இறைவர் திருப்பெயர்: கோணேஸ்வரர், சூரியேஸ்வரர், ப்ருகநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம். காவிரி
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார், கருடன், சூரியன், தாலாப்பிய முனிவர், ப்ருகு முனிவர், திருண பிந்து முனிவர்.
Sthala Puranam
திருணபிந்து முனிவருக்கு இறைவன் குடத்தின் வாயில் வெளிப்பட்டு, குஷ்ட நோயைத் தீர்த்தருளியதால், இப்பெயர் பெற்றது.
கருடன் பூசித்து, அமுதம் பெற்றுத் தானும், தன் தாயும் சாபம் நீங்கப் பெற்ற தலம். இதனால் திருமதிலின் மேல் கருடன் உருவங்கள் உள்ளன.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. திகழும் திருமாலொடு (2.22), 2. கலைவாழும் அங்கையீர் (2.58); பாடல்கள் : சம்பந்தர் - ஆரூர்தில்லை யம்பலம் (2.39.1); அப்பர் - கடுவாயர் தமைநீக்கி (6.71.7); சேக்கிழார் - பாடும் அரதைப் (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், நாலூர் தென் திருச்சேறை (12.21.216) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
Specialities
Contact Address