இறைவர் திருப்பெயர்: | பசுபதீசுவரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | திரிபுரசுந்தரி. |
தல மரம்: | கொன்றை. |
தீர்த்தம் : | கெடில நதி. |
வழிபட்டோர்: |
அவதாரத் தலம் : திருவாமூர். வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : திருப்புகலூர் குருபூசை நாள் : சித்திரை - சதயம்.
சுவாமி சந்நிதிக்கு எதிர்புறத்தில் திருநாவுக்கரசு பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சித் தந்து அருள்பாலிக்கின்றார்.
இத்தலத்திற்கு தனித் தேவாரத் திருப்பதிகம் இல்லையாயினும், அப்பர் சுவாமிகள் பாடியருளிய "பசுபதி திருவிருத்தம்" இத்தல இறைவனைக் குறித்தே அருளிச் செய்யப்பெற்றது எனலாம்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவவதாரம் செய்தருளிய இடம் இக்கோயிலின் தென்மேற்கே உள்ளது. அவர் அவதரித்த இல்லம் தற்போது திருக்கோயிலாகத் திகழ்கிறது.
அமைவிடம் 1. அ/மி. பசுபதீசுவரர் திருக்கோயில், திருவாமூர், திருக்கோயிலூர் (வழி), பண்ருட்டி (அஞ்சல்) - 607 106. தொலைபேசி : 041442 - 247707. 2. அ/மி. திருநாவுக்கரசர் சுவாமிகள் திருமடம், திருவாமூர், திருக்கோயிலூர் (வழி), பண்ருட்டி (அஞ்சல்) - 607 106. தொலைபேசி : 041442 - 247707. மாநிலம் : தமிழ் நாடு கடலூர் மாவட்டம் - பண்ருட்டியிலிருந்து மேற்றிசையில் 8 கி. மீ.ல் கெடில நதியில் வடகரையில் இக்கோயில் உள்ளது.