இறைவர் திருப்பெயர்: | சங்கமுதநாதேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | வேதாம்பிகை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | பவானி முக்கூடல் (பவானி, காவிரி, அமுதநதி இம் மூன்றும் ஆலயத்தின் கிழக்கே கூடுகின்றன.) |
வழிபட்டோர்: | திருமால், குபேரன், விசுவாமித்திரர், பராசர முனிவர், சம்பந்தர் . |
வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நண்ணாத பதியாதலின், நணா எனப் பெற்றது.
இது பவானி என்றும், காவிரியும், பவானியும் கூடுதலால், பவானிக் கூடல் என்றும் கூறப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பந்தார் விரல்மடவாள் (2.72); சேக்கிழார் - அப்பாலைக் குட புலத்தில் (12.28.327) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
திருநணா என்று வழங்குகின்ற பவாநிகூடற் புராணம் | சுதேவமுதலியார் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 14-கி.மீ தூரத்தில் உள்ளது. சேலம், கரூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்கலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 04256 - 230192, 09843248588.