இறைவர் திருப்பெயர்: வாலீசுவரர்
இறைவியார் திருப்பெயர்: தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பாதாளகங்கை, கருட, அமிர்த, வாலி தீர்த்தங்கள்.
வழிபட்டோர்:நந்தி தேவர்; வாலி.
Sthala Puranam
காளையை (மாட்டை) 'சேங்கன்' என்றும் 'சே' என்றும் கூறுவர். காளையான ரிஷப தேவர் வழிபட்ட தலமாதலின் இஃது (மாடு + ஊர்) = மாட்டூர் என்றாயிற்று. அஃது இன்று (சே + ஊர்) = சேவூர் என்று வழங்குகிறது.
கொங்கு நாட்டில், இத்தலத்தை வாலி வழிபட்ட தலமாகச் சொல்வர். இதற்கேற்ப கல்லாலான கொடி மரத்தில் வாலி - குரங்கு வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் சிலாச்சி (2-39-7) சுந்தரர் - காட்டூர்க் கடலே (7-47-1).
Specialities
இத்தலம் "சேவூரான செம்பியன் கிழானடி நல்லூர்" என்று கல்வெட்டில் உள்ளது. "செம்பியன் கிழானடி" என்பது சோழனுடைய பட்டத்து அரசியைக் குறிப்பது. எனவே சோழ மன்னன் ஒருவனுடைய பட்டத்தரசியின் பெயரால் இவ்வூர் விளங்கியது தெரிகிறது.
செஞ்சிக்கு அருகில் திருவிடையூர் என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது, இது தற்போது மேல்சேவூர் என்று வழங்குகிறது; இத்தலமும் வைப்புத் தலம் என்பர் ஆய்வர் சிலர்.
Contact Address