logo

|

Home >

hindu-hub >

temples

திருஅஞ்சைக்களம் (Sri Vanjikulam)

இறைவர் திருப்பெயர்: அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.

இறைவியார் திருப்பெயர்: உமையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சிவகங்கை.

வழிபட்டோர்:அப்பர், சேரமான், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

  • பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.
     
  • இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது.
     
  • வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடை "யானை வந்த மேடை" என்று வழங்கப்படுகிறது.
     
  • கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.

 

தேவாரப் பாடல்கள் : 

பதிகங்கள்  :  சுந்தரர்  - 1. தலைக்குத் தலைமாலை (7.004); 

பாடல்கள்    :  அப்பர்    -    கயிலாய மலையுள்ளார் (6.51.8),                               

                                                 தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.5);                             

                    சேக்கிழார்   -   அஞ்சைக் களத்து நஞ்சுண்ட (12.23.8) பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்,                                

                                                 மாவீற்றிருந்த பெரும் சிறப்பின் (12.37.1,7,11,47,145) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                               

                                                 ஆய செய்கையில் (12.72.28,32,35,51) வெள்ளானைச் சருக்கம்.

Specialities

அவதாரத் தலம் : கொடுங்கோளூர் - திருவஞ்சைக்களம் (கொடுங்கலூர்) வழிபாடு    : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருவஞ்சைக்களம் கொடுங்கலூர். குருபூசை நாள் : ஆடி - சுவாதி.

 

  • கேரள பாணியில் அமைந்த கோயில்.

 

  • துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.

 

  • கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.

 

  • அஞ்சைக்களத்தபர் தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார்.   

 

  • இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது

 

  • கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன.

 

  • சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.

 

  • இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.

Contact Address

அமைவிடம் மாநிலம் : கேரளா சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் 'இரிஞாலக்குடா' நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொடர்பு : 0487-2331124

Related Content