logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருப்புனவாயில் (திருப்புனவாசல்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : இந்திர, பிரம்ம, சக்கர, சூரிய, இலக்குமி, சந்திர, பாம்பாறு, வருண, கல்யாண, சிவகங்கை ஆகிய பத்து தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், வேதங்கள், திருமால், பிரமன், இந்திரன், சூரியசந்திரர், எமன், ஐராவதம், வசிட்டர், அகத்தியர், சௌந்தரபாண்டியன்.

Loading map...

Sthala Puranam

Tiruppunavayil templeTiruppunavayil temple vimAnamThe (Square) Cactus (Sadhurakkalli) is one of the Sthala vruksha of Thiruppunavayil temple.The Poon tree (Punnai) is one of the Sthala vruksha of Thiruppunavayil temple.

இந்திரன் வழிபட்ட விநாயகர் "ஆகண்டல விநாயகர்" தனியே உள்ளார்.

 

  • கஜமுகாசுரனை வெல்ல அருள் வேண்டி விநாயகப் பெருமான் இங்கு வந்து, சிவகங்கையில் நீராடிப் பழம்பதிநாதரின் அருள் பெற்றார்.
  • தங்கள் தவறை உணர்ந்த திரிபுராதிகள் இங்கு வந்து வழிபட்டு இறையருள் பெற்றனர்.  
  • நாரதர் வாயிலாக இத்தலப் பெருமையை அறிந்த அங்காரகன்  இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவோரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்படி வரம் பெற்றான்.
  • பிரமன் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றது
  • சந்திரன் தக்ஷனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது
  • சுசீலன் என்பவனையும் அவனது மனைவியையும் எமதூதர்கள் கொண்டு செல்ல எத்தனிக்கையில் சிவ கணங்கள் அவர்களை விடுவித்து முக்தி பெற்றது
  • அகத்தியர் திருமணக் கோலம் கண்டது
  • வியாக்கிராசுரன் என்பவனை அம்பிகை ,பத்திர காளி உருவில் அழித்தது
  • மகாலக்ஷ்மி பைரவ மூர்த்தியிடம் மகாவிஷ்ணுவைக் காத்துத் தனது மாங்கல்யத்தையும் காக்க வேண்டி வரம் பெற்றது
  • கௌதம ரிஷியின் சாபம் தீர தேவேந்திரன் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தது
  • ராமன் பூஜித்து அருள் பெற்றது ஆகிய வரலாறுகளை இப்புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.

 

மொட்டைக்கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிக உக்கரத்தில் இருப்பதன்பொருட்டு இக்கதவு எப்போதும் மூடப்பட்டுள்ளது.

 

  • இத்தல புராணம் திருவாரூர் தியாகராஜ கவிராயரால் பாடப்பட்டுள்ளது.

காசியில் உயிர் நீப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால் தன்னிடம் வந்து வணங்குவோரது பாவங்களைத் தீர்த்து ,ஜீவன் முக்தியையே வழங்குவது திருப்புனவாயில் என்பதை, விருத்தபுரி மஹாத்மியம் கூறுகிறது. சிவமஹாபுராணத்தில் ஏகாதச ருத்ர வைபவ காண்டத்தில் விருத்தபுரி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது.

இத்தலத்திற்கு இந்திரபுரம்,சதானந்தபுரம், வஜ்ர துருமவனம், வனமுகம்,கைவல்யபுரம்,விருத்தகாசி, என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.

திருப்புனவாயிலைச் சுற்றிலும் உள்ள தலங்களுள் தென்கிழக்கில் தீர்த்தாண்டதானமும், வடமேற்கில் பறையத்தூரும், அதன் வடமேற்கில் கல்யாணபுரமும் ,மேற்கில் வெளி முக்தியும், வடக்கில் வசிஷ்டர்  பூஜித்த தலமும் உள்ளன. இவற்றிலும் விருத்தபுரீச்வரரே அருள் செய்வதாகப் புராணம் சொல்கிறது.

விருத்தபுரியின் சுற்றுவட்டாரத்தில் எமதர்மனும் அவனது தூதர்களும் நுழையமாட்டார்கள் எனவும் இங்கு உயிர் விடும் அத்தனை பேருக்கும் சிவலோகம் சித்திக்கும் என்றும் தலபுராணத்தால் அறியலாம்.

பாண்டிய மன்னர்களின் காலத்திய கட்வெட்டுக்கள் ஐந்து இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கல் இறைவனை "திருப்புனவாசலுடைய நாயனார்" என்று குறிப்பிடுகின்றன.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. மின்னியல் செஞ்சடை (3.11);                      சுந்தரர்      - 1. சித்தம் நீநினை என்னொடு (7.50); பாடல்கள்      :   சேக்கிழார்    -       அப் பதியைத் தொழுது (12.28.891) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                           ஆராத காதலுடன் (12.37.117,118 & 119) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

 

Specialities

விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள்.

 

தஞ்சை பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். உயரம் 9 அடி, சுற்றளவு 8 1/2 அடி, ஆவுடையார் சுற்றளவு 33 அடி, கோமுகி 3 1/2 அடி நீளம்.

 

இதனையொட்டி, 'மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற பழமொழி வழங்குகிறது.

 

  • மகாமண்டபத்தில் தென்பால் சோமாஸ்கந்தர், நால்வர், சேக்கிழார் ஆகியோர் காட்சி தருகின்றார்கள்.

 

  • ஐந்து விநாயகர், சதுர்முகலிங்கம், கபிலபுத்திரர், ஒன்பதின்மர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

 

  • கோஷ்ட மூர்த்தமாகப் பொதுவாக ஆலயங்களில் இடம் பெறும் இலிங்கோற்பவருக்குப் பதிலாக இங்கு திருமாலும் அநுமனும் உள்ளனர்.
  • வைகாசி புனர்பூசத்தில் கொடியேற்றி ஸ்வாதியன்று தேரோட்டமும், விசாகத்தில் தீர்த்தவாரியும் நடைபெற வேண்டும் என்றும் மாசி மகத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, சர்ப்ப நதியில் (பாம் பாற்றில்) தீர்த்தம் கொடுப்பதாகவும் புராண வாயிலாக அறிகிறோம்.

 

முந்தைய தலம்<திருப்புத்தூர்

 அடுத்த தலம்>திரு இராமேச்சுரம் - (இராமேஸ்வரம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தொடர்பு : 04371 - 239212
Loading map...

Related Content