இறைவர் திருப்பெயர்: கர்க்கடகேஸ்வரர் (கர்க்கடகம் - நண்டு).
இறைவியார் திருப்பெயர்: அருமருந்தம்மை, அபூர்வநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : அகிலி, பங்கய தீர்த்தம்-காவிரிநதி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், நண்டு,
Sthala Puranam
இத்தலம் நண்டு பூசித்த தலமாதலின் 'நண்டாங்கோயில்' என்று வழங்குகிறது. இறைவன் கர்க்கடகேசுவரர் (கர்க்கடகம் - நண்டு) என்று திருநாமங் கொண்டுள்ளார்.
காறாம்பசுவின் பால் பதின்கலம் அபிஷேகம் செய்தால் இலிங்கத்தின் முடிமீது ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் போன்ற தரிசனம் இன்றும் காணலாம்.
இத்தலம் திருவிசலூருக்கு வடக்கே சிறிது தூரம் சென்றால் வயல்களுக்கு இடையில் கோயில் மட்டுமே அமைந்துள்ளது.
திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. கோயிலைச் சுற்றி அகழியுள்ளது. இப்பகுதி திருந்துதேவன்குடி என்று சொல்லப்படுகிறது, மிகப் பெரிய சிவாலயம், பழுதடைந்துள்ளது. சுவாமி அம்பாள் கருவறைகளும் முன் மண்டபங்களும் மட்டுமே உள்ளன. (2009)
இத்தல இறைவன் அரசன் ஒருவனுக்கு இருந்த கொடிய வியாதியை, கிழவர்போல வந்து தீர்த்தருளிய தலம்.
வழிபட்டு நோய் நீங்கப்பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை 'அருமருந்தம்மை' யாகும். பின்னர் பழமையாக இருந்த அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே 'அபூர்வநாயகி' திருமேனியாகும்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மருந்துவேண் டில்லிவை (3.25); பாடல்கள் : சம்பந்தர் - குத்தங்குடி வேதி குடி (2.39.10); அப்பர் - செல்வப் புனற் (6.7.1), தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1), நற்கொடிமேல் (6.71.3). சேக்கிழார் - வெங் கண் விடை மேல் (12.28.294 & 295) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
'தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி' என்னும் தேவாரத் தொடருக்கேற்ப கோயிலில் தேனீக்களின் ரீங்கார ஒலி கேட்கிறது. (கோயிலில் பாதுகாப்பில்லாததால் திருமேனிகள் வேறிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.) (2009)
இராஜராஜன், செம்பியன்மாதேவியார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
Contact Address