logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

கன்றாப்பூர் (கோயில்கண்ணாப்பூர்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சிவகங்கை.

வழிபட்டோர்:அப்பர், சேக்கிழார், இடும்பன்.

Loading map...

Sthala Puranam



 

Kanrappur temple

சைவப் பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியாகி, மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்ய, கணவன் அது கண்டு அவ்லிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட, அப்பெண் வேறுவழியின்றி கன்று கட்டியிருந்த முளை (ஆப்பு)யையே சிவபெருமானாகப் பாவித்து வழிபட; ஒரு நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அம்முளையைக் கோடரியால் வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த தலம். (கன்று + ஆப்பு + ஊர் = கன்றாப்பூர்).

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   அப்பர்   -   1. மாதினையோர் கூறுகந்தாய் (6.61); பாடல்கள்    :   அப்பர்   -      நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10),                                   கரும்பிருந்த கட்டிதனைக் (6.79.8); பாடல்கள்    : சேக்கிழார் -      நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

 

 

Specialities

இங்குள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும், இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர். (மற்றிருவர் இல்லை)

 

  • மூலவர் - பாணத்தில் (தலவரலாற்றுக் கேற்ப) வெட்டிய தழும்புள்ளது; சதுர பீடம்.

 

இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அ/மி. நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம்.

 

முந்தைய தலம்<திருக்காறாயில்

 அடுத்த தலம்>திருவலிவலம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் சாட்டியக்குடி வந்து, அக்கூட்டுரோடில் பிரியும் சாலையில் 2 கி. மீ. சென்று, ஆதமங்கலம் தாண்டி, "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தில் வலப்புறமாக பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். (2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு (இடப்புறமாக) பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். (கீழ கண்ணாப்பூர் என்று ஊர் ஒன்றுள்ளது; தலம் அதுவன்று. எனவே, "கோயில் கண்ணாப்பூர் " என்று கேட்க வேண்டும்.)
Loading map...

Related Content

திருவெண்காடு

திருக்குருகாவூர்வெள்ளடை

திருப்புகலூர்

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

இராமனதீச்சரம் (திருக்கண்ணபுரம்) கோயில் தலவரலாறு Sthala puran