logo

|

Home >

hindu-hub >

temples

நந்திகேச்சுரம் - நந்திவனம் (நந்திவரம்) Nandhikechuram - Nandhivanam (Nandhivaram)

இறைவர் திருப்பெயர்: நந்தீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: சௌந்தர்யநாயகி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:நந்தி

Sthala Puranam

 

  • இத்தலத்தில் சொல்லப்படும் தல வரலாறாவது - செல்வந்தன் ஒருவனின் பசுக்களை இடையன் ஒருவன் மேய்த்து வந்தான். அவற்றுள் ஒரு காராம்பசு மட்டும் தினமும், தன் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று - ஒரு புதரில் பாலைச் சொரிந்து விட்டுக் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொள்ளும். இதனால் அப்பசு, வீட்டில் சரியாகப் பால் கறப்பதில்லை. அச்செல்வந்தன் பசுக்களை மேய்க்கும் இடையனிடம் கேட்க, அவனும் அப்பசு தனியே சென்று வரும் செயலைச் சொன்னான். இடையனின் வார்த்தையை நம்பாத செல்வந்தன், அங்குச் சென்று அப்புதரை வெட்டும்போது உள்ளிருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது.

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • நந்தி வழிபட்ட தலம்.

     

  • இன்றும் சுவாமி மீது (தல வரலாறு தொடர்பான) வெட்டப்பட்டுள்ள வடு காணப்படுகிறது.

     

  • பங்குனி உத்திரம் முதலிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

குறிப்பு :-

 

  • மைசூரிலுள்ள நந்தி மலை மீதுள்ள சிவாலயமே நந்திகேச்சுரம் என்றும் சொல்லப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தாம்பரம் (சென்னை) - செங்கற்பட்டுச் சாலையில் கூடுவாஞ்சேரி வந்து, அங்கிருந்து அருகாமையில் உள்ள நந்திவரம் செல்லும் சாலையில் சென்றால் சாலையோரத்திலேயே உள்ள இக்கோயிலை அடையலாம்.

Related Content