இறைவர் திருப்பெயர்: மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர், கரிநாலேஸ்வரர், நாட்டியத்து நம்பி.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், கரி தீர்த்தம்.
வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், சூரிய தீர்த்தம், கரி தீர்த்தம்.
Sthala Puranam
அண்ணன் தம்பியருக்கிடையில் பாகம்பிரிக்க நேர்ந்தபோது தமக்குள் இரத்தினங்களை மதிப்பிடுவதிலும் பிரிப்பதிலும் உடன்பாடு வரமுடியாமல் இறைவனிடம் முறையிட, இறைவன் இரத்தின வியாபாரியாக வந்து பிரித்துக் கொடுத்ததால் ரத்னபுரீசுவரர் என்று பெயர் பெற்றார்.
சுந்தரர் கோட்புலி நாயனார் வீட்டில் தங்கியிருந்தபோது வழிபடக் கோயிலுக்குச் சென்றார். அங்கு இறைவனையும் இறைவியையும் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். அவ்வழியே சுந்தரர் சென்று, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் உழவன், உழத்தியாக நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். கண்டதும்,
"நட்ட நடாக்குறை நாளைநடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டதுபோதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி"
என்று பாடினார். அது கேட்டதும் சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் செல்ல, சுந்தரர் பின் தொடர்ந்து கோயிலுள் செல்லும்போது பாம்பு வாயிலில் தடுக்க அப்போது "பூணாணாவதோர் " என்று தொடங்கிப் பாடித் தரிசித்தார் என்று தலவரலாறு சொல்லப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. பூணாண் ஆவதோர் அரவங்கண் (7.15); பாடல்கள் : சேக்கிழார் - வென்றி வெள்ளேறு (12.29.33, 41 & 42) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், மன்னவன் தன் (12.57.6) கோட்புலி நாயனார் புராணம்.
Specialities
அவதாரத் தலம் : திருநாட்டியத்தான்குடி. வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருநாட்டியத்தான்குடி. குருபூசை நாள் : ஆடி - கேட்டை.
Contact Address