இறைவர் திருப்பெயர்: | ஸ்திரபுத்தீஸ்வரர், நீற்நெறி நாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஞானாம்பிகை. |
தல மரம்: | குருந்தை. (ஓரிலைக் குருந்தம்) |
தீர்த்தம் : | ஓமக தீர்த்தம் (ஞானசித்தி விநாயகர் கோயிலின் எதிரில் நீராடல் சிறப்புடையது). காவிரி |
வழிபட்டோர்: | வியாக்ரபாதர், பதஞ்சலி, சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர். |
மக்கள் தற்போது 'தண்டலைச்சேரி ' என்றும் 'தண்டலச்சேரி ' என்றும் வழங்குகின்றனர்.
வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வழிபட்டு சிறப்பெய்தினர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. விரும்புந் திங்களுங் (3.50);
பாடல்கள் : சேக்கிழார் - மற்றவ்வூர் தொழுது (12.28.575) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
இத்தல இறைவருக்குத்தான் அரிவாட்டாய நாயனார் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்; இவ்விறைவரே நாயனாருக்கு முக்தி கொடுத்தருளியவர்.
விநாயகரை வணங்கி உட்செல்லும்போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாக கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
அரிவாட்டாய நாயனார் குருபூசை அறுப்புத் திருவிழாவாகப் பெருவிழாவில் உரிய முறைப்படி நடத்தப்பெறுகிறது.
அவதாரத் தலம் : கணமங்கலம் (கண்ணத்தங்குடி - இது தண்டலை நீள்நெறிக்கு அருகில் உள்ள ஊராகும்.) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : கணமங்கலம் - அல்லது தண்டலைநீள்நெறி (கணமங்கலத்திற்கும் தண்டலைநீள்நெறிக்கும் இடையில் உள்ள வயல் வெளியில் நீள்நெறி இறைவர் நாயனாருக்குக் காட்சிக் கொடுத்து அருளியுள்ளார்.) குருபூசை நாள் : தை - திருவாதிரை.
தண்டலையார் சதகம் | படிக்காசு புலவர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டியிலிருந்து 3-கி. மீ. தொலைவு. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் வருவோர் கோயில் வாயிலில் இறங்கலாம். இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது. தொடர்புக்கு :- 98658 44677