logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கொட்டையூர் திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: கோடீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கந்துக கிரீடாம்பாள், பந்தாடுநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : அமுததீர்த்தம்.

வழிபட்டோர்:மார்க்கண்டேயர், மார்க்கண்டேயர்.

Sthala Puranam

kottaiyur templekOiyil vimAnamsculpture

 

ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.

 

சோழ மன்னனுக்கும், ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும், கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வரலாயிற்று.

 

மேலும், பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடிமுருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சித் தந்ததாலும் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    அப்பர்    -    1. கருமணிபோற் கண்டத் (6.73); பாடல்கள்      :  சேக்கிழார்  -       நல்லூரில் நம்பர் அருள் (12.21.215) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

 

தல மரம்: கொட்டை (ஆமணக்கு)ச் செடி.

 

Specialities

 

 

இத்தலத்தின் வேறு பெயர்கள் வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்பனவாம்.

 

மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்காய்த்த மாதிரி காணப்படுகிறது.

 

இத்தலத்தில் புண்ணியஞ் செய்தாலும், பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது ஐதீகம். இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம்.

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - திருவையாறு சாலையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 4-கி. மீ. தொலைவு; நகரப் பேருந்து செல்கிறது. கும்பகோணம் - சுவாமிமலை நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. தொலைபேசி :0435 - 2454421.

Related Content