logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருஇந்திரநீல பருப்பதம் (பத்ரிநாத் - நீலகண்ட சிகரம்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: நீலாசலநாதர்

இறைவியார் திருப்பெயர்: நீலாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் : இந்திரதீர்த்தம்

வழிபட்டோர்:இந்திரன், நர நாராயணர்கள், சம்பந்தர், சேக்கிழார்

Loading map...

Sthala Puranam

thiruindira_nila_paruppadham

  • இந்திரன் வழிபட்ட தலம்.
  • நர நாராயணர்கள் தவம் செய்த இடம் இதற்கு முன்னே உள்ள பத்ரிகாஷ்ரமம் ஆகும்.
  • திருக்காளத்தியிலிருந்து, சம்பந்தர் இத் தலத்தை தரிசித்துப் பாடினார்.

 

திருமுறைப் பாடல்கள்    :  

பதிகங்கள்   :   சம்பந்தர்       -    1. குலவு பாரிடம் (2.27);

பாடல்கள்     :   சேக்கிழார்   -        கூற்றுதைத்தார் மகிழ்ந்த (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

thiruindira_nila_paruppadham
  • வடநாட்டு தலங்கள் ஐந்துள், இது இரண்டாவது தலம்.
  • இறைவன் பிறை சூடி அமர்ந்துள்ளது போல் இம்மலையின் தோற்றம் உள்ளது.
  • இது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு இடையே உள்ள பனிமலைச் சிகரம் ஆகும்.
  • இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 12000 அடி உயரமுள்ளதெனக் கணிக்கப்பெற்றுள்ளது.
  • ஈசன் சன்னதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை.
  • ஸ்வாமியின் அர்த்தநாரீஸ்வர வடிவில் ஒரு பாறையே இந்திரன். 
  • நீலகண்ட சிகரம் எனப்படுகின்றது.
  • பத்ரிநாத் கோயிலை இரவு அடைந்து, அடிவாரத்தில் இரவு தங்கி, விடியற்காலை 4 மணியளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீல பருப்பதத்தைத் தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திரநீல நிறத்தில் கண்கொள்ளாக் காட்சியாகத் தரிசனம் தருகிறது. நேரம் ஆக ஆக பின்பு நிறம் மாறிவிடுகிறது .
  • இமயமலையின் மிக அழகான சிகரங்களுள் ஒன்று.
முந்தைய தலம்<திருப்பருப்பதம் - (ஸ்ரீசைலம்)

 அடுத்த தலம்>அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்)

Contact Address

அமைவிடம் இமயமலைச்சாரலில் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து, காலை 4 மணியளவில் தரிசிக்கலாம்.
Loading map...

Related Content

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில்

அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்) தல வரலாறு

திருக்கேதாரம் (கேதார்நாத் ஜ்யோதிர்லிங்கம்) தலபுராணம்

திருக்கயிலாயம் (திருநொடித்தான்மலை) - கயிலையின் பெருமை - கயி