இறைவர் திருப்பெயர்: | |
இறைவியார் திருப்பெயர்: | |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் கணமங்கலம், தற்போது "கணமங்கலத்திடல்" என்றும் "கண்ணத்தங்குடி" என்றும் மக்களால் வழங்கப்படுகிறது.
கணமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தண்டலை நீள்நெறி இறைவருக்குத்தான் அரிவாட்டாய நாயனார் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்; இவ்விறைவரே நாயனாருக்கு முக்தி கொடுத்தருளியவர்.
அரிவாட்டாய நாயனார் பிறந்த ஊரான 'கணமங்கலம்' தண்டலை நீள்நெறிக்குப் பக்கத்தில் உள்ளது. கணமங்கலத்தில் திருக்கோயில் இல்லை. அரிவாட்டாயனார் தினந்தோறும் கணமங்கலத்திலிருந்து (கண்ணந்தங்குடி) தண்டலைநீள்நெறித் திருக்கோயிலுக்கு வயல் வெளியில் நடந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
தண்டலை நீள்நெறியில் அரிவாட்டாய நாயனார் குருபூசை அறுப்புத் திருவிழாவாகப் பெருவிழாவில் உரிய முறைப்படி நடத்தப்பெறுகிறது.
அரிவாட்டாய நாயனாரின் அவதாரத் தலம் : கணமங்கலம் (கண்ணத்தங்குடி - இது தண்டலை நீள்நெறிக்கு அருகில் உள்ள ஊராகும்.) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : கணமங்கலம் - அல்லது தண்டலைநீள்நெறி (கணமங்கலத்திற்கும் தண்டலைநீள்நெறிக்கும் இடையில் உள்ள வயல் வெளியில் நீள்நெறி இறைவர் நாயனாருக்குக் காட்சிக் கொடுத்து அருளியுள்ளார்.) குருபூசை நாள் : தை - திருவாதிரை.
தண்டலைநீள்நெறி (தண்டலைச்சேரி) - அரிவாட்டாய நாயனார் வழிபட்டுப் பேறு பெற்றத் திருத்தலமாகும்.
சிவனின் பூரண அனுக்ரகம் பெற்ற அன்பர்களின் பெரு முயற்சியால் கண்ணத்தங்குடியில் (2009) அரிவாட்டாய நாயனாருக்குத் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் தொலைபேசி : +91-97881 87739, +91-94861 55141, 04369 - 347727, +91-97861 56391, +91-99432 86352. மாநிலம் : தமிழ் நாடு கணமங்கலம் (கண்ணத்தங்குடி) என்னும் பதி திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் சுமார் 4-கி.மீ. தொலைவில், தண்டலநீள்நெறி (தண்ட்லைச்சேரி) என்னும் தலத்திற்கு எதிர் பாதையில் சுமார் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.