இறைவர் திருப்பெயர்: இராமனதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சூளிகாம்பாள், சரிவார்குழலி.
தல மரம்:
தீர்த்தம் : இராம தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர்,இராமர்.
Sthala Puranam
இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் 'கண்ணபுரம் ' என்று வழங்கப்படுகிறது.
இராமன் (இராவணனைக் கொன்ற கொலைப்பாவம், நீங்க) இறைவனை வழிபட்டத் தலம் - இராமனது ஈச்சுரம்.
இராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து, காட்சித் தந்ததாகவும் பின்பு இராமன் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம - நந்தீச்சரம் என்பது மருவி இராமனதீச்சரம் ஆயிற்று என்பர். இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் (அம்பாள் கரத்தில்) உள்ளார். (இப்போது இம்மூர்த்தம், பாதுகாப்புக் கருதித் திருப்புகலூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.)
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சங்கொளிர் முன்கையர் (1.115); பாடல்கள் : சேக்கிழார் - சீரின் மலிந்த (12.28.488) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மூலவர் - பெரிய திருவுருவம்; உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம்.
இத்தலத்தில் ஐந்து கல்வெட்டுகள் உள்ளன.
குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காகச் 'சிவபாதசேகர மங்கலம் ' என்னும் பெயருடைய நிலப்பகுதியைத் தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.
இத்திருக்கோயில் பூஜைக்கு அர்ச்சகர்களுக்குள் உரிமைப்போர் நிகழ்ந்ததை 'கோனேரின்மைகண்டான்' என்பவரால் நீக்கப்பெற்றதும், திருமண்ணு சோழ பரமராயனுக்கு மாணவராயனுக்கு பூஜை உரிமை வழங்கப்பெற்றதுமான செய்திகளையும் இக்கோயில் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. (திருவாரூர் திருக்கோயில் இன்றளவும் பரமராயர், நாயனார் என்ற பிரிவினர் அர்ச்சகர்களாக இருந்து வருவதும், இத்திருக்கோயிலில் திருவாரூர் பிரமராயர்கள் அர்ச்சகர்களாக இருந்து இருக்கலாம் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து.)
இக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் சிறப்பு செய்தியாக, தனியூரான தில்லையிலிருந்து மாகேஸ்வரர்களால், இக்கோயில் நிலங்கள் பஞ்சத்தால் விளையாத காலத்தில், 'ராஜராஜபாண்டி மண்டலம், வீரசோழ மண்டலம், நடுவில் நாடு, ஜெயங்கொண்ட சோழமண்டலம்' முதலியவற்றில் உள்ள திருக்கோயில்களிலிருந்து நெல்லும் பொன்னும் கொடுத்து உதவ உத்தரவிட்டுப் பஞ்சம் தீர்த்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
Contact Address