இறைவர் திருப்பெயர்: | ஜெகதீஸ்வரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஜெகத்ரட்சகி |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
குலச்சிறை நாயனாரின் திருவுருவச் சிலை, திருஞானசம்பந்தர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார் ஆகியோரது திருவுருவச் சிலைகளுடன் தனிச் சந்நிதியில் - அம்பாள் சந்நிதிக்கு எதிரில் கொடிக் கம்பத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இவர் மதுரையம்பதி எனும் திருஆலவாயில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசாட்யில் அமைச்சராக இருந்தவர். மதுரையில் மங்கையர்க்கரசியாருடன் திருஞானசம்பந்தர் துணைகொண்டு சமணத்தை அகற்றி சைவத்தை நிலைநாட்டியவர்.
அவதாரத் தலம் : மணமேற்குடி. வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : மணமேல்குடி அல்லது மதுரையாக இருக்கலாம். குருபூசை நாள் : ஆவணி - அனுஷம்
அமைவிடம் அ/மி. ஜெகதீசுவரர் திருக்கோயில், மணமேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம் - 614 620. தொடர்பு : 04371 - 250535 / +91-9788180300 / +91-9865534240. மாநிலம் : தமிழ் நாடு மணமேல்குடி எனும் இத்தலம் அறந்தாங்கியிலிருந்து 35-கி.மீ. தொலைவு; ஆவுடையார்கோயிலிலிருந்து 25-கி.மீ. தொலைவாகும். புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், நாகூர், வேதாரண்யம், இராமநாதபுரம், இராமேஸ்வரம் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. இது சென்னை - பாண்டிச்சேரி - காரைக்கால் - இராமநாதபுரம், இராமேஸ்வரம் வழித்தடத்தில் அமைந்த கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாகும்.