logo

|

Home >

hindu-hub >

temples

வடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள்கோயில்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்கநாதர்.

இறைவியார் திருப்பெயர்: ஜடாமகுடேஸ்வரி, அழகுசடை முடியம்மை.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வாலி முதலியோர்.

Sthala Puranam

Vada Kurangaduturai templevimAnam

மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது.

 

கர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும், சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. கோங்கமே குரவமே (3.91); பாடல்கள்      :     அப்பர்    -      கயிலாயமலை (6.71.11);                     சேக்கிழார்  -      இன்னம்பர் (12.28.297 & 298) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

 

தல மரம் : தென்னை

Specialities

 

இத்தலத்தில் நடராசப் பெருமான் சிவகாமியுடன் மூலவராகக் காட்சியளிக்கின்றார்.

இத்தலத்து தல வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - திருவையாறு, சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் தாண்டி, உள்ளிக்கடை என்னும் ஊரையடுத்து இத்தலம் - ஆடுதுறை உள்ளது. (ஆடுதுறை என்ற பெயரில் மற்றொரு தலம் இருப்பதாலும், இத்தலத்திற்குப் பக்கத்தில் பெருமாள் கோயில் என்னும் வைணவத் தலம் இருப்பதாலும் இத்தலம் 'அந்த' ஆடுதுறையினின்றும் வேறுபட்டறிய "ஆடுதுறை பெருமாள் கோயில்" என்று வழங்குகிறது. குரங்காடுதுறை என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை.) இத்தலம் குடந்தையிலிருந்து 20 கி. மீ. தொலைவிலும், திரவையாற்றிலிருந்து 5 கி. மீ. தொலைவிலும் உள்ளது. தொடர்பு : 04374 - 240491, 244191.

Related Content