logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandha-puranam-of-kachchiyappa-chivachariyar-singamugasuran-vathai-padalam

கந்தபுராணம் - யுத்த காண்டம் - சிங்கமுகாசுரன் வதைப் படலம்

Kandhapuranam of Kachchiyappa Shivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

யுத்த காண்டம் - சிங்கமுகாசுரன் வதைப் படலம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

4. யுத்த காண்டம்

 

12. சிங்கமுகாசுரன் வதைப் படலம்*

 

     ( * ஆறாநாள் சிங்கமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்.)

 

என்னுலும் ஒற்றர் கேளா இறைவனை இறைஞ்சி ஏகி

உன்னுறு நினைப்பின் முந்தி உத்தரத் தளக்கர் நண்ணி

மன்னகர் புகுந்து ஞௌ¢ளல் கடந்துமந் திரத்துட் புக்குச்

சென்னியா யிரங்கொண் டுள்ள சிங்கமா முகவற் கண்டார்.         1

 

களித்தனர் மகிழ்ந்து தூதர் கான்முறை வணங்கி நிற்ப

அளித்திடும் அரசின் வைகும் அரிமுகன் வந்த தென்னை

கிளத்திடு வீர்கள் என்னக் கேடிலா அவுணர் மேலோன்

விளித்தனன் ஐய நின்னை விரைந்தனை வருக வென்றார்.        2

 

வேறு

 

சரத்தினுங் கடியவர் இனைய சாற்றலும்

அரித்திறல் முகத்தவன் வினவி ஆயிடை

விருத்தமுண் டேலது விளம்பு வீரெனா

உரைத்தனன் நன்றென ஒற்றர் கூறுவார்.                 3

 

நும்பிஆஆ வரையாடு நுதிகொள் வேலினால்

அம்புலி வரைப்பில்வந் தட்ட கந்தவேள்

நம்பதி முன்னவன் நகர்வந் தெய்தினான்

செம்பது மன்முதல் தேவர் சூழவே.                             4

 

வந்திடும் எல்லைபோய் மலைந்து பைப்பயப்

புந்திகொள் அமைச்சருஞ் சிறாரும் பொன்றினார்

உய்ந்தனன் இரணியன் உததி ஓடினான்

எந்தையங் கிருந்தனன் புதுமை ஈதென்றார்.                      5

 

தொழுந்துஆ¨கி கையுடைத் தூதர் இன்னணம்

மொழிந்தது வினவலும் முனிவும் மானமும்

அழுந்திடு துயரமும் ஆகம் போழ்ந்திட

எழுந்தனன் அவுணரோ டேகல் மேயினான்.                      6

 

முன்புறு கடையுறா மொய்த்த தூதரை

என்பெருஞ் சேனையைக் கொணர்திர் ஈண்டெனத்

தென்புலக் கோமகன் ஒற்றிற் செப்பலும்

மன்பெருந் தானைகள் வல்லை வந்தவே.                7

 

தூசிகொள் நாற்படை துவன்றிச் சேர்தலும்

ஆசுறும் அரிமுகத் தண்ணல் கண்ணுறீஇப்

பாசன மன்னவர் பாங்கர் சுற்றிடத்

தேசுடை மணிநெடுந் தேரொன் றேறினான்.                      8

 

தாரொலி செய்தன தாள்வ யப்பரி

பேரொலி செய்தன பிறங்கு பூட்கைசேர்

காரொலி செய்தன கண்டை ஆர்த்தன

தேரொலி செய்தன தெழித்த சில்லியே.                  9

 

முரட்டுடி சல்லிகை முரசங் காகளம்

உருட்டுறு சுரிமுகம் உடுக்கை துந்துபி

திரட்டுறு தண்ணுமை திமிலை யாதிகள்

இரட்டிய கேதனம் எங்கும் ஈண்டிற்றே.                   10

 

தழங்குரன் மால்கரி புரவி தானவர்

அழுங்குறு தேர்நிரை அனிகம் வானமே 

வழங்குறு நெறியதா வலிதிற் சென்றன

முழங்கில பெயர்கில முகில்கள் அஞ்சியே.                       11

 

ஏயிது தன்மையின் ஈண்டு தானைகள்

பாயின சென்றிடப் பா¤தி போலொளிர்

ஆயிர மவுலியன் அவுணர் நாயகன்

சேயுயர் விசும்பினில் எழுந்து சென்றனன்.                       12

 

கன்னலொன் றளவையில் ககனத் தாற்றினால்

சென்னிகள் பலவுடைச் சீய மாமுகன்

மன்னவன் உறைதரு மகேந்தி ரப்புரந்

துன்னினன் வெருவியே சுரர்கள் ஓடவே.                 13

 

அடைத்தலை நீங்கிய அம்பொற் கோநகர்க்

கடைத்தலை வந்தனன் கனகத் தேரொரீஇப்

படைத்தலை மன்னவர் பரவ உள்புகாக்

கிடைத்தலை மேயினன் செழுமு சூரவை.                14

 

அரசியல் புரிந்திடும் அவையை நண்ணிய

முரணுறு சிங்கமா முகத்தன் முன்னவன்

திருவடி மலர்களில் சென்னி தீண்டுறப்

பரிவொடு வணங்கினன் தொழுத பாணியான்.             15

 

வணங்கிய தம்பியை மலர்க்கை தொட்டெடா

இணங்கிய மார்புறுத் திறுகப் புல்லலும்

நிணங்கவர் வேலினாய் நினது செம்முகம்

உணங்கிய துற்றதென் உரைத்தியால் என்றான்.           16

 

என்னலும் அவுணர்கோன் இளைய வன்றனை

முன்னுற இருத்தியே முரணின் மேலையோய்

என்னிடை யுற்றன இசைப்பன் கேளெனா

அன்னவன் உணர்வகை அறைதல் மேயினான்.           17

 

அன்றுநீ போந்தபின் அயில்கொள் வேலினாற்

குன்றினை எறிந்திடு குமரன் என்பவன்

தன்றுணைச் சேனையுந் தானும் இந்நகர்

சென்றனன் பாசறை சேர்ந்து வைகினான்.                18

 

மற்றவன் சேனைகள் மலைய மைந்தர்கள்

இற்றனர் அமைச்சனும் இறந்து போயினான்

அற்றன தானையும் ஆட கப்பெயர்

உற்றவன் இரிந்தனன் உததி ஓடினான்.                   19

 

பொங்குளை அரிமுக புகுதி இன்னதால்

சங்கையில் படையொடு சமரின் ஏகியே 

அஙகவன் வலியினை யடர்த்து மீளுதி

இங்குனை விளித்தனன் இதனுக்கா வென்றான்.           20

 

எஞ்சலில் சூரன்மற் றிதனைச் செப்பலும்

வெஞ்சின அரிமுக வீரன் தேர்வுறா

நெஞ்சினில் ஆகுலம நிகழ முன்னவன்

செஞ்சரண் வீழ்ந்துநின் றிதனைச் செப்புவான்.            21

 

மல்லலம் புயமுடை மைந்தர் தங்களைத்

தொல்லையில் அமைச்சரைச் சுற்றத் தோர்களை

எல்லவர் தம்மையும் இழந்து வைகினாய்

புல்லிது புல்லிதுன் புந்தி எண்ணமே.                             22

 

மூலமும் முடிவுமில் லாத மூர்த்தியைப்

பாலனென் றெண்ணினை படுவ தோர்ந்திலை

ஆலம தானதே ஐய என்மொழி

மேலையின் விதியையார் வெல்லும் நீரினார்.                    23

 

சென்றிடு புனலினைச் சிறைசெய் தாவதென்

இன்றினி ஏகியே எண்ண லாரெனத்

துன்றிய குழுவெலாந் துடைத்து நுங்கியே

நின்றிடு கின்றனன் நீயுங் காண்டியால்.                   24

 

கந்தனாம் ஒருவனைக் கடக்கப் பெற்றிடின்

வந்துனைக் காண்பனால் மற்ற தில்லையேல்

அந்தம தடைவரால் ஆரும் ஐயநீ

புந்தியின் நினைந்தன புரிதியா லென்றான்.                       25

 

என்றுகை தொழுதுபின் இறையும் அவ்விடை

நின்றிலன் விடைகொடு நிருதன் ஏகியே

துன்றிய தானைகள் சூழ மற்றவண்

ஒன்றுதன் மந்திரத் துறையுள் எய்தினான்.                26

 

போனக மேருவும் புடையில் சூழ்வரும்

ஊனெனும் வரைகளும் உலப்பில சோரிநீர்

தேனொடு பால்தயிர் தேற லாதிகள்

ஆனபல் கடல்களும் அயிறல் மேயினான்.                27

 

வாசநீர் தேய்ந்திடு நரந்த மான்மதம்

பூசினன் பாளித மிசையு னைந்தனன்

வீசுபன் மதுமலர் மிலைச்சு கின்றனன்

காசினி வரைப்பெலாங் கந்தஞ் சூழ்தர.                   28

 

களைந்தனன் பழையன கவினப் பூண்டனன்

வளந்தரு கின்றதோர் யாணர் மாண்கலன்

மிளிர்ந்திடு தினகரர் புணரி வீழந்துழி

ஔ¤ர்ந்துடன் பலகதிர் உதிக்கு மாறுபோல்.                      29

 

படிதவிர் பருப்பதம் பத்து நூற்றினின்

முடிதொறும் இளம்பிறை முளைத்த வாறுபோல்

நெடுமைகொள் அரிமுகன் நெற்றி தோறும்வெண்

பொடிதனை உணிந்தனன் புனித மாயினான்.                     30

 

தண்டமும் நேமியுஞ் சங்க ரன்தரக்

கொண்டதோர் சூலமுங் குலிச மேமுதல்

அண்டர்தம் படைகளும் அன்னை ஈந்திடு

திண்டிறற்  பாசமுஞ் செங்கை பற்றினான்.                       31

 

கைத்தலம்  யாவையுங் கதிர்கள் கான்றிட

எத்திறப் படைகளும் பின்னர் ஏந்துறாப் 

பத்துநூ றாயிரம் பரிகள் பூண்டதோர் 

சித்திர மணிநெடுந் தேரில் ஏறினான்.                            32

 

தந்திரத்  லைவருந் தனயர் யாவருஞ்

சிந்துரத் தொகுதியுந் தேரும் மாக்களும் 

இந்திரப் பெருவளம் யாவுஞ் சூழ்தர

மந்திரத் திருநகர் வயில் எய்தினான்.                            33

 

வேறு

 

மேற்படு கேசரி வெம்முக வீரன்

மாற்படு கோநகர் வாய்தலின் மேவ

நாற்படை யானவும் நண்ணின வெம்போர்

ஏற்புடை வௌ¢ளமி லக்கம தன்றே.                            34

 

வானவர் ஏற்றமும் **மண்ணவா¢ வாழவும்

தானவர் இன்னலும் நீக்கிய தக்கோர்

ஊனமில் செய்கையோர் ஔ¢ளெரி உண்ணுங்

கானமெ னப்பொலி காட்சியின் மிக்கோர்.                 35

 

( ** பா-ம் - அன்னவர்)

 

கார்பயில் கின்ற கருத்தினர் காமன்

கூர்பயில் கின்ற கொடுங்கணை யுண்ணுந்

தார்பயில் தோளர் சமர்த்தொழில் செய்தே

மார்பக மன்றி வடுப்புனை யாதோர்.                             36

 

எண்ணமில் தொல்லுயிர் யாவும் அலைக்கும்

அண்ணலை அன்னவர் ஆரழல் காலுங்

கண்ணினர் வார்கழல் கட்டிய தாளார்

விண்ணினை யேனும் விழுங்கவும் வல்லோ£¢.                  37

 

நேருதிர் என்றெதிர் நேர்ந்தவ ராகங்

கூர்நுதி வேல்கொடு கூறுப டுத்துப் 

பேருதி ரந்தசை செய்துநி ரம்பா

வாரிதி யென்ன வகுத்திடும் வாயார்.                            38

 

தண்ட மழுப்படை தட்டை முசுண்டி

விண்டுயா¢ கொல்சிலை வேலெழு நாஞ்சில்

எண்டகு பல்படை யாவையும் ஏந்தி

அண்டமு டைந்த திரும்படி ஆர்த்தார்.                           39

 

அந்தர மாமுகி லாமென ஆர்க்குந்

தந்திகள் வீழ்த்துறு தானம தோடி

உந்திக ளாயுல வைக்கதி கொண்டு

முந்திய தூசியின் முன்னுறு கின்ற.                             40

 

வேலைய தன்னவி லாழிய வன்னிக்

கோலம தான குரங்கொள் பதத்த

கால்விசை கொண்டன கந்துக ராசி

மாலுறு பூழியின் வான்புவி செய்வ.                             41

 

சூழ்வரு தேரிடை துன்றுப தாகைக்

காழ்வரு கோனுமதி கார்முகி லுந்தி

போழ்வன வாடுறு பூந்துகில் அங்கண்

ஆழ்வரு பூழைய டைத்தன அன்றே.                            42

 

வரங்கெழு சூர்துணை மாய்ந்திடும் என்றே

உரங்கொடு முன்னம் உணர்ந்தன கொலோ

துரங்கம ழுங்கின தோல்புலம் புற்ற

இரங்கின பல்லியம் ஏங்கின தேர்கள்.                            43

 

கட்புலன் நாசிக வின்செவி துன்னப்

பட்டன பூழிப தாகையும் அற்றே

ஒட்டலர் விண்செல ஒட்டல ரென்னா

விட்டனர் தூக்கம் விரைந்தனர் வெய்யோ£¢.                     44

 

தேரினர் ஓர்பலர் திண்டிறல் வாசி

ஊருநர் ஓர்பலர் ஓங்கிய வேழம்

பேருநா¢ ஓர்பலர் பேரடல் கொண்டு

பாரினா¢ ஓர்ப ராற்படை மள்ளர்.                       45

 

துங்கமில்  சூர்துணை தொல்படை மன்னன் 

அங்கவன் என்ன அரித்தலை கொண்டான்

மங்கல மாயவள் மாமகன் ஆடற்

சிங்கன் எனப்படு சீர்ப்பெய ருள்ளான்.                            46

 

போர்ப்படை கொண்டு புறப்டர் கின்ற 

தேர்ப்படை காற்படை சிந்துரம் வாசித்

தார்ப்படை கொண்டு தடங்கட லென்ன

ஆர்ப்படை நெற்றிய னாகி அகன்றான்.                   47

 

நீள்வயிர் பேரி நிசாளம் உடுக்கை 

தாளம் வழிப்படு தண்ணுமை தக்கை

காளம் வலம்புரி கைத்துடி யாதி

யாளி முகன்முன் அளப்பில ஆர்ப்ப.                             48

 

ஆகிய தால்அமர் ஐதென யாமும்

ஏகுதும் உண்டி எமக்குள தென்னா

மாக நெருங்கின வன்கழு கீட்டங்

காகம் வருந்திய காளிகள் கூளி.                        49

 

வேறு

 

ஆழியை யொத்துய ரம்பொற் றேர்களில்

ஆழியை உண்டெழு புயல்வந் தார்த்தன

ஆழிய நிலத்துருண் டழுதி யோவெனா

ஆழியை வினவியே அமர்தல் போலுமால்.                      50

 

இவ்வகை சேனைகள் யாவும் ஏழ்பெரும்

பவ்வமும் ஒருவழி படர்ந்த தேயென

அவ்வயிற் போந்திட அமரை முன்னியே

தெவ்வடும் அரிமுகன் சேறல் மேயினான்.                       51

 

வேறு

 

சேரலா ஆவிகொள் சீயமு கத்தோன்

பேரனி கத்தொடு பேர்ந்திடல் காணூஉ

வாரிச மேலவன் வாசவன் வானோர்

ஆரும்வெ ரீஇயினர் அச்சம் அடைந்தா£¢.                       52

 

செய்ய கரத்தினர் சிந்தை வியர்த்தே

மெய்யல சுற்றிட மேற்றுகில் சோர

ஐயுறும் எல்லையில் ஆகம் இரைப்ப

ஒய்யென யாவரும் ஓடினர் போனார்.                           53

 

ஆவதொர் பாசறை ஆலய வைப்பில்

தேவர்கள் ஈண்டுறு சிற்சபை தன்னில்

மேவரு வேற்படை விண்ணவன் முன்போய்ப்

பூவடி தாழ்ந்து புகன்றிடு கின்றார்.                               54

 

ஆயிர மான அகன்றலை கொண்டான்

ஆயிரம் ஆயிரம் அங்கை படைத்தான்

ஆயிர மேற்படும் அண்மும் வென்றான்

ஆயிரம் யோசனை யாவுயர் மெய்யான்.                 55

 

நெஞ்சில் எவர்க்கும் நினைப்பரி தாகும்

வஞ்சமும் மாயையின் வன்மையும் வல்லோன்

எஞ்சலில் வன்மையன் இவ்வுல கெல்லாந்

துஞ்சினும் ஆருயிர் துஞ்சுத லில்லோன்.                 56

 

ஓங்கல் இனங்கள் உவாத்தொகை நாகம்

பாங்கம ராமை பரித்திடல் மாற்றி

ஈங்குல கங்கள் எவற்றையும் ஓர்நாள்

ஆங்கொரு செங்கையில் ஆற்றிய தொல்லோன்.          57

 

பாந்தள் புனைநத பராபர மூர்த்தி

ஈந்தது மாற்றலர் எல்லையி லோரைக்

காய்ந்துயி ருண்டு கறைப்பெரு நீத்தந்

தோய்ந்திடு கின்றதொர் சூலம் எடுத்தான்.                58

 

எண்டிசை மேதினி ஏழ்பில மேனை

விண்டல மன்னதன் மேற்படும் எல்லை

அண்டம னைத்தும் ஒரங்கையில் வாரி

உண்டுமிழ் கின்றதொர் வன்மையும் உள்ளோன்.          59

 

தூக்ªª£ரு பால்வலி தூங்குற ஓர்பால்

மேக்குயர் கோலென மேதினிப் பாங்கர்

தேக்கெறி வேலைகள் சிந்தி விசும்பில்

தாக்குற வேநடை தந்திடு தாளான்.                              60

 

தண்ட மிதென்று தருக்கின் எடுத்தே

அண்ட கடாகம் அதன்புடை மோத

நுண்டுகள் ஆதலும் நொய்திது வென்றே

விண்டொடு மேருவை மீளவும் வைத்தோன்.                     61

 

மாசறு நேமி வடாது புலத்தின்

ஆசுரம் என்னும் அகன்பதி வாழ்வோன்

வீசிடின் எவ்வுல கத்தையும் வீக்கும்

பாசம் இரண்டு பரித்திடு கையான்.                              62

 

துங்கம தாகிய சூர்துணை யானோன்

அங்கவ னற்பெரி தாற்றல் படைத்தோன்

ரூங்களின் நங்களை நாளும் நலித்தொன்

சிங்கமு காசுர னாகிய தீயோன்.                         63

 

அந்தமி லாவனி கக்கடல் சூழ

வெந்திற லோடு வியன்சமர் ஆற்ற

வந்தனன் மற்றவன் மன்னுயிர் மாற்றி

எந்தை அளித்தருள் எங்களை யென்றார்.                 64

 

அன்னதை ஓர்தலும் ஆறு முகேசன்

தன்னயல் நின்றிடு தாவறும் ஓதை

மன்னனை நோக்கிநம் வாலிய தேரை

முன்னிவண் முய்க்குதி யென்று மொழிந்தான்.            65

 

தீட்டிய வேற்படை செங்கை படைத்தோன்

மாட்டுற நின்ற வயம்புனை மொய்ம்பன்

கேட்டனன் எந்தை கெழீஇயின முன்போய்த்

தாட்டுணை வீழ்ந்திது சாற்றுதல் உற்றான்.                       66

 

தந்நிகர் அற்ற சயம்புனை வீரர்

முன்னுறு தானைகள் மொய்த்திட யான்போய்

ஒன்னலன் ஆவியை உண்டிவண் மீள்வன்

என்னை விடுக்குதி எந்தையை யென்றான்.                       67

 

ஆண்டகை மூரலொ டம்மொழி கேளா

மாண்டிட வந்திடு மாற்றலன் வெம்போர்

வேண்டினை நன்று விடுத்தனம் முன்நீ

ஈண்டுள தானையொ டேகுதி யென்றான்.                 68

 

என்றலும் வீரன் எழுந்துகை கூப்பி

வென்றிகொள் சாரதர் மெய்க்கிளை சூழ

மன்றம கன்று மணிக்கடை நண்ணி

ஒன்றுதன் மாளிகை யூடு புகுந்தான்.                            69

 

நேர்முக மான நிசாசரர் தம்மேல்

கூர்முக வாளி குணிப்பில கோடி

ஓர்முக மாயுல வாதுமிழ் நீரால்

கார்முக மாயதொர் கார்முகங் கொண்டான்.                      70

 

போதுறழ் அங்குலி புட்டில்செ றித்தான்

கோதைய தொன்று கொடுங்கை பிணித்தான்

ஏதமில் சாலிகை யாக்கையின் இட்டான்

மேதகு தூணி வெரிந்புடை யாத்தான்.                           71

 

மிக்குறு தெய்வ வியன்படை முற்றும்

தொக்குற வேகொடு தும்பை தரித்துச்

செக்கரின் விஞ்சிய செய்யதொர் வையம்

புக்கனன் வல்லை புறங்கடை வந்தான்.                  72

 

எண்மர் இலக்கர்கள் இச்செயல் காணா

வண்மை தருமபடை மாட்சிமை எய்தித்

திண்மை யுறுந்தம தேர்களி லேறி

அண்மினர் வீரனை ஆர்ப்பொடு சூழ்ந்தார்.                73

 

மேனிக ழாயிர வௌ¢ளம தாகுஞ்

சேனை யெழுந்து செறிந்து பிறங்கல்

வானுயர் தாரு வயப்படை பற்றித் 

தானவர் கேசரி தன்புடை வந்த.                         74

 

எறிந்தன பல்லியம் ஈண்டிய தானை

செறிந்தன மாண்கொடி செற்றின பூழி

அறந்தலை நின்றவன் அன்னது நோக்கிப்

பறந்தலை ஒல்லை படர்ந்திட லுற்றான்.                 75

 

ஆரும்வி யப்புறும் ஆயிர வௌ¢ளம்

பாரிடர் தானை படைக்கிறை யானோர்

சாருறு கேளிர்கள் தன்னொடு செல்ல

வீரன டைந்தனன் வெஞ்சமர் எல்லை.                           76

 

ஆனதொர் ககலையில் ஆளரி வெய்யோன்

சேனையும் வந்து செறிந்தது பூதர்

தானையும் அங்கெதிர் சார்ந்தது கங்கை

வானதி சேர்தரும் வாரிதி யேபோல்.                            77

 

கோடு புலம்பின கொக்கரை ஆர்த்த

மோடுகொள் பேரி முழங்கின பீலிக்

காடு தழங்கின கண்டை கலித்த

ஆடுப தாகைகள் ஆர்த்தன அன்றே.                             78

 

தேரொலி செய்தன திண்டிறல் மாவின்

தாரொலி செய்தன தந்தியின் ஈட்டம்

பேரொலி செய்த பெருங்கட லோடும்

காரொலி செய்திடு காட்சிய தென்ன.                             79

 

வேறு

 

அந்த வேலையின் முருகவேள் தானையோர் அணுகி

முந்து வெஞ்சமர் முயன்றனர் அதுகண்டு முனிந்து

சுந்த ரந்திகழ் சிங்கமா முகன்படைத் தொல்லோர்

தந்தி தேர்பரி யணியொடும் போ£¢செயச் சார்ந்தார்.                      80

 

தண்டம் ஓச்சினர் கணிச்சிகள் ஓச்சினர் தடக்கைப்

பிண்டி பாலங்கள் வீசினர் தோமரம் பெய்தார்

கொண்ட லாமெனத் தனித்னி வார்சிலை குனித்துத்

துண்ட வெங்கணை துரந்தனர் தானவத் தொகையோர்.            81

 

விரைகள் வீசிய மலர்த்தரு வீசிய விண்டோர்

வரைகள் வீசிய தண்டெழு வீசிய மழுவின்

நிரைகள் வீசிய நேமியின் நிரந்தபல் வளனும்

திரைகள் வீசிய தாமெனப் பூதர்தஞ் சேனை.                             82

 

வரங்கள் சிந்தினர் வன்மைகள் சிந்தினர் வயத்தாள்

கரங்கள் சிந்தினர் புயமலை சிந்தினர் கலன்சேர்

உரங்கள் சிந்தினர் மணிமுடி சிந்தினர் உருளுஞ்

சிரங்கள் சிந்தினர் அவுணரும் பூதரிற் சிலரும்.                   83

 

வருதி நீயெனத் தனித்தனி இகல்செயும் மறவோர்

கருதி யேயடுங் களத்தினில் அவருடல் காலும்

குருதி யோடியே எங்கணும் பரத்தலில் கொடுந்தேர்ப்

பரிதி யோடிய குடதிசை நிகர்த்தது படியே.                              84

 

கொலைசெ றிந்திடும் பூதரும அவுணரும் கொடும்போர்

நிலைசெ றிந்திடு களத்திடை நீடுசெந் நீரின்

அலைசெ றிந்தவூன் செறிந்தன அடுகளே வரத்து

மலைசெ றிந்தன செறிந்தன கழுகுடன் மண்ணை.                85

 

வேறு

 

வெற்புறழ் தகுவர் சேனை வௌ¢ளமுங் கணத்து ளருந்

தற்பமொ டெதிர்ந்திவ் வாறு சமர்புரிந் திட்ட எல்லை

வற்புடன் அவுணன் தானை மள்ளர்வந் தடர்ப்ப மாய்ந்து

முற்படு கின்ற தூசிப் பூதர்கள் முரிய லுற்றார்.                           86

 

செல்லுறழ் பகுவாய் வீரர் சிதைந்துழிப் பூதர் தம்முட்

கல்லுறழ் மொய்ம்பிற் சிங்கன் கனன்றொரு தண்ட மேந்திப்

பல்லுறு தலைகள் சிந்தப் படிமிசை வீட்டிப் பானாள்

அல்லுறு மதிபோல் நேரும் அவுணரை யடாத்துச் சென்றான்.              87

 

அங்கவன் செல்லும் வேலை அவுணரில் ஒருவன் நேமி

சங்கொடு தரித்தோன் அன்னான் தசமுக னென்னும் பேரோன்

எங்குநீ போதி நில்லென் றெதிருறச் சென்று வாகைச்

செங்கைவா£¢ சிலையைக் கோட்டித் திருந்துநாண் ஒலிசெய் திட்டான்.88

 

வேறு

 

விட்டனன் மழையென விசிகம் ஆங்கவை

பட்டிடத் தண்டினாற் படியில் வீட்டியே

அட்டுபூந் தாரினான் அடியொன் றாலவன்

இட்டதோர் கவசமும் இறுத்து நீக்கவே.                  89

 

கூற்றுறழ் தசமுகன் கொடியன் ஆவியை

மாற்றுவன் இவணென வலிதின் ஓர்கதை

ஆற்றலின் விடுத்தலும் அரியின் பேரினான்

எற்றனன் மார்புதண் டிற்று வீழ்ந்ததே.                           90

 

வீண்டது நோக்கியே வீர வீரனும்

ஈண்டிவ னேகொலென் றெண்ணி யாமினிக்

காண்டகும் வல்லையேற் காத்தி யீதெனா

ஆண்டொரு கணிச்சியை அவுணன் ஓச்சினான்.           91

 

மாலொடு கடவுளர் மறுகத தீயழற்

காலொடு போந்திடுங் கடுவின் வெம்மைபோல்

மேலுறு கணிச்சியை வீரன் செங்கையின்

பாலுறு தண்டினாற் படியில் வீட்டினான்.                 92

 

நீக்கினன் கணிச்சியை நெடிய தோர்கதை

போக்கினன் தன்னொடு போர்செய் கின்றவன்

தாக்கணங் கமர்சிலை தன்னைச் சின்னமே

ஆக்கினன் அவுணர்கள் அலக்கண் எய்தினார்.             93

 

சீலமில் தசமுகன் செயிர்த்துக் காய்கனற்

கோலம தாகிய குந்தம் ஒன்றினை

ஆலம தெனவிட அரியின் பேரினான்

மேலுற வருவதை விரைந்து நோக்கினான்.                      94

 

பூங்கழல் புனைகழற் பூத நாயகன்

ஆங்கது காலைஓர் ஆழி மாப்படை

ஓங்கிய பரிதிபோல் உருட்டி னானரோ

பாங்குறு சாரதர் பலரும் போற்றவே.                            95

 

விடுத்திடு கின்றதோர் வஅலை யாழிபோய்ப்

படுத்தது தசமுகப் பதகன் தண்டமொன்

றெடுத்தது வீசலும் இமைப்பில் எய்தியே

அடற்புனை கழலினான் ஆகத் துற்றதே.                  96

 

ஆகமேல் அடைதலும் அரியின் பேரினான்

சோகமேல் கொண்டுசெஞ் சோரி சேர்தர

மாகமேற் செம்புனல் மாரி கான்றி

மேகமே யாமென விளங்கி னானரோ.                           97

 

பரந்திழி குருதிநீர் பருப்ப தத்திடைப்

பிரிந்திடு நதியெனப் பெருக ஓடியே

அருந்திறல் சதமுக னாகத் தோர்கையால்

விரைந்தனன் புடைத்தலும் வீழ்ந்து பொன்றினான்.        98

 

ஐந்திரு தலையுடை அவுணன் மாய்தலுந்

தந்திர அவுணர்தந் தானை யாவையும்

கந்த தோளுடைக் கணங்கள் மேற்செலா

முந்துறு பேரமர் முயல்வ தாயினார்.                            99

 

அவ்வழி இலக்கரில் அநகன் என்பவன்

மைவழி சிந்தையன் மடிதத வாயினன் 

கைவழி வில்லினன் கடியன் சேனையை

எவ்வழி போதிரென் றெதிர்ந்து தாக்கினான்.                      100

 

வெலற்கரும் வில்லுமிழ் வெங்கண் வாளியால்

அலைக்குந ராகியே அடல்செய் மள்ளர்தந்

தலைக்குவை சிந்தியே தரையில் வீட்டியே

கலக்கினன் திரைக்கடல் கடைந்த மாலென.                      101

 

ஆடியல் தானையான் அநகன் என்பவன்

சாடினன் திரிதலுந் தகுவர் யாவரும்

ஓடினர் அன்னதை உருத்து நோக்கினான்

பீடுறு துன்முகன் என்னும் பேரினான்.                           102

 

வேறு

 

தன்முன் ஓடிய அவுணரை நோக்கிநீர் தளரேல்

மின்மி னிக்குலங் கதிரினை வெல்லுமோ வெகுளின்

என்முன் நிற்பரோ பூதர்கள் செருத்தொழில் இழந்தார்

நின்மின் நின்மினென் றுரைக்கவும் இறையநின் றிலரால்.          103

 

தானை பட்டன நோக்கினன் துன்முகன் தழல்மேல்

ஆனெய் பட்டென முனிந்தனன் பூதர்கள் அந்தோ

சேனை பட்டதென் றலமரக் குனித்தனன் சிலையைச்

சோனை பட்டன வாமென வடிக்ணை சொரிந்தான்.                       104

 

சொரிந்த காலையிற் பூதரும் பேரமர் தொடங்கி

விரிந்த வெற்பொடு தருக்களும் படைகளும் விடுப்ப

எரிந்து போயின சிற்சில இற்றவுஞ் சிலவால்

நெரிந்து போயின சிற்சில எதிரெதிர் நெருக்க.                            105

 

ஈறு செய்தில கணைமழை இவரொடும் யானே

மாறு கொள்வதுந் தனிமையில் அரிதென வலியோன்

ஊறு சேர்தரு மாயையால் ஒவ்வொர்பூ தர்க்கும்

நூறு நூறுருக் கொண்டுதாக் குற்றனன் நொடிப்பில்.                       106

 

ஆய காலையில் துன்முகன் வடிவமும் அடருந்

தீயென னக்கிளா¢ சாரத ரொடுசெருச் செய்யும்

ஏய கொற்றமும் நோக்கினன் விம்மினன் வெகுண்டான்

மாயை கொல்லென உன்னினன் வாகையங் கதிரோன்.             107

 

மாற்று கின்றதெப் படைக்கல மோவென மதியாத்

தேற்று கின்றதோர் போதகப் பெரும்படை செலுத்தக்

காற்றின் முன்னுறு பூளையின் உருவெலாங் கரப்பக்

கூற்ற மன்னதோர் துன்முகன் ஒருவனாய்க் கொதித்தான்.          108

 

கொதித்த துன்முகன் தன்பெருஞ் சிலையினைக் கோட்டி

நுதித்த னிக்கணை ஆயிரம் ஒருதொடை நூக்க

மதித்து வீரன்றன் ஒருபெருஞ் சிலையினை வாங்கிக்

கதித்த நோன்கணை ஆயிரஞ் சிதறினன் கடிதில்.                  109

 

ஆயி ரஞ்சரத் தாலவன் விட்டகோல் அறுத்துத்

தீய வன்னிச் சிலையை யேழ் வாளியாற் சிந்தி

மேய சாலிகை தன்னையோர் பகழயால் வீட்டிக்

காயம் எங்கணும் அழுத்தினன் அளவைதீர் கணைகள்.             110

 

வேறு

 

அழுந்திடு வடிக்கணை யாகம் போழ்தலும்

எழுந்திடு குருதிநீர் இரைத்துச் சென்றிடக்

கொழுந்தழல் புரைவதோர் கொடிய துன்முகன்

விழுந்தனன் மயங்கினன் விளிந்து ளானென.                     111

 

ஊறிய குருதியன் உறுகண் எய்துவான்

தேறினன் ஒல்லையிற் செருவில் நேர்துமேல்

ஈறினி வந்திடும் இரிந்திட் டுய்வதே

ஆறென உன்னினன் அமருக் கஞ்சுவான்.                 112

 

சிந்தையின் வழபடல் செய்து மாயையின் 

மந்திரம் ஒன்றினை மரப்பின் உன்னுறா

எந்திரத் தேரினும் எழுந்து துன்முகன்

அந்தரத் தாற்றினால் அருவில் போயினான்.                      113

 

ஆயின காலையில் அடல்வெம் பூதரில்

தீயினை முருக்குறுஞ் சீற்றத் தோர்சிலர்

மாயையின் வலியினன் வஞ்சன் வல்லையிற் 

போயினன் பற்றுதும் போதுவீர் என்றார்.                 114

 

ஆங்கது கேட்டிடும் ஆடல் வெய்யவன்

ஈங்கிது தவிருதிர் இகலுக் கஞ்சியே

நீங்கினன் ஒருவனை நெருக்கி ஆருயிர்

வாங்குதல் புகழதோ வலியின் பாலதோ.                 115

 

ஓடினர் தம்மையும் உற்றுத் தாள்மலர்

சூடினர் தம்மையும் தொழுத கையராய்

வாடினர் தம்மையும் வலியி லோரையுஞ்

சாடினர் அல்லரோ நவைக்கட் டங்குவார்.                116

 

வீரரை அல்லரை வெகுள லீரெனப்

பேரடல் வெய்யவன் பேச அன்னது

காரிய மேயெனக் கருத்தில் உன்னியே

சாரதர் தொடர்ந்திடுந் தன்மை நீங்கினார்.                 117

 

வேறு

 

அந்நேர் காணா ஆளரி மாமுக அடல்வெய்யோன்

இன்னே நந்தந் தானைகள் எல்லாம் இரிவாகும்

பின்னே நிற்ற லாவதெ னென்னாப் பெயர்குற்றே

முன்னே சென்றான் பூதரை நோக்கி முனிகின்றான்.               118

 

நந்தா ஆற்றற் சிங்கமு கத்தோன் அவன்நம்முன்

வந்தான் யாமே மாற்றுதும் அன்னான் வலியென்னாக்

கொந்தார் தாருச் சூழலும் வெற்புங் கொண்டேகி

முந்தா நின்ற பூதர்கள் வெம்போர் முயல்கின்றார்.         119

 

மட்டார் தொங்கற் சிங்கமு கன்மேல் மதிதோய்வான்

எட்டா நின்ற வெற்புள யாவும் எறிகின்றார்

விட்டார் தாருச் சூழல் கணிச்சி வீசுற்றார்

தொட்டார் சூலந் தண்டெழு நாஞ்சில் சொரிகின்றார்.               120

 

சொரியுங் காலைத் தீயெழ நோக்கிச் சுடர்வேலோன்

எரியுங் காலுங் கால வுயிர்ப்ப எதிர்செல்லாக்

கரியுந் தீயும் பூழிய தாகுங் ககனத்தே

திரியும் மீளும் மப்படை செய்யுஞ் செயலீதால்.                  121

 

அன்னோ அன்னோ நம்படை எல்லாம் அடல்வீரன்

முன்னோ செல்லா தீய வுயிர்ப்பின் முடிவாமால்

பின்னே செய்வ தொன்றிலை யாம்பே ரமர்செய்வ

தென்னோ என்னோ யாரினு மேலான இவனென்றா£¢.             122

 

என்றார் பூதர் சீற்றம் விளைத்தார் யாரும்போய்க்

குன்றாய் அங்க ணுற்றன யாவுங் குழுவுற்ற

வன்றா ருக்க ளானவும் மாண்கைக் கொடுதொட்டுச்

சென்றார் ஆர்த்தார் சீயமு கன்மேற் செலவுய்த்தார்.               123

 

வேறு

 

கைக்கொடு சாரத கணங்கள் ஆர்த்துடன்

உய்க்குறு வரையெலாம் ஒருங்கு சென்றிடாத்

திக்குள வரைப்பெலாஞ் செறிந்து ஞாயிறு

மெய்க்கதிர் வழங்குறும் விசும்பு தூர்த்தவே.              124

 

கல்லகத் தொகுதிகள் ககனந் தூர்த்துழி

எல்லுடைச் செங்கதிர் இரவி மாய்ந்திட

ஒல்லெனத் திமிரம்வந் துறலும் நோக்கியே

அல்லெனக் குடம்பையுள் அடைவ புள்ளேலாம்.   125

 

வெற்பின நிரத்தலு மறைய வெய்யவன்

எற்படு முன்னரே இரவி ஓடினான்

அற்புதம் அற்புதம் அடைந்த தம்புயன்

கற்பமென் றறிஞருங் கலக்கம் எய்தினார்.         126

 

போற்றலன் தன்மிசைப் பூதர் தூண்டிய

மாற்றரும் பதலைகள் மலிந்து வான்படா¢

ஆற்றினை அடைத்தலும் அஞ்சி நின்றனன்

காற்றினும் விரைந்துசெல் கதிரியின் பண்ணவன். 127

 

இன்று றவுணரால் இடரு ழந்தனம்

அன்றியும் பூதரீண் டடுககல் வீசினார்

நின்றிடின் வருந்துதும் நிகழ்ச்சி தேரலாஞ்

சென்றிடல் துணிவெனத் தேவர் ஓடினார்.        128

 

செருவலி வீரர்கள் செலுத்தச் சேண்படா¢

பருவரை யிடையிடை பயின்று சுற்றிய

கருமுகில் உண்டநீர் கான்று தம்வயின்

உருமிடி எங்கணும் உகுத்து வீழ்ந்தவே.          129

 

வெதிர்படு சிலம்பினும் வழுக்கி வீழ்ந்திடும்

அதிர்குரல் அரியினம்அண்டச் செற்றின

எதிருறு தகுவனை இனமென் றுன்னியே

முதிர்தரு காதலான் முன்னுற் றாலென.          130

 

மைம்மலை யிடைவிராய் வதிந்த மோட்டுடைக்

கைம்மலை அரற்றியே கவிழ்வ காசிபன்

செம்மலை அரியென நோக்கித் தேம்பியே

விம்மலை யெய்தியே வீழவ தென்னவே.        131

 

பொற்றையின் மரங்களிற் பொதிந்த கேசரம்

வெற்றிகொள் அரிமுகன் தொடையின் மேவின

விற்றவர் தம்மை விட்டேதி லார்தமைப்

பற்றொடு கலந்திடு பரத்தை மாதர்போல்.         132

 

எறிந்திடு வரைகள்தந் தம்மில் எற்றிடச்

செறிந்திடு தீங்கனல் சென்ற திக்கெலாம்

பொறிந்தன புகைந்தன பொரித லுற்றன

மறிந்தன உலந்தன மன்னு யிர்த்தொகை.         133

 

ஆயின பல்லியல் அடையப் பூதர்கள்

ஏயின குன்றமுந் தருவும் ஏகியே

சீயமா முகமுடைச் செல்வற் சேர்ந்தனன்

தூயவன் கயிலைச் சூழ்ந்த கொண்டல்போல்.             134

 

செடித்தலை எயினரில் திகழும் ஆயிரம்

முடித்தலை யான்மிசைப் பட்ட மொய்வரை

பொடித்தில இற்றில பூழி யாய்த்தில

படித்தலம் வீழ்ந்தன நொய்ய பான்மையால்.              135

 

வேறு

 

துன்னற் பட்ட குன்றெவை யுஞ்சூர் துணையானோன்

மின்னற் பட்ட மெய்யிடை பட்டே வெற்பின்கட் 

பன்னற் பட்ட தாமென வீழ்கின் றதுபாரா

இன்னற் பட்டார் பூதர்கள் வானோர் ஏங்குற்றார்.           136

 

சீலம் புக்க பா£¤டர் வெம்போர் செயல்கா ணூஉக்

கோலம் புக்க தேரிடை நின்றான் குப்புற்று

ஞாலம் புக்கான் பூதர்கள் தம்மை நலிதற்கோர்

ஆலம் புக்கா லென்ன நடந்தான் அடல்செய்வான்.         137

 

பார்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைப் பகைவிண்ணோ£¢

ஊர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை உயர்பானுத்

தேர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைத் திரைசேர்முந்

நீர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை நெடிதோச்சும்.         138

 

பற்றா நிற்குஞ் சிலவரை மூரற் பகுவாயிற் 

குற்றா நிற்குஞ் சிலவரை வாரிக் குழுவோடுஞ்

சுற்றா நிற்குஞ் சிலவரை அண்டச் சுவரின்கண்

எற்றா நிற்குஞ் சிலவரை அள்ளி எறிகிற்கும்.                     139

 

புண்டரி கன்கட் சிலவரை வீசும் பொருசெங்கைத்

தண்டத ரன்கட் சிலவரை வீசுஞ் சதவேள்வி

அண்டம தன்கட் சலவரை வீசும் அகிலஞ்சூழ்

எண்டிசை யின்கட் சிலவரை வீசும் இகல்பேசும்.          140

 

மாலெரி வைப்பிற் பலர்தமை வீசும் வானத்தில்

காலெறி வைப்பிற் பலர்தமை வீசும் கரைதீர்ந்த

வேலைகள் முற்றும் பலர்தமை வீசும் வியன்மிக்க

ஞாலம் அனைத்தும் பலர்தமை வீசும் நனிதூர்க்கும்.              141

 

சிங்கங் கொண்ட மாமுகன் வீசுஞ் செறிவாலே

துங்கங் கொண்ட பார்முதல் விண்ணின் துணையுந்தான்

எங்கும் பூத மாயின அம்ம இதுகொண்டோ

அங்கங் கெல்லாம் பூதம தென்றார் அறிவுள்ளார்.          142

 

மிதித்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மை மிசையுந்திப்

பதத்திற் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைப் படிவத்தைச்

சிதைத்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைச் செல்லென்ன

உதைத்துக் கொல்லுஞ் சிற்சிலா¢ தம்மை உலவுற்றே.             143

 

விள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி விரல்மேலால்

தள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி தாமுற்றக்

கிள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி கிளையோடு

மள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி அடுகிற்கும்.            144

 

தாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மைத் தடிகின்ற

ஊக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை யுருமொத்த

வாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை மருளுற்ற

நோக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை நொடிதன்னில்.     145

 

வாரா நிற்கும் பாரிட ராசியை வாரிப்பின்

சேரா நிற்கும் வாய்தொறும் ஈண்டச் சேர்த்திட்டே

ஆரா நிற்கும் ஆர்ந்தபி னாக அகல்மோடடைத்

தூரா நிற்குந் தூர்த்தபின் ஆடல் தொழில்செய்யும்.        146

 

எழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை எரிகூர்வாய்

மழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை வயநாஞ்சில்

கொழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை கூர்சூலக்

கழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மைக் கடிதோடி.         147

 

கரத்திற் கொல்லுஞ் சிலவரை நோன்கார் முகமுய்க்குஞ்

சரத்திற் கொல்லுஞ் சிலவரை அம்பொற் றண்டத்தின்

உரத்திற் கொல்லுஞ் சிலவரை அங்கண் ஒசிக்கின்ற

மரத்திற் கொல்லுஞ் சிலவரை மண்மீ தினில்வீட்டும்.             148

 

தேர்மே லானோ விண்ணுல கானோ திசையானோ

பார்மே லானோ வார்கட லானோ பதுமத்தோன்

ஊர்மே லானோ மேருவி னானோ உயர்பூதர்

போர்மே லானோ தீயவன் என்றார் புலவோ£¢கள்.         149

 

அற்றார் தாள்கள் கைகள் இழந்தார் அடுதிண்டோன்

இற்றார் சென்னி சிந்தினா¢ துண்ட மிலரானார்

பெற்றார் மார்பம் விண்டனர் வீழ்ந்து புரள்கின்றார்

செற்றார் தம்மை அட்டிடு பூதத் திறல்வீரர்.                      150

 

சொரியா நின்ற சோரியர் ஆற்றத் துயர்மேலார்

மரியா நின்றார் எண்ணில ரால்மற் றவர்தம்முட்

பிரியா நின்ற சென்னியர் பல்லோர் பெயர்வெய்தித் 

திரியா நின்றா¢ ஆடுறு கின்ற செயல்கொண்டார்.          151

 

கருவந் தெய்தும் ஆருயிர் முற்றுங் கவிழ்கின்ற

பருவந் தன்னில் தீயவன் உண்ணும் படியேபோற்

செருவந் துற்ற சீயமு கத்துத் திறல்மேலோன்

ஒருவன் தானே நின்றடு கின்றான் உலவாதான்.           152

 

அந்நீ ராகிப் பூதரை வெய்யோன் அடுகாலைச்

செந்நீர் நீத்தம் ஆயிடை தோறுஞ் சென்றீண்டித்

தொன்னீர் வேலை புக்குவர் நீக்கித் துவராக்கி

முந்நீ ரென்னுந் தொன்மையை வேறாய் முடிவித்த.              153

 

ஆடா நின்றான் இத்திறம் வெய்யோன் அளவில்லா£¢

வீடா நின்றார் கண்டனர் வெம்பூ தர்க்கெல்லாங்

கேடா நின்றான் இங்கிவ னென்னாக் கிளையோடும்

ஓடா நின்றா£¢ வானவ ரெல்லாம் உலைவுற்றார்.         154

 

துன்னா நின்ற தொன்மரம் வெற்பின் தொகைவீசி

முன்னா குற்ற பூதர்கள் யாரும் முடிகாகக்

கொன்னார் சிங்க மாமுகன் அட்டே குலவுற்று

மின்னார் செம்பொன் மேருவெ னுந்தேர் மிசைபுக்கான்.    155

 

வேறு

 

அவ்வேலை யன்னான் அமர்செய்விளை யாடல் பாரா

மைவேலை போல்வான் அழற்கண்ணன் மனங்க னன்று

செவ்வே யெதிர்புக் கரிமாமுகற்  சீறி வெய்யோய்

இவ்வேலை உன்னை முடிப்பன்இகல் முற்றி என்றான்.    156

 

என்றங்குரை செய்திடு பூதனை ஏந்தல் நோக்கி

ஒன்றுஞ்சிறி துன்னலை அச்சமும் முற்றி லாதாய்

நின்றிங்கிது கூறினை என்னின் நினக்கு நேரார்

நன்றுன்வலி என்றுந கைத்தனன் நாகர் அஞ்ச.            157

 

அன்னான்நகை செய்தது காண்டலும் ஆழி நாப்பட்

கொன்னார்தழ லென்னவெ குண்டனன் கூளி வேந்தன்

நின்னாடலை நீக்குவன் காணுதி நீயு மென்றோர்

மின்னார்கழு முட்படை ஆங்கவன் மீது விட்டான்.        158

 

கூற்றானவன் ஏவவ ரும்படைக் கொள்கை நோக்கி

மாற்றானவ னோர்படை யும்வழங் காது நின்றான்

தோற்றானென வானவர் ஆர்த்தனர் சூல மார்பின்

ஏற்றான்வரை மேற்படு கண்டகத் திற்ற தன்றே.           159

 

உறுகின்றசூ லப்படை ஊற்றமும் ஓங்கல் மார்பத்

திறுகின்றதும் அங்கவன நின்றதும் யாவும் நோக்கிப்

பெறுகின் றவரில் இவன்பெற்றது பேற தென்னா

மறுகின்ற நெஞ்சன் ஒருதண்டினை வல்லை உய்த்தான்.   160

 

வேறு

 

உய்த்தலும் அனையதண் டுருமுற் றாலென

அத்தலை அரிமுகத் தவுணன் சாரதி

மெய்த்தலை கோடலும் வெகுண்டு நோக்கியே

கைத்தல மிருந்ததோர் கதையை ஏவினான்.                      161

 

மாவலி சேர்தரு மடங்கல் மாமுகன்

ஏவிய வெங்கதை இமைப்பிற் பூதர்கள்

காவலன் அகலமேற் கலந்து தாக்கிற்றால்

ஓவென அனையனும் உளம்வ ருந்தவே.                 162

 

செயிரறத் திருத்திய செம்பொற் குன்றின்மேல்

வயிரமெய்ப் படையது வந்தற் றாதலும்

அயிருறப் புனைகலன் ஆகங் கீண்டிட

உயிரினுக் கவ்வழி யுலைவு மிக்கதே.                           163

 

தாக்கிய வேலையில் தழலின் நாட்டத்தான்

மூக்கினின் மார்பினின் முழங்கு வாயினிற்

தேக்கிய குருதிநீர் சிந்து கின்றது

மேக்குயர் கனல்மழை விரித்த தாரைபோல்.                     164

 

மறந்தனன் தொல்லுணர் வெனினும் வன்றிறல்

துறந்திலன் வெவ்வழல் சொரியுங் கண்ணினான்

சிறந்திடும் ஊசலில் திரிந்த தன்னுயிர்

இறந்திலன் அவற்கொரு கூற்றம் இன்மையால்.           165

 

ஆரழன் முகத்தவன் அயர்வுற் றவ்வழிச்

சோர்வொடு நிற்றலுஞ் சூரன் பின்வரும்

வீரம துடையவன் வேறொர் பாகனைத்

தேரிடை நிறுவினன் சேறல் மேயினான்.                 166

 

வேறு

 

மூண்டமர் இயற்றச் சீய முகத்தவன் வரலும் நோக்கித்

தூண்டிய வெகுளி மேலோன் சுமாலியென் றுரைக்குந் தொல்லோன்

நீண்டிடு மேரு வென்ன நிவந்ததோர் அடுக்கல் தன்னைக்

கீண்டரி முகன்மேற் செல்லக் கிளர்ந்தனன் வீசி ஆர்த்தான்.        167

 

மற்றவன் விடுத்த குன்றை வாளரி முகத்து வீரன்

பற்றினன் ஒருதன் கையால் பந்தென மீட்டும் உந்தப்

பொற்றட மார்பில் தாக்கப் புலம்பியே சுமாலி என்பான்

செற்றமும் தானு மாகச் செயலற்று நிலத்தன் ஆனான்.           168

 

நிலந்தனில் சுமாலி வீ£ நெடுஞ்சினம் திருகி அங்கைத்

தலந்தனில் கரையொன் றேந்தித் தண்டிபோய் அவுணன் தோ¤ல்

கலந்தவன் உரத்தில் செல்லப் புடைத்தலும் காமந் தன்னில்

புலந்தவன் தனக்குக் காட்டும் உணர்வெனப் பொடித்த தன்றே.      169

 

பொடித்தலும் வயிரத் தண்டம் பூதரின் முதல்வன் பொங்கிக்

கொடித்தடந் தேர்மேல் நின்ற கோளரி முகத்தன் தன்மேல்

இடித்தெனக் கையால் எற்ற எரியெழ நகைத்துத் தன்னோர்

அடித்தலங் கொண்டு தள்ளி அமரர்கள் வெருவ ஆர்த்தான்.        170

 

தாளினால் உந்தி விட்ட தண்டிசேண் எழுந்து மெல்ல

மீளுவான் அடுவ னென்னும் வெகுளியான் உயிர்ப்பு வீங்கி

யாளிசேர் வதனத் தண்ணல் ஆடக வயிரக் குன்றத்

தோளின்மேல் குப்புற் றேதன் னடிகொடு துகைக்கல் உற்றான்.      171

 

ஆடியல் தானை மன்னன் ஆயிரத் திரட்டி தோளும்

ஓடினன் துகைத்துத் தாளும் ஓய்ந்தனன் அவற்றை நோக்கி

நாடினன் திரியா நின்றான் நாகநீள் குடுமிக் குன்றில்

கோடுயர் பொதும்பர் தன்னிற் பாய்ந்திடும் குரங்கு போல்வான்.     172

 

குரங்குளைக் குடுமிச் சூட்டுக் கோளரி முகத்து வெய்யோன்

கரங்களிற் பாயும் அங்கட் கலந்திடு படையிற் பாயுஞ்

சிரங்களிற் பாயும் மீளச செவிதொறும் பாயும் பூந்தண்

மரங்களிற் பாய்ந்து செல்லும் மணிச்சிறை வண்டும் போன்றான்.   173

 

செறிந்திடு கரமுந் தோளுஞ் சென்னியும் பூதன் செல்வ

தறிந்திலன் சிறியன் போலும் அரிமுகத் தவுணன் நம்மேல்

எறிந்துல வுற்றுச் சூழும் ஈகொலென் றொருதன் கையால்

சொறிந்தனன் சிறிது பின்னர்த் தண்டியைத் துடைத்து விட்டான்.    174

 

ஒருதனிக் கரத்தால் தீயோன் உருட்டினன் துடைப்பத் தண்டி

பெரிதுநொந் தாற்றல் போகிப் பின்றினன் பெயர்ந்து போனான்

தெரிதரு பூதர் அஞ்சித் சிந்திச் செயலொன் றில்லார்

அரிதுசெய் தவமே அல்லால் ஆற்றல்பெற் றிடுவ துண்டோ.               175

 

பூதர்கள் இரிவு நோக்கிப் பொருதிறல் இலக்கத் தெட்டு

மேதகு வீரர் யாரும் வெய்யதேர் கடாவிச் சென்று

தீதறு சிலைகள் வாங்கிச் சீயமா முகவற் சுற்றித்

தாதவிழ் மலர்பெய் தென்னச் சரமழை பொழிதல் உற்றார்.        176

 

பொழிந்திடு பகழி யெல்லாம் புகுந்திடு சுவடின் நாகி

அழிந்ததும் இன்றி முன்போல் அவன்புடை வீழ நோக்கி

ஒழிந்ததெம் மாற்ற லென்னா உட்கினர் ஒருதன் தேரின்

இழிந்தனன் அவுணர் கோமான் இடிபடத தெழித்துச் சென்றான்.     177

 

எடுத்தனன் சிலவர் தேரை எறிந்தனன் ஒன்றொ டொன்றின்

அடித்தனன் சிலவர் தேரை அள்ளினன் அங்கை தன்னால்

ஒடித்தனன் சிலவர் தேரை உரைத்தனன் சிலவர் தேரைப்

பொடித்தனன் சிலவர் தேரைப் புதைத்தனன் சிலவர் தேரை.               178

 

இத்திற மடங்கல் வீரன் அடுதலும் இலக்கத் தெண்மர்

தத்தம துயிரே தாங்கித் தனுவொடு படைகள் மானம்

மெய்த்திறல் சிந்திச் சாய்ந்தார் மேவலன் தேர்மேற் புக்கான்

அத்தலை நின்ற வீர வாகுமற் றதனைக் கண்டான்.                       179

 

ஆளரி அனைய வீரன் அதுகண்டு பூதர் தம்முட்

கோளரி முகத்து வெய்யோன் கொன்றதோர் பாதி உண்டால்

தாளுடை வில்லி னாருஞ் சமரிடத் தழிந்தார் இந்த

நாளினின் முடியும் போலும் நம்பெரும் படையு மென்றான்.               180

 

அடல்பெறு புயத்து வள்ளல் ஆடக வரைபோ லுள்ள

கோடுமர மான தொன்றைக் கோட்டினன் சினமேற் கொண்டான்

விடமுறு தறுகட் கேது விரைந்தொரு பாங்கா¢ புக்கு

நடுவெலாங் கவரத் தோன்று நாகிளங் கதிரே போல.                      181

 

வாங்கிய சிலையிற் பூட்டி வடிக்கணை அநந்த கோடி

தூங்கலின் மழைகான் றென்ன உலப்புறான் சொரிந்து நிற்ப

ஆங்கெதிர் அடர்த்துப் போர்செய் அவுணர்தந் தலைகள் பாறத்

தாங்கிய படைகள் சிந்தித் தரைமிசைத் துணிந்து வீழ்ந்தார்.               182

 

பரித்தொகை முழுதும் பட்ட பாழியந் தோ¢கள் பட்ட 

ஒருத்தலும் பிடியும் பட்ட உலப்பிலா அவுணர் பட்டார்

பெருத்தன பிணத்தின் குன்றம் பிறங்கின பேய்கள் மொய்த்த

திரைத்தெழு சோரி நீத்தந் தெண்டிரை மடுத்த தம்மா.             183

 

தேரெனப்  பட்ட வீரர் திறமெனப் பட்ட மாவின்

பேரெனப் பட்ட யானைப் பெருக்கெனப் பட்ட தம்முட்

பேரிடைப் படாத எல்லாம் பொருதிரைக் குருதி வாரி

வீரனுக் குதவி யாக வேலையுள் உய்த்த தன்றே.                 184

 

பேரியின் ஒலியும் தீய அவுணர்கள் பிடித்த வில்லின்

நாரியின் ஒலியும் சூழும் நாற்படை ஒலியும் மாண்ட

காரியின் ஒலியும் மோட்டுக் கணங்களின் ஒலியுஞ் செந்நீ£¢

வாரியின் ஒலியு மாகி அடுகளம் மலிந்த அன்றே.                185

 

மலைகளை அறுக்கும் வேலை வாள்களை அறுக்குஞ் செங்கைச்

சிலைகளை அறுக்கும் வெய்யோர் திண்டிறல் கொண்ட தோளின்

நிலைகளை அறுக்கும் மார்பின் நிரைகளை அறுக்குங் கோடி

தலைகளை அறுக்கும் அம்மா இளையவன் சரம தொன்றே.               186

 

காழுறும் அவுணர் சென்னி கரதல நெடுந்தோள் மார்பகம்

வாழிய முருகன் தூதன் வாளிகள் வௌவி ஏகி

ஏழுள கடலும் நீங்கி எண்டிசைக் கிரிகள் தாவி

ஆழியங் கிரிபோழந் தப்பால் அண்டமும் பிளந்து செல்லும்.               187

 

கரண்டம தான செந்நீர் ஆற்றிடைக் கவிழ்ந்து மூழ்கித்

திரண்டவூன் வௌவி மீண்டு சிறகரை உதறு கின்ற

முரண்டகு வீரர் சென்னி மூளைபுக் களைந்து வாரிக்

குரண்டமீ தென்ன லான கருநிறக் கொடிக ளெல்லாம்.             188

 

இவ்வஆஆ அவுணர் தானை இறந்திட வீர வாகு

அவ்வயின் நின்று சென்றாங் கடுதலும் அதனைக் கண்டார்

தெவ்வரை முருக்கும் வைவேற் சீயமா முகத்தன் மைந்தர்

ஐவரை வெல்லும் ஆற்றல் ஐம்பதிற் றிருவா¢ என்பார்.                   189

 

சினத்தனர் இதழைப் பல்லால் தின்றனர் நம்முன் வெம்போர்

வினைத்தொழில் இயற்று வானை வெய்தென அடுது மென்னா

இனத்தொடு தேர்க டாவி ஏகியே வீரன் தன்மேல்

தனித்தனி வார்விற் கோட்டிச் சரமழை சிதற லுற்றார்.                    190

 

நூற்றுவர் ஒருங்கு நேர்ந்து நோன்றலைச் சிலைகள் வாங்கி

மேற்றிகழ் முகில்கான் றென்ன வீசிய விசிகந் தன்னை

ஆற்றல்சேர் வீரன் காணா அயிற்கணை அநந்த கோடி

காற்றெனத் துரந்து மாற்றிக் கடவுளர் புகழ ஆர்த்தான்.            191

 

தொலைவுறும் அவுணன் மைந்தா¢ துண்ணெனக் கனன்று பின்னுங்

கொலையுடை நெடுங்கூர் வாளி கோடிகோ டிகள்நின் றுய்ப்ப

வலியுடை வீர வாகு மற்றவை மாற்றி அன்னோர்

சிலையொடு தேர்கள் தம்மைச் செஞ்சரந் தூண்டி வீழ்த்தான்.      192

 

தேரொடு சிலைகள் மாயச் சீயமா முகத்தன் மைந்தர்

வீரனை எதிர்ந்து வில்லால் வென்றிடல் அரிது போலுங்

கூருடை நுதிவாட் போரிற் கொல்லுதும் இவனை என்னாப்

பாரிடை வந்தோர் சூழ்ச்சி வகையினாற் பகர்த லுற்றார்.           193

 

காட்புடைச் சிலையின் விஞ்சை கற்றதே அன்றி எம்போல்

வாட்படை பயின்றி லாய்கொல் வல்லையேல் அப்போர் செய்யச்

சேட்படை யன்றி எம்முன் சேர்தியால் வீர என்னாத்

தோட்புடை கொட்டி ஆர்த்தார் கூற்றனுந் துளக்கம் எய்த.          194

 

வன்றிறல் அவுணன் மைந்தர் உரையினை வள்ளல் கேளா 

நன்றிது புகன்றீர் என்னா நகைசெய்து நாதன் தந்த

மின்றிகழ் சுடர்வாள் கொண்டு விரைந்துகீழ்த் தலத்திற் பாய்ந்து

சென்றனன் அதனை நோக்கித் தேவரும் இடுக்கண் செய்தார்.       195

 

வார்ந்திடு கழற்கால் வீரன் வாள்கொடு வரலும் நோக்கித்

தீர்ந்தனன் ஆவி இன்னே செகுக்கலாம் இவனை யென்னாக்

கூர்ந்திடு நாந்த கங்கள் தனித்தனி கொண்டு சென்று

நேர்ந்தனர் வளைந்து கொண்டார் மதியைச்சூழ் நிசியை ஒப்பார்.    196

 

வளைந்தனர் வீரன் தோளின் மார்பினிற் கரத்தின் மொய்ம்பிற்

களந்தனிற் சென்னி தன்னிற் கருதினர் இலக்கம் நாடிக்

கிளர்ந்திடு நாந்த கத்தாற் கிட்டினர் எறித லோடும்

உளந்தளர் வில்லோன் மேனிக் குற்றில சிறிதும் ஊறு.                    197

 

ஊறிலாத் தன்மை நோக்கி உவனையாம் பற்றி மெல்லக்

கோறலே கரும மென்னாக் குழுவொடும் அவனைப் புல்லச்

சீறினான் தன்வா ளோச்சிச் சிறிதுமெய் தெரியா வண்ணம்

நூறினான் கொல்லோ என்ன நூற்றுவா¢ தமையும் அட்டான்.              198

 

அட்டிடு கின்ற வீரன் அமரர்கள் வழுத்த மீண்டு

தட்டுடை நெடுந்தேர் புக்கான் தன்மனக் கினிய மைந்தர்

பட்டிடு தன்மை நோக்கிப் பாடுறும் அவுணர் கோமான்

மட்டறு துயரின் மூழ்கி மானத்தால் இரக்க முற்றான்.                     199

 

கோளுண்ட அரிமான் துப்பில் குமரரை ஒருவன் கொண்ட

வாளுண்ட தென்று நெஞ்சம் வசையுண்டு வருந்தல் மன்னோ

தாளுண்டு பரித்து நிற்கத் தலைகளுண் டெண்ணி லாத

தோளுண்டு கரங்க ளுண்டு சுமக்கலாம் போலு மன்றே.            200

 

என்னுடை மைந்தர் தம்மை யாவருங் காண ஈண்டென்

முன்னுற ஒருவ னோதான் முடித்துயிர் கொண்டு நிற்பான்

பின்னினி இதற்கு மேலும் பெற்றிடும் வசையொன் றுண்டோ

ஒன்னலர் தங்கட் கெல்லாம் ஒருநகை விளைத்தேன் அன்றோ.     201

 

பொன்றினர் தம்மை உன்னிப் பொருமியே புன்கண் எய்தி

நின்றிடின் ஆவ துண்டோ நேரலர் தொகுதி எல்லாங்

கொண்றொரு கணத்தின் முன்னர்க் குழுவொடும் வாரி வாரித்

தின்றுதேக் கிட்டால் அன்றித் தீருமோ எனது சீற்றம்.                     202

 

மேவல ராகும்  இன்னோர் குழுவினை விரைவின் அட்டுத்

தாவறு சுடர்வேல் கொண்ட பாலகன் தனையும் வென்று

தேவர்கள் எனப்பேர் பெற்றோர் யாரையும் இன்றே செற்று

மூவுல கினையும் யானே முடிக்குவன் விரைவின் என்றான்.              203

 

என்னஇத் திறங்கள் பன்னி எரியுமெய் விதிர்ப்பச் சீறித்

தன்னுறு தடந்தேர் உய்க்குஞ் சாரதி தன்னை நோக்கிக்

கொன்னுனை அயில்வாட் செங்கைக் குமரர்தங் குழுவைக் கொன்றான்

முன்றுக் கடவு கென்ன நன்றிது முதல்வ என்றான்.                       204

 

பாகுநூல் உணர்ந்து வல்லோன் பரியினை எழுப்பிப் பண்ணி

மாகநீ டடந்தேர் தூண்ட அரிமுகன் வருத லோடும்

ஏகநா யகனாம் மூர்த்தி ஏவலான் அதனை நோக்கி

ஓகையால் தனது மான்தேர் அதனொடும் ஒல்லை நேர்ந்தான்.      205

 

நோ¢ந்திடு கின்ற காலை நிரைபடு விழிக டோறுஞ்

சார்ந்தழல் சிதற நோக்கித் தளைபடு தறுகட் சீயம்

ஆர்ந்திடு பகைகண் டென்ன ஆற்றவுஞ் சினமீக் கொண்டு

சேர்ந்திடு வானை நோக்கிச் சிங்கமா முகத்தன் சொல்வான்.               206

 

ஆதிதந் தருளும் மைந்தன் அறுமுகன் அவன்நீ அல்லை

ஏதிலா இலக்க ரென்றே இசைத்திடு வோர்கள் தம்முள்

நாதனோ எண்மர் தம்முள் ஒருவனோ நம்மூர் வந்த

தூதனோ இனையர் தம்முள் யாரைநீ சொல்லு கென்றான்.         207

 

அல்லுறழ் கண்டன் தந்த அறுமுகற் கடிய னானேன்

தொல்லைநும் மூதூர் அட்டுத் தூதனு மாகி மீண்டேன்

எல்லையின் நுமரை யெல்லாம் ஈண்டொரு கணத்தின் அட்டு

வெல்லுவ தமைந்து நின்றேன் வீரவா கென்போ¢ என்றார்.         208

 

வேறு

 

திண்டிறற் சேவகன் செப்பும் இம்மொழி

விண்டிடு செவிதொறும் விடம்பெய் தாலெனக்

கொண்டனன் வெகுண்டொரு கூற்றங் கூறினான்

உண்டிடும் அசனின் உமிழ்ந்திட் டாலென.                209

 

உறுபடை உழப்பினை உணர்கு றாததோர்

சிறுவரை வெல்வதுந் திருந்து மாநகர்

உரைதரும் எளியரை உடன்று கொல்வதும்

அறிகுறி ஈதுமோர் ஆண்மைப் பாலதோ.                 210

 

நூற்றியற் குமரரை நொய்திற் கொன்றநின்

ஆற்றலைக் கெடுக்குவன் ஆவி வாங்கியே

கூற்றுவற் குண்டியாக் கொடுப்பன் மெய்யினைப்

பாற்றினுக் குதவுவன் பாலவன் காணவே.                211

 

உன்னுடை வன்மையும் உனது நாயகன்

தன்னுடை வன்மையுந் தானை வன்மையும்

பின்னுடை அமரர்கள் பெற்ற வன்மையும்

என்னுடை வன்மையால் இறையின் நீக்கவேன்.           212

 

வானவர் சிறையினை மாற்ற உன்னியே

தானையொ டேகியென் றன்முன் எய்தின்நீர்

ஊனுயிர் வாழ்க்கையும் ஒல்லை தீர்திரால்

ஆனதொ ரூதியம் அழகி தாற்றவே.                             213

 

மூண்டதொல் விதியினான் முடிந்த மன்னுயிர்

ஈண்டுதம் மியாக்கையுள் மேவும் என்னினும்

ஈண்டெனை மாறுகொண் டிகல்செய் கின்றவர்

மாண்டிடும் ஆறலால் மற்றும் உய்வரோ.                214

 

என்பதை அரிமுகன் இயம்ப எம்பிரான்

நன்பெருந் தூதுவன் நகைசெய் தங்கையின்

மன்பெருஞ் சிலையினை வணக்கி வாளியோர்

ஒன்பதொ டொன்பதை உரத்தில் தூண்டினான்.            215

 

விரைந்திடு செலவினால் விசிகம் ஏவலான்

உரந்தனிற் படுதலும் ஒசிந்து வீழ்ந்தன

இரந்திடு தொழிலவர் இன்மை யாளர்போல்

கரந்தவர் இயற்கையைக் கருதி மீள்வபோல்.                     216

 

முருகன தேவலால் முன்னம் விட்டிடு

பொருகணை அகலமேற் புகாது வீழ்தலும்

அரிகெழு முகமுடை அவுணர் நாயகன்

கரமிசை இருந்ததோர் கதையொன் றேவினான்.           217

 

ஏவிய தண்டினை ஏந்தல் ஈரிரு 

தூவயில் வாளியால் துண்டஞ் செய்திடா

ஓவரும் பான்மையால் ஒராயிர ரங்கணை

தேவரை அலைத்தவன் சிரத்தில் ஓச்சினான்.                     218

 

சிரம்படு கின்றதோர் செய்ய வாளிகள்

பரம்படு பலதுணி பட்டு வீழ்ந்தன

உரம்படும் அவுணர்கள் உறைதற் கொத்தமுப்

புரம்படு கின்றதோர் பூழி யாமென.                              219

 

பொன்றிகழ் வடிக்கணை பொடிப்ப இன்னமுன்

நின்றமர் புரியுமோ நென்னல் தூதுவன்

நன்றென அரிமுகன் நகைத்துத் தன்கையின் 

மின்றிகழ சூலவேல் திரித்து வீசினான்.                  220

 

காசினி எரிகிளர் காட்சித் தாலென

ஆசினி தனில்வரு சூலத் தாற்றலுந்

தேசுடை நிலைமையுந் திறலும் நோக்கியே

வீசினன் எதிருற விசிகம் ஆயிரம்.                              221

 

நெட்டிலைச் சூலவேல் நிமலற் கன்பினோன்

விட்டிடு பகழியை வீட்டி மேற்செலப்

பட்டது நோக்கினன் பரிந்து பின்னருந்

தொட்டனன் ஆயிரஞ் சுடர்கொள் வான்கணை.            222

 

ஏவிய எல்லையில் எதிரும் வாளியைத்

தூவுறு கொன்னுனைச் சூலஞ் சிந்தியே

மேவலர் பரவுறும் வீர வாகுமேல்

தேவரும் மருளுறக் கடிது சென்றதே.                           223

 

இலக்கரும் நங்கினர் எண்மர் ஏங்கியே

கலக்கம தடைந்தனர் கணங்கள் யாவரும்

இலக்கணுற் றிரங்கினர் அமரர் இப்படை

விலக்கரி தேகொலென் றுயிர்த்து விம்மினார்.                    224

 

வேறு

 

கோள்கொண்ட பகழிகளின் கொலைகொண்டு நிலைகொண்ட

தோள்கொண்டு செல்லவருஞ் சூலத்தின் திறல்நோக்கி

நீள்கொண்டல் அன்னதொரு நீலமிடற் றவன்தந்த

வாள்கொண்டு குறைத்திட்டான் வலிகொண்ட தகலாதான்.          225

 

சூலம்போய் இற்றிடலுந் துணைவர்களாய் உள்ளோரும்

ஞாலஞ்சேர் பூதர்களும் நனிமகிழ்வு விறந்தனரால்

ஆலம்போந் தடா¢த்திடலும் அமலனுண்டு தமைக்காத்த

காலம்போல் அமரரெலாந் துயரம்போய்க் களிசிறந்தார்.            226

 

அக்காலை வௌ¢ளிமலை அளிக்குநந்தி கணத்திறைவன்

மெய்க்கால வடவையினும் வெகுளியுறு பெற்றியனாய்

இக்காலை இவனுயிரை யானேஉண் குவனென்னா

மைக்காலன் றனைமுடித்த வள்ளல்தனிப் படைகொண்டான்.               227

 

எந்திரித்த இருக்கைதனில் இருத்தியே கருவிகளான்

மந்திரத்தின் விதிமுறையின் மனப்படுபூ சனைஇயற்றி

அந்தரத்தில் இமையவர்க்கும் அரியயற்கும் வெலற்கரிய

சுந்தரத்தோள் அரிமுகனை அடுதியெனத் தொழுதுய்த்தான்.        228

 

உய்ப்பதொரு படையழல்கான் றுலகம்வெருக் கொள்வரலும்

எப்படையோ இ•தென்றான் இமையவர்தம் படைவென்றான்

துப்படையுஞ் செஞ்சடிலத் தோன்றல்படை எனத்தெரியா

அப்படையோ அடுவதென அண்டம்வெடி படநகைத்தான்.          229

 

அற்பட்ட புலனுடைய அரிமுகத்தன் தான்நோற்று

முற்பட்ட பகற்கொண்ட முக்கணான் தனதுபடை

எற்பட்ட மணிக்கடகத் தொருகரத்தில் இருந்ததனைச்

சொற்பட்ட மந்திரத்தால் வழிபட்டுத் தூண்டினனால்.                      230

 

தூண்டலுறு பரன்படையுந் தொல்லைவரும் அப்படையும்

ஈண்டியெதி ரெதிர்துன்னி இணைகொண்டோர் இருதலைவர்

காண்டகைய கேண்மையினாற் கடிதுவந்து கலந்தேபின்

மீண்டிடுவ தேபோல விடுத்தவர்பால் மேவினவால்.                      231

 

வேறு

 

தன்படை மீடலுஞ் சயங்கொள் மொய்ம்பினான்

துன்புடை மனத்தனாய்ச் சூரன் என்பவன்

பின்புடை யானொடு பேசப் பின்னொரு

முன்புடை யாரிலை என்று முன்னினான்.                232

 

ஆற்றலிற் குறைவிலன் அழிவு றாதமர்

பேற்றினிற் குறைவிலன் பிறரை அட்டிடு

கூற்றினிற் குறைவிலன் கோடி கூற்றுவர் 

ஏற்றெதிர் மலையினும் இமைப்பிற் கொல்வனால்.                233

 

அவன்பெரு முயற்சியே ஆற்ற லாம்என்கோ

தவங்களின் வன்மையே வன்மை தான்என்கோ

சிவன்புரி வரமதே சீரி தால்என்கோ

எவன்பெரி தென்றியான் இசைக்க வல்லனே.                     234

 

விடலுறு பகழியான் மெய்யில் ஊறிலான்

அடலுறு படையினும் அழிவு பெற்றிலான்

கொடியதோர் அரிமுகன் குமரன் செங்கையிற்

படைகளின் அன்றியே படுகி லானரோ.                   235

 

தீயவன்  ஆவியை சிந்தல் கூடுறா

தாயினும் வெஞ்சமா¢ ஆற்றி இங்கிவன்

தேயுயர் தேரினைப் படையைச் சேனையை

மாய்வுறு விப்பனால் வல்லையா னென்றான்.                    236

 

இத்திறம் இளையவன் இயம்பி ஏழிரு

பொத்திரம் தூண்டியே பொருவில் கேசரி

வத்திர முடையவன் வையம் உந்துவான்

சித்திர நெடுந்தலை சிந்தி நீக்கினான்.                    237

 

சாரதி தலையது தரையில் வீழுமுன்

சூரொடு தோன்றினான் சுளிந்தொர் தண்டினை

ஓரிமை ஒடுங்குமுன் உருமின் உய்த்தலும்

வார்கழல் இளையவன் மருமம் மாய்ந்ததே.                      238

 

விடலரும் திறலுடை வீர வாகுவின்

தடமிகும் உரம்புகு தண்டஞ் சாளரத்

திடையிடை கதிர்வரும் எல்லை காணுறும்

பொடியென லாகியே புகையில் போயதே.                239

 

தோட்டுணை வாகையான் சுளிந்து துண்ணென

ஓடடுறு நெடுங்கணை உய்த்தொ ராயிரம்

மோட்டுடை விறலரி முகத்தன் ஏறிய

சேட்டுடை மணிநெடும் தேரை வீட்டினான்.                      240

 

தேரழிந் திடுதலும் ஆர்த்துச் சிங்கனை

ஆருயிர் கொள்ளுதும் அற்ற மீதெனாப்

பாரிடா¢ வரைகளும் படையும் வீசியே

சாருற வளைந்தனர் சமரின் முந்தினார்.                 241

 

வெய்யவன் அங்கது வெகுண்டு நோக்கியே

செய்யதோர் மணிநெடுஞ் சேமத் தேர்புகா

ஐயிரு நூறுவில் லதனை ஆயிரம்

கையினில் எடுத்தனன் கடிதின் வாங்கினான்.              242

 

கருமணி வரைபுரை காமர் வில்லெலாம்

அரவுறழ் குணங்கள்கொண் டவுணன் கையுற

திருமுடி பலவுடைக் கிரியிற் செல்லினம்

உருகெழு மின்னொடும் உறுவ போன்றவே.                      243

 

பிடித்திடும் விற்களில் பிறங்கு நாணொலி

எடுத்தனன் எடுத்தலும் உயிர்கள் யாவையும்

துடித்தன அண்டமும் துளக்க முற்றன

முடித்தலை பனித்தனன் முளரித் தேவனும்.                     244

 

வணக்கிய விற்களின் மடங்கல் மாமுகன்

கணக்கில வாகிய கடல்கள் வானெழீஇத்

தணக்கில பொழிந்தெனச் சரங்கள் சிந்தலும்

பிணக்குவை ஆயினர் பெயர்ந்த பூதர்கள்.                245

 

தாள்களும் கரங்களும் தலையும் சிந்தினர்

கோளுறு தசையொடு குருதி சிந்தினர்

மூளைகள் சிந்தினர் முடியும் கால்பொரப்

பூளைகள் சிந்தின போலப் பூதர்கள்.                             246

 

தருப்பயில்  பாற்கடல் தனது சீகரம்

திரைப்பெருங் கரங்களால் சிந்தல் போன்றதால்

அரிப்பெரு முகத்தவன் ஆயி ரங்கையால்

துரப்புறு கண்களைத் தூண்டு கின்றதே.                   247

 

மண்டல நிரந்தன வானம் தூர்த்தன 

எண்டிசை மறைத்தன கிரிகள் ஈண்டுவ

தெண்டிரை எங்கணும் செறிவ அப்புறத்

தண்டமும் போவன அவுணன் வாளிகள்.                 248

 

மருப்புயர் திசைக்கரி மருமம் பாய்வன

பருப்பதம் ஏழையும் பகிர்வ மேருவாம்

பொருப்பையும் போழ்வன புணரி தோறமர்

நெருப்பையும் தணிப்பன நீசன் வாளியே.                249

 

மாறுபட் டவன்விடும் வாளி மாரியால் 

ஈறுபட் டிடாததோ ருயிரும் யாக்கைகள்

கூறுபட் டிடாததோ ருயிரும் கொம்மென

ஊறுபட் டிடாததோ ருயிரும் இல்லையே.                250

 

எண்படும் அரிமுகன் எடுத்த வில்லுமிழ்

புண்படு கணைமழை பொதிந்து போகுறா

விண்படு நெறியெலாம் விலக்கி மாற்றியே

ஒண்புவி ஆக்கிய துலகம் யாவையும்.                           251

 

தாக்குறும்  அரிமுகன் சரங்கள் பாரிடர்

யாக்கைகள் உருவியே எடுத்து நொய்தெனப்

போக்குறு கின்றன புலாவின் சூட்டினைக்

கோக்குறு சலாகையின் குழுவு போலவே.                252

 

மெய்ந்நெறி யுணர்கிலார் வெறுக்கை பெற்றது

துன்னிய கிளைக்கொரு துன்ப மாதல்போல்

ஒன்னலன் விடுங்கணை உலப்பின் றோடலால்

தன்னுறு படைகளைத் தானுங் கொன்றவே.                      253

 

தீந்தொழில் அரிமுகன் செறித்த வாளிகள்

வாய்ந்திடுஞ் சேணெறி மாற்றும் பான்மையால்

காய்ந்திடுஞ் செங்கதிர்க் கடவுள் மேற்றிசைப்

போந்திலன் மீண்டிலன் புலம்பி நின்றுளான்.                      254

 

கொம்பொடு பேரியுங் குணிலும் ஏனைய

வெம்படை யாவையும் விரவி மேற்செலக்

கம்புளும் கரண்டமும் கனைந்து சுற்றிடச்

செம்புனல் கரும்புனல் அளக்கர் சென்றதே.                       255

 

இத்திறம் அரிமுகன் இயற்றும் போரினை

மெய்த்திறன் மொய்ம்புடை வீரன் காணுறாச்

சித்திரத் தவனெதிர் சென்று வாங்கினான்

கைத்தலத் திருந்ததன் கடவுள் வில்லினை.                      256

 

வாக்கிய சிலைதனில் வறிது வாணொலி

ஆக்கினன் ஆக்கலும் மலைந்த தண்டமும்

தீக்கிளர் குஞ்சியர் செருச்செய் தானவர்

ஏக்கம தடைந்தனர் இரிந்து போயினார்.                  257

 

மாக்களின் இருந்தவர் மதங்கொள் வெங்கரி

மேக்குற வைகினோர் தேரின் மேவினோர்

தாக்குறு படைகளுஞ் சயமுஞ் சிந்தியே

யாக்கைகள் நடுக்குற யாரும் வீழ்ந்தனர்.                 258

 

வேறு

 

அவ்வ ழிப்பட நாணொலி உறுத்தியே அடலோன்

கைவ ழிப்படு சிலையினில் கணைமழை சிதறித்

தெவ்வ ழிப்படு சீயமா முகத்தவன் செலுத்தும்

எவ்வ ழிப்படு பகழியும் அறுத்தனன் இமைப்பில்.         259

 

பிரமர் எண்ணிலர் பயந்திடும் உயிர்களைப் பின்னாள்

ஒருவ னாகிய கண்ணுதல் தொலைக்குமா றொப்பச்

செருவ லாளனாம் இளையவன் பகழிகள் சிதறி

அரியின் மாமுகன் விடுகணைத் தொகையெலாம் அறுத்தான்.260

 

மிக்க நேமியிற் புவனியின் அகலிரு விசும்பில்

திக்கின் மேருவின் வரைகளில் தீயவன் பகழி

புக்க புக்கதோர் இடங்களில் தன்கணை பூட்டி

அக்க ணந்தனில் அவன்விடு வாளிகள் அறுத்தான்.        261

 

புறத்த ராமென மன்னுயிர்க் கின்னலே புரியும்

திறத்தன் வாளியை மைந்தனின் றட்டது தேவர்

குறித்து நோக்கியே சூர்முதற் கிளையெலாம் குமரன்

அறுத்த நாள்வரு மகிழச்சியைக் கிடைத்துநின் றார்த்தார்.  262

 

அகழி யார்கலி நொஞ்சிசூழ் முதுநகர் அடர்த்தோன்

திகழி யானைகள் வெருவரும் அரிமுகத் திறலோன்

பகழி யாவையும் அட்டதோ அங்கவன் படைத்த

புகழி யாவையும் அட்டதன் றோவெனப் புகன்றார்.        263

 

அள்ளல் செற்றிய அளக்கர்சூழ ஆசுரத் தரசன்

தள்ளல் உற்றிடு பகழியைத் தனதுகைச் சரத்தால்

வள்ளல் அத்துணை அறுத்தனன் அகற்றமற் றதனைக்

கள்ள லைத்தார் அரிமுக மேலையோன் கண்டான்.               264

 

வில்லெ டுத்தது நின்பொருட் டாகுமால் விரைவின்

மல்லெ டுத்தநின் மொய்ம்பினைக் கரங்களை மார்பைப்

பல்லெ டுத்திடு தலையினை நாசியைப பதத்தைச்

சொல்லெ டுத்திடு நாவினைச் சரங்ளால் துணிக்கேன்.     265

 

திரண்ட கையுளேன் சிலைத்தொழில் காட்டுறு செருவில் 

இரணடு கையுடை நீகோலாம் என்முனம் ஏற்பாய் 

முரண்ட னிச்சிலை தொட்டநின் கையினை முடித்துக்

கரண்டம் உண்ணிய புரிகுவன் முந்துநீ காண.            266

 

எமரி ருக்குறு மகேந்திர நகர்தனில் ஈண்டுஞ்

சமர கத்தினில் என்பெருந் தானைகள் தம்மில்

குமரர் தங்களிற் சொற்றமாக் கொண்டன முற்றும்

உமிழு விக்குவன் உன்னுயிர் தன்னையான் உண்பேன்.    267

 

என்னும் மாற்றங்கள் அரிமுகன் இசைத்தலும் ஏந்தல்

பன்னு கின்றதென் பற்பல நினக்குள படையைத்

துன்னு தானைகள் யாவையுஞ் செற்றுனைத் துரப்பேன்

என்னு டைச்சிலை வன்மையைப் பார்த்தியா லென்றான்.  268

 

சொற்ற மாத்திரத் தவுணனார் அழல்விழி தூண்டக்

கொற்ற வெஞ்சிலை பத்துநூ றொருதலை குனித்துப்

பொற்றை ஈர்ங்கணை ஆயிரத் தாயிரம் பூட்டி 

வெற்றி மொய்ம்புடை ஒருவன்மேற் சென்றிட விடுத்தான். 269

 

சீற்றம் மிக்கநம் இளையவன் சிலையெனக் கொண்ட 

கூற்றை வாங்கியே பத்துநூ றாயிரங் கொடுங்கோல்

ஆற்றல் மிக்கன தூண்டியே மேலவை அறுத்து 

வீற்றும் ஆயிரம் ஆயிரம் பகழிகள் விட்டான்.                    270

 

நம்பி தொட்டிடு கணையினை மகேந்திர நகரோன்

தம்பி பத்துநூ றாயிரங் கணைகளாற் சாய்த்து

வெம்பி ஆயிர கோவெவ் வாளிகள் விடுப்ப

எம்பி ராற்கிளை யோனும்அக் கணையினை எய்தான்.             271

 

குராவ ணிந்திடு குமரனுக கிளையவன் கொடுங்கோல்

பராவ லன்விடு பகழியைப் பாரிடைப் படுத்தக் 

கராச லங்களை யடுமுகன் அதற்குமுன் கணைகள்

இராயி ரந்தொடுத் தண்ணறன் சிலையினை இறுத்தான்.   272

 

மாறில் வெஞ்சிலை இற்றுழி இளையதோர் வள்ளல் 

வேறொர் கார்முகன் வாங்குமுன் அகலத்தில் வெய்யோன்

நூறு கோடி புங்கவங்களை அழுத்தலும் நொய்தின்

ஆறு கோடியொத் திழிந்தன அகலிருங் குருதி.            273

 

குருதி யாகத்தின் இழிந்திடத் தன்சிலை குனித்துப்

பரிதி ஒண்கதிர் என்னநூ றாயிரம் பகழி 

கருதி விட்டிடக் கருதலன் அங்கது காணா

இருது நாண்முகி லாமென அவைதொடுத் திறுத்தான்.     274

 

அல்லி னோர்மதி எழுந்தென அவுணருள் உதித்த

மல்லல் வாலிய அரிமுகன் தொடுகணை மாரி

ஒல்லென் வாளியான் மாற்றியா யிரங்கணை உந்திச்

சில்லி ஆழிகள் அறுத்தவன் தேரினைச் சிதைத்தான்.              275

 

ஏறு தேரழிந் திடுதலும் அரிமுகன் இமைப்பின்

மாறொர் வையமேற் பாய்ந்தனன் வார்சிலை வளைப்ப

ஆறு மாமுகற் கிளையவன் கணைகளால் அவுணன்

நூறு பத்தெனுஞ் சிலையையும் அறுத்தனன் நொடிப்பில்.  276

 

வில்லி ழந்தனன் மானமும் இழந்தனன் வீரச்

சொல்லி ழந்தனன் பெருமிதம் இழந்தனன் தொல்சீர்

எல்லி ழந்தனன் பெருமையும் இழந்தனன் இலங்கும்

பல்லி ழந்திடு விடவரா ஒத்தனன் பதகன்.                277

 

ஏதி லானொருங் காயிரஞ் சிலைகளும் இழந்து

மாது யர்ப்படு நிலைமையை நோக்கியே மறங்கொள் 

பூதர் ஆர்த்தனர் அமரர்கள் ஆர்த்தனர் புரைதீர்

வேதர் ஆர்த்தனர் முகுந்தரும் ஆர்த்தனர் விண்மேல்.     278

 

ஆயி ரஞ்சிலை ஒருதலை துணிந்ததும் அமரர்

நாய கன்தனக் கடியவன் விற்றொழல் நலனும்

மாய னாதியர் இகழ்ச்சியும் பூதர்தம் வலியுங்

காயு நெஞ்சுடை மடங்கல்மா முகத்தவன் கண்டான்.              279

 

தேவர் ஆர்ப்பையும் இந்திரர் ஆர்ப்பையுந் திசையின்

காவ லாளர்தம் ஆர்ப்பையும் எமையடக் கருதும்

மூவர் ஆர்ப்பையுஞ் சாரதர் ஆர்ப்பையும் முனிவோர்

ஏவர் ஆர்ப்பையுந் துன்பினுக் குதவுவன் என்றான்.        280

 

வேறு

 

தீயா ருக்கோ ரெல்லைய தானான் திறல்மேலான்

தூயா ருக்கே இன்னல்பு ரிந்தான் தொலைகில்லான்

தாயாய் முந்தே தம்மை அளித்தாள் தருகின்ற

மாயா பாசந் தன்னையெ டுத்தான் மறமிக்கான்.           281

 

ஒட்டிப் பேபர்செய் மாற்றலர் தம்மை யொருபாலாற்

கட்டிக் கொள்ளா ஆருயிர் உண்டு கடிதேகிக்

கிட்டித் தொல்லை ஞாயிறு தோன்றுங் கிரியுய்த்து

விட்டுப் பேரா தாண்டுறை கென்னா வீசுற்றான்.           282

 

மறியா நிற்குந் தெண்டிரை ஏழும் வந்தொன்றாய்ச்

செறியா நிற்குங் கொல்லிது என்னத் திசைசூழ்போய்

எறியா நிற்கும் பாசமி ருட்கோ ரிடமாகிப்

பொறியா நிற்குந் தீயழல் சிந்திப் புகுந்தன்றே.                    283

 

சேணா டுற்றோர் யாரும் இரிந்தார் செருவாற்றல்

பூணா நிற்கும் பூதரும் யாரும் பொருமுற்றார்

ஆணா யுற்றோர் யாரினும் மேலோன் அதுதன்னைக்

காணா ஈதோர் மாயைகொல் என்றே கருதுற்றான்.        284

 

ஆர்ப்பாய் உற்ற தெண்டிரை கொல்லோ அ•தன்றேல்

போர்ப்பான் வந்த பாயிருள் கொல்லோ புயம்வீக்கி

ஈர்ப்பான் உற்ற நாணது கொல்லோ யாதேனுந்

தீர்ப்பேன் வல்லே என்று நினைந்தான் திறல்வாகு.        285

 

ஆற்றான் மற்றிவ் வாறுதெ ரிந்தே அதுதீர்ப்பான்

மாற்றா கின்ற தொல்படை தன்னை வாங்காமுன்

கூற்றாய் நின்றோன் வீசிய பாசங் குழுவோடும்

காற்றாய் வந்திங் கியாவரை யுங்கட் டியதன்றே.          286

 

பல்லோ ராகிப் போர்புரி பூதப் படையோரும்

வில்லோ ராகும் எண்மரும் ஏனை விறலோருந் 

தொல்லோர் கூறும் ஆடல்கொள் மொய்ம்பின் துணையோனும்

எல்லோர் தாமும் வீக்குறு பாசத் திடையுற்றார்.          287

 

மேற்றான் எய்தி வீக்கிய பாசம் மிடல்வீரர்

மாற்றா நிற்பர் தொல்லுணர் வோடு மலிவாரேல்

ஆற்றா ரென்னச் செய்குவன் யானென் றவர்புந்தி 

தேற்றா வண்ணஞ் செய்துள தம்மா சிறுபோழ்தின்.               288

 

வேறு

 

தொன்னிலை உணர்வு மாழ்கித் தொல்வலி சிந்திச் சோரும்

அன்னவர் தொகையை எல்லாம் அந்தர நெறிக்கொண் டேகி

மின்னென அளக்கர் வாவி மேருமால வரைபோல் நின்ற

பொன்னவிர் உதய மென்னும் பொருப்பிடைப் புகுந்த தன்றே.              289

 

கதிபடர் கின்ற காலிற் கருத்தினிற் கடிதின் ஏகித்

துதியுறு திருவின் கேள்வேன் துயில்புரி கடலில் துஞ்சும்

உதயமால் வரையின் எய்தி உயிர்ப்பிலா துறங்கு கின்ற

மதவலி வீரர் தம்மை வைத்துடன் இருந்த தன்றே.                       290

 

விழுமிய பூதர் யாரும் வீரரும் விளிந்து வெய்யோன்

எழுதரும் உதயம் புக்கா ரென்பது தெரிந்து நோக்கித்

குழுவொடு பொருது ளாரைக் கொன்றுயிர் குடித்தேன் வல்லே

அழகிதென் னாற்றல் என்றான் அமரரை அலக்கண் கண்டான்.      291

 

ஓடினான் கொல்லோ போர்க்கென் றுற்றதும் இலையோ எங்குந் 

தேடினேன் காண்கி லேனால் யாண்டையான் சிறுவன் அம்மா

சாடினான் சாடி னானென் றுரைப்பது சழக்கோ தம்பி

வீடினான் அல்ல னோவென் றண்டங்கள் வெடிக்க ஆர்த்தான்.      292

 

கேசரி முகன்இவ் வாறு கிளத்தினன் ஆர்க்கும் எல்லைத்

தூசியின் முந்து போன தூதுவன் ஒருவன் நண்ணி 

ஆசறு பூத வௌ¢ளம் ஆயிரத் தோடு செவ்வேள்

பாசறை இருந்தான் யானும் பார்த்தனன் வந்தேன் என்றான்.               293

 

ஒற்றன துரையைக் கேளா ஔ¢ளெயி றிலங்க நக்குப்

புற்றுறை அரவ மென்னப் புதல்வன்எற் பொருவான் அஞ்சி

மற்றவண் உறைந்தான் கொல்லோ வல்லையில் யானே ஏகி

இற்றையோர் கணத்தில் அன்னான் இருஞ்சமர் முடிப்ப னென்றான். 294

 

என்றனன் படரும் எல்லை இன்னதோர் நிகழ்ச்சி யாவும்

ஒன்றற நோக்கி வானோ£¢ உயங்கினர் ஓட லுற்றார்

சென்றனர் அதனை நாடிக் காலெனுந் திறலின் வெய்யோன்

குன்றெறி நுதிவேல் அண்ணல் குரைகழல் பணிந்து சொல்¢வான்.  295

 

அத்தகேள் பூத ரோடும் அடுபடைத் தலைவர் ஏகி

மெய்த்திறற் பெரும்போ ராற்ற வெகுண்டரி முகத்து வெய்யோன்

கைத்தலத் திருந்த சூழ்ச்சிக் கயிற்றினால் நமரை யெல்லாம்

எய்த்திட வீக்கி வெய்யோன் உதயத்தில் இட்டா னென்றான்.               296

 

ஆண்டகை வரம்பு சான்ற அறுமுக னவன்சொற் கேளா

யாண்டுளான் யாண்டு ளான்அவ் வரிமுகத் தவுணன் என்னத்

தூண்டிடு பொறியால் இங்ஙன் வருகுவான் போலு மென்றான்.      297

 

னுன்னலும் நகைத்துச் செவ்வேள் அரியணை இருக்கை நீங்கிப்

பன்மணி குயின்ற செம்பொற் பாதுகை சரணஞ் சேர்த்திப்

பொன்னவிர் கழல்க ளார்ப்பப் புறங்கடை காறும் போந்து

தன்னயல் வந்த காலைத் தருதிநந் தேரை யென்றான்.             298

 

ஆறுமா முகத்து வள்ளல் அருள்பணி தலைக்கொண் டேகி

மாறிலா முதல்வன் தந்த வையம் தழைத்து வெங்கால்

தாறுசேர் கோலும் நாணுந் தங்கினன் கடாவி உய்ப்ப

ஏறினான் அதன்மேல் ஐயன் இமையவர் யாரும் ஆர்த்தார்.        299

 

இந்திரன் கவரி சாய்ப்ப இமையவர் வட்டம் வீசச்

சந்திரன் தபனன் என்போர் தண்ணிழற் கவிப்புத் தாங்க

அந்தகன் உடைவாள் பற்ற இயக்கர்கோன் அடைபபை கொள்ளச்

சிந்துநீர் அரசன் செம்பொற் படியகம் ஏந்தச் சென்றான்.            300

 

நாயகன் குமரன் போர்மேல் நடப்பது தெரிந்து பூதர்

ஆயிர வௌ¢ளத் தோரும் ஆர்கலி நாண ஆர்த்துக்

காயெரி உமிழுஞ் சூலங் கணிச்சிதண் டெழுவு நாஞ்சில்

 மீயுயர் பழுவங் குன்றங் கொண்டனர் விரைந்து சூழ்ந்தார்.                301

 

அடித்தனர் பறைகள் சங்கம் ஆர்த்தனர் ஐயன் சீர்த்தி

படித்தனர் பாங்கர் எங்கும் பனமணிக் கவிகை வட்டம் 

பிடித்தனர் தமது வீரம் பேசினர் முரி யேற்றுக்

கொடித்தொகை அநந்த கோடி கொண்டனர் குணிப்பில் பூதா¢.      302

 

மூவர்கள் முதல்வன் வந்தான் முக்கணான் குமரன் வந்தான் 

மேவலர் மடங்கல் வந்தான் வேற்படை வீரன் வந்தான் 

ஏவருந் தெரிதல் தேற்றா திருந்திடும் ஒருவன் வந்தான்

தேவர்கள் தேவன் வந்தான் என்றன சின்ன மெல்லாம்.            303

 

ஆசறு பூதர் சூழ அமரர்வாழ்த் தெடுப்ப ஐயன்

பாசறைக் களத்தை நீங்கிப் பறந்தலை நிலத்தின் எல்லை

வீசுறு மருத்து மின்னும் வௌ¢குற நொடிப்பிற் செல்லக்

கேசரி முகத்தி னானுங் கிளர்படை யோடு நேர்ந்தான்.             304

 

பருப்புறும் எழுவும் வான்றொன் பழுவமும் பரசுந் தண்டு

நெருப்புமிழ் சூல வேலும் நேமியுங் கொழுவுங் குன்றும்

பொருப்புறழ் பூதர் வீசிப் பொருக்கென அவுணர் தம்மை 

மருப்புயர் களிற்றை மாவை வையத்தை அடுத லுற்றார்.          305

 

குந்தமும் மழுவுந் தண்டுங் குலிசமும் எழுவுங் கோலும்

முந்திய கழுமுள் வேலும் முசலமுங் கொழுவுஞ் சங்கும்

எந்திரக் கவண்வீழ் கல்லும் எ•கமும் பிறவு மெல்லாஞ்

சிந்திநின் றவுணர் பூதப் படையினைச் செறுத்த லுற்றார்.          306

 

இருதிறப் படைகள் தம்மில் இத்திறம் பொருத வெல்லைக்

குருதிவந் தலைப்ப மார்பு சென்னிதோள் குறைந்து வேறாய்த்

தரையிடை மறிந்தார் பல்லோர் சங்கரன் விடுத்த மூரல்

விரிகனல் சிதறிப் பற்ற வெந்துவீழ் புரம தேபோல்.                       307

 

கண்டனன் அஆயை செய்கை கனல்பொழி பரிதிக் கண்ணான்

மண்டமர் புரியா நிற்கும் மாற்றலர் தம்மை வாரி

உண்டனன் எனது சீற்றம் ஒழிக்குவன் ஒல்லை யென்னா

அண்டமும் திசையும் தானே ஆகுவோர் வடிவம் கொண்டான்.     308

 

ஆயிர முடியின் மௌலி அண்டத்தின் முகட்டை நக்கப்

பாயிருங் கரங்கள் அண்டப் பாங்கரை அலைப்பப் பாருட்

போயின பதங்கள் அண்டத் தடியினைப் பூழை செய்ய

மாயையாம் இனைய வாறோர் வடிவுகொண் டார்த்¢து வந்தான்.   309

 

வந்திடு சீற்றத் துப்பின் மடங்கலின் தோற்றம் நோக்கித

அந்தகன் அசைந்து நின்றான் ஆதவன் இரிய லானான்

இந்திரன் துளக்க முற்றான் எரிபதை பதைத்துச் சோர்ந்தான்

சிந்தையின் மருட்கை உற்றார் திசைமுகன் முதலாம் தேவர்.              310

 

வேறு

 

அன்னதொர் எல்லையில் ஆளி முகத்தோன்

முன்னுறு பூதம் முழங்கொலி நீத்தம்

என்னதும் அங்கை இராயிரம் ஓச்சி

உன்னுமுன் வாரினன் உண்டல் பயின்றான்.                      311

 

ஈட்டுறு பூதரி ருங்குழு வத்தை

நீட்டினன் அள்ளுதல் நேமிகள் மாறாய்

மாட்டுறு கொண்டல்கள் வாருவ போலும்.                312

 

ஆயிர கோ£யொ ரங்கையி னாகப்

போயின பாணிகள் பூதரை அள்ளச்

சீய முகங்கெழு செம்மல் அகன்பேழ

வாய்களில் இட்டு விழுங்கினன் மன்னோ.                313

 

மீனம தாக வியன்படை அங்கைக்

கானுறு குன்று கறித்திற னாக

வானபல் பூதரை யட்டிடு சாலைப்

போனக மாமிசைந் தான்புகை வாயான்.                  314

 

அண்டமொ ராயிர மாங்கொரு பாங்கர்

விண்டுவெவ் வேறு விளங்குவ போலுங்

கண்டகன் வெய்யக ணங்களை எல்லாம்

உண்டிடு கின்ற உலப்பில பேழ்வாய்.                            315

 

செப்பரும் வென்றிகொள் சீயமு கத்தோன்

கைப்புகு பூதக ணத்தினர் யாரும்

அப்பெரு வாய்களின் ஆற்றுறு மாக்கள்

உப்பிடை சென்றென உற்றனர் அன்றே.                  316

 

தானவன் அங்ஆஆ தனிற்படு பூதர்

மேனிகழ் வாய்தொறு மேவரு பான்மை

ஊனமில் விண்ணவர் ஊர்தொறும் இம்பர்

மானவ ரியாரும் வழிக்கொளல் போலும்.                317

 

மண்ணிது அன்றெனின் வானவர் வைகும்

விண்ணிது அன்றெனின் வெவ்வசு ரேசர்

நண்ணுல கீதென நாடினர் தீயோன்

கண்ணகல் வாயது கண்டிடு பூதா¢.                              318

 

வாய்க்கொளும் எல்லை மடங்கல் முகத்தோன்

மூக்குடன் அஞ்செவி மூலமும் வல்லே

நோக்கினார் இங்கிது நூழைகொல் என்னா

ஊக்கொடு சிற்சில  ரோடினர் போனார்.                  319

 

அந்தமில் சீயன் அகன்பெரு வாய்போய்க்

கந்தரம் நீங்கினர் நெஞசு கடந்தார்

உந்திபு புகுந்தனர் ஒண்புவி யுள்ளோர்

சிந்துறு கீழநிலை வென்றுறு மாபோல்.                          320

 

சீயமு கங்கெழு செம்மலு யிர்ப்பிற்

போயினர் உந்தி புகுந்தவர் சில்லோர்

ஆயிரம் யோசனை யந்தரம் மீண்டு

மேயினர் அங்கவன் மீண்டவு யிர்ப்பால்.                 321

 

வெவ்விட மென்ன விளங்ககசு ரேசன்

துவ்விட வேயக டுற்றிடு தொல்லோர்

அவ்விடம் யாவனும் ஆதியை உன்னற்

கிவ்விட மேயினி தென்றனர் சில்லோர்.                  322

 

வேறு

 

களித்தவன் மடியுது கணவ ராயிடைக்

கிளைத்தனர் கைகளிற் படையிற் கீறினர்

துளைத்தனர் கெடாமையில் தொல்லை வன்மைபோய்

இளைத்தனர் ஒருசிலர் யாது செய்வரால்.                323

 

ஆயிரம் வௌ¢ளமாம் ஆடற் பூதரை 

வாயிடைப் பெய்துதன் அகட்டில் வைத்துள

சீயமா முகத்தவன் செயலைப் பற்பகல்

ஓய்வற மொழியினும் ஒழிதற் பாலதோ.                 324

 

இத்திறம் நிநழ்ந்திட ஈண்டு பாரிடர்

பத்துநூ றெனப்படும் பரவை நீத்தமுங்

கைத்தலம் வாரினன் கயவன் மோட்டினுள்

வைத்தலுங் கண்டனர் வானு ளோரெலாம்.                       325

 

எண்கெழு பூதரை நுங்கி னான்இனி

மண்கெழு பொருளெலாம் வாரி நுங்குமால்

விண்கெழு நம்மையும் விரைவிற் பற்றியே

உண்குவன் எனமருண் டும்ப ரோடினார்.                 326

 

நேடிய ஒற்றுவர் நின்றி லார்விரைந்

தோடினர் அவுணர்கோன் உபயத் தாள்மலர்

சூடினர் சென்னியில் தொழுத கையினர்

மாடுறு பலசன மகிகச் கூறுவார்.                        327

 

ஏதமில் அரிமுகத் திளவல் கந்தவேள்

தூதனைப் பிறர்தமைத் தொலைவில் பூதரில்

பாதியை நாண்வலைப் படுத்து வீட்டியே

ஆதவன் எழுகிரி யகத்தர் ஆக்கினான்.                   328

 

ஈங்கிது வினவியே ஈசன் தன்மகன்

தாங்கிய வேலொடு சமரின் ஏற்றிட

ஓங்குமோ£¢ வடிவுகொண் டுனது வின்னவன்

ஆங்கெதிர் பூதரை அள்ளி நுங்கினான்.                   329

 

இவ்வரை நிகழ்ந்தன இனைய இத்துணை

மைவரு மிடற்றினன் மதலை யோடுபோ£¢க்

கவ்வையை இயற்றிடுங் கன்னல் ஒன்றினில்

தெவ்வர்கள் இலரெனச் செய்து மீளுமால்.                330

 

என்னலும் அரியணை இகந்து போய்த்தழீஇ

நன்னய மொழபல நவின்று தூதுவர்

உன்னினர் விழைந்தசீர்  உதவி மன்னவன்

தன்னுழை ஒருவனை நோக்கிச் சாற்றுவான்.                     331

 

கந்தனொ டரிமுகன் கனன்று போர்செய்வான்

முந்துள தானையின் முடியும் பற்பல

இந்தநன் னகருறை படைகள் யாவையும்

உந்துதி  ஆயிடை ஒல்லைநீ யென்றான்.                332

 

சாற்றிய வுரைகொடு தாழ்ந்து கம்மியன்

காற்றென அமரிடைப் போமின் போமினென்

றேற்றுரி முரசினை எறிவித் தானரோ.                          333

 

பணையொலி கேட்டலும் பதியுள் வைகிய

இணையறு தானைகள் வௌ¢ளம் யாவையும்

மணிகெழு வகுப்புடன் ஆர்த்துச் சென்றுசூர்த்

துணையவன் அமர்புரி சூழல் புக்கவே.                   334

 

அம்புதி யாமென அனிகஞ் சென்றுழித்

தும்பையஞ் சிகழகைச் சூரன் என்பவன்

எம்பிதன் போர்வலி காண்பன் யானெனாச்

செம்பொனந் தவிசினுந் தீர்ந்து போயினான்.                      335

 

தன்பெரு மந்தித நடுவண் தங்கிய

கொன்பெருஞ் சிகரியாம் மேருக் குன்றின்மேல்

இன்புறும் திருவொடும் ஏறி னானரோ

பொன்புனை இதயமேல் இரவி புக்கென.                  336

 

தாதவிழ் தார்முடித் தம்பி கொண்டதோர்

மேதகு வடிவமுந் தமியன் வேளுறப்

பூதர்கள் உண்டியாய்ப் போன தன்மையுங்

காதலின் அவுணர்கோன் கண்ணின் நோக்கினான்.          337

 

வருமித மென்றுமன் னுயிர்கட் கல்லல்செய்

கருமித வழிக்கொரு கனலில் தோன்றினான்

பெருமிதம் விம்மிதம் பெரிதும் எய்தினான்

உருமித மாமென நகைக்கும் ஓதையான்.                338

 

இங்கிவன் நின்றிட இதற்கு முன்னறே

சங்கையில் பாரிடத் தானை முற்றவுஞ்

சிங்கமா முகத்தவன் நுகருஞ செவ்வியின்

அங்குறும் அறுமுகன் அதனை நோக்கினான்.             339

 

ஒருத்தனை யாகியே உலகெ லாமடும்

நிருத்தன தருள்மகன் நேர லாரொடுஞ்

செருத்தொழில் புரிவதோர் சிறிய ஆடலைக்

கருத்திடை உன்னினன் கணிப்பில் ஆற்றலான்.           340

 

வேறு

 

செய்ய தாமரை வனங்களுஞ் செங்கதிர் தொகையும்

ஐய சேயொளி ஈன்றிருந் தென்னஆ றிரண்டு

கையும் மூவிரு முகங்களும் உடையவன் காலோன்

வையம் உந்திட அடுதொழில் இயற்றுவான் வந்தான்.             341

 

வேறு

 

வந்திடு கின்ற காலை வயப்பெரும் பூதர் யாரும்

அந்தமுற் றதனை யோரா அடுகரி பரிதோர் செற்ற

வெந்திறல் அவுணர் கோன்றன் மேதகு படைஞர் முற்றுங்

கந்தவேள் தன்னைச் சூழ்ந்தா£¢ கனலிசூழ் கடலே யென்ன.        342

 

சூழ்தரும் அவுண வீரர் தொலைவில்தம் படைகள் முற்றும்

றுழ்தரும் உருமிற் பெய்ய உலகுடை முதல்வன் காணாக்

காழ்தரு மேரு அன்ன கார்முகன் ஒன்று வாங்கி

வீழ்தரும்அருவி போலும் வியன்குணத் தோதை கொண்டான்.     343

 

ஆயிர கோடி ஞாலத் தண்டங்கள் வெடித்த மற்றைப்

பாயிரும் புனலின் அண்டப் பத்திகள் பகிர்ந்த பாங்கர்

தீயழல் அண்டங் கீண்ட செறிமருத் தண்டம் விண்ட 

மீயுயர் வௌ¤மூ தண்டம் வெய்தென உடைந்த அன்றே.          344

 

அப்பெரு நாணின் ஓதை அரிமுகன் தானை மள்ளர்

செப்புறு கேள்வி யாற்றுஞ் செவிப்புலம் புகுத லோடுங்

கைப்படை சிந்தி வீழ்ந்தா£ கவிழ்ந்தன களிறு மாவும்

ஒப்பில்சீர் அருளித் தேர்கள் ஒல்லென உடைந்த அன்றே.          345

 

மூரிவிற் கொண்ட நாணின் முழக்கினை வினவி யற்றால்

பாரிடைக் கவிழந்த தானைப் பரப்பையும் நோக்கி நின்றான்

ஆரிதைப் புரியும் நீரார் அரன்மகன் இவனாம் முன்னம்

தாரகற் கடந்தான் என்கை சரதமே போலு மென்றான்.             346

 

வாலுளை அலங்கு நெற்றி மடங்கலோன் இனைய கூறிப்

பாலகன் வன்மை யானே படுத்தனன் மீள்வ னென்னாக்

காலுடை நெடுந்தே ரோடுங் கையனோர் கணத்தின் நோந்து

வேலுடை அண்ணல் தன்னை நோக்கினன் விளம்ப லுற்றான்.      347

 

கண்ணுதல் முதல்வன் மைந்த கழறுவன் ஒன்று கேண்மோ

எண்ணலர் வலியை மாற்றல் இறையவர் கடனே அற்றால்

விண்ணவர் தமைத்தண் டித்தோம் அவர்க்குளும் அல்லை வேறோர்

நண்ணலன் எமருக் கில்லை நடந்ததென் னமருக் கென்றான்.       348

 

உறைதரும் அளியன் தன்னை வலியவன் ஒறுக்கின் நாடி

முறைகெழு தண்ட மாற்றி அண்டங்கள் முழுவ துக்கும்

இறையினைப் புரிதும் அற்றால் நீவிர்கள் இமையோர்க் கிட்ட

சிறையினை அகற்ற வந்தேஞ் செருவுமத் திறத்துக் கென்றான்.     349

 

எங்கள்நா யகமா யுள்ள இறையவன் இனைய கூறச்

சிங்கமா முகத்து வீரன் உருமிடி திளைத்த தொப்ப

அங்கையோ டங்கை தாக்கி அண்டமுங் குலுங்க நக்குப்

பொங்குவெஞ் சீற்ற மேலான் இங்கிவை புகலல் உற்றான்.         350

 

ஈங்கெமர் தமையும் வென்றாய் இமையவர் சிறையும் இன்றே

நீங்கினர் ஆவர் நீயும் நீக்குதி போலும் போலும்

நாங்களும் அளியர் தாமே நன்றுநின் சூழ்வே ஆற்றல்

ஓங்கிய துனது மாட்டே உண்மையி தன்றி யுண்டோ.                     351

 

இந்திர குமரன் தன்னை இமையவர் குழுவை வாரி

வெந்தளை மூழ்கு வித்து வீட்டிய சிறையை நீக்கல்

சந்திர மௌலி அண்ணல் தன்னினும் முடியா தென்றால்

மைந்தன்நீ ஒருவன் கொல்லோ முடித்திட வல்லை மன்னோ.             352

 

கண்ணுதல் உனக்குத் தந்த காமரு சுடர்வேல் ஆற்றல்

எண்ணலன் மறலி யாகி இகழந்துபோர் இயற்றி னானை

உண்ணிகழ் ஆவி கொண்டாய் ஓடினால் உய்தி ஈண்டு

நண்ணிய தன்மை எங்கண் நல்வினை தந்த தன்றே.                      353

 

கடம்பமர் கண்ணி யாய்கேள் கடவுள்வேல் கொண்ட ஆற்றல் 

திடம்படு நினது வன்மை யாவையுந் தெரிதந் துள்ளேன்

தடம்படு குவவுத் திண்டோள் தாரகன் போல ஞாட்பின் 

மடம்படு கின்ற தில்லை வல்லைபோர் புரிதி மாதோ.                     354

 

பொருதிறல் வயவர் யாரும் பூதரிற் பலரும் மாய்ந்தே

எரிகதிர் உதயம் புக்கார் ஏனையோர் நீயுங் காண 

விரைவில்என் அகடு சேர்ந்து விளிந்தனர் தமியன் நின்றாய்

செருவினை இழைத்தும் இன்னும் ஊக்கமே சீரி தம்மா.           355

 

தாதவிழ் தருவின் நீழற் சயந்தனை அமரர் தம்மைத்

தீதுறு சிறையின் நீக்கச் சென்றநீ துணைவ ரோடு

பூதர்தந் தொகையை வாளா போக்கினை தமியன் நின்றாய்

ஊதியம் இதன்மேல் உண்டோ உனக்கிது கிடைத்த தன்றே.         356

 

முனைகெழு சமரின் வந்து முடிந்தனர் முடிவி லாதார்

இனைவொடு புறந்தந் தேகி இரிந்துளார் தொகையும் அ•தே

அனையதை உணராய் கொல்லோ அமர்குறித் தீண்டு வந்தார்

கனவினும் விடுவ துண்டோ கடவுளர் சிறையை என்றான்.        357

 

என்றசொல் இறுக்கு முன்னம் இராறுதோ ளுடைய வள்ளல்

நன்றிவன் கொண்ட தென்னா நகைசெய்து சிலையிற் பூட்டி

ஒன்றொரு வயிர வாளி ஒல்லெனத் துரப்பத் தீயோன்

பொன்றிகழ் மருமம் புக்குப் புறத்துரீஇப் போய தன்றே.            358

 

அருவிய னாக முள்ளான் அகன்பெரு விழகட் கூறாய்

அருவிய னாக மன்ன அரிமுகன் ஐயன் செங்கோல்

அருவிய னாக மூழ்க அலக்கணுற் றிழியுஞ் செந்நீர்

அருவிய னாக நின்றான் அமரர்மற் றதுகண் டார்த்தார்.            359

 

கற்றையங் கதிர்வேல் அண்ணல் காமரு பகழி பாய

மற்றவன் புறனும் மார்பும் வாயில்க ளாத லோடும்

மற்றது நோக்கித் தீயோன் அகட்டுறை கணங்கள் முற்றும்

புற்றெழு சிதலை யென்ன அந்நெறி துருவிப் போந்த.                     360

 

உய்குறு கணத்தின் தானை உந்தியை ஒருவி வாளி 

செய்குறு வாயில் நீங்கித் தெழிப்பொடு புறத்திற் போக

மைகிளர் புந்தி வெய்யோன் மற்றது கண்டு சீறிக்

கைகொடு நெறியை மாற்றிக் கந்தன்மேல் ஒருதண் டுய்த்தான்.     361

 

அண்டம்விண்  டதுகொல் என்ன அணிமணித் தொகுதி ஆர்ப்பத்

தண்டம்வந் திடுத லோடுந் தன்னிகர் இல்லா அண்ணல்

கண்டனன் இமைப்பில் நான்கு கணைதொடக் கதையைச் சிந்தி

ஒண்டிறற் சூரன் பின்னோன் நெற்றிபுக் கொளித்த அன்றே.         362

 

ஔ¤த்திடு கின்ற காலை உருகெழு மடங்கற் பேரோன்

களித்திடல் ஒருவி மேலைக் கடுஞ்சினக் கோட்புச் சிந்தித்

தௌ¤த்திடும் உணர்வும் இன்றிச் செய்யகோல் செலுத்து மன்ன

அளித்திட லொழிந்த காலத் துலகம்போல் அழுங்கி நின்றான்.      363

 

வேறு

 

பேர்ந்திடும் உணர்வொடும் பிரிவில் துன்பொடும்

சேர்ந்திடும் அரிமுகத் தீயன் நின்றுழி

வார்ந்திடு குருதிதோய் வாயில் மூடுகை

சோர்ந்தன அருளவரத் தொலைந்த மாயைபோல்.         364

 

அறந்தவிர்ந் தொழுகினோன் ஆகந் தன்னிடைத்

திறந்திடு நெறிகளால் சிறையின் வைப்பொரீஇப்

பறந்திடு புள்ளெனப் படர்ந்து கந்தவேள்

புறந்தனில் வந்தன பூதம் யாவுமே.                              365

 

அன்றரி முகத்தவன் அலைத்து நுங்கின

கொன்றன எறிந்தன கூளி யாவையும்

வென்றிகொள் வேற்படை விமலன் ஆணையால்

துன்றிவந் தடைந்தன தொன்மை கூடியே.                366

 

வேறு

 

அன்னதொரு காலை அறுமா முகக்கடவுள்

தன்னிகரி லாத தனக்கிளையோர் தங்களையும்

துன்னலுறு பூதத் தொகையோ£¢கள் யாவரையும் 

உன்னியவர் தம்பால் ஒருகோல் தொடுத்தனனே.          367

 

உந்தும் பகழி உததி பலகடந்து

முந்துங் கதிருதயம் முன்னுற்று மொய்ம்பர்தமைப்

பந்தம் கொடுசூழ்ந்த பாசவலை சிந்திடலுங்

கந்தன் தனதருளாற் கண்டுயில்வார் போலெழுந்தார்.              368

 

பாசத் தளையிற் படுவார் அதுநீங்கி

மாசற்ற நல்லுணர்வு வந்தெய்த உய்ந்தனராய்ப்

பேசற் கரியஇன்பம் பெற்றோ£¢கள் தாமாகி

ஈசற் கினியான் இணையடிகள் வாழ்த்தெடுத்தார்.          369

 

ஆங்கதுகா லத்தில் அறுமுகவேள் உய்த்தகணை

பூங்கமலத் தோனுதவு புட்பகத்தின் மாட்சியதாய்த்

தீங்கிலிள மைந்தர்தமைச் சேனை யொடுமுகந்து

தாங்கி விசும்பின் தலைக்கொண்டு சென்றதுவே.          370

 

என்று திகழ்வெற்பை இகந்தேழ் கடல்நீங்கிச்

சென்று கடிது செருநிலத்திற் சேனையொடு

நின்ற குமரன் நெடுந்தாள் முனமுய்த்துத்

துன்று கணைபொதிந்த தூணியிடைப் புக்கதுவே.          371

 

அந்த அமையத்தில் அடல்வீர மொய்ம்பினனும்

இந்திரனும் போற்றும் இலக்கருடன் எண்மர்களும்

அந்தமி லாப்பூத அனிகங் களும்அளியால்

கந்தன் இணையடிகள் கைதொழுது தாழ்ந்தனரே.          372

 

நீக்கம் பெறாதுயிர்க்குள் நின்றானைத் தொல்வறிஞன்

ஆக்கம் பெற்றென்ன அடிவணங்கிப் போற்றுதலும்

வீக்குங் கணைகழற்கால் வீரர் தமைநோக்கித்

தேக்குங் கருணையினால் ஈதொன்று செப்பினனால்.               373

 

தொக்கீர் அவுணன் தொடுமாயைச் சூழவலையில்

புக்கீ£¢ புலர்ந்தீர் புலன் அழிந்தீர் யாப்புறவும்

தக்கீர் உதயந் தனிற்புகுந்தீர் இவ்வாறு

மிக்கீரும் நொந்தீர்கள் போலும் மிகவென்றான்.           374

 

முந்தை உணர்வு முடிந்தாலென் னாருயிர்போய்

அந்த நிரயத் தழுந்தி அயர்ந்தாலென்

வெந்துயரம் மூழ்கி வினைப்பிறவி புக்காலென்

எந்தை அருளுண்டேல் எமக்கென் குறையென்றார்.        375

 

ஆங்காகும் எல்லை அருமறையுந் தேறரிய

ஓங்கார மூலத துணர்வாய் உறைபகவன்

நீங்கா நெறியான் நிறைபே ரருள்புரியப்

பாங்காக நின்ற பரிசனர்கள் போற்றினரே.                376

 

வேறு

 

அன்னதொ ரமைதியில் அண்ணல் வார்சிலை

துன்னுறு நாணொலி கேட்டுச் சோர்வுறா

முன்னுற வீழ்படை முதல்வன ஆடலை

உன்னுறு செய்கையால் எழுந்த ஒல்லையில்.                    377

 

ஈங்கிவன் ஒருமகன் எமையெ லாஞ்சிலை

தூங்கிய நாணினால் தொலைக்குங் கொல்லெனாத் 

தாங்கிய படையுடைத் தகுவர் தானைகள்

தீங்கனல் பரந்தெனச் சினங்கொண் டார்த்தவே.            378

 

ஆழிமால் கடல்புரை அவுண மாப்படை

காழுலாம் பலபடைக் கலமுஞ் சிந்தியே

ஊழநாள் எல்லையின் உலகெ லாமடுங்

கேழிலான் மதலையைக் கிளர்ந்து சூழந்தவே.             379

 

சுற்றிய வேலையின் முறுவல் தோன்றிட

நெற்றியங் கண்ணுடை நிமலன் மாமகன்

கொற்றவெஞ் சிலையினைக் குனித்துப் பூட்டியே

செற்றிய கணைமழை சிதறி னானரோ.                  380

 

அங்கியின் வடிவின ஆலம் போல்வன

கங்குலை நிகர்ப்பன காலற் கொப்பன

பொங்கிய வெஞ்சினப் புயங்கம் நேர்வன

செங்கதிர் மலைவன செம்மல் வாளியே.                 381

 

மின்னினுஞ் சுடரின உருமின் வெய்யன

பொன்னுறழ் நிறத்தன மணியின் பொற்பின

மன்னிய வானவில் மாறு கொள்வன

பன்னிறம் படைத்தன பகவன் வாளியே.                 382

 

வேறு

 

சூலம் போல்வன தோமரம் போல்வன சுடர்வாய்

ஆலம் போல்வன நாந்தகம் போல்வன அடல்வேற்

கோலம் போல்வன கழுமுளும் போல்வன குலிச

சாலம் போல்வன ஆறுமா முகன்விடு சரங்கள்.                  383

 

அறத்தை நல்கலின் அந்தணன் போல்வன அகிலத்

திறத்தை அன்பொடு போற்றலிற் செங்கண்மால் போல்வ

ஒறுத்து மன்னுயிர் உண்குறும் அவுணரை ஒருங்கே

இறுத்தல் செய்திடுந் தன்மையால் ஈசனே போல்வ.                       384

 

காற்றிற் செவ்விதிற் செல்வன கறங்குவ கடுங்கட்

கூற்றிற் கொப்பன மனத்தினுங் கடியன கொடுந்தீ

நூற்றுக் கோடிகள் அணுகினும் விசையினால் நொய்தின்

மாற்றத் தக்கன குமரவேள் விடுத்திடும் வாளி.                   385

 

ஒன்று தொட்டிடிற் கோடியாம் ஒல்லையில் அவையுந்

துன்று கோடிமேற் கோடியாம் மேலுமத் தொகையே

அன்றி யாரதற் கெண்கொடுத் துரைபபவர் அநந்தம்

என்று சொல்வதே முருகவேள் தொடுங்கணைக் கிலக்கம்.         386

 

கார்பி ளந்திடும் அளக்கரை உண்டிடுங் கதிரோன்

தேர்பி ளந்திடும் வடவையை விழுங்குறுந் தேவர்

ஊர்பி ளந்திடும் மேருவைப் பிளந்திடும் உலவாப்

பார்பி ளந்திடும் ஞானநா யகன்விடும் பகழி.                             387

 

வரைகி ழிப்பதும் புவியினைப் பிளப்பதும் வரம்பில்

திரைக டற்குடித் திடுவதும் பிறவுமோர் சிறப்போ

அரிய வாயிர கோடியண் டங்களாம் அனைத்தும்

உருவி நிற்கில பின்னரும் ஓடுமென றுரைக்கின்.                 388

 

தொடுநெ டுங்கணை இவ்வகை செறிதலுஞ் சூழ்வா£¢ 

அடிது ணிந்தன கைத்தலந் துணிந்தன அணிதோள்

முடிது ணிந்தன உரந்துணி வுற்றன முகில்தோய் 

கொடிது ணிந்தன இரதமுந் துணிந்தன குலைந்தே.                       389

 

கரைகள் பட்டென அவுணர்கள் பட்டனர் கடலின்

நிரைகள் பட்டெனக் களிறுகள் பட்டன நிரந்த

திரைகள் பட்டெனப் புரவிகள் பட்டன செறிந்த

வரைகள் பட்டெனப் பட்டன அளவைதீர் மான்தேர்.                       390

 

ஒப்புக் கொண்டிடா மேலையோன் ஒன்றை ஒன்றார்க்குந்

துப்புக் கொண்டிடும் அற்புதம் உணர்ந்தவன் தொன்னாள்

வைப்புக் கொண்டபா ரண்டங்கள் முழுவதும் வரம்பில்

அப்புக் கொண்டதோ ரண்டமே ஆக்கிய அதனால்.                 391

 

செப்பு றத்தகும் விம்மிதம் அன்றிது தேவர்

எப்பு றத்தருங் காண்கிலார் எம்பிரான் கணைகள்

ஒப்பு றத்தரும் அண்டத்தின் தொகையெலாம் உரீஇப்போய்

அப்பு றத்தினில் இடுவன அவுணர்தந் தலைகள்.                  392

 

மூரி யண்டலர் யாக்கைகள் எடுத்துடன் முடுகிப்

பாரி யண்டங்கள் ஆயிர கோடியும் பகிர்ந்து

வாரி யண்டங்கள் இடையிடை சிந்திமற் றவற்றைச்

சோரி யண்டங்கள் ஆக்குவ அண்ணல்தொல் கணைகள்.           393

 

ஒண்டு ளிப்படு குருதியும் அவுணர்கள் உரமுங்

கண்ட துண்டமுஞ் சென்னியுந் தோள்களுங் கரமும்

முண்ட மாங்கரி பரிகளும் விளிந்ததேர் முற்றும்

அண்டம் எங்கணுஞ் செறிந்தன அட்டிய திறம்போல்.                      394

 

புள்ளு லாவுவேல் அறுமுகன் பகழிபோர் புரிந்த

மள்ளர் மாப்படை அலைப்பதோ அரிதுவல் விரைவால்

அள்ளல் வாரிசூழ் ஆயிர கோடியண் டத்தின்

உள்ள தானவர் தம்மையும் முடிவுசெய் துலவும்.                 395

 

குமர நாயகன் தொடுசரம் நிரத்தலுங் குளிர்ந்த

கமல மாமலர் முகைபொரு முகத்தினர் கரத்தர்

தமர நேமிகொள் புகழ்ச்சியர் வணங்குறு தலையர்

அமரர் யாவரும் வானிடைப் பிழைத்துநின் றார்த்தார்.                    396

 

கங்க முற்றன கொடிபிற வுற்றன கவந்த

சங்க முற்றன குணங்கரும் உற்றன தகுவர்

அங்கம் இற்றன கரிபரி இரதமிற்  றனவால்

சிங்க மாமுகன் ஒருவனும் நின்றனன் செருவில்.                 397

 

மீயு யர்ந்நசூழ் அண்டத்தின் அளவெலாம் விரவ

மாய வன்மையிற் கொண்டிடு பெருந்தகை வடிவந்

தூயயன் வாளிகள் பட்டுணர் வழிதலால் தொலைந்து

சீய மாமுகன் தொன்மைபோல் நின்றனன் தேர்மேல்.                     398

 

நின்ற தீயவன் தானுறும் அயர்ச்சியை நீங்கிச்

சென்ற தன்படை யாவையுங் கண்டிலன் சிறுவன்

கொன்று வீட்டின னென்பது தெரிந்துளங் கொதியா

ஒன்று போலவோ ராயிரஞ் சிலைகள்கொண் டுற்றான்.            399

 

அலைவ ளைந்தபாற் கடல்மிசைப் பத்துநூ றம்பொன்

மலைவ ளைந்தமர் தன்மைபோன் மன்னன்மாட் டன்றித்

தலைவ ளைந்திடா அரிமுகன் தனதுகைத் தலத்தால்

சிலைவ ளைந்திடக் குனித்தனன் சுடுசரந் தெரிந்தான்.             400

 

வேறு

 

சீய மாமுகன் செஞ்சிலை பூட்டிநூ

றாயி ரப்பத் தடுசரம் ஏவலும்

நாய கன்னது கண்டு நகைப்புறா

ஓய்வில் வாளியொ ராயிரந் தூண்டினான்.                401

 

ஆற்றல் மேதகும் ஆயிரம் வாளியால்

மாற்ற லன்கணை மாரி விலக்கியே

சாற்று தற்கரி தாகிய தன்மையான்

வீற்றும் ஆயிரம் வெங்கணை யுந்தினான்.                402

 

உந்து கோலையொ ராயிரம் வாளியாற்

சிந்தி யேதிறற் சிங்கமு காசுரன்

ஐந்து நூறிரண் டாயிரம் வெங்கணை

எந்தை மேல்வர ஏவினன் என்பவே.                             403

 

பதகன் வாளிகள் பத்திலக் கத்தையம்

நுதிகொள் வெங்கணை நூறுபத் தாயிரங்

கதுமெ னத்தொடுத் தேமறை காண்கிலா

அதிர்க ருங்கழல் அண்ணல் அகற்றினான்.                404

 

திருத்த குந்திறற் சீய முகத்தினான்

உருத்து வாளியொ ராயிரந் தூண்டுறாப்

பரத்தின் மேற்படு பண்ணவன் தேர்விடு

மருத்தின் மார்புற வல்லை அழுத்தினான்.                405

 

ஆர ழற்சினத் தாளரி மாமுகன்

கூரு டைக்கணை நெஞ்சு குளித்திட

மாரு தப்பெய ரோன்வலி சிந்திடாச்

சோரி மிக்கெழத் துன்புற எய்தினான்.                            406

 

பாகு பட்ட  பருவரல் நோக்கியே

வாகை அண்ணல் வரிசிலை கால்வளைஇ

ஏக நூறு பகழதொட் டெண்ணலன்

சேகை மாண்கொடித் தேரினை வீட்டினான்.                      407

 

தேர ழிந்திடத் தீயரின் தீயவன்

ஊர ழிந்த உடுபதி போன்றுளான்

கார ழிந்திடக் கல்லென ஆர்ப்புறாப்

பாரி ழிந்தனன் பல்கணை வீசினான்.                            408

 

வீசு கின்ற வியன்கணை யாவையும்

மாசில் காட்சியன் வாளியின் மாற்றிடா

ஆசில் வெஞ்சரம் ஆயிரந் தூண்டியே

நீசன் விற்களை நீள்நிலஞ் சேர்த்தினான்.                 409

 

அண்டலன் கொண்ட ஆயிரஞ் சாபமுந்

துண்ட மாகித் தொலைந்து நிலம்புக

விண்டு நான்முகத் தோனும் விண்ணோர்களுங்

கண்டு நின்று கரமெடுத் தார்த்தனர்.                             410

 

கோலு மிழ்ந்த குனிசிலைக் கூட்டறக்

கால வெவ்வழல் என்னக் கனன்றுளான்

சூல மொன்று துளக்கினன் வீசினான்

ஆல காலம் அளக்கர்உய்த் தாலென.                            411

 

 

துன்ன லன்விடு சூலத்தை ஏழிரு

கொன்னு னைக்கணை தூண்டிக் குறைத்திடாப்

பின்னும் ஆயிரம் பேரழற் புங்கவ

மின்னெ னத்துரந் தான்அடல் வேலினான்.                412

 

கொண்ட வேற்கைக் குமரன் சரங்களைக்

கண்டு தீயன் கனன்று கரந்தனில்

தண்டம் ஒன்றில் தரைபடச் சிந்தியே

அண்டம் விண்டிட ஆர்த்தனன் ஏகினான்.                 413

 

விடுத்த வாளி பொடித்ததும் வெவ்வியோன்

பிடித்த தண்டொடு பேர்வதுங் காண்குறா

வடித்த ஏழ்கணை தூண்டினன் வன்கதை

எடுத்த கையை இருநிலஞ் சேர்த்தினான்.                 414

 

சேர்த்து முன்னறத தீயவன் தோளினும்

பேர்த்தும் ஆங்கொர் பெருங்கை புறப்படப்

பார்த்த லம்புகு தண்டினைப் பற்றியே

ஆர்த்து வீசினன் ஆதியந் தேவன்மேல்.                  415

 

ஒட்ட லன்தொட உற்றதண் டத்தின்மேல்

நெட்ட ழற்கு நிகர்கணை ஆயிரம்

விட்ட றுத்தனன் மேல்வரு பாந்தளை

அட்டி டுங்கதிர் ஆதவன் என்னவே.                              416

 

அண்டர் நாயகன் ஆயிரம் வாளியால்

தண்டம் வீழத் தடிதலும் மாற்றலன்

கண்டு சீறிக் கடுந்திறல் கூற்றிடைப்

பண்டை நாட்கொண்ட பாசத்தை வீசினான்.                      417

 

சுற்று பாசத் தொடர்ச்சயை நோக்கிவேள்

செற்றொ ராயிரந் தீக்கணை தூண்டலும்

வற்றல் மாண்கொடி வன்னியின் தீச்சுடர்

உற்ற தாமென ஒண்பொடி யாயதே.                             418

 

வேறு

 

நாணற் றதுகண் டனன்நா ணுறுவான்

ஏணுற் றிடுசே யையிரா யிரமாம்

பாணித் தொகையைக் கொடுபற்  றிடுவான்

பேணிச் சினமோ டுபெயர்ந் தனனே.                             419

 

சிங்கத் திறலோன் வருசெய் கைதனை

எங்கட் கிறைநோக் கியிரா யிரமாம் 

வெங்கட் கணையா யினவிட் டவுணன்

அங்கைத் தொகையா வுமறுத் தனனே.                   420

 

கொற்றங் கெழுவுற் றகுகன் கணையால்

செற்றந் திகழ்ஆ ளரிசெய் யகரம்

அற்றம் புவிவீ ழுமுன்அங் கைநிரை

முற்றும் புதிதா கமுளைத் தனவே.                              421

 

அற்றுப் புவிவீழ் தருமங் கைகளை

மற்றத் துணைவந் தெழுமாண் கைகளால்

பற்றிச் செலஅன் னதுபார்த் தனனால்

நெற்றிக் கண்அளித் திடுநீள் சுடரோன்.                   422

 

ஓரா யிரம்வா ளிகளுய்த் தவுணன்

ஓரா யிரநீண் முடியொல் லையறா

ஈரா யிரம்வெஞ் சரமே வியவன்

ஈரா யிரமொய்ம் பும்இறுத் தனனால்.                            423

 

அன்பற் றவன்மொய்ம் புகளற் றனகண்

டின்புற் றனர்வா னவர்ஈண் டியவை

முன்புற் றதுபோ லமுளைத் தெழலுந்

துன்புற் றனர்யாக் கைதுளங் குறுவார்.                   424

 

கண்டான் இதுவிண் ணவர்காண் பரியோன்

பண்டா லவனத் திடைபா ணிசிகரந்

தண்டா தழல்கொய் திடுதன் மையினால்

உண்டா கியவா றெனவுன் னினனே.                             425

 

உன்னும் பொழுதத் தினில்உம் பரெலாம்

என்னிங் கிவன்மாய் வதெனத் தளர

முன்னம் பெயர்சிங் கமுகன் முனியாச்

செந்நி றி•தோர் மொழிசெப் பினனால்.                   426

 

உளைக்குங் கணைதள் ளியுகம் பலநீ

கிளைக்குந் தலைமொய்ம் புகெடுத் திடினும்

முளைக்கின் றதலான் முடிவுற் றிடுமோ

இளைக்கின் றனைநீ கொல்எனைப் பொருவாய்.           427

 

மொய்யுந் துதவத் தியல்முன் னலைநின்

ஐயன் தருமாற் றல்அறிந் திலைபோர்

செய்யும் படிவந் தனைசேய் ஒருநீ

உய்யும் படியன் றுனதூக் கமுமே.                               428

 

மாண்டே வர்தமைப் புரிவன் சிறைபோய்

ஆண்டே வருகின் றதுமாற் றலுளேன்

ஈண்டே அழிகின் றதுமில் லையிவண்

மீண்டே குதிநின் னுயிர்விட் டனனால்.                          429

 

வேறு

 

என்னலும் அதனை ஓரா எம்பிரான் குமரன் சொல்வான்

உன்னுயிர் இழைத்த எல்லை யொழிந்தது கூற்றும் வந்து

பின்னுற நின்றான் என்நீ பிதற்றுதி உணர்வி லாதாய்

முன்னொரு கணத்தில் நின்னை முடிக்குவன் காண்டி யென்றான்.   430

 

படைப்பவன்  குரவன் ஈது பகர்தலும் அவுணர் கோமான்

இடிப்பென ஆர்த்துக் குன்றம் இராயிரம் பறித்து வீச

நொடிப்பினில் அவற்றை வாளி நூற்றின்நுண் துகள தாக்கித்

தடப்பெரு மருமம் மூழ்கச் சரங்களா யிரத்தை உய்த்தான்.         431

 

மாயிரு நெடுங்கண் வாளி மார்பத்தை அகழ்ந்து துன்னக்

காயெரி கலுழுங் கண்ணான் கைகளால் அளவை தீர்ந்த

பாயிருங் குன்ற நாடிப் பறித்தலுங் கண்டு செவ்வேள்

ஆயிரங் கணைதொட் டன்னான் அணிமுடித் தொகையை வீழ்த்தான்.432

 

அறுத்திடு தலைகள் வீழ ஆயிரஞ் சென்னி வல்லே

மறித்தும்வந் தெழுத லோடும் மடங்கல்மா முகத்தன் முன்னம்

பறித்திடு குன்றம் வீசிப் பருவலித் தடந்தோள் கொட்டி

எறித்தரு கதிரும் விண்ணோர் யாவரும் உட்க ஆர்த்தான்.         433

 

ஆர்த்திடு காலைச் செவ்வேள் ஆயிரத் திரட்டி கொண்ட

கூர்த்திடு பகழி தூண்டிக் குன்றங்கள் செற்று வெய்யோன்

தார்த்தட மொய்ம்பு முற்றுந் தள்ளினன் தள்ளு முன்னர்ப்

பேர்த்தும்வந் தெழுந்த அம்மா தவத்தினும் பெரிதொன் றுண்டோ.  434

 

அத்திறங்   ணண ஈதோ ராடலா உன்னி நூற்றுப்

பத்துடன் எட்டின் காறும் பரஞ்சுடா உருவாய் நின்றான்

மொய்த்திடு பகழ மாரி முறைமுறை துரந்து மொய்ம்பன்

கைத்தலஞ் சென்னி முற்றுங் கண்டதுண் டங்கள் செய்தான்.               435

 

திசைகளிற் போகும் நேமித் திறங்களிற் போகும் வெற்பின்

மிசைகளிற் போகும் பாரின் மீதினிற் போகும் மாந்தர்

நசைகளிற் போகும் விண்ணோர் நட்டிடைப் போகுஞ சிங்கன்

இசைகளிற் போகும் எங்கும் இற்றிடு சிரமுங் கையும்.                    436

 

அகர தாதி யான எழுத்தெலா மாகிப் பின்னர்

மகரமு மான மேலோன்* வடிக்கணை துணித்து வீசுஞ்

சிகரமுந் துகர முற்றுஞ் சேணிடைச் சென்று மாயோன்

நகரமுந் தாவி அண்ட கோளகை நண்ணு கின்ற.                 437

 

( * மகரமுமான மேலோன் - மகரமீன் உருக்கொண்ட குமாரக் 

  கடவுள்.  இவ்வரலாறு திருவுத்தரகோச மங்கைப் புராணத்துள்

  கூறப்பெற்றுள்ளது.)

 

தூவுடை  நெடுவேல் அண்ணல் சுடர்க்கணை துணித்து வீச

மேலவன் தனது சென்னி மெல்லிதழ் அதுக்கி விண்மேல்

ஆவலங் கொட்டிச செல்ல அச்சமுற் றங்கண் நின்ற

தேவர்கள் மயக்கம் எய்தித் திருநில வரைப்பின் வீழந்தார்.         438

 

வஞ்சரை வஞ்சஞ் செய்யும் வள்ளலார் குமரன் தொட்ட

செஞ்சரம் அநந்த கோடி சென்றுசென் றறுத்து வீட்ட

எஞ்சலில் அவுணன் மொய்ம்புந் தலைகளும் யாண்டுஞ் சிந்தி

விஞ்சையர் அமர்தற் கொத்த வரைகளின் மேவ லுற்ற.           439

 

தூயவன் விடுதத வாளி துணித்திடும் ஒவ்வொர் சென்னி

வாயினை அடுபோர் தன்னில் வந்தசில் கணங்கள்நோக்கி

ஆயிர கோடி கொண்ட களேவரம் அதற்குள் இட்டு

மாயிருஞ் சிகர மாட மற்றிதென் றுற்ற வன்றே.                         440

 

பாடுறு சிரத்தில் ஒன்று பதைத்துவாய் பகிர அங்கண்

ஆடுறும் அலகை கோடி அகன்பிணக் குவைகள் உய்த்து

மாடமீ தென்று புக்கு மற்றது கடிதின் மூட

ஓடியுள் ளலைந்த தக்கன் வேள்வியில் உற்று ளார்போல்.         441

 

மன்புரி அவுணர் தோன்றல் வாய்பொதி சென்னி புக்குத்

துன்புறும் அலவை துண்டஞ் செவிநெறி துருவிப் போன

1முன்பொரு முனிவன் இல்லை முயங்குவான் உறையுள் புக்கோன்

இன்பொடு வன்மை சிந்தி நூழையால் இரிந்த வாபோல்.          442

 

( 1 ஒரு முனிவன் - கௌதமன்.  இல் - அகலிகை.  முயங்குவான்

  உறையுள் புக்கோன் - இந்திரன்.  நூழை - சலதாரை அல்லது தூம்பு.)

 

ஒன்னலன் தனது மொய்ம்பும் உருகெழு சிரமும் வீழ்ந்து

பன்னெடுங் கிரிக ளாக அவற்றிடைப் பலசூர்ப் பேயுந்

துன்னுறு கொடியுஞ் சூழ்வ தொல்லையிற் பொறிகள் நீங்க

முன்னவள் பதாகை யோடு முறையில்வந் துற்ற வாபோல்.               443

 

அரண்டருங் கழலான் இவ்வா றறுத்தலும் அவுணர் கோமான்

முரண்டகு சிரமுந் தோளும் பின்னரும் முளைப்ப நோக்கித்

திரண்டபல் கணைக ளோச்சிச் சென்னியில் ஒன்றுங் கையில்

இரண்டுமே நிறுவிப் பின்னர் யாவையுந் தடிந்தான் அன்றே.               444

 

நீளுறு பதலை சிந்தி நின்றமர் இயற்று கின்ற

கோளரி முகத்து வீரன் குறைந்திடு முடியு இற்ற

தோள்களும் முன்ன ரேபோல் தோன்றிடப் புகுதும் எல்லை

ஆளுடை முதல்வ னாகும் அறுமுகன் அதனைக் கண்டான்.               445

 

நாற்றிசை முகத்தி னானும் நாகரும் பிறரும் உட்கச்

சீற்றம துளன்போல் ஐயன் சிறிதவண் உரப்ப லோடும்

மாற்றல னாகி நின்ற மடங்கல்மா முகத்தன் தன்பால்

தோற்றிடு சிரமுந் தோளுந் துளங்கிமீண் டொளித்த அன்றே.               446

 

ஐயன துங்கா ரத்தால் அரிமுகன் சிரமும் மொய்ம்பும்

மெய்யிடை யொடுங்கிற் றம்ம மேவினார் தம்மை நோக்கி

மையுறு கருந்தா தன்ன வன்புறக் கமடஞ் சென்னி

ஒவ்யென யாக்கை தன்னில் ஔ¤த்திடுந் தன்மை யேபோல்.               447

 

குன்றினை எறிந்த வைவேற் குமரவேள் கணையால் இற்ற

தன்றலை பானி தோன்றாத் தன்மையை அவுணன் பாரா

ஒன்றற முந்து பன்னாள் உணர்ந்திடு விஞ்சை முற்றும்

மன்றிடை அயர்த்தோ னென்ன மானமுற் றழுங்கி நின்றான்.               448

 

அங்கது கண்டு செவ்வேள் அருள்புரி கின்றான் நந்தம்

வெங்கணை பலவுஞ் சென்று வீட்டிய தலையும் உன்றன்

செங்கையுந் தோன்றிற் றில்லை எழுகெனச் செப்பு கைய

இங்குநீ பட்ட பின்கொல் முளைத்திட இருந்த தென்றான்.          449

 

இருதலை அயில்வேல் அண்ணல் இற்றன சிரந்தோள் என்றே

கருதலை என்பே ராற்றல் கடவுளர் யாருந் தேர்வர்.                     

ஒருதலை இருகை கொண்டே உலகெலாந் தொலைப்பன் என்னாப்

பொருதலை உன்னி யாங்கோர் பொருப்பினைப் பறித்து விட்டான்.  450

 

விட்டிடு பிறங்கல் தன்னை விரிஞ்சனுக் காசான் காணூஉ

நெட்டிலை வாளி ஒன்றால் நீறுசெய் திடுத லோடும்

பட்டது தெரிந்து மாய்வோன் அமரிடைப் பாணி யோடும்

இட்டிடு தண்டம் ஒன்றை எடுத்துநின் றிதனைச் சொற்றான்.               451

 

வேலினால் எறியு மாறும் வெஞ்சிலை வளைய வாங்கிக்

கோலினால் விடுத்த தொன்றைக் குறைத்திடு மாறும் அல்லால்

பாலநீ படைகள் வேறு பயின்றதொன் றிலைகொல் என்னா

மூலகா ரணமாய் நின்ற முதல்வன்மேற் கதையைத் தொட்டான்.   452

 

வெஞ்சின அவுணன் சொறற தன்மையும் விடுத்த தண்டுஞ்

செஞ்சுடா¢ மேனி வள்ளல் சிந்தையின் மதித்து நோக்கிக்

கஞ்சம தனைய வோர்கைக் காமரு குலிசந் தன்னை

வஞ்சகன் உயிருண் டொல்லை வருகென விடுத்தான் மன்னோ.    453

 

விடுத்திடு குலிச மேகி விரைந்தெதிர் தண்டந் தன்னைப்

பொடித்தது போலும் மென்னப் பூழிசெய் தடுக்கல் செல்லும்

இடித்தொகை யென்ன மார்பத் தெய்தியே அவுணன் ஆவி

குடித்தது புறத்துச் செந்நீர் கொப்பளித் தேகிற் றன்றே.             454

 

வேறு

 

தூண்டா விடுகுலிசந் துண்ணென்ற கர்மார்ப்

கீண்டாவி கொண்டு கிழித்துவெரிந் சென்றிடலும்

வீண்டான் பதைபதைத்தான் வீழ்குருதி நீரலைப்ப

மாண்டான் கிடந்தான் மடங்கல்முக வெய்யோனே.        455

 

அங்கப் பொழுதில் அடற்குலிசம் வான்போகிக்

கங்கைப் புனல்ஆழ்ந்து காமருபூந் தாதாடிச்

சங்கத் தவர்க்குள் தலையாந் தமிழ்ப்புலவன்

செங்கைக் குள்வந்து சிறப்புற் றிருந்துளதால்.                     456

 

பார்த்தர்இந் நீர்மைதனைப் பங்கயத்த னாதிவிண்ணோர்

ஆர்த்தார் முறுவலித்தார் ஆடினார் பாடிமலர்

தூர்த்தார் மகிழ்ந்தார் தொழுதார்எங் கோன்புடையில்

போர்த்தார் வணக்கம் புரிந்தார் புகழ்ந்திட்டார்.             457

 

என்னா யகன்அவ் விமையோர்கள் எல்லோருக்குந்

தன்னா ரருள்செய்து சாரதவௌ¢ ளத்தினொடும்

மின்னார் புகர்அயில்வேல் வீரரொடு மீண்டனனால்

பொன்னா டெனவே புனைந்தபொலன் பாசறையில்.               458

 

பாசறையின் கண்ணேகிப் பாரிடத்தோர் சூழ்போத

வாசவனும் நான்முகனும் மற்றோரும் பாங்காகக்

கேசரிகள் தாங்குங் கிளர்செம்பொற் பீடிகைமேல்

ஈச னெனவே இனிதருள்செய் துற்றனனே.                459

 

வெற்றிநெடு வேலோன் வியன்பா சறையிருப்ப

மற்றவனொ டாடி மடங்கல் முகத்தவுணன்

செற்றுகொடி யுண்ணச் செருநிலத்தின் மாய்ந்ததனை

ஒற்றர்தெரி குற்றே மகேந்திரத்தில் ஓடினரால்.                    460

 

ஆடல் இளையோன் அவண்வீழ்ந் ததுநோக்கி

வீடினனோ மான்றனனோ என்றைய மேல்கொண்டு

நீடு சிகரியிடை நின்றோன் பதங்கள்முடி

சூடி அவலித்துத் தொழுதிதனைச் சொல்லினரால்.         461

 

குன்றம் பிளந்த குமரேசன் வச்சிரத்தால்

உன்றம்பி ஆவி ஒழிந்தான் அவன்மிசையப்

பொன்றுங் கணத்தோர் பொருப்புற்றார் எல்லோருஞ்

சென்றுய்ந் தனரீது திண்ணமெனச் செப்பினரே.           462

 

வேயுற் றவர்சொல் வினவியுரோ மங்களெலாந்

தீயப் பொறிதுரப்பச் செங்கட் புனல்பெருக

வாயிற் புகைசெல்ல வாடிப் பதைபதைத்து

நோயுற்று வெங்கனலை நுங்கினர்போல் வீழ்ந்தனனே.     463

 

வண்ணச் சிகரம் வழுவுற்றுக் கீழ்த்தலத்திற்

கண்ணில் பொழிந்த கடலினிடை வீழ்ந்தனனால்

ஒண்ணுற்ற காஞ்சி உமையவள்கோட் டத்தினின்றுந்

தண்ணுற்ற நேமித் தடத்திடையே வீழ்பவர்போல்.*                464

 

( * இங்கு காஞ்சி காமாட்சி ஆலயத்தின் மேல் மாடியிலிருந்து

  சக்கர தீர்த்தம் என்னும் உலகாணித் தீர்த்தத்தில் தலை கீழா-

  கவும் ஆமாறு விழுவதை உவமையாகக் குறிப்பதாகும்.  இச்-

  செயலைக் 'கருமாறிப் பாய்தல்' என்பர்.  இ•து இந்நூலாசிரியர்

  காலத்து நடந்து வந்தமையால் இதனை உவமை காட்டினார்.  

  ஆயினும் தற்போது இந்நிகழ்ச்சி நிகழும் வழக்கம் இல்லை; இக்-

  காலத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தின் அடிமைகளான 

  பெண்களை 'கருமாறிப் பாய்பவர்' என்பர்.)

 

மங்கு லெனவீழ்ந்து மறிந்து நிலமிசையே

அங்கை புடைத்திட் டலமந்து தொல்வலியுந்

துங்க விறலும் நலனுந் தொலைவெய்தப்

பொங்கு துயர்க்கடலின் மூழ்கிப் புலம்புறுவான்.           465

 

என்னையோ என்றன் இளவலோ தாரகற்கு

முன்னையோ சிங்க முகத்தவோ தானவர்கள்

அன்னையோ என்ன அருள்புரியும் ஆண்டகையோ

உன்னையோ தூதர் விளிந்தனையென் றோதியதே.        466

 

அன்று மகவான் முதலாம் அமரர்தமை

வென்று தமியேற்கு விசயந் தனையளித்தாய்

இன்று சமரியில் இளம்பா லகன்ஒருவன்

கொன்றனனோ உன்னுயிரைக் கூற்றுவனுங் கொண்டானோ.467

 

உண்டுபோர் என்னின் உளங்களிக்கும் உன்னுயிரைக்

கொண்டுபோ னான்இன்று கூற்றனென வேகேட்கில்

தண்டுழாய் மாலுஞ் சதுர்முகனும் இந்திரனும்

பண்டுபோல் தத்தம் பதியாளப் போகாரோ.                468

 

பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப்

பின்னை யுளபொருளை யெல்லாம் பெறலாம்

என்னை யுடைய இளையோனே இப்பிறப்பில்

உன்னை இனிப்பெறுவ துண்டோ உரையாயே.            469

 

அண்டார் தமக்கோர் அரியே அரிமுகனே

விண்டான் அடைந்தாய் எனவே விளம்புகின்றார்

தண்டார் அகலத்துத் தாரகனை மக்களுடன்

கண்டாயோ யானிங் குறுதுயரங் காணாதாய்.                     470

 

உண்டிக் கடனும்1 ஒருவயிற்றோர் செய்கடனும்

எண்டிக்கும் போற்றியிட இன்றுகழத் தேகினைநீ

அண்டத் தவரை அலைத்துவரும் உன்திறலைக்

கண்டுற் றிடவே கடனற்றேன் தீயேனே.                  471

 

( 1 உண்டிக்கடன் - செஞ்சோற்றுக்கடன்.)

 

உற்ற துணைநீ யென்னுயிர்நீ உணர்ச்சியும்நீ

சுற்றமும்நீ தாதையும்நீ என்னிளைய தோன்றலும்நீ

நற்றவமும் நீயென்று நான்நினைந்தேன் நீயதனைச்

சற்றும் நினையாமல் தனித்திருக்கக் கற்றாயோ.          472

 

பொற்றைக் கயலிருந்த பூட்கைமுகன் துஞ்சியபின்

ஒற்றைப் புயம்போய் உளந்தளர்ந்து வைகினன்யான்

இற்றைப் பகல்நீ இறந்தாய் அரிமுகனே

மற்றைப் புயமும் இழந்தேன் வறியேனே.                473

 

என்னத் தனதண்டம் எங்குஞ் செலவிடுபடத்

தன்னத் தனியோன் அரற்றுமொழி தாங்களோ

நன்னத் தவனும் நளினத் தினிலுதித்த

அன்னத் தவனும் மகத்தவனும் ஆர்த்தனரே.                     474

 

இத்தன்மை மன்னன் இரங்கித் தௌ¤ந்தெழுந்தே

உத்துங்க மிக்க ஒருதன் தவிசேறி

நித்தன் குமரனுடன் நேர்போய்ச் சமா¢இயற்றச்

சித்தந் தனிலே நினைந்துசினஞ் செய்தனனே.             475

 

ஆகத் திருவித்தம் - 2397

     - - - 


·  முந்தையது : யுத்த காண்டம் - பகுதி 5...

·  அடுத்தது : யுத்த காண்டம் - பகுதி 7...


 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்