இறைவர் திருப்பெயர்: சங்கமுதநாதேஸ்வரர், சங்கமேஸ்வரர், திருநண்ணாவுடையார், அளகேசர், வக்கிரேஸ்வரர், மருத்துவலிங்கம், வாணிலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: வேதாம்பிகை, பவானி, பண்ணார் மொழியம்மை, பந்தர் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
தல மரம்:
தீர்த்தம் : பவானி முக்கூடல் (பவானி, காவிரி, அமுதநதி இம் மூன்றும் ஆலயத்தின் கிழக்கே கூடுகின்றன), சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்
வழிபட்டோர்:திருமால், குபேரன், விசுவாமித்திரர், பராசர முனிவர், சம்பந்தர் .
Sthala Puranam


காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர்.
குபேரன் பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க விரும்பி தலயாத்திரையாக வரும்பொழுது இத்தலத்திற்கு வந்தான். அங்கு பல முனிவர்கள் தவம் செய்வதையும் பசு, புலி , யானை, சிங்கம் போன்றவை பகையின்றி ஒன்றாக நீர் அருந்துவதையும் கண்டு வியந்தான். அவ்விடத்தில் குபேரன் தவம் செய்ய, சிவபெருமான் இங்குள்ள இலந்தை மரத்தடியில் சுயம்புவாகத் தோன்றி அருளப்பெற்றான். அளகைக்கு அதிபதியான குபேரன் வழிபட்டதால் இறைவனுக்கு அளகேசன் என்ற திருநாமமும் இத்தலத்திற்கு தக்ஷிண அளகை என்ற பெயரும் உண்டாயிற்று.
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோவை மாவட்டத்தில் திரு. காரோ (W.GARO) என்னும் வெள்ளையதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்தார். அவர் ஆட்சிப் பொறுப்புக் காரணமாகப் பவானி வந்து ஆய்வாளர் மாளிகையில் தங்கினார். இரவு படுத்து உறங்கும்போது மின்னலுடன் இடி இடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறிய குழந்தை வந்து உறங்குகின்ற துரையைக் கையைப் பிடித்து வெளியே வெகு வேகமாக இழுத்து வந்தது. மறுநிமிடம் பேரிரைச்சலுடன் அக்கட்டிடத்தின் கூரை கீழே விழுந்து நொறுங்கியது. நடந்தது அறிந்த துரை திரும்பிப் பார்த்தார். தன்னை எழுப்பிய குழந்தை நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார். கூப்பிட்டார், கேட்கவில்லை போலும், குழந்தை திரும்பாமல் சென்று கொண்டிருந்தது. துரை பின்தொடர்ந்து வேகமாகச் சென்றார். அவர் அக்குழந்தையைச் சென்றடையும்முன் அக்குழந்தை கோயிலுள் புகுந்து மறைந்துவிட்டது. அன்னை வேதாம்பிகை -வேதநாயகியே குழந்தை வடிவில் வந்து தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்து திகைப்பும் சொல்லொணா மகிழ்வும் கொண்டார். அம்பிகையைத் தரிசிக்க எண்ணினார். பிற மதத்தினர் ஆலயத்துள் புக அனுமதிக்கப்படுவதில்லை யாதலால் அந்நெறியை மீற மனமின்றி அம்பாள் சந்நிதிக்கு நேரே வெளிமதிலில் துவாரம் செய்வித்து அதன் வழியே அம்பாளைக் கண்குளிரத் தரிசித்தார். அர்த்த ராத்திரியில் வெளியே வந்து தன் உயிர் காத்த அம்பிகைக்கு துரை தன் நன்றிக் கடனாகப் பள்ளியறையில் வைப்பதற்குத் தந்தத்தாலான ஊஞ்சல் ஒன்றைப் பரிசாக அளித்தான். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.". இவ்வரலாறு "கொங்கு நாட்டுக் கோயில்கள்" பற்றி அன்பர் திரு. சிவகளை மு. சுப்பையா அவர்கள் எழுதியுள்ள நூலில் இடம் பெற்றுள்ளது.Specialities
Contact Address