logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்) தல வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: அநேகதங்காவதநாதர், உமாபதி மஹாதேவர்

இறைவியார் திருப்பெயர்: கௌரி, மனோன்மணி

தல மரம்:

தீர்த்தம் : கௌரிதீர்த்தம், மந்தாகினி நதி

வழிபட்டோர்:இறைவியார், சந்திரன், சூரியன், சம்பந்தர் - நீடல் மேவுநிமிர்.

Loading map...

Sthala Puranam

Anekatangavadam temple
  • அநேக - பலவான; தம் - கொடுத்தல்; கா - காக்கின்ற; பதம் - பதி. இத்தலத்தில் தம்மை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்களெல்லாம் (சர்வ அபீஷ்ட சித்தி) அளித்து அவர்களைக் காக்கின்ற அற்புதப் பதி.
  • இறைவி கௌரி என்னும் நாமத்தோடு தவஞ் செய்த பதி.
  • கௌரியன்னை சிவபெருமானின் ஒரு பாகமாக என்றும் பிரியாது இருக்க விரும்பினார். கௌதம மகரிஷி கேதார மாவிரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறியவண்ணம், கேதாரத் தலத்தின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தில் மந்தாகினி நதிக்கரையில் தவம் செய்தார். அவர்தம் தவத்திற்கு மகிழ்ந்த பெருமான் தம்மோடு என்றும் நீங்காத அர்த்தநாரீஸ்வரராக ஏற்று அருளினார். அம்மை தவம் செய்த திருத்தலமே கௌரிகுண்டம் ஆகும். 
  • அனேகதங்காவதம் - நீலமுண்ட தடங்கண் உமை பாகம் நிலாயதோர் கோலமுண்டு அளவில்லை  குலாவிய கொள்கையே - என்று இத்தலப் பதிகத்தில் திருஞான சம்பந்தப் பெருமான் உமையம்மை தவம் செய்து பாகம் பெற்றத்தைக் குறிக்கிறார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1.நீடல் மேவுநிமிர் (2.05);

 

Specialities

  • Gourikund Umapati Mahadev Templeஇது கேதாரத்திற்குச் செல்லும் மலையேற்றப் பாதை துவங்கும் இடத்தில் உள்ளது.
  • இங்கு அம்மை திருக்கோயிலும் அதற்கு நேர் எதிரே சிவபெருமானின் சுயம்பு லிங்கத் திருமேனியின் கோயிலும் உள்ளது.
  • உமாபதி மஹாதேவரின் சுயம்புலிங்கத் திருமேனி மிகுந்த பரப்பளவு உடையதாகவும், உயரத்தில் சிறியதாகவும் உள்ளது.
  • அம்மை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் அற்புதமான திருவுருவம் அம்மை திருக்கோயிலில் உள்ளது. 
  • இக் குண்டத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது.

கேதார விரத மகிமை (தீபாவளி நோன்பு)

திருக்கேதாரம்

 

முந்தைய தலம்<திருஇந்திரநீலப்பருப்பதம்

 அடுத்த தலம்>திருக்கேதாரம் (கேதார்நாத்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : உத்தராஞ்சல் கேதாரம் செல்லும் பாதையில் உள்ளது.
Loading map...

Related Content

திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்

திருஇந்திரநீல பருப்பதம் (பத்ரிநாத் - நீலகண்ட சிகரம்)

திருக்கேதாரம் (கேதார்நாத் ஜ்யோதிர்லிங்கம்) தலபுராணம்

தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில் - மகா சம்பத் கௌரி (Thenur