பௌர்ணமி என்பது முழு நிலவு நாள். சிவாலயங்களில் மாதந்தோறும் சிறப்பு பெறும் பஞ்ச பர்வ உற்சவங்கள் அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, கிருஷ்ணபக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி ஆகிய ஐந்து தினங்களாகும்.
ஒவ்வொரு பௌர்ணமியும் உமா மகேஸ்வர ஸ்வாமியின் வழிபாடுக்கு உரியதாகும். உமா மகேஸ்வர விரதம் சிறப்பாக கார்த்திகை பௌர்ணமியில் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதத்தின் பெயரும் அந்த மாதத்தில் பௌர்ணமியில் வரும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றது.
ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் சிவபெருமானுக்கு அந்த மாதத்திற்குரிய சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பட்டியல்
சித்திரை மரிக்கொழுந்து
வைகாசி சந்தனம்
ஆனி முக்கனி மா பலா வாழை
ஆடி பசும்பால்
ஆவணி வெல்லம்
புரட்டாசி கோதுமை நெய்யப்பம்
ஐப்பசி அன்னம்
கார்த்திகை பசுநெய் தீபம்
மார்கழி நறுமண வெந்நீர்
தை கரும்புச்சாறு
மாசி கம்பளி
பங்குனி பசுந்தயிர்
பொதுவாக சிவாலயங்களில் பிரம்மோற்சவம் பௌர்ணமியில் உச்சகட்ட விழா அமைவதாக செய்யப்படுகிறது.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் பௌர்ணமியோடு இணைந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் கிரிவலம் செய்து வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. இந்த இதீகத்தின் அடிப்படையில் மலைக் கோயில்கள் பலவற்றிலும் அண்ணாமலையாரை நினைந்து இவ்வாறு கிரிவலம் அன்பர்கள் செய்கின்றனர்.
See Also:
1. Uma Maheshvara Vratam