இறைவர் திருப்பெயர்: கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், இந்திரன்.
Sthala Puranam
வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூவடி மண் இரந்து பெற்று உலகளந்த திருமால் செருக்கை ஒடுக்கி நெற்றியிலிருந்து ரத்தம் இறுத்த சிவபெருமானை வழிபாட்டு அருள் பெற்ற தலமாகையால் குமாணிக்குடி என்பது குறுமாணக்குடி என மருவித்தலத்தின் வழங்கும் பெயராயிற்று.
கௌதம முனிவரின்சா பத்தால் பீடிக்கப்பட்ட தேவேந்திரன் இத்தலத்தை வந்தடைந்து தவம் செய்தான். அதன் பயனாக அவனது உடலில் இருந்த ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறின. அதனால் இறைவனுக்குக் கண்ணாயிர நாதர் என்ற நாமம் வந்தது.
மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் ( குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி, மாபலியிடம் சென்று மூவடி மண் யாசித்தார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் , திரிவிக்கிரம வடிவெடுத்து, மண்ணை ஓர் அடியாலும், விண்ணை ஓர் அடியாலும் அளந்தார்.மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக் கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. தண்ணார் திங்கட் பொங்கர (1.101); பாடல்கள் : சேக்கிழார் - திருமறைச் சண்பையர் ஆளி (12.28.285) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : கொன்றை
Specialities
மூலவர் - சுயம்பு திருமேனி; சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.
திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது.
Contact Address