இறைவர் திருப்பெயர்: | ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சுகந்த குந்தளாம்பிகை, மலர்குழல்மாது. |
தல மரம்: | கொடிமரம் |
தீர்த்தம் : | ஐராவத தீர்த்தம் |
வழிபட்டோர்: | ஐராவதம், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர் |
இத்தலம் மக்கள் வழக்கில் மேலைத் திருமணஞ்சேரி என்று வழங்குகிறது.
வேள்விக்குடியில் திருமணஞ் செய்துகொண்டு அத்திருமணக் கோலத்துடன் வந்த தன் அடியவனான அரசகுமாரனை அவனுடைய அம்மானைப்போல இறைவன் வந்து எதிர்கொண்டழைத்துச் சென்றமையால் இத்தலம் எதிர்கொள்பாடி என்றாயிற்று. (இப்பெயர் பண்டைக் காலத்தில் 'எருதுபாடி' என்று திரிந்து வழங்கியதாகவும் செய்தியொன்று தெரிவிக்கின்றது.)
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. மத்த யானை ஏறி (7.7); பாடல்கள் : பட்டினத்துப் பிள்ளையார் - நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - எத்திசையும் தொழுது ஏத்த (12.29.121) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
ஐராவதம் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகத் இவ்வூருக்கு நகரப் பேருந்து செல்கின்றது. கோயில் வரை வாகனங்களில் செல்லலாம்.
தொடர்புக்கு :- 04364 - 235487.