீஇயர னருளினான் மேவித் தந்தம் பேரினாற் றாபித்த சிவலிங்க மனேகம் பந்த நீக்குமவ் விரசதப் பறப்பிடை யுளவால். | 40 |
459 | அவற்று ளொன்றனை யகனுறத் தொழினுநாற் பயனும் நிவப்ப வெய்துறு நியுதம்பன் முறைகங்கை மூழ்கி உவப்பின் விச்சுவ நாதனைத் தொழவுறும் பயன்கள் தவப்பொ ருந்துமச் சயிலத்தை யொருமுறை காணின். | 41 |
460 | பண்டு நற்றவம் பயிற்றிய மாதவர்க் கன்றிக் கண்டி டப்படா தத்தகு கடவுண்மால் வரைதான் அண்டர் நாயக னாகிய வவ்வரைப் பெருமை கொண்டு ரைத்திடக் கூடுமோ வொருவர்க்குங் கூடா. | 42 |
461 | அனைய வோங்கலைத் தன்னிடத் தணிந்துமூ வுலகும் நினைவின் வந்தனை புரிதர நிமலனார்க் கிடமாய்த் தனைநி கர்த்திடு மாதிமா புரியினைச் சார்ந்து துனைய நின்விழை வெய்தெனச் சொற்றனன் மறைந்தான். | 43 |
462 | மகதி வீணையின் மாதவ னருளினை நோக்கிப் புகலி லேற்கொரு புகலிடங் கிடைத்ததா லென்ன அகம லர்ச்சியி னமரரா னருந்தவன் சரணந் தகவ ணங்கியப் பனிவரை தணந்துசென் றன்றே. | 44 |
463 | உயர்ந்த சையமால் வரையினை யடுத்தவ ணொழிந்து வியந்து விண்ணவர் போற்ருறும் வெள்ளியங் கிரியை நயந்த டுத்தது நறும்பயஞ் செருத்தனின் றூறிப் பயந்த கன்றினை யூட்டியுட் பரிவுசெய் சுரபி. | 45 |
464 | வேறு குருமலி நவமணியின் குவடுகள் பலநின்ற மருவுசிந் தாமணியின் வளத்தன வுலமெல்லாம் தருவென மரமெல்லாந் தழையொளி யிழைதருவ கருவளர் கொடியெல்லாங் காமர்வல் லியின்வாய்ந்த. | 46 |
465 | கற்சுனை நறும்போதுங் காமர்நீர் தவழ்வனவும் விற்செறி யிருநிதியின் மேதக விளங்கினவால் பொற்சிதர் ஞெமிர்சாரல் புல்லிய மிருகமெலாம் நற்செயல் வளர்காம தேனுவி னண்ணினவே. | 47 |
466 | எங்கணுந் தேவர்குழா மெங்கணு மரம்பையர்கள் எங்கணு மிருடியர்க ளெங்கணு மகம்புரிதல் எங்கணு விம்மிதங்க ளெங்கணும் பெருவளங்கள் எங்கணு மெழிற்குகைக ளெங்கணு மினியனவே. 48 | 48 |
467 | அருவியின் குலமொருபா லலர்மடுத் திரளொருபால் இருவியி னிலனொருபா லேனலின் புனமொருபால் செருவினை வேடொருபால் தேன்முரல் வனவொருபால் கருமுகில் தவழ்வொருபால் களிமயில் அகவொருபால் | 49 |
468 | மும்மதக் களிவேழ மூடிய விருளத்துச் செம்மணிக் குகையுள்ளால் சேவகங் கொண்டொழிந்து சும்மைகொண் டொளிர்கிரணச் சோதியைத் தழலென்னா இம்மென வீமனைப்போ லினத்தொடு மிரிவனவால் | 50 |
469 | சோதிசெய் மரமந்தி துன்னுபு துயில்கூர்ந்து பாதியி னிரவெல்லைப் பசுமயில் கண்மலர்ந்துக் காதிய தழல்வந்து கதுவிய தெனவோடிப் போதியல் சந்தானப் பொதும்பர்புக் குறைவனவே | 51 |
470 | நஞ்சென வறியாது நளிர்மடுப் புனல்பருகித் துஞ்சிய யூகத்தைத் துணையது விரையப்போய் கஞ்சமொ டொளிர்கின்ற கற்சுனை யமிழ்தத்தைப் பஞ்சியிற் றோய்த்தூட்டிப் பருவர லொழிவனவே | 52 |
471 | பளிக்குக்குன் றருகண்மிப் பயிரவு மணைகில்லாக் கிளிக்குறு துனிநீவக் கெழுமியங் குறுசேவல் ஒளிக்கவி னிழனோக்கி யுதுவென முயங்குற்று வெளிக்கணின் றதுநீங்க வேறுபட் டலமருமே | 53 |
472 | இன்னன வளமெல்லா மிமையவர் பசுநோக்கித் துன்னிய மகிழ்தூங்கித் தோடவி ழலருந்தி முன்னுறு நதிக்காஞ்சி முரிதிரைப் புனலாடி மன்னுறுகடனெல்லா மரபுளி முடித்தன்றே. | 54 |
473 | வேறு சீரேந்து தன்னிடத்தில் திகழ்ந்த வந்து பொருளோடும் பாரேந்து பலபொருளும் பல்க வமைத்துக் கொண்டண்மி நீரேந்து சடைமுடியி னிமல னாரை வழிபட்டுக் காரேந்து மவ்வரையில் சிலநாள் கழிய வதிந்ததே. | 55 |
474 | வேறு வரைநீ ளுச்சி தனின்முளைத்த மணிமா லிங்க மைந்தோடுங் கரைநீர்க் காஞ்சி யிருமருங்குங் காழி லமரர் தாபித்த புரைதீ ரிலிங்கம் பற்பலவும் பூசித் திருந்த கடவுளான் தரைசேர் போதி வனத்திறைவன் தன்னைப் பணிய வெழுந்ததே. | 56 |
475 | வேறு மணிவாரிப் பொன்கொழித்து மலர்க ளுந்தித் தேன்விராய் அணியாரத் தவழ்ந்தேகு மருநீர்க் காஞ்சி மருங்கூடு தணியாத விழைவோடுஞ் சாருங் காம தேனுத்தான் துணியார்சோ மன்வழிபட் டசோமே சரைப்பூ சித்ததே | 57 |
476 | வேறு என்ற வெல்லை சூதனை யிருந்த வர்வ ணங்குபு நன்று சோமன் வார்குழ னங்கை பாக னார்தமைச் சென்றுபூசை செய்தவேது செப்பு என்ன வன்னவன் ஒன்று மன்பி னுள்ளக முவந்த வர்க்கு ரைக்குமால். | 58 |
477 | வேறு முதலு கத்தினின் முளரி மேலவன் புதல்வன் றக்கன்பூத் தனனைஞ் ஞூற்றுவர் குதலை வாய்மொழிக் கொம்ப னார்களைச் சுதைநி கர்த்தவத் தோகை மாரினுள். | 59 |
478 | எழுவர் கூடிய விருப தின்மரென் றொழுகு தாரகை ஒண்க ணார்தமைக் குழுமி விண்ணவர் குதுக லங்கொள முழும திக்குநூன் முறையி னீந்தனன். | 60 |
479 | பங்க யத்தனும் பதினைந் தென்றுசொற் பொங்கெ ழிற்றிதிப் பூவை மார்தமைத் திங்க ளுக்குறச் சேர்த்தி னானவர் தங்க ளன்பனாய்த் தருக்கி வாழுநாள் | 61 |
480 | மன்ற லங்குழன் மாது ரோகிணி பொன்ற யங்குதோட் புணர்ச்சி யேவிழைந் தொன்ற வேனையோ ரோர்ந்து தேய்கநீ என்று சாபமங் கிறுத்திட் டாரரோ. | 62 |
481 | அலங்கு பைங்கதி ரமர னத்திரி நலங்கொள் சேவடி நண்ணித் தாழ்ந்தனன் வலங்கொள் சாபத்தின் வரவு சொற்றனன் இலங்க ருந்தவ னேவ வேகினான் | 63 |
482 | குலிங்க ராதியோர் குறுகி யேத்துமப் புலிங்கத் தீக்கையான் பொருப்பின் சாரலில் இலிங்க நூன்முறை யிருவிப் போற்றினான் கலிங்கத் தோலினான் கதழ்வின் முன்னுறீஇ. | 64 |
483 | மாத ராரிடும் வலிய சாபமன் போத முற்றுதல் புல்லு றாதுகாண் ஆத லாலுட லல்கி மல்குகென் றேத நீங்கவீர்ஞ் சடையி னேற்றினான். | 65 |
484 | அற்றந் தீர்தர வமல நாயகன் கற்றைச் செஞ்சடை காணி பெற்றிடும் வெற்ற வெண்மதி வெள்ளி வெற்பின்மேல் உற்ற வேலையவ் வோங்கல் காண்பவர். | 66 |
485 | அலக்கண் முற்ருநீத் தாயுண் மல்குற விலக்க ணத்தம ரினிய மாதரும் நலக்கு மைந்தரு நவையில் செல்வமுங் குலக்க டும்பொடுங் குழுமி வாழ்வரால். | 671 |
486 | தாம வான்மதி தாழ்ந்து போற்றிய சோம நாதனார் மேன்மை சொற்றனம் காம தேனுவக் கடவு ளார்தமை ஏம மல்குற வினிது தாழ்ந்தபின். 8 | 68 |
487 | வேறு கொங்கணே சுரரே யிராக்கதே சுரர்சீர் குலவனந் தேசுரர் வாய்மை தங்கிய வாகீ சுரரகத் தீசர் தக்ககா ளீசுரர் தீர எங்கணும் வளர்வேத் திரவனே சுரர்வீ ரேசரின் பருள்விசா கேசர் துங்கமார் சாந்தா கேசுரர் தாலே சுரரையுந் தொழுதுதாழ்ந்ந் ததுவே. | 69 |
488 | நயக்குமூ லேச ரிந்திரே சுரர்நா கேசுரர் காலவே சுரர்நோய்த் துயக்கறும் வசிட்டே சுரர்வாம தேவே சுரர்காசி பேசர்தொல் வினையைப் புயக்குநற் சனகே சுரர்புகழ் புலத்தி யேசர்பாற் கரேசர்புத் தேளிர் வியக்கும்வண் பார்க்க வேசர்தம் பதமும் விதியுளி தொடர்ந்துபோற் றியதே. | 70 |
489 | இடர்கெடுத் தருளு மங்கியீ சுரரே மேசுரர் நாரதே சுரர்நாற் புடவியும் வணங்குந் தில்லைவ னேசர் பூங்கழற் பாதமு மேத்தி விடபம்விண் டுழாவும் போதியங் கானின் விரிநிழ லகத்துற மேவி அடர்பெரு வளமு மதிசயம் பலவு மவ்வயி னெடிதுநோக் கியதே. | 71 |
490 | எங்கணு முப்பத் திரண்டிலக் கணத்தி னிலிங்கமோ பலவுள வெங்கும் அங்கணர் பூசைக் குரியபல் லிடமு மமைந்துள வாதலின் யாங்குத் தங்கிநா மெந்த விலிங்கத்தி லாரா தனைபுரி வாமென வயிர்த்துப் புங்கவர் சுரபி நிற்பவா னூடு பொலிந்ததா லசரீரி வாக்கு. | 72 |
491 | வேறு விண்ணிடை வாழும் பசுவே நின்னையம் விடுதிகண்டாய் ஒண்ணிற வாண்மதி சூடிய நாதற் குரிய தலம் மண்ணிடை யீதன்றி வேறின்மை யோர்ந்துயர் மாதவரும் எண்ணுறு தேவரு மென்று மிவணிருக் கின்றனறே. | 73 |
492 | தணவாமை யீண்டு வதிதலை வேட்டுத்தண் மாமலரோன் பணவா ளரவிற் றுயில்வோன் கணிச்சிப் படையவனும் மணமாரும் போதி வனத்திடை யேவளர்ந் தண்டமளாய் இணரா ரரச மரமா யிருந்தன ரின்புறவே. | 74 |
493 | மூவரு மாகிய போதியின் மேற்றிசை மொய்கனக மாவரை மேவிய நாவ லிறத்தன் மறுத்திருப்ப மேவர வேற்றுரு வாயிருக் கின்றது வேதமொடு தேவரு நாடருந் தேவன் றிருவருள் செய்திடவே. | 75 |
494 | பாவலர் போற்ற வளர்பாரி சாதம் பலாமரந்தண் பூவலர் மாவுஞ் சித்தே சமரமு மெனப்பொலியும் நாவலர் போற்றிட நான்குகந் தம்மினு நாவலது ஓவில தாகி யுகமொரு நான்கு முறுந்தொறுமே. | 76 |
495 | கலியிடை யீசன் றிருவரு ளாற்சித்துக் கைக்கொளலான் ஒலிமலர்ப் பன்னீர் மரமென வையக மோதுவது நலிதலில் லாதசித் தேச மரமெனு நாமமுறு ஞெலிதழன் மாதவர் நீக்க முறாவிந் நெடுவனத்தே. | 77 |
496 | அன்னணம் வேற்றுரு வாகிய நாவற் கணியிடத்தே மன்னிய பேரரு ளானாதி லிங்கம் வயங்கியதான் முன்னொரு நாள்விந்த மால்வரை யண்ட முகட்டளவுந் துன்னுத னோக்கி வடவரை நாணித் துளங்கியதே. | 78 |
497 | இதனெக் கழுத்த மிறுப்பதெவ் வாறென் றினைந்துநிற்ப மதனெக் கழுத்த மிறுத்த பிரான்மது வார்கமலப் பதமிக் கழுத்துங் கருத்துடை நாரதன் பார்த்தணவி யதனெக் கழுத்த மறுமா றுரைப்ப வெழுந்ததுவே. | 79 |
498 | ஈண்டோர் கணத்தி லணைந்துவன் மீக மெனப்பொலிந்து தூண்டா விளக்கன்ன சோதியைத் தன்னகத் தேநிறுவி நீண்டானுங் காண்பரி தாகப் பொதிந்துநிற் கின்றதிதோ காண்டாரை யாக நறும்பால் சொரிமடிக் காமர்பெண்ணே. | 801 |
499 | இந்தவன் மீகத் திடைநறும் பால்பொழிந் தேத்துதிநீ சிந்தையில் வேட்டது பொள்ளென முற்றுறுந் தேனுநின்பால் வந்திடு மாறுமவ் வாறில் வருஞ்செந்நெ லாதியுங்கொண் டந்தணர்க் கீந்துல கின்புறி னீயுய்தற் கையமுண்டே. | 81 |
500 | வேறு என்று வானி லெழுந்த வாக்கொ டிடக்க ணாட விரிச்சியும் நன்றெ ழுந்தது நோக்கி நோக்கி நயந்து வாய்மை நவிற்றிய வென்ற வைம்பொறி யானை யுன்னி வியந்து வாழ்ந்தன மென்றவண் நின்ற தேனு நடந்து கஞ்சியி னீர்ப டிந்துப டர்ந்ததே. | 82 |
501 | காத ரம்பல காவ தங்கள் கடந்தி ருப்பமுக் கண்ணனார் ஆத ரம்பெரி துந்த னக்கணித்தாக வன்பு தழீஇக்கொடு நாத னாருரு மூடு புற்றி னயந்து பான்முலை விம்முறப் போத வாட்டி மகிழ்ந்து பூசை புரிந்த ருந்தவ மேயதே. 3 | 83 |
502 | நிச்ச நிச்சமிவ் வாறு பூசை நிகழ்த்தி யும்பர்த மாண்டுகள் எச்ச மின்றியொ ராயி ரஞ்செல வெய்த ருந்தவ மேயதால் பொச்ச மின்றி யெழுந்த வன்பு புகுந்து ருக்கநெ கிழ்ந்துள நச்சி நச்சி நறுங்க ணீருக நன்னெ றிப்படு தேனுவே. | 84 |
503 | கற்ற கல்வியி னாம்ப யன்கரு தார்பு ரங்கன லூட்டிய கொற்ற வில்லியை யேத்த லென்று குறித்த வாய்மையி னந்தணீர் பெற்றம் வந்தனை செய்த வாறிது பிஞ்ஞ கன்குளப் புச்சுவ டுற்ற வாறினி யோது வாமென் றுரைக்க லுற்றனன் சூதனே. | 85 |
காமதேனு வழிபடு படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 503
------------------------------
504 | கற்பக நீழல் வைகுங் காமரு தேனுப் பொற்பகப் போதி நீழற் பூசிக்கு நாளி னோர்நாள் முற்பகற் பூசை யாற்றி முதிர்தவத் திருந்த தாக விற்பகற் கதிரோன் மேல்பால் வேலையைச் சாரச் சென்றான் | 1 |
505 | தனதக மிருக்கை கொண்ட தம்பிரா னுருவ மெல்லாம் கனலுறழ் நெய்த்தோர் தோய்ந்த காட்சியிற் பொலியு மாறு முனமுல கனைத்து முன்னத் தறியுமுற் பனமே யென்னத் தினகரச் செல்வன் மாதோ சேந்தன னுடலஞ் சால | 2 |
506 | இரவெனுங் கால நண்ப னெய்துவ தோர்ந்து தென்பால் பரவைமண் ணுலக மாது பசுமஞ்சள் குளித்த தேய்ப்ப விரவிய வெப்ப நீங்கு மிளவெயின் மிளிர வேகி அரதன மிமைக்கு மேல்பா லலைகடன் முகட்டைச் சார்ந்தான். | 3 |
507 | பகைகொளுங் கரிய நாக பற்றுபு பையப் பையத் தகைகொள விழுங்கி யாங்குத் தரளமு மணியும் பொன்னும் வகைவகை கரையி னெற்றும் வார்திரைக் கடலி னுள்ளால் நகைகொளுங் கிரணக் கற்றை நாட்கதிர் குளித்த தன்றே. | 4 |
508 | செம்மைசெய் யரசன் மாயத் திகழும்வெண் மதியார்க் கஞ்சி விம்முறு தொழிலிற் பாங்கர் மேவிய மாந்த ரெல்லாம் தம்முடை யிருக்கை யண்மித் தகவுற வடங்கி யாங்குக் கொம்மெனப் பறவை யாதி குவிந்ததஞ் சேக்கை சார்ந்து | 5 |
509 | உரியவ னொருவன் மாய வொக்கலு மயலுங் கூடிப் பரிவொடு மவலித் தாங்குப் பகலவ னீங்க லோடும் புரிமுறுக் கவிழ்ந்து பைந்தேன் பொழிமலர்ப் பொதும்பர் தோறும் விரிசிறைத் தொழுதிப் புள்ளின் றுழனிமிக் கெழுந்த மாதோ. | 6 |
510 | குடநிகர் செருத்தல் விம்மிக் குவிமுலை வீங்கித் தாங்காத் தொடரிரு காலின் வாரச் சுவைப்பய மொழுகக் கற்றாப் படுமணி யிரைப்ப வோடிப் பட்டிக டோறுஞ் சார்ந்தாங் கடர்மனக் கனிவிற் கன்றை அழைத்திடுங் குரல்க ளெங்கும். | 7 |
511 | கலவிசெய் தவச மாகிக் காமரு சேக்கை யிட்ட அலரணைப் படுக்கை நின்று மணங்கனார் தலைவ னீங்கத் தலையெடுத் தெழுவ தென்னத் தழற்கதிர்க் கலவி நீத்த மலர்மதுக் கமலத் தோடு வண்டலை நிமிரா நின்ற. | 8 |
512 | உருகெழு பரிதித் தோன்ற லொண்கதிர்க் கரத்தா லள்ளிப் பருகலிற் குறைந்த பொய்கைப் பனிப்புன னிரப்பு மாபோன் மருண்மலி மாலைக் காலம் வருதலு மனஞ்சோ காந்து பெருகிய கண்ணீர் வாரப் பேதுறு நேமிப் புள்ளு. 9 | 9 |
513 | பருதியங் கடவு ளென்னும் பற்றல னிரியல் போக வருமதி யரசற் குற்ற மாலையஞ் செல்வ னன்னான் பொருண்மலி தெனாது திக்கின் புடவியா மனையைச் சால இருளெனுங் கதவஞ் சாத்தி யிருந்தனன் காவல் பூண்டு. | 10 |
514 | ஒற்றையந் திகிரி யெங்கு முருட்டிவார் கிரண மென்னப் பற்றிய செங்கோ லோச்சிப் பரிவுசெய் யிரவு நீக்கிக் கொற்றவ னேக வாங்கே குறுநில மன்ன ரென்ன முற்றிய மாலை நோக்கி முல்லைக ணகைத்த மாதோ. | 11 |
515 | வெய்யவற் கொளிமை யாந்து வேறுபட் டிருந்த செந்தீ உய்யவெண் மதிக்கீழ்ச்சில்ல தேயமுற் றாள்வ தொப்ப மையணி விழியி னார்கள் வயக்குமொண் விளக்க மாகி யையென மனைக டோறு மமர்ந்தொளி கஞற்று மாலோ. . | 12 |
516 | அருவிமும் மதமால் வேழத் தகடுகீண் டயில்கொள் சூலத் தொருவன்வந் தெழுந்த தேபோ லுலகெலாம் பொதிந்து நின்ற இருணெடு வயிறு போழ்ந்திட் டெழுந்ததா லெறிநீர் வைப்பின் மருவிய பைங்கூ ழெல்லாம் வளர்த்திடு முவவுத் திங்கள். | 13 |
517 | உரகமுண் டுமிழ்ந்த காலை யுட்டுளை யெயிற்றுக் காரி விரவிய தென்ன நாப்பண் விளங்கிய களங்கத் திங்கள் கிரணங்கள் கஞற்றிற் றெங்குங் கிளரிருட் கபாட நீக்கிப் பரவுமிற் பொருளைக் கையிற் பரிசித்துப் பார்க்கு மாபோல். | 14 |
518 | வரையெலாம் வெள்ளி வெற்பின் மயங்கின மாயோன் பாயல் திரைதவழ் கடலே யென்னத் திகழ்ந்தன கடல்களெல்லாம் புரைதபு வெள்ளி தன்னாற் பொலிந்ததோ ருலகே யென்னத் தரைவள ருலக முற்றுந் தயங்கின கிரணத் தம்மா. | 15 |
519 | விழைதகு கருப்பு வில்லி வெண்மதிக் கவிகை முற்றும் தழைதகத் தூக்கு முத்தின் றாமங்க ளரசங் காட்டுக் குழைதகு சாகை தாக்கக் கொம்மெனச் சிதர்ந்து சுற்றின் உழையுழை கிடத்தன் மானு முடுக்களங் கொளிர்ந்த தோற்றம். | 16 |
520 | மைந்தர்க ளாக்கங் காண வயிறுவாய்ந் துயிர்த்த தாயர் சிந்தையின் மகிழ்ச்சி மேன்மேற் றிளைத்தெழல் திண்ண மன்றே சந்திர னெழுத லோடுந் தரங்கநீர்ப் புணரி பொங்கி அந்தின்மிக் கெழுந்த தென்ப ஆரவா ரத்தினோடும். | 17 |
521 | மறைநெறிக் கஞ்சாத் திங்கள் வார்கதிர்க் கரங்க ணீட்டி மிறைசெய வுள்ள மாழ்கி மெலிந்தென தகத்தின் மன்னு நிறையினை யழித்த லென்னா ஞெரேலெனக் கும்பிட் டாங்குத் துறைமலி கமலக் காடு தூமலர்க் கூப்பி நின்ற. | 18 |
522 | பாங்குறு கமல மாதைப் பகலவன் கலவி யாற்ற ஈங்கிது பார்த்த லொண்ணா தெனவளர் குவளை யெல்லாம் தீங்கினுக் கஞ்சி மூடுஞ் செறிதிதழ் மலர்க டம்பால் தாங்கிய வன்பர் காணத் தடந்தொறும் விழியா நின்ற. | 19 |
523 | நீத்தனை யெம்மைச் சால நெருப்பென வுடற்றும் வெய்யோன் பாய்த்திய மிறையிற் படுப் பருவர லுழந்தேம் பாராய் காத்தினிக் கைக்கொ ளென்று கனிந்துசெவ் வாய்விண் டாங்கு பூத்தன கயிர வங்கள் புதுநிலா வெறித்த லோடும். | 20 |
524 | தாமரைப் பொகுட்டின் மேவித் தண்ணறா நுகர்ந்த வண்டு காமரு குமுத நீலங் கதுவித்தேன் பருகா நின்ற தேமரு செல்வ மாயச் சேர்ந்தவர் தம்மை நீத்திட் டேமரு மேதி லார்பா லிரும்பயன் றுய்ப்பார் மான. 1 | 21 |
525 | கணவர்தம் வதனத் திங்கட் கருணையஞ் சுதைகூட் டுண்டு பணவர வல்குல் நல்லார் படர்விழிச் சகோரங் கொட்ப உணவினை விழைந்து சூழ்ந்த வும்பருஞ் சகோரப் புள்ளும் இணர்படு கிரணத் திங்க ளின்சுதை நுகரா நின்றார். | 22 |
526 | வேறு பகலிற் றாக்கிய படர்சிறைக் காக்கையின் குழாங்கள் உகலிற் சார்தரவொறுப்பன கூகையின் குலங்கள் நகலிற் றீதரு நாமவே லரசர்நண் ணாரை இகலிற் றீர்தரு காலம்பார்த் திறுப்பது தகைய. | 23 |
527 | அரிய லாருந ரொருபுற மரிவையர் தமக்குத் தெரியல் பூண்கலன் அணிகுந ரொருபுறந் திணிதோட் பிரிக லாதவ ரொருபுறம் பிரிந்தவர்ப் பெறாமை உரிய மாணல மிழக்குந ரொருபுற மானார். | 24 |
528 | திமிர வேழத்தைத் தேம்பொழிற் பாசறைத் தளைத்து நிமிரும் வாண்மதிக் குடையெழ நிறைமணஞ் சீதம் உமிழ்மென் கான்மணித் தேருடை யமரனு முடற்றுந் துமிலப் போர்துறந் திரதிதோட் டொய்யிலிற் றோய்ந்தான். | 25 |
529 | மாத ராரிணை விழச்சுமா செனத்தெளிந் தகன்று காத லாரண மறிகலான் கழற்றுணை நிறுவி ஏத மேதுமெய் யாதமெய் யிருடியர் தமக்கும் போத மாதர்பாற் புகுவதற் கெழுந்ததவ் விரவு. | 26 |
530 | உயிர்கள் யாவையு முவப்புறு முவாமதி யிரவில் எயில்கண் மூன்றையு மெரித்தவர் பூசனை யியற்றிச் செயிரெ லாந்தபு தேவரா னிருக்கையைச் சேர்ந்து பயிலும் யோகத்தி னிருந்தது படர்பொறி யடக்கி. | 27 |
531 | ஆய காலையி லறவனார் திருமுன்ன ரெல்லா மேய வானிரைக் கன்றொடு மேவியாட் டயர்ந்து தூய தேனுவின் கன்றிருந் ததுசுடர் மதியின் பாய வாணிலா நோக்கியுட் படர்களி கூர்ந்து. | 28 |
532 | மதியெ னுந்தனி மாமனு மகிழ்ச்சியி னோக்க நிதிகு ரங்குற நோன்மைசால் வாலினை யெழுப்பிப் பதிசெ வித்துணை நிமிர்தரப் பார்சித ளெடுப்பக் கதிகொண் டோடிய துளர்தரு காலும்பின் னாக. | 29 |
533 | ஓடிச் சேணிடை நிற்குஞ்சற் றொய்யென மீளும் வாடி வேரொடு மிறும்புகள் குளம்புற்று மடிய நீடி நின்றபைம் புதலினைக் குப்புறு நிமிறுங் கூடி நின்றகன் றினத்துறுங் குறுகிமோந் தார்க்கும். | 30 |
534 | நிலங்க திர்த்தகோட் டினுநெடுந் தாளினு மகழும் விலங்கி மேக்கெழீஇப் பின்னடி விதிர்ப்புற வோடுங் கலங்கும் வன்றலை துளக்குங்கா சினிதுக ளாடி இலங்க மண்டிலங் கொளுந்திசை திசையிரி தருமால். | 31 |
535 | நிருத்த மாட்டயர் நிருமலன் கன்றுரு வாகித் திருத்த மேவரச் செய்திடு நடனமீ தொன்றோ கருத்தி னாடரி தெனக்கட வுளர்விசும் பேறி உருத்த வன்பொடு மிமைப்பிலா விழிப்பய னுற்றார். | 32 |
536 | சடச டென்றிரி தருந்தனி யோதையுந் தழங்கப் படர்நெ டுங்குரல் பயிற்றுறு மோதையும் பரப்ப அடர்வ னத்துறை பறவையு மிருகமு மஞ்சிக் குடர்கு ழம்பவோட் டந்தன வூர்வன குமைந்த. | 33 |
537 | கவைய டிப்படுங் கதிர்மணிக் குலங்களும் பொடிந்த குவையி லைத்தருக் கோட்டிடைப் படுவன துமிந்த இவையெ னத்தெரி யாவகை யிலதைகள் குழைந்த அவையி ழைத்தலி னாங்குறை நிரைகளும் வெருண்ட. | 34 |
538 | அன்ன கன்றுடை யுறுப்புறுப் பமர்தரு மமரர் இன்னன் மிக்குழந் தெய்த்தன ரென்செய வல்லார் வன்னி கொன்றையு மத்தமு மலைத்தவார் சடில முன்ன வன்றனைக் காவென முறைமுறை பணிந்தார். | 35 |
539 | அட்ட நாகமு மட்டதிக் கயங்களு மலைந்த முட்டி லாதுமண் பரித்தமா சேடனார் முடிகள் சட்ட வாற்றில வாயின தவிர்ந்துவா ழிடமாய் விட்ட மாதிரத் தலைவரும் விதிர்விதிர்த் தனரே. | 36 |
540 | அடிய ழுந்தமிக் கிடுந்தொறு மவனிகம் பிப்ப நெடிய குன்றுக டுளங்கின துளும்பின நெடுநீர்க் கடல்க ளூடிய காரிகை மடந்தையர் கணவர் தடவு வார்புய மிறுகுறத் தழீயினர் தாமே. | 37 |
541 | களிமி குந்தெழ வின்னண மாட்டயர் கன்று நெளிய வன்னில ஞெரேலென நேருற வோடி ஒளிசெ யாதிலிங் கத்தினை யுள்ளுறப் பொதிந்து வெளியி னின்றவன் மீகத்தை மிதித்ததோ ரடியின். | 38 |
542 | நீட்டி யிட்டகா னிருமலன் சென்னியி லழுந்திப் பூட்டி யிட்டெனப் புயக்கவந் துறாமையின் முகத்தைக் கோட்டிக் கோட்டினாற் கோட்டுமண் கொண்டுபுற் றுடைத்துச் சேட்டு மாமணி யுருவமுங் கீழ்ந்துசென் றதுவே. | 39 |
543 | குளம்ப ழுந்திய வூற்றினுங் கோடுபுக் கெடுத்த இளம்பு ணூற்றினு மெழுந்தநெய்த் தோர்பெரு கியதால் களம்பு குந்துபுற் றுருவமாய்க் கரந்தமா மேரு வளம்பொ லிந்ததன் னொளியினை வயக்கினான் மான. | 40 |
544 | திண்மை மல்குமண் பொதிந்துபூ சனைபுரி திறனோர்ந் தொண்மை மல்கிய வங்கியும் பூசனை யுஞற்ற வண்மை மல்கிய திருவுரு வளைந்ததும் போலுந் தண்மை மல்கிய செம்புனல் பெருகிய தயக்கம். | 41 |
545 | வேறு இறைவனார் திருமேனி யிளங்கன்றி னிடருழந்த மிறைதெரிந்து சோகத்தின் விழுந்ததுபோ லுயிர்த்தொகுதி பொறிதவிர வருதுயிலிற் புணர்யாமங் கழிதரவை கறையடுத்த துறுசோகங் கழிக்கவரு மருத்துவன்போல். | 42 |
546 | கனிவாயைத் திறவாது களத்தொலிகொண் டழுவார்போல் கனிவாயி னிசைமிழற்றி நண்ணுவவண் டலர்தோறும் பனிவாய்ந்த மலர்களின்வாழ் பண்ணவர்க்குப் பணிவார்கட் கினியான்மெய் வடுப்பட்ட திசைத்திசைத்தே குவபோல. | 43 |
547 | நிலவுமிழும் பணிக்கிரண நிரப்பவருங் குளிர்க்குடைந்திட் டெலிமயிர்ச்செம் போர்வையழ கெறிக்குமுருப் போர்த்ததுபோல் ஒலிகுருதி கொப்பளிக்கு மூறுதெறிந் தாற்றாமே கலிகெழுவன் குரலெழுப்பிக் கரைவனகோ ழிக்குலங்கள். 4 | 44 |
548 | திரணமெடுத் திடைநாட்டித் தேவர்கடம் வலியழித்த பரமரெறுழ்த் திருமேனி படுமூறு தெரிந்ததனால் உரன்மலிந்து வரும்பாவ மொழிப்பமுயன் றனபோல வரமலிந்த வலிகெழுவு மனுக்கணிப்ப கருங்குருவி. | 45 |
549 | எட்டுருவி னோருருவா யிருந்தநா மெம்பிராற் கிட்டமுறுந் திருமேனி யிடர்காணத் தகுமேயென் றுட்டிகழும் வருத்தத்தா லொளிமழுங்கிற் றுவாமதியம் அட்டுமொளி விளக்கழலு மவ்வாற்றின் மழுங்கிற்றே. | 46 |
550 | உருத்திரனைச் சதாசிவனை யொளிர்விந்து நாதத்தைக் கருத்திறந்த பேரொளியைக் கடப்பாட்டிற் றியானித்தார் வருத்தமறுஞ் சரியைமுத னாற்பணியு மரீஇயினோர் திருத்தனவ னுருச்செம்புண் தீரநினைப் பார்போல. | 47 |
551 | கூகைவிழி யொளிவிளங்கக் குணிப்பரிய பலவிழிகட் காகுமொளி யடக்கமுற வடுத்தவிர வினைநோக்கி ஏகுதிகொ லெனவியம்பி யிழித்தலர்தூற் றுவபோலச் சாகைதொறும் வளர்சேக்கைத் தடஞ்சிறைப்புள் சிலம்பினவே. | 48 |
552 | கருமவுத யந்தழைத்துக் கழிகாலைக் கனலியந்தேர் அருணவுத யஞ்சிறந்த தரசனென விருந்தவன்கன் றுருவினிறைக் கிடர்செய்த தோர்ந்திலனென் றுயர்கணங்கண் மருவுமவன் றிசைநகரம் வாளெரியூட் டியதென்ன. | 49 |
553 | வேறு பனியெனும் பருவந் தாக்கப் பங்கயப் பொய்கை முற்றும் நனியழ கிழந்தா லென்ன நாயக னிறத்த லோடும் வனிதைய ரணிநீத் தென்ன மதியொடு முடுக்கண் மாயத் தனியொடு வான மாங்குத் தவ்வென விருந்த தம்மா. | 50 |
554 | வேறு கண்ணாக வுருவாக கைக்கொண்டோன் றிருமேனி புண்ணாகத் தனதுருவும் புண்ணாதல் கற்பென்று மண்ணாத மணியுருவம் வார்குருதி யெழப்புண்ணாய் விண்ணார வெழுந்தான்போன் றெழுந்தனன்வெங் கதிர்க்குரிசில். 1 | 51 |
555 | வேறு நெருங்கிவிண் ணமரர் சால நெடுமலை கொண்டு வாட்டத் தருங்கதிர் மணியெ வர்க்கும் பயன்படத் தக்க தன்றென் றிருங்கதிர் மணியை யாரு மின்புற வீன்ற தென்ப கருங்கடன் மருங்கு சூழ்ந்த காமர்பாற் புணரி நாண | 52 |
556 | நெருப்பிது சுடுமென் றஞ்சி நிறைபுன லள்ளி யோக்கி விருப்பொடுந் தணிப்பார் மான வெஞ்சுட ரெழுத லோடுந் தருப்பண மறையி னீதி தவறிலர் செய்யா நின்றார் பொருப்பினை வணக்குந் திண்டோட் பூரணன் பாதம் போற்றி. | 53 |
557 | வெய்யவ னுருவ நோக்கி வெருண்டுபைங் குவளைக் கானம் ஒய்யென மலர்க்கண் மூடிற் றுவாமதிக் கலவிக் காலை யையென வுறுத்தப் பட்ட வணியிதழ்க் குறியைக் காப்பச் செய்யவாய் மூடிற் றோடைத் தேம்புனற் குமுதக் காடு. | 54 |
558 | தணந்தவென் கணவன் வல்லே சார்தர வருளு கென்னாப் பணந்தழை யரவ மாலைப் பகவனைக் கரங்கள் கூப்பும் மணந்தவழ் கமல மென்றூழ் வருதலுந் தழுவி மார்பம் புணர்ந்திடக் கூப்புங் கைகள் பொருக்கென விடுத்து நின்ற. | 55 |
559 | ஆடவர் மணித்தோ ளார வணைந்திராப் பொழுது முற்றும் பாடகத் தளிர்மென் பாதப் பாவையர் குவவுக் கொங்கை பீடுமிக் குறுத னோக்கிப் பின்கொடுத் தினைந்தா லென்ன வாடிய நேமிப் புட்கள் வயின்வயின் மகிழ்ச்சி கூர்ந்த. | 56 |
560 | விளம்பிய காலைப் போதின் விரைகமழ் தீர்த்த மாடி உளம்பொதி யன்புபொங்க வுருகட னாற்றித் தேனு இளம்பனி மதிவெண் கோட்டின் எரிபுரை சடிலத் தேவை நுளம்புறு வனத்திற் பூசை முடித்திட நோக்கிற் றன்றே. | 57 |
561 | தீதுறு சகுனங் காட்டத் தெய்வதச் சூழ னீண்ட பாதவங் கிடந்த வாறும் படர்துகள் பட்ட வாறும் பூதலம் புழுதி பட்ட புதுமையு நோக்கி யென்னே ஈதிவ ணிகழ்ந்த வாறென் றெண்ணியங் கேகுங் காலை. | 58 |
562 | பாலினா லட்டப் பட்டுப் பளிக்கொளி காட்டும் புற்றின் மேலெலாஞ் செந்நீ ராடி மிளிர்தலை நோக்கி யீது மாலினார் பூசை யாற்றி மந்திரத் தருச்சித் திட்ட சேலினார் தடத்துச் செந்தா மரைமல ராகு மன்றேல். | 59 |
563 | பத்தியிற் றனத னண்மிப் பதுமரா அகத்தின் குப்பை மெத்துறச் சொரிந்து பூசை விளைத்ததொன் றாகு மன்றேல் அத்துமற் றமரர் செஞ்சாந் தணிந்ததா மதுவு மன்றேற் கொத்துறு மசுர ரன்பிற் கோடித்த செம்பட் டாமல். | 60 |
564 | என்றுசே யிடையே கண்ட விமையவ ருவக்குங் கற்றான் மன்றவீ தெனத்தே றாத மனத்தொடு மனவே கத்திற் சென்றது தேவ தேவர் சிந்தையு நாடொணாத கொன்றைவார் சடையான் வைகுங் குரூஉமணிப் புற்றின் பாங்கர். | 61 |
565 | பாயின குருதி நோக்கிப் பதைபதைத் தன்னோ வன்னோ ஆயின செய்தி யென்னே யாரிது செய்ய வல்லார் தாயினு மினியார்க் கீது சார்வதே யென்று தன்பான் மேயின மழவுக் கன்றை விழியுறப் பார்த்துச் சோரும். | 62 |
566 | கோட்டொடு குளப்புக் கால்கள் குருதிதோய்ந் திருந்த கெட்டேன் பாட்டளி முரலுங் கொன்றைப் பசுந்தொடைப் பரம னார்தந் தீட்டிய புகழ்சான் மெய்யிற் செம்புனல் வெள்ளம் போர்ப்ப வேட்டைவல் வினையச் சால வீட்டவோ வீண்டுப் போந்தேன். | 63 |
567 | பூவினா னுறங்க வாக்கம் பொய்த்ததும் புலவ ரீசர்க் கேவினாற் கிசைத்த வாறு மேறுமா மவன்சொ னம்பித் தாவிலாத் தவஞ்செய் தாய்ந்த தவத்தினான் கரைந்த வாறும் மேவியா காய வாக்கு விரித்தது மிதற்கு மன்னோ. | 64 |
568 | நன்னலம் பயப்ப துண்டேற் றீயவு நல்ல வாகுஞ் செந்நல மிழப்ப துண்டே னல்லவுந் தீய வாகும் இன்னவால் வினையி னாக்க மெனினிடை யேது வான அன்னவர் தம்மை நோவ வழக்கிலை யந்தோ வந்தோ. | 65 |
569 | நல்லுயிர் கோறல் செய்த நன்றியைக் கோற லாதி புல்லுப பாத கத்துட் பொலிந்ததிண் வினைக ளாகுஞ் சொல்லுமா பாத கங்க ளவற்றினுந் துயரஞ் செய்வ வல்லதி பாத கங்க ளவற்றினும் வலிய வாமே. | 66 |
570 | உறுமதி பாத கத்து ளொருவிழி நுதலிற் கொண்ட மறுவிலிக் கிழைத்த குற்ற மாற்றுறு கழுவா யில்லை தெறுவலிக் காலற் செற்றோன் சேவடிப் பிழைப்பி னுள்ளும் பெறுமுரு வூறு செய்த பிழைக்குநேர் பிழையு மில்லை. | 67 |
571 | அப்பிழை படைப்பு வேண்டி யருந்தவ மாற்றி நாயேன் எப்புல வோருங் கூடி யின்னமு தெடுக்க முன்னி ஒப்பின்மந் தரத்தை நாடி யுரகங்கொண் டலைத்து வேலை வெப்புநஞ் சடப்பட் டாங்கு மேவினே னென்செய் கேனே. | 68 |
572 | திருவடிப் பிழைத்தல் சற்றே செய்யினுஞ் செய்த பாவி மருவிய குலத்து முன்னர் வந்திறந் தோரெல் லோரும் பொருநின ரிருக்கின் றோரும் பொருந்தமேல் வருவோர் தாமும் ஒருவரு நிரய முற்று மூழிகள் பலவுந் துய்ப்பார். | 69 |
573 | நன்குற நமக்கு நாடி யிருத்தலு நவையே யாகும் மின்குடி கொண்ட மேனி விழுப்புணுக் காற்றே னாற்றேன் என்குல மிறக்க வின்றே யானுமிங் கிறுக வென்னாத் தன்குலக் கன்று மாழ்கத் தரையிடை விழுந்த தன்றே. | 70 |
574 | நாசியி னுதிரஞ் சோர நனிதலை நிலத்தின் மோதுங் காசினி குழியக் கால்கள் கதுமென எடுத்துத் தாக்கும் பூசிய நீற்றுத் தன்மெய் புண்கொளப் புரண்டு கொட்கும் ஆசிடை யுயிர்ப்பு வீங்கி யடங்கமூர்ச் சித்த தம்ம. | 71 |
575 | நெடிதுபோ தவச மாக நிலத்தெதிர் கிடந்த தாயைப் படியின்மே னின்ற கன்று பரிவொடு நக்கா நின்ற தடியினூ புரங்க ளார்ப்ப வாடிய வழக னோக்கி நொடியின்வா னிடையே நின்றா னோன்மைசா லறவெள் ளேற்றின் | 72 |
576 | வேறு பாரிட நெருங்கமலர் பண்ணவ ரிறைப்ப வாரண முழங்கவடர் பல்லிய மியம்ப வாரணி முலைப்பெணிட மன்னின னிருப்ப நீரணி வனத்தின்வெளி நின்றருளு நாதன். | 73 |
577 | ஓங்குமொலி யானுமிடை யும்பர்திர ளானுந் தாங்கரு வெருட்கொடு தளர்ந்துவிழு தாயை நீங்கியல மந்துநெடி தோடிய திளங்கன் றாங்கதனை நோக்கியயன் மேல்விழி யளித்தான். | 74 |
578 | அந்தணன் வணங்கியரு கேமெல நடந்து கொந்துபடு பாசறுகு கொய்துகர நீட்டிப் பந்தமுற வங்கைவளர் பாசமிட றிட்டுத் தந்தன னடத்தியொரு சாமிதிரு முன்னர். | 75 |
579 | அங்கணன் விழிக்கடை யளிப்பவரு ணந்தி அங்கைகொடு தட்டியெழு கென்றறைய வூழி அங்கியுமிழ் வேல்வல மணிந்தகும ரேசன் அங்கணொழு கும்புன லகங்கைகொடு மாற்ற. | 76 |
580 | ஐந்துகர னண்ணலருள் செய்யவுட லந்தை வந்துபுழை வார்கையறன் மல்குதுளி யாக வெந்துயரின் மூழ்குமதன் மெய்முழுது முய்த்தான் நந்தியது சோகமுயிர் நந்தியது கற்றான். | 77 |
581 | சொறிந்தன னெழுந்தசுரை யானுடல் வலாரி மறிந்துலவு காற்றினிறை வன்றுக டுடைத்தான் செறிந்துபுன லாட்டிவரு ணன்செல முகுந்தன் அறிந்திறைவர் தாளணிய தாகவுறு வித்தான் | 78 |
582 | பண்டறிகி லாதபரமன் படிவ மாரக் கண்டதுள நெக்கது கனற்கண்மெழு கென்ன விண்டவிழி நீர்பொழிய மெய்ம்மயிர் பொடிப்ப மண்டனில் விழுந்துவலம் வந்துதுதி செய்யும். | 79 |
583 | வேறு தண்ணார் மதிசூ டியசங் கரனே விண்ணோர் பணிகின் றவிழுத் துணையே அண்ணா வருளே யமுதே யளியே மண்ணா வினையேற் கெளிவந் தனையே. 80 | 80 |
5842 | ஆறா டியவாற் சடையந் தணனே நீறா டியமே னியினின் மலனே ஏறா டியநீள் கொடியெம் பெருமான் மாறா வினையேற் கெளிவந் தனையே. 81 | 81 |
585 | ஏஎ யெனவேள் வியிறுத் திடுநாட் காயா தபனார் பல்கழற் றினவா வீயா தவிண்ணோர் தபவீட் டினவா மாயா வினையேற் கெளிவந் தனையே. 82 | 82 |
586 | அடியா ரகமே குடியா மொளியே படிநா டரிய பரதெய் வதமே முடியா முடிவே முதலா முதலே மடியா வினையேற் கெளிவந் தனையே. 83 | 83 |
587 | கங்கா ளமணிந் தகரும் புயனே சிங்கா மலர்மெல் லணையான் சிரமொன் றங்காந் துரையா டவறுத் தவனே மங்கா வினையேற் கெளிவந் தனையே. 84 | 84 |
588 | அறிவா மமலே சனொடம் பிகையே வெறியார் கடம்வீழ் கரடத் தவனே பொறிமா மயிலூர் தருபுண் ணியனே மறியா வினையேற் கெளிவந் தனிரே. | 85 |
589 | வளிவந் துளர்போ திவனத் திடையே களிவந் திலதான் கழிவுற் றதெனத் தெளிவந் தவர்செப் பலுறா வகையே எளிவந் தனைபொ லுமெனக் கிறைவா. 6 | 86 |
590 | அருண்மே னியளித் தவர்செய் தொழிலுள் வெருளா துபடைப் புவிதிப் பலென மருளான் மதியெண் ணிவலித் தமையால் இருளார் பழிபா வமிணங் கினவே. | 87 |
591 | கெட்டே னடிகேள் கிளர்பொன் னுருவம் பட்டூ டுருவப் படர்காற் சுவடு கெட்டூ சிநிகர்த் தமருப் புழவும் ஒட்டா தவர்நே ரவுறுத் தினனே. | 88 |
592 | கருணைக் கடலா தலினீ கடியா திருமைக் குமளிப் பவெதிர்ந் தனையால் அருமைத் திருமே னியணங் கவளெப் பொருள்கொண் டுபொறுத் தனள்பூ ரணனே. | 89 |
593 | கணவன் வழிகா ரிகையா ரதனால் மணமென் குழன்மா துபொறுத் தலுமாம் அணவுங் கணநா தர்முனா தவர்தாங் குணம்யா வதுகொண் டுபொறுத் தனரே. | 90 |
594 | தலைவன் வழியல் லதுசார்ந் தவரும் உலைவொன் றுமுறுத் தல்செயா ரதனால் நிலைநின் கருணைப் பெருநீர் மையறிந் தலைசெய் திலரான் றகணத் தவரே. | 91 |
595 | அன்னா பிழைசெய் துயிர்வாழ்க் கையுமிங் கென்னா மதனா லெனையின் னருளால் என்னா ருயிருள் ளளவுந் தழலுங் கொன்னார் நிரயங் குடியாக் குதியால். | 92 |
596 | வேறு நடுநடுத் தின்னண நவிற்று மாவினைக் கடுமிடற் றிறைவர்கண் ணளித்துத் தேற்றுவார் விடுவிடு கவலையை விதிர்ப்புற் றஞ்சலை கொடுநெடும் பிழையினை யகத்திற் கொண்டிலேம். | 93 |
597 | மன்றநீ புரிந்திலை மறவி ளங்குழக் கன்றறி யாமையிற் கண்டதிப்பிழை ஒன்றுநின் பரிவினா லுளத்திற் கண்டிலம் அன்றியு மடியவர் குற்றங் காண்கிலேம் | 94 |
598 | குளப்படிச் சுவடும்வன் கோட்டி னேறுநம் வளப்படு முடிக்கணி மதியி னாக்கினேம் உளப்படு முமைமுலைச் சுவடொண் கைவளைத் திளைப்புறு தழும்பும்போன் மகிழ்சி றத்தலின். | 95 |
599 | ஒள்ளிய விவ்வடை யாள மும்பர்சூழ் வெள்ளியங் கிரிமிசை விளங்கி லிங்கத்து நள்ளுற வணிந்தன நவிற்றி லிங்கங்கள் தெள்ளிய வுலகம்வே றின்மை தேறவே. 96 | 96 |
600 | இவ்வடை யாளங்கண் டிறைஞ்சி யேத்தினார் ஒளவிய மனத்தின ரேனு மன்னவர் பௌளவமென் றயிர்ப்புறும் பவத்தி னீங்கிப்போய்ச் செவ்விய முத்தியைச் சேர்வர் திண்ணமே. | 97 |
601 | ஆதலி னின்பரி வகற்றிச் சூழலின் மாதவ மாற்றிநீ வாடு கின்றனை ஏதுளத் தெண்ணிய தியம்பு கென்னலுங் காதலி னுரைத்திடுங் காம தேனுவே. | 98 |
602 | வாழிநின் பொற்கழல் வாழி யென்பிழை ஊழியு நிரயம்புக் குழந்துத் தீர்ப்பதோ பாழிமால் விடத்தினைப் பருகி னாலென ஏழையேற் கிரங்குநின் கருணை யீட்டமே. | 99 |
603 | கடையனே னுய்ந்தனன் கன்று முய்ந்ததிங் கிடையறா தென்குல மென்று முய்ந்ததால் உடையவ பிழைபொறுத் துவத்தி மற்றினி அடைவதுன் பாலெனக் கற்புச் செல்வமே. | 100 |
604 | வானவர் சூழ்ச்சியின் மாலங் கேவலின் ஆனமர் கொடியினா யகில மாக்கலும் வானுற வருளுதி யெனலுந் தேனுவுக் கேனவெண் கொம்பினா னியம்பு கின்றனன். | 101 |
605 | பத்தியு மளித்தனம் பலருங் காணிய இத்தலத் திப்பொழு தெமது நாடகங் கைதலக் கனியெனக் காட்டக் காணுதி முத்தியும் வழங்குது முடிவிற் றேனுவே. | 102 |
606 | வேறு. காம தேனுபுர மென்ன விந்நகரி காம மல்குபெயர் கொள்ளவும் நீம னாதரவின் வைக லானரசி னீடு சூழலிது பட்டியென் நாம மேவவு நமக்கு மப்பெயர்மு னாட்டி நாதனென வோதவும் ஏம மாருலக முற்று மின்பமுற வீண்டு னக்குவர மாக்கினாம். | 103 |
607 | நேச மல்கிவழி பாடு செய்குநரை நீடு முத்தியி னிறுத்துநிர்ப் பீச மாநகர மீதி தன்கணுயர் பெற்ற மேவிழைவு முற்றுறத் தேசு லாவவுபொரு ளாதி நல்குவது செய்தி லேநகர முத்தியே வீசு மென்பது விளக்க நின்றவொரு சான்று முண்டது விளம்புதும். | 104 |
608 | வடுக ரெண்மருள் வலம்பு ரிந்துமலி தோகை ஞாளியெனும் வாகனம் விடுதி செய்தவொரு ஞான நல்வடுகன் மேவி யிந்நகரி காவல்பூண் டிடுவ னீங்கினிது காண்டி யாதலி னிணர்த்த கோடுக ளொசிந்தெழக் கடுவ னின்றுகளு மிவ்வ னத்துனது காம நல்குதல் கணித்திலம். | 105 |
609 | வரும்பி றப்பினல மெய்த நிற்குமறம் வந்த விப்பிறவி யின்னலந் தரும்பெ ரும்பொருள் பரந்த காமமிவை தம்மை நாடிய தவங்களும் அரும்பு மெய்யொளி யளிக்கு மிந்நகரி னைந்தி யோசனை தெனாதுற விருந்து ணர்ப்பொழில் வராக நீள்வரை யிருந்த தானைமலை யென்பரே. | 106 |
610 | தூம்பு றுங்கைமத வேழ மேய்ந்துபயில் சோலை சூழ்ந்தவத னுச்சியின் ஆம்ப ரத்தினடி நின்றெ ழுந்தொழுகு மாம்ப ராவதி வடாதினில் தேம்ப ழுத்துவரு காவி ரிக்குடதி சைக்க ணார்த்துலவு காஞ்சியென் றோம்பு கின்றகுடி ஞைத்தெ னாதொருச பீச மாநகர முண்டரோ. | 107 |
611 | வன்னி நீள்வன மிருத்த லானஃது வஞ்சி யென்றுபெயர் மேவிய தன்ன மாநக ரடுத்து நம்முருவி னைது பூசைபுரி கிற்றியாங் குன்ன வாவினை நிரப்பு துங்கடிதி னென்று ரைத்தருளி யும்பரார் துன்னு சூழலிடை யார ணங்கடுதி செய்ய மாநடன மாடினான். | 108 |
612 | நந்தி மத்தள முழக்க வீணைகொடு நார தாதியிசை பாடநீள் இந்து வென்றநுத லம்மை தாளமிசை யக்க ரத்தின்முறை யொத்திட எந்தை போற்றிசய போற்றியென யாவ ருங்களி துளும்புற அந்தி வண்ணனுயர் பிப்பி லப்பொதியி லாடல் கண்டதுயர் பெற்றமே. | 109 |
613 | போதி யம்பல நடித்து நாதர்புனி தச்சி வக்குறியு ளாயினார் சோதி மல்குநட னச்சுவைக்கட லழுந்து கின்றசுரர் கோதன மாதி லிங்கமறை புற்று மற்றுமடி யோட கழ்ந்துவெளி கண்டது கோதி லாதநிதி யஞ்ச னத்தவர் குறித்த கழ்ந்துவெளி கண்டென. | 110 |
614 | இட்ட காற்சுவடு நீண்ட கோடுழுத வேறு நல்லவடை யாளமாம் பட்டி நாயகர்வன் மீக நாதர்பக ராதி லிங்கமக லாதவர்க் கொட்டு மன்புள மயற்பு றத்தொழி விசைந்தி லாமைசில நாளுற முட்டி லாதவழி பாடு முன்னரின் முடித்தி ருந்திசைவு கொண்டபின். | 112 |
615 | பிப்பி லாரணியம் வெள்ளி மால்வரை பெருக்க றாதபிற வாநெறி ஒப்பி லாதபிற வாநெ றித்தல மொளிர்ந்த பல்பொருளு மும்பரார் எய்ப்பி லாதுபல கால மும்பணி யியற்றி லிங்கமொடு முள்ளகந் தப்பி லாவகை யுறுத்தி றைஞ்சுபு தணந்த தாலமரர் கோதனம். | 112 |
616 | வேறு மாடு போந்துறு மாதிர நோக்கி வணங்குபு நீடு கின்ற வருச்சுன மால்வரை நேர்புகுந் தோடு நீர்ச்சுனை தோய்ந்துமை யம்மை யுயிர்த்தருள் நாடு செல்வத்தை நச்சி யிறைஞ்சி யெழுந்ததே. | 113 |
617 | உச்சி யோங்க லிவர்ந்தத னூடுரு வப்புகுந் தெச்ச மாக விருப்பன குன்றிடைத் தாழ்ந்துபோய் எச்ச நாயக னாகிய வீசனிருந்தருள் கச்ச மில்வள மல்கிய நாகங் கலந்ததே. | 114 |
618 | அங்க ணாதன் முடித்தலத் தும்மடை யாளங்கண் டெங்க ணாயக னின்னரு ளின்னண மோவெனப் பொங்கு மார்வம் புறத்தெழ வன்பு புதுக்கிப்போய்ப் பங்கி னாள்சிலை நண்ணி யவளைப் பணிந்ததே. | 115 |
619 | அரிதி னங்ககன் றூடறுத் தேகி யயன்சிலம் புரிதி னேத்தி யொழிந்து சென்றானை விலங்கலின் வரிது ழாவிய வண்டுள ராம்பர மூலத்துப் பெரிது மூற்றெழு தீர்த்தந் துளைந்தது பெற்றமே. | 116 |
620 | ஆம்ப ராவதி யின்கரை யேநடந் தாங்கிடைத் தோம்ப டாவகை சோமன் பணிந்தசோ மேசனைக் கூம்பு றாதவன் பாற்குழைந் தேத்திகும் பிட்டுப்போய் நாம்ப டாதரு ணல்கும்வஞ் சித்தல நண்ணிற்றே. | 117 |
621 | அன்ன மாடு மகன்றுறைக் காவிரி யாற்றினும் இன்ன றீர்த்திடு மாம்பர மாநதி யின்கணுந் துன்னி யாடிச் சுருதிக ணாடருந் தோன்றலைப் பன்னு நூன்முறைப் பூசனை யாற்றிப் பயின்றதே. | 118 |
622 | கால காலன் கபாலங்கை யேந்திய கண்ணுதல் ஏல வார்குழ லோடெதிர் தோன்றியெண் ணும்வரஞ் சால வீசலுந் தாழ்ந்தது கொண்டு தணந்துபோய் ஞால மாதி யுயிர்த்தொகை நன்று படைத்தவே. | 119 |
623 | ஆன டுத்துயர் பூசனை யாற்றி யகிலமுந் தான ளித்தலி னாற்கரு வூரெனத் தக்கது வான டுத்தெழும் வஞ்சி பசுபதி யாயினோர் பான நஞ்சினர் பாழியு மானிலை யாயிற்றே. | 120 |
624 | கூர்க ழித்தலைக் கூம்பவிழ் நீலங்கண் ணீலந்தண் கார்க ழித்த மிடற்றினர் காமர்பே ரூரின்விண் ஊர்க ழித்துறு மானெதி ராட லுவந்தது மார்க ழித்திரு வாதிரை நாளந்த மாண்பினால் | 121 |
625 | ஆண்டு தோறுமந் நாள்வரும் போதங் கடுத்துயர் தாண்ட வம்புரி தத்துவ நாதனைத் தாழ்பவர் பூண்ட சோதி முடியடை யாளங்கள் போற்றுவோர் நீண்ட மாலறி யாநிலை யெய்துவர் திண்ணமே | 122 |
626 | அமிர்த மீன்ற வலைகடற் றோன்றிய வானுவந் தமிர்த மாட்டி யருச்சனை சால வியற்றிய அமிர்த லிங்கத் தமலர்த மிக்கதை கேட்டவர் அமிர்த ராகுவர் செல்வரு மாகுவர் வாய்மையே. | 123 |
627 | இது நாதன் முடிக்கடை யாள மியைத்தவா றோதி னாமினி மாதவத் தீர்பொன் னுடையினான் பூத நாதனைத் தென்கயி லாயத்துப் போற்ரிய காதை கேண்மின்க ளென்றருட் சூதன் கரைவனால். | 124 |
குழகன் குளப்புச் சுவடுற்ற படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 627
This file was last updated on 13 December 2008.
Feel free to send corrections to the webmaster.