logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திரு அஞ்சைக்களம் (Sri Vanjikulam)

Om symbol

இறைவர் திருப்பெயர்: அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.

இறைவியார் திருப்பெயர்: உமையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சிவகங்கை.

வழிபட்டோர்:பரசுராமர், அப்பர், சேரமான், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

Loading map...

Sthala Puranam

  • சங்க காலச் சேரர்களின் தலைநகரம் வஞ்சி. சேரமன்னர்களின் பிரதான தெய்வமாதலால் இவ்விறைவனுக்கு திருவஞ்சிக்குளம் மஹாதேவர் என்று பெயர். இது மருவி அஞ்சைக்களம் என்று ஆனது.
  • பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.
  • இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது. 
  • கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.

 

தேவாரப் பாடல்கள் : 

பதிகங்கள்  :  சுந்தரர்  - 1. தலைக்குத் தலைமாலை (7.004); 

பாடல்கள்    :  அப்பர்    -    கயிலாய மலையுள்ளார் (6.51.8),                               

                                                 தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.5);                             

                    சேக்கிழார்   -   அஞ்சைக் களத்து நஞ்சுண்ட (12.23.8) பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்,                                

                                                 மாவீற்றிருந்த பெரும் சிறப்பின் (12.37.1,7,11,47,145) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                               

                                                 ஆய செய்கையில் (12.72.28,32,35,51) வெள்ளானைச் சருக்கம்.

Specialities

  • இத்தலம் கழறிற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலமாகும். அவதாரத் தலம் : கொடுங்கோளூர் - திருவஞ்சைக்களம் (கொடுங்கலூர்) வழிபாடு    : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருவஞ்சைக்களம் கொடுங்கலூர். குருபூசை நாள் : ஆடி - சுவாதி.
  • ஒரே சந்நிதியில் சேரமான் மற்றும் சுந்தரர் திருமேனிகள் உள்ளன.
  • கோயிலுக்குச் செல்லும் போது, வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடையை "யானைவந்த மேடை" என்று வழங்குகிறார்கள். 
  • துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.
  • கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டு.
  • அஞ்சைக்களத்தப்பர் சுயம்பு மூர்த்தி. தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார்.   
  • இங்கு சங்காபிஷேகம் சிறப்பான வழிபாடாகும்.
  • பிரம்மோத்ஸவம் மாசி மாதத்தில் 8 நாள் நடைபெறுகிறது.
  • இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது
  • கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன.
  • Thiruvanjikulam oceanசுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.
  • இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.
  • வெள்ளைக் கிணறு முக்கியமானது.
  • அமாவாசையில் ஆறாட்டு (தீர்த்தவாரி) உற்சவம்.
  • திருக்கோயிலின் முன்பு இருந்த கோபுரங்கள் 1670ல் டச்சுக்காரர்கள் தாக்குதலில் உடைக்கப்பட்டன. மேற்குப் பகுதி கோபுரத்தின் கீழ் இரண்டு நிலைகள் மட்டும் எஞ்சின. 
  • திப்பு சுல்தானின் கொடிய தாக்குதலால் திருக்கோயில் பெரும் சேதத்திற்கு உள்ளானது. திருக்கோயில் நமஸ்கார மண்டபத்தில் உள்ள மலையாள எழுத்தில் உள்ள சம்ஸ்கிருதக் கல்வெட்டு, 'சமயப் புறத்தோனால் தகர்க்கப்பட்ட திருக்கோயிலை பலியத் கோவிந்தன் அச்சன் என்பவர் மீண்டும் எடுத்துக் கட்டிய' செய்தியைத் தெரிவிக்கிறது.
முந்தைய தலம்<திருக்கோகர்ணம் (கோகர்ணா)

 அடுத்த தலம்>திருப்பருப்பதம் - (ஸ்ரீசைலம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : கேரளா சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் 'இரிஞாலக்குடா' நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. த்ருசிவப்பேரூர் என்னும் திருச்சூரிலிருந்து 32 கி. மீ. தொடர்பு : 0487-2331124
Loading map...

Related Content

திருநின்றியூர்

திருப்பழுவூர்

திருநாவலூர் தலவரலாறு

திருவெண்ணெய்நல்லூர் தலவரலாறு

திருக்கோகர்ணம் (கோகரணம்) கோயில் ஸ்தல வரலாறு