இறைவர் திருப்பெயர்: அமரரேந்திரேஸ்வரர் (அமரநந்தீஸ்வரர்)
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் : காக்கை தீர்த்தம், வஞ்சிகங்கை.
வழிபட்டோர்:இந்திரன்
Sthala Puranam
நாகைக் காரோணப் புராணத்தில் அமரரேந்திரேச்வரர் என்று காக தீர்த்தப் படலத்தில் சுவாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்கள் வழக்கில் அது, அமரநந்தீஸ்வரர் என ஆயிற்று போலும்!
அகலிகையை நாடிய இந்திரன் கௌதம முனிவரின் சாபத்தால் காக்கையாக மாறினான். சாப விமோசனத்திற்காக நாகை வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். அதுவே காக்கை தீர்த்தம் எனப்படுவது. தினமும் அதில் நீராடி, காயாரோகணரை வழிபட்டு நற்கதி பெற்றான்.
நாகைக்காரோணம் ஆலயத்தின் கிழக்கே, ஒரு சிவலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டான்; இம்மூர்த்தியே அமரரேந்திரேசுவரர் (அமர+இந்திர+ஈச்வரர்) ஆவார்; இத்தீர்த்தம் வஞ்சிகங்கை தீர்த்தம் ஆகும்.
Specialities
சிறப்புகள் ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது.
Contact Address