நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் அக்குறை நீங்கப் பாடவேண்டிய அருட்பாடல்களிவை. ஈழநாட்டுப் பௌத்தமன்னன் துணையுடன் தில்லைவாழ் அந்தணருடன் வாது செய்ய வந்த பௌத்தகுருவுடன் தில்லைவாழ் அந்தணர் சார்பாக மணிவாசகப் பெருமான் நடத்திய வாதின் போது அருளிய பாடல்களிவை. அவ்வமயம் அருகிலிருந்த ஈழமன்னனின் ஊமை மகள் மணிவாசகரால் ஒளிபெற்று ஒலிபெற்றுத் தன் திருவாயாலேயே வினாவிடை போல் பௌத்தகுரு தொடுக்கவிருந்த வாதுப் பொருளையெல்லாம் தானே பாடி தெளிவித்ததாய் வரலாறு. இதனை திருச்சாழலின் பாடல்வரிகளூடே அறியலாம். பின்னர் ஈழமன்னனும் பொய்வழியாம் புத்தம் விடுத்து சைவம் தழுவியதும் வரலாறு. மாணிக்கவாசகப் பெருமான் தில்லையில் அருளிய திருச்சாழலெனும் இப்பாடலைக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடுவோர் சிவானுஜையான நாமகளின் அருள் பெறுவர். ஊமைக்குழந்தைகள் ஒலிபெற திருச்சாழலை ஒருமண்டலம் அவர் சார்பில் பாடி நாவில் திருநீறு தடவி வருதல் நலம் பயக்கும்.
முழுப்பதிகம்- திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்